Yarl Forum
நன்றி கெட்ட நான்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நன்றி கெட்ட நான்.. (/showthread.php?tid=1918)

Pages: 1 2


நன்றி கெட்ட நான்.. - Rasikai - 12-21-2005

<b>நன்றி கெட்ட நான்..!
================

கண் மூடியபடி நான் பிறந்தேன்..அன்று முதல் - அம்மா
தன் கண்களை தூக்கம் காவு கொள்ள விடாதிருந்து எனைக் காத்தாள்!
எங்கே என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..

நான் தவழ தொடங்கினேன்..
தரையோடு தனை விழுத்தி தானும் சேர்ந்து தவழ்ந்து..
என் தத்தக்கா பித்தக்கா என்ற ஊர்தலில் தன் உயிர் மூச்சை
ஒளித்து வைத்தாள் -அம்மா

வளர்ந்தேன்...
கங்காரு போல் எனை உடலில் காவி காவியே தான் மெலிந்தாள்.

கண்ணு இல்ல.....செல்லம் இல்ல....
காகம் சொல்லு...மேகம் சொல்லு.....
அம்மா...என்னை பேச பழக்கினாள்!

காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!
இப்போ அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....
தட்டு தடுமாறி படியேறி வருகிறாள்..பிள்ளை
சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......

முகம் சிவக்கிறது எனக்கு..........
"உன்னை பேசாம இரு எண்டு சொன்னன் தானேமா..
பெரிய கரைச்சல்"

எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயந்தவள் மனசை
இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!

ஓடி வாடி..ஓடி வாடி....
அம்மா உலகத்தை மறந்து..என்னுள் மீண்டும் பிறந்து..
நடை பழக்கினாள்!
தன் இரு கை நீட்டி அதனிடையுள் என்னை நடக்கவைத்தாள்..
எங்கே...நான் விழுந்து விடுவேனோ என்று பயம் ..அம்மாக்கு!

வாழ்வு புத்தகத்தை கால காற்று மறுபடியும்..
பக்கம் வேறாய் புரட்டுகிறது
அம்மா தலை வெள்ளி சரிகை கொண்டு நெய்த
கறுப்பு துணி என்றாகிறது!

"பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா கடைக்கு போட்டு வாயேன்"
இது..அம்மா!
"எனக்கு ஏலாது சும்மா போமா"
அது..நான்!

முழங்கால் வலிக்க.. முக்கி முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!
எனக்கு நடை பழக்கியவளை..பாதம் கொதிக்க நடக்கவிட்டு..
நான் நன்றி செய்தேன்!

திரும்பி வந்தபின் தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!
எனக்கு முதல் தந்துவிட்டு தான் குடிப்பாள்!
கால் கடுக்க சென்றது அவள்....
களைப்பாறியது ..நான்!

எப்படிச் சொல்ல?

இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும் சரி..
இடியென்று அவள் தலையுள் நான் இறங்கினாலும் சரி..
எதையுமே ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!

காலம் ஓடும் ...அம்மா
ஒருபொழுதில் காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான்

அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா?

கண்ணீருக்குள்ளும் சுயநலம்.. சீ..
நன்றி கெட்ட நான்!!!!</b>


Re: நன்றி கெட்ட நான்.. - தூயவன் - 12-21-2005

கவலைப்படாதீர்கள்.
காலம் ஒன்று என்று உண்டு.
பெற்றவள் கடன் தீர்க்க
பெற்றவாளைப் ஆகையில் - நீர்
பெற்றவளும் இதைத் தான் பிசகாமல் செய்திடுவாள்.
பெற்ற கடனை நீர் பிள்ளைக்காக செய்திடுவீர். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-21-2005

ரசிகையக்கா என்னையே கேட்ட மாதிரி இருக்கு.தலையிடியெண்ட படியால் அப்பிடி சொல்லியிருப்பீங்கள்.இனிம அப்பிடிச் சொல்லாதயுங்கோ.நானும் திருந்திட்டன்.
நிறைய பேருக்கு உங்கட கவிதை உண்மையை உரிச்சுக் காட்டப்போகுது.நெற்றிப்பொட்டில அடிச்ச மாதிரி சொல்லிட்டிங்கள்.


- RaMa - 12-21-2005

எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயந்தவள் மனசை
இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!

ரசிகை.. கவிதை அருமை... உப்பு இல்லாட்டி தான் தெரியும் உப்பின் அருமை அப்பன்(அம்மா) இல்லாட்டி தான் தெரியும் அவர்களின் அருமை...


- MUGATHTHAR - 12-21-2005

Quote:எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!

நிறைய வீடுகளில் பெற்றோரை பிள்ளைகள் நடாத்தும் விதம் இப்பிடித்தான் இருக்கிறது நடப்பு நிகழ்வை கவியாக தந்ததுக்கு ரசிகைக்கு வாழ்த்துக்கள் சில பேருக்கு குத்திக் காட்டுவது போல இருக்கிறது...........


- kuruvikal - 12-21-2005

வளரும் போது அம்மா அப்பாக்கு எவரும் உதுகளை நினைச்சுச் செய்யுறதில்லை..! அவை அவர்களால் உடனேயே மன்னிக்கப்படும்...மறக்கப்படும்...! வளர்ந்த பின்னர் செய்யுறதுதான் நன்றி கெட்ட தனம்...! அதை எனியும் செய்யாதேங்கோ...! :wink: Idea


- tamilini - 12-21-2005

Quote:காலம் ஓடும் ...அம்மா
ஒருபொழுதில் காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான்

அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா?

கண்ணீருக்குள்ளும் சுயநலம்.. சீ..
என்னமா சொல்லியிருக்கிறியள். குறுகுறுத்தது குற்றமுள்ளமனசோ..??


- Vishnu - 12-21-2005

ரசிகை.... வாசிக்கும் போது என்மனதும் குறு குறுத்தது உண்மை தான். ஆனால் முடிந்தவரை இவைகளை தவிர்த்து அம்மாவின் பிள்ளையாக இருந்து வருகிறேன்....

வாழ்த்துக்கள் ரசிகை... எல்லா விதமான தலைப்புகளின் கீழ் வித்யாசமான கவிதைகளை படைக்கிறீர்கள்.. மேலும் உங்கள் கவித்திறன் பெருக வாழ்த்துகிறேன்...


- shanmuhi - 12-21-2005

அம்மாவை இழந்தபின் தான் அம்மாவின் அருமை தெரியும். கூடவே ஏக்கம், கவலை எல்லாம் ஒட்டிக்கொள்ளும்.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...


- அனிதா - 12-21-2005

அக்கா கவிதை அந்த மாதிரி எழுதிருக்குறீங்க....வாழ்த்துக்கள்..!


Quote:"பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா கடைக்கு போட்டு வாயேன்"
இது..அம்மா!
"எனக்கு ஏலாது சும்மா போமா"
அது..நான்!


ம்ம் இப்படி அம்மா வேலை சொல்லும் போது சொல்லுறனாங்க தான்.. அப்ப விளையாட்டுத்தனத்தில் சொல்லிட்டு போறது ... அம்மாவும் அதை மறந்திடுவா மன்னிச்சிடுவா... ம்ம் குருவி அண்ணா சொல்லுற மாதிரி வளந்த பின்னர் எல்லாம் அறிந்த பிறகு அம்மாக்கு செய்யுறதுகள் தான் நன்றி கெட்ட தனம் எண்டு நினைக்குறன்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ம்ம் நாங்க அச்சாப் பிள்ளை... இப்ப வளந்துட்டம் தானே.. இனும அப்படியெல்லாம் செய்யமாட்டம் ... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Selvamuthu - 12-21-2005

கவிதைக்கு வாழ்த்துக்கள் இரசிகை.
"பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு"
"நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்"
இவற்றை அறியாமலா எழுதிவைத்திருக்கிறார்கள். "வீட்டுக்கு வீடு வாசல்படி" தான்.


- அருவி - 12-21-2005

கவிதை நன்றாக இருக்கு இரசிகை.
அப்படியே உண்மையாய் நடக்கிறத சொல்லியிருக்கிறீங்க.


- kabilan - 12-21-2005

நல்ல கவிதை இரசிகை. சில இடங்களில் எனது இதயத்தை கண்ணாடியில் எனக்கே காட்டுவது போல் காட்டியிருக்கிறீர்கள். நன்றிகள்


- Saanakyan - 12-21-2005

«õÁ¡ ¦ºýâ¦ÁýÃ¢Ä ¿õÁ ÝôÀ÷ ŠÃ¡¨Ã§Â à츢 º¡ôÀ¢ÎÈ£í¸§Ç! «õÁ¡ ¦ºýâ¦ÁýÃ¢Ä ±Ð Åó¾¡Öõ ¿õÁ ¾Á¢ú ƒÉí¸Ä 'Ãî' Àñ½£Îõ ±ýÈ ¦Ä¡ƒ¢ì¸ ¦¸ðÊ¡ À¢ÊîÍðËí¸! Å¡ú¸ ÅÇÓ¼ý!


- அருவி - 12-21-2005

<!--QuoteBegin-Saanakyan+-->QUOTE(Saanakyan)<!--QuoteEBegin-->«õÁ¡ ¦ºýâ¦ÁýÃ¢Ä <b>¿õÁ ÝôÀ÷ ŠÃ¡¨Ã§Â</b> à츢 º¡ôÀ¢ÎÈ£í¸§Ç!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாருங்க அது????


- Saanakyan - 12-21-2005

ÝôÀ÷ ŠÃ¡Õ ¡ÕñÏ §¸ð¼¡... º¢ýÉì ÌÆó¨¾Ôõ ¦º¡øÖõ!

¿£í¸ þýÛõ À¢È츧ŠþøÄ §À¡Ä!


- அருவி - 12-22-2005

<!--QuoteBegin-Saanakyan+-->QUOTE(Saanakyan)<!--QuoteEBegin-->ÝôÀ÷ ŠÃ¡Õ ¡ÕñÏ §¸ð¼¡... º¢ýÉì ÌÆó¨¾Ôõ ¦º¡øÖõ!  

¿£í¸ þýÛõ À¢È츧ŠþøÄ §À¡Ä!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எப்பிடீங்க பிறக்காமல் யாழில வந்து கருத்தெழுதுறதுங்க????? :roll: :roll:


- Rasikai - 12-22-2005

Snegethy Wrote:ரசிகையக்கா என்னையே கேட்ட மாதிரி இருக்கு.தலையிடியெண்ட படியால் அப்பிடி சொல்லியிருப்பீங்கள்.இனிம அப்பிடிச் சொல்லாதயுங்கோ.நானும் திருந்திட்டன்.
நிறைய பேருக்கு உங்கட கவிதை உண்மையை உரிச்சுக் காட்டப்போகுது.நெற்றிப்பொட்டில அடிச்ச மாதிரி சொல்லிட்டிங்கள்.

ஆஹா உங்களை கேட்ட மாதிரி இருக்கா? ரொம்ப சந்தோசம் நீங்கள் திருந்தியதை எண்ணி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 12-22-2005

Rasikai Wrote:
Snegethy Wrote:ரசிகையக்கா என்னையே கேட்ட மாதிரி இருக்கு.தலையிடியெண்ட படியால் அப்பிடி சொல்லியிருப்பீங்கள்.இனிம அப்பிடிச் சொல்லாதயுங்கோ.நானும் திருந்திட்டன்.
நிறைய பேருக்கு உங்கட கவிதை உண்மையை உரிச்சுக் காட்டப்போகுது.நெற்றிப்பொட்டில அடிச்ச மாதிரி சொல்லிட்டிங்கள்.

ஆஹா உங்களை கேட்ட மாதிரி இருக்கா? ரொம்ப சந்தோசம் நீங்கள் திருந்தியதை எண்ணி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அப்படியே சில திருந்த முடியாதா ஜன்மங்கள் களத்தில் புகுந்திருக்கு. உங்களால் இயலுமோ எண்டு பாருங்கோ அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 12-22-2005

Saanakyan Wrote:«õÁ¡ ¦ºýâ¦ÁýÃ¢Ä ¿õÁ ÝôÀ÷ ŠÃ¡¨Ã§Â à츢 º¡ôÀ¢ÎÈ£í¸§Ç! «õÁ¡ ¦ºýâ¦ÁýÃ¢Ä ±Ð Åó¾¡Öõ ¿õÁ ¾Á¢ú ƒÉí¸Ä 'Ãî' Àñ½£Îõ ±ýÈ ¦Ä¡ƒ¢ì¸ ¦¸ðÊ¡ À¢ÊîÍðËí¸! Å¡ú¸ ÅÇÓ¼ý!
ம்ம் உங்கட சூப்பர் ஸ்டார் மாதிரி செண்டிமென்ற் பேசி நான் என்ன ஒரு படத்துக்கு .. சா ஒரு கவிதைக்கு 30 கோடியா கேட்கப் போறன்? அம்மா சென்ரிமென்ற் நான் பேசி சனங்களை ரச் பண்ண. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இல்லை நான் சொல்லுறதை இங்க இருக்கிறவங்கள் எல்லாம் நம்பிட்டு போகப்போறாங்களா என்ன? :wink: :wink: யதார்த்தம் என்ற ஒன்று வரிகளில் இல்லாமல் போனால் இப்படி எதுவுமே நடப்பது இல்லை நடந்ததே இல்லை என்றி உங்களால் சொல்லமுடியுமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரி சரி என்ன என்றாலும் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->