![]() |
|
ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை (/showthread.php?tid=1811) |
ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை - AJeevan - 12-24-2005 <img src='http://www.tamilnet.com/img/publish/2004/01/mandur_1_21998_200.jpg' border='0' alt='user posted image'> ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொலை என மட்டக்களப்பு தகவல்கள் சொல்கின்றன. செய்தி உண்மையா? - kirubans - 12-24-2005 உண்மை என்றுதான் tamilnet சொல்லுகின்றது. - Vaanampaadi - 12-24-2005 Joseph Pararajasingham MP shot dead in Batticaloa church [TamilNet, December 24, 2005 19:56 GMT] Mr. Joseph Pararajasingham, a senior Tamil politician and the Batticaloa district Member of Parliament (MP) of the Tamil National Alliance (TNA) was shot and killed by unidentified gunmen at St. Mary's Church in Batticaloa while attending Christmas prayers midnight Saturday, sources in Batticloa said. Further details are not available at the moment. Tamil.net - yarlmohan - 12-24-2005 ஆம் செய்தி உண்மைதான் அஜுவன் - AJeevan - 12-24-2005 Joseph Pararajasingham MP shot dead in Batticaloa church [TamilNet, December 24, 2005 19:56 GMT] Mr. Joseph Pararajasingham, a senior Tamil politician and the Batticaloa district Member of Parliament (MP) of the Tamil National Alliance (TNA) was shot and killed by unidentified gunmen at St. Mary's Church in Batticaloa while attending Christmas prayers midnight Saturday, sources in Batticloa said. - adsharan - 12-24-2005 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!! [ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2005, 01:41 ஈழம்] [ம.சேரமான்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சென்ட் மேரீஸ் தேவாலயத்தில் நத்தார் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அச்செய்தி கூறுகிறது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. http://www.eelampage.com/?cn=22812 - kuruvikal - 12-24-2005 ஈழத்தமிழரின் உரிமைக்குரல் ஒன்று அடங்கிய சோகம் தாங்க முடியவில்லை..! - adsharan - 12-24-2005 அன்னாருக்கு எனது வீர வணக்கங்கள்<img src='http://img286.imageshack.us/img286/6062/sep543fy.jpg' border='0' alt='user posted image'> - Vasampu - 12-24-2005 செய்தி உண்மைதான் அஜிவன். இப்போது வேறு இணையத்தளங்களிலும் பார்த்தேன். அன்னாருக்கு எமது குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள். - suddykgirl - 12-24-2005 kuruvikal Wrote:ஈழத்தமிழரின் உரிமைக்குரல் ஒன்று அடங்கிய சோகம் தாங்க முடியவில்லை..! :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் - வர்ணன் - 12-24-2005 மட்டக்களப்பின் நகர பகுதி வாழ் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியபடுத்தும் காரியங்களாவன போராளிகள் மீதான தாக்குதல்கள் அவர்களின் வெளியேற்றம் போராட்ட ஆதரவு சக்திகளை துடைத்து எறியும் செயற்பாடுகள் என்று கச்சிதமாக அரங்கேறி கொண்டு இருக்கிறது. முழுமையாக அந்த பிரதேசங்கள் மீட்கப்படும் வரை மிகவும் சிக்கலான நிலையே நிலவ போகிறது. அந்த பிரதேசத்தின் புவியியல் அமைப்பு எதிரிகளுக்கு மிகவும் சாதகமாகவே என்றும் இருந்து வருகிறது. பருத்திதுறையிலிருந்து அம்பாறை வரை எம் மண்ணின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் போரிட்ட அந்த மண்ணின் மைந்தர்களின் கனவுகளுக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் என்பதுதான் இப்போது எம் முன்னால் உள்ள கேள்வி என்று நினைக்கிறேன்! ஜோசப் பரராஜசிங்கம் இன்னொரு குமார் பொன்னம்பலம்! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- iruvizhi - 12-24-2005 தமிழர்களின் ஆன்மாவை சீண்டும் சிங்கள பயங்கரவாதம். இனியும் தமிழர் மௌனம் காக்கலாமா?????????? காட்டுமிராண்டித்தனத்திற்கு எல்லையே இல்லையா????? மகிந்தவின் ஆட்சியில் மானிடம் சரிந்ததோ?????? சிங்களதேசம் படிக்கவேண்டிய பாடம் நிறைய உள்ளது. யோசெப் ஐயா அவர்களின் இறப்பு செய்தி கேட்டு வாயடைத்து மௌனித்துபோய் நிற்கின்றோம்.
- Danklas - 12-24-2005 கன காலமாக திட்டமிட்ட நடவடிக்கையை கோழைத்தனாமாக இயேசு கிறிஸ்து அவதரித்த நாளில் தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொழுது நிறைவேற்றி இருக்கிறார்கள், பேடிகள்,,, :evil: :evil: - kurukaalapoovan - 12-24-2005 அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். மட்டக்களப்பின் முத்த அரசியல்வதி ஒருவரின் ஈழப்பு தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய இழப்பு. இந்தக் கொலை மூலம், அதுவும் இணைத்தலமை நாடுகளின் பிரதிநிதிகள் புலிகளை சந்தித்தப் பின்னர் இதை நடத்தி புதிய அரச தலமை என்ன செய்தியை சொல்ல முனைகிறது? சர்வதேச ஊடகங்கள் இன்று நடைபெற்ற பேச்சுக்கள் முன்னேற்றம் இன்றி (தோல்வியில்) முடிந்ததாக சித்தரிக்கும் பொழுது அரசாங்கம் துணிந்து இதை செய்ததை மேலோட்டமாக பார்க்க முடியாது. - Rasikai - 12-24-2005 அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்
- Birundan - 12-24-2005 பேடிகளின் திட்டமிட்ட செயல், திட்டமிட்டு தமிழீழத்தின் தூண் ஒன்று சரிக்கப்பட்டிருக்கிறது, நமது பாஷை சிங்களத்துக்கு புரியாது, அவர்களுக்கு புரிந்த ஒரு பாஷை இருக்கிறது, அதுதான் அடி. தமிழினத்தின் கண்ணீர்துடைக்க அரும்பாடு பட்ட அந்த நல்ல உள்ளத்துக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். - sabi - 12-24-2005 நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே ஐயோ ஐயோ
- Selvamuthu - 12-24-2005 கடவுள் வாழும் ஆலயத்தினுள் சென்று தங்கள் காடைத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள் கோழைகள். இது இறைவனுக்கே விடப்பட்ட ஒரு சவாலாகும். அதர்மம் மீறிவிட்டது. தர்மம் நிச்சயம் நிலைக்கும், விரைவில்! எனது கண்ணீர் அஞ்சலிகள். - Sriramanan - 12-24-2005 தமிழ் தேசியத்திற்காக தனது இறுதி மூச்சுவரை உழைத்து சாவினை அணைத்துக் கொண்ட ஜோசப் பரராசசிங்கம் அவர்களிற்கு எனது கண்ணீர் வணக்கம். - selvanNL - 12-24-2005 எமக்கு ஒரு தீர்வை சிங்கள அரசாங்கம் பெற்றுத்தராது, நீங்கள் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து நீங்களே உங்களுக்கு ஒரு நாட்டை பெற்றுக்கொள்ளுங்கள் என்று செயல் முறையில் அண்மைக்கால செயற்பாடுகளை செய்து காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள், உலக நாடுகளும் தமிழர்களை ஒரு இனம் என்று மதிக்காமல் கண்ணைமுடிக்கொண்டு மெளனம் காக்கின்றது,,, நாளை உதிக்கப்போகும் தமிழீழத்தில் இவர்கள் அங்கு முதலீடு செய்ய வருவார்கள்.. சுய நல உலகத்தில் எவனையும் நம்பாது எங்களை நாங்களே பாதுகாத்துகொள்ளவேண்டும், எமது தலைவர் வெகு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும், எமது தலைவர் மேதகு.வே.பிரபாகரனுக்கு பின்னால் 95% தமிழ்மக்கள் நிற்கின்றோம், உலக நாடுகளுக்காக நாங்கள் இழந்தது போதும்,.. அடுத்த மாதத்தில் இதற்கு ஒரு பதிலை எதிர்ப்பார்க்கிறோம்,,,,
|