| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 334 online users. » 0 Member(s) | 331 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| கொதிக்கிறது திருமலை... |
|
Posted by: iruvizhi - 01-03-2006, 03:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (107)
|
 |
கொதிக்கிறது திருமலை
திருகோணமலையில் நேற்று ஐந்து அப்பாவி மாணவர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இன்று திருமலையில் அனைத்து வணிக நிலையங்களும், மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளிற்கு மாணவர்கள் வராமையாலும், அலுவலகங்களிற்கு ஊழியர்கள் செல்லாiமாயலும் அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இன்று வழமை மறுப்புப் போராட்டத்திற்கு எந்த அமைப்பும் அழைப்பு விடுக்காத போதும், மக்களால் இந்த வழமை மறுப்புப் போராட்டம் நடாத்தப்படுகிறது.
அரச அலுவலகங்களிலும் வரவு குறைவாக இருந்ததை முன்னிட்டு ஏனையவர்களும் வீடுதிரும்பியுள்ளனர் எனத்தெரியவருகின்றது.
அத்தோடு இன்று காலையிலேயே மக்கள் ஒரு வித பதட்டத்துடனேயே காலையில் அவசர அவசரமாக வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதே வேளை பெரும் எண்ணிக்கையான சிறீ லங்கா காவற்துறையினரும், சிறீ லங்கா இராணுவத்தினரும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தகவல்: சங்கதி
|
|
|
| LTTE cadre, civilian killed in Claymore attack in Mannar |
|
Posted by: iruvizhi - 01-03-2006, 02:24 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
LTTE cadre, civilian killed in Claymore attack in Mannar
[TamilNet, January 03, 2006 12:43 GMT]
A cadre of Mannar Political Division of the LTTE, Jeyananthan, and a civilian identified as Vinoth, riding in a motorbike in LTTE controlled area at Valaiyankattu in Mullikkulam, 45 km south of Mannar town, were killed when a Claymore mine was exploded by Sri Lankan soldiers, LTTE sources in Mannar said. The attack took place around 4:00 p.m. Tuesday.
The political cadre killed in the Claymore attack was a disabled cadre who had lost one of his legs, the sources added.
Further details are not available at the moment.
Tamilnet.com
|
|
|
| சிறிலங்கா இராணுவ வன்முறைகளைக் கண்டித்து திருமாவளவன் தலைமையில |
|
Posted by: iruvizhi - 01-03-2006, 02:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறிலங்கா இராணுவ வன்முறைகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர். பாஸ்கரன்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் அதியமான்,
நன்றி புதினம்
கவிஞர் அறிவுமதி,
இயக்குநர்கள் சீமான், புகழேந்தி தங்கராசு,
தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர் தியாகு,
தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகி அ. பத்மநாபன்,
உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் பத்மநாபன்,
உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை நிர்வாகி முனைவர் தமிழப்பன்,
புலவர் கி.த.பச்சையப்பன்,
மக்கள் புதிய தமிழகத்தின் நிறுவனர் துரையரசன்
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
"இந்தியப் பேரரசே! தமிழினத்தை அழிக்கும் சிங்கள இனவெறியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்காதே" என்ற பாரிய பதாகையில் புங்குடுதீவு தர்சினியின் சடலம் கிடத்தப்பட்ட புகைப்படமும், அவரது உறவினர் கதறி அழுகிற புகைப்படமும் வைக்கப்பட்டு ஈழத்து அவலத்தை தமிழகத்தில் எடுத்துச் சொல்லியது.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்தும், சிங்கள காடையர்களின் இனவெறிப் படுகொலையைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
எங்கள் தங்கை தர்சினிக்கு வீர வணக்கம்!
எங்கள் ஐயா பரராஜசிங்கத்துக்கு வீரவணக்கம்!
திருகோணமலையில் இன்று கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வீரவணக்கம்!!
ஆகிய முழக்கங்கள் உரத்து எழுப்பப்பட்டன.
"சிங்களவருக்கு இந்திய அரசு எந்த உதவியும் வழங்கக் கூடாது! "தமிழீழத்தை அங்கீகரி" ஆகிய ஈழத் தமிழர் ஆதரவு பதாகைகளை ஆண்களும் பெண்களும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை காவல்துறையினர் ஒரு மணிநேரம் மட்டுமே அனுமதி அளித்திருந்தனர். "தமிழனுக்காக அழுவதற்காகக் கூட நேரக்கெடு விதிக்கிற" அவலச் சூழல் தமிழ்நாட்டில் இருப்பதை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினோர் சுட்டிக்காட்டினர்.
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதுவித உதவியையும் எந்த நிலையிலும் வழங்கக்கூடாது. அமைதிப் பேச்சுகளில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலான பங்களிப்பைச் செய்ய வேண்டும்; அப்பாவித் தமிழர்கள் மீதான சிங்கள இராணுவப் படுகொலைகளை உடனே நிறுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் உரையாற்றியோர் வலியுறுத்திப் பேசினர்.
|
|
|
| சொல்லிப் பார் கேட்காவிடின் விட்டுப் போ! |
|
Posted by: நர்மதா - 01-03-2006, 11:56 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (4)
|
 |
சொல்லிப் பார் கேட்காவிடின் விட்டுப் போ!
கானலைப் பார்த்து இரசிக்கலாம். தொட்டு அனுபவிக்க முடியாது சொந்த மண்ணில் கண்ட இன்பம் அந்த மண்ணில் அனுபவித்த துன்பம் சொந்தம் சூழ வாழ்ந்து கண்ட வாழ்க்கையின் அனுபவங்கள் அவை தழுவ விட்ட சமூக இணைவுத் தென்றல்கள் நட்புறவுகள் அறிமுகங்கள் அனைத்திற்கும் மேலாக சொந்த மொழியைச் சுதந்திரமாய்ப் பேசி மகிழ்ந்துஇ அலைந்து மகிழ்ந்த அந்த நித்திய தென்றலையொப்ப உள்ள இன்பம்.
அத்தனையையும் இழந்து விட்டு வந்த நாட்டில் சொந்தம் தேடி நொந்து வாழும் அனுபவம் இருக்கிறதே! இதனை உங்களுக்கு எனது எழுத்தாலும் பேச்சாலும் விளக்கங்களாலும் புரிய வைத்துவிடல் சாத்தியமா என்றுதான் நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
அந்த முயற்சியில் தோல்வி எனக்கு முன்பாக நின்று கொண்டு கைகொட்டிச் சிரிப்பதைக் காண எனக்கே வெட்கமாக இருக்கின்றது.
இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கின்ற இந்த நள்ளிரவு வேளையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நான் அனுபவித்து சொக்கி மகிழ்ந்த மிகப்பழைய தமிழ்ப் பாடல் ஒன்று இணைய வலயத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.
எனது மனம் என்ன பாடு படுகின்றது தெரியுமா?
மகிழ்ச்சியும் துயரமுமாக இரண்டும் கலந்து என் இதயத்தைப் பிழியும் ஓர் உணர்வு என்னை எங்கேயோ இழுத்துச் செல்கின்றதாக உணருகின்றேனே! அழுத்தி வதைப்பதாக உணருகின்றேனே!
உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
எனக்கென்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது.
"ஆண்டவனே! என்று என் இதயம் நன்றி சொல்கிறதை உணர்கிறேன். நமதூரில் இருப்பதைப் போன்ற ஒரு கனவு மேகத்தில் மிதக்கிறேன் நான்.
இதயத்தின் தனிமையை இந்த உடலத்தின் தனிமை உணர்த்தும்போதுதான் உண்மையின் அருமை உள்ளத்திற்கே புரியும் போலும்.
அன்று என்னிடமில்லாதிருந்த நுகர் பொருட் தேவைகள் பலதும் தேவைக்கும் அதிகமாகவே இப்போது என்னிடம் இருக்கின்றன. ஆனால் என்னிடம் எதுவுமே இல்லாததைப் போன்ற ஏதோ பெரிய இழப்பொன்றினால் நான் தவியாய்த் தவிக்கின்றேன்.
எல்லாமிழந்த பிச்சைக்காரனைத்தான் நான் அறிந்திருந்தேன் அன்று. ஆனால் எல்லாமிருக்கின்ற பிச்சைக்காரனை அறிந்திருப்பது மட்டுமல்ல உணர்ந்தும் இருக்கிறேன் இன்று.
பாலைவனத்தில் கைநிறைய பண நோட்டுக்களுடன் மட்டும் நின்று கொண்டுஇ தண்ணீருக்குத் தவிக்கும் மனிதனின் பரிதாபம் என்னில் நிறைந்து என்னை நோக்கி எள்ளி நகையாடுகின்றது.
அதை ஏனென்று சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் எனது அறிவுக் சுவரில் தெரியும் தெளிவுக் கதவை மெதுவாக நான் திறக்க முயலுகின்றேன். திறந்ததும் உட்பக்கமிருந்து ஒரு குரல் வருவது கேட்கின்றது.
"ஏஇ ஏமாந்த நிற்கின்ற ஏமாளி மனிதனே! ஒருவரின் வாழ்க்கையில் பேரிழப்பு என்பது என்ன தெரியுமா? தன் சொந்த மண்ணை இழந்து போய் நிற்பதுதான். அது மட்டுமேதான்.
அக்குரலில் மிதக்கின்ற வார்த்தைகள் என்னை அழவே வைத்துவிடுகின்றன.
என் மனம் அப்படியே ஆடிப் போய் விடுகின்றது.
எல்லாமிருந்தும் நான் இல்லாதவனே என்கின்ற உண்மை என்னை அழுத்துவதை என்னால் தாங்கிக் கொள்ளவே இயலாமல் இருக்கின்றது. நான் களைத்துப் போய் நிற்கிறேன்.
எனது அறிவு முணுமுணுக்கின்றது.
"நீ மிதப்பது நீரிலல்லஇ மேகத்தின் மீது!
ஏதோ ஒரு காரணத்தால் நான் இன்னும் கீழே விழாமல் இருக்கின்றேன். ஆனால் இதில் நிலைப்பது நிச்சயமில்லை. நிரந்தரமில்லை.
இந்தப் பத்திர உரிமை வாழ்க்கை பத்திரமானது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
உண்பதும் உடுப்பதுமே வாழ்க்கை என்றிருக்கும் உண்மை உணராத மனிதர்களை விட்டு விடுங்கள். அவர்கள் சொகுசின் போலிமையைப் புரிந்து கொள்ளாத பொய்மையில் நம்பிக்கை வைத்து வாழுகின்ற அனுதாபத்துக்குரிய மனிதர்கள்.
என்னைச் சுற்றிலும் பல கோமாளிப் பெருமைக்காரர்கள் வலம் வந்து கொண்டிருப்பது எனக்குத் தெரிகின்றது.
அவர்களைப் பார்த்து விட்டு எனது மனம் சொல்லுகின்றது.
"வாழ்க்கையில் உடற்சுகத்தையும் விட மேலான உளச்சுகம் இருப்பதை உணராத மனிதர்களாகிய இவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்களேயன்றி வெறுப்புக்குரியவர்களல்லர்.
பார்க்க முடியாத குருடர்களும்
கேட்க இயலாத செவிடர்களும்
நடக்க முடியாத முடவர்களும்
சிந்திக்க இயலாத புத்தி சுவாதீனமற்ற பலவீனர்களும் நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் மட்டுமே என்பதும் அவர்களையொப்ப இந்தச் சிந்தனையில் வலது குறைந்த மனிதர்களும் அப்படித்தான் என்பதும் எனக்குப் புரிகின்றது.
வாழ்வதற்காக உண்பவனுக்கும் உண்பதற்காக வாழ்பவனுக்குமிடையில் வித்தியாசமிருக்கிறது.
நோக்கப் பிசகே வாழ்க்கைப் பாதையின் தவறுகளுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. இதைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான் மனித பலவீனங்களின் அத்திவாரங்கள் நம் மனக்கண்களுக்கு முன் அம்பலமாகும் அதிசயத்தை நாமே நமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொள்வது சாத்தியமாக இருக்கும்.
அப்போதுதான் நமது பலவீனங்களை நாமே உணர்ந்து கொள்ளவும் மற்றவர்களின் நலன் கருதும் எண்ணம் நமக்குள் பிறக்கவும்இ அதற்கு ஆவன செய்யும் கடமையுணர்வு இதயத்தை உணர்த்தவும் தூய்மையான வழிகள் நம் சிந்தனையில் பிறக்கும் என்றும் எனது மனம் சொல்லுகின்றது.
பொய்மையின் மாயை புலப்படும்போதுதான் மெய்மையின் மேல் அது வைத்திருக்கும் அழுத்தத்தின் ஆழம் புரிகிறது. அப்போதுதான் மனித பலவீனங்களின் வெறுமையான அட்டகாசங்களின் அற்பங்களின் சக்திக் கவர்ச்சி வேடங்களும் அவற்றிற்கு அப்பாவிச் சமுதாயம் பலிக் கடாவாகிக் கிடக்கும் அவலமும்இ அம்பலமாவது தெரிய வருகிறது.
அப்போதுதான் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் சத்தியத்துக்காகவும் ஆத்திரப்படுவதிலுள்ள ஆனந்தத்தை உள்ளம் உணர்ந்துஇ நிமிர்ந்திடத் துணிகின்றது.
இந்த எழுத்துத் துறை என்னை ஈர்த்ததற்கு அடிப்படைக் காரணம் நமது இதயம் விழைவதை புடம் போட்டுச் சரியாயுணர இந்தத் துறை ஒரு மிகச் சிறந்த உரைகல் என நான் உணர்ந்தமைதான் என்று நினைக்கின்றேன்.
சொல்வது எளிது எழுதுவது கடினம். காரணம்இ எலும்பில்லா நாக்கு எதையும் உளறி விடலாம். ஆனால் எழுத்து அப்படியல்ல. உயிருள்ள உயிர்மையுள்ள துணிவுள்ள தூய்மையுள்ள சக்தியாகப் பரிணமித்தால் மட்டுமே அது படைப்பாற்றலைப் பெறுவது சாத்தியம் என்பதால் அது உருப்பெற நமது இதயபூர்வமான ஒத்துழைப்புடன் நமது சிந்தனை சீர் பெற வேண்டிய கட்டாயமிருக்கின்றது.
போலிப் புகழ் விரும்பிகளான எழுத்தாள வேடதாரிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் இவ்விடயத்தில் நாம் அகற்றி வைத்துவிட வேண்டும். வைரத்தோடு கருங்கல்லை ஒப்பீடு செய்வது தவறு.
இதயம் திறந்து இருந்தால்தான் நேர்மை அருகில் இருக்கும்.
நேர்மை அருகில் இருந்தால்தான் உண்மையில் நம்பிக்கை பிறக்கும்.
உண்மையில் நம்பிக்கை பிறந்தால்தான் நெஞ்சுக்குள் சத்தியம் நுழையும்.
நெஞ்சுக்குள் சத்தியம் நுழைந்தால்தான் தைரியம் தெளிவாக இருக்கும்.
தைரியம் தெளிவாக இருந்தால்தான் படைப்புக்களில் உயிர்மை இருக்கும்.
படைப்புக்களில் உயிர்மை இருந்தால்தான் சமுதாயத்திற்கு நற்பயனை அது வார்க்கும்.
நீர்தானே என்று சொல்லிக் கொண்டு பயிரை வளர்க்காத அதனைச் சாகடிக்கும் சுடுநீரை வயலில் பாய்ச்சி விட்டு அறுவடைப் பலனை எதிர்பார்ப்பதும் பரிசுத்தம் இல்லாத எழுத்துக் கொத்துக்களை படைப்புக்களாக்கிக் காட்டி சமுதாய அக்கறையாளர்களாக அடையாளம் காட்டிக் கொள்ள முயல்வதும் ஒன்றுதான். காரணம் இரண்டாலுமே சமுதாயமும் மனிதமும் நன்மை பெறல் சாத்தியமல்ல.
இந்தக் கவலை சிலருக்குப் பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும். அது நம் தப்பல்ல. அந்தளவிற்குப் போலிமைகளின் தாக்கங்களால் சிந்தனை வேலிகளில் கறைபிடித்திருக்கின்றது.
ஒரு குவளையளவேதானென்றாலும் நன்னீர் நன்னீர்தான். ஒரு குட அளவுக்கு இருந்தாலும் கடல் நீர் கடல் நீர்தான். ஒரு குவளை நீரினால் தாகம் தீரும். ஒரு குடக் கடல் நீரினால் அது நடக்காது. இயல்நிலையின் இரகசியமே இதுதான்.
புலம் பெயர் இலக்கிய வட்டத்துக்குள் போலிமையை முதலீடு செய்து வெற்றி பெற விழையும் ஜாம்பவான்களுக்கு இது புரிந்தால்தான் இவர்களும் நன்னீரை உணர்ந்து திருந்துவார்கள்.
புத்தி சொல்வது எளிது. ஆனால் சொல்லும் புத்திக்கேற்ப தானும் வாழ்வது அரிது. அதனால்தான் பொய்யான இதயங்களின் வாய் மொழியும் பலன் தரத்தக்க சக்தி மிக்க மந்திரங்களாக நிலைக்க வேண்டிய அறிவுரைகளும் சுவை தர இயலாத பழங்களின் படங்களாகக் காற்றோடு காற்றாகக் கலந்து மறைந்து விடுகின்றன.
ஒரு சிறு கல்லும் கூட அது விழத் தொடங்குகின்ற இடத்தின் உயரத்தைப் பொறுத்து கீழே விழுகையில் தாக்கசக்தி மிக்கதாகி விடுகின்றது. அது போல இதயத் தூய்மையின் உயரத்தைப் பொறுத்தே வார்த்தைகளின் சக்தியும் வெளிப்பட முடியும்.
வள்ளுவனை இழுத்து வரிக்கு வரி விமர்சிப்பவன் தனது திருக்குறள் அறிவைக் காட்டிக் கைதட்டலை விழைகின்றான் என்றால் அவன் செய்வது பணியல்ல சுயநல வளர்ச்சி மட்டுமே.
அதே மனிதன் தான் சொல்வதற்கேற்ப ஒழுகுபவனாக உண்மையில் இருந்தனென்றால் அவன்தான் வள்ளுவனின் பிரதிநிதி.
வேடிக்கை என்னவென்றால் அரசியல்வாதியும் ஒழுக்கக்கேடனும் அறிவாளிகளாக வேடம் போட வள்ளுவனையும் அவனையொப்ப அறிஞர்களினதும் அருமையையும் பெருமையையும் சந்திக்கிழுத்துச் சீரழிப்பதுதான். இவர்களைப் போன்ற போலிகள் நல்லவைகளை ஆக்கிரமித்துக் கொண்டு வந்ததாலும் வருவதாலும்தான் இன்றைக்கு வரைக்கும் தீமைகள் மருந்தை மிஞ்சிவிட்ட விஷக் கிருமிகளாக வளர்ந்து கொண்டே வருகின்றன.
செவி ஓர் உறுப்பாக மட்டுமே இருந்துஇ அதற்குக் கேட்கின்ற சக்தி இல்லையாயின் அது செவி என அழைக்கப்படுவதில் என்ன பயன்? நல்லவைகளைக் கேட்டும் படித்தும் அறிந்தும் கதைத்தும் அதனைப் பின்பற்றி இயங்க இயலாத மனம் இருந்திடுமாயின் என்ன பயன்?
ஆயிரம் செவிகள் கேட்டுப் பயனில்லை. அவற்றில் இரண்டு ஏற்று நடந்தாலே பலன். ஆகவே நல்லதை விழையும் நல்ல இதயங்கள் சொல்வதை நிறுத்தி விடக் கூடாது. ஏற்பன ஏற்கட்டும். ஏற்காதன தோற்கட்டும். பாய்ச்சப்படும் நீர் களைகளுக்குக் கிடைத்தாலும் பயிர்கள் விளையுமென்றால் அது போதாதா என்ன?
ஆகவே நல்லதைச் சொல்லிப் பாருங்கள்.
கேட்காவிடின் விட்டு நகருங்கள். ஆனால் அந்த நற்பணியை மட்டும் விடாது தொடருங்கள்.
|
|
|
| நான் கற்புடையவள்! |
|
Posted by: நர்மதா - 01-03-2006, 11:15 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (5)
|
 |
வதனியின் இதயத்தில் இனந்தெரியாதவொரு படபடப்பு. தான் செய்தது சரியா பிழையா என்பதை அவளால் தீர்மானிக்க முடியாமலிருந்ததே அதற்குக் காரணம்.
"நானுந்தான் எத்தனை எத்தனை வழிகளிலெல்லாம் முயன்றேன். ஒன்றுமே சரிவரவில்லை என்பதால்தானே இதைச் செய்யத் துணிந்தேன். அதனால் இது தவறே அல்ல!"
அவள் மனதின் ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தது.
"உன்னைப் போலவே மற்றவர்களும் நடந்துகொள்ள முயன்றால்? அதன் விளைவுகளை எண்ணிப்பார். தெரியாமல் செய்திருந்தால் அது பிழை. நீ திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு. நீயோ தெரிந்தே செய்துவிட்ட பிழையிது. இது பிழையென்றல்ல குற்றமென்று நீ சரியாகப் புரிந்து கொள்."
வதனியின் மனச்சாட்சியின் மறுபக்கம் இவ்வாறு வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தது.
தான் தங்கியிருந்த ஓட்டலின் சன்னலருகில் சென்று நின்று கொண்டாள் வதனி. அப்போதைய அவளது மனநிலையில் அதில் ஏதோ ஆறுதல் கிடைக்கப் போவதாக ஓர் எண்ணம்.
மாடியிலிருந்து கீழே நோட்டம் விட்ட அவளது கண்களுக்குக் கீழே கவர்ச்சியான எத்தனையோ காட்சிகள். ஆனால் மனம் எதிலுமே இலயிக்கவில்லை. திரும்பவும் இருந்த இடத்திற்கே திரும்பினாளவள்.
பேங்கோக் நகர சூழ்நிலையில் அந்தச் சின்னஞ்சிறு அறைக்குள்ளே எத்தனையெத்தனையோ இளவயதுகள் வந்து தங்கிப் போய்விட்டன.
இவளைத்தான் நாசமாய்ப் போகிற அந்த ஏஜென்ற் ஜெர்மனிக்கு இன்னும் அனுப்பாமல் வைத்துக் கொண்டிருக்கின்றான்.
ஏன்?
அவனுக்கேற்றபடி....ஒரு தடவை மட்டுமே போதுமே!
இல்லவே இல்லை. நான் அப்படி நடக்கவே மாட்டேன்.
அப்படியானால் இன்னும் கொஞ்சம் தாமதமாகும்.
பரவாயில்லை. பிந்திப் போனாலும் போவேனே தவிர இப்படிக் கறை படிந்தவளாகப் போகவே மாட்டேன்.
அவளது பிடிவாதமான தீர்மானம் ஆறு மாத தாமதத்தையும் ஜெர்மனியிலிருக்கும் தமையனுக்கு சில ஆயிரம் மார்க் செலவையும் தொலைபேசித் தொடர்பின்மையையுமே சம்பாதித்துக் கொடுத்தன.
எல்லாவற்றிற்கும் மேலான அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் அவளது பள்ளி வயதுக் காதலனும் தற்போது "பெஃபூக்நிஸ் விசா"வுடன் அதாவது தற்காலிக விசாவில் இருப்பவனும் வெகு விரைவிலேயே காலவரையரையற்ற விசா கிடைக்க இருப்பவனும் தனக்காகவே காத்து இருப்பதாக வாரந்தோறும் வரிவரியாக எழுதிக் குவித்தவனுமான சந்திரனிடமிருந்து ஒரு செய்தியும் வராமல் நின்று விட்டமைதான்.
புல தடவைகள் டெலிபோன் எடுத்துப் பார்த்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில்தான் புதிதாக வந்திறங்கின சில. அவர்களைப் பார்த்துப் பார்த்து இவள் கொதித்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொன்றும் அவன் சொல்படி நடந்து கொண்டு இன்னும் சில நாட்களுக்குள் போய்ச் சேர்ந்துவிடும். தான் மட்டும்தான்… இப்படியே எவ்வளவு காலத்துக்குத்தான் இழுபட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்குமோ?
அன்று மாலை...
வெளியில் சிறிது நேரம் போய்வரும் வாய்ப்பு கிடைத்தது அவளுக்கு. ஏஜெண்ட் கூட வந்தான். அதாவது பாதுகாப்புக்காக.
"வதனி! எப்போ ஜெர்மனி போவதாக இருக்கிறாய்?"
குப்பென்று கொதித்தது இரத்தம்.
பாவி! செய்வதையும் செய்து கொண்டு சம்பிரதாயமா!
ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு வதனி பதிலளித்தாள்.
"தயவு செய்து இந்தத் தடவையாவது என்னை அனுப்பி வையுங்கள். ப்ளீஸ்"
"உன் தமையன் அனுப்ப வேண்டியதை அனுப்பாமலிருக்கிறான். நீயும் செய்ய வேண்டியதைச் செய்யயாமலிருக்கிறாய்... "
வேதாளம் பழையபடி முருங்கை ஏற முயல்வதை உணர்ந்து கொண்டவள் தொடர்ந்து சில காலம் இப்படியே சமையலறையில் வருபவர்களுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டே வேறு வழி பார்க்க வேண்டியதுதான் என்று முடிவெடுக்க முற்பட்டாள்.
அப்போதுதான்.....
அவன் மெதுவாக அவள் காதில் குசுகுசுத்தான். முதலில் அவள் எதுவுமே பேசாமல் இருந்தாள். அவனது வார்த்தைகள் ஒரு திடீர் மாற்றத்தை அவளிடம் ஏற்படுத்துவதை அவதானித்த அவனது முகத்தில் நரித்தனமான ஒரு நகை இழையோடியது.
"சரி..நான்..." அவள் சொல்லி முடிக்கு முன் அவன் இப்படி முடித்தான்.
"இன்றைக்கே துவங்கிவிடு.அப்போதான் சீக்கிரம் சரியாகும். சரியா?"
"சரி" - வதனியின் முகம் சிவந்திருந்தது. நாணத்தாலா? அல்ல அல்ல குற்றவுணர்வால்.
எதற்காக?
ழூழூழூழூழூ
தனது அறைக்குத் திரும்பிய வதனி அவசர அவசரமாகத் தன் சூட்கேசைத் திறந்து அதற்குள்ளிருந்த சில புகைப்படங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டாள். இலங்கையிலிருந்து அவளை வழியனுப்பி வைத்தவர்களினதும் ஜெர்மனியில் அவளை வரவேற்கக் காத்து இருப்பவர்களுமாக சிலரின் படங்கள்.
கண்களில் நீர் மல்கியதைத் தவிர்க்க முடியவில்லை அவளால். படத்தில் சந்திரன் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
"இன்னும் ஒரு மாதத்துக்குள் நான் வந்திடுவேன் கண்ணா!" என மனம் ஒலிப்பதை உணர்ந்து முறுவலித்துக் கொண்டாள்.
"டக் டக்"
அறைக் கதவை யாரோ தட்டுகிறார்கள்.
அவசர அவசரமாகப் படங்களை வைத்துப் பெட்டியை மூடியவள் போய்க் கதவைத் திறந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே ஏஜெண்ட் நின்று கொண்டிருந்தான்.
"உள்ளே வாங்கோ!" மரியாதையுடன் அவள் வரவேற்றாள்.
வந்தவன் அமர்ந்து கொண்டான். இடக்கையிலிருந்த வெண்சுருளில் இருந்து அறை முழுவதும் புகை படர்ந்தது.
ஊரில் அப்பா சுருட்டுப் புகைப்பதையிட்டு சதா போராட்டம் நடத்தி வந்தவளுக்கு யாரோ ஓர் அன்னியன் சிகரெட் புகைப்பதைக் கண்டிக்கத் திராணி இல்லாத நிலை.
இப்படியும் ஒரு வெளிநாட்டு வாழ்க்கை தேவைதானா என்று மனம் போலித் தத்துவம் வேறு பேச முயன்றதை அவளே வேடிக்கையாக இரசித்துக் கொண்டாள்.
அவன் பேசத் துவங்கினான்.
"வதனி! அவவை நாளையிலேயிருந்து உன்ற ரூமிலேதான் தங்க வைக்கப் போறன். எப்படிச் செய்வியோ தெரியாது. மூன்றே நாட்களுக்குள் செய்து முடிக்க வேணும். அப்பத்தான் இரண்டு வாரத்திலே நீ....."
வதனியின் கனவுலகப் பயணம் தொடங்கிவிட்டது. பிராங்பேட் விமான நிலையம் முதல் தமையனின் ஊர்வழிப்பாதைவரை அத்தனையும் ஏன் சந்திரன் வந்து வரவேற்பது வரைக்கும் காட்சிகள் மாறி மாறி வந்து மறைந்தன.
தான் கடந்து வந்த நாடுகளையெல்லாம் விஞ்சிய மாடிவீடுகளும் கூட கோபுரங்களுமாக என்னென்னவெல்லாமோ காட்சிகள். அப்பப்பா! ஜெர்மனி கற்பனையிலேஆய இவ்வளவு அழகென்றால் நேரில் எப்படி இருக்கப் போகின்றது!
ஏஜெண்ட் வதனியின் கனவைக் கலைத்தான்.
"என்ன நான் பேசுறேன். நீ சும்மா..."
"எல்லாம் ஓகே. நான் பார்த்துக் கொள்கிறேன்.சரிதானே!"
அவன் எழுந்து கொண்டான்.அவளது கன்னத்தில் செல்லமாக இலேசாகத் தட்டிவிட்டுப் புறப்பட்டான். அவனது அந்தச் செய்கை தன்னைச் சிறிதும் அதிர வைக்காத நிலையை அவள் உணர்ந்தாலும் அதன் காரணத்தை அவளால் உணர முடியவில்லை.
ஒரு பிழைக்கு உள்ளம் இசைந்துவிட்டால் தொடர்கின்ற பிழைகளையும் அது ஏற்றுக் கொண்டு விடுமோ? அப்படித்தான் போலும். அவள் தேனீர் போடுவதில் கவனஞ் செலுத்தத் துவங்கினாள்.
"வதனி அக்கா!"
பக்கத்து அறையிலிருந்து வந்த மூன்று பெண்கள்.
"இரவைக்கு என்ன சமைக்க?"
வதனியின் கவனம் சமையலிலல்ல... வேறு எதிலோ இருப்பதை அவர்கள் அறிவார்களா என்ன! ஏதோ அப்போதைக்கு மனதிற்குப் பட்டதைச் சொல்லியனுப்பிவிட்டு சற்று அமர்ந்து சிந்திக்க முற்பட்டாள்.
இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தபடி யோசித்துக் கொண்டு இருந்தாள் வதனி.
நாளை இரவு அந்தப் பெண் சாந்தி அறைக்குள் தங்கியதும் எப்படி ஆரம்பித்தால் காரியம் சரி வரும் என்பதிலேயே அவளது சிந்தனை முற்று முழுதாக ஈடுபட்டிருந்தது. விடிய சுமார் ஒரு நாழிகை இருக்கையில் அவளையும் அறியாமலே நித்திரை அவளை ஆட்கொண்டு விட்டது.
பொழுது விடிந்து விட்டது. எல்லா நாளையும் போல்தான் அன்றும் இருந்தது. ஆனால் அவளுக்குள் மட்டும் ஏதோ ஒரு மன அதிர்வு தொடர்ந்து இருந்து கொண்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
தான் செய்யப் போகிற காரியத்தையும் அதன் தாற்பரியத்தையும் அதனால் தானடையப் போகும் இலாபம் அனைத்தையும் அவள் மனம் அசை போட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அது அவளால் தடுத்துக் கொள்ளவே முடியாத அனுபவமாக இருந்தது அப்போது.
இரவு நெருங்கிவிட்டது. ஏழரை மணியளவில் கதவு தட்டப்படும் சப்தம்.
தனது புதிய வாழ்க்கையின் புதிய மாற்றத்தின் முதல் அத்திவாரத்தில் அடியெடுத்து வைக்கும் நேரம் வந்து விட்டதா?
கதவைத் திறந்தாள்.
"அக்கா! நான் இந்த அறையிலேதான் தங்க வேணுமாம். ஏஜெண்ட் சொன்னார்."
சுமார் இருபது வயது மதிக்கத்தக்க உருவம். பேரழகியென்று சொல்வதற்கில்லை. ஆனால் எவரையும் கவர்ந்திழுக்கத்தக்க தோற்றம்.
மீன் வந்திருக்கின்றது. தூண்டிலைச் சரியான இரையோடு போட வேண்டும். இல்லையேல் அது தப்பித்து விடும். நமது திட்டத்தை மிகவும் கவனமாக அமுல் செய்ய வேண்டும்.
தன் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக தன் மனம் இப்படியாக நினைப்பதையும் அதன் தாக்கத்தினால் தன் உடலே சற்று அதிர்வுறுவதையும் அவள் உணர்ந்தாள்.
என்றாலும் எதையும் சமாளித்தால்தான் தனது காரியம் சரி வரும் என்று ஏதோவோர் உணர்வு அவளை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது.
"உன்ற பேர் சாந்திதானே! வா..வா..பேக்கை அங்காலே அந்த மூலையிலே வைத்துவிட்டு வா! முதலில் டீ குடித்துவிட்டு அதற்குப் பிறகு பேசலாம்."
அக்காவின் விருந்தோம்பலில் தங்கை மயங்கித்தான் போனாள். தனக்கு சீதனத்துக்கென்றிருந்த ஒரே நிலத்தை அடைவு வைத்து பெற்றோர் அனுப்பியதிலிருந்து தனக்குக் கூடப்பிறந்த ஒரேயொரு அக்கா மட்டுமே இருப்பதையும் அவளது கணவன் வெறும் குடிகாரன் என்பதையும் அந்த அக்காவை நம்பித்தான் தான் ஜெர்மனி செல்லவிருப்பதையும் தெட்டத்தெளிவாக விளக்க்pக் கூறி வதனி அக்காவின் அனுதாபத்தைத் தேட முனைந்த சாந்தி படுக்கையில் படுத்தபின்தான் மெதுவாக அந்த உண்மையை வெளியிட்டாள்.
"அக்கா! இந்த ஏஜெண்ட் எப்படி? தன்னோடே ஒழுங்கா நடக்காட்டில் நேரத்துக்கு ஜெர்மனி போய்ச் சேரவிடானாமே!"
வலை ஏற்கனவே விழுந்திருக்கின்றது. இனி சரியாக நரித்தனமாக இழுத்து இறுக்கி விடுவதுதன் முக்கியம்.
வதனி ஆரம்பித்தாள்.
"சாந்தி நீ உலகத்தைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். புயலுக்கு வீராப்பு காட்டின மரம் வேரோடே சாய்ந்ததும் அதற்கேற்ப வளைந்து கொடுத்த சிறு செடி தப்பித்ததும் வெறும் கதையல்ல உண்மை. வாழ்க்கையைப் படிக்க உதவும் அறிவுரை. தெரியுமா?"
"அப்படியென்றால்?"
"நாம் சற்று விட்டுக் கொடுத்தால்தான் தப்பிப் போவது முடியும். இங்கே விசா முடிந்து பிடிபட்டால் சிறை அல்லது விபசார விடுதிதான். அதைவிட ஒரு நாளோ இரண்டு நாளோ சமாளித்துவிட்டால் அடுத்த குழுவில் ஜெர்மனிக்குப் போய்விடலாம. எது சரியென்று நினைக்கிற நீ"
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாமே! இங்கே சாந்தியின் மனவுறுதியென்ற கல்லைச் சிறிது சிறிதாகக் கரைத்துப் பார்த்தாள் வதனி.
"அக்கா! நீங்கள் எவ்வளவு காலமா இங்கே தங்கியிருக்கிறீர்கள்?"
கேள்வி சாதாரணமானதுதானே! பட்டென்று பதிலளித்தாள் வதனி.
"கிட்டத்தட்ட ஆறுமாதம்"
"ஏன்?"
மின்சாரம் பாய்ந்தது வதனியின் வயிற்றில். ஏன்? ஏன்? ஏன்? அந்தக் கேள்வி பலதடவைகள் அவள் காதுகளில் எதிரொலியாக விழுந்து குத்தியது.
எப்படி பதில் சொல்ல? நெஞ்சையடைத்தது. ஆனால்...சரியான பதிலைச் சொல்லி சரியாக நம்ப வைக்காவிட்டால் தனக்கே ஜெர்மன் பயணம் பிந்திவிட வாய்ப்பாகிவிடுமே!
ஆபத்துக்குப் பாவமில்லை. எதைச் சொல்லியாவது நாம் போகக் கிடைத்தால் சரி. அவளது மூளை காட்டிய வழியில் வார்த்தைகள்.....
"சாந்தி நானும் உன்னைப் போலத்தான் பிடிவாதமாயிருந்தேன். கடைசியில் இப்பத்தான்..."
சாந்தியின் கண்களில் ஏதோ ஒருவித ஆர்வம் மிதப்பது வதனிக்குப் புரிந்தது. சரியான வேளை! சரியாக வளைத்துவிட வேண்டும்.
"இரண்டு வாரத்துக்கு முன் ஓம் பட்டேன். வேறு வழி எதுவுமே சரி வராது என்று தெரிந்த பிறகு தான் உடன் பட்டேன். இப்போ அடுத்த குழுவில் போய்விட ஏற்பாடாகி விட்டது."
"மற்ற பிள்ளைகள்?"
"ஒன்றுமே நினைத்தபடி போக முடியாது தெரியுமா? நான்தான் பலருக்கும் வழி சொன்னேன். என் பேச்சைக் கேட்ட அத்தனையும் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்து குடியும் குடித்தனமுமாகி விட்டதுகள். இங்கே நடந்த எதுவுமே அங்கே யாருக்கும் தெரியப் போவதில்லை. அது மட்டுமல்ல... ஆபத்தில்லாதபடி எல்லாமே...."
வதனிக்கே தெரியவில்லை தான் எப்படி இந்த அளவுக்குத் தரந்தாழத் துணிந்தாளென்று. அடி மேல் அடி அடித்தாள். அந்த அம்மியும் தகர்ந்தது.
அடுத்த நாள் மாலை....ஒரு வாழத் துவங்க வேண்டிய இளம்பயிர் தன் நன்மைக்காகத்தான் அக்கா புத்தி சொன்னாள் என்ற நம்பிக்கையுடன் தன்னையே அந்த அன்னியனிடம் பலி கொடுத்துக் கொண்டது.
குற்றம் செய்யும் வரை பதறும் மனது குற்றத்தைச் செய்து விட்டால் அதைச் சரியாக்கிச் சமாதானந் தேடவும் முற்படுமென்பதை வதனி தனக்குத் தானே சமாதானஞ் சொல்லுவதன் மூலம் நடைமுறைப் படுத்திக் கொண்டாள்.
ஏஜெண்ட் தான் சொன்னபடி வதனியின் ஜேர்மன் பயணத்துக்கு ஏற்றதைச் செய்வதைக் கண்டதும் அது ஏன் என்று நினைக்க மறுத்தது அவள் மனம். அவள் அவனை நம்பிக்கைக்குரிய நாணயமான மனிதனாகவே கண்டாள். தன் காரியம் வெல்கிறதே அது போதும் என்ற நிலை.
ழூழூழூழூழூ
வதனி ஜெர்மனிக்குள் நுழைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
குடும்பத்தார் பலரையும் சந்தித்தாகி விட்டது.
இனி தன் கல்யாணத்தை.....மெதுவாக தமையனிடம் சந்திரனைப் பற்றி விசாரித்தாள். அவன் சொந்தமாக ஓர் ஆசியன் கடை நடத்துவதாகவும் தான் கலியாணத்தைப் பற்றி விசாரித்ததாகவும் முதலில் ஓம் என்றிருந்தவன் இப்போது கொஞ்சம்....
வதனிக்குத் தலையைச் சுற்றியது. என்றாலும் ஒரு தடவை அவனைச் சந்தித்துப் பேச நினைத்தாள்.
அந்தக் கடை நம்பருக்கு டெலிபோன் பண்ணினால் யாரோ ஒருவர் அல்லது ஒருத்தி அவளது பெயரைக் கேட்டுவிட்டு அவரில்லை அவரில்லை என்றே சொன்னார்கள். தனக்குரியவனிடம் பேசவும் இத்தனை கெடுபிடியா என்று அவளுக்கு ஆத்திரம் வந்தாலும் நேரில் சந்திப்பது முக்கியமல்லவா! அதற்காக அடக்கிக் கொண்டாள்.
அண்ணா வேண்டாம். நாமே நேரில் போய்க் கேட்டுவிடுவோம்!
ஒரு வரட்டு தைரியத்துடன் ஒரு நாள் அவள் தெரிந்த குடும்பமொன்றுடன் அவனது கடைக்குச் சென்றுவிட்டாள்.
பெரிய கடையல்லவென்றாலும் பொருட்கள் நிறைந்து-சனம் நிறைந்து நிறைவாகவே இருந்தது கடை. சந்திரன் பட்டறையில் நின்று கொண்டிருந்தான்.
அடிக்கடி அவனிடம் அதை இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண். நகைப்பிரிவில் அவள் நின்று கொண்டிருந்தாள்.
அவள்....அவள்...
வதனியின் பாதத்தின் கீழே பூமி நழுவுவதுபோல இருந்தது.
மெதுவாக அருகில் சென்றாள்.
"நீ...சாந்திதானே?"
"நீங்கள் அந்த பேங்கோக் ஏஜெண்ட்டோட ஏஜெண்ட் வதனிதானே? எப்படி இருக்கிறீர்கள்? அந்தத் தொழிலை இங்கேயும் தொடர்ந்து செய்கிறீர்களா?"
"எந்தத் தொழில்?"
வதனியின் முழு உடம்புமே நடுநடுங்கியது பதட்டத்தில்.
"என்ன சொல்கிறாய் நீ?"
சாந்தி சந்திரனின் பக்கமாகத் திரும்பி அவனை அழைத்தாள்.
"சந்திரன்! கொஞ்சம் வாங்கோ! இவங்களின்ற படந்தானே நீங்க எனக்குக் காட்டினது?"
எந்த வித பரபரப்புமின்றி எழுந்து அவர்களருகில் வந்தான் சந்திரன்.
"இது வியாபாரம் நடக்கிற சீதேவியான இடம். இங்கே வந்து வீண் கதை பேச வேண்டாம்."
சைகை காட்டி உள்புறத்துக்கு அழைத்தான். கயிறு கட்டப்பட்ட ஆடுபோல வதனி அவனைத் தொடர்ந்தாள். தன்னறைக்குள் நுழைந்ததும் அவன் அவளது படத்தை அவளிடமே திருப்பிக் கொடுத்தான்.
"சந்திரன்... சந்திரன்... நான்கற்புடையவள்... கற்புடையவள்... அவள்தான்...."
"சாந்தி எல்லாம் சொன்னாள். நீ அங்கே எப்படித் தொழில் நடத்தினாய். ஏஜெண்ட்டுகளுக்குப் பெண்கள் சப்ளை எப்படி நடத்தினாய். எந்த ஏஜெண்டுடன் தனிக்குடித்தனம் நடத்தினாய். ஆபத்தில்லாதபடி.. எதை... எப்படிச் செய்வது என்றெல்லாம்... எப்படிப் பள்ளிக்கூடம் நடத்தினாய் என்று எல்லாமே விபரமாகக் கேள்விப்பட்டேன்."
"ஐயோ! பொய். பொய். என்னை நம்புங்கள்.என்னை நம்புங்கள்."
"வதனி! இந்த சாந்தி எனக்கு தூரத்து உறவு. அவளைத் தான் நான் மணமுடிக்கப் போகிறேன். உனது உண்மையான சொரூபம் இதுதான் என்பதை தெட்டத் தெளிவாக ஆண்டவன் சன்னதியில் சத்தியம் செய்து சாந்தி சொன்ன பிறகுதான் என் முடிவை மாற்றினேன்."
சந்திரனின் முகத்தில் தெரிந்த தெளிவும் நிதானமும் வதனியை நிலைகுலைய வைத்தன.
ஒன்றுமே செய்யாத நானா...கற்பிழந்து போன அவளா? எவள்....
அவன் தொடர்ந்தான்.
"நீ சந்தர்ப்ப வசத்தால் பிழையில் மாட்டியிருந்தால் நிச்சயம் நான் உன்னை மன்னித்து ஏற்றிருப்பேன். ஆனால் தெரிந்து பல குடும்பங்களைக் கறைபடுத்தி அனுபவித்த உன் அப்பாவித்தனமான தோற்றத்தின் பின்னணியில் மறைந்து கிடக்கும் அரக்கத்தனமான குணத்தை என்னால் மன்னிக்கவே முடியாது. உன்னைப்பற்றி நானோ நாங்களோ இங்கோ எங்குமோ எவரிடமும் எதுவுமே சொல்லப் போவதில்லை. அந்தப் பயம் உனக்கு வேண்டாம். ஆனால் உனது இந்தக் கற்பு நெறி தவறிய பாதையை மாற்றிக் கொண்டு இனியாவது ஒழுங்காக வாழப் பார்!"
அவன் திரும்பவும் வியாபாரத்தில் ஈடுபட எதுவித சலனமுமற்றவனாய்ப் போய்விட்டான்.
அவள்?
அசையாமல்....நின்று கொண்டிருந்தாள்.
அவளது கொதிக்கும் இரத்த ஓட்டத்தில இரண்டே இரண்டு சொற்கள்மட்டுமே மிதந்தோடிக் கொண்டிருந்தன.
"நான்.. கற்புடையவள்.. நான்.. கற்புடையவள்..."
எழுதியவர் எழிலன்
|
|
|
| "அவரைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? |
|
Posted by: நர்மதா - 01-03-2006, 11:00 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (5)
|
 |
"அவரை"ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?
"அவரை' ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? எல்லா விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்தே யோசிப்பது தான் பிரச்னையே. உதாரணங்கள் பல:
ழூ சொன்னா சொன்ன நேரத்துக்கு வருவதில்லை. என்னை விட அப்படி என்ன முக்கிய பிரச்னை... என் மீது பாசமே இல்லையா? இருந்திருந்தால்இ நான் வருவதற்கு முன்பாகவே இங்கு நிற்கணுமே?
ழூ ஜீன்ஸ் வாங்கக் கடைக்குப் போகணும்ன்னு சொன்னேன். இன்னிக்குத் தான் பெரியம்மாவை ஆஸ்பத்திரியில் பார்க்கணுமா? ஆஸ்பத்திரிக்குப் போவதைக் கொஞ்ச நேரம் தள்ளிப் போடக் கூடாதா?
ழூ திருமணத்திற்கு ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன். என் பேச்சை அவர் ஏன் மதிப்பதே இல்லை?
ழூ எனக்குப் பிடிச்ச டிரெஸ் போடுவதற்கு இவர் ஏன் தடுக்க வேண்டும்? இவர் மாதிரி எண்ணெய் வழிந்த தலையும்இ பழங்கால மாடலுமாய் என்னை இருக்கச் சொன்னால் என்னால் முடியுமா?
ழூ மத்தவங்க இருக்கும்போது என் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காதவர் போல் ஏன் "ஆக்ட்' கொடுக்க வேண்டும்?
ழூ இப்போதே சேமிப்புக்கு ஏதாவது யோசிப்போம் என்று சொன்னால் காதில் வாங்கவே மாட்டேங்கறாரே? என்ன மனிதர் இவர்? இவருடன் எதிர்காலத்தில் எப்படிக் குடித்தனம் நடத்துவது?
ழூ அவருடைய காலில் ஒரே வெடிப்பா கிடக்கு. "பார்லர்' போய் சரி செய்துக்கச் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்.
ழூ நானும் ஒரே ஒரு முறையாவது தலை முடியைச் சுருட்டையாக்கிக் கொள்கிறேன் என்று கேட்கிறேன். அனாவசிய செலவு செய்யாதே என்கிறார். ஹூம்... ரசனையே இல்லாத மனிதரைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை முழுதும் கஷ்டந்தாம்ப்பா!
ழூ திருமணம் முடித்த கையோடுஇ குழந்தைகளைப் பெத்துப் போடச் சொல்லி வீட்டில் வற்புறுத்துவாங்களே? இவர் எனக்கு எதிரா கருத்து வச்சிருந்தா அவரை எப்படி சமாளிக்கிறது?
ழூ திருமணம் முடிஞ்சாச்சுன்னா தினமும் காலையில் சீக்கிரமே எழுந்துக்கணுமே? எனக்கு ஒத்தே வராத பழக்கம் இது. எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? இவர் எனக்கு "அலாரம்' வைத்துக் கொடுக்கப் போவதில்லை என்கிறார். என்ன செய்யலாம்?
இதுபோன்ற பலவிதமாய் யோசிக்கும் நீங்கள் அடிப்படையாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கேள்விகளுமே உங்களைச் சுற்றியே எழுப்பப்படுபவை. அவரைச் சுற்றியும்இ அவரது வீட்டைச் சுற்றியும் நீங்கள் யோசிக்கவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால்இ நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும்இ சுற்றுச்சூழலோடு ஒத்து வாழ்ந்தாலே மாபெரும் பிரச்னைகளைத் தவிர்த்துஇ சாதாரணமானஇ சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.
"ஊரோடு ஒத்து வாழ்' என்று பெரியோர் சொல்லியிருப்பதை "ஊர்' என்று அர்த்தம் கொள்ளாமல்இ சுற்றுச்சூழலோடு ஒப்பிட்டுக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் வாழப் போவது வேறொரு வீட்டில். அந்த வீட்டில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது உங்கள் கடமை என்று சொல்வதை விடஇ உங்களின் திறமைகளை அவர்களிடம் காட்டுவதை அவர்கள் வரவேற்கின்றனர் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாகஇ உங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகளை எந்த விதத்திலும் மாற்ற முயல வேண்டாம். நீங்கள் மாற வேண்டாம்; உங்கள் கணவரையும் மாற்ற முயற்சிக்க வேண்டாம்.
சில அடிப்படைத் தேவைகளுக்கான உங்கள் கோரிக்கைகளை வெளிப்படையாகச் சொன்னால்இ அதை யாருமே நிறைவேற்றித் தருவர். உங்களையே உங்கள் "அவர்' சுற்றிச் சுற்றி வந்தால்இ அவருடைய அத்தியாவசிய வேலைகள் என்னாவது? காதல் முக்கியம் தான்; பாசம் முக்கியம் தான். ஆனால்இ அவைகளே மற்ற அத்தியாவசிய கடமைகளையும்இ வேலைகளையும் ஒதுக்கித் தள்ளச் செய்து விட்டால்இ அதனால் ஏற்படும் இழப்புஇ உங்கள் காதலைக் கொண்டாட முடியாமல் செய்து விடும்.
உங்கள் கேள்விகளுக்கு பதில்:
ழூ சொன்ன நேரத்தில் வராமல் இருந்ததற்கு நீங்கள் சந்தேகப்படும்படியாக எந்தக் காரணமும் இருந்து விடாது. எனவே முதலில் சந்தேகத்தை விட்டுத் தள்ளுங்கள். அவர் என்ன காரணம் சொல்கிறாரோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
ழூ ஜீன்சை விட பாசம் முக்கியம்ங்க. ஜீன்ஸ் நாளை கூட வாங்கலாம். தவிப்பு கூடிய பாசத்தோடு அவரைப் பார்க்கக் காத்திருக்கும் பெரியம்மாவின் அன்புக்கு அடிபணிவதில் தவறு ஒன்றும் இல்லையே?
ழூ திருமணத்திற்கு ஆடம்பரச் செலவு வேண்டாம் தான். ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பளபள பட்டுப்புடவையும்இ நகையுமாக வாங்கப் போவதில்லையா? இரண்டு நாட்கள் முழுதும் 10 ஆயிரம் ரூபாய் "பியூட்டி பார்லருக்கு'க் கொடுக்கப் போவதில்லையா? அவருடைய நண்பர்களை ஒரே ஒரு நாள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த அவர் ஆசைப்படுவதைத் தடுப்பதில் நியாயம் இல்லையே?
ழூ கண்ணியமான உடையை நீங்கள் போட்டுக் கொண்டால் அவர் மறுப்பா சொல்லப் போகிறார்? ஈஉரிமை கொண்டாடுவது இந்த விஷயத்தில் சரியாக இருக்காது. ஏனெனில்இ மற்றவர்களின் பார்வை எப்படிப்பட்டது என்பது உங்கள் வயதுக்கு உங்களால் புரிந்து கொள்ள முடியாது. "என் உடம்பு... நான் போட்டுக் கொள்கிறேன்...' என்று நீங்கள் சொன்னால்இ மற்ற ஆண்கள்இ "சரி... என் கண்கள்... நான் பார்க்கிறேன்; அதைத் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை...' என்பர். எது நல்லது? யோசிங்க. சினிமா நடிகைகள் கண்டபடி உடை அணிந்து நடிக்கும்போதுஇ ஷூட்டிங் நடக்கும் இடத்தில் ஒன்றிரண்டு பேர் தான் இருப்பர். ஆகையால்இ அவர்களுக்கு சிரமம் ஏதும் கிடையாது. பெரிய திரையில் மற்றவர்கள் அவர்களைப் பார்த்து ரசிக்கும்போதுஇ குறிப்பிட்ட நடிகை அந்த இடத்தில் இருக்க மாட்டார். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
ழூ வெளியிடங்களிலும் உங்கள் கையோடுஇ கை கோர்த்து நடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்லதில்லையே? மற்றவர்கள் எதிரில் நீங்கள் காதலர்கள் என்று காட்டிக் கொள்ளும் ஆசை முக்கியமா? கண்ணியம் முக்கியமா?
ழூ சேமிப்பு அவசியம் தான். அவருடைய தங்கை திருமணம்இ அக்கா மகப்பேறு என்று செலவுகள் வரும்போது அவை தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் தடை போட்டு "வில்லத்தனமாய்' நடந்து கொள்ளாதீர்கள்.
ழூ உங்கள் ஆசைநாயகன் தானே அவர்? அவருக்கு நீங்கள் ஏன் வெடிப்பை நீக்கும் களிம்பு வாங்கித் தரக் கூடாது? என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டால் வெடிப்பை குணப்படுத்தலாம் என்று எடுத்துச் சொல்லுங்கள். இதற்கென செலவு செய்யும் வசதி இருந்தால்இ அவர் "பார்லர்' செல்லாமல் இருப்பாரா? யோசிங்க தோழியே!
ழூ இயற்கை தான் அழகு. எனினும்இ உங்கள் ஆசை வீண் போகாது. "பெட்டிஷனை' இதமாய்இ பதமாய் போட்டு வைங்க. நேரம் வரும்போது "ஓகே' யும் கிடைக்கும்.
ழூ இவ்விஷயத்தில் இருவரும் மிகவும் கவனமாய் முடிவெடுக்க வேண்டும். உங்கள் வயதுஇ அவர் வயதுஇ குழந்தை பிறக்கும் ஆண்டிலிருந்து குழந்தைக்குத் திருமணம் செய்யப் போவது வரை அழகாய் யோசித்து வைத்தால்இ நீங்கள் மகப்பேறுக்குத் தயாராகி விடுவீர்களாஇ இல்லையா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். குழந்தைக்குத் திருமணம் செய்த பிறகுஇ அதனுடைய எதிர்காலத் தேவைக்கு உதவப் போகும் நீங்கள் தள்ளாமையால் அவதிப்படாமல் இருக்கும் வகையில்இ இப்போதே திட்டமிட வேண்டும்.
ழூ அதிகாலை சீக்கிரம் எழுந்து கொள்வது சிரமம் தான். இன்றே ஒரு "அலாரம் டைம் பீஸ்' வாங்கி அதை எப்படி இயக்குவது என்பதைக் கற்றுக் கொண்டு நாளை முதல் சீக்கிரம் எழுந்து கொள்ளப் பழகுங்கள். இது தான் ஒரே தீர்வு!
புதுமை
|
|
|
| யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; |
|
Posted by: நர்மதா - 01-03-2006, 10:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; ஒருவர் படுகாயம்!!
ஜசெவ்வாய்க்கிழமைஇ 3 சனவரி 2006இ 14:39 ஈழம்ஸ ஜயாழ். நிருபர்ஸ
யாழ். நகரில் உள்ள அண்ணா கோப்பிச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.
படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் வழமை போன்று பொதுமக்களைத் தாக்கியதுடன் யாழ். நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற ஒரு சில நிமிடங்களில் பலாலியிலிருந்து வந்த உலங்குவானூர்தி மூலம் படுகாயமடைந்த இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்ட இராணுவ சிப்பாய்களின் உடல்களும் பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
யாழ். நகரப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல இராணுவத்தினர் அனுமதியளிக்க மறுத்ததுடன்இ யாழ். மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகளையும் நோயாளிகளை பார்வையிடச் சென்றவர்களையும் அவர்களுக்கு உணவு எடுத்துச் சென்றவர்களையும் இராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவங்களினால் யாழில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டடு யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
புதினம்
|
|
|
| Two SLA soldiers shot, wounded in Jaffna |
|
Posted by: Vaanampaadi - 01-03-2006, 08:48 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (3)
|
 |
<b>Two SLA soldiers shot, wounded in Jaffna</b>
[TamilNet, January 03, 2006 06:27 GMT]
Two Sri Lanka Army (SLA) troopers, including a lieutenant were wounded when two unidentified bicycle-riding gunmen shot at them at Kasthuriyar - Hospital Road junction of Jaffna town, around 11:15 a.m. on Tuesday, sources in the northern town said.
Several civilians were assualted by the troops who have cordoned off the area and conducting a search operation.
All the shops in the vicinity put down their shutters and civilians deserted the roads following the incident.
The wounded soldiers were taken to Palaly Military Hospital, sources added.
Source: Tamilnet
|
|
|
| இவருக்கு உதவுங்கள் |
|
Posted by: Vaanampaadi - 01-03-2006, 08:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>இவருக்கு உதவுங்கள்</b>
"அப்ளாஸ்ரிக் அனீமியா' என்ற நோயினால் பாதிக்கப் பட்ட சாவகச்சேரி கண்டி வீதியைச் சேர்ந்த 22 வயதான பாலகுமார் றோயல்குமார் என்ற இளைஞன் பரோபகாரிகளிடமிருந்து நிதி உதவி கோருகிறார்.
இவருக்கு உதவிடும் பொருட்டு சாவக்சேரி லயன்ஸ் கழகத்தினர் றோயல்குமாரின் பெயரில் சாவகச்சேரி மக் கள் வங்கிக் கிளையில் கணக்கினை ஆரம்பித்துள்ளனர்.
இந்த இளைஞனின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 2070245340 என்னும் கணக்கு இலக்கத்திற்கு நிதியினை அனுபிவைக்கலாம்.
சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எலும்பு மச்சை மாற்றீட்டுச் சத்திரசிகிச்சை மேற் கொள்வதற்கு 22 லட்சம் ரூபாவும் இதற்குத் தேவையான மருந்துகளை கொள் வனவு செய்வதற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் தேவையென மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர்.
கருணை உள்ளம் கொண்டவர்களே, இந்த இளைஞனுக்கு உங்களால்இயன்ற உதவியைச் செய்யுங்கள்.
http://www.uthayan.com/pages/news/today/22.htm
|
|
|
|