| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 137 online users. » 0 Member(s) | 135 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| சிரிப்புதரும் சிந்தனைகள் |
|
Posted by: நர்மதா - 01-04-2006, 09:44 PM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
சிரிப்புதரும் சிந்தனைகள்
பார்ப்பது ஒன்றாகவும்இ பதிவது இன்னொன்றாகவும் இருப்பது வரவேற்கத் தகுந்த பழக்கமல்ல. இவர்கள் தான் ஒன்றைத் தேடி ஒன்றை அடைபவர்கள். தேடியது கிடைக்க வில்லையோ என்ற கவலையும் இவர்களுக்கு இருக்காது. அடைவை அப்படியே அங்கீகரிக்கும் அற்புத மனிதர்கள் இவர்கள்தான். காட்சிக்கு புலப்படும் ஒன்றை விட்டு விட்டு புலப்படாத ஒன்றைஇ புலன் தேடித் தருமானால்இ அங்கே இருப்பது தெரியாதுஇ ஆனால் அவரிடம் இல்லாதது தெரியும். எப்படி என்கிறீர்களா?
மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குஇ போரசிரியர் ஒருவர் இறந்து போன ஒரு பெண்ணின் உடலை வைத்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பின் முக்கியப் பாடம் கர்ப்பப்பையைப் பற்றியது. எனவே அந்த பெண் உடம்பின் எல்லா பாகங்களையும் பற்றி மேலோட்டமாகச் சொல்லி விட்டு கர்ப்பப்பையைப் பற்றி சொல்வதற்கு முன்வந்தார்.
இறந்த உடலையே பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களில் ஒரு மாணவனைப் பார்த்து; கர்ப்பப்பையைக் காட்டி இது என்ன? என்றார். அந்த மாணவர் அது என்ன என்று உணர முடியாமல் தவித்ததை உணர்ந்த ஆசிரியர் அவருக்கு உதவி செய்வதற்காக தம்பி இது உனக்கும் இல்லாதது எனக்கும் இல்லாதது- இப்ப கண்டுபிடி பார்ப்போம் என்றார். உடனே அந்த மாணவர் சற்றும் யோசிக்காமல் மூளை சார் என்றார்.
சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆயின. கண்ணுக்கு முன் இருப்பது (கர்ப்பப்பை) தெரியவில்லை. எனவேஇ அவருக்கு இல்லாதது (மூளை) தெரிந்தது. எனவே இருக்கும் இடத்தில் இருப்பதும்இ பார்க்கும் பொருளைப் பார்ப்பதும் அவசியமான பழக்கமாகும். கண்ணொன்றைப் பார்க்கஇ காதொன்றைக் கேட்க வாழும் கவனமற்ற வாழ்க்கையில் பெருமையில்லை.
கண்ணுக்கு முன் இருப்பது தெரியவில்லை என்றால்இ கருத்துக்கள் இல்லாதது தெரியும். எண்ணம் பார்வையில் முகாமிடும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். காட்சிப் பொருளும் காணும் பொருளும் ஒன்றானால்தான் கருத்து மெய்ப்படும்; இல்லையெல் பொய்ப்படும்.
ஒன்றின் உண்மையை உணர்ந்து கொள்ள இந்தப் பண்பு மிக அவசியம். இருக்கும் இடத்தில் இரு என்னும் பொன் மொழியின் பொருண்மை புரிந்து வாழ வேண்டும். கண்ணும் கருத்துமாக இரு என்பதும் இதற்காகத்தான். நடப்பது என்ன என்பது புரிய வேண்டுமானால்இ இந்தப் பண்பு அவசியம்.
தமிழாசிரியர் ஒருவர் வகுப்பில் கம்பராமாயணம் நடத்திக் கொண்டிருந்தார். பாடலை எப்போதுமே இசையோடு பாடுவது இவரது வழக்கம். மட்டுமல்ல; பாடும் போது கண்களையும் மூடிக் கொள்வார். அன்றும் 50 மாணவர்கள் இருந்த வகுப்பில் வெய்யோன் ஒளி தன் மேனியில் என்னும் கம்பராமாயணப் பாடலை கண்களை மூடி ராகத்தோடு பாடி முடித்து விட்டு விளக்கம் சொல்ல கண்களைத் திறந்து பார்த்தார். ஒரு மாணவன் மட்டுமே இருந்தான். மற்ற எல்லோருமே போய்விட்டனர்.
ஆனாலும் அவர் அது பற்றிக் கவலைப்படாமல் எல்லோரும் போய்விட்டாலும் நீ ஒருவனாவது கம்பனின் கவிச்சுவையைப் பருக அமர்ந்தாயேஇ உன்னைப் பாராட்டுகின்றேன் என்று கூறி பாடம் நடத்தத் தொடங்கியதும் அவன் அவனுக கிடக்கிறானுக சார் நன்றி கெட்டப் பயலுக என்றான். ஆசிரியருக்கு மகிழ்ச்சி. ஒருவனாவது நன்றியுடையவனாக இருக்கின்றானே என்று எண்ணி முடிப்பதற்குள்இ இருந்தவன் என்ன ஆனாலும் சொல்லாமப் போகலாமா? நான் சொல்லிட்டுப் போகலாமேண்ணுதான் இருந்தேன் சார்இ வாறேன் என்று கூறிவிட்டு அவனும் போய்விட்டான்.
ஒரு முறை அரசுத் தேர்வில் ஒரு கல்லூரி மாணவன் மொத்தம் உள்ள ஆறு பேப்பரில் ஐந்து பேப்பரை அவன் எழுதிவிட்டு ஒரு பேப்பரை மட்டும் வேறு ஒருவனை வைத்து எழுதி விட்டான். அதை தேர்வுக்குழுவும் கண்டு பிடித்துவிட்டது. எல்லாப் பேப்பரையும் அவன் எழுதி விட்டு ஒரு பேப்பரை மட்டும் வேறு ஒருவனை வைத்து எழுதி ஆள் மாறாட்டம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. அந்த மாணவனை பல்கலைத் தேர்வுக்குழு அழைத்து நேர்காணல் நடத்தியது. நான்கு மூத்த பேராசிரியர்கள் சுற்றியிருந்து சரமாரியாக கேள்விகள் கேட்டு அவனைப் புண்ணாக்கினர்.
அவனும் பேப்பரைப் பார்க்கணும் சார் என்றான். பேப்பர் தருவிக்கப்பட்டது. முதலில் அவனே எழுதிய பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார். இது நீ எழுதியதுதானா அவன் ஆமா சார் நான் எழுதியது தான் என்றான். இப்படி அவன் எழுதிய ஐந்து பேப்பர்களையும் காட்டி விட்டு ஆறாவது பேப்பரைக் காட்டி இது யார் எழுதியது ஆள் மாறாட்டம் பண்ணுறியா என்றதும் பேராசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் மாட்டிக் கொண்டான் என்ற பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டனர்.
அவன் மெதுவாக அந்த அஞ்சு பேப்பரும் நான் எழுதியதுதான்; ஆனா இது நான் எழுதியது இல்லை. ஆமா நான் எழுதின பேப்பர் எங்க சார்? நான் எழுதின பேப்பர ஒளிச்சி வச்சிட்டு எவன் பேப்பரையோ காட்டுறீங்க. என் பேப்பர் இப்ப வரல்லண்ணா நான் கன்சியூமர் கோர்ட்டுக்குப் போவேன் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். யாரும் எதிர்பாராமல் வெடித்ததில் எல்லோருமே காணாமல் போனார்கள். எப்போதும் பிடரியில் கண் வைத்துப் பார்ப்பதன் பிழையை அறிந்து செயல்பட்டால் அதுவே அறிவின் ஆரோக்கியம் ஆகும். அறிவால் ஏமாறுவதும் அறிவென்று அறிக.
|
|
|
| ஈழத் தமிழர் போராட்டம் இந்தியாவின் இறைமைக்கு அச்சுறுத்தல் |
|
Posted by: Birundan - 01-04-2006, 08:18 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (6)
|
 |
இன்றைய உலகப் பொருளாதார மயமாக்கல் என்ற நிலைக்கூடாக உலக நாடுகள் அனைத்தும் தம் பூகோள அரசியல் இருப்பையும் தாண்டி நெருங்கி வரக்கூடிய நிலமையே காணப்படுகின்றது. பூமிப் பந்தில் இருக்கக்கூடிய நாடுகளின் வாழ்க்கை முறை அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அனைத்து நாடுகளையும் சென்றடையக் கூடியதாக காணப்படுகின்றது. உலகின் எந்த மூலையிலும் ஏற்படக் கூடிய புயலோ பூகம்பமோ இல்லை போரோ கூட உலக நாடுகளின் பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை உடனும் ஏற்படுத்துவதை நாம் காண்கின்றோம்.
அந்த வகையில் இன்று உலகின் சில பகுதிகளில் ஏற்படக்கூடிய இனங்களுக்கிடையிலான மோதல்களும் சுதந்திரத்துக்கான போராட்டங்களும் உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டங்காணச் செய்வதுடன் வசதி பெற்ற நாடுகளின் சந்தை வாய்ப்புக்களையும் மாற்றி அமைத்து விடுகின்றது. இச்சந்தை வாய்ப்புக்களிற்கான போராட்டமே இன்று உலகின் வல்லரசுகளிற்கும் பிராந்திய வல்லரசுகளிற்கும் இடையிலான முறுகல்களுக்கும் பெரும் காரணமாக அமைந்து விடுகின்றது. அதேவேளையில் எதிர்காலச் சந்தை வாய்ப்புக்களுக்கான விஸ்தரிப்பு முயற்சிகளும் பிராந்திய உலக சமநிலையைக் குழப்புவதுடன் புதிய புதிய அணிகளுக்கிடையிலான கூட்டுக்களையும் உடைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
இன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள ஆதிக்கப் போட்டி எவ்வாறு தமிழ் ஈழத்துக்கான சுதந்திரப் போராட்டத்தில் சாதக பாதகத் தன்மைகளை ஏற்படுத்துகின்றது என்பதப் பார்ர்ப்போம். இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான ஆதிக்கப் போட்டி என்பது காலனித்துவ ஆட்சியின் காலத்திலேயே விதையூன்றி இன்று பெருமளவில் வியாபித்து நிற்கின்ற உலகப்பிராந்தியத்துக்கான ஆதிக்கப் போட்டியின் ஒரு பகுதியாகும். காலனித்துவ முறைமையின் சுரண்டல்,முடிவுக்கு வரவேண்டிய கட்டாயம் எழுந்தபோது நவீன காலனித்துவ சுரண்டல் எனப்படக் கூடிய உலகப் பொரூளாதார முறைமை அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. வளர்ந்த நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கும் தொழில்நுட்பங்களுக்குமான சந்தை வாய்ப்புக்களாக வளர்ந்து வரும் நாடுகளும் பின் தங்கிய நாடுகளும் தெரிவு செய்யப் பட்டன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் அதிகளவில் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளே அடங்கியிருந்தன. வளர்ச்சி யடைந்த நாடுகள் பட்டியலில் இருந்த ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்களிடமிருந்த தொழில் நுட்பச்சிறப்புகளாலும் பணபலத்தினாலும் இவற்றைச் சாதகமாக்கின.
சோவியத்யூனியனின் கட்டுப் பாட்டில் இருந்த கொம்யூனிச நாடுகள் இதன் எக்ல்லைகளுக்கப்பால் இருந்திருந்தபோதும் சோவியத்தின் உடைவு இன்னும் பல நாடுகளை சந்தை நாடுகளாக்கிவிட்டிருக்கின்றன. இதிலிருந்தே சோவியத்தின் உடைவிற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஏன் மிகவும் பாடுபட்டன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த சந்தைப் பொருளாதாரம் என்னும் உலக மயமாக்கல் எவ்வாறு செயல் படுகின்றது என்னும் தெளிவு இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியல் ஆதிக்கப் போட்டிகளை எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள உதவி செய்யக் கூடும். வலிமை வாய்ந்த நாடுகளாகக் கூடும் என்று எண்ணப் பட்ட நாடுகளை இரண்டாக உடைத்தே பழக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கிடையே ஒற்றுமையை வலிந்து ஏற்படுத்தி ஐரோப்பிய ஒன்றியமாக செயற்படும் தாற்பரியத்தையும் விளங்கிக் கொள்வது அவசியமாகும். உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை ஈடு செய்து தங்கள் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்புவது என்ற பொது நன்மையின் நோக்கிலேயே அவை ஒன்று சேர்ந்துள்ளன என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டாம் உலகப் போர்க்கால கட்டத்தில் பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகளாக இருந்த அனேக ஆசிய ஆபிரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புகளின் குணாம்சங்களைக் கருத்தில் கொண்டு அவை இரண்டு மூன்று சிறிய நாடுகளாகப் பிரிந்து போக ஊக்குவிக்கப் பட்டதுடன் பிரித்தும் வைக்கப் பட்டது. அதற்காக எதிர் சக்திகள் ஊக்குவிக்கப்பட்டு போர்களும் வலிந்து திணிக்கப்பட்டது. அந்தவகையில் ஒரே மொழி பேசப்பட்ட இரண்டாகப் பிரிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் கொரியா, வியற்நாம் . மத்திய அரேபிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் உதாரணங்களாகும்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானின் காவலனாக பாத்திரம் ஏற்ற அமெரிக்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கட்டுப் பாட்டைத் தனது கைகளில் எடுத்துக் கொள்ள ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் ,தென்கொரியா போன்ற நேச நாடுகளிலும் கார்சியத் தீவுக் கூட்டத்திலும் வலிமை வாய்ந்த படைத் தளங்களை நிறுவிக்கொண்டது. இரண்டாம் உலகப் போரின் தொடர்ச்சியாக கம்யூனிச சோவியத் ஒன்றியத்தின் எதிர்ப்பையே அமெரிக்கா முதலில் எதிர் கொண்டது. அதற்கு வசதியாக இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளும் அமெரிக்க சோவியத் சார்பு நிலைகளை எடுத்துக் கொண்டன. தென் கொரியா, பாகிச்ய்தான்,ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்க நிலையை எடுத்துக் கொண்ட பொழுது இந்தியா சோவியத் சார்பு நிலையை எடுத்துக் கொண்டதுடன் இந்தியாவின் பொருளாதார இராணுவக் கட்டமைப்பிலும் சோவியத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சோவியத்தின் ஆதிக்கத்தை இப்பிராந்தியத்தில் கட்டுப் படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் பாகிஸ்தானை வெகுவாக வளர்த்து விட்டது. இந்தியா அன்று சோவியத் சார்பு நிலை எடுக்காது அமெரிக்க சார்பு எடுத்திருந்தால் அமெரிக்காவின் நேச நாடாக இன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த நாடாக இருந்திருக்கக் கூடும். சீனா இன்னொரு கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றும் நாடென்ற வகையில் அமெரிக்காவிற்கும் அதன் சார்பு நாடாகைய ஜப்பானின் போட்டிநாடென்ற வகையிலும் அமெரிக்காவின் நேச நாடாகும் சாத்தியம் மிகவும் குறைவே. சோவியத் என்ற பயம் இல்லாதொழிந்த இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவின் மேலாண்மையை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடிய வலிமையுடனும் இப்பிராந்தியப் பொருளாதாரப் போட்டியின் நேரடிபோட்டியாளராக வளர்ந்து வருவதும் அதற்கான சாத்தியங்கள் இல்லையென்றே கூற வைக்கின்றன.
சீனாவின் அபரிமித வளர்ச்சி இந்தியாவுடன் அமெரிக்காவை நெருங்கி வரத் தூண்டினாலும் பாகிஸ்தான் அமெரிக்காவின் நேச நாடாக என்றும் இருந்து கொண்டிருப்பதும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அளவிலேயுமே அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடன் இருக்கும் என்று நம்பலாம். பகிஸ்தானிற்கு அல்கைடா தீவிர வாதிகளுடனான தொடர்பு பரவலாகப் பேசப் படும் எல்லாச்சந்தர்ப்பத்திலும் அமெரிக்கா பாகிஸ்தானைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதும் தொடர்ந்தும் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கான பொருளாதார உதவிகளுமே இதற்குச் சான்றாகும்.
இந்தளவில் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம் எவ்வாறு இந்திய அரசியல் வாதிகள் எண்ணுவது போன்று அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
முதலில் இரு நாடுகளுக்கிடையிலான நட்பு அல்லது எதிர்ப்பு எவ்வாறு ஏற்படக் கூடும் என்பதற்கான சாத்தியங்களை ஆராய்வோம். இந்நட்பு அல்லது எதிர்ப்பு கருத்தியல் ரீதியாகவும் உலகாதிய ரீதியாகவும் ஏற்படலாம்.
கருத்தியல் ரீதியான நட்பும் தொடர்பும் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே சங்ககாலம்தொட்டு ஆதாரங்களுடன் கானப் படுகின்றது. படையெடுப்புகள்,படை உதவிகள், பெண் எடுத்தது, பெண் கொடுத்தது என்ற வகையில் பல உதாரணங்கள் வரலாற்றில் கானப் படுவது கருத்தியல் ரீதியாக ஈழத்தமிழ் மக்களிடையேயும் தமிழகத் தமிழ் மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை இன்றளவும் ஏற்படுத்தும் வலிமையுடன் காணப் படுகின்றது.
உலகாதிய ரீதியாக பேசப்படும் மொழி, பின்பற்றப் படும் சமயம், கலாச்சாரப் பாரம்பரியங்கள் காணப் படுகின்றன.
இருந்த போதும் இத்தொடர்பானது இன்றைய இந்தியாவின் ஒரு பகுதியுடனான தொடர்பு என்ற வகையிலேயே முக்கியத்துவம் குறைக்கப்பட்டுப் பார்க்கப்படுகின்றது. இன்னொரு விதத்தில் தமிழீழம் அமைவதால் இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய நன்மை தீமைகள் என்ற அடிப்படையிலும் இந்தப் பிரச்சினை அலசப்படுகின்றது.
நன்மைகள் என்பதைதவிர்த்து தீமைகள் என்ற வகையில் முன்னிலைப் படுத்தும் குற்றச்சாட்டு ஈழத்தைபார்த்து தமிழ்நாடும் பிரிந்து போகலாம் என்பது.இதற்காக பேசப் படும் மொழி கலாச்சாரத்தொடர்புகள் இக்காரணத்திற்கான அடிப்படையாகப் பார்க்கப் படுகின்றது. ஆனால் இது முழுமையான இந்தியாவின் குற்றச் சாட்டாக எடுத்துக் கொள்ளாது இதன் அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். உண்மையில் இந்தியாவின் மேலாண்மை ஆட்சியையும் இந்தியக் கூட்டரசின் அனைத்து நன்மைகளையும் தங்களுக்கே பயன் படுத்தி வரும் ஒரு பெரும்பான்மை இனத்தின் உள்ளப் பயம் இதுவென்றே நாம் கொள்ளலாம்.
இக்குற்றச் சாட்டு உண்மையாக இருக்கவேண்டுமென்ற பட்சத்தில் இந்தியா என்ற நாடு இப்போது பல குட்டி நாடுகளாகப் பிரிந்திருக்க வேண்டும். வங்காள மொழி பேசும் பங்களாதேசம் உருவாக்கப் பட்ட பின்னால் அது சாத்தியமாகி இருக்க வேண்டும். இந்தியாவின் வங்காளப்பகுதியில் இருக்கும் மக்களுக்கும் இன்றைய பங்களாதேச மக்களுக்கும் இடையில் ஈழத் தமிழ் மக்களுக்கும் தமிழகத் தமிழ் மக்களிற்கும் இடையிலுள்ள தொப்பூழ் கொடியுறவு தான் காலாதி காலம் காணப் படுகின்றது. பாகிஸ்தான் என்ற நாட்டை பலவீனப் படுத்துவது என்ற அரசியல் காரணத்தை முன்னிறுத்திய போது வங்காளம் பிரிந்து தனி நாடாகப் போகும் ஆபத்தையும் ஏற்றுக் கொள்ளாது பிரிந்து போக மாட்டாது என்று அடித்துச் சொல்லி வங்காளிகளின் தாய்நாட்டுப் பற்றைப் போற்றிய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமிழ் நாட்டு மக்களின் நாட்டுப் பற்றைக் கொச்சைப் படுத்தும் வகையில் இதனை ஒரு காரணமாக முன்னிறூத்துவது ஏன் ?
ரோ போன்ற உளவு அமைப்புக்களின் அரை குறை அறிவுரையுடன் கூடிய ஈழத்தமிழ் போராட்டம் பற்றிய கண்ணோட்டம் இன்று ஒரு சிக்கலை இரு நாட்டு மக்களிற்கிடையேயும் உருவாக்கியிருக்கின்றது. இலங்கை முழுவதற்குமான அதிகாரத்தைப் பெறுவது என்ற இந்தியாவின் கண்ணோட்டம் இன்று சிங்கள தேசத்தின் இந்தியாவிற்கெதிரான முகத்தை அம்பலப்படுத்தியதுடன் அமெரிக்காவை இந்தியாவின் காலடிக்கே கொண்டுவந்து உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் ஏன் புரிந்து கொள்ளவில்லை. அமெரிக்காவையும் பாகிஸ்தானையும் காவடி எடுத்து வரவேற்கும் சிங்கள அரசின் இந்திய எதிர்ப்பு பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை ? பங்களா தெசப்பிரிவினையின் போதும் பாகிஸ்தானிய விமானங்கள் தங்கி எண்ணை நிரப்பிப் போக இந்திய்யாவின் விருப்பையும் மீறி அனுமதி அளித்த சிங்கள அரசுதானா இந்தியாவின் நேச நாடு.
சிங்கள அரசின் குள்ள நரித்தனத்தில் தன் கையை எடுத்து தன் கண்ணையே குத்திக் கொண்ட பின்னாலும் இந்திய நலனைப் பாதுகாக்கக் கூடிய சக்திகள் யார் என்பதை இனங்கண்டு கொள்வதில் இந்தியாவிற்கு இருக்கக் கூடிய மனத்தடைகள் தான் என்ன ? ரோவின் சமயோசிதமற்ற தோல்வி இந்தியாவின் தன் மானப் பிரச்சினையாக கொள்ளப்படுகின்றதா ?
தமிழ் ஈழ மக்களை பொறுத்த அளவில் இந்தியா இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே நட்புடன் கூடிய உறவு நாடுதான்.தமிழ் ஈழம் அமைவது இந்தியாவிற்குத் தென் திசையால் வரக் கூடிய அத்தனை ஆபத்துக்களிற்கும் முடிவு கட்டும் என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இஸ்ரவேல் இன்று மத்திய கிழக்கில் எவ்வாறு அமெரிக்காவின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்றதோ அதே திறத்தில் அல்லது அதற்கும் மேலாக இந்திய அபிலாசைகளிற்கேற்ப தமிழ் ஈழம் செயற்படக் கூடும் என்பதை இந்தியா பரிசீலித்துப் பார்க்க வேண்டும். இந்த சாத்திய உண்மை காரணமாகவே சிங்கள தேசம் இந்தியாவிடம் இருந்து விலகி விலகிப் போகின்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழீழத்தின் நொய்மையான பொருளாதாரம் இந்தியாவின் பொருளாதார தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கும் வழி வகுக்கும் நேரத்தில் புரிந்துணர்வை கட்டியெழுப்பவும் துணை போகும்.
தமிழ் ஈழம் இந்தியாவின் இறைமைக்கு என்றும் அச்சுறுத்தல் இல்லாது நேச நாடாக இருக்கும் சாத்தியக் கூறுகளே அதிகம் என்று தான் தோன்றுகின்றது. இந்தியா இத்திசையிலும் சிந்திப்பது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆட்சிக்கும் அமைதிக்கும் வழிவகுக்கக் கூடும்.
நன்றி>சிந்து
http://ilanthirayan.blogspot.com/2006/01/b...og-post_04.html
|
|
|
| கேக்கிறாரெல்லே |
|
Posted by: Mathuran - 01-04-2006, 07:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
வட கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று நிரூபிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு எல்லாவல மேதானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறான தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. இந்த நாட்டின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதாக சர்வதேசதிற்கும் மக்களுக்கும் ஊடகங்கள் மூலம் மாயை நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேணடிய விடயம் நாட்டில் தீவிரவாதப் பிரச்சினையே நிலவுகின்றது என்பதே.
நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தனி அரசு ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் தமிழராகப் பிறப்பெடுத்த சிலரினால் இந்த தீவிரவாதம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் 99 சதவீதமான தமிழ் மக்கள் இந்த இயக்கத்தை விரும்பவில்லை. புலித் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கு அச்சமுற்று தமிழ் மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். புலிகள் வட கிழக்கு பிரதேசங்களில் தமிழர் தாயகப் பிரதேசம் உள்ளதாகக் காட்டிக் கொண்டு தாயகத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகள் வட கிழக்கு பிரதேசத்தை தமிழர் தாயகப் பிரதேசம் என்று கூறுவார்களாயின் அதற்கான சான்றுகளை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
நன்றி லங்கசிறி
|
|
|
| கேக்கிறாரெல்லே |
|
Posted by: Mathuran - 01-04-2006, 07:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
வட கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று நிரூபிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு எல்லாவல மேதானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறான தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. இந்த நாட்டின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதாக சர்வதேசதிற்கும் மக்களுக்கும் ஊடகங்கள் மூலம் மாயை நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேணடிய விடயம் நாட்டில் தீவிரவாதப் பிரச்சினையே நிலவுகின்றது என்பதே.
நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தனி அரசு ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் தமிழராகப் பிறப்பெடுத்த சிலரினால் இந்த தீவிரவாதம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் 99 சதவீதமான தமிழ் மக்கள் இந்த இயக்கத்தை விரும்பவில்லை. புலித் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கு அச்சமுற்று தமிழ் மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். புலிகள் வட கிழக்கு பிரதேசங்களில் தமிழர் தாயகப் பிரதேசம் உள்ளதாகக் காட்டிக் கொண்டு தாயகத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகள் வட கிழக்கு பிரதேசத்தை தமிழர் தாயகப் பிரதேசம் என்று கூறுவார்களாயின் அதற்கான சான்றுகளை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
|
|
|
| பிரித்தானியாவில் விசாவுக்கு விபச்சாரம். |
|
Posted by: kuruvikal - 01-04-2006, 05:42 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41177000/jpg/_41177562_passport_bbc_203.jpg' border='0' alt='user posted image'>
<b>பிரித்தானியாவில் ஒரு வேலைக்கே விசா அனுமதி எடுக்கவே அல்லாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் கிழக்கு ஐரோப்பிய மற்றும் வேற்று நாட்டு வெள்ளைத் தோல் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்து நிரந்தர வதிவிட விசா வழங்கும் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு உள்நாட்டு அலுவல்கள் திணைக்கள(Home office) அதிகாரிகரிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. குறித்த திணைக்களத்தில் நிகழும் தில்லுமுல்லுகள் மற்றும் தெற்காசிய பிரஜைகள் மீதான விசா வழங்கலை நிராகரிக்க கோரும் அதிகாரிகளின் அழுத்தங்கள் மற்றும் பல ரகசிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் "கோம் ஒபீஸ்" அதிகாரி ஒருவர்..!</b>
மேலதிக தகவல்கள் இங்கு..
<b>Inquiry into 'sex for visa' claim </b>
[b][i]The Home Office is investigating a claim that immigration officials have granted visas to foreign nationals in exchange for sex.
http://news.bbc.co.uk/1/hi/uk/4576618.stm
|
|
|
| சிப்பாய்க்கு புதுவருட வாழ்த்து |
|
Posted by: eelapirean - 01-04-2006, 04:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
04.01.2006
சிப்பாய்க்கு புதுவருட வாழ்த்து
சொன்ன நபருக்கு நேர்ந்த கதி
படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார்.
பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில் நிற்குமாறு பணித்தார்.
தாம் ரோந்து சென்று திரும்பும்வரை அந்த இடத்தைவிட்டு விலகக்கூடாது என்றும் அந்த நபரிடம் சிப்பாய் கூறியுள்ளார்.
படையினருக்குப் புதுவருட வாழ்த்துக் கூறும் தனது ஆசையை தானே நொந்து கொண்ட அந்த நபர் பின்னர் அங்கிருந்து எழுந்து சென்றார்.
சுட்டது உதயன்
|
|
|
| தி.மு.க. கூட்டத்தில் தனுசுக்கு கண்டனம் |
|
Posted by: கீதா - 01-04-2006, 01:04 PM - Forum: சினிமா
- Replies (13)
|
 |
தி.மு.க. கூட்டத்தில் தனுசுக்கு கண்டனம் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் மன்மதராசா பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந்தது.
நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட்டுக்கோட்டையில் தி.மு.க. கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. பேச்சாளர் வெற்றி கொண்டான் நடிகர் தனுசை கடுமையாக சாடினார். வெற்றிகொண்டான் பேசிய தாவது:-
சினிமா பார்க்க தியேட்டர் பக்கம் போகவே இந்தக் காலத்தில் தயக்கமாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னாள் ஒரு படம் பார்க்க போனேன். அதில் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் `மன்மதராசா' பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந் தது.
அந்த பெண் `தாயேண்டா' என்று கத்த நடிகரோ மடியில் தூக்கிவைத்துக் கொண்டு அந்த நடிகையை எதோதோ செய்கிறார். ஒரு அறைக்குள் செய்ய தயங்கும் கூத்துக்களை அவர் திரையில் செய்கிறார்.
நடிகர் யார் என்று கேட்டேன். சூப்பர் ஸ்டார் மருமகன் என்றார்கள். இளைய தலைமுறைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க இந்த ஒரு நடிகரே போதும்.
ரஜினிகாந்த் தமிழ் நாட்டின் மேல் ரொம்ப பாசம் வைத்துள்ளார். அவர் மருமகனான தனுஷ் இப்படியெல்லாம் நடிக்கலாமா தனுஷ் நடித்த எந்த படமாவது பார்க்கும்படி உள்ளதா எல்லாமே கருமப்படம்.
சமீபத்தில் வெளியான அதுஒரு கனாக்காலம் படத்தில் கவர்ச்சி பெண் கூட கட்டிப்பிடித்து அந்த மூடிலேயே வீட்டு வேலைக்கு வரும் பெண்ணை கசமுசா செய்கிறார். என்ன கருமம் பாருங்கள் . வயசு பிள்ளைகளுக்கு தனுஷ் கற்றுக் கொடுப்பதை பார்த்தீர்களா?
இவ்வாறு அவர் பேசினார்.
வெற்றிகொண்டான் பேச்சுக்கு ரஜினி, தனுஷ் ரசிகர் மன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்ட ரஜினி காந்த் ரசிகர்மன்ற பொதுச் செயலாளர் ஹுமாïன் `நாகரீகம் கெட்டுப் போய் வெற்றி கொண்டான் பேசி உள்ளார் என்று கண்டித்துள்ளார். அவர் பேச்சுக்கு தடை விதிக்காட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
தனுஷ் தந்தையான டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-
தனுஷ் ஒரு நடிகர் டைரக்டர் சொல்லி கொடுப்பதை செய்கிறார். தனுஷ் விருப்பப்பட்டு ஆபாசமாக நடிப்பது போல் வெற்றிகொண்டான் வம்புக்கு இழுத்துள்ளார். ஆபாசம் என்று நினைத்திருந்தால் தனுஷ் படங்களை மக்கள் ரசித்து இருப்பார்களா?
தனுஷ் நடித்த எத்தனையோ படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது. அவற்றை வெற்றி கொண்டான் பார்த்திருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
maalaimalar.com
http://www.vaddakkachchi.com/viduppu/index...t_from=&ucat=1&
|
|
|
| யாழில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம் |
|
Posted by: கீதா - 01-04-2006, 12:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>யாழில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம்
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வைத்தீஸ்வரா கல்லுரிக்கு முன்பாகவுள்ள அபுபக்கர் வீதியில்வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர் கண்ணகிபுரம் நாவாந்துறையைச் சேர்ந்த பூலோகசுந்தரம் செல்வக்கிருஸ்ன் ;(30)என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர் உரும்பராய் கிழக்கைச் சேர்ந்த இராசரெத்தினம் காண்டீபன் (25) என்பவராவார். இவர்கள் இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. </span>
http://www.toplankasri.com/
|
|
|
| புதுவருட வாழ்த்து சொன்னவருக்கு நேர்ந்த கதி |
|
Posted by: அருவி - 01-04-2006, 11:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார்.
பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில் நிற்குமாறு பணித்தார்.
தாம் ரோந்து சென்று திரும்பும்வரை அந்த இடத்தைவிட்டு விலகக்கூடாது என்றும் அந்த நபரிடம் சிப்பாய் கூறியுள்ளார்.
படையினருக்குப் புதுவருட வாழ்த்துக் கூறும் தனது ஆசையை தானே நொந்து கொண்ட அந்த நபர் பின்னர் அங்கிருந்து எழுந்து சென்றார்.
நன்றி உதயன்
இச்செய்தியின் இணைப்பு
|
|
|
| வாழ்க்கைக்கு தேவையான சில தத்துவஙகள |
|
Posted by: தூயா - 01-04-2006, 09:08 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (18)
|
 |
தத்துவம் 1
புகையிரத வண்டி என்னதான் வேகமா போனாலும்
வண்டியோட கடைசி பெட்டி கடைசியாதான் போகும்!!
தத்துவம் 2
பேருந்து போய்ட்டா, Bus Stand அங்கேயே தான் இருக்கும்,
ஆனால் துவிசக்கர வண்டி போயிற்ற, Cycle Standகூடவே போகும்!!
தத்துவம் 3
கைத்தொலைபேசியில் பலன்ஸ் இல்லேன்ன கோல் பண்ணா முடியாது,
ஆனால்
மனுசனுக்கு கோல் இல்லேன்ன, பலன்ஸ் பண்ண முடியாது!!
தத்துவம் 4
வாயால "நாய்" என்டு சொல்ல முடியும்
ஆனால்
"வாய்" என்டு நாயால சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டிய விடயம்!!
தத்துவம் 5
விசம் பத்து நாள் ஆனா பாயாசம் ஆக முடியாது
ஆனால்
பாயாசம் 10 நாள் ஆனா விசம் ஆக முடியும்!!
தத்துவம் 6
அரிசி கொட்டினா, வேற அரிசி வாங்களாம்,
பால் கொட்டினா, வேற பால் வாங்களாம்
ஆனால்
தேள் கொட்டினா? வேற தேள் வாங்க முடியுமா?
தத்துவம் 7
யானை மேல நாங்க உட்கார்ந்தா ஜாலி
யானை எங்க மேல உட்கார்ந்தா ,,,,, நாங்க காலி!!
பின்னர் சேர்க்கப்பட்ட தத்குவம்:8
என்ன தான் ஏணி மேல போக உதவினாலும்
அது எப்பொழுதும் கீழ தான் இருக்கும்
பி.க் - இது என்னுடைய ஆக்கம் அல்ல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
|