Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 70 online users.
» 0 Member(s) | 68 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  குணரட்ணம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
Posted by: MUGATHTHAR - 12-20-2005, 08:30 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (10)

<b>சுகயீனம் காரணமாக மரணமடைந்த நாட்டுப் பற்றாளர் குணரட்ணம் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பான கண்ணீர் அஞ்சலிகள் </b>

<img src='http://eelatamil.net/sankathi/images/stories/december/Naddu_pattalar.jpg' border='0' alt='user posted image'>

thanks: sankathi

Print this item

  முகத்தார் ஜேசுரட்ணம் மனைவி காலமானார்
Posted by: sinnakuddy - 12-20-2005, 05:01 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (8)

ஈழத்து பழம்பெரும் முன்னனி கலைஞர் முகத்தார் ஜேசுரட்ணம அவாகளின்; மனைவி ஜறின் 15.12.2005 அன்று பாரிஸில் காலமானார்........ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்;

Print this item

  தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகிய பேரணி ஒளிப்பதிவ
Posted by: narathar - 12-20-2005, 12:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகிய பேரணி ஒளிப்பதிவு

http://www.lankasri.com/

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

Print this item

  எமது பயணம் தொடங்கி ஏழாவது நாள்.
Posted by: நர்மதா - 12-20-2005, 12:56 AM - Forum: தமிழீழம் - Replies (2)

அந்த இருளைக் கிழித்தபடி எதிரியின் ரேசர் ரவைகள் இலக்கின்றி எட்டுத் திசையும் பறந்து கொண்டிருந்தன. அந்த வெளிச்சத்தில் நாலைந்து தலைகள் எனக்;கு முன்னே நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. எதிரியின் பல டோறாக்கள் சுற்றிச் சுழன்று எம்மைத் தேடிக்கொண்டே இருந்தன. ஆனால் அவர்களுக்கு கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டியபடி அவர்களின் படகுகளில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கினோம். நீண்ட நேரம் கடலைச் சல்லடை போட்டுத் தேடி அவர்களின் முயற்சி தோல்வி அடைய, தோல்வியுடன் அந்த டோறாக்கள் செல்லத் தொடங்கின.....

இப்பொழுது எனக்கு முன்பு நாலைந்து பேர் நீந்திக்கொண்டிருப்பது தெரிந்தது. நீச்சலில் வேகம் எடுத்தால் முன்னே செல்பவர்களைப் பிடிக்கலாம் ஆளால் ஏற்கனவே டோறாக்களின் கண்களிலிருந்து நீந்தி நீந்தி உடற்சோர்வும், களைப்பும் அடைந்திருந்தாலும் இனிவரப்போகும் கணப்பொழுதுகளையும், திக்குத் திசை தெரியாத இந்தக் கடற்பரப்பும் தனிமையும் மனதில் சோர்வை அகற்ற நீச்சலில் புதுவேகம் பிறந்தது.

தலையைச் சற்றுத் தூக்கி முன்னே செல்பவர்களை பார்த்தேன். நாலைந்து தலைகள் தெரிந்த இடத்தில் இப்போது இரண்டு தலைகள் மட்டுமே தெரிந்தன. பின்னால் திரும்பிப் பார்த்தேன், யாரையும் காணவில்லை. அவர்கள் எங்கே? அடிக்கடி மாறும் நீரோட்டங்களுக்கும், காற்றிற்கும் வேறெங்காவது சென்றிருப்பார்களோ? இல்லாவிட்டால் சுழிகள் ஏதாவது இழுத்து... இருக்காது... இருக்காது. அவர்களுக்கு ஒன்றுமே நடந்திருக்காது. மனதைத் திருப்திப்படுத்தியபடி, நீச்சலிலே என் முழுக்கவனத்தையும் செலுத்த முனைந்தேன். முன்னே சென்ற இருவரும் இப்போது ஒன்று சோர்ந்து விட்டார்கள். அவர்கள் என்னைக் கண்டிருக்க வேண்டும். எனது பக்கமாக திரும்பி நீந்தி வருவது தெரிந்தது.

"அதில வறது யார்?" வர்மனின் குரல் காற்றோடு கலந்து என் காதில் முட்டியது. "ஆ.. நான் இளநங்கை" "இளநங்கையோ ! வாங்கே, பின்னுக்கு யாரும் நீந்தி வருகினமோ..?" எனக்குப்பின்னுக்கு ஒருவரும் இல்லை. ஆனா முன்னாலை நாலைஞ்சு தலையள் தெரிஞ்சது. இப்ப நீங்கள் இரண்டு பேரும்தான் நிக்குறீங்கள். மற்றாக்கள்............" ஒண்டில் அவயைள் நீந்திப் போயிருக்கவேணும். இல்லையெண்டால் நீரோட்டத்தின்ர போக்கிற்கு போயிருக்க வேணும். "விடிஞஇசா நீந்தேலாது. இது அவன்ரை பிரதேசமாகத்தான் இருக்கவேணும் முதல் கரையைத்தேடி நீந்துவம்" நீண்ட நேரம் ஏதும் பேசசாமல் நீந்திக்கொண்டே இருந்தோம் தூரத்தில் சம இடைவெளியில் பொட்டுப் பொட்டாக வெளிச்சங்கள். பக்கத்தில் வந்த கலையமுதனிடம், "கலையமுதன் மின்கம்ப வெளிச்சங்கள் தெரியுது. நாங்கள் நாங்கள் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறம். எப்படியும் அஞ்சாறு கடல் மைல்களுக்கை கரை வரும்" மனதில் ஒரு நம்பிக்கை, மூச்சுக் பேச்சின்றி வெளிச்சத்தை இலக்கு வைத்து நீந்தத் தொடங்கினோம். களைப்புச் சோர்வு ஏற்படும் போது எல்லாம் "இப்படியே உடலோட போயிடணும்" என்ற மனநிலை உருவாகும். ஆனால், போராட்டத்தில ஒரு போராளியை வளர்க்கப்படுற கஸ்ரத்தில அநியாயமாக சாகக்கூடாது என்ற வைராக்கியம் படர, மீண்டும் உற்சாகம் பொங்கும்.

"வெளிச்சப் பக்கம் இருந்து ஒதுங்கி அந்த இருட்டுப் பக்கமாக நீந்துங்கோ" என்று கூறிக்கொண்டு வர்மன் முன்னே செல்லத் தொடங்கினான். பலமணிநேரம் கடடோடும், காற்றோடும் போராடி கரையை அண்மித்தபோது, கால்கள் சோர்ந்து நடக்கத் திராணியற்று தள்ளாடின, களைப்பு மிகுதியால் தாகம் எடுத்தது. குளிரால் உடல் விறைத்தது. கண் எரிந்தது. மீண்டும் கடலை வெறுத்துப் பார்த்தோம் யாராவது நீந்தி வருகிறார்களோ என்று அப்படி ஒருத்தரையுமே காணவில்லை. தூரத்தில் வாகனங்களின் இரைச்சல். அவங்களாகத்தான் இருக்க வேண்டும். இவ்வளவு நேரமும் கஸ்ரப்பட்டு கடலோடு போராடி நீந்திக் கரை சேர்ந்ததற்கும் பயனில்லாமல் போவிடுமோ என்ற ஆதங்கம். இது யோசித்துக் கொண்டு நிக்கிற நேரமில்லை. முடிவெடுக்க வேணும். அந்த அடர்ந்த காட்டை ஊடறுத்துக்கொண்டு அந்த வாகனங்களின் "போக்கஸ்" வெளிச்சங்கள் தெரியத் தொடங்கின. இனி ஒரு நிமிசம் கூடத் தயங்கக் கூடாது. காட்டு மரங்களுக்குள் புகுந்து நடந்தோம். எங்கள் சோர்வுகள் எல்லாம் எங்கோ பறந்து போய்விட்டன. தட்டுத்தடுமாறி காட்டைப் பிரித்து நடக்கத் தொடங்கினோம். பெரிய புற்று ஒன்று தட்டுப்பட அதைக் காப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சருகுகளால் எம்மை மறைத்துக் கொண்டு, மூவரும் நிலத்தோடு நிலமாகிப் போனோம். எங்கள் வாய்களுக்குள் குப்பி பதுங்கிக்கொண்டது. எப்பவும் எந்த நேரத்திலையும் நாங்கள் எதிரியிட்டப் பிடிபடலாம். அதற்குள் எங்கள் வாய்கள் குப்பியைப் பதம் பார்த்துவிடும். வாகனங்கள் நின்று இராணுவங்கள் குதித்து, நாலாகக்கமும் ஓடி வரும் சத்தம் தெட்டத் தெளிவாகக் கோட்டது. எங்கள் உடல்களையும் " போக்கஸ்" வெளிச்சம் தொட்டுக்கொண்டிருந்தது. பூட்ஸ் கால்கள் மிகமிகக் கிட்டவாக ஓடி வந்துதொண்டிருத்தன. என் கால்களுக்கு மேலால் பூட்ஸ் கால் ஒன்று ஏறிக்கொண்டு போனது. எனது இதயம் நின்று, மீண்டும் இயங்கத் தொடங்கி இருந்தது.

"இஞ்சாலுப் பக்கத்தாலை ஒருத்தரும் வரேல்லைப் போல கிடக்குது" சிங்களத்தில் ஒருவன் பெரிதாகச் சத்தமிட்டான். |எல்லாம் ஏறு| மீண்டும் அதே சிங்களக்குரல் பூட்ஸ் கால்கள் வந்த வேகத்தில் திரும்பவும் வாகனங்களில் ஏறிப் பறந்து போயின. ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சி. ஈர உடுப்போடு ஒட்டிக் கொண்ட மண்ணையும் சருகுகளின் தூசையும் தட்டிக் கொண்டு எழும்பினோம். கடலை அண்டிய பிரதேசத்தில் இனி ஒரு நிமிசமும் நிக்கக் கூடாது. நிண்டால் ஆபத்தை விலைக்கு வேண்ட வேண்டி வரும் என மற்றவர்களுக்குக் கூறிக்கொண்டு, முன்பின் தெரியாத காட்டுப் பிரதேசத்தில் மெல்ல நடக்கத் தொடங்கினோம். கிழக்கு வானம் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருந்தது. நேற்று மதியம் குடித்த தண்ணீருக்குப் பிறகு வாய்க்குள் எதுவுமே செல்லவில்லை. நாவரண்டு, பசியும் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கியது. காட்டுத் தடிகள், முள்ளுகள் கீறிக் கீறி இரத்தமும் கசிந்து கொண்டிருந்தது. இன்றும் தண்ணீர் கிடைப்பதற்கரிய எந்தவித அறிகுறிகளையுமே காணவில்லை. உண்பதற்கு காட்டுப் பழங்கள் கூட கண்ணில் எத்துப்படவில்லை. ஆயினும் நடந்துகொண்டேயிருந்தோம். பகல்ம் சாய்ந்து இரவும் படர்ந்தது. களைப்பு, சோர்வு, அசதி மூன்றும் சேர்ந்து இனி நடக்க முடியாது என்ற நிலைக்குத்தள்ள அப்படியே ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டோம். மாறி மாறி மூவருமாக காவற் கடமையை சுறுசுறுப்பில் நாங்களும் உற்சாகமாக நடக்கத் தொடங்கி;னாம். ஆனால், எவ்வளவு துதரத்திற்கு எம்மால் நடக்க முடியும். எச்சிலைக் கூட்டி உமிழக்கூட நாவில் நீர் சுரக்க மறுத்தது. பசியால் வயிறு சத்தமிட்டுக் கொண்டிருந்தன. நீண்ட நேரம் நடந்திருப்போம். ஒளியிளந்த கண்களுக்கு ஒளியாய் அது தெரிந்தது. ||ஆ..... ஆ.... ஆ.... விளாங்காய்கள் தானே|| |ஓம் இள நங்கை. அது விளாங்காய்தான் ||. கால்களுக்கு எங்கிருந்தோ வேகம் கிடைத்தன. கிட்டவாகச் சென்று பார்த்தபோதுதான் அது அப்போதுதான் காய்க்கத் தொடங்கியிருக்கின்ற வெறும் பிஞ்சு னெ;பது தெரிந்தது. என்றாலும் எங்களுக்கு அந்த விளாங்யாய்கள் அமுதமாக இருத்தது. ஏற்கனவே வரண்ட தொண்டை அடைக்க அடைக்க உண்டோம். எங்கள் சட்டைப் பைகுள்ளுக்குள்ளும் நிரப்பிக்கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். நெஞ்சு பொறுத்தது. தொண்டைக்குழிக்குள்ளால் பேச்சு வர மறுத்தது. கைச் சைகைகள் மூலம் நாம் பேசிக் கொண்டோம். எங்கள் நிலைமை புரிந்ததாலோ என்னவோ, மேற்கு வானம் இருளத் தொடங்கியது. சற்று நேரத்துக்குள் பெருத்த இடிமின்னலோடு மழை கொட்டத் தொடங்கியது. எங்கள் உள்ளங்களில் ஆயிரம் சிட்டுக்கள் சிறகடித்துப் பறந்தன. தண்ணீர்த் தாகம் தீர மரங்களில் இருந்து வடிந்த நீரை ஏந்தி ஏந்திக் குடித்தோம். நனைந்த நனைந்தே மீண்டும் நடக்கத் தொடங்கினோம். மீண்டும் இருள் சூழத்தொடங்கியிருந்தது. ஆனால் மழையோ விட்டபாடில்லை. எங்கள் கால்லளுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வுக்காக அமர்ந்தோம். நடக்கும் போது தெரியாத குளிர் இப்போது உடல்களை விறைக்க வைத்தது. பல்லோலு பல்லுக்கிட்டியது. எப்படியும் இதை அனுபவித்துத் தான் தீரவேண்டும்.

பள்ளி நாட்களின் ஞாபகம் மொல்ல எட்டிப்பார்த்தது. திசை தெரியாத காட்டிலே ஓர் நாள், கட்டுரை எழுதுவதற்காக ஆசிரியர் தலைப்புத் தந்தபோது எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது. இப்ப அதையே அனுபவிக்கிறம். இந்தத் துன்னங்களுக்கு மேலாலை துன்பங்தளை அனுபவித்த போதும், எவ்வளவு வைராக்கியத்தேடும் உறுதி;யோடும் இருக்கிறமெண்டால், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ஊட்டி வளர்க்கின்ற அண்ணன்தானே..... அண்ணா என்றதுமே உடலில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தூரத்தே யாணைகளின் பிளிறல் ஒலி, வனவிலங்குகளின் சத்தம், ஆந்தைகளின் அலறல் ஒலிகள் எல்லாம் சேர்ந்து பயமுறுத்தின. அவைகளுக்கு தங்கட இடத்தில வாழுறதுக்கு சுதந்திரம் இருக்குத் தானே. நாங்கள் சகித்துக் கொள்ள வேண்டும். மழை இப்போது முற்றாக விட்டிருந்தது. இயற்க்கை தன் வேலையில் கண்ணாக இருந்தது. வானம் வெழுத்தது. மனதில் தெம்பு இரந்தது. ஆனால் ககால்களுக்கு மட்டும் எதுவும் செய்யச் சக்தி இல்லை. ஒரு அடி கூட எடுத்து வைப்பது கடினமாக இருந்தது. எப்படியும் நடந்தே ஆகவேண்டும்.

"என்னாலை இனி ஏலாது" கலையமுதனால் முற்றாக நடக்கமுடியவில்லை. ||கலையமுதன் ! இன்னும் கொஞ்சத்துரத்துக்க பாதை பிடிச்சிடுவம். அங்கால எங்கட முகாம் எல்லாம் இருக்கும் பிறகு எங்களுக்கு ஒரு கஸ்ரமும் இராது|| மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்க முயன்று வெற்றியும் பொற்றோம். ஆனால் எங்கட துரதிஸ்ரம்... இவ்வளவு நாளும் நாம்நடந்ததற்குக் கூடப் பலன் இல்லாத முடிவாக இருந்தது. காட்டில் பாதைகள், திசைகள் புரியாததால் மீண்டும் நடக்க ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்தோம். மநதில் நம்பிக்கை முதற்தடவையாக இல்லாது போனது. ஆனாலும் சோராது நடக்கத் தொடங்கினோம். ஏனெனில் இந்தப் பிரதேசம் அபாயகரமான பிரதேசம். எதிரி எம்மைத்தேடி மீண்டும் வரக்கூடும். நடந்தோம் வழியில் இலந்தை மரம் எம்மை வழிமறித்தது. பழங்கள் சிவந்து சிலிர்த்துப் போயிருந்தன. புதிய உற்சாகம் பிறந்தது. பசிக்களைப்புத் தீர உண்டுகொண்டிருந்தோம். தொலைவில் எங்கேயோ காடுகள் முறிக்கப்படும் சத்தம். சிங்களப் பேச்சுக்குரல்கள். எங்களுக்குப் புரிந்துவிட்டது. "அவங்கள் வாறாங்கள்"

எங்களால் ஓட முடியாது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆதலால் பற்றையாய் படர்ந்திருந்த இலந்தை மரங்களுக்குக் கீழேயே நிலையெடுத்துக் கொண்டோம். வாய்களுக்குள் குப்பி புகுந்து கொண்டது. அவங்கள் மிகமிகக் கிட்டவாக மரத்துக்கு கீழே வந்து இலந்தைப் பழங்களைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தனர். பல மணி நேரம் அந்தப் பிரதேசத்தை சுற்றிச் சுற்றிக் கொண்டே நின்றனர். எப்பவும் அவங்கள் எங்களைக் காணலாம். உடலைக் கொள்ளி எறும்புகள் பதம் பார்க்கத் தொடங்கின. ஒன்றுமே செய்யமுடியவில்லை. கடிக்கக்கடிக்க மரக்கட்டை போல் படுத்திருந்தோம். மெல்ல மெல்ல அவங்கள் எங்கள் இடங்கள் இடங்களை விட்டு விலகுவதுபோல் தெரிந்தது. மெல்லத் தலையை எட்டிப் பார்த்தோம் அவங்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு வெளியே வந்து உடைகளைத் தட்டினோம். உடம்பெல்லாம் தடித்துப் போய் இருந்தது. இந்த இடத்தின் நிலமை புரிந்ததால் வேதனைகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். தண்ணீர்த் தாகம் எடுத்தபோதெல்லாம் குட்டைகளின் நீரை அருந்திக் கொண்டோம். இப்படியே மீண்டும் ஒருநாள் மீண்டும் கழிந்து கொண்டது. இன்று வாய்க்குள் புக ஒன்றுமே இருக்கவில்லை. வயிற்றுக்குப் புரியுமா எங்கள் கஸ்ரம். அது சத்தம் போட்டுக் கொண்டே இருந்தது. கலையமுதனைப் பார்க்க பாவமாக இருந்தது. உண்மையிலேயே அவனுக்கு இயலாது. எங்களுக்காக அவன் நடந்துகொண்டிருந்தான். சற்றுத் தொலைவில் கிராமம் ஒன்று இருப்பதற்கான அறிகுறிகள் தெ;ன்னடத் தொடங்கின. வழியில் சின்னச் சின்னக் குடிசைகள் தென்னட்டன. வீதியில் இனி அவதானமாக நடக்க வேண்டும். வந்த ஓரிருவர் வோகமாக நடக்கத் தொடங்கினர். வந்தவர்கள் யார் என்று புரிய நாங்கள் அந்த இடத்தைவிட்டு வேகமாக விலகவேண்டி இருந்தது. நடந்தோம் இப்போது சின்னச் சின்ன மலைகள் எம்முன்னே வழிமறித்தன. மீண்டும் இருள் சூழத் தொடங்கியது. ஒருவரோடு ஒருவர் கதைப்பதற்குக்கூட சக்தி இல்லை.

இருள் மறைந்து ஒளி பிறந்தது. ||நடப்பம்|| வர்மன் சொன்னபோது ஓம் என்று தலையசைத்துக் கொண்டேன். ஆனால் கலையமுதனின் நிலை பரிதாபமாகவிருந்தது. என்னாலை இனி ஒரு காலடிகூட எடுத்து வைக்கேலாது, என்னை விட்டிட்டு நீங்கள் போங்கோ|| கலையமுதன் இண்டைக்கு எப்படியும் நாங்கள் போய்ச் சேர்ந்திடுவம். இண்டைக்கு மட்டும் நடப்பம்|| வர்மன் சொன்னபோது , "அனியாயமாக என்னாலை நீங்களும்; சாகாமல் நீங்கள் விட்டிட்டுப் போங்கோ. ||என்னெண்டு போறது, நாங்கள் மூண்டுபேரும்தான் வெளிக்கிட்டநாங்கள். மூண்டுபேரும்தான் போய்ச் சேரவேண்டும். நடப்பம் கலையமுதன் இண்டைக்கு மட்டும்தானே. ||உண்மையாத்தான் சொல்லுறன் என்ரை கண்ணெல்லாம் இருண்டுகொண்டு வருகுது. கால் சேர்ந்து போயிற்று என்னைக் காப்பாற்ற வேணும் எண்டு நினைச்சா நீங்க கெதியாய் போய் இடத்தக் கண்டுபிடிச்சு என்னைக் காப்பாற்ற முயற்சி எடுங்கோ நான் இதிலேயே இருப்பன். கடைசிவரை எதிரியிட்ட நான் பிடிபடமாட்டன். என்னட்டை குப்பி இருக்குது. போங்கோ... கெதியாப் போங்கோ....|| கலையமுதனின் நிலைமை எமக்குப் புரிந்ததுதான். என்றாலும் திக்கற்ற காட்டில் கதியற்று அவனை விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால் அவனைக் காப்பாற்றவேண்டும். கண்களில் நீர் பொங்கி வழிந்தது. விடைபெற்று நடந்தோம். இப்போது எங்கள் நடையில் பெரு உத்வேகம் இருந்தது. இன்னும் உண்பதற்கு உணவேதும் கிடைக்கவில்லை. தண்ணீர் மட்டும் தாராளமாகக் கிடைத்தது. இப்படியே ஒருநாள் மறைந்து புதிய நாள் பிரவாகித்தது. எமது பயணம் தொடங்கி ஏழாவது நாள். இனி எம்மாலும் முற்று முழுதாக இயலாத நிலை. ஆனாலும் கலையமுதளைக் காப்பாற்றவேண்டும். சோர்ந்தபோதும் நடந்தோம். சற்றுத் தூரம் நடந்திருப்போம். காட்டை ஊடறுத்து உருபாதை தெரிந்தது. அதனால் சைக்கில் சென்ற அடையாளம் தெரிந்தது. நிச்சயம் இது எங்கடை முகாமுக்குப் போகும் பாதையாக இருக்க வேண்டும். சொர்க்கத்தை கண்டது போல் ஒரு ஆனந்தம். என்றாலும் ஒரு கலக்கம்.

பாதையில் நடக்காது பாதைவழி காட்டுக்குள் இறங்கி நடந்தோம். ஒரு மணி நேரம் இறங்கி நடந்திருப்போம். எங்கேயோ பேச்சுக்குரல் கேட்டது. சில இளைஞர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஒருவரின் கையில் ஆயுதம் இருந்தது. தெய்வத்தை நேரே கண்டது போன்ற மகிழ்ச்சி. அவர்களும் எங்களைக் கண்டுவிட்டார்கள். ஆயுதம் வைத்திருந்தவன் ஆயுதத்தை தயார்படுத்தினான். வாய்க்குள் குப்பியை வைத்துக்கொண்டு கைகளை உயர்த்திக் காட்டினோம். அவர்களுக்கு நாம் யார் என்று புரிந்துவிட்டது. எம் நிலையையும் உணர்ந்து கொண்டார்கள். போராளிகளில் வந்த ஒருவன் குளுக்கோஸ் எடுத்துக் கொண்டு ஓடிவந்தான். எம்மை அன்பாய் ஆதரவாய் கூட்டிச் சென்றார்கள். அவர்களுக்கு கலையமுதனின் நிலையைப் பற்றிச் சொன்னோம். எம் களைக்பு, சோர்வு, இயலாமை எதையும் பொருட்படுத்தாது கலையமுதனைக் காப்பாற்றும் நோக்கோடு மற்றைய போராளிகளோடு சேர்ந்து நாமும் புறப்பட்டோம். அந்த இடம் கலையமுதன் நின்ற இடம். அதிலேயே அவன் படுத்திருந்தான். ||கலையமுதன்! கலையமுதன் உன்னைக் காப்பாற்ற வந்திட்டம்" எனக் கத்தியபடி ஓடனம். ஆனால் அவனில் அசைவு எதையுமே காணவில்லை. கிட்டவாகச் சென்று பார்த்தால் எமக்கு பலத்த ஏமாற்றம். அவன் வீரச்சாவு அடைந்துவிட்டான்.

கலையமுதன்.... வெளிநாட்டிலிருந்து எமது போராட்டத்தில் இணைந்த போராளி. இன்று அமது மண்ணின் மடியில் மரணத்தை வென்று விட்டான். அவனின் வீரத்திற்காக தலை சாய்ந்தோம். மீண்டும் புது வேகமுடன் குனிந்த தலையை நிமிர்த்திக் கொண்டோம். இப்போது அவனையும் அவனது இலட்சியங்களையும் சுமந்தபடி நடக்கத் தொடங்கினோம்.

நன்றி..
தாயகம்

Print this item

  Hitman Pro 2.3.2
Posted by: selvanNL - 12-19-2005, 10:53 PM - Forum: தரவிறக்கங்கள் - Replies (4)

<span style='font-size:25pt;line-height:100%'><b>ஹிட்மன் 2.3.2</b></span>

இந்த மென் பொருளை பாவித்து உங்கள் கனனியை சுத்தமாக ஸ்பை, அட் வேர்களினை அழித்து உங்கள் கனனியை பாவிக்கலாம்,,,

இதன் சிறப்பு அம்சம், இந்த மென்பொருள் தன்னகத்தே 9 வகையான உதிரி மென்பொருள்களை வைத்திருப்பதே,, அவையாவன,,,,

Ad-Aware SE 1.06
Spybot Search & Destroy 1.4
Spy Sweeper 3 en 4
Spyware Doctor 3.2
CWShredder 2.15
SpywareBlaster 3.4
Spyware Block List
NOD32 AntiThreat 2.5 NIEUW
Sysclean Package
SuperDAT VirusScan

இதன் மிகச்சிறப்பு அம்சம் என்னெவென்றால், இதனை நீங்கள் தரவிறக்கம் செய்துவிட்டு இன்ஸ்ரல் பன்னவும் எண்ட பட்டனை அழுத்தினால் போதும், மீதியை அந்த மென்பொருள் தானகவே பார்த்துக்கொள்ளும், கிட்டத்தட்ட 20-30 நிமிடங்களில் உங்கள் கனனியில் இருக்கும் அட்வேர், ஸ்பை வேர், மேலும் பல தேவைப்படாதவற்றை அகற்றிவிடும்,

அதைவிட சில பயன் பாடுகள் என்னெவெனில்,,,

இங்கே மேலே சொல்லப்பட்ட 9 மென்பொருட்களை நீங்கள் தனித்தனியாக தரவிறக்கம் செய்யும் பொழுது அவற்றுக்கு பணம் கட்டவேண்டும், ஆனால் இங்கே நீங்கள் எதுவும் செய்யத்தேவையில்லை,, (ஏன் அப்படி விட்டார்கள் எண்டு புரியவில்லை) :?

அதைவிட எந்த மென்பொருளை பாவித்து எதை நீக்கவேண்டும் என்று நீங்கள் குழப்பமடையத்தேவையில்லை எல்லாவற்றையும் ஹிட்மனே பார்த்துக்கொள்வார்,, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அந்த மென்பொருளை Arrow இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... Idea

பி.கு: இந்த தளம் நெதர்லாந்து மொழியில் இருக்கின்றபடியால் Hitman pro 2,3,2 download என்று வலது பக்க மேல் பக்கத்தில் இருக்கின்றதை அழுத்தி தரவிறக்கம் செய்யுங்கள்.,, Idea

இந்த மென்பொருளை இன்ஸ்ரல் செய்தவதற்கு முதல்,...

1, எம்.எஸ்.என் பிளஸ், அழித்துவிடுங்கள் அல்லது நிறுத்துங்கள்..

2.எம்.எஸ்.எனை நிறுத்திவையுங்கள்,,

இது தற்பொழுது முற்றிலும் இலவசம்,, பின்பு என்ன செய்வார்களோ தெரியவில்லை,,

நன்றி,, Idea

Print this item

  உயிர்களை எடுக்காதே உரிமையை பறிக்காதே!!!!!!!
Posted by: iruvizhi - 12-19-2005, 10:53 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

<img src='http://img304.imageshack.us/img304/2074/photo205cw.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img304.imageshack.us/img304/360/photo126hq.jpg' border='0' alt='user posted image'>

உயிர்களை எடுக்காதே உரிமையை பறிக்காதே!!!!!!!



உரிமையை பறிப்பதும்
உண்மையை மறைப்பதும்
ஊமைகளாய் இருப்பதால் தான்.

உயிர்களை எடுப்பதும்
பெண்களை கெடுப்பதும்
நீ மௌனமாய் இருப்பதால்த்தான்.

முதேவிகளை விரட்ட முடியவில்லையா?
சொல் நானும் வருகிறேன்.
என் உயிரையும் தருகிறேன்.
வாழ்ந்தால் மானத்தோடு வாழுவோம்.
இல்லை தமிழ்ழீழத்திலே
மடிந்தே போவோம்.

சிங்கள இனவெறி பிடித்த
மூடரை ஈழத்தை விட்டே ஓட்டுவோம்.

Print this item

  கனேடியத் தேர்தல் குறித்து தமிழர்கள் விழிப்பு அவசியம்!
Posted by: kurukaalapoovan - 12-19-2005, 09:57 PM - Forum: புலம் - Replies (2)

ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களில் வழிநடத்தலில் வின்சென்ட் வீரசுந்தரம்

கடந்த மாதம் ஸ்ரீலங்காவில் முடிவடைந்த தேர்தலில் தமிழர்களால் வகுக்கப்பட்ட மதிநுட்பமான நடவடிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அழுத்தங்களை நாம் நன்கு அறியக்கூடியதாகவுள்ளது.

இதேபோல, எதிர்வரும் ஜனவரி மாதம் கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அல்லது நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்?

....
......

கனேடிய அரசியலில் தமிழர்களின் செல்வாக்கினை அதிகரிக்க வேண்டுமாயின், எம்மவர்கள் சகல கட்சிகளிலும் அங்கத்தவராக இருக்க வேண்டியது மிக முக்கியமானதும் அவசியமானதொன்றாகும்.

எனினும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும், எதுக்கு ஆதரவு அளித்தாhல் எமது "நோக்கம்" நிறைவேறும் என்பதை துல்லியமாக கணிக்க வேண்டிய பொறுப்பு "எங்கள் அமைப்புக்களுக்குள்ள" முக்கிய கடமையாகும். இந்த வரலாற்றுப் பொறுப்பை "எங்கள் அமைப்புக்கள்" சரிவரச் செய்வார்கள் என நம்புகிறோம்!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள கனேடியத் தேர்தலில் தேசிய அரசியல் கட்சியான பழமைவாதக் கட்சியின் சார்பாகத் "ஸ்ரீலங்காத்" தமிழர் என்று சொல்லப்படுகின்ற ஒருவர் போட்டியிடுகின்றார்.

இவரது வெற்றியினை உறுதிப்படுத்தம் முகமாக பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழ் மக்களுக்குக் "கனேடிய அரசியல்" குறித்த நெழிவு சுழிவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

http://sooriyan.com/index.php?option=conte...id=2645&Itemid=

Print this item

  நெய்ச்சோறு
Posted by: கீதா - 12-19-2005, 09:17 PM - Forum: சமையல் - No Replies

<span style='font-size:25pt;line-height:100%'>நெய்ச்சோறு

தேவையானபொருட்கள்

பிரியாணிஅரிசி 500 கிராம்

நெய் 250 மி.லி

பெரியவெங்காயம் 3

முந்திரிப்பருப்பு 10

பட்டை
ஏலக்காய்
கிராம்பு
உப்பு தேவையானவை


செய்முறை

அரிசியைக் களைந்து. சுத்தம் செய்யவும் முந்திரிப்பருப்பை வறுத்து நறுக்கிக்கொள்ளவும் .வெங்காயத்தை நறுக்கவும் .
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து .நெய் ஊற்றவும் .காய்;ந்ததும் .பட்டைஏலக்காய் .கிராம்புபோடவும் .
வாசம் வந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் .வதங்கியதும் .அரிசியைப்போட்டு .சிறிது நேரம் வறுக்கவும் .பிறகு ஒரு படி தண்ணீர் விட்டு. முந்திரிப்பருப்பு தேவையான உப்பு போட்டு .வேக விடவும் .தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும் .பிறகு தண்ணீர் இருந்தால் .தணலில் வைக்கவும் .இந்த நெய் சோறு மிகவும் சுவையானது .பிரியாணி போலவே .இருக்கும் செய்வதும் எளிது? இதற்கு கோழி அல்லது கறி குருமா மேலும் சுவை Üட்டும் ? </span>
http://www.tamilcinema.com/general/samayal.../samayal_40.asp

Print this item

  ஆண் ஆண்தானாம் பெண்தான் மனைவியாம்
Posted by: Snegethy - 12-19-2005, 08:39 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (38)

[size=18]<b>ஆண் ஆண்தானாம் பெண்தான் மனைவியாம்</b>


ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்போது பாதிரியார் கூறும் கூற்று -"I now pronounce you man and wife".திருமணத்துக்கும் முன்பும் பின்பும் ஆண் ஆண்தான்.பெண் என்பவள் திருமணத்துக்கு முன்னர் பெண்ணாகவும் திருமணத்துக்குப் பிறகு மனைவியாகவும் அறிவிக்கப்படுகிறாள். கல்யாணம் பண்ணிக்கொண்ட எல்லாரும் சொல்லுங்க.இதுக்கு என்ன அர்த்தம்?? இதுக்கு என்ன அர்த்தம்?? (எல்லாருக்கும் இந்தப் பாட்டு தெரியும் தானே?)

இப்ப ஒரே பால் திருமணம் செய்து வைக்கும் போது "I now pronounce you man and man" என்று சொல்வார்களோ?

தமிழ்க்கல்யாணத்தில் "மாங்கல்யாம் தந்துனானே" ....(மிச்சம் தெரியாதுங்கோ :-)) என்று சொல்வதன் அர்த்தம் இந்தப்பெண்ணை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி அதன் பிறகு உனக்கு தாரை வார்க்கிறேன் என்று அர்த்தமாமே... உண்மையாவா??ஆமா இதே இன்னும் தெரியாது இந்த லட்சணத்தில இவா "I now pronounce you man and wife என்று பதிவு போட வந்திட்டா என்று சொல்லாதங்கோ.தெரியாததை தெரியாதெண்டு தானே சொல்லணும்.

இந்தத் தமிழ்க்கல்யாணம் என்று ஒரு சொல்லிருக்கா?? நானாவது கொஞ்சம் பறவாயில்லை தமிழை கொஞ்சமாவது தெரிஞ்சு வைச்சிருக்கிறன்.என்ர தங்கச்சி விரதக் கோப்பையை தமிழ்க்கோப்பை என்று சொல்லுவாள்.முதலாவது லாச்சியை மூத்த லாச்சி என்று சொல்லுவாள் உப்பிடி நிறைய சொற்கள் (இதுக்குமொரு தனிப் பதிவு போட்டுட்டாப் போச்சு)

மொழியாழுமையில கூட பெண்களை தள்ளியே வைச்சிட்டுதுகள் படிச்ச அறிவுஜீவிகள்.ஆங்கிலத்தில எனக்குத் தெரிந்த சொற்களை இங்க எழுதுகிறேன் நீங்க தமிழில் இந்த வரிசையில் வரும் சொற்களை அறியத்தாருங்கள்.

Bachelor of Arts
Bachelor of master
Master of ceremony
Policeman
Mailman
Tradesman
Milkman
Mankind
Manhole

To be continued:-

தமிழில் பால்க்காரி பெண் காவலதிகாரி இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு.

கனடா நண்பிகளே!!!
உங்கள் எல்லாருக்கும் எங்களை அதாவது மகள்மாரை கனடா தன் தேசிய கீதத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிற விசயம் தெரியுமா?

"O Canada!
Our home and native land!
True patriot love in all thy sons command." இவ்வாறு எழுதிய மதிப்புக்குரிய "Mr. Justice Robert Stanley Weir " மகளவையே இல்லையேர்? யாமறியோம் பராபரமே.

சரி சரி ரொம்ப கோபப்படவேண்டாம் தோழிகளே தொடர்ந்து வாசியுங்க. (இதைப் படிச்சுட்டு வாசிச்ச குறையில ஓடவும் வேண்டாம் தோழர்களே)

1981ம் ஆண்டு Canadian charter of rights and freedom யாப்பில்(?) "man" என்றிருந்த எல்லாச் சொற்களுமே "personn" என்ற சொல்லாக மாற்றப்பட்டது.

1986 ல் ஒட்டாவா "National museum of man" " National museum of civilization" ஆக மாற்றப்பட்டது.

1988 ல் Toronto Alderman என்ற பதம் Toronto Counselor ஆக மாற்றப்பட்டது.

அதே வரிசையில் Workman's compensation ம் worker's compensation ஆக மாற்றப்பட்டது.

அப்புறம் என்ன?அப்புறம் சொல்லுங்க. ..

-சினேகிதி-

Print this item

  உங்க லவ் எங்க லவ்வில்ல
Posted by: Snegethy - 12-19-2005, 06:12 PM - Forum: சினிமா - Replies (41)

உங்க லவ் எங்க லவ்வில்ல ங்கொக்காமக்க உலகமகா லவ்வுடியோவ்.

விஜய் :ஐ லவ்வுயாடா செல்லம்…எங்க மாமா பார்த்து ஐ லவ்யு சொல்லுடா செல்லம்.
அஸின் : same to u.

படம்னா சிவகாசிதான் படம்.எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.விஜய் பேசுற வசனங்களுக்காகவாவது எல்லாரும் பாருங்க (வசனகர்த்தா யாரோ எனக்குத் தெரியாது).
படத்தின்ர தொடக்கத்திலயே அஸின் சோட்ஸ்ம் சிலீவ்லெஸ்ம் போட்டுக்கொண்டு (விஜய்-வசனகர்த்தாவின் பார்வையில் அந்த உடுப்புக்கு வேற பெயர் என்றது வேற விசயம்) அட்டகாசமா கடைத்தெருவில பவனி வருவா அதுவும் அப்பாவோட.வெளிநாட்டில படிச்சிட்டு சொந்த ஊருக்குப்போற எல்லாரும் இந்தியாவில அப்பிடித்தான் உடுப்புப் போடிறவையோ?? தெரிஞ்சவங்க சொல்லுங்க.

உடுப்பு போடுறது ஒவ்வொருவருத்தருடைய விருப்பம் அதுக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தமோ எனக்கு விளங்கலப்பா.அம்மா இல்லாத பொம்பிளைப்பிள்ளையளுக்கு கல்லுரிக்குப் போற வயசிலயும் சொந்த புத்தி கிடையாதா? அதே பெடியங்களுக்கு அம்மா இல்லையெண்டால் அம்மா இல்லாம வளர்ந்தவன் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பான்.எப்பிடியாவது இருக்கட்டுமன் எதுக்கு அம்மாவைச் சாட்டுவான்.அம்மா இருந்தா அறிவுரை சொல்லுவாதான் இல்லையெண்டு சொல்லலை அதுக்கா அம்மா இல்லாட்ட பிள்ளையளால சுயமா சிந்திக்கவே தெரியாதெண்டமாதிரியெல்லோ இருக்கு.

சிவகாசி அஸின்ர கையை அவவை வந்து மோதினவன்ர கையோட உரசு உரசு உரசிட்டு கசாப்பு கடையில தசை இருக்கு போடா எண்டு சொல்லிப்போட்டு அஸினுக்கு ஒரு லெக்ஸர் குடுப்பார்.எல்லாப் பெண்களுக்கும் ரொம்பத் தேவையானது.முன்னம் உப்பிடித்தான் யூத் படத்தில விஜய் கதாநாயகி என் கையைப் பிடிச்சா எனக்கு பிடிக்கிற எல்லாம் பிடிக்கும் என்று சொன்னா என்று லவ் பண்ணிப்போட்டு அவா தான் லவ் பண்ணவில்லை என்று சொன்னவுடனே பொம்பிளையளுக்கெல்லாம் அம்மா என்றொரு ஸ்தானம் இல்லையெண்டா வேஸ்ற் என்று சொல்லுவார்.எல்லாப் படத்திலயும் பொம்பிளையளுக்கு மரியாதையோ மரியாதை.

படத்தில ஒரு காட்சி:
அசின் நல்லா குண்டான கொஞ்ச அன்ரீஸ் ஆக்களை கூட்டிக்டிக்கொண்டு வந்து இதோ சேலை கட்டி வந்திருக்கினம் கையெடுத்து கும்பிடு சிவகாசி என்று சொன்னா விஜய் துவக்கெடுத்து கொண்டு வருவார்.அதுக்குள்ள அவை குண்டா வடிவில்லாத ஆக்கள் எல்லாம் லவ் பண்ணக்கூடாதெண்ட மாதிரியான நக்கல் வேற.

காதலியோட அப்பா அண்ணனை எல்லாம் எதுக்கு தேவையில்லாம சேட்டைப் பிடிக்கிறாரு அடிக்கிறாருன்னு தெரியலை சிவகாசி.அஸின் நல்லாயிருக்கிறாவா என்று பார்க்கணும்னா போன் பண்ணிப் பார்க்கிறரு இல்லை வீட்ட போய் பார்;க்கிறது படத்தில சும்மா விஜய் போன போக்கில அசின் அப்பான்ர சட்டையைத் தான் பிடிப்பார்.அப்பாக்கள் அண்ணன்கள் எல்லாம் லூசுகளா??வீட்டுப்பொண்ணு லவ் பண்ணுது என்றா வீட்டில இருக்கிற மற்ற எல்லாற்ற மானம் மரியாதையை லவ்வரிட்ட அடகு வைச்சிடுறதா?

எனக்கு இன்னுமொண்டு விளங்கல படத்தில:தமிழ் நாட்டில பெடியங்கள் கல்லூரிக்குப் பணம் கட்டக் காசில்ல எண்டா "உங்களைப் பார்த்தா எங்க அம்மா மாதிரி இருக்கு : என் அம்மா செத்துப் போட்டா என் படிப்புக்கு காசு தாங்கோ" என்று கூடப் படிக்கிற பணக்காரப் பிள்ளையளிட்ட கேக்கறவையோ??? விஜய் அறுத்துக் குடுத்த அசின்ர சங்கிலியை குடுக்கத் திரும்ப வந்த பெடியன் மற்ற நண்பர்கள் தந்த காசில மீட்டது என்று சொல்லித்தான் குடுப்பார்.அப்பவாவது நான் பகுதிநேர வேலை செய்யுறன் என்று சொல்ல வைச்சிருக்கலாம்.

அப்புறம் சொல்ல மறந்திட்டன் படத்தின்ர கதை சூப்பர்.பிரகாஸ்ராஜ் நடிப்பு அந்த மாதிரி.மூளி முங்காரி மாமி சூப்பரோ சூப்பர்.

-சினேகிதி-

Print this item