![]() |
|
சமயல் விஷயங்கள்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: சமயல் விஷயங்கள்.. (/showthread.php?tid=1777) |
சமயல் விஷயங்கள்.. - SUNDHAL - 12-26-2005 * இறாலை சுத்தப்படுத்தி அதனை கூட்டோ, குழம்போ வைப்பதற்கு முன்னால் அதில் தயிரும் உப்பும் கலந்து அரை மணிநேரம் வைத்திருங்கள். அதன் பின்பு கூட்டு வைத்தால் புதிய சுவை கிடைக்கும். * மீன் குழம்பு வைப்பதற்கு அரைக்கும் மசாலை ரொம்ப மாவு போல் ஆக்கிவிட வேண்டாம். ஓரளவு துறுதுறுப்பாக இருப்பது நல்லது. * மீன் வறுப்பதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒரு மணிநேரம் வைத்திருந்து விட்டு பின்பு வறுத்தால் மீனுக்கு அதிக சுவை கிடைக்கும். * சூடான எண்ணையில் ஒரு தேக்க ரண்டி மைதா சேர்த்து கிளறிவிட்டு பின்பு மீனைவறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப்பிடிக்காது. * நெத்தலி மீனை குழம்பு வைக்கும்போது அதில் புளி சேர்ப்பதற்கு பதில் மாங்காய் சேர்த்தால் அதிக ருசி கிடைக்கும். * மீன் ஊறுகாய் தயாரிக்க முதலில் மீனை கழுவி, வெட்டி அதில் இருக்கும் தண்ணீரை துடைத் தெடுங்கள். பின்பு அதில் மசாலாவைப் பூசி அரை மணிநேரம் வைத்திருங்கள். அடுத்து அதனை நல் லெண்ணையில் வறுத்தெடுக்கவேண்டும். அதில் மீதம் இருக்கும் எண்ணையையும் வடிகட்டி ஊறுகாயில் சேர்த்துவிடலாம். * முட்டைக்கோஸ் மூலம் தயாரிக்கும் எந்த கூட்டி லும் சிறிதளவு இஞ்சி சேருங்கள். சேர்த்தால் முட்டைக் கோசில் இருந்துவரும் பிடிக்காத மணம் போய் விடும். * பீன்ஸ் சற்று உலர்ந்த நிலையில் இருந்தால் அதனை ஒரு மணிநேரம் தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். மீண்டும் புதியது போல் ஆகிவிடும். * உளுந்துவடைக்கு மாவு அரைக்கும் போது தேவைக்கு தண்ணீர் விடாமல், உப்பு கரைந்த நீரை பயன்படுத்துங்கள். அவ்வாறு செய்தால் வடைக்கு அதிக சுவை கிடைக்கும். * காய்ச்சாத பாலில் உறை ஊற்றி வையுங்கள். மறுநாள் கோதுமை மாவில் அதைக்கலக்கி தோசை சுட்டால் கோதுமை தோசை அதிக ருசியாக இருக்கும். * மிளகாய்த்தூள் அரைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சில கல் உப்புகளை போட்டு வைத்தால் மிள காய்த்தூள் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். *தேங்காயைத் துருவி அதை கொதித்த நீரில் போட்டுவையுங்கள். கை தாங்கும் அளவுக்குரிய சூட்டில் அதனை பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும். Thanks:Thanthi... - shobana - 12-26-2005 என்ன சுண்டல் எல்லாம் சுட்டது தான் போடுவீங்களா?? சுடாமல் ஏதாவது உங்க ஆக்கம் இருந்தா போடுங்க - Vishnu - 12-26-2005 தகவலுக்கு ரொம்ப் நன்றி சுண்டல்..... சுண்டலின் போக்கை பார்த்தால் விரைவில் குடும்ப வாழ்வில் இணைவதற்கு ஆயத்தமாகிறார் போல இருக்கிறதே.. - Vishnu - 12-26-2005 shobana Wrote:என்ன சுண்டல் எல்லாம் சுட்டது தான் போடுவீங்களா?? சுடாமல் ஏதாவது உங்க ஆக்கம் இருந்தா போடுங்க சுடாமல் என்றால் சமைச்சதா போடசொல்லுறிங்களா?? - shobana - 12-26-2005 Vishnu Wrote:தகவலுக்கு ரொம்ப் நன்றி சுண்டல்..... என்ன விஷ்ணு பக்கத்து இலைக்கு பாயாசமா?? - Vishnu - 12-26-2005 shobana Wrote:Vishnu Wrote:தகவலுக்கு ரொம்ப் நன்றி சுண்டல்..... ம்ம்ம்... அப்படி இல்லை ஸோபனா... நான் எனக்கு வேணும் என்றால் எனக்கு பாயாசம் வேணும் என்று ஓபெனாவே கெட்பன்... இப்ப வேணாம்.. இன்னும் சோறு முடியவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shobana - 12-26-2005 Vishnu Wrote:அனுபவத்தை போடலாம் இல்லையா???shobana Wrote:என்ன சுண்டல் எல்லாம் சுட்டது தான் போடுவீங்களா?? சுடாமல் ஏதாவது உங்க ஆக்கம் இருந்தா போடுங்க - SUNDHAL - 12-26-2005 அது சரி இருந்தா தானே போட..........சும்மா வாசிக்கிறத நீங்களும் பாருங்க ணு போட்டா insult பன்னிறிங்களே... வேணாம் அப்புறம் நான் அழுதிடுவன்....
- Vishnu - 12-26-2005 SUNDHAL Wrote:அது சரி இருந்தா தானே போட..........சும்மா வாசிக்கிறத நீங்களும் பாருங்க ணு போட்டா insult பன்னிறிங்களே... வேணாம் அப்புறம் நான் அழுதிடுவன்.... சுண்டல் உங்க கூட நக்கல் அடிக்காம நாங்க யாருகூட பண்ணுறது நீங்க அழாதேங்க.. அப்புறம் நானும் அழுதிடுவன் ஆமா..
- ப்ரியசகி - 01-02-2006 என்ன இந் தப்பக்கம் ஒரே வெள்ளமா கிடக்கே...இராவணன் அண்ணா அரிவாளை விட்டுட்டு...டுவைலை(தண்ணி துடைப்பது) :roll: எடுக்கணும் போல... :evil: :twisted: - SUNDHAL - 01-03-2006 அடபாவிங்கலா..விட்டால் அவர தொடப்பம் கட்ட கூட எடுக்க வைச்சிடுவிங்க போல இருக்கே....... - ப்ரியசகி - 01-03-2006 SUNDHAL Wrote:அடபாவிங்கலா..விட்டால் அவர தொடப்பம் கட்ட கூட எடுக்க வைச்சிடுவிங்க போல இருக்கே....... நான் இல்லை நீங்கள் எல்லாரும் தான்..ஓவரா பீல் பண்ணி பில்ட் அப் குடுக்கிறீங்கள்? பேசாமல் போய் சமையலை பார்ப்பியளா..அதை விட்டுட்டு :evil: Re: சமயல் விஷயங்கள்.. - RaMa - 01-04-2006 SUNDHAL Wrote:* இறாலை சுத்தப்படுத்தி அதனை கூட்டோ, குழம்போ வைப்பதற்கு முன்னால் அதில் தயிரும் உப்பும் கலந்து அரை மணிநேரம் வைத்திருங்கள். அதன் பின்பு கூட்டு வைத்தால் புதிய சுவை கிடைக்கும். நன்றி சுண்டல் தகவலுக்கு...... - gausi - 01-04-2006 மிகவும் நன்றி உங்கள் சமையல் குறிப்பிற்கு |