| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 483 online users. » 0 Member(s) | 480 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,304
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,293
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,632
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,058
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,461
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,478
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,026
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| சமயல் விஷயங்கள்.. |
|
Posted by: SUNDHAL - 12-26-2005, 09:30 AM - Forum: சமையல்
- Replies (13)
|
 |
* இறாலை சுத்தப்படுத்தி அதனை கூட்டோ, குழம்போ வைப்பதற்கு முன்னால் அதில் தயிரும் உப்பும் கலந்து அரை மணிநேரம் வைத்திருங்கள். அதன் பின்பு கூட்டு வைத்தால் புதிய சுவை கிடைக்கும்.
* மீன் குழம்பு வைப்பதற்கு அரைக்கும் மசாலை ரொம்ப மாவு போல் ஆக்கிவிட வேண்டாம். ஓரளவு துறுதுறுப்பாக இருப்பது நல்லது.
* மீன் வறுப்பதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒரு மணிநேரம் வைத்திருந்து விட்டு பின்பு வறுத்தால் மீனுக்கு அதிக சுவை கிடைக்கும்.
* சூடான எண்ணையில் ஒரு தேக்க ரண்டி மைதா சேர்த்து கிளறிவிட்டு பின்பு மீனைவறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப்பிடிக்காது.
* நெத்தலி மீனை குழம்பு வைக்கும்போது அதில் புளி சேர்ப்பதற்கு பதில் மாங்காய் சேர்த்தால் அதிக ருசி கிடைக்கும்.
* மீன் ஊறுகாய் தயாரிக்க முதலில் மீனை கழுவி, வெட்டி அதில் இருக்கும் தண்ணீரை துடைத் தெடுங்கள். பின்பு அதில் மசாலாவைப் பூசி அரை மணிநேரம் வைத்திருங்கள். அடுத்து அதனை நல் லெண்ணையில் வறுத்தெடுக்கவேண்டும். அதில் மீதம் இருக்கும் எண்ணையையும் வடிகட்டி ஊறுகாயில் சேர்த்துவிடலாம்.
* முட்டைக்கோஸ் மூலம் தயாரிக்கும் எந்த கூட்டி லும் சிறிதளவு இஞ்சி சேருங்கள். சேர்த்தால் முட்டைக் கோசில் இருந்துவரும் பிடிக்காத மணம் போய் விடும்.
* பீன்ஸ் சற்று உலர்ந்த நிலையில் இருந்தால் அதனை ஒரு மணிநேரம் தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். மீண்டும் புதியது போல் ஆகிவிடும்.
* உளுந்துவடைக்கு மாவு அரைக்கும் போது தேவைக்கு தண்ணீர் விடாமல், உப்பு கரைந்த நீரை பயன்படுத்துங்கள். அவ்வாறு செய்தால் வடைக்கு அதிக சுவை கிடைக்கும்.
* காய்ச்சாத பாலில் உறை ஊற்றி வையுங்கள். மறுநாள் கோதுமை மாவில் அதைக்கலக்கி தோசை சுட்டால் கோதுமை தோசை அதிக ருசியாக இருக்கும்.
* மிளகாய்த்தூள் அரைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சில கல் உப்புகளை போட்டு வைத்தால் மிள காய்த்தூள் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
*தேங்காயைத் துருவி அதை கொதித்த நீரில் போட்டுவையுங்கள். கை தாங்கும் அளவுக்குரிய சூட்டில் அதனை பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.
Thanks:Thanthi...
|
|
|
| டிவி சீரியல்கள் எப்படி? |
|
Posted by: Mathan - 12-26-2005, 07:17 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (5)
|
 |
<img src='http://img519.imageshack.us/img519/1492/1235qw.jpg' border='0' alt='user posted image'>
ஒரு பக்கம் குஷ்பு, சுஹாசினி பேச்சு தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டது. ஒருத்தனுக்கு ஒருத்திதான் இந்த மண்ணின் மாண்பு.
உயிரே போனாலும் கற்பு தான் முக்கியம் என்று ஆவேசத் தலைவர்கள் ரோட்டுக்கு வந்து கொடும்பாவி கொளுத்துகிறார்கள். இன்னொருபுறம் ஓசைப்படாமல் நம் படுக்கையறைக்குள்ளேயே கலாச்சாரத்தை கொத்து பரோட்டா போடும் அநியாயத்தை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம்!
தரணி என்கிற பையன் காதலிப்பது பூஜாவை. கல்யாணம் செய்து கொள்வதோ கல்கியை. வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே என்று கவுண்டமணி பாணியில் இன்னமும் தமிழ்நாட்டில் டி.வி. சீரியல்கள் அதிகம் பார்க்காத ஆத்மாவாக நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி. தரணியை பழி வாங்க பூஜா புறப்படுகிறாள். எப்படி? தரணியின் சொந்த சித்தப்பாவையே திருமணம் செய்து கொள்கிறாள். சரி, அத்தோடு இவர்கள் புரட்சி முடிந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை. தரணியிடம் பூஜா சொல்வது... இப்பவும் எனக்கு குழந்தை பிறந்தால் அது உன் மூலமாகத்தான் பிறக்கணும். எப்படியிருக்கு கல்கி தொடரின் மூல முடிச்சு?
கணவருக்காக சீரியலில் இன்னும் விபரீதம்... இன்னும் அபத்தம்... உயிருக்கு உயிரான இரண்டு தோழிகள். நட்புக்காக செய்யும் எத்தனையோ வித தியாகங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒருத்தியின் கணவரை இன்னொருத்தி திருமணம் செய்து கொண்டு தோழிக்கே துரோகம் செய்ய நினைக்கிறாள்.
அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம் டி.வி. சீரியல்களின் கதாசிரியர்கள் பேப்பரை எடுத்து இரண்டு என்ற போட்டு ஆரம்பிப்பது பிள்ளை சுழி என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை அதற்கு அர்த்தம். இரண்டு பெண்டாட்டி சப்ஜெக்ட். எந்த சீரியலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை என்று புருடா விட்டு, இரண்டு பெண்களை நாயகனுடன் சேர்த்து, கூடவே கொடுமைக்கார அத்தையையும் கொண்டு வந்துவிட்டால் வேலை முடிந்தது! ஒரு மகாமகத்திற்கு இழுக்கலாம்_ ஒரு கட்டத்தில் கதாசிரியருக்கே எங்கே ஆரம்பித்தோம் என்று மறந்துபோகும்வரை!
மனைவி சீரியலில் அரசு என்கிற அரசியல்வாதி ஒரு பெண்ணைக் காதலித்து, ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொண்டதும், வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அந்தப் பெண் தன்னம்பிக்கை உள்ளவளாம். போராடுகிற குணமுள்ளவளாம். நீ போடா டுபாக்கூர் என்று வேறொருவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். அவளையும் விடாமல் தொடர்ந்து டார்ச்சர் தருகிறான் அரசு. அப்பவும் ஒரு நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். நடிகை அரசை சைக்கோதனமாக காதலிக்க, இவளை வச்சு பணம் சம்பாதிக்க முடியாது என்கிற ஆதங்கத்தில் அம்மாக்காரியோ இவர்களை பிரிக்க நினைக்கிறாள். அரசு ஆம்பிளையே இல்லை என்று அவள் புது கரடிவிட, என் முதல் மனைவிக்கு பிறந்தது என் குழந்தை என்று அரசு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறான். உடனே நடிகை தன் கணவர் அரசுவின் முதன் மனைவியின் லேட்டஸ்ட் புருஷனிடம் படையெடுத்து இது என் அரசுவுக்கு பிறந்தது. எனக்கே சொந்தம் என்று கூச்சல்போட.. ஐயோ கடவுளே.. வெள்ளைக்காரன்கூட இவ்வளவு முற்போக்காக சிந்திப்பானா என்று பிரிட்டிஷ் கதாசிரியர்களிடம் கேட்க வேண்டும்!
செல்வியில் இரண்டாவது கல்யாணத்திற்காகவே தாமரையை கோமாவில் தள்ளுகிறார்கள். தாமரையின் அப்பாவும், அம்மாவுமே செல்வியின் காலில் விழுந்து நீதான் என் மாப்பிள்ளை ஜி.ஜே.வின் இரண்டாவது மனைவியாக வேண்டும் என்று கதறுகிறார்கள். செல்வி ஒப்புக்கொண்டு மாலை மாற்றிக்கொண்டு ஜி.ஜே.யின் கருவை சுமக்க, இப்போது... தாமரை கோமாவிலிருந்து வழித்தெழ வேண்டாமா? இரண்டு பெண்டாட்டிகள் தவிக்க வேண்டாமா?
அதே சீரியலில் பிரமாண்டமான முதுகுடன், வில்லத்தனம் செய்துகொண்டு பிரச்னைக்கு அலையும் ரஞ்சனி கேரக்டரை பாருங்கள். நல்ல புருஷனை உதாசீனம் செய்துவிட்டு, தவறான உறவில் தாய்மை அடைந்துவிட்டு, அதையும் மறைத்து கணவனோடு உறவாடுகிறாள். இன்னும் மோசம். மாயா கேரக்டர். தன் மனதுக்குப் பிடித்தவனை திருமணத்திற்கு முன்பு ஹோட்டல் ரூமிற்கு அழைக்கும் அளவுக்கு பாரதி காணாத புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்படுகிறாள்.
கோலங்கள் கதையும் என்ன வாழ்கிறது? ஏகப்பட்ட தவறான உறவுகள்... அபி அவளது தங்கைகள் மற்றும் தம்பியும் ஆதித்யாவின் அப்பாவிற்குப் பிறந்தவர்கள். அவர் அபியின் அம்மாவை முதல் தாரமாக மணந்துவிட்டு, பிறகு அவர்களை அம்போ என விட்டுவிட்டு மும்பைக்கு ஓடி ஆதித்யாவின் அம்மா கல்பனாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டவராம். பாதை சீரியலில் மோகன் என்கிற பாத்திரம் வரிசையாக நான்கு பெண்களை ஏமாற்றுகிறது!
இப்படி இவர்களது பண்பாட்டு கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால், ஒருநாள் போதாது. ஒரு குமுதம் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது.
ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டு, மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும்!
முறைகேடான உறவுகள் ஒருபுறமிருக்க, சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கை, இவை எல்லாமே குடும்ப சீரியல்கள் _ மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல்பூர்வமாக காட்டுகிறார்கள். ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? _பிளேடு பக்கிரிகளைத் தவிர! செல்வியில் ரொம்ப நேர்த்தியாக அதைக் காட்டியதோடு, அதை எதில் மறைத்து எடுத்துவரவேண்டும் என்கிற அளவுக்கு தெளிவாக, தமிழ் பேசும் மக்களுக்குப் பாடம் எடுத்தார்கள். மனைவி சீரியலில் தன் கணவர் அரசுவை உடனே பார்க்க வேண்டும் என்கிற வெறியில், சைக்கோதனமான நடிகை, பாத்ரூமிற்கு சென்று பொறுமையாக பிளேடால் கையைக் கீறிக்கொள்கிறாள். நம் உடம்பு சிலிர்க்கிறது. ரத்தம் குபு குபுவென்று கொட்ட, வாஷ்பேசின் முழுக்க ரத்தத் தண்ணீர்!
இப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும், முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமா? இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா? இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது? சமூக அக்கறையுள்ள எத்தனையோ பெற்றோர்கள் இப்படி நிறைய கேள்விகளுடன் கவலையோடு பார்க்கிறார்கள்.
அவர்கள் ஆதங்கம் நியாயமானது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற தைரியம் கொடுக்கும் சீரியல்கள் பலரது, குறிப்பாக பெண்களது மனதை நிச்சயமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீரியல் பெண்களோடு வாழ ஆரம்பித்துவிட்டார்கள். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று, தன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் ஒரு செய்தி. சீரியல்தான் எனக்கு அந்த துணிச்சலைக் கொடுத்தது என்கிறார் படு காஷ§வலாக. நமது கலாசாரத்தில் ஊறிப்போன விருந்தோம்பலுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் வேட்டு வைத்துவிட்டன. எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரும் விருந்தாளியும், சீரியல் நேரத்தில் வந்தால் அவர் வேண்டாத விருந்தாளியாக நெஞ்சு முழுக்க எரிச்சலுடன் வரவேற்கப்படுகிறார். அவ்வளவு ஏன், பல வீடுகளில் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் கணவன், மனைவியோடு மனம் விட்டு பேசிக்கொள்வதுகூட முடியாமல் போகிறது. பல தாய்மார்களுக்கு குழந்தைகள் படிப்பைக் கவனிப்பதுகூட இரண்டாம்பட்சமாகி விடுகிறது.
சீரியல் பிசாசுகளையும், அதனால் ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தைப் பற்றியும் சீரியஸாக ஆராய வேண்டிய நேரம் இது! இந்த விபரீதப் போக்கு சீக்கிரமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!
குமுதம்
|
|
|
| கிரிக்கெட் திருமதிகள் |
|
Posted by: Mathan - 12-26-2005, 06:45 AM - Forum: விளையாட்டு
- Replies (3)
|
 |
<img src='http://img246.imageshack.us/img246/7580/pg5t0ya.jpg' border='0' alt='user posted image'>
இந்த முறை இந்தியா வந்திருக்கும் இலங்கை அணி வீரர்கள் ஏதோ பிக்னிக் வந்தவர்கள் போல் மிக ஜாலியாக இருக்கிறார்கள்! பலர் தங்கள் மனைவிகளுடன் வந்திருந்தார்கள்.
உலகில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத ரெக்கார்ட் எனக்கு இருக்கிறது தெரியுமா? என்று நம்மை கேட்டார் சமந்தா வாஸ். நன்றாகத் தமிழ் பேசுகிறார்.
என்னைப் போல் பெரிய பெயர் கொண்ட வீரர் உலகில் யாருமே இல்லை தெரியுமா? என்று தன் கேள்விக்கு பதில் சொன்ன வாஸ், தன் பெயரைச் சொன்னார். அவர் பெயரைச் சொல்லி முடிப்பதற்குள், ஒரு குட்டித் தூக்கமே போட்டுவிடலாம். அவரது முழுப்பெயர்: வர்ணகுல சூரிய பதவெண்டிகெ உஷண்ந்த ஜோசப் சமந்தா வாஸ்.
அப்பாடா! யாராவது உங்களை முழுப்பெயர் சொல்லி கூப்பிட்டிருக்கிறார்களா? என்று கேட்டால், சிரிக்கிறார்.
பத்திரிகையாளர்கள் என்னை வாஸ் என்கிறார்கள். கிரிக்கெட் அணி நண்பர்களுக்கு நான் சமந்தா. என் பால்ய நண்பர்களுக்கு ஜோசப்.
சென்னையில் எம்.ஆர்.எஃப். பேஸ் பவுண்டேஷனில் பயிற்சி பெற்றதால், தமிழ் தங்கு தடையின்றி வருகிறது. பயிற்சி கொடுத்தவர்கள் டென்னிஸ் லில்லியும், டி.ஏ.சேகரும் _ இருவரைப் பற்றி பேசும்போதும் குரலில் குரு மரியாதை வந்துவிடுகிறது.
இந்தியா பிடித்திருக்கிறதா?
ரொம்ப. நான் அடிக்கடி சென்னை வந்து போயிருப்பதால், சென்னை எனக்கு இன்னொரு வீடுபோல் ஆகிவிட்டது. பொதுவாய், கிரிக்கெட் பயணங்களின்போது குடும்பத்தை அழைத்துக்கொண்டு போகமாட்டேன். பக்கத்துநாடு என்பதால், குடும்பத்துடன் கிளம்பிவிட்டோம். ஷாப்பிங் செய்து அவர்களுக்கு பொழுதுபோகிறது என்று உற்சாகமாய்ச் சொல்கிறார்; பர்ஸிலுள்ள பணம் போவதைப் பற்றி கவலைப்படாமல்.
தனது இளம் மனைவி எஹாலியுடன் வந்திருக்கிறார் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்ககாரா. ஹோட்டல் வளாகத்தில் தன் மனைவியின் கழுத்துக்கேற்ற மணிமாலையைத் தேடிக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.
கல்யாணமாகி ரெண்டு வருஷமாயிடுச்சு. ஆனால் மனைவியோடு நேரத்தைச் செலவழிக்க இயலவில்லை. முழுநேரமும் கிரிக்கெட்டே ஆக்கிரமித்துவிட்டது. அதனால், இந்த முறை மனைவியையும் அழைத்து வந்துவிட்டேன் என்று சொல்ல, திருமதி. சங்ககாரா முகத்தில் வெட்கச் சிரிப்பு.
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில் இடம்பெற்றுவிட்டார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் உலக அணிக்கு இவர்தான் விக்கெட் கீப்பர்.
ரொம்பப் பெருமையாக இருந்துச்சு. விக்கெட் கீப்பராய் நான் சிறப்பா செய்வதற்குக் காரணம், முத்தையா முரளிதரன்தான். அவர் போடும் பந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய் இருக்கும். அந்தப் பந்துகளைப் பிடித்துப் பிடித்துப் பழகி நல்ல அனுபவம் கிடைத்துவிட்டது.
நீங்கள்தான் இலங்கை அணியின் அடுத்த காப்டன் என்கிறார்களே?
நானா? (பலமாக சிரிக்கிறார்)
நல்லதையே நினைப்போம். வேறொன்றையும் நான் சொல்லப் போவதில்லை என்று சொல்லும் சங்ககாராவுக்கு, டேவிட்கோவரின் ஆட்ட ஸ்டைலும், ஸ்டீவ் வாக்கின் தன்னம்பிக்கையான மனமும் மிகவும் பிடிக்குமாம்.
இலங்கையின் சிறந்த ஆல்ரவுண்டர் தில்ஷனும் மனைவியுடன் வந்திருந்தார். அவர் மனைவிக்கு சென்னையில் துணிகள் வாங்குவது என்றால், மிகவும் பிரியமாம். தி.நகரிலுள்ள எல்லா ஜவுளிக் கடைகளுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டார்.
எனக்கும் உடைகள் மீது ஆசை அதிகம். விதவிதமா டிரஸ் வாங்கிப் போடுவேன். என் மனைவிக்குப் பட்டுப் புடவைகள்னா ரொம்பப் பிடிக்கும். ஷாப்பிங் செய்ய உலகிலேயே சென்னைதான் சிறந்த இடம் என்று சென்னை கடைக்காரர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்குகிறார் தில்ஷன். தமிழ் சரளமாக வருகிறது.
எங்கள் ஊரில் எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அப்படியே கத்துக்கிட்டேன்.
அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் மேன் ஆஃப் தி மேட்ச் ஆனதை, பெருமையான இந்திய நினைவாக சொல்கிறார். இரண்டு வருடங்கள் அணியில் இல்லாமல் இருந்ததை வருத்தத்துடன் கூறுகிறார்.
சரியா விளையாடாததால ரெண்டு வருஷம் டீம்ல செலக்ட் ஆகலை. ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அப்புறம் நல்லா விளையாடி டீம்ல சேர்ந்துட்டேன். அந்த இடத்தை தக்க வச்சிக்கணும் என்று சொல்லும் அவர் குரலில், ஓர் உறுதி தெரிகிறது.
இந்த கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்தபோது, ஒரு விஷயம் புரிந்தது. இவர்கள் கிரிக்கெட் விளையாட மட்டும் வரவில்லை.
kumudam
|
|
|
| மகிந்தாவுக்கு கனேடிய மாணவர் சம்மேளனம் கடிதம்... |
|
Posted by: Rasikai - 12-26-2005, 04:56 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
<b>யாழ். பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவத்தை உடன் அகற்றுக - மகிந்தவிற்கு கனடிய மாணவர் சம்மேளனம் கடிதம் </b>
சிறீலங்கா இராணுவத்தை யாழ். பல்கலைக்கழக சுழலில் இருந்து உடன் அகற்றுமாறு கோரி சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு, கனடிய மாணவர் சம்மேளனத்தின் சார்பில், அதன் ஒன்ராரியோ மாநில பிரதிநிதி அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஒன்ராரியோ மாநிலத்தின் இரண்டு லட்சத்து ஜம்பது ஆயிரம் மாணவர்களை பிரிதித்துவப்படுத்தும் பிரதிநிதி, ஜெசி கிரேனார் என்பவரே இக்கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளாhர்.
கனேடிய தலைமை அமைச்சர் போல் மாட்டின், மற்றும் நோர்வே தலைமை அமைச்சர் ஜேன்ஸ் ஸ்ரொட்ல்ன்பேர்க் ஆகியோருக்கும் நகல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ.; பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், அதிகாரிகள் மீது ஒரு அமைதியான போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த எமது கரிசனையை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;. மேலும் யாழ் மாணவர் அலுவலகங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இராணுவக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.
கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவது அடிப்படை மனித உரிமை. மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்பதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில், யாழ். பல்கலைக்கழக சு10ழலை விட்டு இராணுவத்தை உடன் அகற்றுவது மட்டுமன்றி, கல்வி கற்றலுக்கான மாணவர்களின் அனைத்து தேவைகளையும் உடன் பூர்த்தி செய்யுமாறும் உங்களை வேண்டுகின்றோம். பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களைக் கொண்ட வவுனியா பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பல்வேறு தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
வடபகுதி மாணவர்கள் மீது தொடரும் வன்முறைகள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானால், அதன்பால் அனைதுலக கவனம் திருப்பப்பட வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நான்கு ஆண்டுகளிற்கு முன்னரும் யாழ். பல்கலைக்கழக சமுகத்தின் மீது தொடுக்கப்பட்ட இராணுவ நெருக்குவாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் 'நெருக்குவாரங்கள் தணிந்து புரிந்துணர்வு வரும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு தற்போது வரும் செய்திகள் ஏமாற்றம் அளிப்பதாகவும், இது குறித்து உங்கள் அரசின் கண்டனத்தையும், வன்முறைகளை நிறுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் வேண்டி நிற்கின்றோம்", எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய மாணவர் சம்மேளனம், கனடாவில் உள்ள மாணவர்கள் அனைவரையும் அதன் 10 மாநிலங்களிலும் பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு அமைப்பு என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
நன்றி http://www.eelatamil.net/sankathi/index.ph...d=885&Itemid=26
|
|
|
| உலகமெங்கும் அஞ்சலி! |
|
Posted by: hari - 12-26-2005, 03:25 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
உலகமெங்கும் அஞ்சலி!
உலகமெங்கும் அஞ்சலி! உறவினர்க்கு அஞ்சலி!
ஒருவருடம் ஆனபின்பும் உறங்கிடாத அஞ்சலி!
அலையெழுந்து பொங்கியே அழிவுதந்த நாட்களை
அழுதகண் சிவக்க நாம், நினைவுகூரும் அஞ்சலி!!
ஆழிகொண்ட வேட்கையும் ஆடிநின்ற வேட்டையும்
அல்லலுற்ற கொடுமையும் அதிரவைத்த வெறுமையும்
ஊழிக்காற்று போல்,கடல் ஊரைமேய்ந்த காட்சியும்
உள(ம்)நடுங்க எண்ணி நாம், உருகுகின்ற அஞ்சலி!
மனையிழந்த கணவரும் துணையிழந்த மாதரும்
மறுகிநின்ற துயர்தனை மனதிலேந்தும் அஞ்சலி!
வினையிழந்த பிறவியாய் வேதனைக்குள் வாடியோர்
விழிநனைந்த ஞாபகம் விரிந்துதோன்றும் அஞ்சலி!
ஆண்டுஒன்று ஆயினும், நேற்றுபோலத் தோன்றுதே..
ஆழிசெய்த தாண்டவம் அகலவில்லை நினைவிலே..
வேண்டுகின்ற பொழுதெலாம் அமைதியான அழுகையே..
விழிசுரந்த நிலையிலே யாம்நடத்தும் தொழுகையே..
மறைந்துவிட்ட போதிலும் மறந்துகொள்ள முடியுமோ?
மாபெரும் இழப்புதான் மனதைவிட்டு மறையுமோ?
மறைந்த தமிழ்ச் சோதரர், நமது ரத்தம் அல்லவோ?
மாசிலாத உயிர்ப்பலி கொடியசோகம் அல்லவோ?
இயற்கைகொண்ட சீற்றமென்(று) இலக்கியங்கள் கூறினும்,
இழந்துநாங்கள் நிற்ப(து) எம் உறவுச்செல்வம் அல்லவோ?
இரக்கமற்ற இதயமோ இயற்கைபெற்ற(து) என்பதோ!
இயக்கமற்றுச் சோர்ந்த(து) எம் இனியகுலம் அல்லவோ?..
கத்துகடல் பேரலை தந்தகாயம் ஆறலை:
கலங்கிநின்ற உயிர்களுக்(கு) ஆறுதலும் வேறிலை:
இத்தருணம் அவர்களுக்(கு) யாம்செலுத்தும் அஞ்சலி
எத்தனைநாள் ஒத்தடம் என்றுகூடத் தெரியலை
சென்றுவிட்ட உறவுகாள்! சென்றதெங்கு? சொல்மினோ!
திரும்பிவருவ(து) எந்தநாள்? காத்திருப்போம், அறிமினோ!
ஒன்றுபட்ட தமிழினம் வழங்குகின்ற அஞ்சலி!
உலகமெங்கும் அஞ்சலி! உங்களுக்(கு)எம் அஞ்சலி!!
<b>தொ. சூசைமிக்கேல்</b> ( tsmina2000@yahoo.com )
<img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| நாள்குறிப்பேட்டில் இன்று.... |
|
Posted by: Vishnu - 12-25-2005, 10:13 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (8)
|
 |
இன்று குளிர் சற்று அதிகமாக
இருந்தது..
குளிர் மட்டுமா
சினோ வேற என்னை மூட
வேலைல கவனமா இருந்தன்..
இந்த வேலையாவது நிரந்தரமாகணும்
அப்ப தான் ஒரு பிரச்சனையாவது
தீரும்..
கை நல்லா விறைக்கதொடங்கீட்டுது
பக்கத்தை பார்த்தன்
வேற்று நாட்டு நண்பனும் என்னைபோலத்தான்
வேலை ல கவனமா இருதான்
பாவம் அவனுக்கும் என்ன கஸ்டமோ..
சின்னல்ல இருக்கும் போது..
அம்மா காலைல தோட்டதுக்கு போகும் போது
என்னை கூட்டி கொண்டே போறதில்லை
பனி தலைல படுமெண்டு
மனுசிக்கு அப்படி ஒரு பாசம் என்னில..
இனிக்கு நான் இப்படி வேலை செய்க்கிறதை
பார்த்தால் மனுசி என்ன கஸ்டப்படும்..
வீட்டு நினைப்பு வந்தவுடன
எனக்கு கைவிறைக்க வில்லை...
அம்மா வீட்டு கஸ்டத்தை நினைக்காமல்
கடைசி காலத்திலயாவது
சந்தோசமா இருக்கவேணும்...
அக்காவின் பிள்ளையாவது மண்ணில
தவழுற நிலை வரகூடாது...
தங்கையெண்டாலும் வேலைக்கு போகமல்
விரும்பினபடி படிக்கணும்...
வெளிநாடு என்று அடகுவைச்ச
எங்கட காணியை மீட்க வேணும்...
நினைக்கும் போது...
எனக்கு வேலை கஸ்டமா இருக்கவில்லை
கையும் விறைக்கேல்ல
நினைப்பில இருந்தது..
வேலைநேரம் முடிஞ்சதை கவனிக்கல
நண்பன் தான் நினைவு படுத்தினான்..
ஏணி ஈரமா இருந்தது
மழை தானே
குளிர் வேற.. கவனமா இறங்கினன்..
" இங்க வந்த பிறகு கொஞ்ச காலத்திலேயே
இவளவு உச்சத்துக்கு வந்திட்டன் "
என்னை போலவே அமைதியில் இருந்த நண்பனை
சிரிக்கவைக்க சொன்னன்..
அவனுக்கு புரியலயோ
இல்ல மனசு சரியில்லையே அதிகம் சிரிக்கல...
அவன்கிட்ட விடைபெற்றுக்கொண்டு
வெளில வந்தன்...
இனிக்கு வெதர் சரி இல்ல
நல்லா இருண்டு இருந்தது...
காரை எடுத்து கொண்டு ரோட்டுக்கு வந்தன்
கார் ஒண்டுமே ஓடவில்லை
எல்லாரும் ஒரே நேரத்தில காரில
வீட்டை போனால்
எப்படித்தான் கார் ஓடும்...
மனசுக்கு இதமா
ஒரு பழைய பாட்டை சுழல விட்டன்...
என்ன மாட மாளிகை இங்க இருந்தாலும்
இந்த பழசு தான்
எண்ட மனுசுக்கு இதமா இருதிச்சு...
எண்ட பழமைவாதத்தை மற்றவை கேட்ட கூடாதே
யன்னை இறுக்க மூடினன்...
காரை ஒருக்கால் உறுமினன்...
அது ஒண்டுமில்லை
பாட்டில என்னை மறந்து
பழைய நண்பர்களோட ஊர் சுத்தின
நினைப்பில எண்ட இளமை துடிப்பை
கார்ல காட்டி போட்டன்...
இப்பவும் எனக்கு இளமைதுடிப்பு
இருக்குத்தான்...
ஆனால் இன் வறுமை கஸ்டங்களுக்கை
புதைஞ்சு இருக்கு...
இப்படி எனக்குள்ளேயே வாதம் பண்ணி கொண்டு
வீட்டை நெருங்க இருண்டு போச்சு...
போகும் போதும் இப்படித்தானே இருந்தது...
ம்ம்..... நாளைக்கு போகும் போதும்
இப்படித்தான் இருக்கும்...
பிளாட்டுக்குள்ள வந்தன்
யாரையுமே காணல...
ஊர்ல என்றால்
ஊரே ஒரு குடும்பம் மாதிரி தானே...
இங்க பக்கத்து விட்டில இருக்கிறவனை
பத்து மாதமா பாக்கேலாது...
ம்ம்ம்... இதுதானே
நாகரீகமான வாழ்க்கையாம்...
மனசுக்குள்ள அலட்டி கொண்டு
வீட்டு கதவை திறந்தன்...
வீடு இருட்ட இருந்தது
நான் என்ன சம்சாரியா
வீட்டை வர மனுசி சிரிச்ச முகத்தோட
என்ன வரவேற்க..
எனக்கு ஆசை இல்லாமல் இல்லை
ஆனால் எண்ட நிலமைக்கு
ஒரு பத்து வருசத்துக்கு
வீடு இருட்டா இருந்தாலும் பறவாய் இல்லை
இப்படியே இருந்தால் தான்
வீட்டு கஸ்டத்தை சரிப்படுத்தி
அதுகளிண்ட முகத்தில
ஒரு சிரிப்பை பார்க்கலாம்...
லைட்டை போட்டன்...
நிறைய கடிதங்கள் வாசலில்
விழுந்து கிடந்தது...
எல்லாம் ஒஃபீஸ் கடிதங்கள் தான்...
இவங்களுக்கு என்ன வேலை
சப்பாத்தாலேயே கடிதங்களை ஒதுக்கினன்...
அட... சிவப்பு நீல கரையோட ஒரு கடிதம்...
குனிஞ்சு எடுத்தன்..
எண்ட செல்லத்தின்ட கையெழுத்து...
ஏனோ மனசில ஏதோ
சொல்ல முடியாத உணர்வு...
கடிதாசியை படிக்க ஆரம்பிச்சன்...
செல்லத்திண்ட எழுத்தை பார்க்கவே
எனக்கு கண் கலங்கீட்டுது....
வரும் போது சின்னனா இருந்தவள்..
இப்பவும் தோள்ல
தொங்கின நினைப்புத்தான் வருது...
இப்ப பெரிய மனுசி ஆகி இருப்பள்
கடிதாசி எழுத்திலேயே
அவள் முகத்தை பார்த்தபடி
வாசிக்க ஆரம்பிச்சன்...
அன்பு அண்ணா...
எப்படி இருக்கிற..
நான் அம்மா அக்கா அத்தான்
எல்லோருமே நலம்.
அக்காக்கு த்தான் இப்ப ஏலாது
வேலைக்கு போறது இல்லை...
மாதம் நெருங்குது தானே...
அதுதான் அக்கா அடம்பிடிச்சும்
அம்மா பேசி மறிச்சுப்போட்டா..
அத்தான் அடிக்கடி வாறவர்....
அத்தானை பிழை சொல்லமுடியாது அண்ணா..
அவர் நல்லவர்..
அவர்ட அம்மாதான்
பாவம் அவரும் என்ன செய்வார்...
ரண்டு பக்கத்தையும் சமாளிக்கிறார்...
நீ அனுப்பின காசில
ஒரு சைக்கிள் எடுத்தனான் அண்ணா..
உன் கிட்ட சைக்கிள் கேட்டதுக்கு
அம்மா என்னை பேசினவா...
அம்மா இப்பவும் சாப்பிடும் போது
உன் கதை கதைப்பா....
கடைசியா கண் கலங்கிடும்..
அத்தான் இருந்தால்
வேறு கதையை மாத்தி
அம்மவை சிரிக்க வைப்பார்...
அப்புறம் அண்ணா...
வானதி அக்கா லீவில வந்து நிற்கும் போது
வீட்டை வந்தவா...
அம்மாக்கு பெருசா பிடிக்கல..
இருந்தாலும் சாப்பிட்டு போக சொல்லி கேட்க..
இதுதான் சாட்டு என்று சாப்பிட்டு தான் போனவா..
என்கிட்ட தனியா வந்து உன்னை பற்றி கேட்டவா..
நீ கடைசியா அனுப்பின போட்டோவை
அம்மாக்கு தெரியாமல் எடுத்து கொண்டு போனவா..
சொன்னால் உனக்கு பிடிக்குமோ தெரியல..
அவாவின் கொஸ்டல் விலாசத்துக்கு
ஒரு கடிதம் போடேன்..
வேறு என்ன அண்ணா
நீ சுகமா இருக்கணும் என்று
கும்பிடுறன் அண்ணா...
இப்படிக்கு அன்பு தங்கை
கடிதத்தை வாசிக்க
ஊர் நிழல் தான் என் முன்னால ஆடிச்சுது...
மனசு கனத்து போச்சு
ஒண்டும் செய்யவும் மனம் வரல...
குசினிக்கு போய் பிரிஜை திறந்து
நேற்றையான் புட்டை சூடாக்கி
பசியை குறைத்துக்கொண்டன்...
பசி மட்டும் தான் குறைஞ்சுது..
ஆயிரம் மனிதருடன் கூட நடப்பினும்
இந்த தனிமை குறையவில்லை...
வாகன இரைச்சல் மட்டும் தான்
மனித நிசப்தம் குறைய வில்லை...
எனக்காக உருகிப்போகும்
என் தாய் மீது கொண்ட பாசம் குறையவில்லை...
எப்போதும் சிட்டாய் பறக்கும்
என் தங்கையின் பேச்சொலி காதுகளில் குறையவில்லை..
எப்போதும் சோகமாக
என் சகோதரியின் கண்ணீர் குறையவில்லை...
எப்போ எங்கோ கண்ணால் பேசிய
என் காதலியின் காதல் குறையவில்லை...
பலவிதமான போராட்டங்களுடன்
சோபாவில் சரிந்தேன்..
மீண்டும் எலாரம் அடிக்கும் வரை...
( முற்றும்)
|
|
|
| வீதியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை கண்கள் கட்டிய |
|
Posted by: suddykgirl - 12-25-2005, 08:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
வீதியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை கண்கள் கட்டிய நிலையில் கடத்திச் சென்ற படையினர்
(திங்கட்கிழமைஇ 26 டிசெம்பர் 2005 ) (ஞானேஸ்வரன் )
பெருங்குளம் சந்தியில் கடந்த வெள்ளியன்று மதியம் இரண்டு மணியளவில் உந்துருளி ஒன்றில் வந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை படையினர் பவள் கவச வாகனத்தில் கண்களையும், கால் களையும் கறுப்புப்பட்டிகளால் கட்டி இனம் தெரியாத முகாம் ஒன்றிற்கு கடத்திச் செல்லப்பட்டதாக தெரியவருகிறது சம்பவ இடத்தில் நின்றிருந்த பொதுமக்களால் இச்சம்பவம் அவதானிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் உறவினருக்கும் இச்சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதை தொடந்து பெற்றோர் உறவினர்கள் முகாமை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இவ்இளைஞர்கள் மூவரும் பவள் கவச வாகனத்தில் கொண்டுவரப்பட்டதாக தெரியவருகிறது. பவள் கவச வாகனத்தில் கடத்தப்பட்ட இளைஞர்களின் கண்களை கட்டியபடியே தலைகீழாக து}க்கி நீண்டது}ரம் கொண்;டு செல்லப்பட்டு முகாம் ஒன்றில் இறக்கப்பட்டு நன்கு தமிழ் தெரிந்த ஒருவர் இவ் இளைஞர்கள் மீது விசாரணை மேற்கொண்டதாகவும் பின்னர் அதேபவள் கவச வாகனத்தில் இவர்கள் து}க்கி ஏறியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது இச்சம்பவம் குறித்து உடனடியாக போர் நிறுத்தகண்காணிப்பு குழுவிடமும் யாழ் மனித உரிமை ஆணைக் குழுவிடமும் முறையிட்டதாக தெரியவருகிறது.
நன்றி
நிதர்சனம் (சுட்டது)
:twisted: :evil: :twisted: :evil:
|
|
|
| யாழ். சடலங்கள் எழுப்பும் கேள்விகள் |
|
Posted by: வினித் - 12-25-2005, 06:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>யாழ். சடலங்கள் எழுப்பும் கேள்விகள் </span>
[ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2005, 22:23 ஈழம்] [ம.சேரமான்]
<b>யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மீதான தாக்குதலை நடத்திய 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் உடலை யாழ். மருத்துவமனையில் சேர்ப்பித்திருப்பதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.</b>
4 பேர் உயிரிழந்துள்ளது உறுதியானதாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் தாக்குதலை நடத்தியவர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உயிரிழந்த 4 பேரில் இருவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லுரியின் வாட்சேமன் கிருஸ்ணர் விமலேஸ்வரன் (வயது 31), யாழ். கொட்டடியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் வைத்திருந்த பாலசிங்கம் சந்திரகாந்தன்(வயது 24) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
<b>இந்த சம்பவத்தில் உயிரிழந்த கிருஸ்ணர் விமலேஸ்வரனின் உடல் கல்லுரிக்குள் கிடந்ததகாவும் அதை இராணுவத்தினரே வெளியில் எடுத்து வந்து தாக்குதல் நடந்த இடத்தில் கிடத்தியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கிருஸ்ணர் விமலேசுவரன் தனது கடமையைச் செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகாமையில் கல்லுரிக்கு உள்பகுதியில் பெருமளவிலான இரத்தம் சிதறிக் கிடப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்</b>.
ஊர்க்காவற்றுறை வேலனையிலிருந்து இடம்பெயர்ந்து மணிப்பாயில் வசித்து வந்தவர் பாலசிங்கம் சந்திரகாந்தன்.
அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மல்லாகம் பதில் நீதிபதி சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் சந்திரகாந்தனின் உடலை அடையாளம் காட்டினர்.
<b>துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களுடன் உள்ள ஒரு பெண்ணின் உடலும் இந்த தாக்குதலில் பலியானோர் அல்லது தாக்குதலை நடத்தியவர் என்ற கணக்கில் இராணுவத்தினர் வைத்துள்ளனர்.</b>
ஆனால் அந்த பெண்ணின் உடலில் வழமையான அவரது உடையுடன் அவரை விடுதலைப் புலி போராளி என்று காட்டுவதற்கான உடை ஒன்றையும் இராணுவத்தினர் இணைத்துள்ளனர்.
<b>மேலும் இருதரப்புத் துப்பாக்கிச் சண்டை முடிந்த பின்னர் 20 அல்லது 30 நிமிடத்துக்குப் பிறகு சம்பவ இடத்தில் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.</b>
சந்தேகத்தின் பேரில் இதர பகுதிகளில் கைது செய்யப்பட்டோரை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து இராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
<span style='font-size:30pt;line-height:100%'>யாழ். தாக்குதலை நடத்திய பொங்கியெழும் மக்கள் படையும் தாக்குதலை நடத்திய இருவரும் பத்திரமாக திரும்பிவிட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</span>
¿ýÈ¢: Ò¾¢Éõ.¦¸¡õ
|
|
|
| அகதியாய் |
|
Posted by: suddykgirl - 12-25-2005, 05:44 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (2)
|
 |
அகதியாய்
வானத்தை அண்ணாந்து பார்த்தவாறு அம்மா வாசலில் நின்றாள். என்னவோ அம்மாவுக்குள் புகுந்து தன்னைப் பயப்படுத்துவதாக உணர்ந்தவளாய்இ அன்றைய நாளின் இரவு. சிலவேளை நிம்மதியற்றதாக இருக்குமோ என நினைத்து வெள்ளியையும் காணோம் இண்டைக்கும் மழைதானோ தெரியேல்லை என மனதில் நினைத்தவளாய் வசலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஒளியற்ற ஊருக்குள் எங்கெங்கோ தொலைவொன்றிற்காக மின்னிப் ப10ச்சிகளாய் விளங்குகள் தெரிந்தன. அந்த இருளுக்குள்ளும் ஓர் உருவம் வருவதை அம்மா உணர்ந்தவளாய் இருக்க அடக்க முடியாத இருமலுக்குள் ஒருமனிதன் அந்தச் சிறிய குடிசையை அண்டி வந்தவரைப் பார்த்து மிக இளகிய மனித நேயத்துடனும் அன்பான வார்த்தைகளுடனும்.
'வாங்கோப்பா என்ன இன்டைக்கு கன நேரமாச்சு"
'ஓமப்பா இண்டைக்கு முதலாளி வரநேரமாச்சுது. காசும் வாங்காம வரேலாது அதுதான் அவர் வரமட்டும் பாத்திருந்து காசு வாங்கி கடைக்கும் போய் சாமானை வாங்கிட்டு வாறான்"
கணவனிடமிருந்து கடைச்சாமன்களை வாங்கியதும் வேகவேகமாக சமையலில் ஈடுபட்டாள் அம்மா. அதற்கிடையில் மூத்தவனின் சிணுங்கல் குரல் இருவரின் காதிலும் கேட்கவே செய்தது!
'அம்மா பசிக்குது.....அம்மா பசிக்குது..."
'தம்பி சத்தம் போடாமல் படு இப்ப அம்மா சமைச்சுத் தந்திடுவா"
'இவன் கடும் மோசம் கத்திக்கத்தியே சின்னதுகளையும் எழுப்பி விட்டிருவான். இப்ப சாப்பிடலாம் சத்தம் போடாமல்படு. கொஞ்சம் பொறப்பு என்ர செல்லமல்லே" என்றாள் அம்மா. மூத்தவன் பசியோடேபடுத்து நித்திரையானான்.
அம்மா சமையலைத் தொடர கந்தர் ஏதோ யோசனையில் மூழ்கியவராய் வாசலில் அமர்ந்திருந்தாள்..
'என்னப்பா யோசிக்கிறியள்"
'வானமும் இருண்டு கிடக்குது. இண்டைக்கும் மழை வந்தால் என்ன செய்யப் போகிறோமோ தெரியாது."
'என்னத்தச் செய்யிறது. வழமைபோல பக்கத்திலூர் கோயில்ல போய் இருந்திட்டு மழை விட்டா வாறது தானே. இதற்கு ஏன் கவலை. கவலை தோய்ந்த மனதோடு அம்மா சொன்னா.
'என்றைக்குத் தான் இந்தப் பிரச்சினை தீர்ந்து சந்தோசமா இருக்கப்போறோமோ இந்தத் துலைவான்கள் ஏன் எங்கட நிலத்தில வந்து நிக்கிறானுகள்! அவன் அவரன் ஊருக்குப் போனால் அவனும் சுகமாக இருக்கலாம். நாமும் சந்தோசமாக இருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருந்தார்"
'ஏனப்பா சும்மா புலம்பிறியள். ஏதோ எங்கட தலைவிதி தமிழனாப் பிறந்தா இப்படித்தான் வாழ வேண்டும் என்று எழுதியிருந்தா அத யாரால மாத்த முடியும். ஏதோ எங்கட பொடியளும் இயலுமாப்போல போராடிப் பாக்கிறாங்கள். எப்படியும் இன்னும் கொஞ்சநாளில சரியா வந்திடும் போலகிடக்கு. அப்படிப் பிரச்சினை சரியா வந்திட்டா எல்லாரும் எங்கட ஊர்சனத்தோட போயிடலாம்" என்றவாறே அம்மா எழுப்பி வந்தாள்.
எழும்பி வந்தவள் பிள்ளைகள் நான்கையும் எழுப்பிச் சாப்பாடு கொடுத்தாள்.
'நீங்களும் போய் கால் முகத்தைக் கழுவிற்று வாங்கோவன் சாப்பிடுவம் என்றாள்"
கந்தர் எழும்பிச் செல்லவும் குழந்தைகள் நச்சரிக்கவும் சரியாய் இருந்தது.
'ஏனம்மா இண்டைக்குச் சாப்பிடச் சுணங்கிப் போச்சு இது மூத்தவன். ஏனம்மா அப்பா இண்டைக்கு வரச் சுணங்கினவர். அப்பா வராமல் விட்டிருந்தால் இண்டைக்கு எங்களுக்குச் சாப்பாடு இல்லையோ" இது இரண்டாமவன்.
அம்மா இப்படி எத்தனை நாளைக்குத்தான் பசியும் பட்டினியுமாய்க் கிடக்கிறது. கொட்டிலிலும் ஒரே ஒழுக்காய் இருக்கு. ஏனம்மா எங்கட ஊருக்குப் போன எங்கட வீட்டில இருக்கலாம் தானே" இது மூன்றாமவன்.
எல்லாவற்றுக்கும் காதைக் கொடுத்தவள் அதற்கு விடை தெரிந்தும் தெரியாதவளாய் இப்ப ஒன்றும் என்னட்டக் கேட்க வேண்டாம். அப்பா வந்திடுவார் வேகமாகச் சாப்பிடுங்கோ" என்றவாறே தன் கடைக்குட்டி நிலாவிற்கு சோற்றை ஊட்டிக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு குழந்தைகளைச் சாப்பிடச் செய்து படுக்க வைத்து விட்டு தன் கணவனுக்குச் சாப்பாட்டைக் கொடுத்தாள்.
'தங்கம் உனக்குச் சாப்பாடு கிடக்கோ நீயும் சாப்பிடு" எனக்குச் சாப்பாடு கிடைக்குதப்பா உழைக்கிற மனுசன் நீங்கள் தான் நல்லாச் சாப்பிட வேண்டும்"
அதுக்காக நீங்கள் சாப்பிடாமல் கிடக்கிறதோ. சாப்பிட்டாத்தானப்பா பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாக்கலாம். கொஞ்ச மெண்டாலும் இரண்டு பேரும் பிரிச்சுச் சாப்பிடுவம் அதுதான் சந்தோசம்"
இருந்த சாப்பாட்டை இருவருமாகப் பகிர்ந்து சாப்பிட்ட போது இரவு 11.00 மணி ஆகிவிட்டிருந்தது. இருவரும் படுக்கச் சென்றபோது மழையும் தூறத் தொடங்கியது.
'தங்கம் பிள்ளைகளை எழுப்பிவிடு மழை பெரிசாகிறதற்கு முன் கோயிலுக்குப்போவம்" என்றவாறு கந்தர் சில பொருட்களை கையிலெடுக்க அம்மா பிள்ளைகளை எழுப்பி நிலாவைத் தூக்கிக் கொண்டு வானத்தையே பார்த்தவாறு ஓட்டமும் நடையுமாக கோயிலடியைச் நோக்கிச் சென்றனர்.
இவர்கள் போவதற்கு முன்பே அங்கு கூட்டம் கூடியிருந்தது. காரணம் அந்தக் கிராமத்தில இடம் பெயர்ந்தவர்களே அதிகமாக இருந்தனர். அதிலும் வீடில்லாதோரே அனேகமானோர். என்பதால் எல்லோரும் எப்போதோ? கொடுத்த அகதித் தறப்பாளிலேயே கொட்டில் போட்டிருந்தனர். அதிலும் பெரிய பெரிய ஓட்டைகள் என்பதால் மழை என்றால் கோயிலுக்கு வருவது வழக்கம்.
எல்லோரும் கோயிலுக்குள் புகுந்ததும் மழையும் பலத்திருந்தது. கோயிலில் ஒரே சத்தமாக இருந்தது. குழந்தைகளின் கீச்சிடும் சத்தமும் முதியவர்களின் வரட்டு இருமலும் கடுமையாக இருந்தது. சில நோயாளர்களின் சத்தம் மரணவேதனையைத் தந்தது. இப்படியாக அந்தக் கோயிலில் அவலக்குரல் எழுப்ப மூலஸ்தானத்திலிருந்த முருகனோ எந்தவித சலனமோ அசைவோ இன்றி அப்படியே கருங்கல்லாகவே இருந்தார். அந்த முருகனுக்கு எங்கே எமது கஸ்ரம் புரியப்போறது. அவருக்குக் கோயில்இசிலைஇ மூலஸ்தானம்இ மூன்றுவேளை ப10சை இப்படியே எல்லாமே இருக்க அவருக்கென்ன கவலை. இங்கே நாங்கள் தான் இவ்வளவு கஸ்ரப்படுகிறம் என்று நினைத்தவாறே கந்தர் நித்திரையானர்.
அம்மாவிற்கோ நித்திரையே பிடிக்கவில்லை. ஏதோ தான் நரக வேதனையில் தள்ளப்பட்டிருப்பதாக உணர்ந்தாள் தனது கடந்தகால வாழ்க்கை கற்பனைகள்இ மனக்கோட்டை என்பவற்றை நினைத்தும் தற்போது தனது குடும்ப நிலையை நினைத்தும் தனது கணவனின் கஸ்ரத்தை நினைத்தும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தும் மிகவும் வேதனை அடைந்தவளாக நித்திரை வராமல் அங்குமிங்கும் புரண்டு கடைசியில் நி;த்திரையானாள். காலை விடிந்ததும் அன்றைய நாளுக்கான ஜீபனோபாயத்தை நினைத்து கந்தர் கூலித்தொழிலுக்குச் செல்ல அம்மா வீட்டை நோக்கிப் பிள்ளைகளுடன் நடந்தாள். இனி மாலை கணவன் வந்தால்தான் உணவு என்ற நிலை தொடர்ந்தது. பிள்ளைகளின் படிப்பும் பசிஇ பட்டினியால் இல்லாது போனதுடன் இப்படியாகவே நாட்கள் மாதங்கள்இ வருடங்கள் பல கடந்திருந்தது.
இப்போதும் அம்மாவின் குடும்பம் அதே இடத்தில் தான் இருந்தது. பிள்ளைகள் வளர்ந்திருந்தனர். அம்மாவின் கணவரும் அதே கூலித்தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தார். ஆனால் ஒரு மாறுதல் கந்தர் இப்போது எல்லைப் படையில் இருந்தார். மாதம் ஒரு முறை எல்லைக்கும் போய்வந்து மீதி நாட்களில் கூலித்தொழிலுக்குச் சென்று கிடைப்பதில் குடும்பத்தைப் பார்த்து வந்தார். அம்மாவின் மூத்தவன் சோதியும்இ இளையவன் காசியும் வளர்ந்து விட்டது மட்டுமல்லாமல் இருவரும் வேலைக்குப் போனதால் குடும்பத்தில் ஓரளவுக்கு வறுமை குறைந்தது. மூன்றுவேளை சாப்பிடக் கூடியவாறு இருந்தது.
கிடைத்த பணத்தை சிறுகச்சிறுகச் சேர்த்து அம்மா கிடுகு வேண்டி வீட்டையும் வேய்ந்திருந்தாள். ஆனால் வறுமை முற்றாக அகலவில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க நாட்டுபிரச்சினையும் மிக மோசமானபோது எல்லைப்படைக்குச் சென்ற அப்பாவும் காயம் அடைந்து வந்த நாள் பாடசாலை சென்ற தம்பியும் தங்கையும் சிங்கள இராணுவத்தின் மிருகத்தனமான விமானக்குண்டு வீச்சில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்ட அம்மாவும்இ சோதியும்இ காசியும் கதறி அழுதவாறு வைத்தியசாலைக்குச் சென்று பார்த்தபோது அங்கு நடந்த சம்பவத்தைப் பார்த்து மேலும் கதறி அழுதனர். காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அம்மாவின் மூன்றாவது மகனும் கடைக்குட்டி நிலாவும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். மூவரும் அவர்களின் கட்டிலின் அருகே சென்று கதறி அழுதனர். அப்போது கடுமையாக தாக்கப்பட்டிருந்த அப்பாவின் மகன் கமல் இறந்திருப்பதைப் பார்த்த அம்மா கதறிக் கதறி அழுதாள். கமலின் சகோதரர்களும் கதறி அழுதனர். இவர்கள் அழுவதைப் பார்த்து நிலாவும் அழத் தொடங்கியதால் அவளுக்கும் ஏதும் நடந்து விடுமென்று அம்மா அழுகையை நிறுத்தி நிலாவைக் கட்டித் தழுவி முத்தமிட்டு நடக்கப் போவதை கவனிக்க வெளியேறினார்.
வீட்டிற்கு வந்த போது செஞ்சிலுவைச் சங்கத்தினர் கமலின் உடலை வீட்டை கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றிருந்தனர். இயக்கப்பெடியள் அப்பாவைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு சென்றதிலிருந்து கமலின் இறுதிச் சடங்கு நடைபெறும் வரை வீட்டில் ஒரே மரண ஓலமாகவே இருந்தது. அயலவரும் உறவினரும் அம்மாவை மாறிமாறி கட்டியணைத்து அழுது தீர்த்தனர். கமலின் இறுதிச் சடங்கு முடிந்துவிட்ட நிலையில் கந்தர் போராளிகளின் மருத்துவமனைக்குச் சென்று விட்டார் நிலாவும் வைத்தியசாலையிலேயே இருந்தாள்.
இந்த நேரத்தில் தான் சோதி தம்பியைக் கூப்பிட்டு
'தம்பி எங்களின்ரை குடும்பத்தில் அடுத்தடுத்து வேதனயும் சோதனையுமாகவே காலம் கடந்து விட்டது. இது எங்களுக்கு மட்டும் புதிதல்ல இந்த மண்ணில் எல்லத் தமிழர்களுக்கும் இந்த நிலமைதான் எனவே இனியும் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க ஏலாது. அப்படிக் பார்த்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக நாம் எல்லோரும் அழிய வேண்டிவரும். எனவே நான் இயக்கத்துக்குப்போகப் போறேன். நீ வீட்டையும் அம்மா அப்பா தங்கச்சியையும் நன்றாக பார்த்துக்கொள். இப்போது நான் போனதாக அம்மாவிடம் சொல்லாதே. வேறு இடத்திற்கு வேலைக்குப் போனதாகச் சொல்லி விடு கொஞ்சநாள் போனதும் சொல்லலாம்." என்று விடை பெற்றவனை
'நில் தம்பி" எனத் தடுத்தது ஒரு குரல்
அங்கே அம்மா நின்று கொண்டிருந்தாள். 'தம்பி நீ கதைத்ததை எல்லாம் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தன். ஏன் என்னிடம் சொல்லக்கூடாது நீ சந்தோசமாகப் போய்வா. எங்களின்ர சனம் எல்லாரும் ஊமையாய் இருந்ததினால் இந்தளவு கேவலமாக இண்டைக்கு சிங்களவனுக்கு பயந்து வாழுறம். இனியும் அந்த நிலைமைஇ அதுவும் எங்களின்ர குடும்பத்திற்கு வந்த நிலைமை எமது நாட்டில எந்தக் குடும்பத்துக்கும் வரகூடாது. எனவே நீ சந்தோசமாக போய்வா.... " என அம்மாவே வழி அனுப்பி வைத்தாள்.
நாட்கள் கடந்த வேளை நிலாவும்இ அப்பாவும் காயங்கள் சுகமாகி வீடு வந்து சேர்ந்தனர். இப்போது சோதியும் போராடச் சென்று பல களங்களில் நன்றாகச் சண்டை செய்து திரும்பியதை அம்மா அறிந்திருந்தாள். இவற்றையெல்லாம் விட அம்மாவின் ஊரும் மீட்கப்பட்டிருந்தது. அந்தச் சண்டைக்கு தனது மகனும் போயிருந்ததை நினைத்து அம்மா சந்தோஷப்பட்டிருந்தாள்.
'அப்பாடா ஊரையும் பொடியள் எவ்வளவோ பாடுபட்டு பிடிச்சி;ட்டாங்கள் இனி எப்பதான் ஊருக்குப் போவதோ...."
அம்மா தவித்துக் கொண்டிருந்தாள். அப்போது சமாதானமும் வந்திருந்தது. அம்மாவிற்கு மேலும் சந்தோசமாக இருந்தது. எப்படியெண்டாலும் 10இ15 வருடமாக தொலைந்து விட்ட சந்தோசத்தை சொந்த ஊருக்குச் சென்று தனது வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தடியில் பாய்போட்டு படுத்தால் தீர்ந்துவிடுமென அம்மா நினைத்துக் கொண்டே நாட்களை ஓட்டினாள்.
விடுமுறையில் வந்த மகனிடம் 'எப்படா தம்பி வீட்டுக்குப் போகலாம்" எனக்கேட்டாள். 'போகலாம் விரைவில்" என தம்பி சொன்னதில் ஏதோ மாயம் இருக்குது என அம்மா உணர்ந்து கேட்காமலேயே விட்டு வி;ட்டாள். அன்றும் வழமைபோல் முற்றத்தில் அமர்ந்த தன் கணவனிடம் அம்மா கேட்டா.
'ஏனப்பா சமாதானமும் வந்திட்டுது ஏன் இன்மேல் எண்டாலும் ஊருக்குப் போகலாம் தானே.."
பதிலுக்கு கந்தர் 'போகலாம் தானப்பா முகமாலையில அவன் இருக்கேக்க என்னெண்டு நாங்கள் புதுக்காட்டில இருக்க முடியும். இங்கிருந்து அங்க போய் வீடு வாசலை திருத்துவதெண்டால் காணியில ஒண்டும் இல்லை. வீடெல்லாம் தரைமட்டமா இருக்குது. சிங்களவன் கண்ணி வெடிகளையும் விதைச்சிட்டுப் போயிருக்கான். எப்படியப்பா போறது. சரி அப்படியே போனாலும் திடீரெண்டு மீண்டும் ஒரு முறை பிரச்சினை எண்டால் எங்களால என்ன செய்ய முடியும். அதை விட இப்ப போகாம இங்கேயே இருந்திட்டு நல்ல நிலைமை வந்தாப் போவம். அதுவரைக்கும் எங்கட நிலைமை இப்படித்தானப்பா ஒவ்வொருநாளும் சிங்களவன் எங்களுக்கு அள்ளித்ரப்போறதில்லை. சமாதானம் எண்டு சொல்லி வந்து இவ்வளவு நாளாகியும் இதுவரை ஒண்டும் நடக்கேல்லை. இப்பிடி இருக்கே என்னெண்டு போறது."
'எதுவெண்டாலும் பெடியள் அடிச்சுப் பிடிச்சுச் தந்தால்த்தான் நாங்கள் எல்லாரும் சுதந்திரமாகஇ சுவீட்சமாக எங்கட நிலத்தில வாழ முடியும். அது வரை இந்த அகதி வாழ்வை ஆராலும் தடுக்க முடியாது. அதைத்தடுக்கிறது என்றால் நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து போராடி மண்ணை மீட்க வேண்டும்".
பெரிய விரிவுரையை அம்மாவிற்கு வழங்கினார் கந்தர்.
அம்மாவும் 'அதெல்லாம் உண்மை தானப்பா என்னதான் சமாதானம் வந்தாலும் நிரந்தர சமாதானம் வராமல் விட்டால் எங்கள் எல்லோரின் வாழ்வும் அகதி வாழ்வுதான்" என்று பெருமூச்சு விட்டாள். 'நிச்சயமாய் எங்கட பிள்ளைகள் இருக்கும் மட்டும் எங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை" என்று சொல்லிவிட்டு எழுந்தார் சுந்தர்.
நன்றி மிரேஸ் ஈழநாதம்.
சுட்டது சூரியன்.com நன்றி
|
|
|
|