Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனேடியத் தேர்தல் குறித்து தமிழர்கள் விழிப்பு அவசியம்!
#1
ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களில் வழிநடத்தலில் வின்சென்ட் வீரசுந்தரம்

கடந்த மாதம் ஸ்ரீலங்காவில் முடிவடைந்த தேர்தலில் தமிழர்களால் வகுக்கப்பட்ட மதிநுட்பமான நடவடிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அழுத்தங்களை நாம் நன்கு அறியக்கூடியதாகவுள்ளது.

இதேபோல, எதிர்வரும் ஜனவரி மாதம் கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அல்லது நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்?

....
......

கனேடிய அரசியலில் தமிழர்களின் செல்வாக்கினை அதிகரிக்க வேண்டுமாயின், எம்மவர்கள் சகல கட்சிகளிலும் அங்கத்தவராக இருக்க வேண்டியது மிக முக்கியமானதும் அவசியமானதொன்றாகும்.

எனினும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும், எதுக்கு ஆதரவு அளித்தாhல் எமது "நோக்கம்" நிறைவேறும் என்பதை துல்லியமாக கணிக்க வேண்டிய பொறுப்பு "எங்கள் அமைப்புக்களுக்குள்ள" முக்கிய கடமையாகும். இந்த வரலாற்றுப் பொறுப்பை "எங்கள் அமைப்புக்கள்" சரிவரச் செய்வார்கள் என நம்புகிறோம்!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள கனேடியத் தேர்தலில் தேசிய அரசியல் கட்சியான பழமைவாதக் கட்சியின் சார்பாகத் "ஸ்ரீலங்காத்" தமிழர் என்று சொல்லப்படுகின்ற ஒருவர் போட்டியிடுகின்றார்.

இவரது வெற்றியினை உறுதிப்படுத்தம் முகமாக பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழ் மக்களுக்குக் "கனேடிய அரசியல்" குறித்த நெழிவு சுழிவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

http://sooriyan.com/index.php?option=conte...id=2645&Itemid=
Reply
#2
கடந்த தேர்தலில் தமிழ் அமைப்புக்கள் தங்கள் ஆதரவை லிப்ரல் கட்சிக்கு வழங்கி அவர்களின் வெற்றியில் மகத்தான பங்கினை ஆற்றினார்கள். ஆனால் கனடாவில் நடை பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுக்கு அந்த கட்சியின் பிரதான உறுப்பினார்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. அவர்களும் தாங்கள் ஒரு சாராசரி அரசியல்வாதி என்பதை அங்கு நிருபித்து விட்டார்கள்.
இந்த முறை தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுவது சந்தோசமான செய்தியே. ஆனால் எமக்குள் இருக்கும் போட்டி உணர்வை அகற்றி அவருக்கு ஆதரவை வழங்க வேண்டும். வாக்கு உரிமை இருந்து பல தமிழர்கள் வாக்களிப்பதில்லை. அந்த நிலை மாற வேண்டும்.
இனி வரும் காலங்களில் வாக்கு உரிமை இருந்து வாக்களிக்க இல்லை என்றால் கட்டணம் அறவிடப்படும் என்று அறிவித்தரார்கள். அது இந்த தேர்தலில் இருந்தோ என்று வடிவாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்கள்.

Reply
#3
ஆமாம் றமா கூறியது உண்மையே நமக்குள் இருக்கும் போட்டி உணர்வுகளை அகற்றி எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரு ஆளுக்கே வாக்களித்தால் நிச்சம் அவர் வெற்றி பெறுவார். போன வருடம் வாக்குகள் எல்லாம் சிதறிய படியால் தனிய போட்டி இட்டவர்கள் ஒருவரும் வெல்ல முடியவில்லை.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)