| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 213 online users. » 0 Member(s) | 210 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,627
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா.... |
|
Posted by: gausi - 01-05-2006, 06:20 PM - Forum: போட்டிகள்
- Replies (91)
|
 |
[quote=gausi]இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன்.
|
|
|
| இந்திய சகோதரர்களுக்கு,,,, |
|
Posted by: Danklas - 01-05-2006, 02:48 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (75)
|
 |
லக்கிலுக் ராஜாதி ராஜா, வானம்பாடி மேலும் களத்தில் உள்ள பல இந்திய சகோதர்களுக்கு!
யாழ்களத்தில் உள்ளவர்களோ அல்லது ஈழத்திலே உள்ளவர்களோ இந்தியாவுக்கோ அன்றி இந்திய இறையான்மைக்கோ எதிரானவர்கள் அல்லர்,, ஆனால் இந்தியாவுக்கு எதிராக பல முறை கருத்துக்களை யாழ்களத்தில் உள்ளவர்கள் இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் முன் வைத்திருக்கின்றன முன் வைத்துக்கொண்டு இருக்கின்றன,,
ஆனால் இந்தியாவுக்கு எதிரான பல கருத்துக்கள் யாழ்களத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அது ஒட்டுமொத்த தமிழ் நாட்டையோ இந்திய நாட்டையோ தாக்கும் விதத்தில் அந்த கருத்துக்கள் அமையவில்லை, மாறாக ஒரு இனத்தை அழிக்கும் என்னொரு இனத்திற்கு பக்க பலமாக ஆதரவை தெரிவிக்கும் ஜெயலலிதா, ஹிந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சோ போன்றவர்களுக்கு எதிராக அதிகமான கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள்,, இவர்கள், 30 வருட கால கடும் யுத்தம், எவரின் உதவியையும் பாரமல் தன்னந்தனியே போராடிய ஒரு சிறிய இனத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையிலாவது உபத்திரம் செய்யாமல் இருந்திருக்கலாம் தானே? அதனால்த்தான் அவர்களுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, ஏன் உதாரணத்துக்கு இந்தியாவில் உள்ளவர்களே பகீஸ்தானுக்கு எதிரான முசாரப்புக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள் தானே??
ஈழத்தமிழரிற்கு 2 முறை இந்தியாவால் ஒரு அதிஸ்ரம் வந்து கை நழுவி சென்றது ஒரு துரதிஸ்ரமே,, ஒருமுறை அன்னை இந்திரா காந்தி மூலம் இன்னொரு முறை எம்.ஜீ. ராமச்சந்திரன் அவர்களால்,, இந்த இருவருமே ஈழத்தை பற்றி நன்றாக அறிந்து இருந்தார்கள்,, அவர்கள் இன்று இருந்திருந்தால் எமக்கு ஒரு நாடு அல்லது சுதந்திரமான தீர்வு கிடைத்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை,,,
அண்மையில் யாழ்களத்தில் பல சச்சரவுகள் நடந்தன,, அந்த சச்சரவுகள் யாழ்களத்தை இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டு ஊடகமாக காண்பிக்கும் ஒரு நிலைப்பாட்டை தோற்றுவித்தன,,, இதனால் பல உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தங்களின் கவலையை தெரிவித்து இருந்தனர்,,,
இவற்றில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும், தமிழீழத்தமிழர்களின் தலைமை அன்று தொடக்கம் இன்றுவரை இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டை தங்களின் சொந்த சகோதரர்கள், தொப்புல் கொடி உறவு என்ற ரீதியிப் பார்த்து வருகிறார்கள், அவர்களுக்கு ஆதரவான கருத்தையே முன்வைத்தும் வருகிறார்கள்,,
பல காலமாக லக்கிலுக், ராஜாதிராஜா, சுகுமார், வானம்பாடி போன்றோரின் கருத்துக்கள் வெந்தபுண்ணில் ஈட்டி பாய்ச்சுவதாக இருந்தது, அதனால்த்தான் பல தனிநபர் வசைபாடல்கள், தணிக்கைகள், அநாகரிக கருத்துக்கள் என்று பல அசம்பாவிதங்கள் நடந்தன,, ஆனால் அண்மைக்காலமாக லக்கிலுக், ராஜாதிராஜா போன்றோரின் கருத்துக்கள் எமக்கு ஒரு ஆறுதலை தந்ததாகவே தென்படுகிறது,, <i>ஆகையால் எனி புரிந்துணர்வோடு செயற்படுவோம் என கள உறுப்பினர்கள் தங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்</i>,,,,,
இவ்வேண்டுகோள் மூலம் யாழ்களம், தட்ஸ்தமிழ், போன்ற இனையத்தளங்களில் வீன் சச்சரவுகளைக்கொண்ட கருத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
இப்படிக்கு யாழ்களத்தின் உறுப்பினர்,,,,
[size=9]மட்டுறுத்தினர்களுக்கு தயவு செய்து சிறுது காலம் இந்த கருத்து இங்கேயே இருக்க அனுமதியுங்கள்,,, நன்றி,,
|
|
|
| Man without National ID card, shot dead by SLA |
|
Posted by: வினித் - 01-05-2006, 02:10 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Man without National ID card, shot dead by SLA
[TamilNet, January 05, 2006 11:54 GMT]
Rasaratnam Kuganenthiran, 24, also called Sinnathamby, a resident of Puthukkulam in Kiran Batticaloa was shot dead by Sri Lanka Army (SLA) soldiers Thursday 9.30 a.m. in front of the offices of a local NGO, Thadagam, on the Korakallimadu Batticaloa-Valaichenai Highway, sources in Batticaloa said. Sources said the Mr Kuganenthiran did not have the National Identity card in his possession.
SLA soldiers involved in the shooting had told the Eravur Police that they fired in self-defence when the man tried to attack the soldiers, Police said.
Mr Kuganenthiran is a father of one year old child.
His body is still lying in the location where he was shot dead at the time of filing this report.
No other details are available at the moment.
Kiran lies 25 km north of Batticaloa town.
TamilNet
|
|
|
| ஒரு ஜோக் |
|
Posted by: matharasi - 01-05-2006, 01:15 PM - Forum: நகைச்சுவை
- Replies (24)
|
 |
ரோனால்ட் ரீகன் இந்தியா வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ராஜிவ் காந்தி சென்று வரவேற்றார்.
பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார்.
பிறகு முகம் சுளித்தவாறு ராஜிவிடம் ...இப்படித்தான் இந்தியர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ராஜிவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார்
பிறகு ராஜிவ் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ராஜிவும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ராஜிவ் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார்.
ரீகன் கோபப்பட்டு ரகசிய போலிஸைக்கூப்பிட்டு அந்தஆளை கைது செய்யும்படி கூறினார்...சிறிது நேரம் சென்று அந்த ரகசிய போலிஸ் அவரிடம் திரும்பி வந்து ,,,,,,,,, அவனை கைது செய்ய மூடியவில்லை,,,,,,,,,,
என்று கூறினான்...ரீகன் கோபமாக,,,,, ஏன் முடியவில்லை,,,,, என்று கேட்டார்.
அந்த ரகசிய போலிஸ் ,,,,,,ஆசிய நாட்டு ராஜ தந்திரி ...என்றான்
|
|
|
| மாமனிதர் குமாரின் 6வது நினைவு தினம் |
|
Posted by: நர்மதா - 01-05-2006, 11:15 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (12)
|
 |
நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் மாமனிதர் உரிய கௌரவத்துடன் நிலைக்கிறார்
இன்று குமாரின் 6 ஆவது நினைவு தினம்
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காக அவர் செய்த உயிர்த் தியாகத்தைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள்இ நினைவுமலர்கள் வெளியாகியிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் அவரின் உயிர்த் தியாகம் யாரும் மறக்கக்கூடிய காரியமல்ல. அதற்குரிய முக்கியமான காரணங்களாவன;
1. எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்?
2. தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் வெளிநாடுகளில் எங்கேயாவது சென்று வாழக்கூடிய சகல வசதிகள் இருந்தும் ஆயுதங்களைக் கையிலே வைத்துக் கொண்டு வாழும் எதிரிகளின் குகைக்குள்ளேயே தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டு வாழ்ந்தவர். நான் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் சில காலம் இருந்து தமிழர் பிரச்சினைகளை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் படி கூறிய பொழுது இனவாத அரசாங்கங்களுக்கும் எதிரிகளுக்கும் பயந்து வெளிநாட்டிலிருந்து அரசியல் நடத்த விருப்பமில்லை என்று கூறினார்.
3. அவரைப் பொறுத்தவரையில் சகல விதமான சௌகரியங்களும் கடவுளால் கொடுக்கப்பட்டிருந்த பொழுதும் அவற்றை எல்லாவற்றையும் மறந்து செயல்பட்டவர். மாமனிதனைப்பற்றி பல நினைவுமலர்கள் வெளியிடப்பட்டு நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவு தினத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நினைவு கூர்ந்து கொண்டிருப்பதிலிருந்து அவருடைய உயிர்த் தியாகத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மறக்கவில்லை என்பதே ஆகும்.
அவருடைய நினைவு மலர்கள் பலருக்கு கிடைக்காமல் இருக்கக்கூடும் என்று எண்ணி நினைவுமலர்களிலிருந்து சிலவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
கடும் குளிரிலும் மாமனிதனுக்கு கனடாவில் அஞ்சலி
கடும் குளிரிலும் ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றிலில் திறந்த வெளி அரங்கில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற அஞ்சலிப் பொதுக் கூட்டத்தில் ஸ்காபுறோ - எஜின் கொட் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம். கரிஜியானிஸ்இ ஸ்காபுறா - எஜின் கோட் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்வின் கேளிங்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நோம்கெலிஇ ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர்கள்இ மனிதவுரிமை அமைப்புகள் ஏனைய இன அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாமனிதர் குமாரின் படுகொலையை வன்மையாகக் கண்டித்து அவர்கள் தமிழ் மக்களின் உரிமை வேண்டிய போராட்டத்திற்கு தமது ஆதரவையும் வெளிப்படுத்தினர்.
உலகத் தமிழர் கனடா:
சிங்கத்தின் குகைக்குள் கொல்லாமை பேசிய அன்பனே துப்பாக்கி முதுகுறுத்தும் போதும் அஞ்சாமல் தமிழருக்காய் உரத்து முழங்கிய மறத்தமிழன் நீ. எங்கள் நெஞ்சுக்குள் கனன்றிருந்த கேள்விகளையெல்லாம் கடிதமாய் வடித்தாய் நீ. துப்பாக்கி ரவைகளை பதிலாகனுப்பினர் கோழைகள். உண்மையை ஓங்கியொலித்த உன் மூச்சையே பிடுங்கினர்.
தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்ஸ்
அமரர் குமார் பொன்னம்பலம் எம் தமிழ் மக்களுக்கும்இ எம் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாக மிகத் துணிவாக இன்னல்கள் நிறைந்த கொழும்புச் சூழ் நிலையிலும் குரல் கொடுத்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் கொழும்பில் மட்டுமல்லாது சர்வதேச அளவில்இ தான் பங்கு கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் எம் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும்இ அவர்களுக்குச் சிங்கள அரசு கொடுக்கும் இன்னல்களைப் பற்றியும் முற்று முழுதான உண்மைகளை எடுத்துக் கூறிவந்தார்.
இவ்வாறாக தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் உறுதியும் துணிவும் மிக்க ஒரு நல்ல மனிதன் இழப்பு தமிழ் இனத்திற்கு பேரிழப்பாகும்.
ஐ.பி.சி. குடும்பம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பி வந்தவரும் எதிரியின் வாசலில் இருந்து கொண்டே தமிழீழ விடுதலையையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஆதரித்துக் குரலெழுப்பி வந்த அஞ்சா நெஞ்சன் குமார் பொன்னம்பலம் அவர்களது படுகொலைச் செய்தி கேட்டு தமிழ் தேசிய இனம் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.
தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்ட அளவற்ற நேயம் காரணமாக சட்டத்துறையில் பெற்ற அறிவையும் ஆற்றலையும் தமிழினத்தின் விடுதலைக்காய் அர்ப்பணித்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் அகாலமரணம் தமிழ் தேசிய இனத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
அடங்கி வாழும் இனமல்ல தமிழினம் என்பதை
ஸ்ரீலங்கா பேரினவாத அரசிற்கு எடுத்தியம்பி வந்த
சுதந்திர புருஷன் குமார் பொன்னம்பலம் அவர்களுடனான
நினைவை நாம் என்றும் மறக்க முடியாது
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களே
ஈழத்தமிழருக்காய் பாரெங்கும் நீவீர் எழுப்பிய
குரல் இன்று நீதிமன்றங்கள்இ மனிதவுரிமை
நிலையங்கள்இ தொடர்பு சாதனங்கள்
உலகமெல்லாம் ஒலிக்கிறது ஐயா!
தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறைச்சாலை 2000 ஆம் ஆண்டு
ஆதரவற்று நின்ற தமிழ் அரசியல் கைதிகளான எங்களுக்கு தனது சட்ட அறிவைக் கொண்டு சிறந்த மீட்பராகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் இருந்து கொண்டு தாயக விடுதலையில் தணியாத தாகத்துடனும்இ தளராத உறுதியுடனும் தனக்கெனத் தனித்துவமான பண்பையும் இலட்சியத்தையும் வரித்துக் கொண்டு ஈழத் தமிழ் தேசிய இனத்தின் குரலாக தமிழ் அரசியல் வானில் தன்னிகரில்லாத் துண்மதியாக சிங்கள இனத்தின் சிரசில் இருந்து கொண்டே சிம்ம சொப்பனமாக விளங்கிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் கோரத்தனமானதும் கோழைத்தனமானதுமான படுகொலை எமக்கு அதிர்ச்சியையும் ஆறாத்துயைரையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மாமனிதரின் இழப்பு தமிழ் தேசிய இனத்தால் என்றுமே ஈடு செய்ய முடியாது. அவர்தம் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேவேளைஇ அன்னாரின் வாழ்நாளில் வரித்துக் கொண்ட இலட்சியங்களால் கவரப்பட்டவர்கள் என்ற வகையிலும்இ எமது வளமான வாழ்வுக்காக வாதாடியவர் என்ற வகையிலும்இ துரோகக் கொலை செய்த கோழைகளின் நோக்கம் நிறைவேறாத வகையிலும் அவரது இலட்சியங்களை நிறைவேற்ற திட சங்கற்பம் கொள்கிறோம்.
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ருளுயு
ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள்இ படுகொலைகள்இ கைதுகள் இ சித்திரவதைகள்இ பாலியல் வன்முறைகள் இவற்றிற்கு எதிராக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி நீதி கோரி வாதாடினார். பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்முறைக்குப் பலியாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நீதிமன்றம்இ உலக மனித உரிமைகள் அமைப்புகள் இவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்து அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்தியவர் குமார் பொன்னம்பலம் அவர்களே.
மேலும்இ அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகளுக்கு செய்த பிரசாரத்தை எதிர்த்து அதற்கு மாறாக அவர்களின் சுயரூபத்தையும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டையும்இ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நீதி நியாயத்தையும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள்இ கொழும்புக்கு வருகை தந்த அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களது தார்மீக ஆதரவை திரட்ட முயற்சி செய்தவர் குமார் பொன்னம்பலம். அவர் அந்நேரம் கொழும்பில் இருந்திராவிட்டால் வெளிநாட்டவர்கள் அரசாங்கத்தின் கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள்.
சிட்னி தமிழ் அமைப்புகள்
ஈழத்தமிழர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும்இ தமிழ் தேசம்இ சிங்களத் தேசம் என்ற இரண்டு தேசங்கள் இணைந்ததுதான் இலங்கை என்பதையும் ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தவர் அமரர் குமார் பொன்னம்பலம். இந்தக் கருத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு திணிக்கப்பட முடியாது. மாறாக ஈழத் தமிழர்களின் கைகளில் தான் தற்போதைய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஆணித்தரமாக அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் தனித்து ஒலித்துவந்த இந்த ஜனநாயக மரபு வந்த தமிழ் அரசியல்வாதியின் குரல் ஒடுக்கப்பட்டமை மிதவாத அரசியலில் நேர்மையான ஈழத்தமிழருக்கு இடம் இல்லை என்பதைக் காட்டுகின்றது. வன்முறை அரசியலாக மாறிவிட்ட இலங்கை அரசியலில் ஜனநாயக கோட்பாடுகள் அடக்கப்படும் மற்றொரு துரதிர்ஷ்ட நிகழ்வே குமார் பொன்னம்பலத்தின் கொலை எனக் கூற வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அமரர் குமார் பொன்னம்பலம் என்ன இலட்சியத்துக்காக போராடி மரணித்தாரோ அதை நிறைவேற்றுவதுதான் தமிழ் மக்களாகிய நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - ஜேர்மனி
மாமனிதர் சட்டவல்லுநர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மனிதத்தை உலகத்தில் காப்பாற்ற தனது உழைப்பையும் காலத்தையும் அர்ப்பணித்து நின்ற ஒரு மனிதர். தாயகத்தில் எமது மக்களைக் காப்பாற்ற உயிர் கொடுத்து உழைக்கும் புலிகளை பகிரங்கமாக அங்கீகரித்து சிங்களத்துத் தலைநகரிற் துணிவோடு நின்ற ஒரேயொரு தமிழர்.
இவர் கொழும்பு நகரில் கைது செய்யப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு நீதியின் துணை கொண்டு விடுதலை பெற்றுக் கொடுத்த பாசம் நிறைந்த சட்டவல்லுநர். தமிழரின் உரிமைக்காக உலகில் குரல் எழுப்பிய விடுதலை நேசர். சிங்கள அரசுகளின் கொடூரமான இராணுவச் சித்திரவதைகளையும் பாலியற் கொலைகளையும் சட்ட மீறல்களையும் உலக நாடுகளின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நீதியாளர்.
இவர் மரணத்தின் வாசலிலும் மண்ணை நேசித்தவர். மக்களை நேசித்தவர். நீதிக்காக போராடியவர். நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் "மாமனிதர்" என்ற உரிய கௌரவத்தைப் பெற்று நிலைக்கிறார்.
மேலே கூறியவற்றிலிருந்து எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்? என்ற இரு கேள்விகளுக்குரிய விடை துலாம்பரமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அவரின் தியாகம் என்றும் அழியாது.
தினக்குரல்
|
|
|
| அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த |
|
Posted by: நர்மதா - 01-05-2006, 10:55 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
புலிகளுடனான அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயா ராக இருக்கிறது.
அதற்கான பிரதிபலிப்பை புலிகளிடம் இருந்து தாம் எதிர்பார்த்திருக் கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தமது அமைச்சரவைச் சகாக்களுக்கு தெரிவித் திருக்கின்றார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்னிரவு சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்றது.
அப்போதே மேற்படி தகவலை ஜனாதி பதிஇ ஏனைய அமைச்சர்களுக்குத் தெரிவித்தார்.
ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டை அரசுத் தலைமை தளர்த்திக் கொண்டுள்ளது. ஆனாலும் புலிகளின் கோரிக் கையான நோர்வேயில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டுக்கு அரசுத் தரப்பு இணங்க மறுப்பதாகத் தெரிகின்றது.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக் குப் பதிலாக சுவிட்ஸர்லாந்து போன்ற வேறு ஒரு நாட்டில் பேச்சை நடத்தலாம் என்று அர சுத் தரப்பு இப்போது ஆலோசிப்பதாகவும்
இது தொடர்பாகப் புலிகளுக்கு அரசுத் தரப்பால் கோடிகாட்டப்பட்டிருப்பதாகவும்
புலிகளின் பிரதிபலிப்பை அரசுத் தலைமை எதிப்பார்த்துக் காத்திருப்பதாகவும்
அரசு உயர்மட்டத்துடன் தொடர்புடைய சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
இதே கருத்தையே நேற்று அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருக்கின்றார் எனத் தெரிய வந்தது.
லங்காசிறீ
|
|
|
| ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது: நோர்வே |
|
Posted by: வினித் - 01-05-2006, 09:17 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது - நோர்வே தெரிவிப்பு </b>
Written by Ellalan Thursday, 05 January 2006
ஐரோப்பிய ஒன்றியததின் பயங்கரவாதப் பட்டியலை நோர்வேயால் ஏற்றுக் கொள்ள முடியாதென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜொனார்ஸ் கார்ஸ்ரோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப்பட்டியல் ஒன்று இல்லை என்ற போதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் மையத்தின் கீழ் சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 54 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் எந்தவொரு அமைப்பும் ஐ.நாவினால் தடைசெய்யப்படவில்லை.
இந்த நிலையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வே தமது நிலைப்பாட்டுக்கு காரணம் கூறியுள்ளது.
அத்துடன் தமது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் இல்லாமையால் தம்மை ஐரோப்பிய பயங்கரவாத பட்டியலை ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கமுடியாது என ஜொனாஸ் காஸ்ரோர் தெரிவித்துள்ளார்.
நன்றி:சங்கதி
|
|
|
| உதவி |
|
Posted by: தூயா - 01-05-2006, 08:49 AM - Forum: இணையம்
- Replies (10)
|
 |
புதிய இணைய தளம் அமைக்க உதவும் நல்ல ஒரு வெப் கூற முடியுமா??
|
|
|
| எல்லாருக்கும் வணக்கம் |
|
Posted by: கீதா - 01-04-2006, 10:05 PM - Forum: அறிமுகம்
- Replies (13)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>எல்லாருக்கும் வணக்கம்
நான் கீதா
எப்படி இருக்கிறிங்கள் ?
உங்களிடம் சின்ன உதவி தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் சொல்லுங்கள் ஓகேயா ?
ஒவ்வொரு ஆண்டும் பிறக்கேக்கிலை உ-ம் (காகம் ) ஒவ்வொன்றிலை முளித்துத்தானே பிறக்கின்றது என்று சொல்வினம்
2006ம் ஆண்டு என்னத்தில் பிறந்திருக்கு சொல்விங்களா ?</span>
|
|
|
|