![]() |
|
பொங்கல் விழா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: பொங்கல் விழா (/showthread.php?tid=1804) Pages:
1
2
|
பொங்கல் விழா - RaMa - 12-25-2005 உரும்பிராய் இந்துக்கல்லூரி உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா பல கலைநிகழ்சிகளும் நடைபெறுகின்றது. 07-தை-2006 stephen Leacock C.I 2450 Birchmount Rd. Scarborough மேலதிக விபரங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம் *** <img src='http://img353.imageshack.us/img353/1918/urumpirai1114ju.jpg' border='0' alt='user posted image'> - Mathan - 12-26-2005 பொங்கல் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ரமா. - Vishnu - 12-26-2005 றமா.. பொங்கல் நிகழ்வுகள் இனிதே நடைபெற வாழ்த்துக்கள். அருகில் இல்லாமையால் வர முடியவில்லை... பிளைட் டிக்கட்க்கு காசு தந்தால் இங்கே இருந்து கள நண்பர்கள் கலந்து கொள்ளலாம்.. :wink: - Mathan - 12-26-2005 சரி தூர உள்ள நாங்கள் கனடாவுக்கு பிளைற் எடுத்து போக கஷ்டம் தான். கனடாவில் உள்ளவர்கள் போய் சந்திக்கலாமே? - MUGATHTHAR - 12-26-2005 றமா பொங்கல் விழாவுக்கு வரமுடியாதுக்கு மனம் வருந்துகிறேன் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் நடந்து முடிந்தபின் இவ்விழாவைப் பற்றி இங்கு இணைப்பீர்கள் எண்டு நம்புகிறேன்... - Selvamuthu - 12-26-2005 உரும்பிராய் மண் உலகப்புகழ்பெற்றது என்பது பரும் அறிந்ததே. விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்ட சிவகுமாரன், தியாகி திலீபன் இருவரும் தமது ஆரம்பக்கல்வியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் கற்றார்கள். சிவகுமாரனின் தந்தையார் திரு பொன்னுத்துரை அவர்கள் அப்பாடசாலையிலே பலவருடங்கள் தலைமை ஆசிரியராகவும், தியாகி திலீபனின் தந்தையார் திரு இராசையா அவர்கள் அங்கே ஆசிரியராகவும் பல வருடங்கள் பணியாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபன் ஊரெளுவிலே பிறந்து வாழ்ந்திருந்தாலும் அவருடை தாயார் உரும்பிராய் மண்ணிலேதான் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களைப்போல் பல பெரியார்களைப்பெற்ற மண்ணில் இயங்கும் பாடசாலைகளின் சங்கமான உரும்பிராய் இந்துக்கல்லு}ரி பழைய மாணவர் சங்கத்தின் பொங்கல்விழா சிறப்புடன் நிகழ எனது வாழ்த்துக்கள். (சென்ற வருடம் நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தங்களினால் சென்ற வருட பொங்கல்விழா ரத்துச்செய்யப்பட்டது என்றும் அறிந்தேன்) - ப்ரியசகி - 12-26-2005 ஆகா..ரமாக்கா எனக்கும் வர வேணும் போல கிடக்கு..ஆனால் இவ்ளோ தூரம்.. ஆனாலும் வா இனிதே நிறைவேற என்னோட வாழ்த்துக்களும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Selvamuthu - 12-26-2005 கனடாவில் நடக்கும் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் அதிகமான மக்கள் கலந்துகொள்ளும் விழா இதுதான் என்றும் அறிந்தேன். இம்முறையும் சிறப்புற நிகழ என் வாழ்த்துக்கள். Quote:சரி தூர உள்ள நாங்கள் கனடாவுக்கு பிளைற் எடுத்து போக கஷ்டம் தான். கனடாவில் உள்ளவர்கள் போய் சந்திக்கலாமே? - RaMa - 12-27-2005 வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். ஆமாம் இது உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்களால் நடத்தப்படும் 12வது பொங்கல் விழா. செல்வமுத்து அவர்கள் சொல்லியடி கடந்த முறை எல்லா எற்பாடுகளும் முடிந்த நிலையிலும் சுனாமியின் அனார்த்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுமே உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்களாலோ அல்லது அவர்களின் பிள்ளைகளே அரங்கேற்றப்படுவது என்பது பெருமைக்குரிய விடயம் தான். - அருவி - 12-27-2005 Selvamuthu Wrote:கனடாவில் நடக்கும் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் அதிகமான மக்கள் கலந்துகொள்ளும் விழா இதுதான் என்றும் அறிந்தேன். இம்முறையும் சிறப்புற நிகழ என் வாழ்த்துக்கள். பூவரசம் பொழுது பாக்கவில்லைப்போல... - Snegethy - 01-03-2006 றமாக்கா விழா நல்லாக நடக்கட்டும்.படங்களையும் விமர்சனத்தையும் போடுங்கோ.கட்டாயம் உங்கட ட்றாமா படம் போடோணும் என<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sinnappu - 01-03-2006 பிள்ளை ரமா புறோகிறாமுக்கு நாங்களும் வரலாமே - RaMa - 01-04-2006 வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். கட்டாயம் விழா முடிய விமர்சனத்தை இங்கு இனைக்கின்றேன்... அப்பு நீங்கள் இல்லமாலா? ஆனால் பார்ட்டி எல்லாம் இல்லை ஒக்கேய்? - Snegethy - 01-04-2006 பார்ட்டிதான் இல்லையப்பு ஆனால் இரண்டு முண்டு பாட்டியவை வருவினம்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 01-04-2006 அருவி Wrote:Selvamuthu Wrote:கனடாவில் நடக்கும் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் அதிகமான மக்கள் கலந்துகொள்ளும் விழா இதுதான் என்றும் அறிந்தேன். இம்முறையும் சிறப்புற நிகழ என் வாழ்த்துக்கள். ஏன் பூவரசம் பொழுதில் என்ன?? கேள்விப்பட்டிருக்கேன்..ஆனால் பார்க்கல..சொன்னால் நானும் அறிந்து கொள்வேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- aswini2005 - 01-04-2006 sinnappu Wrote:பிள்ளை ரமா புறோகிறாமுக்கு நாங்களும் வரலாமே அப்புமாருக்கெல்லாம் பொங்கல் இனிப்பு பிடிக்காதெல்லோ. ஊறுகாயும் றால் பொரிலும்தானே பிடிக்கும். அதனால் அப்புவுக்கு அனுமதியில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- matharasi - 01-04-2006 aswini2005 Wrote:அப்புமாருக்கு பிடிச்சதுதெல்லாத்தையும் வெளியிலை சொல்ல முடியுமுங்களா.....சொன்னாலும் ... என்னத்தை சொல்லி என்னத்தை....... <!--emo&sinnappu Wrote:பிள்ளை ரமா புறோகிறாமுக்கு நாங்களும் வரலாமே --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thala - 01-05-2006 <!--QuoteBegin-Selvamuthu+-->QUOTE(Selvamuthu)<!--QuoteEBegin-->உரும்பிராய் மண் உலகப்புகழ்பெற்றது என்பது பரும் அறிந்ததே. விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்ட சிவகுமாரன், தியாகி திலீபன் இருவரும் தமது ஆரம்பக்கல்வியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் கற்றார்கள். சிவகுமாரனின் தந்தையார் திரு பொன்னுத்துரை அவர்கள் அப்பாடசாலையிலே பலவருடங்கள் தலைமை ஆசிரியராகவும், தியாகி திலீபனின் தந்தையார் திரு இராசையா அவர்கள் அங்கே ஆசிரியராகவும் பல வருடங்கள் பணியாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபன் ஊரெளுவிலே பிறந்து வாழ்ந்திருந்தாலும் அவருடை தாயார் உரும்பிராய் மண்ணிலேதான் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களைப்போல் பல பெரியார்களைப்பெற்ற மண்ணில் இயங்கும் பாடசாலைகளின் சங்கமான உரும்பிராய் இந்துக்கல்லு}ரி பழைய மாணவர் சங்கத்தின் பொங்கல்விழா சிறப்புடன் நிகழ எனது வாழ்த்துக்கள். (சென்ற வருடம் நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தங்களினால் சென்ற வருட பொங்கல்விழா ரத்துச்செய்யப்பட்டது என்றும் அறிந்தேன்)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பல தெரியாத தகவல்கள். நண்றி செல்வமுத்து அண்ணா..! - kuruvikal - 01-05-2006 முந்தி ஊரில இருக்கேக்க...படிக்கேக்க கூட பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கவலைப்படாத கனபேர் இங்க புலம்பெயர்ந்து வந்த உடனை ஒரு சங்கம் அமைச்சிடுவினம். அதுதான் பழைய மாணவர்..மாணவிகள் சங்கம். அவையட்ட ஒருக்கா பாடசாலைக் கீதம் தெரியுமோ என்று கேளுங்கோ..ம்ம்ம்...நினைக்கல்ல..! பட் பாடசாலையின் பெயரால் நல்லாப் புழங்குதாம்..பெயரும்..புகழும்..பணமும் தான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன பொங்க வார நேரம் குருவி லொள்ளுப் பண்ணுதே என்று பாக்கிறேளா.. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் 3 விசயம் நல்லா அவதானிச்சம்.. அரசியலில.. மாற்றுக் கருத்து.. ஓசிப் பேப்பர்..அடிக்கிறது. கோயிலில - போட்டிக்கு அம்மன் முருகன் பிள்ளையார் என்று ஊருக்கு ஒரு கோயில்..கிட்டடில அறிஞ்சம். ஊரில உள்ள அதே பெயரில உங்க கனடா லண்டன் என்று கோயில்களாமே..நாகபூசணி..செல்வச்சந்நிதி என்று அவையும் புலம்பெயர்ந்திட்டினமாமே...! படிப்பில.. பழைய மாணவர் சங்கம்..ஆளாளுக்கு..! எல்லாம் "சம்திங்" சமாச்சாரத்துக்குப் போல...ம்ம்ம்..இப்பவாவது படிச்ச பாடசாலையை நினைக்கினமே..அந்தளவில கப்பி தான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 01-05-2006 என்ன குருவி 2006ம் வருஷபலனைப் பாக்கேலைப்போல கிடக்கு பழைய மாணவர்களின்ரை தாக்குதலுக்கு ஆளாகப் போறியள் இப்பவே பறந்திடுங்கோ.................... |