Yarl Forum
கடலே கடலலையே......! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கடலே கடலலையே......! (/showthread.php?tid=1774)



கடலே கடலலையே......! - அனிதா - 12-26-2005

<img src='http://img474.imageshack.us/img474/3944/tsunami1rf.gif' border='0' alt='user posted image'>

<b>கடலே கடலலையே......!</b>

[size=14]
கனலலையாய் வந்தாய்
கடும் தாண்டவம் தான் ஆடினாய்
உயிர்களையே சூரையாடினாய்
உறவுகளை தான் அனாதையாக்கினாய்
இரக்கமில்லா இராட்சனாய்...!

உழைப்பையும் அள்ளிக் கொடுத்தாய்
உயிர்களையும் அள்ளி எடுத்தாய்
உறவின்றி தவிக்க விட்டாய்
உணர்வுகளை தான் கொதிக்க விட்டாய்...!

சொல்லாமல் தான் வந்தாய்..
சொந்தங்களையும் நீ கொன்றாய்..
கோரப்பசி கொண்டு தின்றாய்..
கொடுமை இதை நீயேன் செய்தாய்..!

என்ன கோபமோ உனக்கு..
என்ன பசியோ உனக்கு..
என்ன மனமோ உனக்கு...
என்று பேசத்தான் தோன்றுதே.
என்ன பேசினாலும் விளங்காதே உனக்கு...! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இயற்க்கை அனர்த்ததால் பலியான அனைத்து மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்... Cry Cry


Re: கடலே கடலலையே......! - தூயவன் - 12-26-2005

இழப்புகள் எமக்குப் புதிதல்ல. ஆனால் இந்த இழப்பு என்பது புதுவித துயரத்தை தந்தது. ஒரே நேரத்தில் எம் உறவுகளை அள்ளச் சென்றது மிகக் கொடுமை. Cry Cry


Re: கடலே கடலலையே......! - அனிதா - 12-26-2005

தூயவன் Wrote:இழப்புகள் எமக்குப் புதிதல்ல. ஆனால் இந்த இழப்பு என்பது புதுவித துயரத்தை தந்தது. ஒரே நேரத்தில் எம் உறவுகளை அள்ளச் சென்றது மிகக் கொடுமை. Cry Cry

ம்ம்ம் உண்மைதான்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Rasikai - 12-26-2005

கடற்கோள் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து வடித்த கவிதைக்கு நன்றிகள் அனி

Cry Cry .


- AJeevan - 12-26-2005

கடற்கோள் அனர்த்ததால் காலமான அனைவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

பாதிக்கப்பட்டு இருப்போருக்கு விடிவு கிடைக்கட்டும்.

கவிதைக்கு நன்றி


- yarlpaadi - 12-26-2005

அனிதா, கவிதை சுனாமி அனர்த்தங்களை நினைவூட்டுகிறது. நன்றி. எழுத்து பிழைகளை கவனித்து திருத்தி விடுங்கள்.


- கீதா - 12-26-2005

மிகவும் சோகமான கவிதை Cry Cry Cry Cry அனிதா தொடர்ந்து எழுதுங்கள்


- Vishnu - 12-26-2005

அனிதா.. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. சுனாமியை நினைவு படுத்திய உங்கள் கவிதைக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.


- ஆறுமுகம் - 12-27-2005

Vishnu Wrote:அனிதா.. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. சுனாமியை நினைவு படுத்திய உங்கள் கவிதைக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

ம்ம்ம்ம்...நண்றி.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry