Yarl Forum
ஆதி - விஜய் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஆதி - விஜய் (/showthread.php?tid=1817)

Pages: 1 2


ஆதி - விஜய் - Mathuran - 12-24-2005

ஆதி

பெரும்பாலான யாழ்கள விசிறிகளின் திரைநாயகன் தளபதி விசயின் பொங்கல் வரவு தான் ஆதி என்னும் திரைப்படம். குறிப்பாக விசயின் படங்கள் வெளியாகும் பொழுது நானும் திரையரங்குகளில் நிற்பேன். தீபாவளிக்கு வெளியான சிவகாசியில் இருக்கும் ஒரு பாடல். தீபாவளி தீபாவளி என்று தீபாவளியை நினைவூட்டும் பாடல்கள் அமைந்ததிருந்தது. அது ஏனோ தெரியவில்லை தமிழர் திருநாளான பொங்கலுக்கு வரவிருக்கும் ஆதி திரைப்படப் பாடல்களில் தைபொங்கலை நினைவூட்டும் வண்ணம் பாடல்கள் எதுவும் அமையவில்லை.

தமிழர்திருநாளாகிய தைபொங்கல் நாளன்று வெளியாகும் திரைப்படத்தில் ஒரு செய்தியும் தைப்பொங்கல் பற்றிஇடம்பெறாமல் இருந்தால் எங்கள் மனம் நோகாதோ????


- Mathuran - 12-24-2005

பாடலை கேட்க
http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000777.html

நன்றி: ராகா. கோம்


- Mathan - 12-26-2005

<img src='http://img480.imageshack.us/img480/7232/481iq.jpg' border='0' alt='user posted image'>

ஆதி படத்தின் எம்பி3 பாடல்களை இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்யலாம்.

http://www.tamilbeat.com/tamilsongs/newreleases/Aathi/



- Mathuran - 12-27-2005

தமிழ் திரை உலக இளவரசன் என்னும் பட்டத்தினை விசைக்கு கைதராபாத் தமிழ்சங்கம் வழங்கி அவரை கௌரவித்திருக்கின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசைக்கு பொருத்தமான பட்டம்தான். விசை தமிழ் திரைஉலகில் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்


- Mathuran - 01-08-2006

<b>பொங்கலோ பொங்கல்.</b>

தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்திய விஜை. நேமம் என்னும் அழகிய கிராமம் ஒன்றுக்கு சென்ற விஜை அங்கு வேட்டி சட்டையுடன் தமிழர்பாரம்பரிய உடையுடன் அவ்வூர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். தாரை தம்பட்டை என பல வாத்தியக்கருவிகளுடன் விஜயை வரவேற்ற அவ்வூர் மக்கள் விஜயையும் மகிழ்ச்சிப்படுத்தி பொங்கலை பொங்கலோ பொங்கல் என கொண்டாடியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


- sooriyamuhi - 01-08-2006

Mathuran Wrote:<b>பொங்கலோ பொங்கல்.</b>

தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்திய விஜை. நேமம் என்னும் அழகிய கிராமம் ஒன்றுக்கு சென்ற விஜை அங்கு வேட்டி சட்டையுடன் தமிழர்பாரம்பரிய உடையுடன் அவ்வூர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். தாரை தம்பட்டை என பல வாத்தியக்கருவிகளுடன் விஜயை வரவேற்ற அவ்வூர் மக்கள் விஜயையும் மகிழ்ச்சிப்படுத்தி பொங்கலை பொங்கலோ பொங்கல் என கொண்டாடியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
http://thatstamil.indiainfo.com/specials/c...es/vijay15.html


- Mathuran - 01-15-2006

ஒரு இணையத்தளம் தனது தமிழ்திரை உலகினருக்கான இந்த வருடத்திற்கான சிறந்த தமிழ் திரைஉலகத்தினரை தேர்ந்தெடுத்துள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் தேர்வு முடிவுகளை வேண்டுமென்றே திரிபு படுத்தி. விஜயை இரண்டாவது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நீதியான கருத்துக்கணிப்பு நடைபெற்றிருப்பின் விஜையே இந்த வருடமும் வெற்றி பெற்றிருப்பார் என்பது எல்லோரும் அறியப்பட்ட விடயம்தான்.


- வினித் - 01-16-2006

<b>வாசகர்களின் கேள்விகளுக்கு விஜய் அளித்த பதில்கள் இதோ... </b>

<img src='http://img460.imageshack.us/img460/4124/vijayyyyy8ic8mf.jpg' border='0' alt='user posted image'>


இளைய தளபதியே,
தொடர்ந்து வெற்றிப்படங் களை நீங்கள் தருவதற்காக காரணம்... உழைப்பா... அதிர்ஷ்டமா? (ஜி.பாரதி ஜெகன்,சேலம்)

முதலில் உழைப்பு . அப்புறம் அதிர்ஷ்டம்.

<b>*** *** *** </b>
அன்புள்ள விஜய்,

உங்களுக்கு இணையாக எந்த ஹீரோயின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? (ஆர்.நவீன் குமார், தெற்கு காடு, ஆத்தூர்)

அதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

<b>*** *** ***</b>
மெகா ஹிட் தளபதி,

ஆதி மெகா ஹிட் ஆகுது எவ்வளவு பெட்? (ஆர்.செல்வகுமார், திரு வண்ணாமலை )

என்கிட்டேயே பெட் கட்டுறீங்களா?

<b>*** *** *** </b>


இளைய தளபதியாரே,

நீங்களும், அஜீத்தும் சேர்ந்து நடிப்பீர்களா? (தே.அன்புச் செல்வன், பெரம்பலூர்)

ஏன் நடிக்கக் கூடாது?

<b>*** *** *** </b>

அன்பு மாமா விஜய்க்கு,

இந்த புத்தாண்டில் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழி என்ன? (மா. சக்தி பிரியா லட்சுமி, சாத்தூர்)


தொடர்ந்து இது போன்ற படங்களை தரவேண்டும்.


<b>*** *** *** </b>

ஹலோ விஜய்,

முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் ஆதிவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறீர்கள்? (குமார், வள்ளிïர்)

43 படங்கள்.


<b>*** *** *** </b>

இளைய தென்றலே,

நீங்கள் ஆக்ஷன்படத்துக்கு இப்போது முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? (மணி கோடம்பாக்கம்)


டிரண்ட்டுக்கு ஏற்ப நடிக்கிறேன்.

<img src='http://img460.imageshack.us/img460/8966/veenan4fx0cx.png' border='0' alt='user posted image'>
<b>*** *** ***</b>


ஆக்ஷனை விட்டு மீண்டும் காதல் படங்களில் நடிப்பீர்களா? ( ராஜசேகரன், புதுச்சேரி)


காதல் படங்களில் நடிப்பேன். காதலுக்கு மரி யாதை போன்ற மிகவும் மென்மையான படங்களில் நடிக்க வாய்ப்பில்லை.


<b>*** *** *** </b>

காதலர்களின் ஷாஜகானே,

தன் காதல் தோற்றாலும் நண்பன் காதல் வெற்றிபெற நினைக்கும் நண்பனைப்பற்றி...? (ஜி.கே. உதயா, ஈரோடு)


நண்பர்கள் என்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரப்பிர சாதம்.



<b>*** *** *** </b>


ஹலோ விஜய்,

உங்கள் மனதைப் பாதித்த சம்வம் ஒன்று... (வீ.உதயகுமாரன், வீரன் வயல்)


என் தங்கையின் இழப்புதான்.


<b>*** *** *** </b>

ஹாய், விஜய்,

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் எப்போதுப நடிப்பீர்கள்? (நசீர், திருச்சி)


வாய்ப்புக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

<b>*** *** *** </b>


இளைய தளபதியே,

உங்கள் செல்போனில் எந்த பாட்டுக்கான ரிங்டோன் இருக்கிறது? (மும்பை டி.ஜி.எஸ், தாராவி)


பாடல் இல்லாத ரிங்டோன்.

<b>*** *** *** </b>

நம்பிக்கை நாயகனே,

பண்டிகைகளை பொது மக்களோடு கொண்டாடுகிறீர்களே... அரசியலுக்கு வருவீர்களா?... (தங்க ஜெகன் நிவாஸ், தட்டான்விளை)

மக்களை நேரில் சந்தித்து மகிழ்வதே என் ஆசை. அரசியலுக்கு வரும் பேராசை இல்லை.

<b>*** *** *** </b>


அன்புள்ள விஜய்.

உங்கள் கனவில் அடிக்கடி வரும் நண்பர் -நண்பி யார்? (ஆர்.சண்முகராஜ், திருவொற்றிïர்)


நண்பன்- சஞ்சை (மகன்) நண்பி -திவ்யா- (மகள்)


<b>*** *** *** </b>


விஜய் சார்,

அஜீத் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? (ஜெ.ஜெகதீசன், தேனி)


வாலி.


<b>*** *** *** </b>

விஜய் அவர்களே,

உங்கள் தீவிர ரசிகனான நான், ஒரு காட்சியில் உங்களுடன் நடித்து காலம் முழுவதும் பெருமை பட வாய்ப்பு கிடைக்குமா? (விஜய்மணி, சேலம்-5)


இது பெரிய விஷயமல்ல.


<b>*** *** *** </b>

விஜய் சார்,

எப்போது டைரக்ஷன் செய்வீர்கள்? (ஜி.விக்னேஷ்), வியாசர்பாடி)

கண்டிப்பாக செய்யமாட்டேன்.


<b>*** *** *** </b>



விக்ரமுடன் நடிக்க தயார் என்று அறிவித்திருக்கிறீர்களே.. எப்போது?

வாய்ப்பு வரும் போது.

<b>*** *** *** </b>

இளைய தளபதியே,

இரட்டை வேடத்தில் எப் போது நடிப்பீர்கள்? (எஸ்.கார்த்திகேயன், நாமக் கல்)



கதை கிடைத்ததும்.

<b>*** *** *** </b>

எங்கள் தவமே,

தவமாய்தவருமிந்து, படம் பற்றி உங்கள் கமெண்ட்?

படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களுக்கு கண்டிப்பாக அவர்களுடைய அப்பாவுக்கு போன் செய்ய வேண்டும் என்று தோன்றும்.

<b>*** *** *** </b>

காதலர்களின் காவலனே,

காதலர்களுக்கு நீங்கள் கூறம் அறிவுரை. (பி.பவுன்ராஜ், மதுரை-9)


ஜாக்கிரதை... ஏமாந்திடாதீங்க.


<b>*** *** *** </b>

இதயம் நிறைந்தவரே,

பெண்களிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன? (பா.சங்கர் ராஜா, மணி விழுந்தான் வடக்கு)


திருமணம் ஆனதும் கணவனின் எண்ணம் அறிந்திருந்து நடக்கும் சாதுர்யம்.

<b>*** *** *** </b>

மிஸ்டர் விஜய், உங்களை மிகவும் கவர்ந்த நடிகர்- நடிகை யார்? (பே.ராமநாதன், பெருமாள் குளம்)

எல்லா நடிகர்களிடமும் ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. அது போல நடிகையர்களிடமும் சிறப்புத்தன்மை இருக்கிறது.

<b>*** *** *** </b>

என்னுயிர் தலைவா உங்கள் வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வருவீர்களா? (வெங்கடேஷ், தெர்மல் நகர்)

அது அவர்கள் விருப்பம்

<b>*** *** *** </b>

இளைய தளபதியே,

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி? (எம்.ஜி.செல்வன், நெல்லை)

அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.

<b>*** *** ***</b>



முதன்மை நாயகனே,

உங்களுடன் நடித்த திரிஷா ஜோதிகா, அசின்.. சிறப்பு பற்றி? (கண்மணி, திருச்சி-1)

திரிஷா

ஜோதிகா

அசின்.

<b>*** *** ***</b>

எல்லோருக்கும் பிடித்தவரே,

உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்? (அன்பரசு, சென்னை-2)

தனியாக படம் பார்ப்பது
<img src='http://img460.imageshack.us/img460/6654/324ms.jpg' border='0' alt='user posted image'>
<b>*** *** *** </b>

ஆதியே,

நீங்கள் இது வரை போலீஸ் வேடத்தில் நடிக்க வில்லையே ஏன்? (ஜோதி, தேவிகா, திண்டுக்கல்)


காத்துக் கொண்டிக்கிறேன். உங்களிடம் கதை இருந்தால் கொடுங்கள்.

<b>*** *** ***</b>

பாசம் உள்ள விஜய்க்கு,

குழந்தைகளை எப்படி கவனிக்கிறீர்கள்? (பரமேஸ்வரி, கோவை)

அவர்களுக்கு உரியவை எல்லாம் சரியாக கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.

<b>*** *** *** </b>

டாப் ஸ்டார் அவர்களே,

நடிகர் திலகத்துடன் நடித்த நாயகனே. சூப்பர் ஸ்டார்,உலக நாயகனுடன் இணைந்து நடிப்பீர்களா? (அமீது , நாகர்கோவில்)

வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.

<b>*** *** ***</b>



இளம் புலியே,

புலி படம் கைவிடப் பட்டுவிட்டதாக சொல்கிறார்களே?... (சந்திரா, ஈரோடு)

புலி படம் கைவிடப்படவில்லை. நிச்சயம் வெளிவரும்.

<b>*** *** *** </b>

இனியவரே,

நீங்கள் பொங்கலுக்கு தரும் இனிப்பான செய்தி என்ன? (ஜோசப், தூத்துக்குடி)

பொங்கலுக்கு என் படம் ரிலீஸ் ஆனாலே அது இனிப்பான செய்திதான். நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்களே...
<img src='http://img460.imageshack.us/img460/9786/415xp.jpg' border='0' alt='user posted image'>

நன்றி:மாலைமலர்


- கீதா - 01-16-2006

நேற்று காலையிலேயே தியேட்டர் முன் ரசிகர்கள் கூடி விஜய் கட்அவுட்டிற்கு பாலாபி ஷேகம் செய்தனர்.
விஜய் நடித்துள்ள படம் ஆதி. இப்படம் பொங்கல் தினமான 14ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட் டிருந்தது. ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக வெளியாகவில்லை. ஒரு நாள் கழித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. சென்னையில் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் முன் திரண்டனர்.

வடபழனி முருகன் கோவிலில் ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து படப் பெட்டி இரட்டை குதிரை பூட்டிய சாரட் வண்டி யில் வைத்து ஊர்வலமாக கமலா தியேட்டருக்கு கொண்டு சென்றனர். தியேட்டர் அதிபர் சிதம்பரம் பெட்டியை பெற்றுக்கொண்டார். அங்கு சாமி படம் முன் பெட் டியை வைத்து பூஜை செய்யப்பட்டது. இதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படம் ஒருநாள் தாமதமாக ரிலீஸ் ஆனதுபற்றி சந்திர சேகரா கூறியது„

எப்போதுமே அறிவித்த நாளில் விஜய் படம் திரைக்கு வந்துவிடும். இப்படம் ஒரு நாள் தாமதமாகிவிட்டது. எடிட்ட ருக்கு உடல் நிலை சரியில் லாமல் போய்விட்டதால் இப்படி ஆனது. இதில் விஜய்க்கு கொஞ்சம் வருத்தம்தான். பல்வேறு ஊர்களிலிருந்து ரசிகர்கள் போன் செய்து படம் வெளியாகாதது பற்றி கேட் டார்கள். பலர் கண்ணீர் விட்டு அழுதார்கள். எங்களுக்கு இன்று பொங்கலே இல்லை என்றார்கள்.

விஜய் படம் என்றால் முதலில் ஒரு பாட்டு அடுத்து ஒரு பைட் என்று இருக்கும். இதில் அப்படி கிடையாது. காட்சிகள் அழுத்தமாக கொண்டு செல்லப்பட்டு இடை வேளைக்கு பிறகு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். மொத் தம் 286 பிரிண்ட் போடப்பட் டுள்ளது. 176 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. சென் னையைப்போலவே கோவை மதுரை திருச்சி போன்ற இடங்களிலும் ரசிகர்கள் பட பெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர் என்றார். நேற்று காலையிலேயே தியேட்டர் முன் ரசிகர்கள் கூடி விஜய் கட்அவுட்டிற்கு பாலாபி ஷேகம் செய்தனர். எம்.ஜி.ஆர். படத்துக்குதான் இவ்வளவு கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன் என்றார் தியேட்டர் அதிபர் சிதம்பரம்.
dinakaran.com
விடுப்பு : .


- Mathan - 01-20-2006

ஆதி படம் பார்த்தேன். அதில் விஷேசமாக ஏதுமில்லை. விஜயின் அண்மை கால படங்கள் போல் இதுவும் ஒரு ஆக்ஷன் படம் தான். திருப்பாச்சி, சிவகாசி படங்களை போல இதில் செண்டிமண்ட் காட்சிகள் இதில் பெரிதாக இல்லை. நகைச்சுவைக்கு விவேக் ஆனால் இப்போதேல்லாம் விவேக்கின் நகைச்சுவையை நன்றாக இல்லை. பரமசிவன் படத்தோடு ஒப்பிடும் போது இந்த படம் பரவாயில்லை என்று சொல்லலாம் ஒரு தடவை விறுவிறுப்பாக பார்க்கலாம்.


- Mathan - 01-21-2006

ஆதி - விமர்சனம்

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2006/Aathi.jpg' border='0' alt='user posted image'>

பாரம்பரியமாக செய்கிற வத்தல் வடாமை பட்டுத்துணியில் பிழிந்து மொட்டை மாடியில் காய வைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் ஆதி. பார்த்து பார்த்து பழகிய பழிவாங்கல் கதைதான். அதற்கு செய்த செலவு இருக்கிறதே, அதுதான் பிரமிப்பு.

விஜயின் குடும்பத்தை கொன்று அவரை அநாதையாக்குகிறது வில்லன் கோஷ்டி. வளர்ந்து பெரியவனாகும் விஜய், வில்லனை Ôவில்Õ தனியாகவும் Ôலன்Õ தனியாகவும் பிய்த்து பீராய்வதுதான் முழு நீள கதை! அங்கங்கே மழைச்சாரலாக தென்படுகிற த்ரிஷா-விஜய் லவ் மட்டும் குடல் வரைக்கும் நனைக்கிற குளிர்.

ஆரம்ப காட்சியே திகைப்பு. கடலோர காற்றை வாங்கியபடியே, முன்னாள் டி.ஜி.பி தேவனின் மூச்சு காற்றையும் ஒரேயடியாக வாங்கிவிடுகிற த்ரிஷா, துப்பறியும் சாம்பு லெவலுக்கு வில்லன்களை ஃபாலோ பண்ணுவதை ரசிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் ஹீரோ செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் இவரே செய்து விடுவாரோ என்ற அச்சத்தையும் தருகிறார். நல்லவேளையாக சுதாரித்துக் கொள்கிறார் இயக்குனர். அப்பாவியாக சென்னைக்கு வருகிற விஜய், கல்லூரியில் சேர்ந்து சமத்து பிள்ளையாக படிக்கிறார். திடீரென்று ஒருநாள் வில்லனை போட்டுத்தள்ளிவிட்டு அசுர அவதாரம் எடுக்கையில் ஜிவ்வென்று வேகம் பிடிக்கிறது படம்.

ஒரு ஸ்டண்ட் இயக்குனரின் வேகமும், ஒரு நடன இயக்குனரின் லாவகமும் அவர்கள் சொன்னதை செய்திருக்கிற விஜயிடம் இருக்கிறது. சபாஷ்! அதிகப்படியாக இன்னொரு விஷயம்... மில்லி மீட்டர் கூட பிசகாத நடிப்பையும் வாரி வழங்கியிருக்கிறார் மனிதர்! தன் பழைய வீடு இருந்த இடம்தான் இப்போதைய லைப்ரரி என்பதை அவர் பார்த்த மாத்திரத்தில் நமக்கும் உணர்த்துகிற நடிப்பை என்னவென்று பாராட்ட? எல்லாம் சரி... தெலுங்கு ரீமேக் படங்கள் எல்லா நேரத்திலும் தமிழர்களால் ரசிக்கப்படுவதில்லை என்பதை இப்போதாவது உணர்ந்து நேரடி படங்களில் கவனம் செலுத்தலாமே?

பார்த்து பார்த்து பழகியதோலோ என்னவோ, அழகு கூடியிருக்கிறது த்ரிஷாவுக்கு! விஜயுடன் ஆடுவதென்றால் தனி நளினம் வந்துவிடுகிறது. நடிக்கிற காட்சிகளை விடுங்கள். பாடல் காட்சிகளில் வரமளிக்கும் தேவதையாக இருக்கிறார்.

ப்பூ... என்று ஊதி தள்ளுவார் ஒருகாலத்தில்! ப்பூ.. என்று அலட்சியமாக சிரிக்கிற நிலைமை இப்போது விவேக்கிற்கு! கல்லூரி தாதாவாக அறிமுகமாகும் அந்த முதல் காட்சியில் மட்டும் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும், ரசிகர்கள் மனசில் Ôபச்சக்Õ என்று பச்சை குத்திவிட்டு போவது பிரகாஷ்ராஜுக்கு புதுசில்லையே!

கன்னட ஹீரோ சாய்குமார் இந்த படத்தில் முக்கிய வில்லன். ஆர்.டி.எக்ஸ். என்ற பெயரில் சென்னையை மட்டுமல்ல... பார்க்கிற யாவரையும் மிரட்டியிருக்கிறார். இவர் சிவாஜி ரசிகராம். சிவாஜி வில்லனாக நடித்தால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது.

வித்யாசகரின் பின்னணி இசையும், பாடல்களும் மற்றொரு மெஹாஹிட்! எல்லா பாடல்களும் இனிமை. குறிப்பாக அத்தி அத்திக்கா...

இயக்குனரை விட அதிகம் உழைத்திருக்கிறார் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின். பாராட்டுக்கள். அதே நேரம் தீயால் பற்ற வைக்கப்பட்ட விஜயின் முதுகு பகுதி அரை மணி ரேநமாக எரிவதும், அவர் திரும்பி நடக்கையில் அந்த சட்டையில் சில பொத்தல்களே இடம் பெற்றிருப்பதும் ஓவர் பெயின்! புரியுதா ஹெயின்?

காதல், ஆக்ஷன், சென்ட்டிமெண்ட் எல்லாம் இருந்தும் ஆதி....? பாதிதான்! என்ன செய்ய?

-ஆர்.எஸ்.அந்தணன் / தமிழ் சினிமா


- Luckyluke - 01-23-2006

விஜய்யின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது ஆதி வசூலில் ரொம்பவும் சுமார் தான்....

வெறும் மசாலா படங்களாக நடிக்காமல், கதைக்கும், அவரது கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இனியாவது நடிக்க வேண்டும்.....


- வர்ணன் - 01-23-2006

அதை விட .. அவரோட அப்பா கொஞ்சம் ஒதுங்கி இருக்கணும்... விஜய் ய விட்டு...

அருண்குமார வைச்சு ஒரு படம் எடுத்தார்... பிறகு சுக்கிரன்... பிறகு தயாரிப்பு எண்ட பேரில ஆதி.. இதெல்லாம் தேவையா? :?


- Mathan - 01-25-2006

ஆதி ப்ளாப் - ரஜினி வழியில் விஜய்

<img src='http://cinesouth.com/images/new/23012006-THN15image1.jpg' border='0' alt='user posted image'>

ஒரே விதமான ஆட்டம்... ஒரே விதமான ஆக்ஷ்ன்.... கட்-அவுட்டுக்கு பாலூத்துகிறவனும் எத்தனை நாளைக்குதான் இந்த பம்மாத்துகளை பார்ப்பான். 'ஆதி'யை அம்மியில் வைத்து நச்நச்னு துவைத்து நாற்சந்தியில் வீசியிருக்கிறார்கள் ரசிகர்கள். தமிழ்நாடு முழுவதும் ஆளில்லாமல் ஓடும் ஆதி, கமர்ஷியலுக்கு கிடைத்த பேதி மாத்திரை!

விஜய்னா துட்டை அள்ளிரலாம் என்றுகோடிகளை கொட்டி ஆதியை வாங்கியவர்கள் நடுவீதியில் சட்டி சுட்டதடா கைவிட்டதடா பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டால் அடுத்தப் படத்தில் ஆப்படித்துவிடுவார்கள் என்று, வாங்கிய பணத்தில் நாற்பது சதவிகிதத்தை திருப்பிக்கொடுத்திருக்கிறார் தளபதியின் தந்தை. நேற்று துவங்கிய இந்த விநியோகம் இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று தெரிகிறது.

இமயமலை பாபாவை வைத்து இரண்டாயிரம் வருட பூச்சுற்றல்களுடன் வந்த 'பாபா'வை போலவே அப்பளமாகியிருக்கிறது 'ஆதி'. அன்று 'பாபா' தோல்விக்கு பணத்தை திருப்பிக்கொடுத்து விநியோகஸ்தர்களின் காயத்துக்கு களிம்பு தடவினார் ரஜினி. அதையே ஆதியிலும் செய்திருக்கிறார் விஜய்.

ஹீரோயிஸத்தில் ரஜினியை காப்பியடிப்பவர் குப்புற விழுந்ததிலும் குருவையே பாலோ செய்கிறார்.

இதுதாங்கண்ணா நிஜ குருபக்திங்கிறது!

சினி சவுத்


- வர்ணன் - 01-25-2006

மேற்கோள்:

<b>ஹீரோயிஸத்தில் ரஜினியை காப்பியடிப்பவர் குப்புற விழுந்ததிலும் குருவையே பாலோ செய்கிறார்.

இதுதாங்கண்ணா நிஜ குருபக்திங்கிறது!</b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வினித் - 01-25-2006

விஜய்யை பற்றி யாரும் தப்ப பேசின இங்கு ஒரு கொலை விழும் சரியா :twisted: :twisted: :twisted:


என்ன மதன் அண்ணா நீங்கள் விஜய்யை பற்றி தப்பான செய்திகள் மட்டும் தான் இனைப்பிர்களா? :twisted: :twisted:
இராவணன் அண்ணாடா சொல்லி போடுவன் சரியா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ragavaa - 01-27-2006

வாசகர்களின் கேள்விகளுக்கு விஜய் அளித்த பதில்கள் இதோ...

நன்றி ஒரு பேப்பர்


- starvijay - 01-27-2006

வில்லனிடம் டயலாக் பேசியே போரடிக்க வைக்கின்றார் விஜய்....வில்லன்கள்களை இப்போது பார்க்கும் போது காமெடி உணர்வே வருகின்றது.. இப்போது வருகின்ற படங்கள் அனைத்தும் அருவாவை மையமாக வைத்தே இருக்கின்றன. இந்த அருவா கலாச்சாரம் தேவையா? சிந்திப்பார்களா....திரிஷாவிற்கு உணர்ச்சி புூர்வமாக நடிக்க தெரியவில்லை.


- Mathan - 01-27-2006

<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin-->விஜய்யை பற்றி யாரும் தப்ப பேசின  இங்கு ஒரு கொலை விழும் சரியா :twisted:  :twisted:  :twisted:  


என்ன மதன் அண்ணா நீங்கள் விஜய்யை பற்றி தப்பான செய்திகள் மட்டும் தான் இனைப்பிர்களா? :twisted:  :twisted:  
இராவணன் அண்ணாடா சொல்லி போடுவன் சரியா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆகா கண்ணில் பட்ட ஒரு செய்தியை இணைச்சன். ஒரு செய்தியை இணைச்சதுக்கு இப்படியா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 02-15-2006

'பேயடி' வாங்கிய 'ஆதி'

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/trishana-500.jpg' border='0' alt='user posted image'>

தொடர்ந்து அதிரடியாக வெற்றி பெற்றி வந்த விஜய்க்கு 'ஆதி' படம் வசூல் ரீதியாகவும் இமேஜ் ரீதியாகவும் பேரிடியாக அமைந்துவிட்டது.

இதனால் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாராம் இளைய தளபதி.

காதல் இளவரசனாக சில காலம் நடித்து வந்த விஜய், திருமலை படத்தின் மூலம் அதிரடி நாயகனாக மாறினார். திருமலையில் அவர் செய்த ஆக்ஷன் ரோல் பேசப்பட்டதாலும், நல்ல வசூலைக் கொடுத்ததாலும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களுக்குத் தாவினார்.

அப்படியே ரஜினியைக் காப்பியடிப்பதில் ஆரம்பித்து, தெலுங்கில் வெற்றி பெறும் ஆக்ஷன் படங்களை (கில்லி அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்தது)

உல்டா செய்வது வரை ஒரே பார்முலாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காலத்தை ஒட்டினார்.

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/trisha-vijj-500.jpg' border='0' alt='user posted image'>

இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல், வசூலே முக்கியம் என்று தனது பாதையில் போய்க் கொண்டே இருந்தார்.

அவரது மு¬டிவு சரிதான் என்பது போல தொடர்ந்து விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, மதுர போன்ற ஆக்ஷன் படங்கள் நல்ல வசூலைக் கொடுக்கவே, ஓவர் குஷியான விஜய் கதையைப் பற்றி கவலைப்படாமல் த்ரிஷா இருந்தா போதும் என்று சுவிஸ் பக்கமாகப் போய் 4 டான்ஸ் ஆடுவது,

நூறு கார்களைக் கொண்ட சேஸ் வைப்பது, அப்படியை அவற்றில் 5 வண்டிகளை குண்டு வைத்து வானில் பல்டியடிக்க வைக்க உடைப்பது, அப்படியே போற போக்கில் எதிரியை நோக்கி சவால் வசனம் பேசுவது என்று வண்டியோட்டினார்.

கதைக்காக விஜய் என்பது போய் விஜய்க்காக கதை என்ற டிரெண்ட் வலையில் விஜய்யும் சிக்கினார். விஜய்க்கான இயக்குனர்கள் என்றும் சிலர் அடையாளம் காணப்பட்டார்கள்.

இப்படிப் போய்க் கொண்டிருந்த விஜய்க்கு பிரேக் போடுவது போல ஆதி வந்து சேர்ந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் விஜய் நடித்த ஆதி, வசூல் ரீதியாக படுமோசம் செய்து விட்டதாம். பாதிக் காசு கூட இன்னும் திரும்பி வரவில்லையாம்.

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/trishan-500.jpg' border='0' alt='user posted image'>

அத்தோடு, தொடர்ந்து ஒரே மாதிரி நடிக்கிறார்ப்பா என்று அவரது ரசிகர்களே அங்கலாய்க்கும் அளவுக்கு விஜய்யின் படங்கள் போரடிக்க ஆரம்பித்து விட்டன.

கூட்டிக் கழித்துப் பார்க்கையில், அஜீத்தின் பரமசிவனை விட ஆதி பட வசூல் மோசமாக உள்ளது.

இதனால் விஜய்யும், ஆதி படத் தயாரிப்பாளர் பிளஸ் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகராவும் சோகமடைந்துள்ளனர்.

ஆதி எப்படித் தோற்றான் என்பதை விஜய்யும், சந்திரசேகராவும் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தபோது, வேக வேகமாக படத்தை எடுத்தது, கதையை சரியான முறையில் கையாளாதது, ஒரே மாதிரியான கேரக்டர் ஆகிய வீக்னெஸ்கள் தெரிய வந்தனவாம்.

இதைத் தொடர்ந்து இப்போதைக்கு ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற ஒரு மிக நல்ல முடிவுக்கு விஜய் வந்துள்ளார். மேலும், தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடிக்காமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

இந் நிலையில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு படத்தின் உரிமையை எஸ்.ஏ.சந்திரசேகரா வாங்கி வைத்துள்ளார். அதை இப்போதைக்கு அதில் நான் நடிக்க மாட்டேன் என்று தந்தையிடம் கண்டிப்பாக கூறி விட்டாராம் விஜய்.

இதையடுத்து அந்தக் கதையை விக்ரமை வைத்துத் தயாரிக்கப் போகிறார் சந்திரசேகரா.

காலம் தாழ்ந்த முடிவுதான், இருந்தாலும் இப்போதாவது யோசித்தாரே..

அப்படியே த்ரிஷாவையும் கொஞ்ச காலத்துக்கு தூரமா வச்சுட்டு வேற ஹீரோயினைப் போடுற முடிவையும் விஜய் எடுத்தால் அவருக்கு இன்னும் நல்லது.

thats tamil