Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லிப் பார் கேட்காவிடின் விட்டுப் போ!
#1
சொல்லிப் பார் கேட்காவிடின் விட்டுப் போ!

கானலைப் பார்த்து இரசிக்கலாம். தொட்டு அனுபவிக்க முடியாது சொந்த மண்ணில் கண்ட இன்பம் அந்த மண்ணில் அனுபவித்த துன்பம் சொந்தம் சூழ வாழ்ந்து கண்ட வாழ்க்கையின் அனுபவங்கள் அவை தழுவ விட்ட சமூக இணைவுத் தென்றல்கள் நட்புறவுகள் அறிமுகங்கள் அனைத்திற்கும் மேலாக சொந்த மொழியைச் சுதந்திரமாய்ப் பேசி மகிழ்ந்துஇ அலைந்து மகிழ்ந்த அந்த நித்திய தென்றலையொப்ப உள்ள இன்பம்.

அத்தனையையும் இழந்து விட்டு வந்த நாட்டில் சொந்தம் தேடி நொந்து வாழும் அனுபவம் இருக்கிறதே! இதனை உங்களுக்கு எனது எழுத்தாலும் பேச்சாலும் விளக்கங்களாலும் புரிய வைத்துவிடல் சாத்தியமா என்றுதான் நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

அந்த முயற்சியில் தோல்வி எனக்கு முன்பாக நின்று கொண்டு கைகொட்டிச் சிரிப்பதைக் காண எனக்கே வெட்கமாக இருக்கின்றது.

இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கின்ற இந்த நள்ளிரவு வேளையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நான் அனுபவித்து சொக்கி மகிழ்ந்த மிகப்பழைய தமிழ்ப் பாடல் ஒன்று இணைய வலயத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.

எனது மனம் என்ன பாடு படுகின்றது தெரியுமா?

மகிழ்ச்சியும் துயரமுமாக இரண்டும் கலந்து என் இதயத்தைப் பிழியும் ஓர் உணர்வு என்னை எங்கேயோ இழுத்துச் செல்கின்றதாக உணருகின்றேனே! அழுத்தி வதைப்பதாக உணருகின்றேனே!

உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
எனக்கென்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது.

"ஆண்டவனே! என்று என் இதயம் நன்றி சொல்கிறதை உணர்கிறேன். நமதூரில் இருப்பதைப் போன்ற ஒரு கனவு மேகத்தில் மிதக்கிறேன் நான்.

இதயத்தின் தனிமையை இந்த உடலத்தின் தனிமை உணர்த்தும்போதுதான் உண்மையின் அருமை உள்ளத்திற்கே புரியும் போலும்.

அன்று என்னிடமில்லாதிருந்த நுகர் பொருட் தேவைகள் பலதும் தேவைக்கும் அதிகமாகவே இப்போது என்னிடம் இருக்கின்றன. ஆனால் என்னிடம் எதுவுமே இல்லாததைப் போன்ற ஏதோ பெரிய இழப்பொன்றினால் நான் தவியாய்த் தவிக்கின்றேன்.

எல்லாமிழந்த பிச்சைக்காரனைத்தான் நான் அறிந்திருந்தேன் அன்று. ஆனால் எல்லாமிருக்கின்ற பிச்சைக்காரனை அறிந்திருப்பது மட்டுமல்ல உணர்ந்தும் இருக்கிறேன் இன்று.

பாலைவனத்தில் கைநிறைய பண நோட்டுக்களுடன் மட்டும் நின்று கொண்டுஇ தண்ணீருக்குத் தவிக்கும் மனிதனின் பரிதாபம் என்னில் நிறைந்து என்னை நோக்கி எள்ளி நகையாடுகின்றது.

அதை ஏனென்று சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் எனது அறிவுக் சுவரில் தெரியும் தெளிவுக் கதவை மெதுவாக நான் திறக்க முயலுகின்றேன். திறந்ததும் உட்பக்கமிருந்து ஒரு குரல் வருவது கேட்கின்றது.

"ஏஇ ஏமாந்த நிற்கின்ற ஏமாளி மனிதனே! ஒருவரின் வாழ்க்கையில் பேரிழப்பு என்பது என்ன தெரியுமா? தன் சொந்த மண்ணை இழந்து போய் நிற்பதுதான். அது மட்டுமேதான்.

அக்குரலில் மிதக்கின்ற வார்த்தைகள் என்னை அழவே வைத்துவிடுகின்றன.
என் மனம் அப்படியே ஆடிப் போய் விடுகின்றது.
எல்லாமிருந்தும் நான் இல்லாதவனே என்கின்ற உண்மை என்னை அழுத்துவதை என்னால் தாங்கிக் கொள்ளவே இயலாமல் இருக்கின்றது. நான் களைத்துப் போய் நிற்கிறேன்.

எனது அறிவு முணுமுணுக்கின்றது.

"நீ மிதப்பது நீரிலல்லஇ மேகத்தின் மீது!
ஏதோ ஒரு காரணத்தால் நான் இன்னும் கீழே விழாமல் இருக்கின்றேன். ஆனால் இதில் நிலைப்பது நிச்சயமில்லை. நிரந்தரமில்லை.

இந்தப் பத்திர உரிமை வாழ்க்கை பத்திரமானது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

உண்பதும் உடுப்பதுமே வாழ்க்கை என்றிருக்கும் உண்மை உணராத மனிதர்களை விட்டு விடுங்கள். அவர்கள் சொகுசின் போலிமையைப் புரிந்து கொள்ளாத பொய்மையில் நம்பிக்கை வைத்து வாழுகின்ற அனுதாபத்துக்குரிய மனிதர்கள்.

என்னைச் சுற்றிலும் பல கோமாளிப் பெருமைக்காரர்கள் வலம் வந்து கொண்டிருப்பது எனக்குத் தெரிகின்றது.

அவர்களைப் பார்த்து விட்டு எனது மனம் சொல்லுகின்றது.

"வாழ்க்கையில் உடற்சுகத்தையும் விட மேலான உளச்சுகம் இருப்பதை உணராத மனிதர்களாகிய இவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்களேயன்றி வெறுப்புக்குரியவர்களல்லர்.

பார்க்க முடியாத குருடர்களும்
கேட்க இயலாத செவிடர்களும்
நடக்க முடியாத முடவர்களும்
சிந்திக்க இயலாத புத்தி சுவாதீனமற்ற பலவீனர்களும் நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் மட்டுமே என்பதும் அவர்களையொப்ப இந்தச் சிந்தனையில் வலது குறைந்த மனிதர்களும் அப்படித்தான் என்பதும் எனக்குப் புரிகின்றது.

வாழ்வதற்காக உண்பவனுக்கும் உண்பதற்காக வாழ்பவனுக்குமிடையில் வித்தியாசமிருக்கிறது.

நோக்கப் பிசகே வாழ்க்கைப் பாதையின் தவறுகளுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. இதைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான் மனித பலவீனங்களின் அத்திவாரங்கள் நம் மனக்கண்களுக்கு முன் அம்பலமாகும் அதிசயத்தை நாமே நமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொள்வது சாத்தியமாக இருக்கும்.

அப்போதுதான் நமது பலவீனங்களை நாமே உணர்ந்து கொள்ளவும் மற்றவர்களின் நலன் கருதும் எண்ணம் நமக்குள் பிறக்கவும்இ அதற்கு ஆவன செய்யும் கடமையுணர்வு இதயத்தை உணர்த்தவும் தூய்மையான வழிகள் நம் சிந்தனையில் பிறக்கும் என்றும் எனது மனம் சொல்லுகின்றது.

பொய்மையின் மாயை புலப்படும்போதுதான் மெய்மையின் மேல் அது வைத்திருக்கும் அழுத்தத்தின் ஆழம் புரிகிறது. அப்போதுதான் மனித பலவீனங்களின் வெறுமையான அட்டகாசங்களின் அற்பங்களின் சக்திக் கவர்ச்சி வேடங்களும் அவற்றிற்கு அப்பாவிச் சமுதாயம் பலிக் கடாவாகிக் கிடக்கும் அவலமும்இ அம்பலமாவது தெரிய வருகிறது.

அப்போதுதான் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் சத்தியத்துக்காகவும் ஆத்திரப்படுவதிலுள்ள ஆனந்தத்தை உள்ளம் உணர்ந்துஇ நிமிர்ந்திடத் துணிகின்றது.

இந்த எழுத்துத் துறை என்னை ஈர்த்ததற்கு அடிப்படைக் காரணம் நமது இதயம் விழைவதை புடம் போட்டுச் சரியாயுணர இந்தத் துறை ஒரு மிகச் சிறந்த உரைகல் என நான் உணர்ந்தமைதான் என்று நினைக்கின்றேன்.

சொல்வது எளிது எழுதுவது கடினம். காரணம்இ எலும்பில்லா நாக்கு எதையும் உளறி விடலாம். ஆனால் எழுத்து அப்படியல்ல. உயிருள்ள உயிர்மையுள்ள துணிவுள்ள தூய்மையுள்ள சக்தியாகப் பரிணமித்தால் மட்டுமே அது படைப்பாற்றலைப் பெறுவது சாத்தியம் என்பதால் அது உருப்பெற நமது இதயபூர்வமான ஒத்துழைப்புடன் நமது சிந்தனை சீர் பெற வேண்டிய கட்டாயமிருக்கின்றது.

போலிப் புகழ் விரும்பிகளான எழுத்தாள வேடதாரிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் இவ்விடயத்தில் நாம் அகற்றி வைத்துவிட வேண்டும். வைரத்தோடு கருங்கல்லை ஒப்பீடு செய்வது தவறு.

இதயம் திறந்து இருந்தால்தான் நேர்மை அருகில் இருக்கும்.
நேர்மை அருகில் இருந்தால்தான் உண்மையில் நம்பிக்கை பிறக்கும்.
உண்மையில் நம்பிக்கை பிறந்தால்தான் நெஞ்சுக்குள் சத்தியம் நுழையும்.
நெஞ்சுக்குள் சத்தியம் நுழைந்தால்தான் தைரியம் தெளிவாக இருக்கும்.
தைரியம் தெளிவாக இருந்தால்தான் படைப்புக்களில் உயிர்மை இருக்கும்.
படைப்புக்களில் உயிர்மை இருந்தால்தான் சமுதாயத்திற்கு நற்பயனை அது வார்க்கும்.

நீர்தானே என்று சொல்லிக் கொண்டு பயிரை வளர்க்காத அதனைச் சாகடிக்கும் சுடுநீரை வயலில் பாய்ச்சி விட்டு அறுவடைப் பலனை எதிர்பார்ப்பதும் பரிசுத்தம் இல்லாத எழுத்துக் கொத்துக்களை படைப்புக்களாக்கிக் காட்டி சமுதாய அக்கறையாளர்களாக அடையாளம் காட்டிக் கொள்ள முயல்வதும் ஒன்றுதான். காரணம் இரண்டாலுமே சமுதாயமும் மனிதமும் நன்மை பெறல் சாத்தியமல்ல.

இந்தக் கவலை சிலருக்குப் பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும். அது நம் தப்பல்ல. அந்தளவிற்குப் போலிமைகளின் தாக்கங்களால் சிந்தனை வேலிகளில் கறைபிடித்திருக்கின்றது.

ஒரு குவளையளவேதானென்றாலும் நன்னீர் நன்னீர்தான். ஒரு குட அளவுக்கு இருந்தாலும் கடல் நீர் கடல் நீர்தான். ஒரு குவளை நீரினால் தாகம் தீரும். ஒரு குடக் கடல் நீரினால் அது நடக்காது. இயல்நிலையின் இரகசியமே இதுதான்.

புலம் பெயர் இலக்கிய வட்டத்துக்குள் போலிமையை முதலீடு செய்து வெற்றி பெற விழையும் ஜாம்பவான்களுக்கு இது புரிந்தால்தான் இவர்களும் நன்னீரை உணர்ந்து திருந்துவார்கள்.

புத்தி சொல்வது எளிது. ஆனால் சொல்லும் புத்திக்கேற்ப தானும் வாழ்வது அரிது. அதனால்தான் பொய்யான இதயங்களின் வாய் மொழியும் பலன் தரத்தக்க சக்தி மிக்க மந்திரங்களாக நிலைக்க வேண்டிய அறிவுரைகளும் சுவை தர இயலாத பழங்களின் படங்களாகக் காற்றோடு காற்றாகக் கலந்து மறைந்து விடுகின்றன.

ஒரு சிறு கல்லும் கூட அது விழத் தொடங்குகின்ற இடத்தின் உயரத்தைப் பொறுத்து கீழே விழுகையில் தாக்கசக்தி மிக்கதாகி விடுகின்றது. அது போல இதயத் தூய்மையின் உயரத்தைப் பொறுத்தே வார்த்தைகளின் சக்தியும் வெளிப்பட முடியும்.

வள்ளுவனை இழுத்து வரிக்கு வரி விமர்சிப்பவன் தனது திருக்குறள் அறிவைக் காட்டிக் கைதட்டலை விழைகின்றான் என்றால் அவன் செய்வது பணியல்ல சுயநல வளர்ச்சி மட்டுமே.

அதே மனிதன் தான் சொல்வதற்கேற்ப ஒழுகுபவனாக உண்மையில் இருந்தனென்றால் அவன்தான் வள்ளுவனின் பிரதிநிதி.

வேடிக்கை என்னவென்றால் அரசியல்வாதியும் ஒழுக்கக்கேடனும் அறிவாளிகளாக வேடம் போட வள்ளுவனையும் அவனையொப்ப அறிஞர்களினதும் அருமையையும் பெருமையையும் சந்திக்கிழுத்துச் சீரழிப்பதுதான். இவர்களைப் போன்ற போலிகள் நல்லவைகளை ஆக்கிரமித்துக் கொண்டு வந்ததாலும் வருவதாலும்தான் இன்றைக்கு வரைக்கும் தீமைகள் மருந்தை மிஞ்சிவிட்ட விஷக் கிருமிகளாக வளர்ந்து கொண்டே வருகின்றன.

செவி ஓர் உறுப்பாக மட்டுமே இருந்துஇ அதற்குக் கேட்கின்ற சக்தி இல்லையாயின் அது செவி என அழைக்கப்படுவதில் என்ன பயன்? நல்லவைகளைக் கேட்டும் படித்தும் அறிந்தும் கதைத்தும் அதனைப் பின்பற்றி இயங்க இயலாத மனம் இருந்திடுமாயின் என்ன பயன்?

ஆயிரம் செவிகள் கேட்டுப் பயனில்லை. அவற்றில் இரண்டு ஏற்று நடந்தாலே பலன். ஆகவே நல்லதை விழையும் நல்ல இதயங்கள் சொல்வதை நிறுத்தி விடக் கூடாது. ஏற்பன ஏற்கட்டும். ஏற்காதன தோற்கட்டும். பாய்ச்சப்படும் நீர் களைகளுக்குக் கிடைத்தாலும் பயிர்கள் விளையுமென்றால் அது போதாதா என்ன?

ஆகவே நல்லதைச் சொல்லிப் பாருங்கள்.

கேட்காவிடின் விட்டு நகருங்கள். ஆனால் அந்த நற்பணியை மட்டும் விடாது தொடருங்கள்.
Reply
#2
சகோதரரே உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது... இந்த நிலை விரைவில் மாற வாழ்த்துகிறேன்.....
,
......
Reply
#3
நன்றி நர்மதா

<b>கண்ணிருந்தும்</b>பார்க்க முடியாத குருடர்களும்
<b>செவியிருந்தும்</b>கேட்க இயலாத செவிடர்களும்
<b>காலிருந்தும் </b>நடக்க முடியாத முடவர்களும்
<b>அறிவிருந்தும் </b>சிந்திக்க இயலாத புத்தி சுவாதீனமற்ற பலவீனர்களும்

நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் மட்டுமே என்பதும் அவர்களையொப்ப இந்தச் சிந்தனையில் வலது குறைந்த மனிதர்களும் அப்படித்தான் என்பதும் எனக்குப் புரிகின்றது.
Reply
#4
Quote:இதயம் திறந்து இருந்தால்தான் நேர்மை அருகில் இருக்கும்.
நேர்மை அருகில் இருந்தால்தான் உண்மையில் நம்பிக்கை பிறக்கும்.
உண்மையில் நம்பிக்கை பிறந்தால்தான் நெஞ்சுக்குள் சத்தியம் நுழையும்.
நெஞ்சுக்குள் சத்தியம் நுழைந்தால்தான் தைரியம் தெளிவாக இருக்கும்.
தைரியம் தெளிவாக இருந்தால்தான் படைப்புக்களில் உயிர்மை இருக்கும்.
படைப்புக்களில் உயிர்மை இருந்தால்தான் சமுதாயத்திற்கு நற்பயனை அது வார்க்கும்.

உண்மை! உண்மை!! உண்மை!!!
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#5
அது தான் நான் விட்டுவிட்டு போயிட்டேன்

உண்மை! உண்மை!! உண்மை!!!
.................
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)