![]() |
|
தமிழரின் இராஜதந்திரம் - ஒரு மதிப்பீடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழரின் இராஜதந்திரம் - ஒரு மதிப்பீடு (/showthread.php?tid=1803) |
தமிழரின் இராஜதந்திரம் - ஒரு மதிப்பீடு - adsharan - 12-25-2005 டிசம்பர் 24 ஆம் நாளுடன் விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை தாமாக முன்வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐந்து வருடங்களை எட்டிப் பிடிக்கப்போகிறது சிறிலங்கா அரசாங்கம் - தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்பாடு. முறிந்து விட்டது என்று நினைத்த நிலையிலும் இல்லை என்று நிமிர்ந்து எழுந்து நின்று கொண்டிருக்கிறது இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு. சாதித்து விட்டதாக சிங்களத்தின் பறைசாற்றல். தமிழர் தரப்பைக் கூறுபோட்டுச் சாதித்து விட்டதாக அதற்கு வியாக்கியானம் வேறு. சட்டாம்பிள்ளை கணக்கில் சமாதானத் தூதுவர்கள். பிரம்பு கையில் இல்லையென்றாலும் "தடை செய்வோம்” என்ற துருப்பை வைத்துக் கொண்டு மிரட்டுகிற பாணியில் சமாதானத் தூதுவர்கள். இதற்குள் சிங்களத்திற்கு மூன்றாவது தலைமை மாற்றம். ரணிலைத் திட்டித் தீர்த்தபடி வந்தார் சந்திரிகா. அவரை முடக்கி வைத்துவிட்டு முன்னோக்கி வந்தார் ராஜபக்ச. ராஜபக்சவிற்கும் மற்றைய இருவருக்கும் என்ன வித்தியாசம்? பெரிதாக ஒன்றுமில்லை- ராஜபக்ச இன்னமும் தமிழர் தரப்புடன் எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை. மற்றைய இருவரது அரசாங்கங்களையும் போல, அவ்வளவு தான். மற்றப்படி, வரலாறு சிங்களவர்களிற்கு புதியதொரு விதியைப் புகட்டி நிற்கிறது. நான்கு ஆண்டுகளுக்குள் மூன்று தலைமைகள். ஒருவர் மற்றவருக்கு நேரெதிர் புலியெதிர்ப்பைத் தவிர. பேசித் தீர்க்கவேண்டியவர்கள் கிளிநொச்சியில் இருக்க, சிங்களம் சர்வதேசமெங்கும் முறையிடுகிறது. அவர்கள் பாணியிலேயே அவர்களிற்கு பாடம் புகட்டப்படுகிறது. புதிய கல்வித் திட்டம், புதிய நடைமுறை. சிங்களத்தின் புலனாய்வின் பொறிக்கெட்டாத புதிய குழு. புலிகளைப் பிளவுபடுத்த நினைத்தவர்கள் இன்னொரு போராட்டக்குழு இருப்பதாக கட்டியழுகிற அளவிற்கு பலமான படிப்பினை. புலிகளின் இருப்பைக் கேள்வியாக்க நினைத்தவர்களின் இருப்பிலெல்லாம் மண்ணைப் போடுகிறது இன்னொரு புதிய விதி. ஒரு தமிழன் செத்தால் 10 படையினன் சாக வேண்டும். படையினன் காயம் என்று செய்தி வந்தாலே போதும், அது காயன்கடைக்கு அனுப்பப்பட்ட கார் மாதிரி. எனவே சாவோ, காயமோ ஒரு படையினன் போர்க் களத்தில் இருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான். சும்மா இருக்க முடியாது எனச் சுரண்ட வெளிக்கிட்ட படைகள் இப்போ மக்களை எதிரிகளாக்கி விட்டது. அதுதானே உண்மை. அவர்களிற்கு என்ன தமிழ் மக்கள் நண்பர்களா? இப்போ பக்கத்தில் குடியிருக்கிற பாட்டியைக்கூட நம்பமுடியாமல் நடுங்குகிறது சிங்களப்படைகள். அதற்கு முத்தாய்ப்பு வைப்பது போன்று பயிற்சியை முடித்துக் கொண்டு ஊர் திரும்புகின்றன துணைப்படைகள். ஒன்றல்ல, நூறல்ல, ஆயிரக்கணக்கில். ஆம் படைகள் ஆக்கிரமித்திருக்கிற ஊருக்குத்தான் இந்தப் படைகளும் திரும்புகின்றன. இப்போ என்ன செய்வது? பலஸ்தீனம் தோற்றுப்போகிற மாதிரியான ஒரு போர்க் கல்லூரியாக மாறப்போகிறது யாழ்ப்பாணம். போதாக்குறைக்கு நான்கு வருட யுத்த நிறுத்த ஒப்பந்தம். தாராளமாய் படைகளின் நிலைகளையும், முகாம்களையும், தளங்களையும் உளவெடுக்க சிங்களம் மனந்திறந்து வழிவகுத்த பொற்காலம். எந்த ஒரு உளவுப்பிரிவிற்குமே கிடைத்தற்கரிய வாய்ப்பாக கிடைக்கப்பெற்ற பொற்காலம். 40,000 படைகள் காவலில் இருக்க, காற்றில் வந்த செய்திக்காக, வாக்களிப்பைத் தவிர்த்த 700,000 மான மறவர்கள் நிறைந்த பூமி அது. இப்போது இன்னும் அதிர்ச்சியாகப் புரிகிறது. யாழ்ப்பாணச் சகோதரிக்காக மன்னாரில் பொங்கியெழுகிறது புதுப்படை. யாருக்கு வெற்றி? யாரது அணுகுமுறை இராஜதந்திரம்? தோற்றுப்போனது சிங்களம். இனி எழவே முடியாதபடி தோற்றுப்போனது என்பதே உண்மையாக நிற்கிறது. http://www.eelampage.com/?cn=22813 |