![]() |
|
வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..! (/showthread.php?tid=1810) |
வீரனே மீண்டும் வா.. மீண்டு வா..! - kuruvikal - 12-24-2005 <img src='http://www.tamilnet.com/img/publish/2005/12/mandur_1_21998_150px.jpg' border='0' alt='user posted image'> <b>பார் போற்றும் சிங்கமே பரராஜ சிங்கமே சிங்களச் சீமையில் சிம்மக்குரலாய் ஈழத்தமிழன் துயர் சொன்னவனே இன்று ஈனத்தனத்துக்கு இரையாகி வீழ்ந்தாயோ...??! அகிலம் உன் ஆங்கிலத்துக்கு அருவருக்காமல் செவிமடுக்கும் அந்நியத்தனம் இன்றி அனைவரையும் அரவணைக்கும் அற்புத சீலன் நீ அர்த்த ராத்திரியில் கர்த்தரின் பூஜையில் கருணையே அற்றவனின் கருவிக்கு இலக்காகினையோ..??! எத்தனை ஆண்டுகள் ஈழ்த்தமிழரின் அகிம்சைக் குரலாய் அகிலம் உற்று நோக்க சிங்களப் பாசறை நடுவில் சிங்காரத் தமிழனாய் நடை பயின்றவன் நீ சீண்டிப் பார்ப்பவன் தூண்டலைக் கூட தனித்து தாங்கியவன் அணையாப் புன்னகையால்..! வடக்கென்ன கிழக்கென்ன தமிழ் தேசியத்தின் உயிர் மூச்சாம் உந்தன் உறவாம் ஈழத்தமிழன் குருதி சொட்டினால் ஈனக்குரல் செவி தட்டினால் உடனே உறுமி எழுவாய் நியாயம் கேட்டே வரிந்து நிற்பாய் தாமதமின்றி உன் பணி செய்துகிடப்பாய்...! உந்தன் குரலுக்கு குலைநடுங்கிச் சிங்களம் வைத்த விசாரணைக் கமிஷன் எத்தனை..! உன் குரலுக்கு அடங்கிய துப்பாக்கிகள் எத்தனை...! சாக்குப்போக்கு உன்னிடம் பலிக்காது தூய கரமும் தூய உள்ளமும் வணங்கா முடியும் ஈழத்தமிழனின் குணமென்று அரசியல் களத்தில் சாதித்துக் காட்டிய சாதனை நாயகன் நீ..! கருவி தரித்த சிங்களப் பாதுகாப்பு சீ... என்று உதறியே சொந்த மண்ணில் மக்களுக்காய் மூச்சிழுத்தவன்..! மூடர்கள் சிலரின் முட்டாள் தனத்துக்கு மூச்சையளித்தாயோ..??! மூச்சிறைத்து விழுகிறோம் உன் வீழ்ச்சி கண்டுமே அநாதைகளாய்....! வீரனே நீ மீண்டும் வா மீண்டு வா எம் ஆன்மா தந்து அணை போடுகிறோம்...!</b> - suddykgirl - 12-24-2005 அண்ணா உங்கள் உருக்கமான கவிகளுக்கு நன்றிகள் - Birundan - 12-24-2005 பாலன் பிறக்கப்போகும் நேரத்தில் பாவிகள் உயிர் பறித்தனரே, பாலனாய் பிறந்துவா ஜேசுவாய் மரித்துவிடாதே தேசியத்தைவனாய் பாடம் புகட்டி நில். இறைவனையே காட்டிக்கொடுத்த உலகம் இது, இறைதூதனையே கட்டிவைத்து அடித்த உலகம், தமிழர்பால், நீ கொண்ட அன்பால், பாவிகள் பறித்துவிட்டனர் உன்னை. - Selvamuthu - 12-24-2005 பெருத்தமான வேளையில் உருக்கமான கவிதையைத் தந்த குருவியாருக்கு எனது நன்றிகள். இறைவன் சந்நிதியிலே, ஈவிரக்கமின்றி எங்கள் சிங்கத்தினைக் கொன்றவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்கமாட்டார்கள். இதற்கெல்லாம் நியாயம் நிச்சயம் கிடைக்கும். விடிவு பிறக்கும் விரைவில். - Rasikai - 12-24-2005 உருக்கமான கவிதை தந்த குருவிகளுக்கு நன்றிகள். - Mathan - 12-24-2005 இந்த நேரத்தில் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. - Mathuran - 12-24-2005 <b>பாசம் நிறைந்தவனே பாராளுமன்றம் போய் பகைவர்முன் பேசி விட்டு. உன் தூக்கம் கலைத்து துணிந்து தமிழனுக்கய் நெஞ்சுயர்த்தி போராடி அன்னைத்தமிழ் குடி காத்த அஞ்சாத்தமிழன் நீயன்றோ??? நீ விதையான சேதி கேட்டு. விடியலைத்தொலத்தவர் போல் விம்மி விம்மி அழுகின்றோம். கத்தர் அவதரித்த நாளினிலே காடயரின் காடைத்தனம் புத்தரை வணங்கும் சிங்கள காடயர்க்கு கத்தி நாம் போடு சத்தம் கேட்டிடுமோ??? கட்டையில போவாங்கள் மனிதம் புரியாத பிணம் தின்னிகள். இன்னும் எத்தனை நாள் காத்திருப்போம்?? விரைவில் விடியட்டும் ஈழம். அன்றே தமிழ்க் குடி நின்மதியாய் வாழும்.</b>[/b] - Birundan - 12-24-2005 <b>மீண்டும் பிறந்து வா</b> அண்ணா பரராஜ சிங்கமே சிங்களப்படைகளின் கூலிகளால் அனியாயமாக வீழ்ந்தாயே! நியாயம் வாழவேண்டும் என நீதியின் முன் எமக்காக வாதாடிய எம் தங்கமே! பாலன் பிறக்கும் நாளில் பாதகர் காத்திருந்து உம்மை சரித்தனரே! அகிம்சை வழியில் அழிவு வராதென இறுமாந்து இருத்தாயா? ஜயா இது ஜேசுவையே காட்டிக் கொடுத்த உலகம் ஜயா! பாலனின் கோவிலில் வைத்து உன் கதைமுடித்து நாம் அவர்கள் எச்சமென காட்டியுள்ளனர்! பாலன் பிறந்த நாளில் இறந்தாயே மீண்டும் பிறந்துவா ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கவா. - inthirajith - 12-25-2005 தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் சிலகாலம் தமிழனை மட்டுமல்ல சிங்களவனையும் உன் ஆணித்தரமான புலமையால் கட்டியவனே தமிழர் விடுதலைக்காகதான் தமிழ்க்கூட்டணி என்று போராடியவனே கயவர்கள் தோல் உரித்தவனே கயவன் தன்னுடன் சேரும் படிகெஞ்சியபோதும் தமிழ்தலைவன் தான் எமக்கு வேண்டும் பிரதேசகேவலம் வேண்டாம் என்று போதித்தவனே சக்கரவியூகத்தில் அபிமன்யு போல் வாழ்ந்து மறைந்தவனே தமிழன் வரலாறு தெரிந்தவர்களில் நீயும் ஒருவன் உன்குரலை அறிவாளிகளை கிழக்கில் இருந்து அழித்துவிட்டு அந்த முட்டாள் பிரதேசவாதத்தில் அழியபோகிறானே மனிதம் இல்லாதவர்களுக்காய் மரித்தவனே மனிதம் வாழ போதித்தவன் அவதரித்தபோது மறைந்தவனே தேவ பூமி அழைத்து விட்டதா? உன்கடமைகள் போதும் என்று அவன் சன்னிதியிலே உயிர்குடித்தாரா?அன்பையும் அகிம்சையும் போதித்தவனிடம் உன் ஆத்ம சாந்திக்காய் பிராத்திபோம் - Rasikai - 12-25-2005 மதுரன் பிருந்தன் இந்திரஜித் குருவிகாள் எல்லோரும் பொருத்தமான நேரத்தில் உருக்கமான கவி தந்தமைக்கு நன்றி - RaMa - 12-25-2005 ஐயாவை நினைவு கூர்ந்து வடித்த குருவிகள் மதுரன் பிருந்தன் இந்தரஐித் அகியோருக்கு நன்றிகள்.... - suddykgirl - 12-25-2005 மதுரன், பிருந்தன், இந்திரஜித், குருவிகாள் எல்லோரும் இந் நேரத்தில் உருக்கமான கவி தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் - Vishnu - 12-25-2005 உரிய நேரத்தில் உணர்வுகளை தூண்டி... என்றும் எமது ஈழத்து உணர்வோடு இருக்க வழிசமைத்த உங்களது கவிகளுக்கு நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|