![]() |
|
உங்க லவ் எங்க லவ்வில்ல - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: உங்க லவ் எங்க லவ்வில்ல (/showthread.php?tid=1942) |
உங்க லவ் எங்க லவ்வில்ல - Snegethy - 12-19-2005 உங்க லவ் எங்க லவ்வில்ல ங்கொக்காமக்க உலகமகா லவ்வுடியோவ். விஜய் :ஐ லவ்வுயாடா செல்லம்…எங்க மாமா பார்த்து ஐ லவ்யு சொல்லுடா செல்லம். அஸின் : same to u. படம்னா சிவகாசிதான் படம்.எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.விஜய் பேசுற வசனங்களுக்காகவாவது எல்லாரும் பாருங்க (வசனகர்த்தா யாரோ எனக்குத் தெரியாது). படத்தின்ர தொடக்கத்திலயே அஸின் சோட்ஸ்ம் சிலீவ்லெஸ்ம் போட்டுக்கொண்டு (விஜய்-வசனகர்த்தாவின் பார்வையில் அந்த உடுப்புக்கு வேற பெயர் என்றது வேற விசயம்) அட்டகாசமா கடைத்தெருவில பவனி வருவா அதுவும் அப்பாவோட.வெளிநாட்டில படிச்சிட்டு சொந்த ஊருக்குப்போற எல்லாரும் இந்தியாவில அப்பிடித்தான் உடுப்புப் போடிறவையோ?? தெரிஞ்சவங்க சொல்லுங்க. உடுப்பு போடுறது ஒவ்வொருவருத்தருடைய விருப்பம் அதுக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தமோ எனக்கு விளங்கலப்பா.அம்மா இல்லாத பொம்பிளைப்பிள்ளையளுக்கு கல்லுரிக்குப் போற வயசிலயும் சொந்த புத்தி கிடையாதா? அதே பெடியங்களுக்கு அம்மா இல்லையெண்டால் அம்மா இல்லாம வளர்ந்தவன் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பான்.எப்பிடியாவது இருக்கட்டுமன் எதுக்கு அம்மாவைச் சாட்டுவான்.அம்மா இருந்தா அறிவுரை சொல்லுவாதான் இல்லையெண்டு சொல்லலை அதுக்கா அம்மா இல்லாட்ட பிள்ளையளால சுயமா சிந்திக்கவே தெரியாதெண்டமாதிரியெல்லோ இருக்கு. சிவகாசி அஸின்ர கையை அவவை வந்து மோதினவன்ர கையோட உரசு உரசு உரசிட்டு கசாப்பு கடையில தசை இருக்கு போடா எண்டு சொல்லிப்போட்டு அஸினுக்கு ஒரு லெக்ஸர் குடுப்பார்.எல்லாப் பெண்களுக்கும் ரொம்பத் தேவையானது.முன்னம் உப்பிடித்தான் யூத் படத்தில விஜய் கதாநாயகி என் கையைப் பிடிச்சா எனக்கு பிடிக்கிற எல்லாம் பிடிக்கும் என்று சொன்னா என்று லவ் பண்ணிப்போட்டு அவா தான் லவ் பண்ணவில்லை என்று சொன்னவுடனே பொம்பிளையளுக்கெல்லாம் அம்மா என்றொரு ஸ்தானம் இல்லையெண்டா வேஸ்ற் என்று சொல்லுவார்.எல்லாப் படத்திலயும் பொம்பிளையளுக்கு மரியாதையோ மரியாதை. படத்தில ஒரு காட்சி: அசின் நல்லா குண்டான கொஞ்ச அன்ரீஸ் ஆக்களை கூட்டிக்டிக்கொண்டு வந்து இதோ சேலை கட்டி வந்திருக்கினம் கையெடுத்து கும்பிடு சிவகாசி என்று சொன்னா விஜய் துவக்கெடுத்து கொண்டு வருவார்.அதுக்குள்ள அவை குண்டா வடிவில்லாத ஆக்கள் எல்லாம் லவ் பண்ணக்கூடாதெண்ட மாதிரியான நக்கல் வேற. காதலியோட அப்பா அண்ணனை எல்லாம் எதுக்கு தேவையில்லாம சேட்டைப் பிடிக்கிறாரு அடிக்கிறாருன்னு தெரியலை சிவகாசி.அஸின் நல்லாயிருக்கிறாவா என்று பார்க்கணும்னா போன் பண்ணிப் பார்க்கிறரு இல்லை வீட்ட போய் பார்;க்கிறது படத்தில சும்மா விஜய் போன போக்கில அசின் அப்பான்ர சட்டையைத் தான் பிடிப்பார்.அப்பாக்கள் அண்ணன்கள் எல்லாம் லூசுகளா??வீட்டுப்பொண்ணு லவ் பண்ணுது என்றா வீட்டில இருக்கிற மற்ற எல்லாற்ற மானம் மரியாதையை லவ்வரிட்ட அடகு வைச்சிடுறதா? எனக்கு இன்னுமொண்டு விளங்கல படத்தில:தமிழ் நாட்டில பெடியங்கள் கல்லூரிக்குப் பணம் கட்டக் காசில்ல எண்டா "உங்களைப் பார்த்தா எங்க அம்மா மாதிரி இருக்கு : என் அம்மா செத்துப் போட்டா என் படிப்புக்கு காசு தாங்கோ" என்று கூடப் படிக்கிற பணக்காரப் பிள்ளையளிட்ட கேக்கறவையோ??? விஜய் அறுத்துக் குடுத்த அசின்ர சங்கிலியை குடுக்கத் திரும்ப வந்த பெடியன் மற்ற நண்பர்கள் தந்த காசில மீட்டது என்று சொல்லித்தான் குடுப்பார்.அப்பவாவது நான் பகுதிநேர வேலை செய்யுறன் என்று சொல்ல வைச்சிருக்கலாம். அப்புறம் சொல்ல மறந்திட்டன் படத்தின்ர கதை சூப்பர்.பிரகாஸ்ராஜ் நடிப்பு அந்த மாதிரி.மூளி முங்காரி மாமி சூப்பரோ சூப்பர். -சினேகிதி- - narathar - 12-19-2005 அப்ப உங்க லவ் என்னங்க? தமிழ்ப் படம் அதுவும் இளய தளபதியின்ட படம் பாக்க முதல் தலயக் களட்டி வச்சுப் போட்டல்லோ பாக்கவேணும்.இல்லாட்டி இப்படிக் கேள்வியள் தான் வரும். ஏன் இப்படிப் படம் எல்லாம் மினக்கெட்டு இருந்து பாக்கிறியள்? - vasanthan - 12-20-2005 தளபதிக்கே புத்தி சொல்ல வந்திட்டியளா :twisted: ? சிப்பாய்கள் வந்து கலாய்கப்போறங்கள் கவனம் :roll: (சினேகிதி நீங்க நினைச்சியள் சொல்லிப்போட்டியள்,நான் நினைத்ததோடு சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )
- Snegethy - 12-20-2005 நாரதர் பின்ன எப்பிடியான படம் பார்க்கிறது ?தூம் காள் இளான் உப்பிடிப் படங்கள் பார்க்கவோ.... - Snegethy - 12-20-2005 வசந்நதன் யாரு அந்த சிப்பாய்கள்?? நான் ஏன் தளபதிக்கு புத்தி சொல்லப் போறன்?? யாருக்குமோ புத்தி சொல்ல மாட்டன் வசந்தன்.ஏன் நீங்கள் நினைச்சுப் போட்டு சொல்லாமல் விட்டனீங்கள்? - SUNDHAL - 12-20-2005 சிப்பாய்கள்: சுண்டல், ப்ரியகசி ,வினித் ,விஷ்னு ,கீத்து, அனி etc etc <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-20-2005 அப்பிடியோ அப்ப என்ன சுண்டல் வந்திட்டு சுண்டல் விக்காம சிப்பாய்களை மட்டும் சொல்லிட்டு போவுது. - SUNDHAL - 12-20-2005 நீங்ன தான் வாங்க மாட்டேன் எங்கிறிங்களே? சுண்டல் விக்கிற என்னட்ட கடலை கேட்டா நான் எங்க போறதாம்? - Snegethy - 12-20-2005 கடலை இல்லாம நீர் எப்பிடிச் சுண்டல் செய்வீராம்? - sinnappu - 12-20-2005 Snegethy Wrote:கடலை இல்லாம நீர் எப்பிடிச் சுண்டல் செய்வீராம்? கையாலை தான் :wink: :wink: :wink: :wink: :wink: - narathar - 12-20-2005 Snegethy Wrote:கடலை இல்லாம நீர் எப்பிடிச் சுண்டல் செய்வீராம்? அதுதானே இடைக்கிடை போடுறவர், நீங்கள் வாங்கலயோ? - narathar - 12-20-2005 Snegethy Wrote:நாரதர் பின்ன எப்பிடியான படம் பார்க்கிறது ?தூம் காள் இளான் உப்பிடிப் படங்கள் பார்க்கவோ.... யாராவது உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் எழுதும் விமர்சகர்கள், நண்பர்கள் அல்லது களத்தில் கூட நல்ல தமிழ்ப் படங்கள் பற்றி செய்திகள் வரும்.அவற்றைப் படித்து விட்டு படம் பார்த்தால் உங்கள் பொழுது இனிமையாக பிரயோசனமானதாக இருக்கும் என்று சொன்னேன்.கோமதி சினிமாத் தலைபுக்குள் சிறந்த தமிழ்ப் படங்கள் 10 என்று எழுதிய தலைப்பை வாசித்தால் நல்ல படங்களை அடயாளம் காண இயலும். அது சரி அது என்ன தூம் காள் இளான் படங்கள் விளங்கவில்லை? - vasanthan - 12-20-2005 SUNDHAL சிப்பாய்கள்: சுண்டல், ப்ரியகசி ,வினித் ,விஷ்னு ,கீத்து, அனி etc etc சுண்டல் என்னை தேவையில்லாமல் மாட்டிவிட பார்க்குது :evil: :twisted: Snegethy ஏன் நீங்கள் நினைச்சுப் போட்டு சொல்லாமல் விட்டனீங்கள்? (சிப்பாய்க்)கலகம் பிறந்தால் சமாளிக்க மாட்டன் :roll: - Thala - 12-20-2005 சினேகிதி உது நல்லால்ல அதுவும் நம்ம ஊர் மாப்பிள்ளையைச் சொல்லுறது கொஞ்சமும் நல்லால்ல.... ஆனா விமர்சனம் மட்டும் நல்லாருக்கு.... - ப்ரியசகி - 12-20-2005 சிநேகிதி...சிவகாசி படம் நானும் பார்த்தேன்..நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லவில்லை..நீங்கள் சொன்னவற்றை நானும் கவனித்திருந்தேன்...எனக்கும் அந்த விடயங்களால்..இப்படியான கேள்விகள் வந்ததும் உண்டு. பிடிக்காமல் இருந்ததும் உண்டு. ஆனால் விஜய் ரொம்ப பிடிக்கும் எண்டதாலோ என்னவோ..இப்போதையா காலத்தில இப்படியான படங்கள் தான் கூட வருவதனாலோ என்னவோ...அதை பெரிதாக எடுக்க தோணவில்லை..அடுத்த விஜய் படம் நன்றாக வரும் என்றதோடு சரி..(இப்போ வசந்தன் சொன்னது போல..நினைத்தது மட்டும் தான்..) Quote:தமிழ்ப் படம் அதுவும் இளய தளபதியின்ட படம் பாக்க முதல் தலயக் களட்டி வச்சுப் போட்டல்லோ பாக்கவேணும்.இல்லாட்டி இப்படிக் கேள்வியள் தான் வரும். ஆனால் மேலே நாரதர் குறிப்பிட்டது போல..தமிழ் படங்களை அதுவும்....குறிப்பாக..இளைய தளபதியின் படங்களை பார்க்கும் போது தலையைக்கழற்றி வைத்து விட்டுத்தான் பார்க்க வேண்டும் என்பது..ஒரு சரியான விடயமாக எனக்கு தெரியவில்லை...அப்படிப்பார்க்கப் போனால்..நிறைய படங்களை தலை இல்லாத முண்டங்கள் தான் பார்க்க வேண்டும்..இப்பொதைய காலத்தில் இப்படி நிறைய படங்கள் வருவது சகஜம்..அது போல இதுவும்..அதற்காக இளைய தளபதியின் படங்களை என்று.. ஒட்டு மொத்தப்படங்களை..சொல்வது ..சரியல்ல என்று நான் நினைக்கிறேன்... - Thala - 12-20-2005 ப்ரியசகி...! அண்ணா (நான்) பிள்ளேன்ர பக்கம் தான்....ம்ம்ம்ம். - தூயவன் - 12-20-2005 Thala Wrote:ப்ரியசகி...! அண்ணா (நான்) பிள்ளேன்ர பக்கம் தான்....ம்ம்ம்ம். என்ன அண்ணாச்சி தேர்தலா நடக்கின்றது? சப்போட் எல்லாம் பண்ணிக் கொண்டு! :evil: பேசாமல் கருத்து எழுதுங்கப்பா! :wink: - Snegethy - 12-20-2005 நாரதர் அது சும்மா கொஞ்ச கிந்திப் படங்களின்ர பெயர்.தூம் நல்ல படம் விருப்பமெண்டால் பாருங்கோ. - Snegethy - 12-20-2005 பிரியசகி தலைய கழற்றி வச்சிட்டு பார்க்கிறதில்ல எனக்கும் உடன்பாடு இலலைதான்.தளபதின்ர லொள்ளுகள் எனக்குப் பிடிக்கும்.சிவகாசில பிரகாஸ்ராஜ்க்கு ஆப்பு வைக்கிற காட்சிகள் சூப்பர். - Snegethy - 12-20-2005 கருத்துக் கந்த சாமி வந்திட்டார் மற்றாக்களை கருத்து எழுதச்சொல்ல.அந்தப் படத்தில கஞ்சாக்கருப்பு பத்தாயிரத்துக்கு பதில் பத்து லட்சத்தைக் குடுத்திட்டு அடிவாங்குவார் ஞாபகம் இருக்கா பிரியசகி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|