Yarl Forum
இந்திய சகோதரர்களுக்கு,,,, - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: இந்திய சகோதரர்களுக்கு,,,, (/showthread.php?tid=1604)

Pages: 1 2 3 4


இந்திய சகோதரர்களுக்கு,,,, - Danklas - 01-05-2006

லக்கிலுக் ராஜாதி ராஜா, வானம்பாடி மேலும் களத்தில் உள்ள பல இந்திய சகோதர்களுக்கு!

யாழ்களத்தில் உள்ளவர்களோ அல்லது ஈழத்திலே உள்ளவர்களோ இந்தியாவுக்கோ அன்றி இந்திய இறையான்மைக்கோ எதிரானவர்கள் அல்லர்,, ஆனால் இந்தியாவுக்கு எதிராக பல முறை கருத்துக்களை யாழ்களத்தில் உள்ளவர்கள் இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் முன் வைத்திருக்கின்றன முன் வைத்துக்கொண்டு இருக்கின்றன,,

ஆனால் இந்தியாவுக்கு எதிரான பல கருத்துக்கள் யாழ்களத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அது ஒட்டுமொத்த தமிழ் நாட்டையோ இந்திய நாட்டையோ தாக்கும் விதத்தில் அந்த கருத்துக்கள் அமையவில்லை, மாறாக ஒரு இனத்தை அழிக்கும் என்னொரு இனத்திற்கு பக்க பலமாக ஆதரவை தெரிவிக்கும் ஜெயலலிதா, ஹிந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சோ போன்றவர்களுக்கு எதிராக அதிகமான கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள்,, இவர்கள், 30 வருட கால கடும் யுத்தம், எவரின் உதவியையும் பாரமல் தன்னந்தனியே போராடிய ஒரு சிறிய இனத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையிலாவது உபத்திரம் செய்யாமல் இருந்திருக்கலாம் தானே? அதனால்த்தான் அவர்களுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, ஏன் உதாரணத்துக்கு இந்தியாவில் உள்ளவர்களே பகீஸ்தானுக்கு எதிரான முசாரப்புக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள் தானே??

ஈழத்தமிழரிற்கு 2 முறை இந்தியாவால் ஒரு அதிஸ்ரம் வந்து கை நழுவி சென்றது ஒரு துரதிஸ்ரமே,, ஒருமுறை அன்னை இந்திரா காந்தி மூலம் இன்னொரு முறை எம்.ஜீ. ராமச்சந்திரன் அவர்களால்,, இந்த இருவருமே ஈழத்தை பற்றி நன்றாக அறிந்து இருந்தார்கள்,, அவர்கள் இன்று இருந்திருந்தால் எமக்கு ஒரு நாடு அல்லது சுதந்திரமான தீர்வு கிடைத்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை,,,

அண்மையில் யாழ்களத்தில் பல சச்சரவுகள் நடந்தன,, அந்த சச்சரவுகள் யாழ்களத்தை இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டு ஊடகமாக காண்பிக்கும் ஒரு நிலைப்பாட்டை தோற்றுவித்தன,,, இதனால் பல உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தங்களின் கவலையை தெரிவித்து இருந்தனர்,,,

இவற்றில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும், தமிழீழத்தமிழர்களின் தலைமை அன்று தொடக்கம் இன்றுவரை இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டை தங்களின் சொந்த சகோதரர்கள், தொப்புல் கொடி உறவு என்ற ரீதியிப் பார்த்து வருகிறார்கள், அவர்களுக்கு ஆதரவான கருத்தையே முன்வைத்தும் வருகிறார்கள்,,

பல காலமாக லக்கிலுக், ராஜாதிராஜா, சுகுமார், வானம்பாடி போன்றோரின் கருத்துக்கள் வெந்தபுண்ணில் ஈட்டி பாய்ச்சுவதாக இருந்தது, அதனால்த்தான் பல தனிநபர் வசைபாடல்கள், தணிக்கைகள், அநாகரிக கருத்துக்கள் என்று பல அசம்பாவிதங்கள் நடந்தன,, ஆனால் அண்மைக்காலமாக லக்கிலுக், ராஜாதிராஜா போன்றோரின் கருத்துக்கள் எமக்கு ஒரு ஆறுதலை தந்ததாகவே தென்படுகிறது,, <i>ஆகையால் எனி புரிந்துணர்வோடு செயற்படுவோம் என கள உறுப்பினர்கள் தங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்</i>,,,,,

இவ்வேண்டுகோள் மூலம் யாழ்களம், தட்ஸ்தமிழ், போன்ற இனையத்தளங்களில் வீன் சச்சரவுகளைக்கொண்ட கருத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..

இப்படிக்கு யாழ்களத்தின் உறுப்பினர்,,,,

[size=9]மட்டுறுத்தினர்களுக்கு தயவு செய்து சிறுது காலம் இந்த கருத்து இங்கேயே இருக்க அனுமதியுங்கள்,,, நன்றி,,


- rajathiraja - 01-05-2006

மிகவும் நன்று டன் அவர்களே !! நமக்குல் புரிதல் இருந்ந்தால் சன்டை சச்சருவுக்கு இடமில்லை. ஒரு சில இந்திய நண்பர்கள் தான் நம்க்குள் வேற்றுமையை உருவாகுகிறார்கள். என்க்கு தெரிந்ததை சொல்கிரேன் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுஙள். அனைவரும் மேலும் பல விழயஙகளை தெரிந்து கொள்வோம்.

தட்ஸ்தமிழ் இனயத்திலும் திரு ஆருரான் வழியாக சமாதான கொடி பறக்க ஆரம்த்த்ள்ளது.அங்கு ஒரு சில இந்திய நண்பர்கள் ஈழ மக்கள் போர்வையில் தனி தமிழ் நாடு கருத்தையும் , இந்திய எதிர்ப்பு கருத்தையும் வைத்தார்கள். அதுதான் பிரச்சனக்கு மூல காரணம்.அவர்களை இனம் கண்டு ஒதுக்குவோம்.

இப்போது எல்லாம் தெரிந்து விட்டது. நானும் முதலில் ஈழம் நண்பர்கல் இந்திய எதிர்பாளர்கள் என்று நினைதேன். பின் அது தவறு என்று புரிந்து விட்டது.

நன்றி!!


- Vasampu - 01-05-2006

[b]பாராட்டுக்கள் டண். இந்த மனமாற்றம் என்றும் தொடர வேண்டுமென விரும்புகின்றேன். அப்படியே நக்கல்களாக எழுதும் கருத்துக்களையும் தவிர்த்தால் இன்னும் நல்லது.


- Danklas - 01-05-2006

ராஜாதி ராஜா,, நன்றி உங்கள் புரிந்துணர்வுக்கு,,,,

சிலவேளைகளில் புலத்தில் இருந்து செயற்படும் துரோக இனையத்தளங்கள் அல்லது வானொலிகளைபற்றி அறிந்து இருப்பீர்களோ தெரியாது,, அவர்களின் வானொலியில் ஏதாவது நேயர்களுடன் கருத்துப்பகிர்வு இடம்பெற்றாலோ அல்லது இனையத்தளங்களில் கருத்துக்கள் இடம்பெற்றாலோ, அங்கே அந்த வானொலியை/இனையத்தளத்தை வழி நடத்துபவர்களால் அவ் கருத்துக்களை எதிர்கொள்ளமுடியாமல் போகுமிடத்து திடிரெண்டு இந்தியா/ ராஜிவ் என்று சில ஆயுதங்களை கையிலெடுத்து கதைத்து சமாளிப்பார்கள்,, அதைத்தான் சில இனையத்தளங்களில் காணக்கூடியதாகவும் இருந்தது,, களத்திலே இருப்பவர்களும் சாதரணமனிதர்கள் தானே? அந்த வகையில் அவர்களின் ஊகங்கள் உங்களின் கருத்துக்களை தவறாக எடை போட வைத்துவிட்டது,

உண்மையில் இன்று இந்தியா-தமிழீழ உறவு இந்திரா காந்தி அம்மையார் இருந்திருந்தால் பலமடைந்திருக்கும், ஈழத்தமிழர்களின் கெட்ட நேரம் அவரின் இறப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் பின் பல துன்பியல் சம்பவங்கள் நிகழந்து விட்டது, இன்றும் கூட தமிழீழத்தில் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்றவர்களின் நினைவு தினங்களை தமிழ் மக்கள் உனர்வு பூர்வமாக கடைப்பிடிக்கிறார்கள்,, ஆனால் இலங்கையில் சிங்களவர் பிரதேசங்களில்??அவ்வாறு நடைபெறவில்லை என்றே கூறலாம்,, தமிழர் பிரதேசங்களில் அவை நடைபெற்றபொழுது சிங்கள இராணுவம் மக்களை அச்சுறுத்தி அதை தடுத்த வரலாறுகளே உள்ளன,, ஆனால் இன்று சிங்களம் தமிழர்களை அடக்குவதற்கு பல்வேறு வழிகளில் கபடத்தனமான முறையில் செயற்பட்டு வருகிறது, அதற்கு தமிழ் தேசத்துரோகிகளை பகடைக்காய்களாக உபயோகித்து வருகிறது,,,, Idea

எனவே புரிந்துணர்வோடு செயற்படுவோம் என மீண்டும் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், தட்ஸ்தமிழீல்,யாழ்களத்தில் இந்தியன்/ஈழத்தவன் என்று கூறி குழப்பத்தை உண்டுபன்ன முயலும் இலங்கை அரசின் பினாமி தமிழர்களை இனம் கண்டு ஒதுக்குவோம்,,, Idea Idea


- Niththila - 01-05-2006

டக் அங்கிளின் கருத்துதான் என்னுடையதும் எமது போராட்டத்துக்கு உதவி செய்யாட்டிலும் பரவாயில்லை கொச்சை படுத்தி எமது மனதை புண்படுத்துற மாதிரி எழுதாமல் இருக்கலாமே


- தூயவன் - 01-05-2006

இதை நானும் வரவேற்கின்றேன். ஒத்துழைப்பு இல்லாவிடினும் உபத்திரம் வேண்டாம் என்ற நிலை அவசியமானது. எனவே வலிகளை திரும்பித் தோண்டுவதால் காயங்கள் ஆறாது என்பது யதார்த்தமாகக் கொள்வோம்.


- Danklas - 01-05-2006

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->பாராட்டுக்கள் டண். இந்த மனமாற்றம் என்றும் தொடர வேண்டுமென விரும்புகின்றேன். அப்படியே நக்கல்களாக எழுதும் கருத்துக்களையும் தவிர்த்தால் இன்னும் நல்லது. இருந்தாலும் களத்தில் பிரைச்சினைகளைத் து}ண்டுவோர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றார்கள் நாம் தான் சுய அறிவைப் பாவித்து தெளிவாக நடந்து கொள்ள வேண்டும்[/b].<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வசம்பரே,,, நீங்க சொன்ன எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்,, பட் அந்த கோடுபோட்டதை ஏற்றுக்கொள்ளுறது ரொம்ப கஸ்ரமாய்ட்டே,,,,, வசம்பரே,,, இந்த நக்கலு, விக்கலு, முனகலு, இருமலு, கொட்டாவி, சிரிப்பு, அழுகை, துன்பம், இன்பம், எல்லாம் நாம கேட்டு வாரது இல்லை,, அதுதானா வரும் தானா போகும்,,அதுகளை நாம தடுக்கவும் முடியாது விடவும் முடியாது,, அக்ஷாச்சாச்ச எக்ஷச்ச எக்ஷாச,,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 01-05-2006

<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->

வசம்பரே,,, நீங்க சொன்ன எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்,, பட் அந்த கோடுபோட்டதை ஏற்றுக்கொள்ளுறது ரொம்ப கஸ்ரமாய்ட்டே,,,,, வசம்பரே,,, இந்த நக்கலு, விக்கலு, முனகலு, இருமலு, கொட்டாவி, சிரிப்பு, அழுகை, துன்பம், இன்பம், எல்லாம் நாம கேட்டு வாரது இல்லை,, அதுதானா வரும் தானா போகும்,,அதுகளை  நாம தடுக்கவும் முடியாது விடவும் முடியாது,, அக்ஷாச்சாச்ச எக்ஷச்ச எக்ஷாச,,, :wink:  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


குசும்பு, குமட்டலை விட்டீட்டிங்களே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 01-05-2006

தூயவன் Wrote:
Danklas Wrote:வசம்பரே,,, நீங்க சொன்ன எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்,, பட் அந்த கோடுபோட்டதை ஏற்றுக்கொள்ளுறது ரொம்ப கஸ்ரமாய்ட்டே,,,,, வசம்பரே,,, இந்த நக்கலு, விக்கலு, முனகலு, இருமலு, கொட்டாவி, சிரிப்பு, அழுகை, துன்பம், இன்பம், எல்லாம் நாம கேட்டு வாரது இல்லை,, அதுதானா வரும் தானா போகும்,,அதுகளை நாம தடுக்கவும் முடியாது விடவும் முடியாது,, அக்ஷாச்சாச்ச எக்ஷச்ச எக்ஷாச,,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


குசும்பு, குமட்டலை விட்டீட்டிங்களே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது தமிழனுக்கு கட்டாயம் வரணும் இல்லாட்ட யாரும் நம்பமாட்டாங்க இது நம்மாளு எண்டு... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 01-05-2006

புல்லரிக்குது இந்த பக்கத்துக்கு வந்தா...
போட்டுத் தாக்குறாங்கப்பா.... எப்படி இப்படி எல்லாம்
எழுதவருது? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 01-05-2006

நான் தொடங்க வேண்டும் எண்டு நினைத்தை தொடக்கி வைத்த டண்ணுக்கு நண்றிகள்....

(இந்திய) நண்பர்களே நாங்கள் ஈழத்தமிழர் எப்போது இந்தியாவின் எதிரிகள் அல்ல.. இந்தியாவின் பலம் தான் வேற்று நாட்டாரின் ஊடுருவலில் இருந்து ஈழத்தவனைக் காத்திருக்கிறது.... உதாரணமாக அமெரிக்கா போண்ற வியாபாரிகள் எப்போதும் தங்கள் வியாபார நோக்கத்திற்காக இலங்கைய கைக்குள் வத்திருக்க முயலுவது நீங்கள் அறிந்ததே... அவர்களின் ஆழுகை அல்லது கைப்பொம்மையாக இலங்கை அரசு ஆகாமல் பாதுகாக்கும் இந்தியா ஒரு வகையில் எங்களுக்கும் நல்லதைதான் செய்கிறது... ஆகவே இந்தியாவின் ஒருங்கிணைந்த பலம் தான் ஈழத்தவனுக்குப் பலம். இந்தியா பிரிந்து போக ஈழத்தவர் எண்றும் விரும்ப மாட்டார்கள்...

மேலிருப்பவை ஒரு தனிப்பட்டவனின் நிலைப்பாடு அல்ல. கடந்த கால ஈழத்தவன் அரசியல் வெளிப்பாடு. எல்லோரும் அதைத்தான் விரும்புகிறோம் என்பதாய் புலிகளின் பாலக்குமார் அண்ணா கூட சொல்லி இருந்தார். அது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அத்தோடு எங்களின் கலாச்சாரம், மொழி ரீதியான தாயகம் அழிய வேண்டும் எண்று நாங்கள் ஒரு போதும் நினைப்பவர்கள் அல்ல.. உங்களுக்கே தெரியும் நாங்கள் தமிழ் மீது கொண்டிருக்கும் பற்று...

எங்களின் பழய மனக்கசப்புக்கள் மட்டும் அல்ல... இண்றைய சூழலில் சில இந்திய அரசியல் வாதிகள் பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட ஆதாயத்துகாக செய்யும் அவதூறுகள்தான் எங்களால் பொறுக்க முடியாமல் கருத்துக்களாக வெளிப்பட்டன, அவை இந்திய தேசியத்திற் கெதிரான கருத்துக்கள் அல்ல இந்தியா அழிய வேண்டும் எண்ற எண்ணத்தில் வந்தவை அல்ல.... உங்களுக்கே தெரியும் இந்தியாவை எதிர்க்கிறோம் எண்று நாங்கள் பாக்கிஸ்தானையோ அல்லது வேறு யாரையும் ஆதரித்தது கிடையாது....

எங்களின் பழைய சோகங்கள் போராட்ட காயங்கள் எல்லாம் எங்களுக்கு சொல்லி நிற்பது நாங்கள் வாழவேண்டுமானால் போராட வேண்டும் எனபதுதான்..... ஆதலால் தான் எங்களின் போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை நாங்கள் எப்போது வரவேற்பதில்லை... ஆதரிப்பதும் இல்லை... அவை எங்களின் போராட்டத்தை மழுங்கடுக்க கூடியவை.... ஆதலால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்..

இங்கே லக்கிலுக், ராஜாதிராஜா போண்றோரின் வருகை எங்களின் புரிந்துணர்வை அதிகமாக்கியது.. எங்களைப் பற்றி தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அந்த நல்ல உள்ளங்கள் ஏற்படுத்தின எண்றால் அது பொய்யல்ல.... நடப்பவை தவறாக இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டியது இப்போ அவர்களின் கடமையாக்கி... அவர்களுக்கு நண்றி கூறுகிறேன்... ஒரு தமிழனாய் எங்களின் குசும்புகள் தொடர்ந்தாலும் அது அவர்கள் இந்தியர் எண்ட வகையில் இருக்காது. அவர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டு கிறேன்...

அத்தோடு இது களம் வாதங்கள் எதிர்வாதங்கள் எல்லாம் சகஜம்... எங்களை அவர்கள் கருத்துகளால் எதிர்க்க வேண்டியது அவர்களின் கடமையும் ஆகிறது( ஆனால் ஈழப்பிரச்சினையில் வேண்டாம்)

(டண்ணின் கருத்துக்களை பூரணமாக என்னுடைய கருத்துக்களாக ஒத்துக் கொள்கிறேன்)

ஒரு யாழ்கள உறுப்பினராய்.... த..ல


- vasisutha - 01-05-2006

தல எப்படிப்பா இப்படி? Cry Cry


- Danklas - 01-05-2006

vasisutha Wrote:தல எப்படிப்பா இப்படி? Cry Cry

பொறும் யாழ்கள பொங்கல் 2006ல் தெரியும்..... :evil: :evil: :evil:


- அருவி - 01-05-2006

டண்ணுக்கு நன்றிகள் பலப்பல.....

<i>"(இந்திய) நண்பர்களே நாங்கள் ஈழத்தமிழர் எப்போது இந்தியாவின் எதிரிகள் அல்ல.. இந்தியாவின் பலம் தான் வேற்று நாட்டாரின் ஊடுருவலில் இருந்து ஈழத்தவனைக் காத்திருக்கிறது.... உதாரணமாக அமெரிக்கா போண்ற வியாபாரிகள் எப்போதும் தங்கள் வியாபார நோக்கத்திற்காக இலங்கைய கைக்குள் வத்திருக்க முயலுவது நீங்கள் அறிந்ததே... அவர்களின் ஆழுகை அல்லது கைப்பொம்மையாக இலங்கை அரசு ஆகாமல் பாதுகாக்கும் இந்தியா ஒரு வகையில் எங்களுக்கும் நல்லதைதான் செய்கிறது... ஆகவே இந்தியாவின் ஒருங்கிணைந்த பலம் தான் ஈழத்தவனுக்குப் பலம். இந்தியா பிரிந்து போக ஈழத்தவர் எண்றும் விரும்ப மாட்டார்கள்...

மேலிருப்பவை ஒரு தனிப்பட்டவனின் நிலைப்பாடு அல்ல. கடந்த கால ஈழத்தவன் அரசியல் வெளிப்பாடு. எல்லோரும் அதைத்தான் விரும்புகிறோம் என்பதாய் புலிகளின் பாலகுமார் அண்ணா கூட சொல்லி இருந்தார். அது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

எங்களின் பழய மனக்கசப்புக்கள் மட்டும் அல்ல... இண்றைய சூழலில் சில இந்திய அரசியல் வாதிகள் பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட ஆதாயத்துகாக செய்யும் அவதூறுகள்தான் எங்களால் பொறுக்க முடியாமல் கருத்துக்களாக வெளிப்பட்டன, அவை இந்திய தேசியத்திற் கெதிரான கருத்துக்கள் அல்ல இந்தியா அழிய வேண்டும் எண்ற எண்ணத்தில் வந்தவை அல்ல.... உங்களுக்கே தெரியும் இந்தியாவை எதிர்க்கிறோம் எண்று நாங்கள் பாக்கிஸ்தானையோ அல்லது வேறு யாரையும் ஆதரித்தது கிடையாது.... "</i>

எமது இருப்பை நாம் போராடி உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதற்கு மிகச்சமீப உதாரணம் திருமலையில் எம் இளம் மாாணவர்கள் ஐவர் தம் உயிர்களை இழந்தது. எம்மினம் தன் நாளையவாழ்வை தன் சொந்த மண்ணை காக்க போராடுகிறது. இவ்வேளையில் எம்போராட்டத்திற்கு பின்னடைவைத்தரும் அல்லது அதனை மழுங்கடிக்கவைக்கும் கருத்துக்களையே அல்லது எம் போராட்டத்தின் துயரங்களை மீள நினைவுபடுத்துவதையோ நாம் எக்கால கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறு கூறப்பட்ட கருத்துக்கள் எம் உணர்வுகளைத் தூண்டிவிட்டன என்பதுவும் உண்மையே.

<i>"இங்கே லக்கிலுக், ராஜாதிராஜா போண்றோரின் வருகை எங்களின் புரிந்துணர்வை அதிகமாக்கியது.. எங்களைப் பற்றி தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அந்த நல்ல உள்ளங்கள் ஏற்படுத்தின எண்றால் அது பொய்யல்ல.... நடப்பவை தவறாக இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டியது இப்போ அவர்களின் கடமையாக்கி... அவர்களுக்கு நண்றி கூறுகிறேன்... ஒரு தமிழனாய் எங்களின் குசும்புகள் தொடர்ந்தாலும் அது அவர்கள் இந்தியர் எண்ட வகையில் இருக்காது. அவர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டு கிறேன்..."</i>

ஈழப்போராட்டம் பற்றி உங்களிற்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமை, அதற்காக தேவையற்றவைகளை களத்திலே கேட்காதீர்கள் அதற்கு தனிமடலிலே தொடர்பு கொள்ளலாம்.

<i>அத்தோடு இது களம் வாதங்கள் எதிர்வாதங்கள் எல்லாம் சகஜம்... எங்களை அவர்கள் கருத்துகளால் எதிர்க்க வேண்டியது அவர்களின் கடமையும் ஆகிறது( <b>ஆனால் ஈழப்பிரச்சினையில் வேண்டாம்</b>)</i>

டண் மற்றும் தல ஆகியோரின் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகின்றேன்

மீண்டும் நன்றி டண்

என்றும் அன்புடன்
அருவி___.


- Vaanampaadi - 01-05-2006

அன்பின் நண்பா டங்ளஸ்
உங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி...... உண்மையில் மனதை நெகிழ வைத்தன......
மற்றும் இந்தகளத்தில் இந்தியாவை தாக்கி கருத்து எழுதிய சிலர் உண்மையிலேயே எம்மை வெறுக்கும் நோக்குடன் எழுதவில்லை..... வேண்டுமென்று ஒரு குசும்புக்காகதான் அப்படி எழுதீருக்கிறார்கள்..... நானும் அதனை முதலில் தெர்யாமல் எதிர் கருத்துகள் எழுதி உங்கள் எல்லோரின் மனதை புண்பட வைத்துவிட்டேன்..... மன்னித்துக்கொள்லவும்...... பின்னர் ஒரு சிலர் அதுபற்றி எனக்கு விலக்கினார்கள்.மற்றும் நான் நிறைய இலங்கை தமிழர்க்லுடன் சிநேகிதம் வைத்துள்லேன்.... அவர்களில் உதாரணத்திற்கு ஒருவர்கூட இந்திய தமிழர்களை வெறுப்பவர்களாக என்னால் அடையாளம் காட்டமுடியாது.... அந்தளவிற்கு அவர்கள் உண்மையான நண்பர்களாக இருக்கிறார்கள்.....
உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு இப்புதுவருடத்திலிருந்து பழையவை அனைத்தும் மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட்ட தமிழனாக, உண்மையான நண்பர்களாக பழகுவோம் என்று கூறிக்கொள்கிறேன்....
நன்றி
அன்புடன்
வானம்பாடி


- Thala - 01-05-2006

நண்றிகள் வானம்பாடி... அப்படியே செய்வோம்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnakuddy - 01-05-2006

இந்திய மக்களை இந்திய அரச யந்திரத்தையும் வித்தியாசமாகவே பார்க்கிறேன் .அதுனூடாக கருத்து சொல்ல விரும்புகிறேன். 80களில்கூட இந்திரகாந்தியென்ற தனிநபருக்கு ஈழத்து தமிழ் மக்களின் இருந்த அக்கறை ஆளுமை யினால் இந்தியா ஈழத்துக்கு ஆதரவு போன்ற பிரமையை தோற்றுவித்தது .ஆனால் அன்றைய இந்திய அரச நிர்வாகம் கபட நோக்கத்துடனேயே நடந்து வந்தது. இந்து சமுத்திரத்திலை நேபாளம்,பூட்டான்,பங்களாதேஸ், மாலை தீவு, இலங்கை.என்பன உத்தியோக பற்றற்ற தனது எல்லைக்குட்பட்ட நாடாகவே இந்தியா கருதுகிறது....நேரு காலத்து இந்திய விஸ்தரிப்புவாத கொள்கையின் தடத்தை மாறிவரும் உலக சூழலிலும் மாற்றவில்லையெனக்கொள்ளலாம்

சமீகாலத்து மகிந்த விஜயத்தை வைத்துக்கொண்டு இந்தியா ஈழத்தின் சார்பு நிலை எடுப்பது தோற்றப்பாடு சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்...இந்த இந்தியன் சென்ரிமென்ருக்கு வெளியில் சென்று கருத்து சொல்வேனாகில் இந்திய இலங்கை பாதுகாப்பு ஒப்பந்த இன்னும் ஒப்பமிடாத வரைவு என்னும் கிழித்தெறியப்படவில்லை...அத்துடன் திருகோணமலை வடக்கு கிழக்கு புனரமைக்கு உதவுவது என்பது கூட இந்தியாவின் புதிய வடிவலான தலையீடே ..இந்திய அரசஇயந்திரம் இந்தியன் சென்ரிமெனரிலும் பார்க்க தனது நலனிலையே அக்கறை செலுத்தும்.....இந்தியன் அரச தலைவர்களும் இந்திய அரச நிர்வாகமும் இந்திய அரசியலாளர்களும் விமர்சனத்துக்கு அப்பாற் பட்ட மாதிரி அவர்களுக்கு எதிராக கருத்து சொல்லகூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் .

எனது தனிப்பட்ட கருத்து...சிங்கள பேரின வாதத்திலும் ஆபத்தானது இது தான் தீர்வு என தமிழ் மக்களிடம் திணிக்க முனையும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் உடையார் வீட்டு மனப்பான்மை


- Danklas - 01-05-2006

அடி சக்கை அம்மன் கோவில் புக்கை எண்டானாம்,,, வானம்பாடியின் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை,,, புரிந்துணர்வுக்கு நன்றி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இருந்தாலும் எங்கட யாழ்கள இந்திய-தமிழீழ சகோதர ஒப்பந்தத்தில வசிப்பயல் மட்டும்தான் இனையமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறான்,,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:


சின்னக்குட்டியார்,, தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டம் தொடங்கி 30 வருடங்கள் ஆகின்றன,, இன்று வரை எந்த ஒரு நாட்டிடமும் தமிழரின் தலைமை கையேந்தி நிற்கும் நிலைமை வரவில்லை,,, மாறாக மற்றைய நாடுகளுக்காக இலங்கை பேரினவாதிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்த வரலாறுதன் இருக்கு,, ஆகையால் ஈழம் போராட்டம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்திய சகோதரர்கள் புரிந்துணர்வோடு செயற்படுவார்கள் என்பதே களத்தில் உள்ளவர்களது எதிர்ப்பார்ப்பு,,, அதை தவிர்த்து ஏனையவிடயங்களில் ஒன்றாக செயற்படுவோம்,,,,

ஒன்றை கூறி வைக்க விரும்புகிறோம்,, பாகிஸ்த்தான் இந்தியாவைபற்றி ஏதேனும் கீழ்த்தனாமக விமர்சிக்க வெளிகிட்டால் தன்மானம் உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் கை கட்டி பேசமால் இருக்கமாட்டான்,, அந்த உணர்வுதான் தமிழீழ தமிழர்களிடம் இருக்கு என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்...... Idea


- Thala - 01-05-2006

Danklas Wrote:ஒன்றை கூறி வைக்க விரும்புகிறோம்,, பாகிஸ்த்தான் இந்தியாவைபற்றி ஏதேனும் கீழ்த்தனாமக விமர்சிக்க வெளிகிட்டால் தன்மானம் உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் கை கட்டி பேசமால் இருக்கமாட்டான்,, அந்த உணர்வுதான் தமிழீழ தமிழர்களிடம் இருக்கு என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்...... Idea

அத்தனையும் உண்மை டண்... !


- Vasampu - 01-05-2006

<b>சின்னக்குட்டி


எந்த ஒரு நாடும் தன் நலத்தை முதலில் முன்னிலைப் படுத்தியே அடுத்தவர்கள் நலத்தில் அக்கறை காட்டும். அது இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கல்ல. நாம் கூட எமது நலம் சார்ந்தே பல விடயங்களில் அக்கறை காட்டுகின்றோம். அது போல அருகில் உள்ள எந்தவொரு நாட்டுடனும் நட்புறவோடு இருக்கவே எந்த நாடும் விரும்பும். இந்தியாவும் இலங்கையைப் பொறுத்தவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கவும் முடியாது. அதுபோல் அதனைத் தட்டிக் கழித்துவிடவும் முடியாது. இலங்கை இந்தியாவிடம் உதவி கேட்டு அது செய்யா விடின் இலங்கை இன்னொரு நாட்டிடம் உதவி கேட்பது தவிர்க்க முடியாததே. அதனால் மூன்றாவதாக ஒரு நாடு இலங்கைக்கு உதவி வழங்க வந்து அந்நாடு இந்தியாவிற்கும் வேண்டப்படாத ஒரு நாடாக இருந்தால் அது இந்தியாவிற்கு பாதிப்பாகவே அமையும். அதனால் முடிந்தவரை இந்தியா இலங்கையுடன் ஒரு சுமூகமான ஒரு உறவையே பேண விரும்பும். அதனாலேயே சில அமைப்புத் திட்டங்களை அறிவிக்கின்றது. அதுபோலவே இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி வருகின்றது. நீங்கள் சொல்வது போல் இந்திய அரசியலும் அரசியல்வாதிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களில்லையென்றால் நாமும் அதற்கு உட்பட்டவர்கள் தான். தவறுகளை சுட்டிக் காட்டி அதற்குரிய விளக்கங்களை சினேகிதமாக பெற முயற்ச்சிக்கலாம். ஆனால் சில ஊகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளை வைத்து விதண்டாவாதமாக விமர்சனமாக்கினோம் என்றால் அது வீண் பகைமையையும் பிரைச்சினைகளையுமே வளர்க்க உதவும். எந்த விடயங்களையும் நாம் சிலகணம் அடுத்தவரின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்ப்போமாயின் பல விடயங்களை நாம் இலகுவாகப் புரிந்து கொள்ள உதவும்.</b>