![]() |
|
உலகமெங்கும் அஞ்சலி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உலகமெங்கும் அஞ்சலி! (/showthread.php?tid=1781) |
உலகமெங்கும் அஞ்சலி! - hari - 12-26-2005 உலகமெங்கும் அஞ்சலி! உலகமெங்கும் அஞ்சலி! உறவினர்க்கு அஞ்சலி! ஒருவருடம் ஆனபின்பும் உறங்கிடாத அஞ்சலி! அலையெழுந்து பொங்கியே அழிவுதந்த நாட்களை அழுதகண் சிவக்க நாம், நினைவுகூரும் அஞ்சலி!! ஆழிகொண்ட வேட்கையும் ஆடிநின்ற வேட்டையும் அல்லலுற்ற கொடுமையும் அதிரவைத்த வெறுமையும் ஊழிக்காற்று போல்,கடல் ஊரைமேய்ந்த காட்சியும் உள(ம்)நடுங்க எண்ணி நாம், உருகுகின்ற அஞ்சலி! மனையிழந்த கணவரும் துணையிழந்த மாதரும் மறுகிநின்ற துயர்தனை மனதிலேந்தும் அஞ்சலி! வினையிழந்த பிறவியாய் வேதனைக்குள் வாடியோர் விழிநனைந்த ஞாபகம் விரிந்துதோன்றும் அஞ்சலி! ஆண்டுஒன்று ஆயினும், நேற்றுபோலத் தோன்றுதே.. ஆழிசெய்த தாண்டவம் அகலவில்லை நினைவிலே.. வேண்டுகின்ற பொழுதெலாம் அமைதியான அழுகையே.. விழிசுரந்த நிலையிலே யாம்நடத்தும் தொழுகையே.. மறைந்துவிட்ட போதிலும் மறந்துகொள்ள முடியுமோ? மாபெரும் இழப்புதான் மனதைவிட்டு மறையுமோ? மறைந்த தமிழ்ச் சோதரர், நமது ரத்தம் அல்லவோ? மாசிலாத உயிர்ப்பலி கொடியசோகம் அல்லவோ? இயற்கைகொண்ட சீற்றமென்(று) இலக்கியங்கள் கூறினும், இழந்துநாங்கள் நிற்ப(து) எம் உறவுச்செல்வம் அல்லவோ? இரக்கமற்ற இதயமோ இயற்கைபெற்ற(து) என்பதோ! இயக்கமற்றுச் சோர்ந்த(து) எம் இனியகுலம் அல்லவோ?.. கத்துகடல் பேரலை தந்தகாயம் ஆறலை: கலங்கிநின்ற உயிர்களுக்(கு) ஆறுதலும் வேறிலை: இத்தருணம் அவர்களுக்(கு) யாம்செலுத்தும் அஞ்சலி எத்தனைநாள் ஒத்தடம் என்றுகூடத் தெரியலை சென்றுவிட்ட உறவுகாள்! சென்றதெங்கு? சொல்மினோ! திரும்பிவருவ(து) எந்தநாள்? காத்திருப்போம், அறிமினோ! ஒன்றுபட்ட தமிழினம் வழங்குகின்ற அஞ்சலி! உலகமெங்கும் அஞ்சலி! உங்களுக்(கு)எம் அஞ்சலி!! <b>தொ. சூசைமிக்கேல்</b> ( tsmina2000@yahoo.com ) <img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.bloomingroses.com/bloom_rose_images/sympathy_funeral/symp09.jpg' border='0' alt='user posted image'> - Rasikai - 12-26-2005 இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஒராண்டு நினைவஞ்சலிகள். அவர்களை நினைவு கூர்ந்து வடித்த கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் ஹரி. - Mathan - 12-26-2005 கவிதையை இணைத்தமைக்கு நன்றி ஹரி. ஹும் ஒரு வருடம் ஆகிவிட்டது ... இன்னும் வடுக்கள் அழியவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 12-26-2005 நன்றி ஹரி கவிதைக்கு.................. ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இறந்தவர்களை விட இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்க நமது அரசாங்கம் முன்வந்தது உண்மையாக அவர்களின் மனத்தாக்கங்கல் இலகுவில் மறக்கப்பட கூடியதல்ல......... - tamilini - 12-26-2005 ஒராண்டு ஓடிப்போச்சு.. அந்த நினைவோடு சூசை மைக்கேலின் கவி வந்த அண்ணாவுக்கு நன்றிகள். நாம் இழந்த உறவுகளிற்கு அஞ்சலிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Vishnu - 12-26-2005 ம்ம்ம்... கவிதைக்க நன்றி ஹரி அண்ணா.... ஒருவருடம் பூர்த்தி அடைந்து விட்டாலும்.. இன்னும் அதன் விம்பங்கள் அழியவில்லை.
- Selvamuthu - 12-26-2005 அஞ்சலிக்கவிதைக்கு நன்றிகள் பல. சென்ற வருடம் இதே நாளில் காலை எழுந்தபோது தொலைக்காட்சிகளில் அழுகுரல் கேட்டது இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது. இன்று காலை எழுத்தபோதும் அந்தத்தாக்கம் இருப்பதை உணர்ந்தேன். அவர்களுக்காக ஒருமுறையேனும் எல்லோரும் பிரார்த்திப்போம். கவிதைக்கு நன்றி ஹரி. - ப்ரியசகி - 12-26-2005 [quote][b]இயற்கைகொண்ட சீற்றமென்(று) இலக்கியங்கள் கூறினும், இழந்துநாங்கள் நிற்ப(து) எம் உறவுச்செல்வம் அல்லவோ? எத்தனையோ முகமறியாத உறவுகளை..நாங்கள் போரினால் தான் இழந்தோம் என்றில்லை...இந்த ஒரு கோர நிகழ்வும் தன் பங்கிற்கு அள்ளிச்சென்று விட்டது..அவர்களுக்கு என்னுடைய நினைவஞ்சலிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- jeya - 12-26-2005 வார்த்தைகளால் கூறிவிட முடியாத சோகங்கள் ........... காரணம் அலை தந்து விட்டுப்போன வடுக்கள் மிக மிக ஆழமான வடுக்களை அல்லோ... |