Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மருத்துவமனையில் நடிகர் பாலாஜி
#1
மருத்துவமனையில் நடிகர் பாலாஜி: ஜெ சந்திப்பு
டிசம்பர் 21, 2005

சென்னை:

பழம்பெரும் நடிகர் பாலாஜிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் கொண்ட பாலாஜி கேரளாவைச் சேர்ந்தவர். இவர் சென்னை எழும்பூரில் வசித்து வருகிறார். 71 வயதாகும் அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு சமீபத்தில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நிலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மலையாள நடிகர் மோகன்லால், பாலாஜியின் மருமகன் ஆவார்.

இதற்கிடையே பாலாஜியை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற ஜெயலலிதா அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடனும் பேசினார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தமிழகம் - ஈழம் இரண்டிற்கும் கலைப்பாலமாக விளங்கியவர் பாலாஜி......
Reply
#3
தகவலுக்கு நன்றி வானம்பாடி.
இவருடைய படங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல வெற்றிப்படங்களைத் தயாரித்தவர். அவருடன் பல படங்களிலும் நடித்தவர். "பலே பாண்டியா" "வசந்தமாளிகை" போன்ற படங்கள் என் மனதில் இப்போதும் நிழலாடிக்கொண்டேயிருக்கின்றன.
அவர் குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

Reply
#4
பாலாஜி சிவாஜிகணேசனை வைத்து பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் மட்டுமல்ல அவரின் நெருங்கிய நண்பரும். அவரின் உடல்நிலை சுகமாக நானும் இறைவனைப் பிராத்திக்கின்றேன். தகவலுக்கு நன்றி வானம்பாடி.
Reply
#5
பாலாஜி அவர்களின் உடல்நிலை தேற நானும் இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
தகவலுக்கு நன்றி வானம்பாடி.

இவர் இலங்கை ரசிகர்கள் மீது தீராத பாசம் கொண்டவர்.
இவர் கள்ளமாக தோணிகளில் தமது ரசிகர்களைக் காண இலங்கை வந்தவர் என சின்ன வயதில் பலர் சொல்லக் கேட்டதுண்டு.

அதை உர்ஜிதம் செய்வது போல பாலாஜியுடன் இணைந்து நின்று எடுத்த புகைப்படங்களை கல்பிட்டி புத்தளம் பகுதி மக்களது வீடுகளில் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.
Reply
#6
தீ திரைப்படத்தை இலங்கை தயாரிப்பாளருடன் கூட்டாகத் தயாரித்தவர் பாலாஜி....
Reply
#7
பாலாஜி அவர்களின் உடல்நிலை தேற நானும் இறைவனைப் பிராத்திக்கின்றேன்...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)