Yarl Forum
புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்! (/showthread.php?tid=1944)



புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்! - Rasikai - 12-19-2005

<b>புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்: </b>

அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்புகிறது
அமெரிக்காவின் நாகா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புளூட்டோ' கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. நியு ஹரிசான்ஸ் என்ற இந்த விண்கலத்தை 65 கோடி டாலர் செலவில் உருவாக்கி உள்ளது. இந்த விண்கலம் புளூட்டோ கிரகத்தின் தோற்றம் அது உருவானது எப்படிப சூரியனை சுற்றி வரும் புளூட்டோ கிரகம் போன்ற வேறு சில கிரகங்கள் பற்றியும் ஆய்வு நடத்தும்.

இந்த நியுஹரிசான்ஸ்' விண்கலம் 454 கிலோ எடை உள்ளது. அட்லஸ்' ராக்கெட் டில் வைத்து இந்த விண்கலம் அனுப்பப்படும்.

இந்த விண்கலம் கேப் கணவரால் ராக்கெட் தளத் துக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. ராக்கெட்டிலும் அந்த விண்கலம் வைக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் இது ஏவப்படும்.

அமெரிக்கா இங்கிலாந்து ரஷியா உள்பட 16 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வுக்கூடம் அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வுக்கூடத் துக்கு அமெரிக்கா மீண்டும் அடுத்த ஆண்டு மே மாதம் புதிய ராக்கெட்டை அனுப்பும். இப்போது உள்ள டிஸ்கவரி ராக்கெட்டின் எரிபொருள் டாங்கியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் புதிய எரி பொருள் டாங்கி அமைக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்துக்கு 2010-ம் ஆண்டுக்குள் 18 தடவை நாசா' நிறுவனம் ராக்கெட்டுகளை அனுப்ப உள்ளது.

நன்றி http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&


- RaMa - 12-19-2005

ரசிகை தகவலுக்கு நன்றி... 2010க்குள் 18 ராக்கெட் அனுப்ப போகின்றார்களா? வீண் செலவு செய்கிறார்கள்.


- pepsi - 12-20-2005

நன்றி ரசிகய்............. செவ்வாய்யிலே ஆராய்சி செய்து முடின்சிட்டுதா.. புளுட்டோவில தொடங்கிட்டான்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 12-25-2005

ம்ம் பூமியிலயே கண்டு பிடிக்க இன்னும் நிறைய இருக்கு..அதுக்குள்ள ஏன் அங்க போயினம்? Confusedhock:
நான் சொல்றது குண்டு வைக்கிறவை..கொலை செய்றவை..மனிசரை கொலை செய்ற அவையைத்தானே முதல்ல கண்டு பிடிக்கணும். வீண் காசை செலவழிச்சு மனிசரே இல்லாத இடத்தை ப்பற்றி அறிஞ்சு என்னத்தா செய்யப்போயினம்...என்ன நான் சொல்றது சரியா? :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 01-21-2006

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41235000/jpg/_41235454_nh7_nasa_203.jpg' border='0' alt='user posted image'>

கடந்த வியாழன் அன்று புளுட்டோ கிரக்திற்கான நாசாவின் முதல் விண்கலமான நியு ஹரிசான்ஸ் அட்லஸ் ராக்கட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஏறத்தாள 700 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஏவப்பட்ட இந்த ராக்கட் கிட்டதட்ட 5 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தை கடந்து 2015ம் ஆண்டளவில் இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41208000/gif/_41208198_new_horizons_1_416.gif' border='0' alt='user posted image'>
<b>நியு ஹரிசான்ஸ் விண்கலத்தின் பகுதிகளை விவரிக்கும் படம்</b>

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/06/world_enl_1137064716/img/1.jpg' border='0' alt='user posted image'>
<b>நியு ஹரிசான்ஸ் விண்கலத்தை செலுத்திய அட்லஸ் ராக்கட்டின் பகுதிகளை விவரிக்கும் படம்</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41208000/gif/_41208486_new_horizons_2_416.gif' border='0' alt='user posted image'>
<b>விண்கலம் செல்லும் பாதையை விவரிக்கும் படம்</b>

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4629486.stm


- சந்தியா - 01-21-2006

<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ம்ம் பூமியிலயே கண்டு பிடிக்க இன்னும் நிறைய இருக்கு..அதுக்குள்ள ஏன் அங்க போயினம்?  Confusedhock:  
நான் சொல்றது குண்டு வைக்கிறவை..கொலை செய்றவை..மனிசரை கொலை செய்ற அவையைத்தானே முதல்ல கண்டு பிடிக்கணும். வீண் காசை செலவழிச்சு  மனிசரே இல்லாத இடத்தை ப்பற்றி அறிஞ்சு என்னத்தா செய்யப்போயினம்...என்ன நான் சொல்றது சரியா?  :roll:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆமாம் அக்கா நீங்கள் சொல்கின்ற அத்தனை பேரையும் கண்டுபிடிக்கனும் முதலில் நம்ம நாட்டில் நடக்கனும் அப்பதான் தமிழ் ஈழம் புத்துணர்ச்சி பெறும்


- sinnappu - 01-23-2006

அடடா வந்து பாத்ததும் தானே விசயம் தெரியுது நான் நிளைச்சன் புளுட்டோ எண்ட சொக்கா எண்டு ஐ ஆம் வெறி சாறி ரசிகை
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- Rasikai - 01-24-2006

sinnappu Wrote:அடடா வந்து பாத்ததும் தானே விசயம் தெரியுது நான் நிளைச்சன் புளுட்டோ எண்ட சொக்கா எண்டு ஐ ஆம் வெறி சாறி ரசிகை
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஆ அப்புக்கு எந்த நேரமும் சாப்பாட்டு கதைதான் :evil: :evil: