Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்துக்காட்சிகள் சில தேவை
#1
எனது பிரொஜெக்ட் வேலை ஒன்றுக்காய் ஈழத்துக்காட்சிகள் சில தேவைப்படுகின்றன. Digital Imaging ஊடாக "தாயகத்தின் மீதான மோகம்" என்கிற கருப்பொருளில் சில படங்களை செய்யவேண்டியுள்ளது. புலம்பெயர் வாழ்வையும், ஈழத்தில் இழந்த வாழ்வையும் ஒப்பிட்டு அதனைக் காட்சிப்படுத்த வேண்டும். எனவே அதற்கேற்றாற் போல சில பொருத்தமான ஈழத்துக் காட்சிகளைத் தேடுகிறேன். இணையத்தில் எங்காவது பெற்றுக்கொள்ளமுடியுமென்றாலும் நல்லது. அல்லது நீங்கள் ஊருக்கு சென்றபோது எடுத்த படங்களாக இருந்தாலும் நல்லது.

காட்சி 1: ஒருவர் (இளம் ஆள்) குந்தியிருந்து இளநீர் அருந்துவது போன்றோ, அல்லது நின்றுகொண்டு இளநீர் அருந்துவது போன்றோ இருக்கிற காட்சி.

காட்சி 2: ஒருவர் (இளம் ஆள்) நீர்வீழ்ச்சியில், அருவியில், குளத்தில் குளிப்பது போன்ற காட்சி.

காட்சி 3: இரவுநேரத்தில் ஈழத்து வானத்தின் தோற்றம். அதாவது நட்சத்திரங்கள், நிலவு வெளிச்சம் தோன்றுவது போன்ற காட்சி. அல்லது அந்திப் பொழுதில் வானத்தின் பல்நிறங்கள் தோன்றும் காட்சி.

காட்சி 4: பசுமையான வயல்வெளி, மேலெழும் பறவைகள், சுத்தமான காற்று இவற்றை வெளிப்படுத்தும் காட்சி.

காட்சி 5: இருபக்கமும் பனைமரங்கள், நடுவே பாதை அல்லது பனைமரக்காடு உள்ள காட்சி.

காட்சி 6: நீலக்கடல், அதன் மீதொரு படகு, மணற்கரை, அதிலொரு தென்னைமரம் உள்ள கடற்கரைக்காட்சி.

நல்ல தரமான படங்களாக இருந்தால் நல்லது. இணையத்தில் எங்காவது பெற்றுக்கொள்ள முடியுமென்றாலும் அவ்விணைப்பைத் தந்துதவவும்.


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)