Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்
#1


<b>பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்</b>

பின்னேரம் 6 மணி இருக்கும் மகளையும் வாசல்ல இருந்து படிக்கச் சொல்லிட்டு பாரதி முத்தத்தில அரிசிமா வறுத்துக் கொண்டிருந்தவா.பொத் பொத்தெண்டு மதிலால நிறையப்பேர் ஏறி விழுற சத்தம் பாரதி அடுப்பையும் அப்பிடியே விட்டிட்டு பிள்ளையையும் வீட்டுக்குள்ள போகச்சொல்லி சைகை காட்டிப்போட்டு தானும் போய்க் கதவைச் சாத்திப்போட்டு யன்னலோரமா நிண்டு கவனிச்சா நாலுபேர் கையில துவக்கோட முதுகில சாரத்தால போர்த்தபடி நிக்கினம்.

ர் ர் என்று மெல்லமா கதவை சுரண்டுற சத்தம்.பாரதிக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது.

"சித்தி பாரதிச்சித்தி நான்தான் றஜி வந்திருக்கிறன்.கதவைத் திறக்கிறிங்களே".

லைற்றைப் போட்டிட்டுக் கதவைத்திறந்து விட்டிட்டு தெய்வமே நீயேடா எனக்கு இப்பதான் உயிர் வந்தது.நான் போனமுறை மாதிரி கள்ளனாக்கும் எண்டு நினைச்சிட்டன்.ஆராவது பாத்துத் தொலைக்க முதல் கெதியா உள்ள வாங்கோ பிள்ளையள்.என்ன இந்த நேரத்தில ஆயுதத்தோட வந்திருக்கிறியள்?

சித்தி நாங்கள் நாளைக்கு இரவு மட்டும் இங்கதான் நிக்கவேணும் உங்களுக்கு அதில என்னவும் பிரச்சனையோ ?

சீ சீ நீங்கள் வெளியில வராம இருந்தாச் சரி.

சரியான பசி சாப்பிட என்னவும் இருக்கோ??

அந்த அறையில இருங்கோ பத்து நிமிசத்தில சாப்பாடு தாறன்.

மகள் அண்ணாவுக்கு என்னவும் வேணுமோ எண்டு கேட்டு எடுத்துக்குடுங்கோ.

றஜி அண்ணா நான் இந்த துவக்கை தொட்டுப் பார்க்கட்டே??

ம் கவனமா தொட்டுப் பாரன்.

உங்களோட வந்தா எனக்கும் இப்பிடி ஒன்று துவக்கு தருவினம் என்ன?

நீ அங்க வரவேண்டாம் நீ வந்திட்டா பிறகு உங்கட அம்மாவையும் எங்கட அம்மாவையும் ஆர் பாரக்கிறது.

நீங்கள் நாளைக்கு எங்க போகப்போறிங்களண்ணா?

றஜி பத்து வயதேயான தங்கையின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாத நிலையில் அவளைத் தூக்கிக் கொஞ்சி விட்டுப் பேசாமல் இருந்தார்.

சாப்பாடு ரெடி றஜி.

சித்தி உங்கட கையால சமைச்ச சாப்பாடு சாப்பிடுறது இன்றைக்குத்தான் கடைசி என்று நினைக்கிறன்.

சும்மா இருடா அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.ஏன் எங்காவது தூரமான இடத்துக்குச் சண்டைக்குப் போகப்போறீங்களே?

இப்ப தெரியாது சித்தி தூரத்துக்குப் போவமோ திரும்பி வருவமோ என்று ... நால்வரும் ஒருவரையொருவர் பாரத்துக் கொண்டார்கள்.

மறுநாள் காலை நன்றாகவே விடிந்தது.நால்வரும் பாரதிக்கு முதலே குளித்து முடித்திருந்தார்கள்.பாரதி எழும்பி வந்தால் முத்தத்தில துளசிச் செடியில சாரம் விரிச்சுக் கிடிந்தது.பாரதிக்கு வந்த கோபத்தில "
றஜி சித்தப்பாவும் ஊரில இல்லை நீங்கள் உப்பிடி நீட்டுக்கு சாரத்தை விரிச்சு வக்க யாராவது பார்த்திட்டு ஆமிக்காரரிட்ட போய்ச் சொன்னால் நான் என்னடா பண்ணுவன்.முதல்ல போய் உதெல்லாம் எடுத்து உள்ளுக்க கொண்டே விரி பார்ப்பம்."

சித்தி கோவிக்காதங்கோ.நான் போகும்போது உங்கட சிரிச்ச முகத்தைத்தான் பார்க்கவேணும்.

"நீ வந்ததிலிருந்து கதைக்கிறது ஒண்டும் சரியாப்படல எனக்கு.எல்லாரும் வாங்கோ பாணும் சம்பலும் சாப்பிடுவம்."

காலம சாப்பிட்டிட்டு அறைக்குள்ள போனவங்கள் இன்னும் வெளில வரேல.."மகள் போய் மத்தியானச் சாப்பாடு றெடியெண்டு சொல்லுங்கோ".

அம்மா அம்மா றஜியண்ணா பெரிய படம் ஒன்று வைச்சுக்கொண்டு மற்ற அண்ணாவைக்கு ஏதோ படிப்பிக்கிறார்.

பொழுதுசாயிற நேரம்தான் அறையை விட்டு வெளில வந்தவை சாப்பிட்டிட்டு கொஞ்ச நேரம் இருந்து கதைச்சிட்டுப் போட்டு வாறம் எண்டு சொல்லிட்டு துவக்கு எல்லாம் எடுத்துக்கொண்டு போட்டினம்.

அவையள் போய்க் கொஞ்ச நேரத்தால சூட்டுச் சத்தம் கேட்டது.

பாரதியக்கா பாரதியக்கா….

என்ன நிமல் ஏனிப்பிடி ஓடி வாறாய்?

நாவலடிச் சந்தியில பெடியளும் ஆமியும் நேர சந்திச்சிட்டாங்களாம்.உங்கட றஜி அண்ணாவை வேற எங்கயோ காம்ப் அடிக்கப் போகேக்க அம்பிட்டிட்டனமாம்.பக்கத்தில நிண்ட ஆறேழு ஆமியைச் சுட்டுப்போட்டு வயித்தில கிறனைற்றை வச்சு அமத்திப் போட்டினமாம்.ஆரும் தப்பேல்ல என்று கோபாலு மாமா சொன்னவர்.

-சினேகிதி-
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அக்கா கதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்க வாசிக்க காத்திருக்கம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#3
அப்பிடியோ தம்பி சொன்னா சரிதான்.பாட்டுப்போட்டியெல்லாம் வைக்கிறியள் அக்காக்கு ஒரு சொல்லு சொன்னியளே.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Snegethy Wrote:அப்பிடியோ தம்பி சொன்னா சரிதான்.பாட்டுப்போட்டியெல்லாம் வைக்கிறியள் அக்காக்கு ஒரு சொல்லு சொன்னியளே.

சரிசரி இப்ப தெரிஞ்சிடுச்சில்ல, இனிமேல் அதில வந்து கலந்துக்குங்க.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#5
பாராட்டுக்கள் சினேகிதி உங்கள் வலை பதிவும் பார்த் ஞாபகம் தொர்ந்து தாருங்கள்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#6
சாத்திரி நான் நல்லாப் படிக்கிறனே?? கொஞ்சம் சாத்திரம் பார்த்துச் சொல்லுங்கோவன்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
Quote:சாத்திரி நான் நல்லாப் படிக்கிறனே?? கொஞ்சம் சாத்திரம் பார்த்துச் சொல்லுங்கோவன்.
_________________
அடடா சாத்திரீட்ட சாத்திரம் கேக்கிறாங்க சினேகிதி. சினேகிதி எனக்கு தெரிஞ்ச சாத்திரத்தில நீங்கள் எப்படியும். 25 வயசுக்குள்ள பட்டம் பெறுவீங்கள். அதனால யுனிக்குப்போகத்தேவையில்லை நித்திரை முழிச்சு கஸ்டப்பட்டு பரீட்சைக்குப்படிக்கத்தேவையில்லை உங்கட பலன் படி ஒரு டாக்டர் அல்லது என்ஜினியர் இப்படி ஆவியள் சரியா.

இந்தக்கதையை தமிழ்மணத்தில படிச்சனான் சினேகிதி. அதெப்படி இலகுவா எழுதிறியள் வாசிக்கிறவையை தொடர்ந்து வாசிச்சு முடிக்கவைக்கும். நீங்கள் எழுதிற முறை எழுதுங்க எழுதுங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
<i><b>\\அடடா சாத்திரீட்ட சாத்திரம் கேக்கிறாங்க சினேகிதி. சினேகிதி எனக்கு தெரிஞ்ச சாத்திரத்தில\\</b></i>

தமிழினி அக்கா நீங்க எப்ப சாத்திரம் சொல்லத் தொடங்கினீங'கள'??


<i><b>\\நீங்கள் எப்படியும். 25 வயசுக்குள்ள பட்டம் பெறுவீங்கள். அதனால யுனிக்குப்போகத்தேவையில்லை நித்திரை முழிச்சு கஸ்டப்பட்டு பரீட்சைக்குப்படிக்கத்தேவையில்லை உங்கட பலன் படி ஒரு டாக்டர் அல்லது என்ஜினியர் இப்படி ஆவியள் சரியா. \\</b></i>

யுனிக்குப் போகாம நித்திரை முழிச்சு படிக்காம நீங்களும் உங்கட சாத்திரமமோ எனக்குப் பட்டம் தரப்போறியள்?
டாக்டர் என்ஜினியரும் தான் எல்லாருருருருக்கும் பெரிசோசோசோ?

<i><b>\\இந்தக்கதையை தமிழ்மணத்தில படிச்சனான் சினேகிதி. அதெப்படி இலகுவா எழுதிறியள் வாசிக்கிறவையை தொடர்ந்து வாசிச்சு முடிக்கவைக்கும். நீங்கள் எழுதிற முறை எழுதுங்க எழுதுங்க\\</b></i>

அப்பிடியே வாசிச்சு முடிக்க வைச்சுட்டனே.சந்தோசம்.ஆனால் உதில நிறைய திருத்த வேண்டியிருக்கு.கதையை இன்னும் கொஞ்சம் நெகிழ்ச்சியா சொல்லலாம்.இனிம எழுத கதைகளில முயற்சி செய்யுறன்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
Quote:தமிழினி அக்கா நீங்க எப்ப சாத்திரம் சொல்லத் தொடங்கினீங'கள'??
களவும் கற்று மற என்றிருக்காங்க எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கிறான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (ஒரு சாத்திரப்புத்தகம் கையில கிடைச்சா காணாதா என்ன??)

Quote:ஆனால் உதில நிறைய திருத்த வேண்டியிருக்கு.கதையை இன்னும் கொஞ்சம் நெகிழ்ச்சியா சொல்லலாம்.இனிம எழுத கதைகளில முயற்சி செய்யுறன்.
நல்லாத்திருத்துங்க செப்பனிடுங்க களத்தில போடுங்க வாசிக்கிறம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
Quote:யுனிக்குப் போகாம நித்திரை முழிச்சு படிக்காம நீங்களும் உங்கட சாத்திரமமோ எனக்குப் பட்டம் தரப்போறியள்?
டாக்டர் என்ஜினியரும் தான் எல்லாருருருருக்கும் பெரிசோசோசோ?
சே சே சாத்திரத்தில உங்களுக்கு பட்டம் கிடைக்கும் என்டா கண்டிப்பா கிடைச்சே தீரும் நீங்க ஏன் கஸ்டப்படணும் என்றுநல்ல மனசோட சொன்னா நீங்க கேக்காயள். அடடடடே அப்ப நீங்க டாக்டர் என்ஜினியர் ஆக்கள் இல்லையா (இதை வைச்சுத்தானே எத்தனை பேர் சாத்திரம் சொல்லிப்பிழைக்கினம்) அப்ப சரி உங்கட துறையில பட்டம் பெறுவியள் என்டுது சாத்திரம், :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
பிள்ளை சினேகிதி நீர் எப்பிடி படிக்கிறீர் எண்டு பாத்து சொல் கொஞ்சம் செலவாகும் பிரச்சனை இல்லையெண்டா ஒரு ஆயிரம் கனடியன் டொலர் வெஸ்ரன் யுனியனிலை என்ரை பேருக்கு போட்டு விடும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#12
சினேகிதி நீங்கள் சொல்லும் போது நேரில் நடப்பதைப்போல ஒரு பிம்பம் வந்து மறைந்தது. உங்கள் படைப்புக்கள் மேலும் எதிர்பார்க்கின்றேன். ஆவாலாய் உள்ளேன்.

நீங்கள் பொங்கும் மகிழ்வோடு வந்து போய்விடுவீர்கள்
போன பின்னர் நாம் அழுவோம் யார் அறிவீர்கள்.

வாட்டி எடுக்கும் புதிவை அண்ணனின் வரிகள்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#13
தமிழினியக்கா சாத்திரி மாருக்கு கோவம் வரப்போவுது.அவை எதையாவது சொல்லிப் பிழைச்சுப் போட்டும்.

<b>\\பிரச்சனை இல்லையெண்டா ஒரு ஆயிரம் கனடியன் டொலர் வெஸ்ரன் யுனியனிலை என்ரை பேருக்கு போட்டு விடும்\\</b>

இல்லை இல்லை ஏலாது அதுவும் சாத்திரம் கேக்க இல்லவே இல்லை.

இரு விழி உங்க நிறை போஸ்ற் பண்ணியாச்சு போய் வாசியுங்கோ.புதுவையண்ணாவா?சரி அண்ணான்ற வரிகள் எல்லாம் அப்பிடித்தான்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
சிநேகிதி உங்கள் கதையினை இப்போ தான் படித்தேன். முன்பு இந்தியன் ஆமி ஊரில் இருக்கும்போது இப்படி பல அனுபவங்களை கண்டு இருக்கின்றேன். அப்படியே நிஐத்தை எழுதி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள்.

Reply
#15
றமா இந்தியன் ஆமின்ர கதையெல்லாம் எனக்குத் தெரியாது.இது 1997 ல நடந்த உண்மைக் கதை.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
ம்ம் சிநேகிதி நான் இப்பதான் உங்கள் கதை படித்தேன். ம்ம் உண்மைக்கதை மனதை உருக்கிவிட்டது. இப்படி எத்த்னை விடயம் நாங்கள் நேருல பார்த்தது இந்தியன் ஆமி பிரச்சினை நேரம். தொடர்ந்து தாருங்கள்

ஒரு நாள் இப்படித்தான் 1984 ஆம் ஆண்டு ஆமி வீடு வீடா போய் செக் பண்ணி இளைஞரை பிடிச்சு கொண்டு போனவை ஒரு நாள் எங்க வீட்டுக்கு கொஞ்ச பெடியள் வந்து பிடிபட்டு போட்டினம் அப்ப நான் சின்ன பிள்ளை பயத்துல அப்பா தான் தூக்கி வச்சிட்டு இருந்தவர். அந்த இளைஞரை எங்க வீட்டு அறைக்கை வைத்து கை எல்லாம் கட்டிப் போட்டு அடித்து அவைக்கி பல் எல்லாம் உடைந்து இரத்தம் வந்த்தை இன்றும் என்னால் மறக்க ஏலாது. ஏதோ அப்பா என்னை தூக்கி வைத்திருந்தால் தப்பினார் இல்லாவிட்டால் அப்பாக்கு விழுந்து இருக்கும் அப்பவும் என்னை விட்டுட்டு அப்பாவை அறைக்கை வர சொன்னவை நான் அப்பாவை விட்டு இறங்க மாட்டன் என்று அழத்தொடங்கிட்டன். இப்படி பல சம்பவங்கள் என்னால் மறக்க ஏலாது.
<b> .. .. !!</b>
Reply
#17
ரசிகை அக்கா நீங்கள் சொன்ன மாதிரி நிறைய கதைகள் எங்கள் எல்லாருக்குள்ளும் உறங்கிக் கிடக்கும் உண்மைகள்.நான் உந்த தலையாட்டிகளைப் பத்தி ஒருக்கா எழுத வேணும்.நீங்களும் உங்கட அனுபவங்களை எழுதுங்கோவன்.அப்பாவை அடி வாங்காம நிறைய நேரங்களில் குழந்தைகள்தான் காப்பாற்றுகிறார்கள்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
ஓம் சிநேகிதி எனக்கு தலை ஆட்டி எண்டால் சரியான பயம் நான் யாழ்ல இருந்து வந்து திருகோணமலைல இருக்கேக்கை ஒரு மாதத்துல ஒருக்கா அல்லது 2 , 3 தரம் ரவுண்டப் நடக்கும். ஐயோ உள்ள நாட்டு ஐ டி எல்லாம் செக் பண்ணிட்டு வானுக்கை இருக்கிற தலையாட்டியை பார்த்துட்டு போகணும் எனக்கு சரியான பயம் எங்கை அவ்ருக்கு நான் போகேக்கை கை கால் கடிச்சு சொறியப்போய் தலையை கிலையை ஆட்டிப்போடுவரோ என்று. நான் பயத்துல வானைப்பார்க்கிறதே இல்லை. பக்கத்துல வாற ஆமிப்பெட்டை விட மாட்டாள் அங்க பார் அங்க பார் எண்டுவள். என்ன செய்யுறது வானுக்கு எத்தனை சில்லு எண்டு எண்ணிப்போட்டு போறதுதான். ஐயோ அவன் பாவி சும்மா சும்மா ஆட்டி ஒவ்வொரு ரவுண்டப்புலயும் எத்தனை பேரை பிடிச்சு கொண்டு போறவங்கள்.

ம்ம் நீங்களும் எழுதுங்கோ கேப்பம்
<b> .. .. !!</b>
Reply
#19
அக்கா நீங்கள் இப்ப எழுதினத வாசிக்க சிரிப்பாத்தான் வருது ஆனால் நீங்க அப்ப என்ன பாடு பட்டிருப்பியள் என்னு எனக்குத் தெரியும்.அது சரி அவனுக்கு சொறியணும் போல இருந்தாலும் அடி வாங்கப்போறது எங்கட சொந்தங்கள் தானே.நீங்கள் சண்முகா இந்துவிலயோ படிச்சனீங்கள்(கேக்கலாமோ)
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
ம்ம்ம் இப்ப நினைச்சால் அப்படித்தான் இருக்கும் அப்ப அதால போகேக்கை உயிர் போய் வரும். ரவுண்டப் வந்தால் செத்துப்பிழைக்கிற வாழ்க்கையாய் இருக்கும்./ நான் அங்கு படிக்கவில்லை. நான் விவேகானந்தா ல படிச்சனான்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)