Yarl Forum
ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது: நோர்வே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது: நோர்வே (/showthread.php?tid=1609)



ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது: நோர்வே - வினித் - 01-05-2006

<b>ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது - நோர்வே தெரிவிப்பு </b>

Written by Ellalan Thursday, 05 January 2006


ஐரோப்பிய ஒன்றியததின் பயங்கரவாதப் பட்டியலை நோர்வேயால் ஏற்றுக் கொள்ள முடியாதென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜொனார்ஸ் கார்ஸ்ரோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப்பட்டியல் ஒன்று இல்லை என்ற போதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் மையத்தின் கீழ் சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 54 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் எந்தவொரு அமைப்பும் ஐ.நாவினால் தடைசெய்யப்படவில்லை.

இந்த நிலையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வே தமது நிலைப்பாட்டுக்கு காரணம் கூறியுள்ளது.

அத்துடன் தமது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் இல்லாமையால் தம்மை ஐரோப்பிய பயங்கரவாத பட்டியலை ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கமுடியாது என ஜொனாஸ் காஸ்ரோர் தெரிவித்துள்ளார்.

நன்றி:சங்கதி