| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 485 online users. » 0 Member(s) | 482 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,303
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,057
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| பெண்கள் சந்திப்பு 2005..! |
|
Posted by: tamilini - 12-26-2005, 07:06 PM - Forum: புலம்
- Replies (36)
|
 |
<b>பெண்கள் சந்திப்பு மீண்டும் லண்டனில் நடைபெற்றுள்ளது.</b>
24வது புகலிடப் பெண்கள் சந்திப்பிலும் வழமை போலவே என்னால் கலந்து கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆனாலும் சந்திப்பில் என்ன கலந்துரையாடப் பட்டிருக்கும்... என்ன ஆக்க பூர்வமான கருத்துக்கள் முன் வைக்கப் பட்டிருக்கும்... என்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் இணையத்தில் தேடியபோது றஞ்சியின் விரிவான பார்வையொன்று கிடைத்தது.
<b>24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005</b>
புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15இ16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கைஇ இந்தியாஇ கனடாஇ சுவிஸ்இ ஜேர்மன்இ பிரான்ஸஇ லண்டன்இ கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். எழுத்தாளர்கள்இ நாடக குறும்பட தயாரிப்பாளர்கள்இ ஓவியத்துறையைச் சாந்தவர்கள்இ கவிஞர்கள் உள்ளடங்கலாக ஆர்வலர்கள் சிலரும் கலந்து கொண்டனர். விசேடமாக இலங்கையிலிருந்து ஓவியையும் எழுத்தாளரும் தென்கிழக்காசிய பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பதவியை வகிப்பவருமான கமலா வாசுகி மற்றும் தினக்குரல் பத்திரிகையின் பெண்கள் பகுதி பதில் ஆசிரியரும் ஊடகவியலாளருமான தேவகொளரியும் இச் சந்திப்பில் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேபோல் இந்தியாவிலிருந்து அறியப்பட்ட கவிஞரும் பாரதி இலக்கிய சங்கத்தின் செயலாளருமான திலகபாமாவும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
புரிந்துணர்வுக்கான சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் நிகழ்ச்சியாக திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் கருத்துரை வழங்கும்போது இச் சந்திப்பில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றும் இப்படியான சந்திப்புக்கள் பெண்களிடையே நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் இலங்கைஇ மற்றும் புலம்பெயர் பத்திரிகைகளில் எவ்வளவோ அவதூறுகளை எழுதுகிறார்கள் என்றும் தான் பெண் என்ற ரீதியில் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் பத்திரிகைகளில் தன்னைப் பற்றி அவதூறாக தாக்கப்படுகின்றேன் என்றும் கூறினார். இப்படியான பத்திரிகைகள் யாரையோ திருப்பதிப்படுத்துவதற்காக இவற்றை செய்கின்றன. அது தனக்கு கவலை அளிப்பதாகவும் தனது கருத்துரையில் குறிப்பிட்டார்.
இவரை அடுத்து சுனாமித் தாக்குதலும் அதனாலேற்பட்ட பாதிப்புக்களும் என்பது பற்றி ஜெஷீமா பஷீர் பேசுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்ட பின்னர்இ தான் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள மக்கள் ஒண்றிணைந்து பணியாற்றியதாகவும் இந்த மூவின மக்களிடையே இருந்த பிரிவினைகள் மறக்கப்பட்டு ஒரு தாய் பிள்ளைகள் போல் அவர்கள் அங்கு சேவையாற்றியதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்ததாகவும்இ சாறி போன்ற நீள உடைகள்இ நீளத் தலைமயிர் போன்றன அவர்கள் தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சிக்கு பாதகமாகவே அமைந்தன என்றும் கூறினார். ஆனால் இப்பொழுது மீண்டும் பிரிவினைகள்இ வீட்டு வன்முறைகள் உட்பட வெளிநாட்டு அமைப்புகளின் தலையீட்டினால் உயளா கழச றழசம என்ற கோசங்களுக்கூடாக மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது குறைந்துபோயுள்ளது என்றும் குறிப்பிட்டார். அவரது உரையைத் தொடர்ந்து சுனாமியின் தாக்கம் பற்றிய கருத்துகள் மேலும்; கலந்துரையாடப்பட்டன.
அடுத்த நிகழ்ச்சியாக தென்கிழக்காசியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி ஓவியை வாசுகி உரையாற்றும் போது தென்கிழக்காசியப் பெண்கள் கடும் உழைப்பாளிகள் என்றும் இவர்கள் பாரம்பரியமாக வயல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் சுகாதாரம்இ தொழில்வாய்ப்புஇ பொருளாதாரம் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்றும் கூறினார். 60 வீதமான பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் அத்துடன் சாதிஇ பெண் சிசுக்கொலைஇ பெண்களை பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தல் போன்றவைகள் இந்தியாஇ பாகிஸ்தான்இ பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அதிகரித்துக் காணப்படும் வேளையில் உலகமயமாதலினால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே என்று பல உதாரணங்களுடன் விளக்கி கூறினார். றுந றுயவெ Pநயஉந in ளுழரவா யுளயை ழெவ Pநைஉநள ழக ளுழரவா யுளயை என்று பெண்கள் அங்கு கோசமிடுவதையும் கூறினார். நீண்ட நேரமாக நடைபெற்ற இக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
வாசுகியின் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து பெண்களின் உள உடல் நலம் பற்றி டாக்டர் கீதா சுப்பிரமணியம் தனது உரையில் அநேக பெண்கள் சமூகக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தமது வாழ்க்கை விதிமுறைகளை அமைத்துக் கொள்கிறார்கள் என்றும் இக் கட்டுப்பாடுகளும் சிந்தனைகளும் பெண்களின் உடற் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பதாய் அமைகிறது என்றும் சமூகக் கோட்பாடுகளின் நிமித்தம் குறிப்பிட்ட காலகட்டங்களில் ஏற்படும் உடல் மாற்றங்களின் போது சந்தேகத்திற்குள்ளாகும் பெண்கள் பலவித குழப்பங்களிற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.
இதனையடுத்து பெண்களின் புதியபடைப்புக்கள் பற்றி நான் சிறு அறிமுகமொன்றைச் செய்தேன். அனாரின் ஓவியம் வரையாத தூரிகைஇ சூரியா பெண்கள் அமைப்பினரால் வெளியிடப்படுகின்ற பெண் சஞ்சிகைஇ செய்திமடல்கள்இ பெண்கள் நலன் சுகாதாரக் கையேடுஇ சிறகுகள் விரிப்போம் சிறுகதைத் தொப்புஇ சிவகாமியின் ஆனந்தாயிஇ விடுதலையின் நிறம்இ நிருபாவின் சுணைக்கிது போன்ற நூல்களினை அறிமுகம் செய்தேன்.
அடுத்த நிகழ்ச்சியாக ஆசிய மருத்துவத் துறையின் முதற் பெண் என்ற கருத்தில் மீனா நித்தியானந்தன் உரையாற்றினார். உலகெங்கும் இருக்கும் பாலியல் தொழில் இந்தியாவிலும் இருந்திருக்கிறதுஇ பெயர் மட்டும் உயர்வு நவிற்சி அணியில் ~தேவதாசி முறை என்று சொல்லிக் கொள்ளப்பட்டது என்றார். இத் தேவதாசி முறை ஆரம்ப காலத்தில் கலாச்சாரம்இ பண்பாடுஇ இவற்றையெல்லாம் மீறி குறிப்பிட்ட மதம் குறிப்பிட்ட ஜாதி சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. பணக்கார சமூகம்இ மற்றும் நகர காலச்சாரத்தில் கூட இவை ஒரு முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்கு டாக்டர் முத்துலக்சுமி பெரும் பாடுபட்டார் எனக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது என்றும் அதன் தமிழாக்கம் விரைவில் வெளிவரவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ~பெண்கள் சந்திப்பு மலர்-2005~ வெளியீடு இடம்பெற்றது. 190 பக்கங்களில் வெளிவந்துள்ள இம் மலரைப் பற்றிய ஓர் அறிமுகத்தை மலர்க்குழுவின் சார்பில் உமா செய்தார். இந்த (9 வது) பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள் என்றும் பெண்கள் சந்திப்பு மலர் பெண்களுக்கு ஓர் எழுதுகளமாக இருந்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் கால நெருக்கடிகள் இருந்தும் அதையும் மீறி இச் சந்திப்புக்களை நடத்துவதோடு மட்டுமல்லஇ பெண்கள் சந்திப்பு மலரையும் கொண்டு வருவதில் கடுமையாக உழைப்பதையும் பாராட்டியே ஆகவேண்டும் என்றார். இதுவரை வெளிவந்த பெண்கள் சந்திப்புமலரிலும் பார்க்க இம் முறை பல புதிய பெண்கள் எழுதியுள்ளார்கள் என்றும் இந்த 9 வது பெண்கள் சந்திப்பு மலருக்கு ஆக்கங்களைத் தந்துதவிய பெண்களுக்கு நன்றிகூறி முதல் பிரதியை மல்லிகா வழங்க அதை ஓவியை வாசுகி; பெற்றுக்கொண்டார்.
இலக்கியத்தில் பெண்கள் என்ற கருத்தில் திலகபாமா தனது கருத்தை தெரிவிக்கும் போது ஆண்டாள் ஒளவை ஆகியோர் போன்றே சித்தர்களின் பாடல்களும் பெண்களைப் பற்றிப் பேசுகின்றன என்றார். அத்துடன் இவற்றையெல்லாம் நாம் பார்க்கத் தவறும் அதே வேளை பெண் மொழி பற்றிப் பேசுகிறோம். பெண்களின் உடல்மொழி பற்றிப் பேசுகிறோம். பெண்கள் பார்க்க படிக்க பல விடயங்கள் உள்ளன என்றார். அத்துடன் பால்வினைத் தொழிலை சட்டமாக்குவது பற்றிய சர்ச்சையும் எழும்பியுள்ளதாகவும் அதைவிட இன்று முக்கியமான விடயங்கள் பல உள்ளன என்றும் தனது கருத்தை முன்வைத்தார். இந்தியாவில் பல இலக்கியர்கள் இவைகளை கண்டுகொள்வதில்லை என்றும் கூறினார். திலகபாமாவின் இலக்கியத்தில் பெண்கள் என்ற கருத்தின்கீழ் பல விவாதங்கள் நடைபெற்றன. அத்துடன் ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அடுத்த நிகழ்ச்சியாக கவிஞர் நவாஜோதியின் கவிதைத் தொகுப்பான „எனக்கு மட்டும் உதித்த சூரியன்“ என்ற தொகுப்பை ராணி கீரன் அறிமுகம் செய்து வைக்கும் போது இக் கவிதைத் தொகுப்பானது நவாஜோதியின் முதல் தொகுப்பு என்றும் இரவது கவிதைகள் உணர்வுரீதியாகவும் பெண்களின் பிரச்சினைகளை கூறுபவையாகவும் புலம்பெயர்ந்த அவலங்களை சொல்வதாகவும் கூறினார். இத் தொகுப்பினை பலர் வாசிக்காததினால் இத் தொகுப்புக்கு கருத்துக்கள் குறைவாகவே பரிமாறப்பட்டன. ஆனாலும் இன்று புலம்பெயர் இலக்கியத் துறையில்; நவாஜோதியின் கவிதைகளும் பேசப்படுபவையாக உள்ளன என்பதும் வானொலியினூடாக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக அறிவிப்பாளராக நன்கு அறியப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
15.10.2005 கடைசி நிகழ்ச்சியாக அரசியல் வன்முறைகளும் பெண்களும் என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய நிர்மலா பேசுகையில் நிக்கரகுவாஇ கியூபா போன்ற நாடுகளில் பெண்கள் போராடினார்கள். அதன் காரணங்கள் வேறாக இருந்தன. வேலையின்மைஇ வறுமைஇ பாதுகாப்பின்மை ஆகியவை ஆண்கள் குடும்பத்தை விட்டுச் செல்ல காரணமாயின. கணவர்களையும் தந்தைகளையும் இழந்த குடும்பங்களின் பொறுப்பு பெண்களின் மீது விழுந்தது. எத்தகைய வேலையும் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் வீட்டு வேலைகள்இ சந்தையில் உணவுப் பொருட்களை விற்பதுஇ பால்வினைத் தொழிலில் ஈடுபடுவது என பெண்களின் உழைப்பு வருவாய்க்கு வழியானது. இதுதவிர சம்பளம் பெற்று வேலைகளில் ஈடுபட்ட பெண்கள் 1977 இல் மொத்த சனத்தொகையில் 28.7 வீதம். இது லத்தீன் அமெரிக்காவிலேயே அதிகபட்சம். தேசிய பொருளாதாரத்தில் அதிகமான பங்கு வகித்த காரணத்தினாலேயே பெண்கள் புரட்சியில் பங்கேற்றதும் இயல்பாகிப் போயிற்று. ஆனால் சுற்றிலும் இருந்த உலகம் வேறு நிர்ப்பந்தங்களை உருவாக்கியது. வரலாறு பெண்களை தெளிவான நிலைப்பாட்டுடன் சமூக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தது. ஆனால் இலங்கையில் நிலைமை வேறு விதமானது. ஆரம்பத்தில் இலங்கையில் இனப்படுகொலைகளுக்கு எதிராகவே இப் பங்கேற்பு நிகழ்ந்தது. ஆனாலும் விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே பெண்களுக்கான இராணுவப் பயிற்சி மிகவும் காத்திரமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சமூகப் பிரக்ஞையோ அல்லது பெண்ணியச் சிந்தனைகளோ ஊட்டப்படவில்லை. பெண்கள் துணிவாக போராடினார்கள். அதில் பல பெண்கள் தம் உயிரை இழந்தார்கள். ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் ஆயுதம் தூக்கினார்கள். ஆனால் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளனவே ஒழிய குறையவில்லை என்று பல உதாரணங்களுடன் தனது கருத்தை முன்வைத்தார்.
<b>அடுத்த நாள் 16.10.2005</b>
முதல் நிகழ்வாக பெண்களும் நாடகமேடையும் என்னும் தலைப்பில் றஜீதா சாம்பிரதீபன் பேசுகையில் தமிழ் நாடக அரங்கில் பெண் நோக்கப்படும் முறைமையையும் அரங்கினுடாக வெளிக்கிளம்பும் தன்மையையும் விபரித்தார். ஒரு நிகழ்கலையாக நாடகத்தின் உள்ளுடன்இ வடிவம் என்பது வாழ்வின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பரிமாறிக்கொள்வதாகவும் வெளிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் எனவும் அதேநேரம் படைப்பின் தரம்இ கலைத்திறமை என்பன தேவையெனவும்இ கலைஞர்களின் வெளிப்பாடு பார்வையாளர்களை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும் எனவும் கூறினார். இலங்கையில் மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்படும் நாடகங்கள் வீதி நாடகம்இ அரங்கியல் நாடகம் என வடிவங்கள் கொண்டுள்ளதாகவும் மெனகுரு ஜெய்சங்கர்இ ஜெயரஞ்சனி ஆகியோர் இன்று நாடகத்துறையில் பேசப்படுபவர்களாக உள்ளனர் என்றும் கூறினார். நாடகத்துறையில் பலருக்கு பரிச்சயமின்னையினால் ஒருசிலரே கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர். இங்கு கூத்து பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஊடகவியலாளர் தேவகொளரி பேசுகையில் „இலங்கையில் பெண்கள் பிரச்சினைகளும் ஊடகங்களும் கருத்துவாக்கமும்“ என்ற தலைப்பின் கீழ் பேசினார். அனேகமான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்றும் ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் கூடுதலாக ஆண்கள் என்பதால் அவர்களின் கருத்தாக்கமே முதன்மையாக இருக்கின்றது என்றும் பத்திரிகைகளில் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்படுவதோடு அதன் கடமை முடிந்துவிடுவதாகவும் சொன்னார். இப் பக்கத்தில் பெண்களுக்கான விடயங்கள் குடும்பத் தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் அல்லது சமையல் குறிப்புகள்இ அழகுபடுத்தல் முறைகள்;இ குழந்தை வளர்ப்பு போன்றவைகளே வருகின்றன எனவும் அதையும் மீறி பெண்கள் புதிய சிந்தனைகளை எழுதினால் எழுதும் பெண்கள் மீது அவதூறுகளையும் விமர்சனம் என்ற போர்வையில் ஆணாதிக்கக் கருத்துக்களையும் அள்ளி வீசத் தயங்குவதில்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்பு ஊடகங்களில் பல பெண்கள் ஊடகவியாளர்ராக வேலை செய்கின்றார்கள்இ ஆனால் அங்கு முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இன்னும் இல்லை என்றே கூறவேண்டும் என பல தரவுகளுடன் தனது கருத்தை வைத்தார்.
கனடாவில் இருந்து கலந்து கொண்ட நாடக குறும்படத் தயாரிப்பாளரும் சிறுகதையாசிரியருமான சுமதி ரூபனின் ஓரங்க (தனிநடிப்பு) நாடகம் கூட்டத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் எல்லோரையும் தனது நிகழ்த்தலுக்குள் இழுத்து வைத்திருந்தார். இவரது ஆளுமை பலராலும் பாராட்டப்பட்டது. கனடாவில் நடாத்தப்பட்ட குறும்படவிழாவில் சிறந்த கதையாசிரியர் விருது சுமதி ரூபனுக்கு கிடைத்திருப்பதை இங்கு குறித்துக் கொள்வது பொருத்தமானது.
அத்துடன் ஓவியர் அருந்ததிஇ ஒவியர் வாசுகி ஆகியோரின் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டதுமன்றி ஓவியங்கள் பற்றிய சிறு அறிமுகத்தையும் அவர்கள் செய்தார்கள். அருந்ததி தனது ஓவியங்கள் பற்றிக் கூறும்போது பெண்கள் மகளாய்இ மனைவியாய்இ தாயாய்இ சகோதரியாய்இ தோழியாய் பரிணமிக்கும் பாhத்திரங்களை -பெண்ணை அழகுப் பொம்மையாய் ஓவியத்தில் காட்டுவதை விட- அவளின் இயக்கத்தை ஓவியத்தில் கொண்டு வருவதை தனது கருத்துருவாக கைக்கொண்டுள்ளேன் எனக் கூறினார்.
வாசுகி தனது ஓவியம் பற்றி கூறுகையில் போர்ச்சூழல் தந்த அனுபவங்களையே ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்த எனக்கு சமூகத்தில் பெண்கள் நிலைபற்றியும் குறிப்பாக வன்முறைக்குட்பட்ட பெண்களுடன் வேலை செய்யக் கிடைத்த போது ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை நோக்கி நான் நகரவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன்இ அவைதான் என்னுள் ஓவியங்களாக பரிணமித்தன என்றார். எனது ஓவியங்கள் எல்லாம் துயரங்களையும் ஆத்திரங்களையுமே வெளிப்படுத்துபவையாக உள்ளன என்றார். குறிப்பாக கிரிசாந்தியின் மீதான பாலியல் வன்முறை உயிரழிப்பு என்பவற்றின் தாக்கத்திலிருந்து பிறந்த ஓவியம் ஏற்படுத்திய தாக்கம் கூடுதலானது என்றும் குறிப்பிட்டார்.
ஓவ்வொரு நிகழ்ச்சிகளின் முடிவிலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதில் பெண்களது பிரச்சினைகள் பெண்கள் செய்ய வேண்டியவைகள் பற்றிப் பேசப்பட்டன பெண்களுக்கு தனியான சந்திப்புக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான உளவியல் சந்தர்ப்பத்தை வழங்கும் எனவும்இ பெண்கள் அப்போதுதான் ஆண்நோக்கின் இடையீடற்ற கருத்துக்களில் சுதந்திரமாக வளரமுடியும் என்றும்இ எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு பக்குவம் வரும் என்றும் கருத்துக்கள் விரித்துக் கூறப்பட்டன.
பெண்கள் சந்திப்பானது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும் பங்குபற்றியோரால் கூறப்பட்டது. இவ்வாறாக சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் அடுத்த தொடர் 2006 ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடாத்துவதெனவும் முடிவாகியது.
<b>இச் சந்திப்பில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</b>
யோகேஸ்வரி முத்தையா (13) என்ற சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தங்கராஜா கணேசலிங்கத்திற்கு எதிரான தீர்மானங்கள் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல் வன்முறைகளால் இடம்பெயர்ந்திருக்கும் பெண்கள்இ குழந்தைகள் பற்றி கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை மற்றும் அரசியல் தஞ்சம் கோருவோரின் உரிமைகள் பற்றிய தீhமானங்களும் எடுக்கப்பட்டன.
கற்பு என்பதை நாம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் சமமாக வைப்போம் என்கின்ற எல்லையைத் தாண்டி வெறும் உடைத்தெறியப்படவேண்டிய கற்பிதமாகவே காண்கின்றோம். ஆகவேதான் குஷ்பு தெரிவித்த கருத்துகளை நாம் மனதார வரவேற்பதோடு அவருக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதோடு பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம்.
குஷ்புவிற்கு தனது கருத்தை இந்தவகையில் மட்டுமல்ல இதை கடந்தும் ஆக்ரோசமாக தெரிவிக்கும் உரிமையை உறுதிபடுத்துகிறோம். தமிழ் சமூகத்தில் உள்ள ஆணாதிக்க அடக்கு முறைகளை தொடர்ந்து பேண கலாச்சாரம் எனும் பெயரில் நாடகமாடும் அரசியல்வாதிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குஷ்புவை தமிழ் நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்கின்ற இனமேலாதிக்க வார்த்தைகளை வாபஸ் வாங்கவேண்டும் என்றும் இந்த ஆணாதிக்க அரசியல் இனவெறியர்களை கேட்டுக்கொள்வதோடுஇ ஏழை அப்பாவித் தமிழ் பெண்களை இதற்கெதிராக தூண்டிவிட்டு அரசியல் இலாபம் தேடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
குஷ்பு அவர்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட தமிழ் பாஸிஸ துரத்தியடிப்பு எண்ணக்கருத்துக்கள் அவருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக நாமும் தமிழர்கள் எனும் வகையில் அவரிடம் மன்னிப்பு கோருகிறோம்.
மேலும் எந்தப் பெண்ணும் எந்த இடத்திலும் தன்னுடைய கருத்துகளை அச்சமின்றித் துணிவுடன் வைப்பதற்கான சூழலை உருவாக்க உறுதிபூணுவோம்.
- றஞ்சி -
ழஉவ2005
நன்றி - ஊடறு பெண்கள் இதழ்
நன்றி மனஓசை சந்திரவதனாக்கா.
|
|
|
| ஈழத்துக்காட்சிகள் சில தேவை |
|
Posted by: இளைஞன் - 12-26-2005, 06:36 PM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
எனது பிரொஜெக்ட் வேலை ஒன்றுக்காய் ஈழத்துக்காட்சிகள் சில தேவைப்படுகின்றன. Digital Imaging ஊடாக "தாயகத்தின் மீதான மோகம்" என்கிற கருப்பொருளில் சில படங்களை செய்யவேண்டியுள்ளது. புலம்பெயர் வாழ்வையும், ஈழத்தில் இழந்த வாழ்வையும் ஒப்பிட்டு அதனைக் காட்சிப்படுத்த வேண்டும். எனவே அதற்கேற்றாற் போல சில பொருத்தமான ஈழத்துக் காட்சிகளைத் தேடுகிறேன். இணையத்தில் எங்காவது பெற்றுக்கொள்ளமுடியுமென்றாலும் நல்லது. அல்லது நீங்கள் ஊருக்கு சென்றபோது எடுத்த படங்களாக இருந்தாலும் நல்லது.
காட்சி 1: ஒருவர் (இளம் ஆள்) குந்தியிருந்து இளநீர் அருந்துவது போன்றோ, அல்லது நின்றுகொண்டு இளநீர் அருந்துவது போன்றோ இருக்கிற காட்சி.
காட்சி 2: ஒருவர் (இளம் ஆள்) நீர்வீழ்ச்சியில், அருவியில், குளத்தில் குளிப்பது போன்ற காட்சி.
காட்சி 3: இரவுநேரத்தில் ஈழத்து வானத்தின் தோற்றம். அதாவது நட்சத்திரங்கள், நிலவு வெளிச்சம் தோன்றுவது போன்ற காட்சி. அல்லது அந்திப் பொழுதில் வானத்தின் பல்நிறங்கள் தோன்றும் காட்சி.
காட்சி 4: பசுமையான வயல்வெளி, மேலெழும் பறவைகள், சுத்தமான காற்று இவற்றை வெளிப்படுத்தும் காட்சி.
காட்சி 5: இருபக்கமும் பனைமரங்கள், நடுவே பாதை அல்லது பனைமரக்காடு உள்ள காட்சி.
காட்சி 6: நீலக்கடல், அதன் மீதொரு படகு, மணற்கரை, அதிலொரு தென்னைமரம் உள்ள கடற்கரைக்காட்சி.
நல்ல தரமான படங்களாக இருந்தால் நல்லது. இணையத்தில் எங்காவது பெற்றுக்கொள்ள முடியுமென்றாலும் அவ்விணைப்பைத் தந்துதவவும்.
|
|
|
| இராணுவம் சூடு - இரு இளைஞர்கள் பலி |
|
Posted by: suddykgirl - 12-26-2005, 06:15 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இராணுவம் சூடு - இரு இளைஞர்கள் பலி
இன்று மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியாகினர். இன்று காலை 10.30 மணியளவில் மொறக்கொட்டாஞ்சேனைக்கும் சந்திவெளிப்பிரதேசத்திற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இரயில் பாதை அருகே இசச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து ஏறாவூர்ப் பிரதேச பொலிஸ் நிலையத்தில் படையினர் தெரிவித்த தகவலின்படி அந்த இரு இளைஞர்களும் தம்மீது சூடு நடத்த முற்பட்டதாகவும் அதன்பின்பே தாம் சுட்டதாகவும் சொன்னார்கள்
நன்றி
சங்கதி
இவ்வாறு சொல்லிச் சொல்லி தமிழ் இனத்தை அழித்துவிடுவார்கள் போல இருக்கு.
:evil: :twisted: :evil: :twisted:
|
|
|
| கேணல் கிட்டு பூங்கா இராணுவத்தினரால் அடித்துடைப்பு. |
|
Posted by: Vaanampaadi - 12-26-2005, 05:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
திங்கள் 26-12-2005 13:57 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]
கேணல் கிட்டு பூங்கா இராணுவத்தினரால் அடித்துடைப்பு. திருவுருவப்படங்கள் தீக்கிரை.
நல்லூர் முத்திரைச் சந்தையில் உள்ள கிட்டுபூங்கா இராணுவத்தினரால் நள்ளிரவு நேரம் அடித்துடைக்கப்பட்டுள்ளது. கடந்த இரவு இந்தப் ப+ங்காவில் வைக்கப்பட்டு இருந்த கேணல் கிட்டுவின் திருவுருவப் படம் உட்பட ஏனைய மாவீரர்களினதும் திருவுருவப் படங்களும் முத்திரைச் சந்தையில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் அடித்துடைக்கப் பட்டுள்ளது.
இந்த இடத்தில் வங்கக் கடலில் காவியமாண கேணல் கிட்டு உட்பட ஏனைய பத்துப் பேரினதும் திருவுருவப் படங்களும் வைக்கப்பட்டு இருந்தன. திட்டமிட்ட முறையில் இதனை அடித்துடைத்த இராணுவத்தினர் படங்களை எடுத்துச் சென்று வேறு இடத்தில் வைத்து தீயிட்டுச் சென்றுள்ளார்கள்.
முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள முகாமில் தங்கியுள்ள இராணுவத்தினர் கிட்டு பூங்காப் பகுதிக்குச் சென்ற பத்திரிகையாளர்களையும் தாக்கியுள்ளார்கள். கிட்டுவின் படங்கள் அடித்துடைக்கப்பட்டு இருப்பதை படம் எடுக்க விடாது அப் பகுதியில் இராணுவத்தினர் சுற்றி வளைத்து காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள்.
இவ் சிறுவர் பூங்கா யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமானதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Pathivu
|
|
|
| கண் பாதுகாப்பு.... |
|
Posted by: ப்ரியசகி - 12-26-2005, 05:01 PM - Forum: மருத்துவம்
- Replies (21)
|
 |
<img src='http://img265.imageshack.us/img265/1518/pg9t0vm.jpg' border='0' alt='user posted image'>
நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.
<b>முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்</b>
கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
<b>
கண்ணில் நோய் வரக் காரணமென்ன?</b>
முதலில் கூறியது போல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறும் பெற்றோர் ஒரு காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண்நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.
<b>உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க...</b>
வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.
<b>சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க...</b>
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)
பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.
புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.
<b>கண்பார்வை தெளிவடைய...</b>
பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
குமுதம்
|
|
|
| "செல்' பேசும் வார்த்தைகள்! |
|
Posted by: SUNDHAL - 12-26-2005, 09:36 AM - Forum: நகைச்சுவை
- Replies (18)
|
 |
(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு. அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன..ஒரு இளைஞன்.. காதலன் அவனது செல்போன் மனம் விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! "செல்' பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.)
ய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..(மெúஸஜ் ஒன்று வந்தடைகிறது.)
செல்: நிம்மதியா தூங்க உடுறாங்களா..சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல... இந்த நேரத்துல என்னடா மெúஸஜ் வேண்டி கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய "சாட்'தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிச்சிட்டான்யா..என்னைக் கையில எடுத்துட்டானே..ஆஹா பொண்டாட்டிதான் மெúஸஜ் அனுப்பியிருக்கா! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பரை "பொண்டாட்டி'ன்னு ஸ்டோர் பண்ணி வைச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..
""செல்லம் தூங்கிட்டியாடா?''
அடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம தூர்தர்ஷன்ல ஹிந்தி மெகா சீரியலாடி பாத்துக்கிட்டிருப்பாங்க! ஆஹா பதில் அனுப்பத் தொடங்கிட்டான்டா!
""ஆமா செல்லம்! இப்பத்தான் தூங்கினேன். கனவுல நீதான் வந்த! ரெண்டு பேரும் சுவிஸ்ல டூயட் பாடிக்கிட்டிருந்தோம்''
டேய் சத்தியமா சொல்லு. உன் கனவுல அவளாடா வந்தா! கடலை முட்டாயில இருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்குன கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமிதான் வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வைக்கு
கீய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..
பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு ஒருபடி மேல படுத்துவாளே. என்ன சொல்லியிருக்கா!
""உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?''
ஆமாடி, ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, லிப்ஸ்டிக் சரியா இருந்துச்சா, மல்லிப்பூ வைச்சிருந்தியா, ஹீல்ஸ் எத்தனை அடி உயரத்துல போட்டிருந்த எல்லாம் வரிசையாக் கேளு!
""டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த!''
டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா! ""டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்கு! நான் என்ன பண்ண?''
ஆங்..நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னாடா ரொமான்ஸ் வேண்டி கிடக்கு. அடங்குங்கடா!
""என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்மா!''
ச்சீ..தூ..எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதா..அந்த இலவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னாத் தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுடுச்சின்னு வெறுப்புத்தான் வரும். லூசுப்பய! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.
""யேய் புஜ்ஜூ, எனக்கு உன் பேரைச் சொன்னாத் தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!''
எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவனை விட, செல்லைப் படைத்து ப்ரீ எஸ்.எம்.எஸ்ûஸப் படைத்த மனுசன் தான் கொடியவன்'. போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல!
""செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?''
""உலக வங்கியில் இந்தியா வைச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?''
கடன்காரி. உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா. நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.
""முதல் டீச்சர். முதல் சம்பளம். முதல் கவிதை. முதல் காதல்...இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்''
டேய் அளக்காதடா! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெúஸஜைத் தான நீ அனுப்புன. நடத்து. நடத்து! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!
(அரை மணி நேரம் கழித்து, அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு "சாட்'டை முடிக்கிறான்.)
முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி ஏதோ நோண்டுறான். ஓ...என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வைக்கப் போறானா. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலேயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதான்டா! அதுவரைக்கும் "பொண்டாட்டி' திருப்பி "சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.
(காலை பதினொரு மணி..)
அட என்னமோ குறுகுறுங்குதே...ஓ ஏதோ ரிமைண்டர் செட் பண்ணி வைச்சிருக்கான். அதான் என்னது...
""இன்று திங்கள்கிழமை பல் தேய்க்க வேண்டும்''
அட நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா "ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான். விட்டா "பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்'னு கூட ரிமைண்டர் வைப்படா நீ! டேய் எவ்வளவு நேரம் தான்டா கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்தரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆஃப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான்போல! டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க விழப்போகுது, சோம்பேறி!
(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி...'(ரிங்டோன் ஒலிக்கிறது.)
அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான்.
""ஹலோ..ஆங்..குட் மார்னிங் சார்..கண்டிப்பா..இன்னிக்கு கண்டிப்பா முடிச்சிரலாம் சார்..இல்ல சார்...ஆமா கொஞ்சம் பிஸிதான்..ஒரு மீட்டிங்ல இருக்கேன்... ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே.''
தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியதிருக்கே! மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு. அலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிக்கிட்டே இரு. நானும் தூங்...
(செல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிறது.)
கற்பனை: முகில்
|
|
|
|