Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
`பொங்கியெழும் படை'யினரை தேடி குடாநாட்டில் இராணுவம் வேட்டை
#1
`பொங்கியெழும் படை'யினரை தேடி குடாநாட்டில் இராணுவம் வேட்டை

எஸ்.அபிராமி

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற கிளேமோர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. படையினருக்கான விநியோகப் பாதையான பலாலி வீதி, கே.கே.எஸ்.வீதி மற்றும் பருத்தித்துறை வீதிகளில் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ் வீதிகளில் இரு மருங்கிலும் உள்ள மரங்கள் படையினரால் வெட்டப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் சீருடை அணிந்த படையினர் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் படையினரால் துருவித் துருவி சோதனை இடப்படுகின்றன.

இதனால் குடாநாட்டில் பயணம் செய்யும் பொதுமக்கள் உயிரைக் கையில் பிடித்தபடியே தமது அன்றாட கருமங்களை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இங்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் சமாதான சூழல் மெல்ல மெல்ல அகன்று செல்ல மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. எந்த வேளையிலும் போர் வெடிக்கலாமென்ற அச்சத்தில் இலங்கை அரசும் அதனை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் தமிழ் மக்களும் உள்ளனர்.

கடந்த காலங்களில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலேயே யுத்தம் நடந்தது. ஆனால், தற்போது இந்நிலை மாறியுள்ளது. தமது தேசிய விடுதலைக்காக தமிழ் மக்கள் ஆயுதங்களை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. உலக நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களெல்லாம் வீறுகொண்டெழுந்த மக்கள் படைகளினாலேயே வெற்றி கொள்ளப்பட்டன. அந்த வகையில் அடிமைகளாக வாழ்ந்த தமிழ் மக்களும் தமது விடுதலைக்காக ஆயுதங்களைக் கையிலெடுத்தனர். எனவே, விடிவு வெகு தொலைவில் இல்லை என்பதை இலங்கை அரசும் சர்வதேசமும் நன்கு உணரவேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக இராணுவத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கிளேமோர்த் தாக்குதல் சம்பங்களுக்கு `பொங்கியெழும் மக்கள் படை' என்னும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இவ்வாறான தொடர் தாக்குதல்களை தாமே மேற்கொள்கின்றோம் என்பதற்கு காரணம் கூறி அவ்வமைப்பு கடந்த வாரம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நீர்வேலியில் அப்பாவி விவசாயிகள் கொல்லப்பட்டமை மற்றும் பொது மக்களுக்கு எதிராக படையினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு எதிராகவே இராணுவத்தினர் மீது இவ்வாறான தாக்குதல்களை தாம் மேற்கொள்வதாகவும் படையினர் இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்தாவிட்டால் இனி வரும் காலங்களில் இந்தத் தாக்குதல்கள் உச்சக் கட்டத்தை அடைவதுடன் இராணுவத்தினரின் இழப்புகளும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே அமைந்து விடும் என்றும் `பொங்கியெழும் மக்கள் படை' என்ற அமைப்பு குடாநாட்டில் பரவலாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

இதனால் ஆத்திரம் கொண்ட படையினர் யாழ்.மாவட்டத்தில் மூலை முடுக்கெங்கிலும் பொங்கியெழும் படையினரைத் தேடி அலைந்து திரிகின்றனர். முன்பு புலியா...?, புலியா...? எனக் கேட்டுத் தாக்கிய படையினர் இன்று நீயா பொங்கியெழும் படையென? கேட்கும் நிலை யாகிவிட்டது.

இது இவ்வாறிருக்க பொங்கியெழும் படையைத் தேடி இராணுவம் வலை விரிக்க - அந்த அமைப்பைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கோவில் வீதியிலுள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குச் சென்று படையினரின் சுற்றிவளைப்புகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு கோரி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

இத்தகைய செயற்பாட்டினால் நிலை குழம்பிய படையினர் தமது சுற்றிவளைப்புக்கள், தேடுதல்களை மேலும் அதிகரித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை யாழ்.நகரை அண்டிய நாவலர் வீதி, பிறவுண் வீதி மற்றும் மணிக்கூட்டு வீதிப் பகுதிகளையும் வெள்ளிக்கிழமை அரியாலை யின் முழுப் பகுதிகளையும் பாரியளவில் சுற்றிவளைத்த படையினர் வீடு வீடாகச் சென்று கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் தென்மராட்சி, வடமராட்சி மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களை அண்டிய பகுதிகளும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதேவேளை, கோண்டாவில் பகுதியில் ஓர் இளைஞன் படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடுகளில் உள்ளவர்களின் குடும்ப அட்டைகளை பார்வையிட்டு அங்கத்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன் மேலதிகமாக உள்ளவர்களை வன்னியிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியவர்களின் விபரங்களையும் படையினர் பதிவுசெய்து கொண்டுசென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமலக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடுகளைச் சுற்றிவளைத்த படையினர் அங்கு சல்லடைபோட்டு கடும் சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டதுடன் வன்னியிலிருந்து வந்த பல்கலைக்கழக மாணவர்களின் விபரங்களையும் பதிவுசெய்தனர்.

மேலும், இவர்களின் பல்கலைக்கழக அட்டைகளை பறித்த படையினர் அவற்றினை கிழித்தெறிந்ததாகவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவலர் வீதியிலுள்ள நமது ஈழநாடு, பிறவுண் வீதியிலுள்ள வலம்புரி பத்திரிகை அலுவலகங்களும் படையினரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் படையினர் சோதனை செய்தனர். ஊடகத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இராணுவம் இவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

படையினரை யாழ்.குடாநாட்டிலிருந்து உடன் வெளியேறுமாறு கோரிய பல கேளிக்கை சுவரொட்டிகளும் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் சீருடை தரித்த படையினர் 24 மணிநேர காவல் கடமையில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் கூட இராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மக்கள் படை இந்த சுவரொட்டிகளை பரவலாக ஒட்டி வருகின்றது.

மக்கள் யார்?, மக்கள் படை யார்? என்ற நிலையில் தமிழ் மக்கள் அனைவரையுமே குரோதக் கண்களுடனே படையினர் நோக்குகின்றனர். காலையில் எழுந்தால் யாழ்.மாவட்ட மக்கள் விழிப்பது சீருடை தரித்த படையினர் மீது என்ற நிலை மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க யாழ். நகரின் வீதிகளை திடீர், திடீரென தடை செய்யும் படையினர் காரணம் எதுவுமின்றி பொதுமக்களை கடுமையாகத் தாக்கி வருகின்றது. கடந்த வாரம் பலாலி வீதியிலுள்ள கெற்றப்போல் சந்தியில் படையினர் பொது மக்களை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த பலர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இப் பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த கண்காணிப்புக் குழுவினர் இந்நிலைமையை காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கு படைத்தரப்பால் கண்காணிப்புக் குழுவிடம் கூறப்பட்ட காரணம் தமது காவலரண் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் அது வெடிக்கவில்லையெனவும் படைத்தரப்பால் கூறப்பட்டது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மையென்பது தெரியவில்லை.

இந்நிலை இவ்வாறிருக்க யாழ்.நகரில் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு அவரது இடத்திற்கு புதியவரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையும் 51 ஆவது படையணித் தலைவரான மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவரின் இடத்துக்கு கெமுனு படைப்பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் லெனார் மார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் தரத்திலிருந்த அதிகாரியை இடம் மாற்றிவிட்டு அதற்குக் குறைவான தர அதிகாரியை நியமித்ததற்கும் காரணம் உண்டு. முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த புதிய கட்டளைத் தளபதி மட்டக்களப்புப் பகுதியில் நீண்டகாலம் கடமையாற்றியவர். தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்களை இவர் மேற்கொண்டமை அனைவருக்கும் தெரிந்ததே.

மட்டக்களப்பில் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்குப் பின்னணியிலிருந்து செயற்பட்ட இவர் கருணா குழுவிற்கும் பல உதவிகளை மேற்கொண்டவர். அத்துடன் ஊடுருவித் தாக்கும் படையணியின் கட்டளை அதிகாரியாகவும் இருந்து மட்டக்களப்புப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டவர்.

ரணில் பிரதமராக இருந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் பின்னணியால் இவர் ராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் மகிந்த ஜனாதிபதியானதும் ஒரு படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டுள்ளார். பதவியேற்றதன் பின் யாழ்.நகர் படைத்தளபதிகளை அழைத்து அவசர சந்திப்புகளையும் மேற்கொண்டார். மேலும், யாழ்.நகரில் அகற்றப்பட்ட காவலரண்களும் இவர்பதவியேற்றபின் மீண்டும் உயிர்பெற்றுவருகின்றன.

இனக்குரோதத்தைத் தூண்டும் வகையில் அனுப்பப்பட்டுள்ள இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தில் என்ன செய்யப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

`பொங்கியெழும் மக்கள் படைக்கு' இந்தத் தளபதி என்ன செய்யப்போகிறார். வீறுகொண்ட யாழ்.மாவட்ட மக்கள்- படையினருக்கே கிளைமோர் வைப்பதற்கே துணிந்து நிற்கும் இந்நிலையில் இவர் எந்தளவிற்கு... அடுத்த வாரம் குடாநாட்டில் நிகழும் அதிரடி சம்பங்களுடன் சந்திப்போம்.

Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-8.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)