Yarl Forum
மகிந்தாவுக்கு கனேடிய மாணவர் சம்மேளனம் கடிதம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மகிந்தாவுக்கு கனேடிய மாணவர் சம்மேளனம் கடிதம்... (/showthread.php?tid=1780)



மகிந்தாவுக்கு கனேடிய மாணவர் சம்மேளனம் கடிதம்... - Rasikai - 12-26-2005

<b>யாழ். பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவத்தை உடன் அகற்றுக - மகிந்தவிற்கு கனடிய மாணவர் சம்மேளனம் கடிதம் </b>

சிறீலங்கா இராணுவத்தை யாழ். பல்கலைக்கழக சுழலில் இருந்து உடன் அகற்றுமாறு கோரி சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு, கனடிய மாணவர் சம்மேளனத்தின் சார்பில், அதன் ஒன்ராரியோ மாநில பிரதிநிதி அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஒன்ராரியோ மாநிலத்தின் இரண்டு லட்சத்து ஜம்பது ஆயிரம் மாணவர்களை பிரிதித்துவப்படுத்தும் பிரதிநிதி, ஜெசி கிரேனார் என்பவரே இக்கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளாhர்.

கனேடிய தலைமை அமைச்சர் போல் மாட்டின், மற்றும் நோர்வே தலைமை அமைச்சர் ஜேன்ஸ் ஸ்ரொட்ல்ன்பேர்க் ஆகியோருக்கும் நகல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ.; பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், அதிகாரிகள் மீது ஒரு அமைதியான போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த எமது கரிசனையை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;. மேலும் யாழ் மாணவர் அலுவலகங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இராணுவக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.

கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவது அடிப்படை மனித உரிமை. மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்பதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில், யாழ். பல்கலைக்கழக சு10ழலை விட்டு இராணுவத்தை உடன் அகற்றுவது மட்டுமன்றி, கல்வி கற்றலுக்கான மாணவர்களின் அனைத்து தேவைகளையும் உடன் பூர்த்தி செய்யுமாறும் உங்களை வேண்டுகின்றோம். பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களைக் கொண்ட வவுனியா பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பல்வேறு தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வடபகுதி மாணவர்கள் மீது தொடரும் வன்முறைகள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானால், அதன்பால் அனைதுலக கவனம் திருப்பப்பட வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நான்கு ஆண்டுகளிற்கு முன்னரும் யாழ். பல்கலைக்கழக சமுகத்தின் மீது தொடுக்கப்பட்ட இராணுவ நெருக்குவாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் 'நெருக்குவாரங்கள் தணிந்து புரிந்துணர்வு வரும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு தற்போது வரும் செய்திகள் ஏமாற்றம் அளிப்பதாகவும், இது குறித்து உங்கள் அரசின் கண்டனத்தையும், வன்முறைகளை நிறுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் வேண்டி நிற்கின்றோம்", எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய மாணவர் சம்மேளனம், கனடாவில் உள்ள மாணவர்கள் அனைவரையும் அதன் 10 மாநிலங்களிலும் பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு அமைப்பு என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.


நன்றி http://www.eelatamil.net/sankathi/index.ph...d=885&Itemid=26


- MUGATHTHAR - 12-26-2005

இப்பிடியான செய்திகள் குறிப்பாக கல்வி கற்கும் இடங்களுக்கு படைத்தரப்புகள் நுளைவது உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவேண்டும் அவர்களின் அழுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்படுமானால் சில ஆக்கபுர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் உதாரணமாக பிபிசி சிஎன்என் போண்ற விரிந்த உலக சேவைகளின் இப்பிடியான செய்திகள் வருவதற்கு எமது ஊடகவியலாளர்கள் முயற்சிக்கவேணும் வெளிநாடுகளில் இருக்கும் படித்த சமூகத்தினர் சிந்திப்பார்கள் எண்டால் எமது சமூகத்துக்கு நல்ல ஒரு விடிவுஏற்படலாம்....................


- Anandasangaree - 12-26-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->