Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 539 online users.
» 0 Member(s) | 536 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,303
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,057
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  சுனாமி
Posted by: kuloth - 12-27-2005, 01:21 AM - Forum: புலம் - Replies (1)

இன்று 26.12.2005 ரொரன்ரோவில் மாலை 5.30 க்கு சுனாமியின் முதலாமாண்டு நினைவு நிகழ்வு நடந்தது. மிகக்கடுமையான குளிர்.அப்படியிருந்தும் பலர் அந்த திரந்தவெளியரங்கில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்வாயிருந்தது....வாழ்க தமிழினம்....வளர்க தமிழர் ஒற்றுமை...

Print this item

  Sri Lanka wil af van Noorse bemiddelaar
Posted by: வினித் - 12-27-2005, 12:21 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (10)

<b>Sri Lanka wil af van Noorse bemiddelaar</b>
COLOMBO - De Srilankaanse regering wil dat de Noorse minister Erik Solheim niet langer de belangrijkste bemiddelaar is in het vredesproces op het eiland. Volgens Srilankaanse media maandag is Colombo van mening dat Solheim zijn hoofd te veel laat hangen naar de rebellengroep Tamil Tijgers (LTTE). Colombo heeft aan Oslo laten weten bezoeken van gezant Solheim niet langer op prijs te stellen.


Solheim, een prominent politicus en nu minister van Internationale Samenwerking, is al vijf jaar lang de belangrijkste westerse bemiddelaar in het conflict op Sri Lanka. Daar strijdt de LTTE al sinds 1983 voor een eigen Tamilstaat in het noorden en oosten van het eiland. De strijd heeft al bijna 70.000 mensen het leven gekost.

Sinds 2002 is er een staakt-het-vuren van kracht dat mede door Solheim werd bewerkstelligd. In de afgelopen maanden is het geweld weer behoorlijk opgelaaid, vooral sinds de komst van de nieuwe president Rajapakse. Die geldt als een hardliner in het conflict.

De rebellen, die ongeveer een zevende van het eiland controleren, hebben gezegd wel met Rajapakse aan tafel te willen zitten, maar alleen als hij ook echt bereid is compromissen te sluiten. Gebeurt dat niet, dan pakken de Tamil Tijgers de wapens weer op, zo dreigden ze.

Solheim zou begin volgend jaar weer aanschuiven aan de onderhandelingstafel, maar Colombo wil daarvan nu niets weten. Ze stellen al enige tijd dat de Noor niet onpartijdig is en vooral de belangen van de LTTE verdedigt

http://www.telegraaf.nl/buitenland/article...0891331.ece?rss

Print this item

  வாகை-இணைய அறிமுகம்.
Posted by: sshanmu4 - 12-26-2005, 10:26 PM - Forum: தளமுகவரிகள் - No Replies

வணக்கம்! தமிழை மென்பொருட்களுக்குள் கொண்டு செல்லவும், தமிழில் உள்ள மென்பொருட்களைப்ப பற்றி விவாதிக்கவும் நான் ஓரு இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளேன். இவ்விணையத்தளத்தில் உங்கள் கேள்வி பதில்களை பதியுமிடத்தில் இவ் மென்பொருட்களை உருவாக்குபவர்களுக்கும், பாவிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். தமிழிற்க்கு மொழிமாற்றக் கூடிய இலவச மென்பொருட்களைப் பற்றியும் இங்கு விவாதிக்கலாம். இவ்விணையத்தளத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறவும்.

http://www.vaakai.com

நன்றி

Print this item

  சுனாமி ஒராண்டு நினைவு
Posted by: AJeevan - 12-26-2005, 09:10 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<img src='http://home.san.rr.com/clkoberg/images/tsunami/a07w.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'><b>அச்சே மாகாணத்தில் சுனாமி ஒராண்டு நினைவு</b>
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/asia_pac_enl_1135594847/img/laun.jpg' border='0' alt='user posted image'>
சுனாமியின் ஓராண்டு....

ஆசியாவெங்கிலும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களை சுனாமிப் பேரலைகள் காவு கொண்டு சரியாக ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தின் மக்கள் அந்த சுனாமியில் பலியான தமது உற்றார் உறவினர்களை நினைவு கூர்ந்தனர்.

இந்த சுனாமியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அச்சே மாகாணத்தைப் பொறுத்தவரை, சுனாமியில் மொத்தமாக பலியானவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே.

அந்த மாகாணத்தின் தலைநகரில் நடந்த நிகழ்வுகளில், சரியாக அந்த அனர்த்தம் இடம்பெற்ற நேரத்துக்கு ஒரு பெரிய சங்கு ஒன்று ஒலிக்கப்பட்டது. இது புதிய சுனாமி அபாய அறிவிப்பு சங்கின் ஒரு பகுதியாகும்.

அங்கு உரையாற்றிய இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் உத்தோயோனோ அவர்கள், இந்த அழிவுகளில் இருந்து மீண்டு வருவதற்காக, மீள்கட்டமைப்புக்காக முயற்சித்தவர்களுக்கு நன்றி கூறினார்.

அச்சே கிளர்ச்சிக்காரர்களுக்கும், இந்தோனேசிய அரசுக்கும் இடையிலான சமரச உடன்படிக்கை குறித்துப் பேசிய அவர், அழிவில் இருந்து எப்படி நம்பிக்கை உதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கூறினார்.

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக வேறுபல தெற்காசிய நாடுகளிலும் நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடந்துள்ளன. தாய்லாந்தில் பிரதமர் தக்ஷின் ஷினாவத்ர தலைமையில் கஓலக் பகுதியில் நடந்த நிகழ்வில் நினைவுக் கல் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

<b>வடக்கு இலங்கையில் சுனாமி நினைவு நாள்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051226164913jaffnatsunamiday.jpg' border='0' alt='user posted image'>
சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வைபவங்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய வடபகுதி மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், விடுதலைப் புலிகளின் பிரதேசங்சளிலும் பரவலாக நடைபெற்றன.

சுனாமியினால் இறந்தவர்களின் நினைவாக வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவுத் தூபியொன்று திறந்து வைக்கப்பட்டு இறந்தவர்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

முல்லைத்தீவு நகரில் கடல்கோளினால் அழிவுக்குள்ளாகிய புனித ராயப்பர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தை யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் திறந்துவைத்தார்.

அவரது தலைமையில் கூட்டுத் திருப்பலிப் பூசையும் நடைபெற்றது. இந்து, முஸ்லிம் மதக்கிரியைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டன. சுனாமி பேரலைகளின் ஊழிக்கூத்தில் விளைந்த அழிவுகள், இழப்புக்கள் பற்றிய நினைவு மலர்களும் இங்கு வெளியிடப்பட்டன.

முல்லைத்தீவு நகரில் கடை வீதிகள் எங்கும் கறுப்பு வெள்ளைக் கொடிகள் நினைவு பதாதைகள் கட்டப்பட்டிருந்தன.

கோவில்குடியிருப்பு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு ஆகிய இடங்களில் விசேடமாக அமைக்கப்பட்ட கொட்டில் மண்டபங்களிலும், கடற்கரையிலும் கூடிய பொதுமக்கள், கடல்கோளின்போது மறைந்த தமது உறவினர்களின் உருவப்படங்களை வைத்து கண்ணீர் மல்க கதறியழுது அஞ்சலி செலுத்தினர்.

அரச அதிகாரிகள், மதத்தலைவர்கள், பிரமுகர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் என பலதரப்பினரும் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென அமைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட வீடுகள் உரியவர்களிடம் அதிகாரிகளினால் இன்று கையளிக்கப்பட்டன என்பதும் குறிப்பித்தக்கது.

இதனிடையில், பொதுமக்களினதும் ஊழியர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், யாழ் வடக்குக கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் படுகொலைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கைதுகள் என்பவற்றைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக நிறுத்தக் கோரியும் யாழ்ப்பாணத்தில் அரச ஊழியர்கள் இன்று தமது பணிகளைப் புறக்கணித்திருந்தனர்.

இதனால் யாழ் மாவட்டத்தின் அரச நிர்வக இயந்திரம் பெருமளவில் ஸதம்பிதமடைந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய சேவைகளாகிய வைத்தியம், உணவு விநியோகம், போக்குவரத்து தவிர்ந்த ஏனைய பணிகள் யாவும் முடங்கியிருந்தன. இந்த பணிபுறக்கணிப்பிற்கான அழைப்பை தமிழ்த்தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

<b>திருகோணமலையில் சுனாமி நினைவு தினம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051226160943tricotsunamiday.jpg' border='0' alt='user posted image'>
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உயிரிழந்தவர்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் ஏனையோருக்கான
நல்வாழ்வினனைக் கோரும் பிரார்த்தனைகள் வழிபாடுகள் ஆராதனைகள்
மற்றும் துவா தொழுகைகளும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் கல்லடி கிண்ணியாவின் நடுஊற்று
மற்றம் பெரியகுளம் பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளின் ஒரு தொகுதி இன்று சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அரச நிவாரண உதவிகள் மற்றும் உணவு முத்திரை என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக திருகோணமலை நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதேச செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை அமைக்கும் பணியில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ஈடபட்டு வருவதாகவும், இந்த நிறுவனங்கள் தமது பணியினை இன்னும் துரிதப்படுத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பயனடைய முடியும எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

<b>மட்டக்களப்பில் நினைவஞ்சலி</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051226171242battitsunamiday203.jpg' border='0' alt='user posted image'>
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமியின் போது உயிரிழந்த 2,900 பேர் நினைவாக மாவட்டத்தின் கரையோர பிதேசங்களில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடினார்கள்.

சுனாமியின்போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகொள்வதற்காக, ஒரு வருடத்தின் பின்பு தாங்கள் பிறந்து வளர்ந்த கடலோரக் கிராமங்களுக்கு அவர்கள் இன்று திரும்பியிருந்தார்கள்.

பரவலாக கடலோரக் கிராமங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக பரவலாக நினைவுத்தூபிகள் அமைக்கப்பட்டு இன்று அஞ்சலி தீபங்கள் ஏற்றப்பட்டன.

<b>சுனாமியால் பாதிக்கப்பட்ட மட்டு அம்பாறை முஸ்லிம்களின் நிலை </b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/04/20050425165826olli203a.gif' border='0' alt='user posted image'>
சுனாமியில் பெரும் சேதங்களை எதிர்கொண்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தினர் பேரிழப்புகளைச் சந்தித்திருந்தனர்.

சம்பவம் நடந்து ஓராண்டாகியும் முஸ்லிம் மக்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துத் தருவது தொடர்பில் தெளிவற்ற நிலையும் சிக்கல்களும் காணப்படுவதாக முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் அங்கலாய்க்கின்றனர்.

கல்முனையிலுள்ள இஸ்லாமாபாத் என்ற இடத்தில் தாற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்தவருபவர்கள் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்டுவருவதாக முறையிடுகின்றனர்.

சர்வதேச நாடுகளின் நிதி உதவிகளை தந்திருக்கும் போதிலும் தொண்டுநிறுவனங்கள் களத்தில் உதவிப் பணிகளை ஆற்றிவருகின்றபோதிலும் உரிய நிலங்கள் இல்லாது இருப்பதே இந்த மாவட்டத்தில் புதிய வீடுகளை அமைப்பதிலிருக்கும் பெரிய பிரச்சினை என்று தெரிவிக்கப்படுகிறது.

கடலைவிட்டு 200 மீட்டர் தள்ளியே வாழ்விடங்களை அமைக்கவேண்டுமென்ற விதிமுறை இம்மாவட்டங்களில் பல மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை நிரந்தர வீடுகள் எதுவும் கட்டிமுடிக்கப்படாத சூழல் காணப்படுகிறது.

<b>இலங்கையின் சுனாமி உயிரிழப்புகளை நினைவுகூர்ந்து காலி மாவட்டம் பெராலியவில் அரசு அஞ்சலி </b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41158000/jpg/_41158834_memorialpa203.jpg' border='0' alt='user posted image'>
26 டிசம்பர் 2004 அன்று, சரியாக ஓராண்டுக்குமுன் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் இந்தோனேஷியாவிற்குப் பிறகு மிக அதிக உயிரிழப்புகளை சந்திந்திருந்த நாடு இலங்கைதான்.

இலங்கையில் சுமார் நாற்பதாயிரம் பேர் உயிரிழந்திருந்தனர். இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பங்கு சுமார் 13 மாவட்டங்களில் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இந்த இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்திருந்தனர்.

வரலாறு காணாத அழிவுகளை இலங்கையில் ஏற்படுத்திய சுனாமியின் ஓராண்டு நிறைவை ஒட்டி இலங்கை அரசின் முக்கிய நினைவு நிகழ்வு காலி மாவட்டத்தில் உள்ள பெராலிய என்னும் இடத்தில் நடைபெற்றுள்ளது.

புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்த நினைவு நிகழ்வில், வெளிநாட்டு ராஜீய அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்ததுடன், மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.

வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்கியிருந்த சர்வதேச நாடுகளுக்கு நன்றியினை தெரிவித்தார்.

நாடுதழுவிய அளவில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தமைக்கு அமைய, ஜெயலங்கா என்ற அமைப்பை ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

<b>நாகையில் சுனாமி நினைவு தினம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051226003651nagapattinam_rally203.jpg' border='0' alt='user posted image'>
சர்வமத நினைவு ஊர்வலமும் நாகையில் நடந்துள்ளது.

சர்வமத நினைவு ஊர்வலமும் நாகையில் நடந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கபட்டவர்களை நினைவுகூறும் நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வளாகத்தில் நடந்தேறியுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் இயறகைப் பேரிடர்கள் வரும்போது சமூகத்தைக் காப்பது தொடர்பில் அனைவரும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

சுனாமிக்கு ஆறாயிரம் பேரை பலிகொடுத்திருந்த இம்மாவட்டத்தில் மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

கடலில் மீன் வளம் குறைந்திருப்பதாகவும் அதன் காரணமாக தமது வாழ்க்கைத் தரம் வீழ்ந்திருப்பதாகவும் மீனவர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.

ஆழிப்பேரலை காரணமாக கடல்மீது தமக்கு ஏற்பட்ட பீதி, உளப்பாதிப்புகள், தற்காலிக கூடாரங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்று பல்வேறுவகையில் மீனவ சமூகம் பாதிப்புகளை இன்றளவும் சந்தித்துவருகிறது.

நாகை நகரை ஒட்டிய சாமந்தான் பேட்டை போன்ற இடங்களில் நிரந்தரக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு அங்கே மக்கள் குடியேறிவிட்டனர் என்பதையும் அவதானிக்கமுடிகிறது.

அரசின் நிவாரண உதவிகளால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுபவர்களும் நாகையில் இருக்கவே செய்கிறார்கள்.</span>

- பீபீசி தமிழ்

Print this item

  இன்றும் இதயத்தால் இரத்தம் வழிகிறது!
Posted by: Rasikai - 12-26-2005, 08:59 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

<b>இன்றும் இதயத்தால் இரத்தம் வழிகிறது!</b>

<img src='http://img309.imageshack.us/img309/4735/tsunami200529gj.jpg' border='0' alt='user posted image'>

<b>ஓராண்டு உருண்டே ஓடிவிட்டது...
மனதின் ஓலங்கள் இன்னும் ஓய்வதாய் இல்லை!
அந்த அவலம் சுமந்த நாட்கள் இன்றும்
எம் ஆன்மாவை விட்டு எழுந்து போவதாய் இல்லை!

இன்று காலையும் எம் தேசத்து மழலை ஒன்று
கடலை வெறித்து பார்த்தபடி காத்து நிற்கிறது...
அம்மா வருவாளா என்று!
இன்றும் தாயொருத்தி கரை மணலை கிளறி கொண்டே இருக்கின்றாள்...
தன் சேய் ஒரு வேளை இங்கு இருப்பானோ என்று!


இந்த நாள்...............
எம்மையும் எம் கனவுகளையும் தன் தோழ்வலிக்க சுமந்து நின்ற ...
தந்தை உடலை வயிறு பிளந்த படி கிடக்க...
வடலி இடுக்கிடையினுள் இருந்து மீட்டு வந்தோமே - அந்த நாள்!

இந்த நாள்.....
ஒருவாய் சோறு எமக்கூட்ட.......
ஓராயிரம் கதை சொல்லி ...
நிலவை பிடிச்சு தருவேன் நீ இதை உண்டால் என்று...
செல்ல கதைகள் சொல்லி..எம் தேகத்தில் ஜீவன் கொண்டாளே-என் பாட்டி..
அவளை மண்ணுக்குள் கொண்டு சென்று புதைத்து விட்டு வந்து...
நாமெல்லாம் மார்பில் அடித்து அழுத நாள்!

இந்த நாள்.........
ஒன்றாகவே எம்முடன் பிறந்து...
ஒரு தட்டில் உண்டு...
என் கையை பிடித்து கொண்டே கவனமாய்..
பள்ளி கூட்டி சென்று வந்தனரே... என் அண்ணா,அக்கா..
அம்மணமாய் கிடந்த அவருடலை...
பாய் கொண்டு சுற்றி...அயலவர் எடுத்து போக...
ஐயோ...எரிக்காதயுங்கோ அவை தாங்க மாட்டினம்...
சித்தம் கலங்கி போய் ....
மண்ணில் விழுந்து அழுதழுதே... எம் ஆவி தொலைத்தோமே
அந்த நாள்!

நீர் வற்றி போன குளமாய் போனதே எம் கண்கள்..
ஒன்றா இரண்டா துயரங்கள்?
இன்னும் எம்மிடம் கண்ணீர் இருக்கிறதா?
இருந்தால் அது உலக அதிசயம்!

கடலோடு கடலாய்...
கரை மணலோடு ஒரு துணிக்கையாய்..
அரசியல் எல்லைகள் தாண்டியும் அப்பால்
கரை சென்று ஒதுங்கிய உடல்களே... எம் உறவுகளே.......
எம் இதயம் தன் இயக்கம் நிறுத்தும் நாள்வரை..
உமக்காய் அழுவோம்..
இன்றும் இதயத்தால் இரத்தம் வழிகிறது!</b>

Print this item

  சுட்டகவிதை
Posted by: கீதா - 12-26-2005, 08:30 PM - Forum: கவிதை/பாடல் - No Replies

<img src='http://img282.imageshack.us/img282/4028/kavithai6ur.jpg' border='0' alt='user posted image'>


படித்ததில் எனக்கு பிடித்த கவிதை

Print this item

  திருக்குறள் சொல்வோமா?
Posted by: suddykgirl - 12-26-2005, 08:13 PM - Forum: போட்டிகள் - Replies (16)

இங்கு நாம் எமக்குத் தெரிந்த குறளைக் கூறி அதனுடைய பொருளையும் கூறவேண்டும்.

சரி நானே ஆரம்பித்து வைக்கின்றேன்

Print this item

  * LTTE used thermobaric weapons to kill sailors?
Posted by: cannon - 12-26-2005, 07:50 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (4)

Sri Lankan Top News
Sri Lanka: Send this news to ..
* LTTE used thermobaric weapons to kill sailors?
Monday, December 26, 2005, 13:18 GMT, ColomboPage News Desk, Sri Lanka.

There is a worldwide ban on such weapons.
Dec 26, Colombo: Government security authorities have launched an inquiry into whether the LTTE used banned thermobaric weapons to kill 13 sailors on Friday at Mannar.

Quoting Mannar Police HQI Sudath Asmadala, a local newspaper reported today, "Rocket-propelled grenades cannot do such harm to the human body and we strongly believe that the attackers had used the world-banned thermoberic weapon.

"We have asked the Government Analyst to carry out a special investigation into the matter as this type of weapons is banned all over the world," he told the paper.

Thirteen sailors were killed and another two injured during a sudden attack on a Navy convoy at Pesalai in Mannar last Friday.

http://www.colombopage.com/archive/Decembe...r26131856JV.htm
l

Print this item

  உயிர் காத்த லண்டன் &quot;வெண்புறாக்கள்&quot;!
Posted by: cannon - 12-26-2005, 07:21 PM - Forum: புலம் - Replies (1)

ஆழிப்பேரழை கோரத்தாண்டவம் ஆடி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அந்த நேரத்தில் லண்டனில் தமிழர் புனர்வாழ்வு கழகம் தடைசெய்யப்பட்டிருந்தது. புனர்வாழ்வுக் கழகத்திற்கான செயற்பாடுகள் ஓரிரவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு முடக்கப்பட்ட சூழ்நிலையில் தான் தனது வரலாற்றுப்பணியை "வெண்புறா நிறுவனம்" ஆரம்பித்திருந்தது. பல பல தடைகள், குழிபறிப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள், பொய்ப்பிரச்சாரங்களுக்கு மத்தியில் "டாக்டர் மூர்த்தி" எனும் ஓர் தன்னலமற்ற அற்புதமனிதனின் தலைமையில் தொடங்கியது.

ஆழிப்பேரழை அழிவுகளின் விபரங்கள் வெளிவர முன்பே "ஐ.பி.சி, ரி.ரி.என்" ஊடாக வென்புறாக்கள், எம்மிலுள்ள மரத்த இரும்பு இதயங்களைக் கூட தட்டித் திறந்தார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட மிகப்பெரிய நாடுகளே என்ன செய்வதென்று திகைத்து நின்றபோது, "எமக்கு நாமே துணை, மாற்றானை நம்பி ஏமாற வேண்டாம்" என்ற கொள்கையுடன் புலத்தில் அவசர நிவாரணத்திற்காக மிகப்பெரிய களத்தை திறந்தது. வீதி வீதியாய் எமது சிறார்கள் உண்டியல்களுடன், வியாபார ஸ்தாபனங்கள் தோறும் நிவாரண உண்டியல்கள்,... என்று ஒரு புறமும், மறுபுறம் கோடிக்கணக்காக நிதியை அள்ளியும் வழங்கினார்கள்.

உலகே! உன் கண்கள் திறக்குமட்டும் நாம் பொருத்திருக்கமுடியாது என்று எம்மக்களையெல்லாம் ஒண்றிணைத்து இரவு பகல்களாக பணியாற்றியதை நன்றியுடன் நினைவு கூருகிறோம். பாரிய பிராந்திய வல்லரசே தனக்கேற்பட்ட அழிவுகளுக்கு நிவாரணப் பணிகளே சீராக ஆரம்பிக்கமுடியாத நிலையிலும், எம்தேசத்தில் சிரான நெறிப்படுத்துதலில் ஆரம்பக்கட்ட தற்காலிக நிவாரணங்கள்/குடியமர்த்துதல்கள் பூர்த்திடைந்ததற்கு பின்புலமாக இருந்ததில் முக்கியமான அமைப்பு "வெண்புறா நிறுவனமே"!!!

அக்காலகட்டங்களில் இரவு, பகல், உணவுகளை மறந்து உன்னத சேவையாற்றிய அத்தனை தொண்டர்களுக்கும் நன்றிகள். வெண்புறாவின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து அளப்பரிய பணியை இன்றுவரை பாரிய நெருக்கடிகளுக்குள் ஆற்றும் "டாக்டர் மூர்த்தி" எனும் தேசப்பற்றாளனுக்கு எமது நன்றிகள்!!!

Print this item

  பரராஜசிங்கம் விடயத்தில் எப்படி நடந்துகொள்ளப் போகிறார்கள்?
Posted by: வினித் - 12-26-2005, 07:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<b><span style='font-size:25pt;line-height:100%'>தமிழ்த் தேசிய எழுச்சியின்
குரல்வளையை நசிக்கும் முயற்சி</b> </span>


[b]<span style='font-size:25pt;line-height:100%'>சமாதானத் தூதுவன் அமைதி நாயகன் இயேசு பிரான் பிறந்த தினம் அவதார நேரம் மட்டக்களப்பில் பக்தி பூர்வ மாக அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் கொடூர பாத கம் அரங்கேறியிருக்கின்றது. அதுவும் புனிதமும், தெய்வ அமை தியும், பக்தியும் கமழும் தேவாலயத்துக்குள் வைத்து மக்கள் பிரதிநிதி ஒருவர் கிறிஸ்மஸ் வேளையில் படுகொலை செய் யப்பட்டிருக்கின்றார்.</span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர்களின் மற்றொரு ஜனநாயகக் குரல் வேட்டுகள் மூலம் அடக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் குரலை அல்ல, ஆயுதக் குரலையே செவிமடுப் பதற்குத்தான் தயாராக இருக்கிறான் என்பதை எதிரி மீண்டும் ஒரு தடவை பலமாக எடுத்தியம்பியிருக்கின்றான்.
அஹிம்சை வழியிலான தமிழர்களின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட மூத்த தலைவர்களுள் எஞ்சி யிருந்த ஓரிருவரில் ஜோசப் பரராஜசிங்கம் முக்கியமானவர்.
ஒரு பத்திரிகையாளராகத் தனது பொது வாழ்வை ஆரம் பித்த ஜோசப் பரராஜசிங்கம், தந்தை செல்வாவின் கொள்கை களால் கவரப்பட்டு, அவரது பாசறையில் இணைந்து அரசிய லில் வளர்ந்தவர். கொண்ட கொள்கையில் தளராத பற்றுறுதி யுடனும் அர்ப்பணிப்புடனும் விளங்கிய ஜோசப் பரராஜசிங் கத்தின் மனவுறுதியைக் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக் களும் சர்வதேசத்தவரும் அடையாளம் கண்டனர்.
கருணா என்ற தனிமனிதப் பிறழ்வு காரணமாக இலங் கைத் தீவில் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலத்துக்கு பேரா பத்து ஏற்பட்டபோது கிழக்கில் தனித்து நின்று அச்சுறுத் தல்களுக்கு முகம் கொடுத்த அரசியல் போராளி ஜோசப் பரராஜசிங்கம். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும், இன விரோதிகளின் திட்டத்துக்கு வெறிக் கூச்சலுக்கு கடைசி வரை இடங்கொடாது, தமது உறுதியில் சிறிதுகூட சலனம் காட்டாது, மிகத் தெளிவாகவும் திடமாகவும் செயற்பட்டு, தனது கொள்கைப்பற்றின் ஆழத்தை அப்போது சகலரது மன திலும் பதித்தவர் அவர்.</span>


[b]<span style='font-size:25pt;line-height:100%'>பெரும் உயிராபத்துகளுக்கு மத்தியிலும், தந்தை செல்வா முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை, தேசியத் தலை வர் பிரபாகரனின் வழி தடத்தில் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்காக தனது உயிர் பிரியும்வரை ஓயாமல் பணி புரிந் தவர் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.
தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாமல், இலங்கைத் தீவில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் தமிழர் தம் போராட்டத்தின் நியாயத்தை முரசறைவதில் நிகரின்றி ஓய்வு, ஒழிச்சலின்றி பணியாற்றிய மூத்த தமிழ்த் தலைவர் அவர்.
மனித உரிமைகளைப் பேணுவதிலும், அதற்காகக் குரல் எழுப்புவதிலும் தேசிய, சர்வதேச மட்டத்தில் அரும்பணியாற்றியவர். தமிழர் தாயகத்தில் தனியான மனித உரிமைகள் செயலகம் ஒன்றை உருவாக்குவதில் அவரின் பங்களிப்பு கணிசமாக அமைந்தது.
கிறிஸ்மஸ் வேளையில் பிரபலமான தேவாலயத்துக் குள் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் ஆயுததாரிக ளால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார். அதுவும் இலங்கை அரசுப்படைகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக் களப்பு நகரத்தின் மத்தியில், உயர்பாதுகாப்பு வலயத்துக்குள், ஆயர் ஒருவர் கிறிஸ்மஸ் வழிபாடுகளை நடத்திக் கொண்டி ருக்கையில், வலு சாவகாசமாக ஆயுததாரிகள் வந்து இந்தப் படுகொலையை நிகழ்த்தி விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
தமிழர்களின் ஜனநாயகக் குரலுக்கு சாவு மணி அடிக்கும் இத்தகைய கொலைகளின் பின்னணியில் இருக்கும் அரூபக்கரங்கள் எவை என்பது உலுகுக்கு நன்கு தெரியும்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியல், வாழ்வி யல் உரி மைகளுக்காக நடத்தும் சுதந்திரப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் தாயகத்தில் வெளிப்படுகின்ற ஜனநாயக வழி எழுச்சிகளைத் தனது ஆயுத வலுக்கொண்டு அடக்கி, ஒடுக்கும் தென்னிலங்கைக் கைங்கரியம் இப்போது முழு வீச்சாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதை கடந்த சில நாள்க ளாக இப்பத்தியில் சுட்டிக் காட்டி வந்தோம்.
கடந்த சில நாள்களாக வடக்கில் அரங்கேறிய வெகு ஜன எழுச்சியை அடக்கும் பேரினவாத அட்டகாசம், இப்போது கிழக்குக்கும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளுக்கு மாறாக ஒட்டுப்படைகளை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியத்துக்கு எதிரான நாசகார வேலைகளைப் புரிந்து வரும் தென்னிலங்கைப் பேரின வாதம், இந்தப் படுகொலைக்கான பொறுப்பையும் \"இனந் தெரியாத ஆயுதக் குழு'வின் கணக்கில் சுமத்தித் தான் தப்பிக் கொள்ள எத்தனிக்கும்.
வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தில் ஜனநாயக வழி யில் தமது கருத்தை வெளிப்படுத்த விடாது தமிழ் மக்களின் வெகுஜன எழுச்சிக்கு எதிராக அடக்குவாரத்தை ஒடுக்கு முறையை தென்னிலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டிருக் கையில், அதைப் பார்க்காமல் பாராமுகமாக கண்டும் காணா மலும் நடந்து கொள்ளும் சர்வதேச சமூகம், இந்தக் கொடூரக் கொலையை அதுவும் தேவாலயத்துக்குள் வழிபாடு செய்து கொண்டிருந்த ஜனநாயக அரசியல் தலைவரை அங்கு வைத்தே சுட்டுப் படுகொலை செய்த கொடூரத்தை எப் படிக் கையாளப் போகின்றது?</span>



[b]மக்களைத் தேர்தலில் சந்திக்காமலேயே பின் கதவால் அரசியலுக்குள் நுழைந்து, மக்களைச் சந்திக்காமலே


[b]<span style='font-size:30pt;line-height:100%'>மக்கள் தலைவனாக உயர்ந்து, தனது தேசியத்துக்காக நேர்மையுடன் பணியாற்றி, அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அஞ்சாமல் சேவைபுரிந்து, தேவாலயத்துக்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டவரான ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. விடயத்தில் எப்படி நடந்து கொள்ளப் போகின்றது?</span>

[b]<span style='font-size:30pt;line-height:100%'>??????????????????????????????</span>

நன்றி: உதயன்.கொம்

Print this item