| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 213 online users. » 0 Member(s) | 210 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,627
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| படுதோல்வியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் |
|
Posted by: வினித் - 01-06-2006, 09:47 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம்
எம்.கே. ஈழவேந்தன் எம்.பி.
மகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் படுதோல்வியில் முடிவுற்றுள்ளதென்று அனைத்துத் தமிழ் செய்தி இதழ்களும் வெளியிட்டுள்ள செய்தி எமக்குத் தெம்பு தருகின்றது. ஆனால், இது கொண்டு அனைத்தும் இனிது முடிவுற்றுள்ளதென்று நாம் ஏமாறக் கூடாது. தமிழகத் தலைவர்களும் டில்லியில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற 40 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் "இடிப்பார் இலாதார் கெடும்" என்ற வள்ளுவன் கூற்றில் முழு நம்பிக்கை வைத்து இடிக்கு மேல் இடி இடித்ததன் விளைவு டெல்லி அரசு ஓரளவு இறங்கி வந்து ஈழத்தமிழர் சிக்கலில் அக்கறை காட்டுகின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் தலைமைப்பீடம் ஒன்றுபட்டுக் குரலெழுப்பியிராவிடின் டில்லியில் இந்தளவு மனமாற்றம் ஏற்பட்டிருக்குமா என்பது பெருங்கேள்வி.
இந்திய துணைக் கண்டத்தின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் சீக்கிய சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர், மெத்தப்படித்த மேதை. அத்தோடு இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமோ தமிழகத்தின் இராமேஸ்வர மண்ணில் உருண்டு விளையாடியவர், ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்தவர். தலை சிறந்த அறிவியல் அறிஞர். அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது குறளை அறிந்த குடியரசுத் தலைவர் என அவரை நாம் வாழ்த்தியபோது அவர் நன்றி நவின்று மறுமொழி அனுப்பியதை நாம் நன்றியுணர்வோடு இன்று நினைவு கொள்கிறோம். இலங்கை, இந்திய தமிழ் ஊடகங்கள் எம் வாழ்த்துச் செய்திக்கு முதன்மை கொடுத்ததையும் நாம் இங்கு மறப்பதற்கில்லை. இக்குடியரசுத் தலைவரும், இந்திய அரசியல் ஆய்வாளர்களும் இணைப்பாட்சித் தத்துவம் பற்றியும் இந்தியாவில் இணைப்பாட்சி எவ்விதம் இயங்குகிறது என்பது பற்றியும் சிறிலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வகுப்புகள் நடாத்தியுள்ளனர். புரியும் மொழியில் வகுப்பு நடாத்தியபோதும் இவர் புரிய மறுக்கின்ற முறையில் ஒற்றையாட்சிக்குள் நான் அதிகாரப்பரவலை உருவாக்குவேன் என்று தொடர்ந்து உளறியுள்ளார். இணைப்பாட்சியின் சாயலிலுள்ள இந்திய அரசியல் அமைப்பை நாம் ஏற்கும் நிலையில் இல்லை. அத்தியாயம் 356 ஐ வைத்துக் கொண்டு மாநில அரசுகளைக் கலைக்கின்ற அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு என்பதையும் அதனால் வருகின்ற ஆபத்துகளையும் நாம் மறப்பதற்கில்லை. நாம் இதனை பல தடவை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், இத்தகைய வலுவற்ற இணைப்பாட்சியைக் கூட ஏற்கும் இதயம் எம் மகிந்த விற்கு இல்லை என்பதுதான் எமக்கு மனவருத்தத்தைத் தருகிறது.
27 ஆம் திகதி தனது பயணத்தை டில்லிக்கு மேற்கொண்ட இவர் 30 ஆம் திகதி இலங்கைக்கு கம்பராமாயண சொற்றொடரை நினைவுபடுத்துகின்ற முறையில் "வெறுங்கையுடன் இலங்கை புக்கார்" தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிகாவைப்போன்று நம்பமுடியாத பேர்வழி. இவர் "கலைஞரால் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முடியாது என்னாற்றான் புலிகளைக் காப்பாற்ற முடியும். புலிகளைக் காப்பாற்றுவது ஈழத்தமிழினத்தைக் காப்பாற்றுவதாகும்" என்று ஒரு காலத்தில் முழங்கியவர். இது இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, மாலைமுரசு போன்ற இதழ்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்ததை நாம் மறக்கவில்லை. ஆனால், அண்மைக் காலத்தில் புலிகளை ஒழித்துக்கட்டுவேன், புலிகளின் தமிழக வரவு தமிழகத்திற்கு ஆபத்தென்று அரசியலில் குத்துக்கரணம் அடித்துவரும் இவர்தான். ஈழத்துத் தமிழ் மக்களை ஒழித்துக் கட்ட கங்கணம் பூண்டுள்ள மகிந்த ராஜபக்ஷவை தமிழின ஒழிப்பில் ஜே.ஆரையும் சந்திரிகாவையும் மிஞ்சியவர் இவர் என்றும் தமிழக மக்கள் ஒருங்கே குரல் எழுப்பி கிளர்ந்தெழுந்து எதிர்ப்புக்காட்டியதன் விளைவு தமிழகத்தின் பக்கம் தலைசாய்க்காது தப்பினேன் பிழைத்தேன் என்று கூறி கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோயிலைக் கும்பிட்டு தோல்வியை இறுகணைத்த நிலையில் பாரத மாதாவிற்கு விடைகூறி கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கு தன் பரிவாரங்களுடன் காலடி பதித்துள்ளார். தான் அடைந்த தோல்வியை வெளியில் காட்டமுடியாது தமக்குள்ளே அழுது புலம்புகிறார் என்பதற்கு சான்றுகள் நிறைய உண்டு. 60 ஆவது அகவையை அடைந்துள்ள இவர், 35 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டுள்ள இவர் நாம் சொல்லிய அறிவுரையை செவிமடுக்க மறுத்த நிலையில் இந்தியா எடுத்துரைத்த கருத்துகளையாவது இவர் செவிமடுப்பாரா என்பதை காலம் தான் தீர்க்க வேண்டும். சொல்லியது உணர்தல் அறிஞர்க்கு அழகு, சொல்வதை உணர மறுத்து பட்டுணர்ந்து தான் பயன்பெற வேண்டும் என சிங்கள வெறிக்கு அடிமையாகி இலங்கையிலே இரத்தப் பெருக்கெடுப்பிற்கு அவர் துணைபோவாராயின் நாம் அவருக்காக இரங்குவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. நாம் அடிக்கடி வலியுறுத்துவதற்கமைய இருபது மில்லியன் மக்கள் கொண்ட இலங்கையின் எதிர்காலத்தை சிங்களத் தலைவர்கள் தீர்க்கத் தயங்கின், ஒரே ஒரு மனிதனால் தான் இச்சிக்கலைத் தீர்க்க முடியும். அந்த மனிதன் வேறு யாருமல்ல அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
எம் விடுதலை வேட்கைக்கு வலுச்சேர்க்கின்ற முறையில் ஐ.நா. மன்றத்தில் தமிழீழக் கொடி பறக்கும் என்று வைரம் ஏற்றும் வை.கோ.வும், வீரத்தின் விளைநிலம் வீரமணியும், நிலைத்த கொள்கையுடன் விளங்க நின்றசீர் நெடுமாறனும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் திரண்டெழுந்து தமிழகத்தில் எழுப்பிய குரல் வீண் போக முடியாது. மாறாக நிலைத்த பயனைத் தருவது உறுதி.
நெருக்கடி மிகுந்த இச் சூழலில் தமிழீழம் என்ற குழந்தையை நாம் பெறுவதில் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு தாயும் கொஞ்சிக் குலாவ ஒரு குழந்தை வேண்டும். அதனை நீ பெற்றுத்தா என்று வேறொரு பெண்ணைக் கேட்கமாட்டாள். அப்படிக் கேட்பவள் ஒருதாய் அல்ல அவள் ஒரு பேய். "அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்" என்பதற்கமைய தமிழீழம் என்ற குழந்தையை நாம் தான் பெறுவதாக உறுதி பூண்டுள்ளோம். ஆனால், தமிழகம் சிறப்பாகவும் இந்தியத் துணைக்கண்டம் பொதுவாகவும் நாம் இக்குழந்தையைப் பெறப்போகின்ற போது ஏற்படுகின்ற தொய்வை நொய்வைப் போக்க மருத்துவிச்சிகளாக மாறி எமக்குத் துணை நிற்க வேண்டும் என தமிழகத்தையும் இந்தியத் துணைக் கண்டத்தையும் நாம் வேண்டி நிற்கிறோம். மாறி வரும் இச் சூழல் எமக்கு நம்பிக்கையைத் தருகிறது. "என்றுமே விழிப்போடு இருப்பதுதான் நாம் விடுதலைக்கு கொடுக்கின்ற விலை." இதுவே எமது தாரக மந்திரம்.
நன்றி:தினக்குரல்
|
|
|
| உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர் |
|
Posted by: MUGATHTHAR - 01-06-2006, 09:17 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>மயிரிழையில் உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர்</b>
பொலிஸாரின் துவக்குச் சூட்டில் கூடச் சென்றவர் படுகாயம்
பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து ஹவன்முறைகள் அற்ற ஜே.வி.பி.' இயக்கத்தின் தலைவரும் ஜே.வி.பி. இயக்க ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மைத்துனருமான கலாநிதி எஸ். சந்திரா பெர்னாண்டோ மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவருடன் காரில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்த தென்னாபிரிக்க வைத்தியரான ராஜேந்திரம் நடராஜா படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது;
கலாநிதி பெர்னாண்டோ தனது நண்பரான தென்னாபிரிக்க வைத்திய நிபுணர் ராஜேந்திரம் நடராஜாவையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இரவு விருந்தொன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
காலி வீதியால் பயணம் செய்து கொண்டிருந்த இவர்கள் காலி வீதியில் வாகன நெருக்கடி காணப்பட்டதால் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் வீதியால் திரும்பி கடற்கரை வீதியூடாக ஹில்டன் ஹோட்டலை வந்தடையும் நோக்கில் இராமகிருஷ்ண மிஷன் வீதியால் சென்றுள்ளனர்.
அச்சமயம் இராகிருஷ்ண மிஷனின் முன்பாக வீதிச் சோதனைச் சாவடியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இவர்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
இவர்கள் வாகனத்தை நிறுத்தியபோது அருகில் வந்த பொலிஸார் காரின் கதவைத் திறக்குமாறு பணித்துள்ளனர். ஆனால்இ கதவைத் திறக்க மறுத்த சந்திரா பெர்னாண்டோ தான் எதுவித குற்றமும் செய்யாத காரணத்தினால் வாகனத்தை நிறுத்த முடியாது என கூறி காரின் யன்னல் கண்ணாடியை மூடிவிட்டு காரை வேகமாக செலுத்த முற்பட்டுள்ளர்.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் காரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத் துப்பாக்கிப் பிரயோகத்தினால் தென்னாபிரிக்க வைத்திய நிபுணருக்கு வலது கன்னத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளைஇ பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதும் தனது காரை நிறுத்தாத சந்திரா பெர்னாண்டோ தனது நண்பரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்த்த பின்னரே காரை நிறுத்தியுள்ளார்.
இதேநேரம்இ அச்சமயம் அங்கு வந்த முச்சக்கரவண்டியொன்றில் ஏறிய பொலிஸார் காரைத் துரத்திச் சென்ற போதும் அவர்களால் காரை நிறுத்த முடியவில்லை.
குறித்த கார் வண்டியில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தமக்கு தகவல் ஒன்று கிடைத்ததன் பேரிலேயே தாம் கார் வண்டியை நிறுத்த முயன்றதாகவும் ஆனால் வாகனம் நிறுத்தப்படாது தப்பிச் செல்ல முற்பட்டதாலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேரிட்டது எனவும் வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேநேரம் இது குறித்து தகவல் தெரிவித்த சந்திரா பெர்னாண்டோ தன்னைக் கொல்வதற்கு ஜே.வி.பி.யினர் முயற்சித்து வருவதாகவும் முன்னொரு தடவையும் தனக்கெதிராக ஜே.வி.பி.யினர் சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் இதனால் தான் தான் தனது வாகனத்தை நிறுத்தாது செல்ல முற்பட்டதாகவும் தெரிவித்தார்.
வாகனத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட இராணுவ வீரரும் பொலிஸார் இருவரும் வெள்ளவத்தை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காயத்திற்குள்ளான தென்னாபிரிக்க வைத்தியநிபுணர் நேற்று நள்ளிரவு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
thinakkural
|
|
|
| ''சோமஹ ப்ரதமோ" |
|
Posted by: Snegethy - 01-06-2006, 07:30 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
இந்த இணைப்பில் (http://eenpaarvaiyil.blogspot.com/2006/01/.../blog-post.html) முத்துக்குமரன் என்பவர் இந்துத் திருமணத்தின் போது சொல்லப்படும் ஒரு மந்திரத்தை பற்றி எழுதியிருந்தார் அதற்கு சுந்தர் என்பவர் எழுதிய விளக்கம் நான் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருந்தது.அதை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
<b>''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''</b>
"இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்றால் முதலில் ஸோமன் உன்னை அடைந்தான், இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான், மோன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மனுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன்"
<b>சுந்தர் எழுதியது: </b>
காஞ்சிப் பெரியவர் குறிப்பிட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். திருமண சடங்குகளைப் பற்றி அவர் சொல்லியிருப்பதில் இன்னும் சில குறிப்புகள்:
"நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கிறோம். கண்களுக்குச் சூரிய பகவான்; கைகளுக்கு இந்திரன் - இது போன்று. இதே போல குழந்தை ஜனித்ததிலிருந்து அது வளர்ந்து பெரியவனா(ளா)கும் வரை ஒவ்வொரு பருவத்திலும் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஓவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்திற்கு - தெய்வத் தன்மைக்குப் ஒப்புமைப் படுத்தியிருக்கிறோம்.
இதன்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம் வரை "ஸோமனின் (Moon God)ஆதிக்கத்தில்" இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போலவே "குளிர்ச்சியாக" இருக்கிறாள். (ஆண்கள் அணியும் வேஷ்டியின் பெயரும் சோமன்).
பிறகு இந்தச் "சோம பருவத்திலிருந்து" "பூப்பெய்தும் பருவம் வரை" விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பியிருக்கும் பெண் குழந்தை. இப்பருவத்தில் அவள் "கந்தர்வனின் ஆதிக்கத்தில்" இருக்கிறாள் அவள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய கந்தர்வ பருவம்!
பூப்பெய்திய பருவத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை அவள் "அக்னியின் ஆதிக்கத்தில்" - அதாவது அக்னி போன்று எழுந்து தகிக்கும் காம உணர்வுகளுடன் - இருக்கிறாள்.
இப்பொழுதிருக்கும் எவ்வித வசதிகளுமற்ற, எந்தவித நவீனத் தாக்கங்களும், தேவைகளுமற்ற எளிய வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டத்தை மனதில் கொண்டால், பெண் வீட்டைப் பார்த்துக்கொள்ள, ஆண் வெளியில் வேலை செய்து பொருளீட்டி ஜீவனத்தை நடத்தும் குடும்ப அமைப்பை மனதில் கொண்டால், பருவமடைந்து அக்னியின் பிடியில் இருக்கும் - காம உணர்வுகளில் உந்தப்பட்டுக்கொண்டிருக்கும் - ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுப்பதே பெற்றவர்களின் முக்கிய கடமையாக இருந்தது - அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கும் பெண் - குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கைகளில் ஒப்படைக்கப் படுகிறாள்.
ஆக, நிலவைப் போல் குளிர்ந்து நிற்கும் குழந்தை, விளையாட்டுத் தனம் நிரம்பி அழகு ததும்பும் பருவத்தைக் கடந்து, பூப்பெய்தி, பிறகு அவ்வயதிற்குரிய உணர்வுகளால் உந்தப்பட்டு காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும் போது, ஆண்மகனைக் கைப்பிடித்து திருமண பந்தத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையைத் துவங்குகிறாள் - என்று இதைப் புரிந்துகொண்டால் நலம்.
நேரடியாக இம்மந்திரங்களுக்கு அர்த்தம் கற்பிக்கத் துவங்கினால் ஒன்றும் மிஞ்சாது - நமக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்கள் உள்பட - நாம் அடையாளமற்றவர்களாவோம்.
நன்றி -தமிழ்மணம்
|
|
|
| விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி |
|
Posted by: rajathiraja - 01-06-2006, 06:38 AM - Forum: சினிமா
- Replies (17)
|
 |
விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
ஜனவரி 06, 2006
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, இரவு 11 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மிஷன் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல சோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க டாக்டர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
கல்யாண மண்டப பிரச்சனை:
கோயம்பேட்டில் உள்ள தனது கல்யாண மண்டபத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்க முடிவு செய்ததால் விஜய்காந்த் மனச்சோர்வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டில் கட்டப்படவுள்ள அடுக்கு மேம்பாலத்தின் வரைபட நகலை தனக்கு வழங்க வேண்டும் என்று விஜயகாந்த், மத்திய நெடுஞ்சாலைத் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் 3 அடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை (அமைச்சர்: டி.ஆர்.பாலு) முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.
முதலில் திட்டத்திற்குத் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக 41 இடங்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். அதில் விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டப¬ம் ஒன்று.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நில உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை ÷நிõட்டீஸ் அனுப்பியுள்ளது. இந் நிலையில், நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தங்களது அசல் பத்திரங்களுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி நில உரிமையாளர்கள் 40 பேரும் தங்களது பத்திரங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று, ஆய்வுக்கென நியமிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகந்நாதனிடம் பத்திரங்களைக் கொடுத்தனர்.
ஆனால் விஜயகாந்த் மட்டும் நேரில் வரவில்லை. மாறாக அவரது சார்பில் 2 வழக்கறிஞர்கள் வந்திருந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், ஆண்டாள் அழகர் கல்யாண மண்டப சொத்து எனது (விஜயகாந்த்) பெயரிலும், எனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ளது. மேம்பாலம் கட்டுவதற்காக எனது திருமண மண்டபத்தின் எந்த இடத்தை கையகப்படுத்தப் போகிறீர்கள் என்பது இதுவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை.
பத்திரிகை விளம்பரம் மூலம் மட்டுமே இது எனக்குத் தெரிய வந்தது. எனக்கு எந்தவித நோட்டீஸும் வரவில்லை. நிலத்தின் உரிமையாளர் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதால் எனது சார்பில் வழக்கறிஞர்களை அனுப்பியுள்ளேன்.
மேம்பாலம் கட்ட எனது நிலத்தின் எந்தப் பகுதியை கையகப்படுத்தப் போகிறீர்கள், கல்யாண மண்டபத்தின் எந்தப் பகுதியை இடிக்கப் போகிறீர்கள் என்ற விவரம் அடங்கிய வரைபடத்தை என்னிடம் கொடுத்தால், அதைப் பரிசீலித்து, எந்தப் பகுதி மேம்பாலம் கட்டும் பகுதியில் வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்கிறோம்.
அதேபோல, மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை என்னிடம் கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மனுவுடன் எனது நிலம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட 17 ஆவணங்களின் நகல்களை உங்களின் பரிசீலனைக்காக தாக்கல் செய்துள்ளோம். விரைவில் எங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடிய பகுதியின் வரைபடம் மற்றும் பீல்டு மேப் ஆகியவற்றை தந்தால் நலமாயிருக்கும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
நன்றி : Thatstamil.com
http://thatstamil.indiainfo.com/news/2006/...vijaykanth.html
|
|
|
| நாங்கள் போருக்கு தயார்: பெண் விடுதலை புலிகள் பகிரங்கஅறிவிபபு |
|
Posted by: rajathiraja - 01-06-2006, 05:49 AM - Forum: தமிழீழம்
- Replies (17)
|
 |
<b>நாங்கள் சாக துணிந்து விட்டோம்; போருக்கு தயார் : பெண் விடுதலை புலிகள் பகிரங்க அறிவிப்பு </b>
கிளிநொச்சி: இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கு இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறினாலும், மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளன. பெண் விடுதலைப் புலிகள் பலர் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ராணுவத்துடனான போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் பொருட்டு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் "மாவீரர் தின'த்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் நடந்த நினைவு தின கூட்டத்தில் உரையாற்றிய புலிகள் தலைவர் பிரபாகரன், "தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த பிரச்னையில் தீர்வு காணப்படா விட்டால் புத்தாண்டு (2006) முதல் போர் தொடங்கும்' என்று எச்சரித்தார். புத்தாண்டு தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் முறையான போர் அறிவிப்பு வெளியிடப்படா விட்டாலும் இரு தரப்பும் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த டிசம்பரில் மட்டும் 39 ராணுவ வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி பலியாயினர். இந்த தாக்குதல்களுக்கு புலிகளே காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில், கடந்த திங்களன்று திரிகோண மலையில் உள்ள பல்கலை கழகத்தில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக புலிகள் அமைப்பு கூறியது.
இரு தரப்பும் அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், "பகிரங்க தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக' புலிகள் அமைப்பில் உள்ள பெண்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். மாலதி என்ற 28 வயது பெண் விடுதலைப்புலி கூறும்போது, ""எனது சக தோழர்களின் மரணமே எனக்கு மிகுந்த மன உறுதியை தந்தது. கடந்த 10 வருடங்களாக இயக்கத்தில் உள்ள நான் மீண்டும் போர் புரிய தயாராக உள்ளேன். தமிழ் மக்களின் விடுதலை அமைதி வழியில் கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி தர வில்லை. எங்களது தலைவர் தனது மனதை மாற்றிக்கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்தால் உடனே நாங்கள் தயாராகி விடுவோம். சாகத் துணிந்து விட்டோம். போருக்கு தயாராக உள்ளோம்'' என மிகவும் ஆவேசமாக கூறினார்.
இதே போன்று மற்றொரு பெண் புலியான 32 வயது ஜெயந்தி, ""என்னுடைய பயிற்சி காலம் கடுமையாக இருந்தது. ஆனால், முதல் தாக்குதல் மிகவும் எளிதானது. வட கிழக்கு கடல் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 1996ம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தினேன். நாங்கள் நன்கு பயிற்சி பெற்று மிகவும் தயாராக உள்ளோம். வெற்றி ஒன்றே எங்களது இலக்கு. நாங்கள் அவர்கள் (இலங்கை ராணுவம்) மீது இரக்கமோ மரியாதையோ காட்ட மாட்டோம்'' என்றார்.
தங்களுக்கு எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பது குறித்து தெரிவித்த பெண் புலிகள்,"அவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பணிகள்' குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 35 சதவீதம் பெண்கள் உள்ளனர். அவர்களது எண்ணிக்கை 18 முதல் 20 ஆயிரம் வரை இருக்கக் கூடும். அமைப்பில் புதிதாக சேரும் பெண்களுக்கு ஒரு வருட காலம் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். பல்வேறு வகையான ஏ.கே.47, மற்றும் துப்பாக்கிகள் உட்பட பல கருவிகளை இயக்கும் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் படை வீரர்களாக சேர்க்கப்பட்டு தாக்குதல் களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்
<b>நன்றி : தின மலர்.</b>http://www.dinamalar.com/2006jan06/imp6.asp
|
|
|
| கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி |
|
Posted by: Mathuran - 01-06-2006, 12:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>நாளை கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி</b>
தலை நகர் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் தமிழ்மக்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினரால் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறைகள், கைதுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்டனப் பேரணி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தியில் இடம்பெறும்.
மேலக மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டனப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, புதிய இடதுசாரி முன்னணி, புதிய ஜனநாயகக் கட்சி என்பன முழுமையான ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
மேலும், புகையிரத ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ஹிரு அமைப்பு, சமாதானத்துக்கான பெண்கள் அமைப்பு என்பனவும் இந்த கண்டனப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்வந்துள்ளன.
அதேநேரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இது தொடர்பாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் எந்தவொரு பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லையென்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகனேசனுடன் தொடர்பு கொண்டு இந்த கண்டனப் பேரணிக்கு தமது கட்சி முழுமையான ஆதரவு வழங்குமென்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தான் நேரடியாக இந்த கண்டனப் பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கண்டனப் பேரணி தொடர்பாக விசேட கூட்டமொன்று நேற்று புதன் கிழமை மாலை கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள சமூக சமய நடுநிலையத்தில் நடைபெற்றது.
இந்த விசேட கூட்டத்தில் மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன், பொதுச் செயலாளர் ந.ஜெயரட்ணராஜா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.என். ரவிராஜ், புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.தம்பையா, புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர் வீ.திருநாவுக்கரசு, சமாதானத்துக்கான பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தர் நிமல்கா பெனாண்டோ, மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் மாநகரசபை உறுப்பினருமான கே.ரி.குருசாமி, அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அரசியல் அமைப்பாளர் என்.சிவகாந்தன், இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் ஸ்ராலின் உட்பட பல தொழிற்சங்க பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிரான அனாவசியமான பாதுகாப்பு படையினரின் அடாவடித்தனங்களை நிறுத்துமாறு கோரி நாளை நடைபெறும் கண்டனப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றுபட்டு கலந்து கொண்டு தமது ஒற்றுமையையும் பலத்தையும் வெளிப்படுத்துமாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, கண்டனப் பேரணியை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மகஜர் ஒன்றும் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி சூரியன்.கோம்
|
|
|
| சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த ஓணான். |
|
Posted by: நர்மதா - 01-05-2006, 10:49 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- No Replies
|
 |
<img src='http://img425.imageshack.us/img425/3516/s15jj.jpg' border='0' alt='user posted image'>
சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த ஓணான்.
சரேலெனத் திரும்பினார் சந்திரோதயத்தார். கண்களைக் கசக்கி மறுபடியும் பார்த்தார்இ சந்தேகமே இல்லை...
வழவழப்பான தோற்றம்இ ஒவ்வொரு வளைவிலும் வெயில் பட்டுத் தெறிக்கும் மெர்க்குரி வெளிச்சம்.... அழகு ஜெகத்ஜோதியாக மின்னியது.
ஜில் ! ஜில் ! ஜிக்குமாலா ! இ எல்லோருக்கும் புரியும்படியாக நல்ல தமிழில் பேசிக் கொண்டார்.
அழகில் மயங்கி எவ்வளவு நேரம் நின்றாரோ தெரியவில்லை... இப்படி மயங்கினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்...
வேலிக்கட்டை ஓணான் போல சரக் சரக்கென தலையை ஆட்டினார்.
சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த குற்றத்திற்காக அவர் ஊரில் எத்தனையோ ஓணான்களைக் கொன்றிருக்கிறார். ஓணான்கள் போலவே தலையை சொடக் சொடக்கென ஆட்டியபடி கற்களை வீசிய தொட்டில் பழக்கம் இப்போது இந்தச் சுடுகாடுவரை ஆடிக்கொண்டே இருந்தது.
இனி இந்த நேரத்து உணர்விற்கு ஏதாவது பாடியாக வேண்டும்.
பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் நிறம் அந்த பான நிறம்....
ஆகா.... என்ன பொருத்தம்... அந்த அழகிய பியர் போத்தலின் பச்சை நிறமான தோற்றம்இ அதை உவிந்து இழுத்துள்ள பெண்ணின் சிவந்த இதழ்கள் பட்ட சாயம்இ மஞ்சள் நிறமாக எஞ்சியிருக்கும் அரைப் போத்தல் பியர்....
அந்த பியர் போத்தலை எடுத்து விற்று... பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்... முட்டைவிற்று பணக்காரியாக வர ஆசைகொண்டு தலையை அசைத்து எல்லாவற்றையும் உடைத்த பவளக்கொடியின் நினைவு வந்தது...
இதற்கிடையில் நேற்று மாலை டென்மார்க் தொலைக்காட்சியில் தோன்றிய ஒருவன் தெருவில் கிடந்த பியர் போத்தல்களை சேகரித்து விற்றுஇ ஒரு புத்தம் புதிய காரை வாங்கியிருப்பதாக பேட்டி கொடுத்திருந்தான். அதைப் பார்த்தபிறகுதான் அவருக்கு இந்தப்பரவசம்.
கால்நடையாகத் திரியும் தன் வாழ்விற்கும் இந்த பியர் போத்தலில் இருந்துதான் விடிவு கிடைக்கப் போகிறதா...
கார் லைசென்ஸ் இல்லாவிட்டாலும் நினைவுகள் அவரை ஒரு புதிய காரில் ஏற்றிப் பவனி பார்த்தன.
அந்தக் காரின் பக்கத்தில் திடீரெனத் தோன்றிய தங்கராசு அவருடன் பேசிக்கொண்டார்.
நான் சம்பளக் காசில் ஒரு சதம் எடுக்காமல் அதைச் சாமி அறையில் வைச்சுப் பூட்டி தீபம் காட்டுவன்...இ
அப்ப செலவுக்கு என்ன செய்வாய் ?
பைத்தியக்காரா .... எல்லாம் தெருவிலை கிடக்கிற பியர் போத்தலுகளை பொறுக்கி வித்துத்தான் வீட்டுச் செலவு... அந்தக் காசிலை மூண்டுதரம் நாட்டுக்கே போய் வந்திட்டனெண்டால் பாரேன்...
சரேல் ! இ கடிவாளத்தை இழுத்தார். நினைவு திரும்பியது. போத்தலை எடுப்பதற்கு ஒரு அடி முன்னால் நெருங்கினார்.
அநாதரவாகக் கிடந்த அந்த பியர் போத்தல் அவரை வா ! வா ! என்று அன்போடு அழைத்தது. ஒரு அடி முன்னால் வைத்தார்... அந்த நேரம் பார்த்து சிவப்பு விளக்கு எரிவதுபோல தூங்கிச் செத்த பஞ்சாமிர்தத்தார் நினைவு வந்தது.
சாய் ! பேரோடையும்இ புகழோடையும் இருந்த மனிசன்ரை வாழ்க்கையிலை வந்த சோகம் அப்படியாய் போச்சுது... அலுத்துக் கொண்டார்.
குடி புகைத்தல் பழக்கம் எதுவுமின்றி கோயில் குளமென்று அலைந்து திரிந்த பஞ்சாமிர்தத்தார் ஒரு நாள் குடித்துவிட்டு பியர் போத்தலோடை ஆடிக்கொண்டு போனதாக கதை பரவியதால் வந்த வினை.
சனம் பஞ்சாமிர்தத்தார்க்கு குடிகாரப்பட்டம் கட்டி மகிழஇ அதுதான் சந்தர்ப்பம் என்று பார்த்து கோயில் நிர்வாகத்தாலை மனிசனை கலைச்க... மனமுடைஞ்சு மனிசன் முழுக் குடிகாரனாகி தற்கொலை செய்து....
இதெல்லாம் தேவைதானா ?
கவட்டிலை கிடந்த ஒரு கட்டு உடைச்சதாலைதான் மனிசன் அப்பிடி ஆடி ஆடிப் போயிருக்கு.. கையிலை பியர் போத்தலும் இருக்க சனம் ரெண்டையும் சேர்த்து வசதியா முடிச்சுப் போட்டிருக்குது...
பியர் குடிச்சவனை விட்டுப்போட்டுஇ வெறும் போத்திலை தூக்கினவனை குடிகாரனாக்கும் சனத்தை நினைத்தபோது சந்திரோதயத்தாருக்கு தேகமெல்லாம் விதிர்விதிர்த்தது.
திடீரென எங்கோ ஓர் அசரீரி...இபைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு !இ
ஐயையோ இது எங்கேயோ கேட்ட பாடல் என்பதை நினைத்த போது மனதில் மறுபடியும் சிறிய துணிச்சல் உண்டானது. தாய்ப்பசுவின் குரல் கேட்ட கன்றாகி போத்தலை நெருங்கினார். கையில் இருந்த காரிக்கன் துணியில் நெய்யப்பட்ட அகிலாஸ் புடவைக்கடையின் சீலைப் பையை கச்சிதமாக உதறிக் கொண்டார்.
செல்லமாகப் பியர்ப் போத்தலைத் தூக்கினார்...
பதமான இளஞ்சூடு சற்று முன்தான் யாரோ அரை குறையாகக் குடித்துவிட்டு வைத்திருக்க வேண்டும்...
குலுக்கிப் பார்த்தார்.... சரியாக அரைப் போத்தல் அளவிற்கு இருந்தது... அதைக் குடித்து புதிய சாதனை படைக்க அவர் மனம் அவாவியது..
உதடுகளை ஒரு தடவை சின்னமேளமாக ஆடவிட்டார். இ நான் குடிக்காமல் இருந்தால் போல ஈழத் தமிழன் திருந்தவா போறான்... போடா போ...இ என்று தன்னைத் தானே திட்டினார். ஓசியென்றால் தமிழன் நஞ்சையும் குடிப்பான் என்ற தேசியகீதம் நினைவுக்கு வர அதையும் விரட்டிவிட்டு நாலு பக்கமும் பார்த்தார்.
வண்.... ரூ..... த்றீ.... போர்....
மடமடவென போத்தலில் இருந்த பியரை வாயில் சரித்தார்.
வாழ்க்கையில் முதல்தரமாகக் குடித்தாலும் அரைப் போத்தலையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தார். கடைசித் துளியையும் நக்கிவிட்டுஇ வெற்றுப் போத்தலை அகிலாஸ் கடைப் பைக்குள் போட்டுக் கொண்டார். மேலும் எங்காவது போத்தல் இருக்கிறதாவென கண்களை துளாவியபடி நடந்தார்.
நடக்க நடக்க வாய்க்குள் ஏதோ ஒரு நெடில் ... இந்த உப்புத்தண்ணியை ஏன்தான் குடிக்கிறாங்களோ ? வயிற்றைப் புரட்டியது...
அங்குமிங்கும் பதகளித்து ஓடினார்... சுனாமி தூக்கி மரத்தில் அடித்தது போல தேகத்தை ஏதோ ஒரு மொச்சை நெடில் தூக்கிச் சுழற்றியது.. வ்.... வாய்க்.... மஞ்சள் மஞ்சளாக சத்தி எடுத்தார். ஒருவித பாதாள நாற்றம் கிளம்பியது... கெட்ட மூத்திர நெடில்...
போத்தலை எடுத்து மணந்து பார்த்தார். சந்தேகமே இல்லை அவர் குடித்தது பியர் அல்ல மூத்திரம் கலந்த பியர்...
தலை சுற்றியது... வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். மனிச மூத்திரம் குடிச்ச நானே இந்த ஓட்டம் ஓடுறன் அப்ப போன பிறவியிலை ஓணான் மூத்திரம் குடிச்ச சிவபெருமான் என்ன ஓட்டம் ஓடியிருப்பாரென நினைத்தார்இ அந்த நேரத்திலும் அவருடைய குசும்பு போகவில்லை.
உலகம் எங்கையோ கிடக்க ஓணான்களுக்கு கல்லெறியிற எங்கடை சனத்தோடை சேர்ந்த பாவம்தான் இப்பிடிப் பிடிச்சு சிப்பிலி ஆட்டுதோ என்ற விசயத்தையும் யாருக்கும் சொல்லாமலே தனக்குள் நினைத்துக் கவலைப்பட்டார்.
மஞ்சள் கரைச்சுக் குடிச்சுஇ பேதிக்கக் குடித்துஇ வயிறு கழுவி ஒரு வாரத்தின் பிறகுதான் பழைய நிலைக்குத் திரும்பினார். இருப்பினும் அந்த நாற்றத்தை நினைக்கக் குமட்டலாகவே வந்தது.
இ சிவபெருமானே ! ஓணான்களைக் கொன்று உனக்கு நான் செய்த தொண்டுக்கு இதுதானா தண்டனை... ? இ கேவி அழுதார்.
பியர் போத்தலுக்குள் மூத்திரம் பெய்த ஓணான் யார் ? தமிழனா ? டேனிஸ்காரனா? கோபம் சிரசில் ஏறியதுஇ துப்பறியும் சிங்கமானார்.
மறுபடியும் அதே இடத்தை நோக்கி வந்தார்இ நோட்டம் விட்டார். இப்போதும் அந்த இடத்தில் ஒரு பியர் போத்தல்இ ஆனால் அது எறிந்து உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இதை யார் உடைத்தார்கள்... ஏன் உடைத்தார்கள்....
கிறீங்க்... ! கிறீங்க் ! மடியில் இருந்த கைத்தொலைபேசி அடித்தது.
உறலோ !
இ பியர் போத்தில் உடைங்சிருக்குமே ? இது என்ரை ஏரியா ! மவனே இஞ்சை வந்து பியர் போத்தில் பொறுக்கிற வேலையை விட்டிடு ! நேற்றுப் பொறுக்கின போத்திலை மரியாதையா எடுத்த இடத்திலையே வைச்சிடு...
வைக்காட்டி என்ன செய்வாய் ?
இப்பிடித்தான் எல்லா இடமும் போத்திலுகள் உடைஞ்சு கிடக்கும்... உன்னை வாழ விடமாட்டன்... என்னைத்தவிர வேறை ஒருதனையும் போத்தலெடுக்க விடமாட்டன் !
நீ ஆர்ரா பொறுக்கி !
இ யுயுப்பி... எப்படி மூத்திரம் ? உறி.... உறி.... இ போனைக் கட்பண்ணிவிட்டான். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
வேகமாக நடந்தார்.... வழியில் ஒரு பியர் போத்தல் கிடந்தது...
அதைத் தூக்கி நிலத்தில் சடாரென எறிந்தார்... போத்தல் உடைந்து நொருங்கிப் பறந்தது...
அப்போது பார்த்து கையில் ஒரு சிறிய மழைத்துளி விழுந்தது!
ஆகாயத்தைப் பார்த்தார்.
வானத்திலிருக்கும் சிவபெருமான் தமிழினத்தின் பெருமையை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாரா ஒருவேளை அழுகிறாரா அவரால் மட்டுக்கட்ட முடியவில்லை.
அலைகள்
|
|
|
| இங்கே ஒரு அதிர்ச்சி இருக்கு.. |
|
Posted by: vasisutha - 01-05-2006, 08:35 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (5)
|
 |
<img src='http://img336.imageshack.us/img336/3023/24vi.jpg' border='0' alt='user posted image'>
___________________________________________________________
<img src='http://img336.imageshack.us/img336/7817/35rt.jpg' border='0' alt='user posted image'>
__________________________________________________________
<img src='http://img336.imageshack.us/img336/3854/48iu.jpg' border='0' alt='user posted image'>
Thanks:
Vikatan.com
|
|
|
|