<b>வாசகர்களின் கேள்விகளுக்கு விஜய் அளித்த பதில்கள் இதோ... </b>
<img src='http://img460.imageshack.us/img460/4124/vijayyyyy8ic8mf.jpg' border='0' alt='user posted image'>
இளைய தளபதியே,
தொடர்ந்து வெற்றிப்படங் களை நீங்கள் தருவதற்காக காரணம்... உழைப்பா... அதிர்ஷ்டமா? (ஜி.பாரதி ஜெகன்,சேலம்)
முதலில் உழைப்பு . அப்புறம் அதிர்ஷ்டம்.
<b>*** *** *** </b>
அன்புள்ள விஜய்,
உங்களுக்கு இணையாக எந்த ஹீரோயின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? (ஆர்.நவீன் குமார், தெற்கு காடு, ஆத்தூர்)
அதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.
<b>*** *** ***</b>
மெகா ஹிட் தளபதி,
ஆதி மெகா ஹிட் ஆகுது எவ்வளவு பெட்? (ஆர்.செல்வகுமார், திரு வண்ணாமலை )
என்கிட்டேயே பெட் கட்டுறீங்களா?
<b>*** *** *** </b>
இளைய தளபதியாரே,
நீங்களும், அஜீத்தும் சேர்ந்து நடிப்பீர்களா? (தே.அன்புச் செல்வன், பெரம்பலூர்)
ஏன் நடிக்கக் கூடாது?
<b>*** *** *** </b>
அன்பு மாமா விஜய்க்கு,
இந்த புத்தாண்டில் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழி என்ன? (மா. சக்தி பிரியா லட்சுமி, சாத்தூர்)
தொடர்ந்து இது போன்ற படங்களை தரவேண்டும்.
<b>*** *** *** </b>
ஹலோ விஜய்,
முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் ஆதிவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறீர்கள்? (குமார், வள்ளிïர்)
43 படங்கள்.
<b>*** *** *** </b>
இளைய தென்றலே,
நீங்கள் ஆக்ஷன்படத்துக்கு இப்போது முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? (மணி கோடம்பாக்கம்)
டிரண்ட்டுக்கு ஏற்ப நடிக்கிறேன்.
<img src='http://img460.imageshack.us/img460/8966/veenan4fx0cx.png' border='0' alt='user posted image'>
<b>*** *** ***</b>
ஆக்ஷனை விட்டு மீண்டும் காதல் படங்களில் நடிப்பீர்களா? ( ராஜசேகரன், புதுச்சேரி)
காதல் படங்களில் நடிப்பேன். காதலுக்கு மரி யாதை போன்ற மிகவும் மென்மையான படங்களில் நடிக்க வாய்ப்பில்லை.
<b>*** *** *** </b>
காதலர்களின் ஷாஜகானே,
தன் காதல் தோற்றாலும் நண்பன் காதல் வெற்றிபெற நினைக்கும் நண்பனைப்பற்றி...? (ஜி.கே. உதயா, ஈரோடு)
நண்பர்கள் என்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரப்பிர சாதம்.
<b>*** *** *** </b>
ஹலோ விஜய்,
உங்கள் மனதைப் பாதித்த சம்வம் ஒன்று... (வீ.உதயகுமாரன், வீரன் வயல்)
என் தங்கையின் இழப்புதான்.
<b>*** *** *** </b>
ஹாய், விஜய்,
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் எப்போதுப நடிப்பீர்கள்? (நசீர், திருச்சி)
வாய்ப்புக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
<b>*** *** *** </b>
இளைய தளபதியே,
உங்கள் செல்போனில் எந்த பாட்டுக்கான ரிங்டோன் இருக்கிறது? (மும்பை டி.ஜி.எஸ், தாராவி)
பாடல் இல்லாத ரிங்டோன்.
<b>*** *** *** </b>
நம்பிக்கை நாயகனே,
பண்டிகைகளை பொது மக்களோடு கொண்டாடுகிறீர்களே... அரசியலுக்கு வருவீர்களா?... (தங்க ஜெகன் நிவாஸ், தட்டான்விளை)
மக்களை நேரில் சந்தித்து மகிழ்வதே என் ஆசை. அரசியலுக்கு வரும் பேராசை இல்லை.
<b>*** *** *** </b>
அன்புள்ள விஜய்.
உங்கள் கனவில் அடிக்கடி வரும் நண்பர் -நண்பி யார்? (ஆர்.சண்முகராஜ், திருவொற்றிïர்)
நண்பன்- சஞ்சை (மகன்) நண்பி -திவ்யா- (மகள்)
<b>*** *** *** </b>
விஜய் சார்,
அஜீத் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? (ஜெ.ஜெகதீசன், தேனி)
வாலி.
<b>*** *** *** </b>
விஜய் அவர்களே,
உங்கள் தீவிர ரசிகனான நான், ஒரு காட்சியில் உங்களுடன் நடித்து காலம் முழுவதும் பெருமை பட வாய்ப்பு கிடைக்குமா? (விஜய்மணி, சேலம்-5)
இது பெரிய விஷயமல்ல.
<b>*** *** *** </b>
விஜய் சார்,
எப்போது டைரக்ஷன் செய்வீர்கள்? (ஜி.விக்னேஷ்), வியாசர்பாடி)
கண்டிப்பாக செய்யமாட்டேன்.
<b>*** *** *** </b>
விக்ரமுடன் நடிக்க தயார் என்று அறிவித்திருக்கிறீர்களே.. எப்போது?
வாய்ப்பு வரும் போது.
<b>*** *** *** </b>
இளைய தளபதியே,
இரட்டை வேடத்தில் எப் போது நடிப்பீர்கள்? (எஸ்.கார்த்திகேயன், நாமக் கல்)
கதை கிடைத்ததும்.
<b>*** *** *** </b>
எங்கள் தவமே,
தவமாய்தவருமிந்து, படம் பற்றி உங்கள் கமெண்ட்?
படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களுக்கு கண்டிப்பாக அவர்களுடைய அப்பாவுக்கு போன் செய்ய வேண்டும் என்று தோன்றும்.
<b>*** *** *** </b>
காதலர்களின் காவலனே,
காதலர்களுக்கு நீங்கள் கூறம் அறிவுரை. (பி.பவுன்ராஜ், மதுரை-9)
ஜாக்கிரதை... ஏமாந்திடாதீங்க.
<b>*** *** *** </b>
இதயம் நிறைந்தவரே,
பெண்களிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன? (பா.சங்கர் ராஜா, மணி விழுந்தான் வடக்கு)
திருமணம் ஆனதும் கணவனின் எண்ணம் அறிந்திருந்து நடக்கும் சாதுர்யம்.
<b>*** *** *** </b>
மிஸ்டர் விஜய், உங்களை மிகவும் கவர்ந்த நடிகர்- நடிகை யார்? (பே.ராமநாதன், பெருமாள் குளம்)
எல்லா நடிகர்களிடமும் ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. அது போல நடிகையர்களிடமும் சிறப்புத்தன்மை இருக்கிறது.
<b>*** *** *** </b>
என்னுயிர் தலைவா உங்கள் வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வருவீர்களா? (வெங்கடேஷ், தெர்மல் நகர்)
அது அவர்கள் விருப்பம்
<b>*** *** *** </b>
இளைய தளபதியே,
நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி? (எம்.ஜி.செல்வன், நெல்லை)
அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
<b>*** *** ***</b>
முதன்மை நாயகனே,
உங்களுடன் நடித்த திரிஷா ஜோதிகா, அசின்.. சிறப்பு பற்றி? (கண்மணி, திருச்சி-1)
திரிஷா
ஜோதிகா
அசின்.
<b>*** *** ***</b>
எல்லோருக்கும் பிடித்தவரே,
உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்? (அன்பரசு, சென்னை-2)
தனியாக படம் பார்ப்பது
<img src='http://img460.imageshack.us/img460/6654/324ms.jpg' border='0' alt='user posted image'>
<b>*** *** *** </b>
ஆதியே,
நீங்கள் இது வரை போலீஸ் வேடத்தில் நடிக்க வில்லையே ஏன்? (ஜோதி, தேவிகா, திண்டுக்கல்)
காத்துக் கொண்டிக்கிறேன். உங்களிடம் கதை இருந்தால் கொடுங்கள்.
<b>*** *** ***</b>
பாசம் உள்ள விஜய்க்கு,
குழந்தைகளை எப்படி கவனிக்கிறீர்கள்? (பரமேஸ்வரி, கோவை)
அவர்களுக்கு உரியவை எல்லாம் சரியாக கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
<b>*** *** *** </b>
டாப் ஸ்டார் அவர்களே,
நடிகர் திலகத்துடன் நடித்த நாயகனே. சூப்பர் ஸ்டார்,உலக நாயகனுடன் இணைந்து நடிப்பீர்களா? (அமீது , நாகர்கோவில்)
வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.
<b>*** *** ***</b>
இளம் புலியே,
புலி படம் கைவிடப் பட்டுவிட்டதாக சொல்கிறார்களே?... (சந்திரா, ஈரோடு)
புலி படம் கைவிடப்படவில்லை. நிச்சயம் வெளிவரும்.
<b>*** *** *** </b>
இனியவரே,
நீங்கள் பொங்கலுக்கு தரும் இனிப்பான செய்தி என்ன? (ஜோசப், தூத்துக்குடி)
பொங்கலுக்கு என் படம் ரிலீஸ் ஆனாலே அது இனிப்பான செய்திதான். நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்களே...
<img src='http://img460.imageshack.us/img460/9786/415xp.jpg' border='0' alt='user posted image'>
நன்றி:மாலைமலர்