Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 580 online users.
» 0 Member(s) | 577 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,305
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,293
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,632
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,059
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,462
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,479
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,026
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலி.
Posted by: selvanNL - 12-24-2005, 10:38 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (26)

<b>மீண்டும் ஒரு இயலாமைத்தனத்தை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு காட்டிவிட்டது, ஏற்கனவே பல தேச பற்றாளர்களை இழந்த தமிழ் மக்கள் இப்பொழுது மீண்டும் ஒரு இழப்பை சந்தித்துவிட்டார்கள்,

<span style='color:red'>மட்டக்களப்பில் புனித மரியாள் தேவாலத்தில் நத்தார் தின பாலன் பிறப்பு ஆராதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஐயா ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் மீது இலங்கை புலனாய்வு படை கோழைத்தனமான விரச்செயலை நிறைவேற்றி விட்டார்கள்,

தமிழீழத்துக்கு மீண்டும் ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு, தமிழருக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு,

எமது தலைவரின் காலக்கெடு முடிய என்னம் 7 நாட்கள் இருக்கும் நிலையில் இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது,

ஜோசப் பரராஜ சிங்கம் ஐயாவுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி.. Cry Cry என்னம் எத்தனை நாட்களுக்குத்தான் கண்ணீர் அஞ்சலி கண்ணீர் அஞ்சலி எண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டு இருப்போம் என்று பார்ப்போம், </span></b>

இச்சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் திருமதி பரராஜசிங்கம் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம், <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Print this item

  வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..!
Posted by: kuruvikal - 12-24-2005, 10:35 PM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

<img src='http://www.tamilnet.com/img/publish/2005/12/mandur_1_21998_150px.jpg' border='0' alt='user posted image'>

<b>பார் போற்றும் சிங்கமே
பரராஜ சிங்கமே
சிங்களச் சீமையில்
சிம்மக்குரலாய்
ஈழத்தமிழன் துயர் சொன்னவனே
இன்று ஈனத்தனத்துக்கு
இரையாகி வீழ்ந்தாயோ...??!

அகிலம் உன் ஆங்கிலத்துக்கு
அருவருக்காமல் செவிமடுக்கும்
அந்நியத்தனம் இன்றி
அனைவரையும் அரவணைக்கும்
அற்புத சீலன் நீ
அர்த்த ராத்திரியில்
கர்த்தரின் பூஜையில்
கருணையே அற்றவனின்
கருவிக்கு இலக்காகினையோ..??!

எத்தனை ஆண்டுகள்
ஈழ்த்தமிழரின் அகிம்சைக் குரலாய்
அகிலம் உற்று நோக்க
சிங்களப் பாசறை நடுவில்
சிங்காரத் தமிழனாய்
நடை பயின்றவன் நீ
சீண்டிப் பார்ப்பவன்
தூண்டலைக் கூட
தனித்து தாங்கியவன்
அணையாப் புன்னகையால்..!

வடக்கென்ன கிழக்கென்ன
தமிழ் தேசியத்தின்
உயிர் மூச்சாம்
உந்தன் உறவாம் ஈழத்தமிழன்
குருதி சொட்டினால்
ஈனக்குரல் செவி தட்டினால்
உடனே உறுமி எழுவாய்
நியாயம் கேட்டே வரிந்து நிற்பாய்
தாமதமின்றி உன் பணி செய்துகிடப்பாய்...!

உந்தன் குரலுக்கு
குலைநடுங்கிச் சிங்களம்
வைத்த விசாரணைக் கமிஷன் எத்தனை..!
உன் குரலுக்கு அடங்கிய
துப்பாக்கிகள் எத்தனை...!
சாக்குப்போக்கு உன்னிடம் பலிக்காது
தூய கரமும்
தூய உள்ளமும்
வணங்கா முடியும்
ஈழத்தமிழனின் குணமென்று
அரசியல் களத்தில்
சாதித்துக் காட்டிய
சாதனை நாயகன் நீ..!

கருவி தரித்த
சிங்களப் பாதுகாப்பு
சீ... என்று உதறியே
சொந்த மண்ணில்
மக்களுக்காய் மூச்சிழுத்தவன்..!
மூடர்கள் சிலரின்
முட்டாள் தனத்துக்கு
மூச்சையளித்தாயோ..??!
மூச்சிறைத்து விழுகிறோம்
உன் வீழ்ச்சி கண்டுமே
அநாதைகளாய்....!
வீரனே நீ மீண்டும் வா
மீண்டு வா
எம் ஆன்மா தந்து
அணை போடுகிறோம்...!</b>

Print this item

  ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை
Posted by: AJeevan - 12-24-2005, 09:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (52)

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/01/mandur_1_21998_200.jpg' border='0' alt='user posted image'>
ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொலை
என மட்டக்களப்பு தகவல்கள் சொல்கின்றன.

செய்தி உண்மையா?

Print this item

  4 புலிகளை கொன்றதாக இலங்கை ராணுவம்
Posted by: Vaanampaadi - 12-24-2005, 07:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

யாழ்ப்பாணத்தில் 4 புலிப்போராளிகளை பதில் தாக்குதலில் கொன்றதாக இலங்கை ராணுவம் கூறுகிறது

யாழ் முனியப்பர் கோவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற இராணுவத்தினர் மீதான கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது இராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் 4 புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகத்துறை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையி;ல் துப்பாக்கிப்பிரயோக மோதல் இடம்பெற்றதாகவும் இராணுவ அதிகாரி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் காயமடைந்ததாகவும், 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியொன்றும், 40 மில்லிமீட்டர் கிரனைட் லோஞ்சர் ஒன்றும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் புலிகள் தரப்பில் இருந்து இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக எதனையும் உறுதி செய்யமுடியவில்லை.

இந்த மோதல் சம்பவத்தையடுத்து, யாழ் நகரின் பல இடங்களிலும் நிலைகொண்டுள்ள படையினர் ஒரேநேரத்தில் எச்சரிக்கை வேட்டுக்களைத்தீர்த்ததாகவும், இதனால் நகரத்தில் பதற்றம் நிலவியதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


BBC Thamiloosai

Print this item

  25-12-1996 அதிகாலை 1 மணி மீண்டும் என் நினைவில்
Posted by: வினித் - 12-24-2005, 07:55 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (14)

1996 ஆண்டு மீண்டும் என் நினைவில்


அதிகாலை 1மணிக்கு இத்தாலி( Malta) கடலில் கலந்து விட்ட
82 தமிழ் உறவுகளும் 10 சிங்களவர்களும் பலி கொண்ட நாள் எனது ஊர் நன்பர்கள் மற்றும் ஒரு நெருங்கிய உறவு
மற்றும் 4 வயதில் இருந்து என்னுடன் படித்த நன்பன் அனைவரையும் பறி கொடுத்த நாள்
அதைவிட பாகிஸ்தான் இண்டியா பங்களதேஸ் நாடுகளில் இருந்து வந்தவர்கள்
இப்படி பலி கொண்ட கொடுர நாள் மாறக்கும? Cry Cry Cry Cry Cry


இதன் பின் உயிர் தப்பிய நாம் (52 பேர்) 01-01-197
கிறிஸ் நாட்டில் கைவிட பட்டு பின் போலிஸ்சில் சரன் அடைந்தோம் பின் எம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள் (29 பேர்) எம்மை கொழும்பில் கைது( <b> எம்மை கைது செய்து துன்னாலைய சொந்த இடமாய் கொண்ட </b>ஜெயரட்னம்) செய்ததால் மிச்சிய 23 பேரையும் கிறிஸ் நாடு விடுதலை செய்து விட்டது Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry

Print this item

  மனுவை ஏற்க மறுப்பு!
Posted by: Vaanampaadi - 12-24-2005, 06:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சிங்களக் கடற்படையின் பாலியல் வல்லுறவை கண்டிக்கும் மனுவை ஏற்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மறுப்பு!
[சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2005, 18:32 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிங்களக் கடற்படையின் பாலியல் வல்லுறவை கண்டிக்கும் மனுவை ஏற்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர்.


கிளிநொச்சிக்கு இன்று சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளான ஜப்பான், பிரிட்டன், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவினரிடம் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன மனுவொன்றை கையளிக்க பேரணியாக வந்து காத்திருந்தனர்.

புங்குடுதீவில் சிறிலங்கா கடற்படையினரால் இளம்பெண்ணாகிய இளையதம்பி தர்சினி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இந்த மனுவை கையளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும்இ விடுதலைப் புலிகளுடனான சந்திப்பை முடித்துவிட்டு வந்த இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், அவற்றை ஏற்கவோ பேரணியாளர்களின் கோரிக்கைகளை அவதானிக்கவோ முயற்சிக்காமல் தவிர்த்துவிட்டு வேறு பாதைவழியாக சென்றனர்.

இதனால் கண்டன மனுவைக் கையளிக்க நீண்ட நேரமாக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் பயன் எதுவுமின்றித் திரும்பினர்.


Puthinam

Print this item

  யாழில் தாக்குதல் - 5 பேர் பலி
Posted by: Vaanampaadi - 12-24-2005, 05:54 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Five killed in fresh gun battles in Sri Lanka</b>

AFP
Saturday, December 24, 2005 20:50 IST


COLOMBO: At least five people were killed in two gun battles in Sri Lanka on Saturday in the troubled northern Jaffna peninsula, officials said.

An army major from the military intelligence corps and another soldier were seriously wounded when gunmen opened fire on them Saturday evening, a defence ministry official said.

"Troops returned fire and soldiers have managed to kill four of the attackers, including a woman," the official said.

"Troops recovered a grenade launcher and a micro-pistol." In the second incident, suspected Tiger gunmen opened fire at an army checkpoint on the peninsula, killing one soldier and wounding another, the defence official said.

The clashes came as diplomats from countries supporting Sri Lanka's peace bid travelled to the island's north for talks with Tiger rebels, a day after 18 people were killed in a fresh wave of violence.

Diplomatic efforts to salvage the island's troubled peace process remain inconclusive in a country where more than 60,000 people have been killed in three decades of ethnic bloodshed.

http://dnaindia.com/report.asp?NewsID=1003893


<b>2ND LEAD
6 SLA soldiers injured in 3 attacks in Jaffna</b>

[TamilNet, December 24, 2005 15:12 GMT]
In a firefight between unidentified gunmen and Sri Lanka Army (SLA) soldiers near Jaffna Fort area at 6.10 p.m. Saturday 3 SLA soldiers were injured, one of them seriously. The trooper with serious injuries was air lifted to Palaly military hospital, sources said. Military command in Colombo has informed that four gunmen have been killed in the Jaffna Fort attack and their bodies are lying near Jaffna Fort. Since no reporters are allowed to the area TamilNet is unable to confirm this.


SLA troops patroling the outer perimeter of Jaffna town that includes Jaffna Fort area, Thanthai Selva memorial, Public Library, Jaffna Courts were attacked by unidentified gunmen. The firefight lasted nearly 10 minutes. Bus stand was closed and civilians vacated the town area. Only SLA troopers were seen in the town.

In two other incidents, one soldier was injured in a grenade attack in a sentry point in Irupalai, Jaffna around 4.30 p.m. and two SLA soldiers were injured in a grenade attack in Thanlankilappu Road in Thenmaradchy area at 5.30 p.m.

Following the Irupalai attack, more than 30 traders in Irupalai were taken to the SLA camp for interrogation. They have not been released when this story was filed.

The two soldiers injured in the Thanankilappu attack were also airlifted to Palaly Military Hospital.

Tamilnet


<b>4 rebels killed in north Sri Lanka</b>
http://news.xinhuanet.com/english/2005-12/...ent_3965811.htm

Print this item

  தமிழில் உள்ள கோப்புவை (file) எப்படி pdf கோப்புவாக மாற்றுவது.
Posted by: roadrash - 12-24-2005, 05:49 PM - Forum: கணினி - Replies (3)

தமிழில் உள்ள கோப்புவை (file) எப்படி pdf கோப்புவாக மாற்றுவது.

நான் அப்படி மாற்றும்பொழுது ( word to pdf convert) அதில் தமிழ் தெரியவில்லையே ?

Print this item

  ஆதி - விஜய்
Posted by: Mathuran - 12-24-2005, 05:43 PM - Forum: சினிமா - Replies (21)

ஆதி

பெரும்பாலான யாழ்கள விசிறிகளின் திரைநாயகன் தளபதி விசயின் பொங்கல் வரவு தான் ஆதி என்னும் திரைப்படம். குறிப்பாக விசயின் படங்கள் வெளியாகும் பொழுது நானும் திரையரங்குகளில் நிற்பேன். தீபாவளிக்கு வெளியான சிவகாசியில் இருக்கும் ஒரு பாடல். தீபாவளி தீபாவளி என்று தீபாவளியை நினைவூட்டும் பாடல்கள் அமைந்ததிருந்தது. அது ஏனோ தெரியவில்லை தமிழர் திருநாளான பொங்கலுக்கு வரவிருக்கும் ஆதி திரைப்படப் பாடல்களில் தைபொங்கலை நினைவூட்டும் வண்ணம் பாடல்கள் எதுவும் அமையவில்லை.

தமிழர்திருநாளாகிய தைபொங்கல் நாளன்று வெளியாகும் திரைப்படத்தில் ஒரு செய்தியும் தைப்பொங்கல் பற்றிஇடம்பெறாமல் இருந்தால் எங்கள் மனம் நோகாதோ????

Print this item

  நியாயத்தை கேளுங்கோவன்!?
Posted by: தூயா - 12-24-2005, 04:09 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (15)

<span style='font-size:25pt;line-height:100%'>நியாயத்தை கேளுங்கோவன்!?


[size=13]கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்படிதான் என்ட மனிசன். எனக்காக எதையும் செய்வார், ஆனால் ஊருக்கு எங்கட மக்களுக்கு கொஞ்சம் பணம் அனுப்பலாம் என்றால் மட்டும், மனிசன் அசைய மாட்டுது.

சரி நானும் அதிகம் இவரிட்ட எதிர்பார்க்க கூடாது தானே? என்ன என்று கேக்கிறியள் போல?

நானும், என்ட மனிசனும் காதல் திருமணம் புரிந்தவர்கள். பல்கலைக்கழகத்துக்கு போன காலத்தில இவரை பார்த்து, பழகி, மனசு ஒத்து போனதால் திருமணம் செய்யலாம் என நினைத்து என்ட அப்பரிட்ட கேட்டா.. தாம் தீம் தான்.

யோசிக்காமலே "வேண்டாம் இவன்".

எனக்கு சரியான கோவம் பாருங்கோ. நான் சரி என்று இருப்பேனா? கேட்டனே "அவருக்கு நல்ல மனம்,நல்ல படிப்பு,நல்ல குடும்பம்..நல்லத எல்லம் சொல்லி பார்த்தேன்.

என்னை பெத்தவர் சும்மா வாயை பொத்திட்டு இருப்பாரோ, பதிலாக எனக்கு கிடைத்தது என்ன தெரியுமா?

"என்ன மொழி?"

"சிங்களம்"

"அது தான் சொல்லுறன், கதை இதோட முடியணும்"

எனக்கு பாருங்க அழுகையே வந்திட்டுது. பெத்த மனம் தாங்குமா?

"இதோ பாருடா ராஜாத்தி. நாங்கள் இவங்கள் சிங்களவங்களோட சண்டை சண்டை என செத்து கொண்டு இருக்கிறம். உன்ட மாமா, அண்ணாக்கள் எல்லாரையும் இவங்கள் தானே சாக்கடிச்சது. எங்கட குடும்ப்பதில இப்படி ஒரு திருமணம் தேவைதானா?"

"அப்பா நாங்கள் சிங்கள அரசாங்கத்தோட தான் சண்டை போடுகிறோம், மக்களோட இல்லையப்பா." ..இது நான்.

எனக்கு தெரிந்ததே பிடிவாதம் தானே, ஒரு மாதிரி சில நிபந்தனைகளுடன் பெற்றோர் சம்மதிக்க எங்கட திருமணம் இனிதே நடந்தது.

பாருங்கோ இவர் இருக்கார் தானே என்ட மனிசன்... இவள் என்னடா பெயரை சொல்லாமலே கதைக்கிறால் என்று நினைக்கிறிங்க போல??

என்ட அவரின்ட பெயர் "சுகந்தன்". என்னடா தமிழ் பெயர் என்று பார்க்கதிங்க, என்ட மாமியார் சின்னனில தமிழ் படிச்சவவாம். அதில மாமியாருக்கு தமிழ் மேல ஈடுபாடுதான். பிள்ளையளுக்கு தமிழ் பெயரும் வச்சிட்டா பாருங்கோ.

ம்ம்ம் பாருங்க சொல்லவந்ததை விட்டுட்டு வள வள என்டு பேசுறேன். ஆனா இவர் சொல்லுவார், உன்ட கதையை பார்த்து தானே காதலிக்க ஆரம்பித்தேன் அன்று.

அதை விடுங்கோ இப்படியெல்லாம் சொல்லுற மனிசன் இந்த பணம் அனுப்புற கதை வந்தா மட்டும் அடம்பிடிக்குது.

என்ன செய்ய? அதுக்காக "என் தலை எழுத்து அப்பவே என்ட அப்பர் தமிழ் மேல பற்றுள்ள ஒருத்தரை கட்டிக்கோ அப்பிடின்னார்" என்று சொல்ல மாட்டேன். இதுக்கெல்லம் போய் அப்படி சொன்னா என்ன மனிசர் நாங்கள்???

எமக்கு கிடைத்ததோட சந்தோச படணும். புதிதாக ஒன்றை பார்துவிட்டு அதுக்கு பினால போனா, அதற்கு பெயர் என்னை பொருத்தவரையில் வேற, நீங்கள் என்ன சொல்லுறியள்??

இப்ப என்ன தான் பிரச்சனை ? எதற்கு இந்த அலம்பல் என்கிறீர்களா?

பாருங்கோ சுனாமி வந்து எங்கட சனம் அல்லல்படுது. இஞ்சருங்கோ கொஞ்ச காசு அனுப்புவம் என்று காலையில கேட்டேன்.

மனிசம் சொல்லுது "இதோ பாரும்ம உனக்கு ஏதும் வேணும் என்றால் கேளு. உடனே வாங்கி தாறேன். இவங்களுக்கு எல்லம் அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் அனுப்புங்கோ"

நியாயத்தை கேளுங்க?! இவருக்கு விருப்பம் இல்லாம நான் எப்படி? கல்யாணம் ஆன நாளில இருந்து இவர் விருப்பத்தையும் அறிந்து தானே அனைத்தையும் செய்கிறேன்?

அதுக்காக என்ட மனிசனை கெட்டவன் ஆக்கி போடாதீங்கோ. "அப்பவே உன்ட அப்பர் சொன்னவர் தானே" அப்படியும் மனசுக்குள்ள நினைக்கிறியள் போல? முதல்ல கதையை கேளுங்கோவன்.

இவர் சமாதானம் இருக்க வேண்டும் என நினைக்கிற ஆள். சிங்கள அரசாங்கம் என்றாலும் தூரம். எங்கட அண்ணாக்கள் என்றாலும் தூரம். சண்டை எதற்கு, சண்டை போடுபவர்களில் எவரையும் நான் சார்ந்திருக்க போவதில்லை என சொல்லுவார்.

நான் எப்படி அப்படி இருக்க முடியும். மறுபடி கேட்டு காலையில வாக்குவாதம் முற்றியது தான் மிச்சம்.

"பாருங்கோ நல்ல விசயத்துக்கு தானே பணம் அனுப்பலாம் என்கிறேன்" இது நான்.

"அந்த பணம் சுனாமி மக்களுக்கு போய் சேரும் என்பதில் என்ன உறுதி" என்ட மனிசன் வர வர இந்த பணம் கொடுக்காமல் இருக்க கேள்வி கேட்பினமே அவையள போல எல்லோ பேசுது.

எனக்கு விசர் பிடிக்காத குறை தான். சரி சரி என்ன சொல்லவாறியள் என்று எனக்கு புரியிறது.

கதைக்கு வாங்கோ இப்ப..

"என்னங்க சொல்லுறியள், அங்க கஸ்டபடுறது என்ட சகோதரங்கள். அவையள சிங்கள இராணுவம் சீரழித்தது போதாது என்று இது வேறை. இந்த நேரத்தில இப்படி பேசுறியளே?"

"எப்ப பார்த்தாலும் இதே கதை தான். என்னுடைய விருப்பத்தை சொல்லிட்டேன். பணம் வேண்டிய அளவு உங்கட கையில இருக்கு. இதன் பின்னர் உங்கட இஸ்டம்" என கூறி வேலைக்கு போக கிளம்பினார்.

என்னால துக்கத்தை மனதுக்குள்ள அடைக்கவே முடியல.. "உங்கட கண்ணுக்கு முன்னால உங்கட உறவுகளை வெட்டி இருக்கிறார்களா ? உங்கட சகோதரிகளை இந்தியா ஆமிக்காரன் சூறையாடி இருக்கிறானா? அல்லது உங்கட தேவாலயத்தையே குண்டு வைத்து அளித்து இருக்கிறார்களா? இதெல்லாம் நடந்து இருந்தால் தான் உங்களுக்கு புரியும் என்னுடைய தவிப்பு. பாவம் அவர்கள்..." அதற்கு மேல் பேசாமல் அறைக்குள் ஓடி சென்று கட்டிலில் விழுந்தேன். இவரும் வேளைக்கு போய்ட்டார்.

நான் சாப்பிடாமல் கொள்ளாமல் தொலைக்காட்சி பெட்டி முன்னாலேயே தவம் கிடக்கிறேன். என்னாலே ஒரு சிறு உதவி கூட செய்ய முடியவில்லையே என குற்ற உணர்ச்சி மனசை போட்டு கொல்லுது.

இவரில எனக்கு சரியான கோவம் பாருங்கோ.ம்ம்ம்ம் கார் சத்தம் கேட்குது. நான் இவரிட்ட பேச போறதில்லை, வரட்டும்.

"அம்மா"

பாருங்கோ மனிசன் ஒன்றுமே நடக்காத போல கூப்பிடுது. பதில் சொல்லாம இருந்து பார்ப்பமா?? சரி இல்லை, போய் என்ன என்று தான் கேட்பமே.

"இந்த ரசீதை கொஞ்சம் மேசையில வைடம்மா".

ஆமா இப்ப இது தான் முக்கியமா? என நினைக்கும் போது தொலை பேசி மணி. இது வேற அடிக்கடி அலறிட்டு இருக்கும். வெளிநாட்டில சுறு சுறுப்பா இருக்கிறது தொலை பேசிதானே!

"வணக்கம், ஓ குமார் அண்ணாவோ? இவரோ? இப்ப தான் வந்தவர், குளிக்க போய்ட்டார்.கூப்பிடவோ? ஓ......ஓ....ஆ?? இல்லை இல்லை நான் நல்லாதான் இருக்கிறன்.சரி அண்ணா இவர் வந்த உடனே உங்களை தொடர்புகொள்ள சொல்கிறேன்.

அது என்ன தொலை பேசியில "ஓ...ஓ...ஆ??" என்று கேக்கிறிங்களா? மன்னியுங்கோ எனக்கு இப்ப நேரம் இல்லை பதில் சொல்ல. இவருக்கு டவல் எடுத்துகுடுக்கணும்.

என்ன என்ன படக்கென்று ஆள் சந்தோசமா இருக்கு என்று கேக்கிறியளா?

பின்ன என்னவாம். மனிசம் பணம் ஊருக்கு அனுப்பி போட்டெல்லோ வந்து இருக்கு.

"என்னங்க பணம் அனுப்பி இருக்கிங்க போல?"

"ஓம் அம்மா, நீங்கள் சொன்னதில நிறைய அர்த்தம் இருக்கு. தலையிடியும் காய்ச்சலும் அவன் அவனுக்கு வந்தா தானே வலி தெரியும். உங்கட மனசு எப்படி தவிக்கும் என நான் முதலே நினைச்சு பார்த்திருக்க வேணும். மன்னிச்சிரும்மா. அதோட எனக்கு விருப்பம் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக பணம் அனுப்பாமல் நீங்கள் இருக்கும் போது. உங்கட உணர்வுகளை மதிக்கிறது தானே கணவனா என்னுடைய கடமை கூட. இதை விட சும்மாவே சமையல் ஒரு மாதிரி, இந்த கோவத்தில எனக்கு சாப்பாடே இல்லமல் பண்ணினால்.."

"என்னங்க..." என்னவன் மார்பில் தலை சாய்க்க....... இங்க நீங்கள் இன்னும் போகவில்லையா? போய்ட்டு வாங்கோ. புருசன் பெஞ்சாதியை தனிய நிம்மதியா இருக்க விட மாட்டிங்களே...

முற்றும்.

அனைத்தும் கற்பனையே.

தூயா</span>

Print this item