| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 269 online users. » 0 Member(s) | 267 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,309
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,061
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,484
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,029
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| ரணிலை `குள்ளநரி'யெனக் கூறும் புலிகள் மகிந்தவை நல்ல மனிதரெனக் |
|
Posted by: Vaanampaadi - 12-21-2005, 11:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
ரணிலை `குள்ளநரி'யெனக் கூறும் புலிகள் மகிந்தவை நல்ல மனிதரெனக் கூறுவதேன்?
இரகசிய உடன்பாடிருப்பதாக கபீர் காஷிம் கண்டுபிடிப்பு
சமஷ்டிமுறையில் தீர்வுகாண முயன்ற ரணிலை `குள்ளநரி' எனக் கூறி எதிர்த்த புலிகள் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வெனக் கூறும் மகிந்த ராஜபக்ஷவை `நல்ல மனிதர்' எனக் கூறி ஆதரிக்கின்றனர். அவ்வாறெனில் மகிந்தவுக்கும் புலிகளுக்குமிடையில் இரகசிய உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுவதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் கபிர் காஷிம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவினரும் செய்துகொண்ட தேர்தல்கால உடன்படிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கை மீளாய்வு, நோர்வே வெளியேற்றம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது என்ன நடைபெறுகிறது? ஜே.வி.பி., ஹெல உறுமயவின் நிலைப்பாடுகள் என்ன?
ஜே.வி.பி., ஹெல உறுமயவின் வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகள் மட்டும்தானா? நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு பற்றிய இவர்களின் கோஷங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன?
தற்போது யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் வரவு - செலவுத் திட்டம் பற்றிப் பேசிப் பயனில்லை. வரவு -செலவுத் திட்டங்கள் வெறும் இலக்கங்களை மட்டும் கொண்ட வார்த்தை ஜாலங்கள்.
அரச துறைக்கு மட்டும் முன்னுரிமை அளித்துள்ள இந்த வரவு- செலவுத் திட்டத்தில் தனியார் துறை குறித்து எந்தத் திட்டங்களும் இல்லை. அரச முதலீடுகள் தொடர்பான திட்டங்கள் வெறும் கற்பனைகள் மட்டுமே.
உள்ளூர் அரச வங்கிகளிலேயே கடன் பெறப்போகின்றது இந்த அரசாங்கம். இதனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கும். வட்டிவீதங்கள் அதிகரிப்பினால் உள்ளூர் வர்த்தகர்களும் வர்த்தக நிறுவனங்களும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.
Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm
|
|
|
| ஆசியாவில் அல்லது இலங்கையிலேயே பேச்சு - மகிந்த உறுதி |
|
Posted by: Vaanampaadi - 12-21-2005, 11:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஆசியாவில் அல்லது இலங்கையிலேயே பேச்சு ஜே.வி.பி. யினரிடம் ஜனாதிபதி மகிந்த உறுதி
விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலோ அல்லது வேறெந்த ஐரோப்பிய நாட்டிலோ நடைபெறமாட்டாது என ஜே.வி.பி. யினருக்கு உறுதியளித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளுடனான பேச்சுவார்த்தை இலங்கையில் அல்லது ஆசிய நாடொன்றிலேயே நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலை குறித்து ஆராயுமுகமாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது புலிகளுடனான பேச்சுவார்த்தை ஒஸ்லோவிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ நடத்த அனுமதிக்கக் கூடாது என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச, ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தனது நிலைப்பாடும் அதுதான் எனவும் பேச்சுவார்த்தை ஆசிய நாட்டில் அல்லது இலங்கையிலேயே நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில், சமாதானப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது குறித்து நோர்வே வெளிநாட்டமைச்சருடன் ஹொங்கொங்கில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவும், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா, பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச, அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அனுர திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேநேரம், இந்த விடயம் குறித்து மீண்டுமொரு முறை கலந்துரையாடுவது எனவும் இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். இச் சந்திப்பு நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm
|
|
|
| நடவடிக்கை எடுப்பதாக பிரதிப் பாதுகாப்பமைச்சர் உறுதியளிப்பு |
|
Posted by: Vaanampaadi - 12-21-2005, 11:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழ். பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள 2 இராணுவ நிலைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக பிரதிப் பாதுகாப்பமைச்சர் உறுதியளிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகேயுள்ள இரு இராணுவ நிலைகளையும் அங்கிருந்து அகற்றுவது தொடர்பாக, தான் கூடிய கவனம் செலுத்துவதாக பிரதமரும் பாதுகாப்பு பிரதி அமைச்சருமான இரட்ணசிறி விக்கிரமநாயக்க தமிழ்க் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளார்.
குடாநாட்டில் இராணுவத்தினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை கண்டித்து தமிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டதையடுத்து, இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சபையில் சம்பந்தன் எம்.பி. சிறுவிளக்கமொன்றை அளித்தார். அதில்-
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், குடாநாட்டு சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவதாகவும், நடந்த சம்பவங்கள் தொடர்பில், தான் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான இரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்துக்கு அருகேயுள்ள இரண்டு இராணுவ நிலைகளையும் அங்கிருந்து அகற்றுவது தொடர்பில், தான் கூடியளவு கவனம் செலுத்துவதாகவும் எம்மிடம் அவர் உறுதியளித்துள்ளார்.
இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகுமென சம்பந்தன் தெரிவித்தார்.
Thinakural
|
|
|
| மேலும் தாமதமோ மழுப்பலோ வேண்டாம் |
|
Posted by: Vaanampaadi - 12-21-2005, 11:09 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மேலும் தாமதமோ மழுப்பலோ வேண்டாம் உடனடியாக பேச்சை ஆரம்பிக்க வேண்டும்
டோக்கியோ மகாநாட்டு கூட்டுத் தலைமை நாடுகள் அரசிடமும் புலிகளிடமும் அவசர வேண்டுகோள்
சமாதான நடவடிக்கைகளில் பற்றுறுதியுடன் ஈடுபடுமாறும் வட,கிழக்கில் அதிகரித்துச் செல்லும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவுமாறும் விடுதலைப் புலிகளை வலியுறுத்தியுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகளின் கூட்டுத்தலைமை நிலைமை சீர்குலைவதற்கு துணைப் படைகளின் செயற்பாடுகளும் காரணம் என்பதை தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி, புனர் நிர்மாணத்திற்கான 2003 டோக்கியோ மாநாட்டில் இணைத்தலைமை தாங்கிய ஐரோப்பிய ஒன்றியம் நோர்வே ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகள்,அமைப்புகளே பிரசல்ஸில் நேற்று முன்தினம் ஒன்று கூடிய போது இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் துணைப்படைகளை கொழும்பு அரசாங்கம் கையாளும் விதமும் விடுதலைப் புலிகளின் வன்முறைகளும் முக்கியமான விடயங்களாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளன.
வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு விடுதலைப் புலிகளை வலியுறுத்தியிருக்கும் இணைத் தலைமைகள், யுத்த நிறுத்த உடன்படிக்கை, சமாதான நடவடிக்கைகளில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்துமாறும் இது தொடர்பான தமது மாற்றத்தை வெளிப்படுத்தத் தவறினால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் எச்சரித்துள்ளன.
பிரசல்ஸ் மாநாட்டினைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு;
இலங்யைின் நிலவரத்தை மீளாய்வு செய்வதற்காக 2005 டிசம்பர் 19 இல் பிரசல்ஸில் டோக்கியோ மாநாட்டின் இணைத்தலைமைகள் சந்தித்தன. அதேசமயம் இந்த இணைத்தலைமைகளை இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியொருவரும் தனியாக சந்தித்து கருத்துகளை பரிமாறியுள்ளார்.
சமாதான நடவடிக்கைகளுக்கு மீள உயிரோட்டமளிப்பதற்கும் அதிகரித்துச் செல்லும் வன்செயல்களுக்குமிடையிலான முக்கியமான தேர்வை இலங்கை எதிர் நோக்குவதாக கூட்டுத் தலைமைகள் அவதானித்துள்ளன.
நீடித்த சமாதானமானது இலங்கை அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் கரங்களிலேயே தங்கியுள்ளது. இலங்கை மக்கள் சமாதானத்தையே விரும்புகின்றனர். இந்த விருப்பத்தை நிறைவேற்றத் தவறினால் துன்பகரமான பின்னடைவே ஏற்படும்.
நியாய பூர்வமான அரசியல் கூட்டமைப்பு தொடர்பான புலிகளின் அண்மைய கோரிக்கையையும் இணைத் தலைமைகள் கவனத்தில் எடுத்துள்ளன. ஆயினும் வட, கிழக்குப் பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு பலவந்தப்படுத்தியமை தமிழ் வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலென புலிகள் மீது கூட்டுத் தலைமைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் வட, கிழக்கில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வன்செயல்களையும் கூட்டுத் தலைமைகள் கடுமையான தொனியில் கண்டித்துள்ளன. வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு புலிகளுக்கு கோரிக்கை விடுத்திருப்பதுடன் யுத்த நிறுத்த உடன்பாடு, சமாதான நடவடிக்கைகளில் தமக்கிருக்கும் ஈடுபாட்டை வெளிப்படுத்துமாறும், தவறினால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
நிலமை சீர்குலைவதற்கு துணைப் படையினர் நடவடிக்கைகளும் மற்றொரு காரணமென இணைத்தலைமை அடையாளம் கண்டுள்ளது.அத்தகைய குழுக்களின் செயற்பாட்டை நிறுத்துவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் சமாதான முன்னெடுப்புகளில் தனக்கிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த துணைப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்துவது அவசியமென்றும் இணைத்தலைமைகள் வலியுறுத்தியுள்ளன.
அதேவேளை, யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலாக்கத்தை மீளாய்வு செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடிப் பேச்சுவார்த்தையை நடத்த இணங்கியுள்ளமையையும் தனது நாட்டில் பேச்சுவார்த்தையை நடத்த ஜப்பான் உதவ முன்வந்தமையையும் கூட்டுத் தலைமைகள் வரவேற்றுள்ளன. அத்துடன், அந்தப் பேச்சுகளை மேலும் தாமதிக்காமல் இரு தரப்பும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் நழுவல் பேச்சுகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறும் இரு தரப்பிடமும் வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க தென்னிலங்கையில் அரசியல் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் நோக்கத்தையும் இணைத்தலைமைகள் வரவேற்றுள்ளதுடன் தெற்கிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக சகல கட்சிகளும் ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு காத்திரமானதும் நெகிழ்வுத் தன்மையுடையதுமான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
சகல சமூகங்களினதும் அபிலாஷைகளை கவனத்தில் கொண்டதாகவும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதை அடிப்படையாகக் கொண்டதாகவும் பேச்சுவார்த்தை அமைய வேண்டுமென நம்புவதாக இணைத்தலைமைகள் தெரிவித்துள்ளன.
அத்துடன், அண்மைய சம்பவங்களின் போது முஸ்லிம் சமூகம் பொறுமைகாத்ததையும் இணைத்தலைமைகள் பாராட்டியுள்ளன.
மேலும், நோர்வேயின் அனுசரணையில் தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியதற்காக இலங்கை அரசாங்கத்தினதும் புலிகளினதும் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோர்வேயின் அனுசரணைக்கு முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதையும் இணைத் தலைமைகள் உறுதியளித்துள்ளன.
இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் பதற்றமான சூழ்நிலையிலும் ஆற்றிவரும் பணிக்காக பாராட்டியிருப்பதுடன் அவர்கள் தமது கடமையை மேற்கொள்வதற்கான சூழலையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையின் 4 ஆவது வருட நிறைவை அண்மித்த காலப்பகுதியில் தமது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தயாராக இருக்கும் விருப்பத்தையும் இணைத்தலைமைகள் வெளிப்படுத்தியுள்ளன.
thinakural
http://www.thinakural.com/New%20web%20site...Lead%20News.htm
|
|
|
| கொழும்பில் `ஸ்ரேன்ஜர்ஸ் நைற்' தொடர்மாடி, லொட்ஜுகளில் `வேட்டை |
|
Posted by: Vaanampaadi - 12-21-2005, 11:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கொழும்பில் `ஸ்ரேன்ஜர்ஸ் நைற்' தொடர்மாடி, லொட்ஜுகளில் `வேட்டை'
மேல் மாகாணத்தில் `ஸ்ரேன்ஜர்ஸ் நைற்' என்ற பெயரில் தொடர்ந்து பன்னிரண்டு தினங்களுக்கு சுற்றி வளைப்பு தேடுதல்களை நடத்தி விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரையும் பாதாள உலக கோஷ்டியினரையும் கைது செய்வதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதென தெரிவிக்கும் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ இந்நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கும் பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்களென்றும் தெரிவித்தார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலும், விசேடமாக கொழும்பு நகரிலும் பாரிய அளவில் இந்த சுற்று வளைப்பு தேடுதல்கள் நடத்தப்படவுள்ளன. முக்கியமாக தொடர் மாடி மனைகளிலும், சொகுசுமாடி மனைகளிலும், லொட்ஜுகளிலும் இரவுக் களியாட்ட விடுதிகளிலும் இந்த சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த தேடுதல் நடவடிக்கைகளை திறமையாக செய்து முடிக்கும் பொலிஸாருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படுவதோடு வெளிநாடுகளில் விசேட பயிற்சிகளுக்காகவும் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கும் பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள்.
பன்னிரெண்டு தினங்கள் தொடர்ந்து இடம் பெறும் இச் சுற்றிவளைப்பு தேடுதல்களின் விபரங்களை அறிக்கையாக தயாரித்து தினமும் பொலிஸ் தலைமையகத்திற்கு கையளிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு 24 ஆம் திகதி தொடக்கம் விசேட வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
போதைவஸ்து விற்பனை, கள்ளச் சாராயம் விற்பனையும் இச்சுற்றி வளைப்புகளின் போது கண்டுபிடிக்கப்பட்டு முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென்று கடுமையான உத்தரவு பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபானச் சாலைகள், ரெஸ்ரூரன்டுகள் மற்றும் இரவு விடுதிகள் கலால் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். மீறப்பட்டால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களென்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் போது "ஸ்ரேன்ஜர்ஸ் நைற்" சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக 5000 வோக்கி டோக்கி (ரேடியோ தொடர்பாடல் கருவிகள்) மேல் மாகாண பொலிஸாரின் பாவனைக்காக வழங்கப்பட்டதோடு ஒரு பொலிஸ் நிலையத்திற்கு மூன்று மோட்டார் சைக்கிள் வீதம் வழங்குவதற்கான பத்திரங்களும் கையளிக்கப்பட்டன. இதில் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...Important-5.htm
|
|
|
| மருத்துவமனையில் நடிகர் பாலாஜி |
|
Posted by: Vaanampaadi - 12-21-2005, 10:59 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
மருத்துவமனையில் நடிகர் பாலாஜி: ஜெ சந்திப்பு
டிசம்பர் 21, 2005
சென்னை:
பழம்பெரும் நடிகர் பாலாஜிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் கொண்ட பாலாஜி கேரளாவைச் சேர்ந்தவர். இவர் சென்னை எழும்பூரில் வசித்து வருகிறார். 71 வயதாகும் அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு சமீபத்தில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நிலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையாள நடிகர் மோகன்லால், பாலாஜியின் மருமகன் ஆவார்.
இதற்கிடையே பாலாஜியை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற ஜெயலலிதா அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடனும் பேசினார்.
Thatstamil
|
|
|
| இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் |
|
Posted by: Vaanampaadi - 12-21-2005, 10:58 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
டிசம்பர் 21, 2005
ஜகார்தா:
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. கட்டடங்கள் மிக பலமாக அதிர்ந்ததையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு ஓடினர்.
வடக்கு சுலவேசியில் உள்ள மனடோ பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.3 என்ற அளவுக்கு பூகம்பத்தின் சக்தி இருந்தது.
இந்தப் பகுதியில் தான் சுனாமியை உருவாக்கிய மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
|
|
|
| நன்றி கெட்ட நான்.. |
|
Posted by: Rasikai - 12-21-2005, 05:25 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (20)
|
 |
<b>நன்றி கெட்ட நான்..!
================
கண் மூடியபடி நான் பிறந்தேன்..அன்று முதல் - அம்மா
தன் கண்களை தூக்கம் காவு கொள்ள விடாதிருந்து எனைக் காத்தாள்!
எங்கே என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..
நான் தவழ தொடங்கினேன்..
தரையோடு தனை விழுத்தி தானும் சேர்ந்து தவழ்ந்து..
என் தத்தக்கா பித்தக்கா என்ற ஊர்தலில் தன் உயிர் மூச்சை
ஒளித்து வைத்தாள் -அம்மா
வளர்ந்தேன்...
கங்காரு போல் எனை உடலில் காவி காவியே தான் மெலிந்தாள்.
கண்ணு இல்ல.....செல்லம் இல்ல....
காகம் சொல்லு...மேகம் சொல்லு.....
அம்மா...என்னை பேச பழக்கினாள்!
காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!
இப்போ அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....
தட்டு தடுமாறி படியேறி வருகிறாள்..பிள்ளை
சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......
முகம் சிவக்கிறது எனக்கு..........
"உன்னை பேசாம இரு எண்டு சொன்னன் தானேமா..
பெரிய கரைச்சல்"
எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயந்தவள் மனசை
இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!
ஓடி வாடி..ஓடி வாடி....
அம்மா உலகத்தை மறந்து..என்னுள் மீண்டும் பிறந்து..
நடை பழக்கினாள்!
தன் இரு கை நீட்டி அதனிடையுள் என்னை நடக்கவைத்தாள்..
எங்கே...நான் விழுந்து விடுவேனோ என்று பயம் ..அம்மாக்கு!
வாழ்வு புத்தகத்தை கால காற்று மறுபடியும்..
பக்கம் வேறாய் புரட்டுகிறது
அம்மா தலை வெள்ளி சரிகை கொண்டு நெய்த
கறுப்பு துணி என்றாகிறது!
"பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா கடைக்கு போட்டு வாயேன்"
இது..அம்மா!
"எனக்கு ஏலாது சும்மா போமா"
அது..நான்!
முழங்கால் வலிக்க.. முக்கி முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!
எனக்கு நடை பழக்கியவளை..பாதம் கொதிக்க நடக்கவிட்டு..
நான் நன்றி செய்தேன்!
திரும்பி வந்தபின் தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!
எனக்கு முதல் தந்துவிட்டு தான் குடிப்பாள்!
கால் கடுக்க சென்றது அவள்....
களைப்பாறியது ..நான்!
எப்படிச் சொல்ல?
இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும் சரி..
இடியென்று அவள் தலையுள் நான் இறங்கினாலும் சரி..
எதையுமே ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!
காலம் ஓடும் ...அம்மா
ஒருபொழுதில் காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான்
அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா?
கண்ணீருக்குள்ளும் சுயநலம்.. சீ..
நன்றி கெட்ட நான்!!!!</b>
|
|
|
| ஏன் தயக்கம்? |
|
Posted by: AJeevan - 12-21-2005, 12:55 AM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (7)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>ஏன் தயக்கம்?</b>
-ஆத்மானந்தா
<img src='http://www.dinamalar.com/2005matharasimargazhi/photo/THAMIL%20MATHA%20RASI%20MALAR-06.JPG' border='0' alt='user posted image'>
ஒரு செயலைத் தொடங்கும் முன் நான்கையும் யோசிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லி வருகிறேன். சரி...ஒரு இக்கட்டான நிலையில்சிக்கிக் கொள்கிறீர்கள். இதிலிருந்து மீள வேண்டும். என்ன செய்வது...என கையை பிசைந்து கொண்டு நிற்கக்கூடாது. இதிலிருந்து மீண்டே தீர வேண்டும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் உருவாக வேண்டும். மனம் இருந்தால் மார்க்கமுண்டு. நம்மால் முடியாதது என்பதே கிடையாது.
\"\"துன்பமே உன்னை வரவேற்கிறேன்,'' என யார் ஒருவர் கஷ்டத்தை ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்கிறாரோ அவர் என்றேனும் ஒருநாள் எட்டிப்பிடிக்க முடியாத நிலையில் இருப்பார்.
\"வருவது வரட்டும், அதிக பட்சம் போனால் என்ன...இந்த உயிர்தானே' என்று தினமும் பத்து தடவை உங்களுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள். நீங்கள் உங்களை அறியாமலே உயரப் பறக்க துவங்கி விடுவீர்கள்.
நீங்கள் ஏதோ ஒரு வேலையில் இருந்தீர்கள். அது நன்கு பழகிய வேலை. ஏதோ காரணத்தால் அதை இழக்க வேண்டி வந்து விட்டது. குடும்பம் பசியில் தத்தளிக்கும் என்ற நிலை...அன்பு மனைவியும், பிள்ளைகளும், பெற்றவர்களும், சகோதரிகளும் உங்கள் கண் முன் நின்று, \"\" அடுத்த ஒன்றாம் தேதிக்கு என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்பதை மனக்கண் முன் பார்க்கிறீர்கள். பயம் தொற்றுகிறது. இதைத் தான் தவறு என்கிறேன்.
இந்த சமயத்தில் யாரோ ஒருவர் உங்களுக்கு வேலை வாங்கித் தர முன் வருகிறார். அல்லது நீங்களே ஒரு இடத்தில் வேலைக்கு ஆள் தேவை என்ற போர்டைப் பார்க்கிறீர்கள். இப்போது கிடைக்கும் வேலை உங்களுக்கு பழக்கப்படாததாக இருக்கலாம். எப்படி செய்வது என்ற தயக்கம் ஏற்படுகிறது.
இந்த தயக்கத்துக்கு மருந்து தான் இந்த சம்பவம்.
விவேகானந்தர் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அருகிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் ஒரு கலயத்தைக் கட்டி சில வாலிபர்கள் துப்பாக்கியால் குறி வைத்து சுட்டனர். எல்லோரது குறியும் தவறி விட்டது. விவேகானந்தர் அந்த இளைஞர்களைப் பார்த்து சிரித்தார். இதை ஒரு இளைஞன் கவனித்து விட்டான்.
\"\"சாமியாரே! என்ன கிண்டல் சிரிப்பு...நாங்கள் இந்த கலயத்தை குறி வைத்து அடிக்க முடியவில்லை என்று தானே சிரிக்கிறீர். இதோ பிடியும்...துப்பாக்கியை...சுட்டுத்தள்ளும் பார்க்கலாம்,'' என்றனர்.
விவேகானந்தர் கையில் துப்பாக்கியை வாங்கினார். கலயத்தை நோக்கி குறி வைத்தார். துப்பாக்கி குண்டு கலயத்தை சுக்கு நுõறாக்கி விட்டது. அந்த இளைஞன் ஆச்சரியப்பட்டான்.
\"\"சாமியாரே! ஆச்சரியமாய் தான் இருக்கிறது. இருந்தாலும், இது தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்கலாம் இல்லையா? எங்கே...அந்த கலயம் கட்டப்பட்டிருந்த குச்சி அதோ இருக்கிறது. அதை அடித்து வீழ்த்தும், பார்க்கலாம்,'' என்றான் இளைஞன்.
விவேகானந்தர் திரும்பவும் குறி வைத்தார். குச்சி கீழே விழுந்தது.
இளைஞன் அப்படியே அவர் காலில் விழுந்து விட்டான்.
\"\"சுவாமி! தாங்கள் பெரிய துப்பாக்கி சுடும் வீரர் என அறியாமல் பேசி விட்டேன். மன்னிக்க வேண்டும். நீங்கள் யாரிடம் பயிற்சி எடுத்தீர்களோ, அவரிடம் போய் நாங்களும் படிக்க வேண்டும்,'' என்றான்.
சுவாமிஜி சொன்னார்.
\"\"தம்பி! நான் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை. நீ ஒரு வேலையைச் சொன்னாய். அதை முடித்தாக வேண்டும் என என் மனதில் உறுதி கொண்டேன். ஒரே மூச்சில் முடித்தாக வேண்டும் என கணநேரத்தில் வைராக்கியம் எடுத்தேன். முடித்து விட்டேன்,'' என்றார்.
பார்த்தீர்களா! உறுதி கொண்ட நெஞ்சங்கள் எப்பேர்ப்பட்ட சூழ்
நிலையையும் சமாளிக்கும் என்பதை...இளைஞர்களே! நீங்களும் சின்ன விவேகானந்தர்களாய் மாறுங்கள்.</span>
|
|
|
|