12-25-2005, 11:32 AM
சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பில் கருணா குழு: கண்காணிப்புக் குழுவின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அல்லது அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினர் கோரமான முறையில் நத்தார் பண்டிகை நிகழ்வில் தேவாலயத்துக்குள் வைத்து சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்த்ததை தூக்கி தூர எறிந்துவிட்டு அதன் சரத்துகளில் ஒன்றான இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இயங்குகிற ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையாமல் தங்களது பாதுகாப்பில் சிறிலங்கா இராணுவம் இத்தகைய படுகொலைச் செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறது.
இந்த உண்மையை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்து வருகின்றனர். அவ்வப்போது இது தொடர்பிலான உண்மைகள் ஆதாரங்களோடு வந்து கொண்டிருக்கிற நிலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் பராமரிப்பில் கருணா குழு எப்படி இயங்கியது என்பதை அம்பலப்படுத்துகிற விதமாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா இராணுவத்தினருடன் கருணா குழுவினர் சேர்ந்தியங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக சண்டே ரைம்ஸ் ஆங்கில வார ஏடு உண்மைகளை அம்பலப்படுத்தி இருந்தது.
பொலனறுவ மாவட்டம் தீவுச்சேனையில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் இந்த முகாம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பிலான விசாரணைகளை இராணுவத் தலைமையகம் முதலில் மேற்கொண்டது.
மார்ச் 30 ஆம் நாள் வைஸ் அட்மிரல் தயா சந்தகிரிக்கு இராணுவத் தளபதி பிரிக்கேடியர் ஜே.ஜயசூர்ய அனுப்பிய அறிக்கை:
முதுகல கிராமத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள முகாம் குறித்து நாம் ஆய்வு மேற்கொண்டோம். அந்த பங்கரை சிறிலங்கா படையினர் அழித்துவிட்டனர். கட்டளை அதிகாரி இது தொடர்பில் விசாரணை நடத்தி புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்தப் படங்கள் எமக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த பங்கர் கருணா குழுவினரால் எந்த செயற்பாட்டுக்கும் பயன்படுத்தப்படவில்லை. ஊடகத்தில் வந்த செய்தி தவறானது. தவறான புரிதலை மக்களிடத்தில் ஏற்படுத்தக் கூடியது. இத்தகைய செய்திகளால் அமைதி முயற்சிகளில் சிக்கல் ஏற்படும். அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பிரச்சனை எழும் என்று அந்த அறிக்கை கூறியது.
இதையடுத்து இராணுவப் பேச்சாளரும் அப்படியான முகாம் ஏதுமில்லை என்று மறுப்புத் தெரிவித்தார்.
இதனிடையே மார்ச் 30 ஆம் நாளன்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தமது அறிக்கையை சமாதானச் செயலக பணிப்பாளராக இருந்த ஜயந்த தனபாலவுக்கு அனுப்பி வைத்தார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது:
மட்டக்களப்பு கண்காணிப்புக்குழுவினர் கருணா குழு முகாம் இருந்ததாக கூறப்படும் தீவுச்சேனை பகுதிக்கு மார்ச் 26 ஆம் நாள் காலை 9 மணியளவில் சென்றனர்.
வீதியின் வடக்குப் பகுதியில் கருணா குழுவினர் முகாம் அமைத்து இருந்தனர். 50 அடிக்கு 30 அடி என்ற அளவில் துப்பாக்கிகள் தொங்கவிடப்பட்ட நிலையில் அந்த முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.
முகாமின் இரு பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முகாமின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவ முகாம் மிக அருகாமையில் அமைந்துள்ளது. மறுபுறம் 9 ஆண்கள் அங்கே இருந்தனர். முகாமை கண்காணிப்புக் குழுவினர் நெருங்கிய போது ரி-56 ரக துப்பாக்கிகளுடன் கருணா குழுவினர் பதுங்கி இருந்தனர்.
அந்தக் குழுவின் 2 ஆம் நிலை தளபதி ஒருவரை மேற்குப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சந்தித்தனர். அவர் இயல்பாகஇ நட்பாக பேசினார்.
அவர் தெளிவாக உண்மையை ஒப்புக் கொண்டார். தான் மற்றும் தனது குழுவினர் அனைவரும் கருணா குழுவினரே என்றும் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் சேனபுர வனப்பகுதியின் வடபகுதிக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முதலில் இந்த முகாம் தீவுச்சேனை வடபகுதியில் அமைக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதுகல கிராமத்தில் முகாம் அமைக்கப்பட்டது. இந்த முகாம் முதலில் சிறிலங்கா இராணுவத்தின் நடமாட்டத்துக்குரிய வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது. பின்னரே தற்போதைய இடத்துக்கு மாற்றப்பட்டது. கருணா குழுவின் 2 ஆம் நிலைத் தளபதியின் தகவலின் படி அக்குழுவில் 140 பேர் உள்ளனர். முக்கியமான கருணா குழு முகாமானது தீவுச்சேனை வடக்குப் பகுதியில் உள்ளது.
மார்ச் 16 ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தின் எதுவித தலையீடும் இன்றி இந்த முகாம் இயங்கி வந்துள்ளது. மார்ச் 16 ஆம் நாளன்று சீருடை அணிந்த இராணுவ அதிகாரி இம்முகாமுக்கு வந்து அங்கிருந்த கருணா குழுவினரிடம் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்றும் கிராமத்தில் ஆயுதங்களுடன் நடமாடினால் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் கூறியுள்ளார்.
கருணா குழுவின் 2 ஆம் நிலை தளபதி என்பவர் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்த கருத்தின் படிஇ முகாம் இயங்கி வந்த கிராமத்திற்கு நாளாந்தம் சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிக்காக வந்து சென்றுள்ளனர். இந்த முகாமைத் தாண்டித்தான் அவர்களும் சென்றுள்ளனர். சில நூறு மீற்றர் தொலைவில் அவர்கள் அதே வழியில் திரும்பியும் சென்றுள்ளனர். இந்த முகாமுக்குள் இராணுவம் வருகின்ற போது கருணா குழுவினர் ஆயுதங்களைப் பதுக்கியுள்ளனர்.
இந்த விடயத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு முன்னெடுத்து எமது விசாரணையை தொடருவோம் என்று ஹக்ரூப் ஹொக்லெண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அனுப்பப்படுவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் அதன் கொழும்புத் தலைமையகத்துக்கு அதாவது மார்ச் 21 ஆம் நாள்இ தீவுச்சேனையில் கருணா குழு முகாம் இருப்பதாக உறுதி செய்து அனுப்பியது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாழைச்சேனையிலிருந்து மன்னம்பிரியவுக்குச் செல்லும் ஏ-11 வீதி வழியாக நாம் சென்ற போது புதிதாக சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வழமையாக 2 தான் இருக்கும். தோராயமாக 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. செவனப்பிட்டிய சந்தியிலிருந்து முதுகல ஊடாக தீவுச்சேனை செல்லும் வீதியூடாக நாம் தொடர்ந்து சென்றோம்.
7 கிலோ மீற்றர் தொலைவில் நாங்கள் நின்று கிராமத்தினரிடம் கருணா குழு முகாம் தொடர்பாக கேட்டோம். அவர்கள் 5 வெவ்வேறு இடங்களைச் சுட்டிக்காட்டினார். சிறிலங்கா இராணுவ முகாம் தங்களது கிராமத்திலிருந்த போதும் தீவுச்சேனையில் கருணா குழு முகாம் இருக்கிறது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கருணா குழு முகாமுக்கு முன்பாக 300 மீற்றர் தொலைவில் இருந்த சிறிலங்கா இராணுவ நிலை ஒன்றில் 3 சிறிலங்கா இராணுவத்தினர் இருந்தனர். அவர்களிடம் கருணா குழு முகாம் தொடர்பாக கேட்டோம். அவர்கள் அந்த இடத்தின் மூலையைச் சுட்டிக்க்காட்டி அங்கிருப்பதாகத் தெரிவித்தனர்.
அங்கிருந்து சில 100 மீற்றர் தொலைவில் ஆளில்லா சோதனைச் சாவடியை நாம் கடந்தோம். சாலையின் இருபக்கத்திலும் 20 பேர் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் தோற்றத்தில் இருந்தனர். அவர்களில் 5 பேரிடம் ஆயுதங்கள் இருந்தன. அதில் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபர் முழு இராணுவ உபகரணங்களுடன் இருந்தார். திரும்பி வருகையில் கிராமத்தின் இறுதியில் மற்றொரு ஆளில்லா சோதனைச்சாவடி இருப்பதை அவதானித்தோம்.
அந்த இடத்திலிருந்து நாம் வெளியேறிய போது மோட்டார் சைக்கிளில் இருவர் எமது வாகனத்தைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் இருவரும் இராணுவ காற்சட்டைகளை அணிந்திருந்தனர். வாகன எண்: 363990. சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடி அருகே எமது வாகனத்தை நாம் நிறுத்தி இராணுவத்தினரை நாம் அணுகினோம்.
இராணுவத்தினருக்கு அருகில் எமது வாகனம் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அருகாமையில் இருந்த கடைக்குள் சென்றுவிட்டனர். தங்களது சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து நாம் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
கருணா முகாம் எனக் கூறப்படும் இடத்திலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் சிறிலங்கா இராணுவ இலட்சிணை அதன் முன்பக்க கண்ணாடியில் பொறிக்கப்பட்ட நிலையில் மிக வேகமாக கரும் சிவப்பு நிசான் வான் ஒன்று வந்தது. தீவுச்சேனை நோக்கி அந்த வான் செல்லும் நிலையில் இருந்தது. அப்போது காலை 10 மணி.
நாம் கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குத் திரும்பிய போது மாவட்ட தலைவரைத் தொடர்பு கொண்டு நாம் பார்த்தவற்றைத் தெரிவித்தோ. விவரமாகத் தெரிவிக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கைக்குப் பின்னர் கூட்டு நடவடிக்கைகளின் தலைமையக இயக்குநராக இருந்த பிரிகேடியர் மிலிந்த பீரிசுக்கு இது தொடர்பிலான "உண்மை அறியும் குழுவை" அனுப்புமாறு தயா சந்தகிரியும் லெப். ஜெனரல் சாந்த கொட்டேகொடவும் உத்தரவிட்டனர். இந்த விசாரணையை இரகசியமாக நடத்த உத்தரவிட்டிருந்தனர்.
பிரிகேடியர் பீரிஸ் ஏப்ரல் 12 ஆம் நாள் வைஸ் அட்மிரல் தயா சந்தகிரிக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டதற்கான போதுமான தடயங்கள் உள்ளன. இருப்பினும் முகாம் கைவிடப்பட்டுள்ளது.
- அந்த முகாமிலிருந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் போன்ற தோற்றமுடையவர்களாக இருந்தனர் என்று அந்தப் பகுதி மக்கள் உறுதிப்படுத்தினர். அவர்களில் சிலர் ஆயுதங்களையும் வைத்திருந்தனர். இருட்டு நேரங்களிலே அவர்கள் இயங்கி வந்துள்ளனர்.
- இந்த முகாம் இருப்பதாக கண்காணிப்புக் குழுவினர் கண்டறிந்த பின்னர் இரு வெளிநாட்டினர் அங்கு வந்து முகாமை காலி செய்யுமாறு எச்சரித்துள்ளனர்.
- சிறிலங்கா தேசிய பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் இருந்த போதும் முகாமைச் சுற்றிய பகுதிகளில் சுற்றுக்காவலில் ஈடுபடவில்லை.
- சட்டவிரோதமாக மின் இணைப்பு அம்முகாமுக்கு கொடுக்கப்பட்டிருந்தமைக்கான தடயங்கள் உள்ளன. அவர்கள் தாங்களாகவே சமைத்துள்ளதும் தெரிய வருகிறது. இராணுவத்தினரைப் போன்ற சீருடைகள்இ காலணிகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். வலைகளில் அவர்கள் படுத்துள்ளனர்.
- பொதுமக்களின் தகவலின்படி தீவுச்சேனையில் கருணா குழுவினர் அங்கு இருந்துள்ளனர். கருணா குழுவினர் எப்போது முகாமை கைவிட்டனர் என்பது தெரியவில்லை. மார்ச் 21 ஆம் நாளுக்குப் பின்னர் அவர்கள் இந்த முகாமிலிருந்து வெளியேறி இருக்கக் கூடும் என்று தெரிகிறது.
- இராணுவத்துடன் கருணா குழுவினர் சேர்ந்தியங்குவது தொடர்பிலான கருத்துகளை ஒப்புக்கொள்ள முடியாது. அதற்கான தடயங்கள் ஏதும் அங்கு இல்லை.
அதன் பின்னர் பிரிகேடியர் பீரிஸ்இ வாசிங்கடன் தூதரகப் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
லங்காசிறி