Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டிவி சீரியல்கள் எப்படி?
#1
<img src='http://img519.imageshack.us/img519/1492/1235qw.jpg' border='0' alt='user posted image'>

ஒரு பக்கம் குஷ்பு, சுஹாசினி பேச்சு தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டது. ஒருத்தனுக்கு ஒருத்திதான் இந்த மண்ணின் மாண்பு.

உயிரே போனாலும் கற்பு தான் முக்கியம் என்று ஆவேசத் தலைவர்கள் ரோட்டுக்கு வந்து கொடும்பாவி கொளுத்துகிறார்கள். இன்னொருபுறம் ஓசைப்படாமல் நம் படுக்கையறைக்குள்ளேயே கலாச்சாரத்தை கொத்து பரோட்டா போடும் அநியாயத்தை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம்!

தரணி என்கிற பையன் காதலிப்பது பூஜாவை. கல்யாணம் செய்து கொள்வதோ கல்கியை. வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே என்று கவுண்டமணி பாணியில் இன்னமும் தமிழ்நாட்டில் டி.வி. சீரியல்கள் அதிகம் பார்க்காத ஆத்மாவாக நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி. தரணியை பழி வாங்க பூஜா புறப்படுகிறாள். எப்படி? தரணியின் சொந்த சித்தப்பாவையே திருமணம் செய்து கொள்கிறாள். சரி, அத்தோடு இவர்கள் புரட்சி முடிந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை. தரணியிடம் பூஜா சொல்வது... இப்பவும் எனக்கு குழந்தை பிறந்தால் அது உன் மூலமாகத்தான் பிறக்கணும். எப்படியிருக்கு கல்கி தொடரின் மூல முடிச்சு?

கணவருக்காக சீரியலில் இன்னும் விபரீதம்... இன்னும் அபத்தம்... உயிருக்கு உயிரான இரண்டு தோழிகள். நட்புக்காக செய்யும் எத்தனையோ வித தியாகங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒருத்தியின் கணவரை இன்னொருத்தி திருமணம் செய்து கொண்டு தோழிக்கே துரோகம் செய்ய நினைக்கிறாள்.

அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம் டி.வி. சீரியல்களின் கதாசிரியர்கள் பேப்பரை எடுத்து இரண்டு என்ற போட்டு ஆரம்பிப்பது பிள்ளை சுழி என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை அதற்கு அர்த்தம். இரண்டு பெண்டாட்டி சப்ஜெக்ட். எந்த சீரியலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை என்று புருடா விட்டு, இரண்டு பெண்களை நாயகனுடன் சேர்த்து, கூடவே கொடுமைக்கார அத்தையையும் கொண்டு வந்துவிட்டால் வேலை முடிந்தது! ஒரு மகாமகத்திற்கு இழுக்கலாம்_ ஒரு கட்டத்தில் கதாசிரியருக்கே எங்கே ஆரம்பித்தோம் என்று மறந்துபோகும்வரை!

மனைவி சீரியலில் அரசு என்கிற அரசியல்வாதி ஒரு பெண்ணைக் காதலித்து, ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொண்டதும், வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அந்தப் பெண் தன்னம்பிக்கை உள்ளவளாம். போராடுகிற குணமுள்ளவளாம். நீ போடா டுபாக்கூர் என்று வேறொருவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். அவளையும் விடாமல் தொடர்ந்து டார்ச்சர் தருகிறான் அரசு. அப்பவும் ஒரு நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். நடிகை அரசை சைக்கோதனமாக காதலிக்க, இவளை வச்சு பணம் சம்பாதிக்க முடியாது என்கிற ஆதங்கத்தில் அம்மாக்காரியோ இவர்களை பிரிக்க நினைக்கிறாள். அரசு ஆம்பிளையே இல்லை என்று அவள் புது கரடிவிட, என் முதல் மனைவிக்கு பிறந்தது என் குழந்தை என்று அரசு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறான். உடனே நடிகை தன் கணவர் அரசுவின் முதன் மனைவியின் லேட்டஸ்ட் புருஷனிடம் படையெடுத்து இது என் அரசுவுக்கு பிறந்தது. எனக்கே சொந்தம் என்று கூச்சல்போட.. ஐயோ கடவுளே.. வெள்ளைக்காரன்கூட இவ்வளவு முற்போக்காக சிந்திப்பானா என்று பிரிட்டிஷ் கதாசிரியர்களிடம் கேட்க வேண்டும்!

செல்வியில் இரண்டாவது கல்யாணத்திற்காகவே தாமரையை கோமாவில் தள்ளுகிறார்கள். தாமரையின் அப்பாவும், அம்மாவுமே செல்வியின் காலில் விழுந்து நீதான் என் மாப்பிள்ளை ஜி.ஜே.வின் இரண்டாவது மனைவியாக வேண்டும் என்று கதறுகிறார்கள். செல்வி ஒப்புக்கொண்டு மாலை மாற்றிக்கொண்டு ஜி.ஜே.யின் கருவை சுமக்க, இப்போது... தாமரை கோமாவிலிருந்து வழித்தெழ வேண்டாமா? இரண்டு பெண்டாட்டிகள் தவிக்க வேண்டாமா?

அதே சீரியலில் பிரமாண்டமான முதுகுடன், வில்லத்தனம் செய்துகொண்டு பிரச்னைக்கு அலையும் ரஞ்சனி கேரக்டரை பாருங்கள். நல்ல புருஷனை உதாசீனம் செய்துவிட்டு, தவறான உறவில் தாய்மை அடைந்துவிட்டு, அதையும் மறைத்து கணவனோடு உறவாடுகிறாள். இன்னும் மோசம். மாயா கேரக்டர். தன் மனதுக்குப் பிடித்தவனை திருமணத்திற்கு முன்பு ஹோட்டல் ரூமிற்கு அழைக்கும் அளவுக்கு பாரதி காணாத புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்படுகிறாள்.

கோலங்கள் கதையும் என்ன வாழ்கிறது? ஏகப்பட்ட தவறான உறவுகள்... அபி அவளது தங்கைகள் மற்றும் தம்பியும் ஆதித்யாவின் அப்பாவிற்குப் பிறந்தவர்கள். அவர் அபியின் அம்மாவை முதல் தாரமாக மணந்துவிட்டு, பிறகு அவர்களை அம்போ என விட்டுவிட்டு மும்பைக்கு ஓடி ஆதித்யாவின் அம்மா கல்பனாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டவராம். பாதை சீரியலில் மோகன் என்கிற பாத்திரம் வரிசையாக நான்கு பெண்களை ஏமாற்றுகிறது!

இப்படி இவர்களது பண்பாட்டு கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால், ஒருநாள் போதாது. ஒரு குமுதம் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது.

ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டு, மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும்!

முறைகேடான உறவுகள் ஒருபுறமிருக்க, சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கை, இவை எல்லாமே குடும்ப சீரியல்கள் _ மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல்பூர்வமாக காட்டுகிறார்கள். ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? _பிளேடு பக்கிரிகளைத் தவிர! செல்வியில் ரொம்ப நேர்த்தியாக அதைக் காட்டியதோடு, அதை எதில் மறைத்து எடுத்துவரவேண்டும் என்கிற அளவுக்கு தெளிவாக, தமிழ் பேசும் மக்களுக்குப் பாடம் எடுத்தார்கள். மனைவி சீரியலில் தன் கணவர் அரசுவை உடனே பார்க்க வேண்டும் என்கிற வெறியில், சைக்கோதனமான நடிகை, பாத்ரூமிற்கு சென்று பொறுமையாக பிளேடால் கையைக் கீறிக்கொள்கிறாள். நம் உடம்பு சிலிர்க்கிறது. ரத்தம் குபு குபுவென்று கொட்ட, வாஷ்பேசின் முழுக்க ரத்தத் தண்ணீர்!

இப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும், முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமா? இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா? இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது? சமூக அக்கறையுள்ள எத்தனையோ பெற்றோர்கள் இப்படி நிறைய கேள்விகளுடன் கவலையோடு பார்க்கிறார்கள்.

அவர்கள் ஆதங்கம் நியாயமானது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற தைரியம் கொடுக்கும் சீரியல்கள் பலரது, குறிப்பாக பெண்களது மனதை நிச்சயமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீரியல் பெண்களோடு வாழ ஆரம்பித்துவிட்டார்கள். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று, தன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் ஒரு செய்தி. சீரியல்தான் எனக்கு அந்த துணிச்சலைக் கொடுத்தது என்கிறார் படு காஷ§வலாக. நமது கலாசாரத்தில் ஊறிப்போன விருந்தோம்பலுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் வேட்டு வைத்துவிட்டன. எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரும் விருந்தாளியும், சீரியல் நேரத்தில் வந்தால் அவர் வேண்டாத விருந்தாளியாக நெஞ்சு முழுக்க எரிச்சலுடன் வரவேற்கப்படுகிறார். அவ்வளவு ஏன், பல வீடுகளில் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் கணவன், மனைவியோடு மனம் விட்டு பேசிக்கொள்வதுகூட முடியாமல் போகிறது. பல தாய்மார்களுக்கு குழந்தைகள் படிப்பைக் கவனிப்பதுகூட இரண்டாம்பட்சமாகி விடுகிறது.

சீரியல் பிசாசுகளையும், அதனால் ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தைப் பற்றியும் சீரியஸாக ஆராய வேண்டிய நேரம் இது! இந்த விபரீதப் போக்கு சீக்கிரமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!

குமுதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
வெரி சொறி.... மதன் இதை தடுத்து நிறுத்த வெளிக்கிட்டால் கொலையும் செய்வாள் பத்தினி எண்டதை வீட்டிலை செய்து காட்டிப்போடுங்கள் எங்களின் பெண்முரசுகள்..............
ஆரம்ப காலங்களில் நல்ல தொலைக்காட்சி தொடர்கள் வந்தது உண்மைதான் ஆனால் போக போக பெண்களை கொடூரமாக காட்டத் தொடங்கியிட்டார்கள் அப்படியிருந்து இதை சாப்பிடாமல் ஆ.......வெண்டு பாக்கிற பெண்கள் கூடிக் கொண்டுதான் போகிறார்களே ஒழிய குறைந்தபாடில்லை..........
குமுதம் சரியான தகவல்களைச் சொல்லும்போதும் தனக்கு போட்டியான குங்குமம் நிறுவன சண்டிவி தொடர்களை விமர்சித்திருப்பதும் ஒரு வியாபார நோக்கம் போலத்தான் தெரிகிறது (கல்கி நீங்கலாக.........)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
என்னமோ போங்க.. இந்த லூசு தொடர்களை எல்லாம் நம்ம தொலைக்காட்சிகளிலும் ஒளி பரப்பிறார்கள். இதை தடுக்க ஏதாவது செய்யக்கூடாதா..?? மகாசனங்களே..?? :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
உண்மைச் சொன்னா நீங்க லூசு எங்கிறீங்க ...........பிறகு விழுந்தடிச்சு றேப் பண்ணி பாக்கிறதும் நீங்கள்தான்....... பேசாம வீட்டிலை இருக்கிற ரிவியை வித்துவிட்டா பிரச்சனையில்லை என்ன டமிழ்.................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அது அவர்களின் தொழில். நீங்கள் விழுந்தடித்து பார்க்கச் சொல்லி அவர்களா சொல்லுகினம். பிறகு அவனில் குற்றம் சாட்டினால் எப்படி? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#6
ஆகா..இதை நான் குமுத புத்தகத்தில் படித்தேன்..படிக்கும் போது என்னவோ...அவர்கள் சொல்வது உண்மை போல தோன்றியது. :roll: ஆனால் அதை ஒரு பொழுது போக்காக எத்தனையோ பெண்கள் ஏன் சில ஆண்களும் கூட பார்த்து வருகின்றனர். வயது போனவர்களும் கூட..அப்படிப்பார்க்கப்போனால்..இதை விட சொல்வது சரியல்ல..அவர்கள் வாழ்ந்து முடித்தவர்கள் பொழுது போக்கிற்காக பார்க்கலாமே...அவர்கள் இனிமேல் (வயது போன காலத்தில்) மாறி விடுவார்களா என்ன??(நான் நினைக்கிறேன்) :roll:
இத்தோடு முகத்தார் அங்கிள் சொல்வது போல..இதனால் எவ்ளோ பிரச்சனைகளூம் வருகிறது. சிலர் ஊறியே போய் விடுகின்றனர் ..அது என்னவோ சரியல்ல தான்..ஆனால் அதற்கு என்ன செய்வதென்று எனக்குத்தெரியல.. அதற்காக டீவியை விற்கப்போனால்..பிள்ளைகள் எதை பார்ப்பதாம்? :roll: :wink:
அதனால்...அவரவர்கள் உணர்ந்து செயற்படணும்..சும்மா மற்றவர்களை சாட்டுவது முட்டாள்தனமாக்கும் :!:
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)