| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 581 online users. » 0 Member(s) | 578 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,305
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,293
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,632
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,059
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,462
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,479
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,026
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| போர் தொடங்கி விட்டதா? |
|
Posted by: நர்மதா - 12-25-2005, 11:53 AM - Forum: தமிழீழம்
- Replies (4)
|
 |
போர் தொடங்கி விட்டதா? அரசியல் தலைமையா இராணுவத் தலைமையா முடிவெடுப்பது என்ற முரண்பாட்டின் பின்னணியில் மோசமடையும் நிலைமை
இன்று அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள மிகப் பெரும் கேள்வி இதுதான். கிழக்கில் நடைபெற்று வந்த நிழல் யுத்தம் வடக்கிலும் பரவத் தொடங்கஇ அது நிஜ யுத்தமாக வெடித்து விட்டதா என்றே எல்லோரும் கேட்கின்றனர்.
கடந்த இரு வார கால நிகழ்வுகள் அவ்வாறானதொரு கேள்வியைத் தான் எழுப்ப வைக்கிறது. நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வரும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து விட்டதாகவே மக்கள் சந்தேகப்படுகின்றனர்.
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்களினால் ஏற்படப் போகும் பின் விளைவுகள் குறித்து உணர அரசும் கண்காணிப்புக் குழுவும் தவறி விட்டன. தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்கள் மீதான தாக்குதல்கள்இ கொலைகள் குறித்து கண்காணிப்புக் குழுவோ அரசோ அக்கறை காட்டவில்லை. அது அங்கு கிளேமோர் தாக்குதல்களுக்கும் கைக்குண்டு வீச்சுகளுக்கும் வழி வகுத்தது.
அப்போது கூட நிலைமையின் தீவிரம் உணரப்படவில்லை. புதிய இராணுவத் தளபதியின் நியமனமும் அதன் பின்னர் குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்களும் இபிரதானமாக அப்பாவிப் பொதுமக்களையும் பல்கலைக்கழக சமூகத்தையும் மையம் வைத்ததாயிருந்தது.
புங்குடுதீவில் இளம் யுவதியொருவர் கடற்படையினரால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமாக கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக சமூகம் படையினரால் இலக்கு வைக்கப்பட்டதும் மக்களை கொதித்தெழச் செய்தது. பல்கலைக்கழக சமூகம் மீதுஇ எந்தவித ஆத்திரமூட்டலுமின்றி படையினர் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். அவர்கள் நடத்திய அமைதிப் பேரணியை படையினர் மிகக் கொடூரமாக அடக்கினர்.
அமைதிப் பேரணியில் சென்ற பல்கலைக்கழக துணைவேந்தர்இ பேராசிரியர்கள்இ விரிவுரையாளர்கள்இ மாணவர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டும் சுட்டுத் தள்ளப்பட்டதும் பின்னர் அது குறித்து அரசும் படைத்தரப்பும் சிங்களஇ ஆங்கில ஊடகங்களும் மேற்கொண்ட மிக மோசமான பொய்ப்பிரசாரமும் தமிழர்களை சினந்தெழ வைத்தது.
எடுத்ததற்கெல்லாம் விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டும் கண்காணிப்புக் குழுஇ குடாநாட்டுச் சம்பவங்களை மூடி மறைத்து விட்டது. இன்று வரை அவை பற்றி எதுவும் கூறவில்லை. படுகொலைகள்இ பாலியல் வல்லுறவுஇ பல்கலைக்கழக சமூகம் மீதான கொடூரத் தாக்குதல்களெல்லாம் பொதுமக்களுக்கெதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை. இதனைக் கூட எந்தத் தரப்புமே கண்டிக்க முன்வராத போது இந்த யுத்த நிறுத்தமும் சமாதான முயற்சியும்இ யாருக்காக மேற்கொள்ளப்படுகிறது? எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? என்ற கேள்வியை தமிழ்ச் சமூகம் எழுப்பியது.
அமைதிப் பேரணி நடத்திய தங்கள் மீதுஇ ஏன் இந்தளவு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ்இ யாழ்.மாவட்ட புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியை கேட்ட போதுஇ அவர் கூறிய பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் குடாநாட்டு சம்பவங்களின் பின்னணியில் ஹபெரும் அரசியல்' இருப்பது தெரிய வந்தது.
ஹகுடாநாட்டில் தற்போது நடப்பதெல்லாம் மேலிடத்தின் உத்தரவுகளுக்கமையவே. எனது கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களே எல்லாவற்றையும செய்கின்றனர்.' என மேஜர் ஜெனரல் சந்திரசிறி பதிலளித்திருந்தார். இதனைப் பேராசிரியர் மோகனதாஸ் பின்னர் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
இதன் மூலம் குடாநாட்டு மக்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்திற்கும் பாடம்படிப்பிக்க வேண்டுமென புதிய இராணுவத் தளபதி மேற்கொண்ட நடவடிக்கைகளே இதுவென பல்கலைக்கழக சமூகம் கடுமையாகக் குற்றஞ்சாட்டியது.
தெற்கில் ஏதாவது ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் முதலில் பொலிஸாரும் பின்னர் கலகத்தடுப்புப் பொலிஸாரும் அதன் பின்பே படையினரும் அதில் தலையிடுவர். பேரணியை தடுத்து நிறுத்த ஹபரியர்'(தடுப்பு வேலிகள்) போடுவர். பேரணி நடத்துவோரின் கருத்தைக் கேட்பர். பேரணி தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுமாஇ இல்லையாஇ எனக் கூறுவர். பேரணியை தொடர அனுமதிக்க முடியாதென்றால் அது பற்றி தெரிவிப்பர்.
இவை எல்லாவற்றையும் மீறினால்இ பேரணியைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகமும் அதுவும் பலனளிக்காவிட்டால் தண்ணீரைப் பீச்சியடிப்பர். தடியடிப் பிரயோகமும் நடைபெறும். துப்பாக்கிச் சூடு ஒருபோதும் நடத்தப்படுவதில்லை. ஆனால்இ யாழ்ப்பாணத்தில் அதுவும் பல்கலைக்கழக சமூகம் நடத்திய அமைதிப் பேரணியில் நிலைமை வேறு.
தெற்கில் மேற்கொள்ளப்படும் நடைமுறை எதனையும் வடக்கில் மேற்கொள்வதில்லை. ஹபரியர்கள்' போடப்படுவதில்லை. அமைதிப் பேரணி நடத்துவோரிடம் அது பற்றி விசாரிப்பதில்லை. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் கூடப் பயன்படுத்தப்படுவதில்லை. தடியடி பிரயோகமுமில்லை. எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது.
எல்லா விடயங்களிலும் வடக்கு - கிழக்குக்கு ஒரு விதம் தெற்கிற்கு ஒரு விதம் என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன. போர்நிறுத்தக் காலத்தில் அதுவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்கள்தான் தமிழ் மக்களை பொங்கியெழச் செய்தது. புதிய இராணுவத் தளபதியின் இந்த அணுகுமுறை நிலைமையை மோசமடையச் செய்து விட்டது.
படைத் தரப்பு இன்று யாழ்.குடாநாட்டில் உளவியல் போரொன்றை நடத்துகிறது. தாங்கள் வலுவான நிலையிலிருப்பதாகக் காட்டவும் மக்களை அச்சுறுத்தி வீடுகளுக்குள் முடக்கவும் முனைகிறது. இதற்காகவேஇ தங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அவர்கள் தினமும் அப்பாவி மக்களை இலக்கு வைக்கின்றனர்.
பொங்கு தமிழ் நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் கூடிய குடாநாட்டு மக்களை இலக்கு வைத்து தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான அவர்களது உணர்வுகளை மழுங்கடித்து விடும் உளவியல் போரிலேயே படைத்தரப்பு தற்போது இறங்கியுள்ளது. இதற்கு அவர்களுக்கு தற்போதைய போர் நிறுத்தம் வாய்ப்பாகிவிட்டது.
கிழக்கில் எந்தப் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி நிழல் யுத்தம் நடைபெறுகிறதோ அதே போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி வடக்கில் மக்களை அச்சமூட்டும் உளவியல் போரை நடத்த படைத்தரப்பு முயல்கிறது.
போர்நிறுத்த காலத்திலும் புலிகள் பலமாக இருப்பதால்இ படையினர் பலவீனமாய் இருப்பதாகக் கூறப்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் தாங்கள் பலமாக இருப்பதாகக் காண்பிக்கும் முயற்சியிலுமே அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது குடாநாட்டில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் முற்று முழுதாகவே இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பணிப்பிலேயே நடைபெறுகின்றன. இதனையே யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் எல்லாவற்றுக்கும் தூண்டுதல் களமாயிருப்பதால் யாழ். குடாநாட்டு மக்களை முற்று முழுதாகப் பயப்பீதியில் ஆழ்த்தவேண்டுமென தற்போதைய இராணுவத் தலைமை தீவிரம் காட்டுகிறது. இதற்கு எதிராகவே முதலில் யாழ்ப்பாணம் கொந்தளித்தது. அதன் தொடர்ச்சியாகவே மன்னாரில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
கிழக்கில் இதமிழர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில்இ தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளும் நிழல் யுத்தம் தோல்வியடைந்து வரும் நிலையில்இ தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இனக் கலவரங்களைத் தூண்டும் முயற்சிகள் தீவிரமடைந்தன. ஆனாலும்இ கருணா குழுவிலிருந்து வந்தவர்கள் இவற்றை அம்பலப்படுத்தவேஇ தமிழ் - முஸ்லிம் முறுகல் நிலை தணிந்து விட்டது.
இந்த நிலையில்தான் வடக்கில்இ குறிப்பாக தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஓரளவு அதிகம் வாழும் மன்னாரில் தமிழ் - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு முயல்வதாகத் தமிழ்த் தரப்புகள் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தன. ஏற்கனவேஇ வடக்கில் மன்னாரிலேயே புலிகளுக்கெதிராகவும் மக்களுக்கெதிராகவும் அடிக்கடி தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.
கிழக்கில் கருணா குழுதான் இந்தத் தாக்குதல்களை நடத்துகின்றதென்றால் வடக்கில்இ அதுவும் மன்னாரில் எந்தக் குழு புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடத்த முடியும்? கடந்த பல மாதங்களாக இங்கு இவ்வாறான பல தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
வடக்கில் ஏனைய மாவட்டங்களை விட தற்போது மன்னாரிலேயே முஸ்லிம்கள் ஓரளவு அதிகமாயிருப்பதால் அங்கும் தமிழ் - முஸ்லிம்களிடையே மோதலை உருவாக்க இராணுவ புலனாய்வுப் பிரிவு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு பேசாலையில் தமிழ் - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
மன்னாரில் தமிழர்கள் மிகவும் அதிகம். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவிலே இருப்பதாலும்இ படித்த மட்டங்களை விட தொழிலாளர்களிடையே அதுவும் அங்கு மீன்பிடியில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஈடுபடுவதால் அவர்களிடையே மோதல்களை உருவாக்குவது மிகச் சுலபமென புலனாய்வுப் பிரிவு கருதியதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மீனவர்களும் பேசாலை தமிழ் மீனவர்களும் அருகருகிலிருப்பதால் இவ்விரு தரப்புகளுக்குமிடையே இன மோதல்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தளவு முஸ்லிம்களின் உடைமைகளுக்குப் பெரும் சேதமேற்படுத்தினால்இ அவர்கள் பெருமளவு தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் சாத்தியம் குறைவென்பதால்இ அதிகளவிலுள்ள தமிழ் மீனவர்களுக்கெதிராக குறைந்தளவு முஸ்லிம் மீனவர்கள் வன்முறையில் இறங்குவது போல் ஒரு நிலைமை தோற்றுவிக்கப்பட்டது.
இதனால்இ பேசாலையில் தமிழ் மீனவர்களின் 20 இலட்சம் ரூபா பெறுமதியான றோலர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட தமிழ் மீனவர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். இந்தச் சூழ்ச்சிகளை அறியாத அவர்கள்இ தொழில் போட்டியால் முஸ்லிம்களே தங்கள் றோலர்களை எரித்ததாகக் கொதித்தனர். ஆனாலும்இ உண்மை நிலை பின்னர் இரு தரப்பினருக்கும் உணர்த்தப்படவே அங்கு கொந்தளிப்பு நிலைமை தணிந்தது.
இந்த நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை பள்ளிமுனைக் கடற்பரப்பில் மோதல் இடம்பெற்றதுடன் வெள்ளிக்கிழமை பேசாலையில் கிளேமோர் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது சம்பவத்தில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்துஇ ஜனாதிபதி தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடி அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைகள் குறித்து அரசியல் தலைமையா அல்லது இராணுவத் தலைமையா முடிவெடுப்பதென்பதில் நீடிக்கும் குழப்பமேஇ இதுவரை வடக்கில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்ற போதும் அதனைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதைக் காட்டுகிறது.
வடக்கு நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது கூட்டமைப்பினர் தெரிவித்த பல்வேறு முறைப்பாடுகளையும் கேட்டு அவற்றுக்கு பரிகாரம் காண்பது போல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருத்துகளை தெரிவித்த போதும்இ ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு வந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாஇ இராணுவத்தினரை முகாம்களினுள் முடக்குவதன் மூலமே தற்போதைய மோசமான சூழ்நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியுமென்ற கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியை விட இராணுவத் தளபதியே தனது அதிகாரத்தை அங்கு நிலை நிறுத்த முயன்றுள்ளார். இதுஇ குடாநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை வடக்கில் ஏனைய பகுதிகளிற்கும் பரவக் காரணமாகிவிட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டையும் மீறி விட்டதாகவே கருதப்படுகின்றது.
புதிய ஜனாதிபதிஇ புதிய பிரதமர்இ இவர்களைச் சார்ந்த பிரதான கூட்டணிக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் அதி தீவிரவாதங்களை விடஇ புதிய இராணுவத் தளபதியின் கடும் போக்கு நிலைஇ போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக தமிழர் தரப்பை கருத வைத்துள்ளது.
போர் நிறுத்த உடன்பாட்டுக்கு ஏற்ப படையினர் நடந்து கொள்ள வில்லையென ஆரம்பம் முதல் இதுவரை தமிழ்த் தரப்புகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன. போர் நிறுத்த உடன்பாடானதுஇ கைதுகள்இ சுற்றி வளைப்புகள்இ தேடுதல்கள்இ பொது மக்கள் மீதான தாக்குதல்கள்இ துப்பாக்கிச்சூடுஇ அச்சுறுத்தல்கள்இ படையினர் மீதான தாக்குதல்கள்இ எதுவுமே நடைபெறக் கூடாதென வலியுறுத்துகிறது. ஆனால்இ வடக்கு-கிழக்கில் இவை மிகச் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன.
கிழக்கில் ஆரம்பமான நிழல் யுத்தமே இன்று எல்லாவற்றுக்கும் வழி வகுத்துள்ளது. இந்த நிழல் யுத்தத்தை புதிய அரசு வடக்கிலும் பரவ விட முயற்சித்ததால் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து எந்தத் தரப்பாவது விலகுவதென்றால் 14 நாள் கால அவகாசம் கொடுத்தே விலக வேண்டுமென்ற நிலைமையையும் இல்லாது செய்து விட்டது. ஆரம்பம் முதலே நடைபெற்று வந்த நிழல் யுத்தம் 14 நாள் கால அவகாசமின்றியே நிஜ யுத்தமாகி விட்டதாகவே அனைவரும் கருதுகின்னறர்.
ஆரம்பம் முதல் எடுத்ததற்கெல்லாம் புலிகளை மட்டுமே குற்றம்சாட்டி வந்த கண்காணிப்புக் குழுவும்இ அரச படையினரின் அத்துமீறல்களை ஒரு போதும் கண்டிக்கவில்லை. அம்பாறையில் ஹெலிகொப்டர் மீதான தாக்குதலின் போது கூடஇ புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் இதற்கு புலிகளே முற்று முழுதாகப் பொறுப்பெனக் கூறி இதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தது.
கண்காணிப்புக் குழுவின் இந்தக் கூற்றை நியாயமென அரசும் படைத்தரப்பும் கூறின. அப்படியாயின்இ ஆரம்பம் முதல் இன்று வரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களும் படைத் தரப்பு அல்லது அரசே பொறுப்பென கண்காணிப்புக் குழு கூறியிருக்க வேண்டும். ஆனால்இ ஒரு சம்பவத்துக்குக் கூட இன்று வரை படைத் தரப்பையோ அரசையோ கண்காணிப்புக் குழு குற்றஞ்சாட்டாததும் நிலைமை இந்தளவு தூரம் வருவதற்கு காரணமாகிவிட்டது.
கண்காணிப்புக் குழு தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அவர்களால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. தெற்கில் அரசியல்வாதிகளினதும் இனவாதிகளினதும் மிரட்டல்களுக்கு கண்காணிப்புக் குழு பயந்து விட்டது. அதிகாரம் போதாததால் தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையெனக் கூறும் கண்காணிப்புக் குழு இ அப்பாவி மக்களை படையினர் கொடூரமாகத் தாக்கும் போதாவது கூட அதனைக் கண்டிப்பதற்கு அவர்கள் என்ன அதிகாரத்தை எதிர்பார்க்கின்றனர்.
படையினர் மீதான தற்போதைய தாக்குதல்களெல்லாவற்றுக்கும் புலிகளே பொறுப்பென அரசும் படைத் தரப்பும் குற்றஞ்சாட்டுகின்றன. தாக்குதல்களுக்கு புலிகள் தான் காரணமென்றால் அதற்கான சூழ்நிலையை உருவாக்கிய படைத் தரப்பையும் அரசையும் யார் கண்டிப்பது.
இந்தத் தாக்குதல்கள் மூலம் புலிகள் ஒன்றை உணர்த்த முற்படுவதாகவே கருதப்படுகிறது. தங்கள் மீதான பல தாக்குதல்களின் போதெல்லாம் மிகவும் பொறுமை காத்த அவர்கள்இ இன்று பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டதால் பொறுமை இழந்து விட்டனர். மக்களையும் மாணவர்களையும் பாதுகாக்க இனி எவரையும் நம்பப் போவதில்லை நாமே ஆயுதப் போராட்டத்தில் குதிக்கப் போகின்றோமென மாணவர் சமூகமும் உறுதிபடக் கூறிவிட்டது.
தங்களுக்கு போர்ப் பயிற்சி வழங்குமாறு மாணவர் சமூகமும் புலிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. போர் நடைபெற்ற காலத்தில் கூட பாரிய இழப்புகளெல்லாம் மக்களுக்கு ஏற்பட்ட போது இந்தளவுக்கு பொங்கியெழாத மாணவர் சமூகம்இ போர் நிறுத்த காலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களால் போர்ப் பயிற்சி பெறப் புறப்பட்டமையானதுஇ நிலைமை எந்தளவு தூரம் சென்று விட்டதென்பதை உணர்த்துகின்றது.
கிழக்கில் நிழல் யுத்தம் நடைபெற்று வரும்போதும் வடக்கில்இ படையினரின் வன்முறைகள் அதிகரித்து வரும்போதும் வாய்மூடியிருந்த இணைத் தலைமை நாடுகள்இ இன்று புலிகளே வன்முறையைக் கைவிட வேண்டுமென எச்சரிக்கிறது. எல்லாம் கடந்து விட்ட நிலையில் இன்று நிலைமையை கட்டுப்படுத்த அரசுக்கும் புலிகளுக்குமிடையில் சமரசம் செய்யவும் அது முயல்கிறது. இனியும் இவர்களது அழுத்தம் எடுபடுமா என்பதுதான் இன்றைய கேள்வி.
தினக்குரல்
|
|
|
| பூகம்பமான புங்குடுதீவு! பாழடைந்த கிணற்றுக்குள் |
|
Posted by: நர்மதா - 12-25-2005, 11:50 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
பூகம்பமான புங்குடுதீவு! பாழடைந்த கிணற்றுக்குள் தம்முடைய அராஜகத்தை மறைக்க முயன்ற கடற்படை
திறந்த வெளிச் சிறைச்சாலையாகவுள்ள யாழ். குடாநாட்டில் அரச படையினரின் அட்டூழியங்களும்இ அராஜகங்களும் மற்றும் காட்டுமிராண்டித்தனங்களும் கட்டுக்கடங்காமல் நீண்டுகொண்டே போகின்றன.
1995 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டி னைப் படையினர் கைப்பற்றியதன் பின்னர் பல நூற்றுக்கணக்கான பெண்கள் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் நான்கு இளம் பெண்கள் காம வெறி கொண்ட மிருகப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமிஇ ரஜினிஇ சாரதாம்பாள் பட்டியலில் கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புங்குடுதீவு மடத்தடியைச் சேர்ந்த 20 வயதுடைய இளயதம்பி தர்மினி என பாலியல் கோரச் சம்பவங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தில் ஊரைதீவுஇ வரதீவில் மிகவும் வறிய குடும்பத்தில் இளையதம்பி இரத்தினபூபதி தம்பதியருக்கு கடைசி மகளாகப் பிறந்த தர்மினி தனது ஆரம்பக் கல்வியினை புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாசாலையில் பயின்றார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற இவர் உயர் கல்வியைப் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் பயின்றார்.
இரண்டு பெண் சகோதரிகளுடன் பிறந்த தர்மினி தகப்பனை இழந்து தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் குடும்ப வறுமையைப் போக்கும் பொருட்டு தையல் பயிற்சிகளையும் மேற்கொண்டு தமது வறுமை நிலையைப் போக்க அரும்பாடு பட்டு வந்தார்.
1990 ஆம் ஆண்டு தீவுப் பகுதியினை அரச படையினர் கைப்பற்றியதன் பின்னர் இன்று வரை அங்கு வாழ்ந்து வரும் மக்கள் அடிமை மனிதர் போலவே நடத்தப்பட்டு வருகின்றனர். அங்கு வாழும் பெரும்பாலான இளம் பெண்களை பாலியல் ரீதியாக கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாகப் பல தடவைகள் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடற்படையினருக்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தினர். 1995 ஆம் ஆண்டு முழுக் குடாநாடும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் தீவுப் பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்குமென தொடர்புகள் அப்போதுதான் ஏற்பட்டன. இதனால் அங்கு நடக்கும் சம்பவங்கள் ஊடகங்கள் ஊடாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்பட்டன. இதனால் கொதிப்படைந்த கடற்படை பல தடவைகள் இரவு வேளைகளில் சென்று பொது மக்களைத் தாக்கியும் உள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக கடற்படையின் அராஜகங்களை வெளிப்படுத்திய இளைஞர் ஒருவர் கடந்த மாதம் ஊர்காவற்றுறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவ்வாறு புங்குடுதீவு உட்பட தீவின் பல பகுதிகளையும் அடிமை நிலைக்கு கொண்டுவந்து ஆட்சி நடத்தி வரும் கடற்படையும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் சாரதாம்பாள் பட்டியலில் தர்மினியையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்து கிணற்றில் போட்டபோதும்இ அப்பகுதி மக்களின் துணிகரச் செயலால் இச் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.
இனி இச்சம்பவம் பற்றி நோக்குவோம். தர்மினியின் இரு பெண் சகோதரிகளும் திருமணமான நிலையில் வீட்டில் தாயாரும் தர்மினியும் வசித்து வந்தனர். இதனால்இ இரு பெண்களும் இரவில் தனிமையில் நிற்பது பாதுகாப்பில்லையெனக் கருதி தாயார் தர்மினியின் மாமன் வீட்டில் இரவில் சென்று தங்கி வந்தனர்.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தர்மினி மாமனார் வீட்டில் இரவில் தங்கி காலையில் வீடு வருவது வழமை. இவர் மாமனார் வீட்டிற்குச் செல்லும் பிரதான வீதியிலேயே புங்குடுதீவுக் கடற்படையின் பிரிகேட் முகாம் அமைந்துள்ளது. இப் பாதையின் ஊடாகச் செல்லும்போது கடற்படையினர் இவருக்கு பல பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டனர்.
இதனால் இவர் கடற்படையினரை பல முறை திட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த 16 ஆம் திகதி இரவு 7 மணியளவில் தர்மினி மாமனார் வீட்டிற்கு செல்வதாக தாயாரிடம் கூறிச் சென்றார். இதுவே தாயாரிடம் இவர் கூறிய இறுதிச் சொல்லாகும். தர்மினி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடத்திலேயே இவர் காணாமற்போயுள்ளார்.
கடற்படையின் பிரதான முகாம் அமைந்துள்ள சுற்றுப் புறங்களில் உள்ள பொது மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் தங்கியுள்ளதால் இப்பகுதி வீடுகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதுவே காமவெறி கொண்ட கடற்படைக்கு சாதகமாக அமைந்தது.
தர்மினியின் வருகைக்காக காத்திருந்த கடற்படையினர் இவரை தந்திரோபாயமாக வாய்க்குள் துணியை திணித்து அருகிலுள்ள பாழடைந்த வீட்டிற்கு தூக்கிச் சென்று தமது காம வெறியை தீர்த்துக் கொண்டனர். கைகள்இ கால்கள் என்பவற்றினை கயிற்றினால் கட்டிய பின்னரே இவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்று இவரின் கைஇ கால்களில் உள்ள அடையாளங்கள் நிரூபித்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட கடற்படையினர் இப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளமையை தர்மினியின் மருத்துவ அறிக்கையிலிருந்து அறிய முடிகின்றது.
இவரின் உள்ளாடைகள் அனைத்தும் கிழிக்கப்பட்டும்இ உடல் முழுவதும் நகக் கீறல்களும் காணப்பட்டதுடன்இ இவரின் ஒரு மார்பகம் மிகவும் கடி காயங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மிகவும் கொடூரமான பாலியல் பலாத்காரம் புரிந்த கடற்படையினர் இவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளமை மருத்துவ அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட தர்மினியை அதிகாலையிலேயே கடற்படையினர் கிணற்றில் வீசியிருக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தர்மினியைக் கொலைசெய்த கடற்படையினர் குறித்த வீட்டிலுள்ள பாழடைந்த கிணற்றின் படிக்கல்லினை உடைத்து கயிற்றினால் இவரின் இடுப்புடன் சேர்த்து இறுகக் கட்டிய பின்னர் சடலத்தை கிணற்றினுள் தூக்கி வீசியுள்ளனர். இவ்வாறு உலகிற்கு தமது அராஜகத்தை வெளிக்காட்டாமல் மறைக்கும் நோக்குடன் கடற்படையினர் செயற்பட்டனர்.
மறுநாட் காலை தர்மினி வீடு திரும்பாததை அறிந்த உறவினர் இவரைத் தேட ஆரம்பித்தனர். பல இடங்களிலும் தேடி இவரைக் காணாத உறவினர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையம்இ புங்குடுதீவுக் கடற்படை முகாம் ஆகியவற்றுக்குச் சென்று முறையிட்டனர். எனினும் இது விடயத்தில் தமக்கு ஒன்றும் தெரியாதெனவும் குறிப்பிட்ட பெண் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருக்கலாமெனவும் கடற்படையினர் உறவினரிடம் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் கொண்ட உறவினர்கள் கடற்படையின் பிரதான முகாம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளைத் தேடியபோதுஇ கடற்படையினரின் சப்பாத்து அடையாளங்களை முதலில் கண்டனர். அதன் பின் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய வேளை தர்மினி அணிந்திருந்த செருப்பொன்றை கண்டுபிடித்தனர். மேலும் பொது மக்கள்இ உறவினர்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு குறித்த பாழடைந்த வீட்டினை சல்லடை போட்டபோதுஇ கடற்படை இவர்களை இப்பகுதிக்கு வரவிடாது விரட்டினர். எனினும்இ மக்கள் விடாது அங்கு தேடியபோது குறித்த வீட்டின் கிணற்றிலுள்ள படிக்கல் ஒன்று உடைக்கப்பட்டிருந்ததை கண்டனர். அதன் அருகே கடற்படையின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியையும் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான மக்கள் கிணற்றினை எட்டிப் பார்த்தபோது தர்மினியின் தலைமுடி தென்பட்டது.
அதையடுத்து அங்கு திரண்ட மக்கள் கிணற்றினுள் குறித்த பெண்ணின் உயிரற்ற உடம்பினை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். கடற்படையினராலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென்பதை அறிந்த மக்கள் அப்பகுதியில் பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர்.
கடற்படையின் புங்குடுதீவு முகாமை அங்கிருந்து அகற்றினால் மட்டுமே சடலத்தை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்போமென போராட்டத்தில் அம் மக்கள் ஈடுபட்டனர். இவர்களை விரட்டியடிக்க கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தடியடிஇ கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டு மக்களைக் கலைக்க முற்பட்டனர்.
எனினும் இதற்கு அடங்காத மக்களை கண்டபடி சுட்டுக் கலைத்தனர். இதனால் ஒரு இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பல பொது மக்கள் அடிகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
ஆத்திரம் கொண்ட மக்கள் கடற்படையினரின் மக்கள் தொடர்பகம் உட்பட பல சோதனை நிலையங்களையும் அடித்து நொருக்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ஸ்தலத்துக்கு விரைந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பல பிரயத்தனத்தின் மத்தியில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கடற்படையுடனும் பொது மக்களுடனும் கலந்துரையாடி சடலத்தை கிணற்றிலிருந்து எடுக்க நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்த நிலையிலும் அப்பகுதிகளில் பெரும் பதற்றமும் பீதியும் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. கடற்படைக்கு எதிராக போராட்டம் செய்த பொதுமக்களைத் தேடி கடற்படையினர் தேடித் தேடி கைதுசெய்து வருகின்றனர்.
மேலும் இரவு வேளைகளில் போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளுக்குச் செல்லும் கடற்படை கண்மூடித்தனமாக இம் மக்களைத் தாக்கியும் வருகின்றது.
புங்குடுதீவில் பொது மக்களால் சேதமாக்கப்பட்ட கடற்படையின் மக்கள் தொடர்பகம் மற்றும் காவலரண்களையும் புனரமைத்துத் தருமாறும் கடற்படை இம் மக்களை துன்புறுத்தி வருகின்றது.
தினக்குரல்
|
|
|
| தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைப்பு முயற்சியை இந்தியா மீண்டும் |
|
Posted by: நர்மதா - 12-25-2005, 11:49 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைப்பு முயற்சியை இந்தியா மீண்டும் தோற்கடித்து விட்டதா?
நாட்டின் புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில் தென்னிலங்கை அரசியலில் மிக மோசமாக அதிகரித்துள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கடும் போக்குகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தமிழ்இ முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது தனிப்பட்ட சுயநலன்கள்இ விருப்பு வெறுப்புகளுக்காக பிளவுபட்டு நிற்கின்ற செயற்பாடுகளுக்கு அப்பாலும் சமூகரீதியாக எழுந்துள்ள அரசியல் எழுச்சி காரணமாக ஏதோவொரு நிலையை முன்னெடுக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் எழுந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலைமைகளின் வெளிப்பாடாகவே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுச் செயற்படுவதென்ற ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன் அதனை முன்னெடுத்துச் செல்வதற்காக பாராளுமன்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளனர்.
கடந்த காலங்களிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எழும் எந்தவொரு சிறு சிறு பிரச்சினைகள் தொடர்பிலும் மிக மோசமாக முரண்பட்டு நிற்கின்ற போக்கொன்றை வெளியே காட்டிக் கொண்டாலும் அவ்வாறான நேரங்களில் ஒன்றுபட்டு செயற்படுகின்ற போக்கொன்றையே முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்னெடுத்து வந்தமை வரலாறு.
இது இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத மேலாதிக்க அரசியல் போக்கில் மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு நிலைப்பாடாகும். எனினும் இந்த நிலைப்பாடு தமிழர் அரசியல் போக்கில் இன்னமும் உருவாக்கப்படாதது மிகவும் கவலை கொள்ளத் தக்கதாகும்.
எனினும் மிதவாத தமிழர் அரசியல் போக்கில் பிளவுபட்டிருந்த தமிழ் அரசியல் தலைமைகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் வெற்றிகொண்டவர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம். அதன் வெளிப்பாடாகவே இலங்கை தமிழரசுக் கட்சி பலம் பொருந்திய அரசியல் சக்தியாக தோற்றம் பெற்றது.
பின்னைய காலங்களில் மிதவாத தமிழர் அரசியல் போராட்டங்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் நிராகரிக்கப்பட்டு அரச படைகளாலும் சிங்கள இனவாதிகளாலும் அடக்கியொடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட நிலையில் தோற்றம் பெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் பெரும் பேரெழுச்சியொன்றை தோற்றுவித்தது.
ஆரம்ப காலங்களில் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்ட விடுதலைப் போராட்ட அமைப்புகள் பின்னர் அனைவரையும் அரவணைத்த இந்தியாவின் சதிவலைக்குள் சிக்குண்டு சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டன. இந்த வரலாறு தமிழர் போராட்டத்தில் மிகவும் கசப்பான மறக்கப்பட முடியாத அத்தியாயம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்தியாவின் சதிவலைக்குள் சிக்குண்டால் ஈழத்தமிழர் போராட்டம் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டு நசுக்கப்படுமென்பதற்கு தகுந்த ஆதாரங்களுடன் 1983 களின் பிற்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் அரசியல் பொறுப்பாளராகவிருந்த சந்ததியார் எழுதிய ஹவங்கம் தந்த பாடம்' எமக்கெல்லோருக்கும் இன்னமும் ஒரு படிப்பினையாகும்.
ஈழத்தமிழர் போராட்ட அமைப்புகளை கொண்டே ஈழத்தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்றொழித்த வரலாற்றுப் பதிவுகள் 1987 பிற்பகுதி தொடக்கம் 1990 களின் முற்பகுதி வரை எம்மிடையே நிறையவேயுள்ளன.
இந்தியா எமது அயல்நாடுஇ சமூக பொருளாதாரஇ கலைஇ கலாசாரஇ மதரீதியான சகல பண்பாடுகளுடனும் ஒன்றிணைந்து போனவர்கள். எனினும்இ தமிழர் அரசியல் போக்கில் தொடர்ச்சியான விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து சிங்கள அரசியல் தலைமைகளுக்கு துணைபோகும் செயற்பாடுகளே இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருவதையே காண்கிறோம்.
பிரிட்டிஷ் காலனியாதிக்க வாதிகளிடமிருந்து இலங்கையின் அரசியல் அதிகாரம் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைமைகளிடம் கையளிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழர் அரசியல் செல்வாக்கை இல்லாதொழிக்க எடுக்கப்பட்ட முதல் முயற்சியான இந்தியப் பிரஜைகளின் வாக்குரிமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை சக்திமிக்க இந்தியா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தது.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் கூட இந்தியத் தமிழர்களுக்கு எதிரான துரோகத் தனங்கள் என்றே கடந்தவாரம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஒரு பொதுக் கூட்டமொன்றில் பகிரங்கமாக தெரிந்திருந்தார்.
இந்த நிலைமைகளுக்கு அப்பால் தமிழர் தாயகப் பிரதேசத்தில் பிளவுபட்டுப் போயிருந்த மிதவாத அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சி மற்றும் ஆயுதப் போராட்டத்திலிருந்து விடுபட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் நுழைந்த தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் உடன்பட்டு வடக்குஇ கிழக்கில் 22 பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் மிகப்பலம் பொருந்திய அரசியல் சக்தியாக தோற்றம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்குஇ கிழக்குக்கு வெளியேயுள்ள பலம் பொருந்திய அரசியல் கட்சிகளான மலையக மக்கள் முன்னணிஇ மேலக மக்கள் முன்னணி என்பன நெருங்கிச் செயற்பட்ட போதிலும் மற்றொரு பிரதான கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சற்று ஒதுங்கி நின்றே செயற்பட்டது.
எனினும்இ கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததையடுத்து பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான்இ விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடி அனைத்து தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது அரசியல் சக்தியொன்றை உருவாக்கப் போவதாக அறிவித்தார்.
இதனையடுத்து மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிய பின்னர் வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்.
ஆறுமுகம் தொண்டமான் வன்னி சென்று விடுதலைப் புலிகளை சந்திப்பதை தடுப்பதற்கு இந்தியத் தூதரகம் பல்வேறு முயற்சிகளை கடுமையாக கையாண்ட போதிலும் அது கைகூடாத நிலையில் வன்னி விஜயத்திற்குப் பின்னர் இந்திய இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய இல்லத்தில் நடைபெற்ற தனிப்பட்ட அந்த சந்திப்பில் ஆறுமுகம் தொண்டமான் எதிர் கொண்ட தனிப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடி நிவாரணம் வழங்கப்பட்டதையடுத்து மறுநாளே இந்தியா சென்றுவிட்டார்.
அதுமட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கான குழுவில் இணைந்து கொள்ளவும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கையின் பலம் பொருந்திய அனைத்து தமிழர் அரசியல் தலைமைகளும் ஒன்றுபடும் முயற்சியை இந்தியா மீண்டுமொரு தடவை தோற்கடித்துவிட்டதா என்பதை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தான் எதிர்கால சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டும்.
தினக்குரல்
|
|
|
| சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பில் கருணா குழு: |
|
Posted by: நர்மதா - 12-25-2005, 11:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பில் கருணா குழு: கண்காணிப்புக் குழுவின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அல்லது அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினர் கோரமான முறையில் நத்தார் பண்டிகை நிகழ்வில் தேவாலயத்துக்குள் வைத்து சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்த்ததை தூக்கி தூர எறிந்துவிட்டு அதன் சரத்துகளில் ஒன்றான இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இயங்குகிற ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையாமல் தங்களது பாதுகாப்பில் சிறிலங்கா இராணுவம் இத்தகைய படுகொலைச் செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறது.
இந்த உண்மையை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்து வருகின்றனர். அவ்வப்போது இது தொடர்பிலான உண்மைகள் ஆதாரங்களோடு வந்து கொண்டிருக்கிற நிலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் பராமரிப்பில் கருணா குழு எப்படி இயங்கியது என்பதை அம்பலப்படுத்துகிற விதமாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா இராணுவத்தினருடன் கருணா குழுவினர் சேர்ந்தியங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக சண்டே ரைம்ஸ் ஆங்கில வார ஏடு உண்மைகளை அம்பலப்படுத்தி இருந்தது.
பொலனறுவ மாவட்டம் தீவுச்சேனையில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் இந்த முகாம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பிலான விசாரணைகளை இராணுவத் தலைமையகம் முதலில் மேற்கொண்டது.
மார்ச் 30 ஆம் நாள் வைஸ் அட்மிரல் தயா சந்தகிரிக்கு இராணுவத் தளபதி பிரிக்கேடியர் ஜே.ஜயசூர்ய அனுப்பிய அறிக்கை:
முதுகல கிராமத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள முகாம் குறித்து நாம் ஆய்வு மேற்கொண்டோம். அந்த பங்கரை சிறிலங்கா படையினர் அழித்துவிட்டனர். கட்டளை அதிகாரி இது தொடர்பில் விசாரணை நடத்தி புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்தப் படங்கள் எமக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த பங்கர் கருணா குழுவினரால் எந்த செயற்பாட்டுக்கும் பயன்படுத்தப்படவில்லை. ஊடகத்தில் வந்த செய்தி தவறானது. தவறான புரிதலை மக்களிடத்தில் ஏற்படுத்தக் கூடியது. இத்தகைய செய்திகளால் அமைதி முயற்சிகளில் சிக்கல் ஏற்படும். அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பிரச்சனை எழும் என்று அந்த அறிக்கை கூறியது.
இதையடுத்து இராணுவப் பேச்சாளரும் அப்படியான முகாம் ஏதுமில்லை என்று மறுப்புத் தெரிவித்தார்.
இதனிடையே மார்ச் 30 ஆம் நாளன்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தமது அறிக்கையை சமாதானச் செயலக பணிப்பாளராக இருந்த ஜயந்த தனபாலவுக்கு அனுப்பி வைத்தார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது:
மட்டக்களப்பு கண்காணிப்புக்குழுவினர் கருணா குழு முகாம் இருந்ததாக கூறப்படும் தீவுச்சேனை பகுதிக்கு மார்ச் 26 ஆம் நாள் காலை 9 மணியளவில் சென்றனர்.
வீதியின் வடக்குப் பகுதியில் கருணா குழுவினர் முகாம் அமைத்து இருந்தனர். 50 அடிக்கு 30 அடி என்ற அளவில் துப்பாக்கிகள் தொங்கவிடப்பட்ட நிலையில் அந்த முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.
முகாமின் இரு பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முகாமின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவ முகாம் மிக அருகாமையில் அமைந்துள்ளது. மறுபுறம் 9 ஆண்கள் அங்கே இருந்தனர். முகாமை கண்காணிப்புக் குழுவினர் நெருங்கிய போது ரி-56 ரக துப்பாக்கிகளுடன் கருணா குழுவினர் பதுங்கி இருந்தனர்.
அந்தக் குழுவின் 2 ஆம் நிலை தளபதி ஒருவரை மேற்குப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சந்தித்தனர். அவர் இயல்பாகஇ நட்பாக பேசினார்.
அவர் தெளிவாக உண்மையை ஒப்புக் கொண்டார். தான் மற்றும் தனது குழுவினர் அனைவரும் கருணா குழுவினரே என்றும் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் சேனபுர வனப்பகுதியின் வடபகுதிக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முதலில் இந்த முகாம் தீவுச்சேனை வடபகுதியில் அமைக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதுகல கிராமத்தில் முகாம் அமைக்கப்பட்டது. இந்த முகாம் முதலில் சிறிலங்கா இராணுவத்தின் நடமாட்டத்துக்குரிய வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது. பின்னரே தற்போதைய இடத்துக்கு மாற்றப்பட்டது. கருணா குழுவின் 2 ஆம் நிலைத் தளபதியின் தகவலின் படி அக்குழுவில் 140 பேர் உள்ளனர். முக்கியமான கருணா குழு முகாமானது தீவுச்சேனை வடக்குப் பகுதியில் உள்ளது.
மார்ச் 16 ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தின் எதுவித தலையீடும் இன்றி இந்த முகாம் இயங்கி வந்துள்ளது. மார்ச் 16 ஆம் நாளன்று சீருடை அணிந்த இராணுவ அதிகாரி இம்முகாமுக்கு வந்து அங்கிருந்த கருணா குழுவினரிடம் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்றும் கிராமத்தில் ஆயுதங்களுடன் நடமாடினால் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் கூறியுள்ளார்.
கருணா குழுவின் 2 ஆம் நிலை தளபதி என்பவர் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்த கருத்தின் படிஇ முகாம் இயங்கி வந்த கிராமத்திற்கு நாளாந்தம் சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிக்காக வந்து சென்றுள்ளனர். இந்த முகாமைத் தாண்டித்தான் அவர்களும் சென்றுள்ளனர். சில நூறு மீற்றர் தொலைவில் அவர்கள் அதே வழியில் திரும்பியும் சென்றுள்ளனர். இந்த முகாமுக்குள் இராணுவம் வருகின்ற போது கருணா குழுவினர் ஆயுதங்களைப் பதுக்கியுள்ளனர்.
இந்த விடயத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு முன்னெடுத்து எமது விசாரணையை தொடருவோம் என்று ஹக்ரூப் ஹொக்லெண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அனுப்பப்படுவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் அதன் கொழும்புத் தலைமையகத்துக்கு அதாவது மார்ச் 21 ஆம் நாள்இ தீவுச்சேனையில் கருணா குழு முகாம் இருப்பதாக உறுதி செய்து அனுப்பியது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாழைச்சேனையிலிருந்து மன்னம்பிரியவுக்குச் செல்லும் ஏ-11 வீதி வழியாக நாம் சென்ற போது புதிதாக சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வழமையாக 2 தான் இருக்கும். தோராயமாக 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. செவனப்பிட்டிய சந்தியிலிருந்து முதுகல ஊடாக தீவுச்சேனை செல்லும் வீதியூடாக நாம் தொடர்ந்து சென்றோம்.
7 கிலோ மீற்றர் தொலைவில் நாங்கள் நின்று கிராமத்தினரிடம் கருணா குழு முகாம் தொடர்பாக கேட்டோம். அவர்கள் 5 வெவ்வேறு இடங்களைச் சுட்டிக்காட்டினார். சிறிலங்கா இராணுவ முகாம் தங்களது கிராமத்திலிருந்த போதும் தீவுச்சேனையில் கருணா குழு முகாம் இருக்கிறது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கருணா குழு முகாமுக்கு முன்பாக 300 மீற்றர் தொலைவில் இருந்த சிறிலங்கா இராணுவ நிலை ஒன்றில் 3 சிறிலங்கா இராணுவத்தினர் இருந்தனர். அவர்களிடம் கருணா குழு முகாம் தொடர்பாக கேட்டோம். அவர்கள் அந்த இடத்தின் மூலையைச் சுட்டிக்க்காட்டி அங்கிருப்பதாகத் தெரிவித்தனர்.
அங்கிருந்து சில 100 மீற்றர் தொலைவில் ஆளில்லா சோதனைச் சாவடியை நாம் கடந்தோம். சாலையின் இருபக்கத்திலும் 20 பேர் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் தோற்றத்தில் இருந்தனர். அவர்களில் 5 பேரிடம் ஆயுதங்கள் இருந்தன. அதில் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபர் முழு இராணுவ உபகரணங்களுடன் இருந்தார். திரும்பி வருகையில் கிராமத்தின் இறுதியில் மற்றொரு ஆளில்லா சோதனைச்சாவடி இருப்பதை அவதானித்தோம்.
அந்த இடத்திலிருந்து நாம் வெளியேறிய போது மோட்டார் சைக்கிளில் இருவர் எமது வாகனத்தைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் இருவரும் இராணுவ காற்சட்டைகளை அணிந்திருந்தனர். வாகன எண்: 363990. சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடி அருகே எமது வாகனத்தை நாம் நிறுத்தி இராணுவத்தினரை நாம் அணுகினோம்.
இராணுவத்தினருக்கு அருகில் எமது வாகனம் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அருகாமையில் இருந்த கடைக்குள் சென்றுவிட்டனர். தங்களது சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து நாம் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
கருணா முகாம் எனக் கூறப்படும் இடத்திலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் சிறிலங்கா இராணுவ இலட்சிணை அதன் முன்பக்க கண்ணாடியில் பொறிக்கப்பட்ட நிலையில் மிக வேகமாக கரும் சிவப்பு நிசான் வான் ஒன்று வந்தது. தீவுச்சேனை நோக்கி அந்த வான் செல்லும் நிலையில் இருந்தது. அப்போது காலை 10 மணி.
நாம் கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குத் திரும்பிய போது மாவட்ட தலைவரைத் தொடர்பு கொண்டு நாம் பார்த்தவற்றைத் தெரிவித்தோ. விவரமாகத் தெரிவிக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கைக்குப் பின்னர் கூட்டு நடவடிக்கைகளின் தலைமையக இயக்குநராக இருந்த பிரிகேடியர் மிலிந்த பீரிசுக்கு இது தொடர்பிலான "உண்மை அறியும் குழுவை" அனுப்புமாறு தயா சந்தகிரியும் லெப். ஜெனரல் சாந்த கொட்டேகொடவும் உத்தரவிட்டனர். இந்த விசாரணையை இரகசியமாக நடத்த உத்தரவிட்டிருந்தனர்.
பிரிகேடியர் பீரிஸ் ஏப்ரல் 12 ஆம் நாள் வைஸ் அட்மிரல் தயா சந்தகிரிக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டதற்கான போதுமான தடயங்கள் உள்ளன. இருப்பினும் முகாம் கைவிடப்பட்டுள்ளது.
- அந்த முகாமிலிருந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் போன்ற தோற்றமுடையவர்களாக இருந்தனர் என்று அந்தப் பகுதி மக்கள் உறுதிப்படுத்தினர். அவர்களில் சிலர் ஆயுதங்களையும் வைத்திருந்தனர். இருட்டு நேரங்களிலே அவர்கள் இயங்கி வந்துள்ளனர்.
- இந்த முகாம் இருப்பதாக கண்காணிப்புக் குழுவினர் கண்டறிந்த பின்னர் இரு வெளிநாட்டினர் அங்கு வந்து முகாமை காலி செய்யுமாறு எச்சரித்துள்ளனர்.
- சிறிலங்கா தேசிய பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் இருந்த போதும் முகாமைச் சுற்றிய பகுதிகளில் சுற்றுக்காவலில் ஈடுபடவில்லை.
- சட்டவிரோதமாக மின் இணைப்பு அம்முகாமுக்கு கொடுக்கப்பட்டிருந்தமைக்கான தடயங்கள் உள்ளன. அவர்கள் தாங்களாகவே சமைத்துள்ளதும் தெரிய வருகிறது. இராணுவத்தினரைப் போன்ற சீருடைகள்இ காலணிகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். வலைகளில் அவர்கள் படுத்துள்ளனர்.
- பொதுமக்களின் தகவலின்படி தீவுச்சேனையில் கருணா குழுவினர் அங்கு இருந்துள்ளனர். கருணா குழுவினர் எப்போது முகாமை கைவிட்டனர் என்பது தெரியவில்லை. மார்ச் 21 ஆம் நாளுக்குப் பின்னர் அவர்கள் இந்த முகாமிலிருந்து வெளியேறி இருக்கக் கூடும் என்று தெரிகிறது.
- இராணுவத்துடன் கருணா குழுவினர் சேர்ந்தியங்குவது தொடர்பிலான கருத்துகளை ஒப்புக்கொள்ள முடியாது. அதற்கான தடயங்கள் ஏதும் அங்கு இல்லை.
அதன் பின்னர் பிரிகேடியர் பீரிஸ்இ வாசிங்கடன் தூதரகப் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
லங்காசிறி
|
|
|
| Tigers condemn the killing of Pararajasingham |
|
Posted by: cannon - 12-25-2005, 10:31 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Tigers condemn the killing of Pararajasingham
[TamilNet, December 25, 2005 08:37 GMT]
Condemning the "appalling and vicious murder" of the Tamil National Alliance MP Mr. Joseph Pararajasingham, the Political Wing of the Liberation Tigers, on Sunday, charged the Sri Lankan military intelligence and the paramilitaries working with them for the killing of Mr. Pararajasingham, a Tamil nationalist and human rights activist. The Tigers also said the killing at the Christmas mass symbolised the "long hand of the chauvinistic forces such as the Jathika Hela Urumaya," was working through the Sri Lankan military intelligence wing.
Fulltext of the media release issued by the Political Wing of the Liberation Tigers follows:
Mr Joseph Pararajasingam, Tamil nationalist and human rights activist, was brutally shot dead by the Sri Lankan intelligence unit while attending Christmas mass
Mr Joseph Pararajasingam, a Tamil nationalist and TNA member of parliament, who worked tirelessly to promote and protect human rights, was shot dead on Christmas Eve while he was attending Christmas mass at St. Mary’s church situated inside a high security zone of Batticaloa town. He was murdered by the Sri Lankan military intelligence wing and the paramilitaries working with them, including the Karuna Group and EPDP. Mr Pararajasingam’s wife, Mrs Sugunam, and six others were injured in the shooting.
Mr Pararajasingam prayed for peace and freedom for his people and had just received communion from the bishop when the Sri Lankan intelligence unit and the paramilitaries shot him and escaped.
Mr Pararajasingam raised his voice for the human rights of the Tamil people at the international stage and at diplomatic forums. He maintained solid relationships with human rights organizations and worked hard for the formation and growth of the Northeast Secretariat on Human Rights (NESOHR). It is this towering humanitarian who was shot dead by the Sri Lankan military intelligence wing.
This well-planned murder proves that the long hand of the chauvinistic forces such as the Jathika Hela Urumaya is working through the Sri Lankan military intelligence wing. The chauvinistic forces have taken away this patriot who has worked for the Tamil nation’s liberation and promotion of human rights.
We strongly condemn this appalling, vicious murder. We extend our heartfelt condolences to his family and relatives.
Political Wing
Liberation Tigers of Tamil Eelam
25 December 2005
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16631
|
|
|
| தமிழரின் இராஜதந்திரம் - ஒரு மதிப்பீடு |
|
Posted by: adsharan - 12-25-2005, 08:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
டிசம்பர் 24 ஆம் நாளுடன் விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை தாமாக முன்வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஐந்து வருடங்களை எட்டிப் பிடிக்கப்போகிறது சிறிலங்கா அரசாங்கம் - தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்பாடு.
முறிந்து விட்டது என்று நினைத்த நிலையிலும் இல்லை என்று நிமிர்ந்து எழுந்து நின்று கொண்டிருக்கிறது இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு.
சாதித்து விட்டதாக சிங்களத்தின் பறைசாற்றல். தமிழர் தரப்பைக் கூறுபோட்டுச் சாதித்து விட்டதாக அதற்கு வியாக்கியானம் வேறு.
சட்டாம்பிள்ளை கணக்கில் சமாதானத் தூதுவர்கள். பிரம்பு கையில் இல்லையென்றாலும் "தடை செய்வோம்” என்ற துருப்பை வைத்துக் கொண்டு மிரட்டுகிற பாணியில் சமாதானத் தூதுவர்கள்.
இதற்குள் சிங்களத்திற்கு மூன்றாவது தலைமை மாற்றம்.
ரணிலைத் திட்டித் தீர்த்தபடி வந்தார் சந்திரிகா.
அவரை முடக்கி வைத்துவிட்டு முன்னோக்கி வந்தார் ராஜபக்ச.
ராஜபக்சவிற்கும் மற்றைய இருவருக்கும் என்ன வித்தியாசம்?
பெரிதாக ஒன்றுமில்லை-
ராஜபக்ச இன்னமும் தமிழர் தரப்புடன் எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை. மற்றைய இருவரது அரசாங்கங்களையும் போல, அவ்வளவு தான்.
மற்றப்படி, வரலாறு சிங்களவர்களிற்கு புதியதொரு விதியைப் புகட்டி நிற்கிறது. நான்கு ஆண்டுகளுக்குள் மூன்று தலைமைகள். ஒருவர் மற்றவருக்கு நேரெதிர் புலியெதிர்ப்பைத் தவிர.
பேசித் தீர்க்கவேண்டியவர்கள் கிளிநொச்சியில் இருக்க, சிங்களம் சர்வதேசமெங்கும் முறையிடுகிறது. அவர்கள் பாணியிலேயே அவர்களிற்கு பாடம் புகட்டப்படுகிறது.
புதிய கல்வித் திட்டம், புதிய நடைமுறை.
சிங்களத்தின் புலனாய்வின் பொறிக்கெட்டாத புதிய குழு.
புலிகளைப் பிளவுபடுத்த நினைத்தவர்கள் இன்னொரு போராட்டக்குழு இருப்பதாக கட்டியழுகிற அளவிற்கு பலமான படிப்பினை.
புலிகளின் இருப்பைக் கேள்வியாக்க நினைத்தவர்களின் இருப்பிலெல்லாம் மண்ணைப் போடுகிறது இன்னொரு புதிய விதி.
ஒரு தமிழன் செத்தால் 10 படையினன் சாக வேண்டும்.
படையினன் காயம் என்று செய்தி வந்தாலே போதும், அது காயன்கடைக்கு அனுப்பப்பட்ட கார் மாதிரி.
எனவே சாவோ, காயமோ ஒரு படையினன் போர்க் களத்தில் இருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
சும்மா இருக்க முடியாது எனச் சுரண்ட வெளிக்கிட்ட படைகள் இப்போ மக்களை எதிரிகளாக்கி விட்டது. அதுதானே உண்மை.
அவர்களிற்கு என்ன தமிழ் மக்கள் நண்பர்களா?
இப்போ பக்கத்தில் குடியிருக்கிற பாட்டியைக்கூட நம்பமுடியாமல் நடுங்குகிறது சிங்களப்படைகள்.
அதற்கு முத்தாய்ப்பு வைப்பது போன்று பயிற்சியை முடித்துக் கொண்டு ஊர் திரும்புகின்றன துணைப்படைகள். ஒன்றல்ல, நூறல்ல, ஆயிரக்கணக்கில். ஆம் படைகள் ஆக்கிரமித்திருக்கிற ஊருக்குத்தான் இந்தப் படைகளும் திரும்புகின்றன.
இப்போ என்ன செய்வது?
பலஸ்தீனம் தோற்றுப்போகிற மாதிரியான ஒரு போர்க் கல்லூரியாக மாறப்போகிறது யாழ்ப்பாணம்.
போதாக்குறைக்கு நான்கு வருட யுத்த நிறுத்த ஒப்பந்தம். தாராளமாய் படைகளின் நிலைகளையும், முகாம்களையும், தளங்களையும் உளவெடுக்க சிங்களம் மனந்திறந்து வழிவகுத்த பொற்காலம்.
எந்த ஒரு உளவுப்பிரிவிற்குமே கிடைத்தற்கரிய வாய்ப்பாக கிடைக்கப்பெற்ற பொற்காலம்.
40,000 படைகள் காவலில் இருக்க, காற்றில் வந்த செய்திக்காக, வாக்களிப்பைத் தவிர்த்த 700,000 மான மறவர்கள் நிறைந்த பூமி அது.
இப்போது இன்னும் அதிர்ச்சியாகப் புரிகிறது. யாழ்ப்பாணச் சகோதரிக்காக மன்னாரில் பொங்கியெழுகிறது புதுப்படை.
யாருக்கு வெற்றி? யாரது அணுகுமுறை இராஜதந்திரம்?
தோற்றுப்போனது சிங்களம். இனி எழவே முடியாதபடி தோற்றுப்போனது என்பதே உண்மையாக நிற்கிறது.
http://www.eelampage.com/?cn=22813
|
|
|
| பொங்கல் விழா |
|
Posted by: RaMa - 12-25-2005, 07:01 AM - Forum: நிகழ்வுகள்
- Replies (25)
|
 |
உரும்பிராய் இந்துக்கல்லூரி உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா
பல கலைநிகழ்சிகளும் நடைபெறுகின்றது.
07-தை-2006
stephen Leacock C.I
2450 Birchmount Rd.
Scarborough
மேலதிக விபரங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம்
***
<img src='http://img353.imageshack.us/img353/1918/urumpirai1114ju.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| நடிகை பானுமதி மரணம் |
|
Posted by: aathipan - 12-25-2005, 04:39 AM - Forum: சினிமா
- Replies (21)
|
 |
நடிகை பானுமதி மரணம்
சென்னை, டிச.25-
பழம் பெரும் நடிகை பானுமதி நேற்று நள்ளிரவில் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.
பானுமதி
தமிழ் திரை உலகின் முடிசூடா கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை பானுமதி. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன், சிவாஜியுடன் அம்பிகாபதி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
சில படங்களை சொந்தமாக டைரக்டு செய்து உள்ளார். சொந்தக் குரலிலும் பாடி இருக்கிறார். சினிமாத் துறையில் 1943-ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார்.
சர்க்கரை நோய்
நடிகை பானுமதி சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்தார். இறுதி காலத்தில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.
அவருடைய ஒரே மகன் பரணி. இவர் சாலிக்கிராமத்தில் பரணி ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இது ஒரு காலத்தில் பரணி ஸ்டூடியோவாக இருந்தது.
சென்னை தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.
பத்மஸ்ரீ
100 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் பானுமதி என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டு பெற்றவர். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட பல்வேறு பட்டங்களை பெற்று உள்ளார்.
தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி உள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடக்கிறது.
|
|
|
| தமிழரின் இராஜதந்திரம் |
|
Posted by: ஆறுமுகம் - 12-25-2005, 01:57 AM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
தமிழரின் இராஜதந்திரம் - ஒரு மதிப்பீடு
டிசம்பர் 24 ஆம் நாளுடன் விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை தாமாக முன்வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நான்கு வருடங்களை எட்டிப் பிடிக்கப்போகிறது சிறிலங்கா அரசாங்கம் - தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்பாடு.
முறிந்து விட்டது என்று நினைத்த நிலையிலும் இல்லை என்று நிமிர்ந்து எழுந்து நின்று கொண்டிருக்கிறது இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு.
சாதித்து விட்டதாக சிங்களத்தின் பறைசாற்றல். தமிழர் தரப்பைக் கூறுபோட்டுச் சாதித்து விட்டதாக அதற்கு வியாக்கியானம் வேறு.
சட்டாம்பிள்ளை கணக்கில் சமாதானத் தூதுவர்கள். பிரம்பு கையில் இல்லையென்றாலும் "தடை செய்வோம்” என்ற துருப்பை வைத்துக் கொண்டு மிரட்டுகிற பாணியில் சமாதானத் தூதுவர்கள்.
இதற்குள் சிங்களத்திற்கு மூன்றாவது தலைமை மாற்றம்.
ரணிலைத் திட்டித் தீர்த்தபடி வந்தார் சந்திரிகா.
அவரை முடக்கி வைத்துவிட்டு முன்னோக்கி வந்தார் ராஜபக்ச.
ராஜபக்சவிற்கும் மற்றைய இருவருக்கும் என்ன வித்தியாசம்?
பெரிதாக ஒன்றுமில்லை-
ராஜபக்ச இன்னமும் தமிழர் தரப்புடன் எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை. மற்றைய இருவரது அரசாங்கங்களையும் போல, அவ்வளவு தான்.
மற்றப்படி, வரலாறு சிங்களவர்களிற்கு புதியதொரு விதியைப் புகட்டி நிற்கிறது. நான்கு ஆண்டுகளுக்குள் மூன்று தலைமைகள். ஒருவர் மற்றவருக்கு நேரெதிர் புலியெதிர்ப்பைத் தவிர.
பேசித் தீர்க்கவேண்டியவர்கள் கிளிநொச்சியில் இருக்க, சிங்களம் சர்வதேசமெங்கும் முறையிடுகிறது. அவர்கள் பாணியிலேயே அவர்களிற்கு பாடம் புகட்டப்படுகிறது.
புதிய கல்வித் திட்டம், புதிய நடைமுறை.
சிங்களத்தின் புலனாய்வின் பொறிக்கெட்டாத புதிய குழு.
புலிகளைப் பிளவுபடுத்த நினைத்தவர்கள் இன்னொரு போராட்டக்குழு இருப்பதாக கட்டியழுகிற அளவிற்கு பலமான படிப்பினை.
புலிகளின் இருப்பைக் கேள்வியாக்க நினைத்தவர்களின் இருப்பிலெல்லாம் மண்ணைப் போடுகிறது இன்னொரு புதிய விதி.
ஒரு தமிழன் செத்தால் 10 படையினன் சாக வேண்டும்.
படையினன் காயம் என்று செய்தி வந்தாலே போதும், அது காயன்கடைக்கு அனுப்பப்பட்ட கார் மாதிரி.
எனவே சாவோ, காயமோ ஒரு படையினன் போர்க் களத்தில் இருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
சும்மா இருக்க முடியாது எனச் சுரண்ட வெளிக்கிட்ட படைகள் இப்போ மக்களை எதிரிகளாக்கி விட்டது. அதுதானே உண்மை.
அவர்களிற்கு என்ன தமிழ் மக்கள் நண்பர்களா?
இப்போ பக்கத்தில் குடியிருக்கிற பாட்டியைக்கூட நம்பமுடியாமல் நடுங்குகிறது சிங்களப்படைகள்.
அதற்கு முத்தாய்ப்பு வைப்பது போன்று பயிற்சியை முடித்துக் கொண்டு ஊர் திரும்புகின்றன துணைப்படைகள். ஒன்றல்ல, நூறல்ல, ஆயிரக்கணக்கில். ஆம் படைகள் ஆக்கிரமித்திருக்கிற ஊருக்குத்தான் இந்தப் படைகளும் திரும்புகின்றன.
இப்போ என்ன செய்வது?
பலஸ்தீனம் தோற்றுப்போகிற மாதிரியான ஒரு போர்க் கல்லூரியாக மாறப்போகிறது யாழ்ப்பாணம்.
போதாக்குறைக்கு நான்கு வருட யுத்த நிறுத்த ஒப்பந்தம். தாராளமாய் படைகளின் நிலைகளையும், முகாம்களையும், தளங்களையும் உளவெடுக்க சிங்களம் மனந்திறந்து வழிவகுத்த பொற்காலம்.
எந்த ஒரு உளவுப்பிரிவிற்குமே கிடைத்தற்கரிய வாய்ப்பாக கிடைக்கப்பெற்ற பொற்காலம்.
40,000 படைகள் காவலில் இருக்க, காற்றில் வந்த செய்திக்காக, வாக்களிப்பைத் தவிர்த்த 700,000 மான மறவர்கள் நிறைந்த பூமி அது.
இப்போது இன்னும் அதிர்ச்சியாகப் புரிகிறது. யாழ்ப்பாணச் சகோதரிக்காக மன்னாரில் பொங்கியெழுகிறது புதுப்படை.
யாருக்கு வெற்றி? யாரது அணுகுமுறை இராஜதந்திரம்?
தோற்றுப்போனது சிங்களம். இனி எழவே முடியாதபடி தோற்றுப்போனது என்பதே உண்மையாக நிற்கிறது.
(puthinam.com)
|
|
|
| Joseph Pararajasingham MP shot dead in Batticaloa church |
|
Posted by: vasisutha - 12-24-2005, 11:26 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>Joseph Pararajasingham MP shot dead in Batticaloa church</b>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/01/mandur_1_21998_200.jpg' border='0' alt='user posted image'>
Mr. Joseph Pararajasingham, a senior Tamil politician and the Batticaloa district Member of Parliament (MP) of the Tamil National Alliance (TNA) was shot and killed by two unidentified gunmen at St. Mary's co-cathedral church in Batticaloa town while attending Christmas prayers early morning at 1.20 a.m Sunday. The MP's wife, Mrs. Sugunam Pararajasingham, seriously wounded in the gunfire, was rushed to Batticaloa Hospital in critical condition. Seven more persons were injured in the gunfire, civilian sources said.
Mr Pararajasingham arrived at the Church at 10.30 p.m where the services led by Batticaloa Bishop Kingley Swampillai started at 11.30 p.m.
The co-cathedral is located in the heart of Batticaloa town on Central Road.
Pararajasinghams have two sons (one deceased), and one daughter.
Mr Joseph Pararajasingham was born on 26 November 1934 and started his career as a draftsperson at the Batticaloa secretariat. He started public service as a part-time journalist at the Tamil daily "Thinapathi," where he wrote stories under the name Sugunam Joseph.
He entered Sri Lanka Parliament in 1990. He was re-elected in 1994 with the highest number of preferential votes ever received by a Tamil candidate in the NorthEast. He was again elected on the final count of preferential votes in the October 2000 elections. He again became an MP under the national list in 2002.
Mr Pararajasingham is one of the few Tamil politicians who also had a good command in English.
During the late 90's he followed up with the Sri Lanka armed forces cases of detention, disappearances, torture, rape and killing of Tamil civilians.
He is an Executive Member of the Commonwealth Parliamentary Association and the SAARC Parliamentary Assocoation.
TamilNet.com
|
|
|
|