![]() |
|
கிரிக்கெட் திருமதிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: கிரிக்கெட் திருமதிகள் (/showthread.php?tid=1779) |
கிரிக்கெட் திருமதிகள் - Mathan - 12-26-2005 <img src='http://img246.imageshack.us/img246/7580/pg5t0ya.jpg' border='0' alt='user posted image'> இந்த முறை இந்தியா வந்திருக்கும் இலங்கை அணி வீரர்கள் ஏதோ பிக்னிக் வந்தவர்கள் போல் மிக ஜாலியாக இருக்கிறார்கள்! பலர் தங்கள் மனைவிகளுடன் வந்திருந்தார்கள். உலகில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத ரெக்கார்ட் எனக்கு இருக்கிறது தெரியுமா? என்று நம்மை கேட்டார் சமந்தா வாஸ். நன்றாகத் தமிழ் பேசுகிறார். என்னைப் போல் பெரிய பெயர் கொண்ட வீரர் உலகில் யாருமே இல்லை தெரியுமா? என்று தன் கேள்விக்கு பதில் சொன்ன வாஸ், தன் பெயரைச் சொன்னார். அவர் பெயரைச் சொல்லி முடிப்பதற்குள், ஒரு குட்டித் தூக்கமே போட்டுவிடலாம். அவரது முழுப்பெயர்: வர்ணகுல சூரிய பதவெண்டிகெ உஷண்ந்த ஜோசப் சமந்தா வாஸ். அப்பாடா! யாராவது உங்களை முழுப்பெயர் சொல்லி கூப்பிட்டிருக்கிறார்களா? என்று கேட்டால், சிரிக்கிறார். பத்திரிகையாளர்கள் என்னை வாஸ் என்கிறார்கள். கிரிக்கெட் அணி நண்பர்களுக்கு நான் சமந்தா. என் பால்ய நண்பர்களுக்கு ஜோசப். சென்னையில் எம்.ஆர்.எஃப். பேஸ் பவுண்டேஷனில் பயிற்சி பெற்றதால், தமிழ் தங்கு தடையின்றி வருகிறது. பயிற்சி கொடுத்தவர்கள் டென்னிஸ் லில்லியும், டி.ஏ.சேகரும் _ இருவரைப் பற்றி பேசும்போதும் குரலில் குரு மரியாதை வந்துவிடுகிறது. இந்தியா பிடித்திருக்கிறதா? ரொம்ப. நான் அடிக்கடி சென்னை வந்து போயிருப்பதால், சென்னை எனக்கு இன்னொரு வீடுபோல் ஆகிவிட்டது. பொதுவாய், கிரிக்கெட் பயணங்களின்போது குடும்பத்தை அழைத்துக்கொண்டு போகமாட்டேன். பக்கத்துநாடு என்பதால், குடும்பத்துடன் கிளம்பிவிட்டோம். ஷாப்பிங் செய்து அவர்களுக்கு பொழுதுபோகிறது என்று உற்சாகமாய்ச் சொல்கிறார்; பர்ஸிலுள்ள பணம் போவதைப் பற்றி கவலைப்படாமல். தனது இளம் மனைவி எஹாலியுடன் வந்திருக்கிறார் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்ககாரா. ஹோட்டல் வளாகத்தில் தன் மனைவியின் கழுத்துக்கேற்ற மணிமாலையைத் தேடிக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். கல்யாணமாகி ரெண்டு வருஷமாயிடுச்சு. ஆனால் மனைவியோடு நேரத்தைச் செலவழிக்க இயலவில்லை. முழுநேரமும் கிரிக்கெட்டே ஆக்கிரமித்துவிட்டது. அதனால், இந்த முறை மனைவியையும் அழைத்து வந்துவிட்டேன் என்று சொல்ல, திருமதி. சங்ககாரா முகத்தில் வெட்கச் சிரிப்பு. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில் இடம்பெற்றுவிட்டார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் உலக அணிக்கு இவர்தான் விக்கெட் கீப்பர். ரொம்பப் பெருமையாக இருந்துச்சு. விக்கெட் கீப்பராய் நான் சிறப்பா செய்வதற்குக் காரணம், முத்தையா முரளிதரன்தான். அவர் போடும் பந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய் இருக்கும். அந்தப் பந்துகளைப் பிடித்துப் பிடித்துப் பழகி நல்ல அனுபவம் கிடைத்துவிட்டது. நீங்கள்தான் இலங்கை அணியின் அடுத்த காப்டன் என்கிறார்களே? நானா? (பலமாக சிரிக்கிறார்) நல்லதையே நினைப்போம். வேறொன்றையும் நான் சொல்லப் போவதில்லை என்று சொல்லும் சங்ககாராவுக்கு, டேவிட்கோவரின் ஆட்ட ஸ்டைலும், ஸ்டீவ் வாக்கின் தன்னம்பிக்கையான மனமும் மிகவும் பிடிக்குமாம். இலங்கையின் சிறந்த ஆல்ரவுண்டர் தில்ஷனும் மனைவியுடன் வந்திருந்தார். அவர் மனைவிக்கு சென்னையில் துணிகள் வாங்குவது என்றால், மிகவும் பிரியமாம். தி.நகரிலுள்ள எல்லா ஜவுளிக் கடைகளுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டார். எனக்கும் உடைகள் மீது ஆசை அதிகம். விதவிதமா டிரஸ் வாங்கிப் போடுவேன். என் மனைவிக்குப் பட்டுப் புடவைகள்னா ரொம்பப் பிடிக்கும். ஷாப்பிங் செய்ய உலகிலேயே சென்னைதான் சிறந்த இடம் என்று சென்னை கடைக்காரர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்குகிறார் தில்ஷன். தமிழ் சரளமாக வருகிறது. எங்கள் ஊரில் எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அப்படியே கத்துக்கிட்டேன். அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் மேன் ஆஃப் தி மேட்ச் ஆனதை, பெருமையான இந்திய நினைவாக சொல்கிறார். இரண்டு வருடங்கள் அணியில் இல்லாமல் இருந்ததை வருத்தத்துடன் கூறுகிறார். சரியா விளையாடாததால ரெண்டு வருஷம் டீம்ல செலக்ட் ஆகலை. ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அப்புறம் நல்லா விளையாடி டீம்ல சேர்ந்துட்டேன். அந்த இடத்தை தக்க வச்சிக்கணும் என்று சொல்லும் அவர் குரலில், ஓர் உறுதி தெரிகிறது. இந்த கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்தபோது, ஒரு விஷயம் புரிந்தது. இவர்கள் கிரிக்கெட் விளையாட மட்டும் வரவில்லை. kumudam - MUGATHTHAR - 12-26-2005 அட நாசாமா போணவங்கள் இந்தமுறை இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட்டை எங்கை விளையாடியிருக்கிறாங்கள் எண்டு இப்பதானே விளங்குது.................... - அருவி - 12-26-2005 MUGATHTHAR Wrote:அட நாசாமா போணவங்கள் இந்தமுறை இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட்டை எங்கை விளையாடியிருக்கிறாங்கள் எண்டு இப்பதானே விளங்குது.................... அட அதுதானா காரணம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 12-26-2005 அருவி Wrote:MUGATHTHAR Wrote:அட நாசாமா போணவங்கள் இந்தமுறை இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட்டை எங்கை விளையாடியிருக்கிறாங்கள் எண்டு இப்பதானே விளங்குது.................... ம்ம்ம்... ஓ.... |