![]() |
|
நடிகை பானுமதி மரணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நடிகை பானுமதி மரணம் (/showthread.php?tid=1806) Pages:
1
2
|
நடிகை பானுமதி மரணம் - aathipan - 12-25-2005 நடிகை பானுமதி மரணம் சென்னை, டிச.25- பழம் பெரும் நடிகை பானுமதி நேற்று நள்ளிரவில் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. பானுமதி தமிழ் திரை உலகின் முடிசூடா கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை பானுமதி. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன், சிவாஜியுடன் அம்பிகாபதி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சில படங்களை சொந்தமாக டைரக்டு செய்து உள்ளார். சொந்தக் குரலிலும் பாடி இருக்கிறார். சினிமாத் துறையில் 1943-ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். சர்க்கரை நோய் நடிகை பானுமதி சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்தார். இறுதி காலத்தில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். அவருடைய ஒரே மகன் பரணி. இவர் சாலிக்கிராமத்தில் பரணி ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இது ஒரு காலத்தில் பரணி ஸ்டூடியோவாக இருந்தது. சென்னை தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார். பத்மஸ்ரீ 100 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் பானுமதி என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டு பெற்றவர். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட பல்வேறு பட்டங்களை பெற்று உள்ளார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடக்கிறது. பானுமதி உடல் இன்று மாலை தகனம் - கீதா - 12-25-2005 நடிகர்-நடிகைகள் அஞ்சலி: நடிகை பானுமதி உடல் இன்று மாலை தகனம் தமிழ் திரை உலகில் அபிநய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் பானுமதி. முடிசூடா கதாநாயகியாக திகழ்ந்த அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற முன் னணி நடிகர்களுடன் நடித்து முத்திரை பதித்தவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து புகழ் பெற்ற பானுமதி சகலகலாவல்லியாக திகழ்ந்தார். சில படங்களை சொந்தமாக தயாரித்து டைரக்டு செய்து உள்ளார். நடிகை பானுமதி தியாகராய நகர் வைத்தியராமன் தெரு வில் வசித்து வந்தார். சர்க் கரை நோயினால் பெரிதும் அவதிப்பட்டு வந்த அவர் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார். கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. டாக் டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நள்ளிரவு 1.30 மணியளவில் பானுமதி மரணம் அடைந் தார். அவருக்கு வயது 80. பானுமதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பானுமதியின் உடலுக்கு அஞ்சலி செலுத் தினார்கள். அவரது உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் கலை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்று மாலை பானுமதியின் உடல் பெசன்ட்நகரில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பானுமதி. 1939ம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். தமிழ் திரை உலகுக்கு 1948ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். அவரது முதல் தமிழ் படம் `ராஜமுக்தி' தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்ததால் தமிழிலும் கதாநாயகியாகவே அறிமுகம் ஆனார். இந்த படத்தை தியாகராஜ பாகவதர் டைரக்டு செய்து அவரே கதாநாயகனாக நடித்தார். நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், மலைக்கள்ளன், மக்களை பெற்ற மகராசி, அம்பிகாபதி போன்ற படங்கள் மூலம் அவர் தமிழ் திரை உலகில் பிரபலம் ஆனார். கடைசியாக அவர் நடித்த படம் செம்பருத்தி. இதில் பிரசாந்தின் பாட்டியாக நடித்து இருந்தார். மொத்தம் 350 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். பானுமதி நடிக்கும் படங்களில் அவரது குரல் கணி ரென்று இருக்கும். அவர் நடித்த எல்லா படங்களிலும் சொந்த குரலில் பாடி இருக்கிறார். "சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதா'', "மாசில்லா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே'', "மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'', "வாங்க மச்சான் வாங்க உங்க வழிய பார்த்து போங்க'', "அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்'', "ஆஹா.... நம் ஆசை நிறைவேறுமா'', "மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு கிளை பாரமா'' போன்ற பாடல்கள் அவரது குரலுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். நடிப்பு உலகில் முத்திரை பதித்த பானுமதி பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளை பெற்று இருந்தார். 3 முறை தேசிய விருது பெற்றார். தமிழ் நாடு இசைக் கல்லூரி முதல் வராகவும், திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார். இவரது நடிப்பை பாராட்டி ஆந்திர மாநில அரசு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர். சாலிக் கிராமத்தில் அவர் பரணி ஸ்டுடியோவை அமைத்தார். அதன் உள்ளே தற்போது அவரது மகன் பரணி ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். பேரன் வெங்க டேசன், பேத்தி மீரா. இருவரும் அமெரிக்காவில் டாக்டர்களாக உள்ளனர். பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணன் ஏற்கனவே அமெரிக்காவில் மரணம் அடைந்து விட்டார் http://www.vaddakkachchi.com/viduppu/index...t_from=&ucat=1& - கீதா - 12-25-2005 எனது கண்ணீர் அஞ்சலிகள்
- Selvamuthu - 12-25-2005 பத்மசிறீ பாணுமதி அவருடைய நடிப்பும், பாடிய பாடல்களும் மறக்கமுடியாதவை. கீதா குறிப்பிட்ட பாடல்களோடு "அன்னை" படத்தில் பாடிய "புூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று", "அன்னை என்பவள் நீதானா", "காஞ்சித்தலைவனில்" படத்தில் பாடிய "மயங்காத மனம் யாவும் மயங்கும்!" என்ற பாடல்களும் என் மனதில் இன்றும் இனிப்பவை. இந்தப் புனித நாளிலே எத்தனையே துன்பமான செய்திகள் வருகின்றன. ஏன் என்றுதான் தெரியவில்லை. பத்மசிறீ பாணுமதி அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். - Rasikai - 12-25-2005 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் - vasisutha - 12-25-2005 இவர் நடித்த செம்பருத்தி திரைப்படம் பார்த்திருக்கிறேன்.. - Mathuran - 12-25-2005 தமிழ் திரையுலகில் மிகவும் திறம்பட தமது ஆற்றலால், மக்களிற்கு எந்த இடையூரும் கொடுக்காதவண்ணம் தனது நடிப்புதிறனையும் ஏனைய சாதனைகளையும் நிலைநிறுத்தி, மறைந்த பானுமதி அவர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். - Vasampu - 12-25-2005 பொதுவாகவே கதாநாயகியாக நடிப்பவர்கள் திருமணமானதும் மாக்கெட் போய் அக்கா அண்ணி வேடங்களுக்குப் போய் விடுவார்கள். ஆனால் தமது திருமணத்தின் பின்பாகவே திரையுலகில் நுழைந்து தமது திறைமைகளாலேயே நீண்ட காலமாகவே நிலைத்தவர்கள் இருவர். ஒருவர் பானுமதி மற்றவர் சௌகார்ஜானகி. திரையுலகில் பல சாதனைகள் படைத்த பானுமதி அவர்களின் இழப்பு உண்மையில் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்புத்தான். அன்னாரின் இழப்பால் துயறுற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம். - ப்ரியசகி - 12-25-2005 இவர் யாரென்று எனக்குத்தெரியவில்லை..ஆனாலும் அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Selvamuthu - 12-25-2005 இவர்தான் பாணுமதி - வியாசன் - 12-25-2005 மறைந்த பானுமதிக்கு எனது அஞ்சலிகள் ஆனாலும் பானுமதிபற்றிய ஒரு சிறு உறுத்தல் சிவாஜிக்கணேசனுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் ஒரு பட்டத்துக்கு சிபாரிசு செய்தபோது சிவாஜியைவிடதான் அந்தப்பட்டத்துக்கு பொருத்தமானவள் தனக்குத்தான் பட்டம் வழங்கப்படவேண்டும் என்று குழப்பியடித்ததாக (அந்தப்பட்டத்தின்பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை.) சிவாஜி அவர்கள் சாகும்வரை அந்தப்பட்டத்தை பெறவில்லை. என்பது வேதனைக்குரியவிடயம். - Selvamuthu - 12-25-2005 "அறிவாளி" என்ற படமாக இருக்குமா? நாடோடி மன்னன் படத்தில்கூட எம்.ஜி.ஆர் அவர்களுடன் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதனால்தான் படத்தின் கதையை மாற்றி சறோஜாதேவி அவர்களை அறிமுகப்படுத்தியதாகவும் அறிந்தேன் அதில் எவ்வளவு உண்மை என்பது தெரியாது. - Vasampu - 12-25-2005 செல்வமுத்து அண்ணா வியாசன் அவர்கள் குறிப்பிட்டது பட்டத்தை. நீங்கள் குறிப்பிட்டிருப்பது படத்தையல்லவா?? சிவாஜிகணேசன் அவர்களுக்கு இறுதிவரை மத்திய அரசால் சிறந்த நடிகருக்கான பட்டம் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. - AJeevan - 12-25-2005 மறைந்த பானுமதிக்கு அஞ்சலி - Selvamuthu - 12-25-2005 வசம்பு தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தவறுக்கு மன்னிக்கவும். என்ன பட்டம் என்று தெரியவில்லை. - Rasikai - 12-26-2005 <img src='http://www.dinamani.com/Images/GALLERY/BANUMATHI/3.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamani.com/Images/GALLERY/BANUMATHI/5.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamani.com/Images/GALLERY/BANUMATHI/6.JPG' border='0' alt='user posted image'> <img src='http://www.dinamani.com/Images/GALLERY/BANUMATHI/7.JPG' border='0' alt='user posted image'> - MUGATHTHAR - 12-26-2005 <b>கண்ணீர் அஞ்சலி</b> <img src='http://www.maalaimalar.com/images/news/Article/25-12-2005/25banumathi.jpg' border='0' alt='user posted image'> - Vasampu - 12-26-2005 என்ன முகத்தார் அந்த நாள் ஞாபகங்கள் மீண்டும் ஞாபகம் வருகின்றதோ?? - MUGATHTHAR - 12-26-2005 "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி" இப்பிடி சொல்லித் திரிஞ்சு எத்தனை பேர் செருப்பு தூக்கி காட்டினவை தம்பி எப்பிடி இதுகளை மறக்கமுடியும் - Vishnu - 12-26-2005 நடிகை பானுமதிக்கு மகன் அல்லது மகள் யாராவது திரைஉலகில் இருக்கிறார்களா?? 20 வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன்... இத பாடலில் வருபவர் பானுமதியின் மகன் என்று எங்கோ பார்த்த நினைவு. முகவரி படத்திலும் சிறுவேடத்தில் அவர் நடிக்கிறார். |