![]() |
|
உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர் (/showthread.php?tid=1594) |
உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர் - MUGATHTHAR - 01-06-2006 <b>மயிரிழையில் உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர்</b> பொலிஸாரின் துவக்குச் சூட்டில் கூடச் சென்றவர் படுகாயம் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து ஹவன்முறைகள் அற்ற ஜே.வி.பி.' இயக்கத்தின் தலைவரும் ஜே.வி.பி. இயக்க ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மைத்துனருமான கலாநிதி எஸ். சந்திரா பெர்னாண்டோ மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவருடன் காரில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்த தென்னாபிரிக்க வைத்தியரான ராஜேந்திரம் நடராஜா படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; கலாநிதி பெர்னாண்டோ தனது நண்பரான தென்னாபிரிக்க வைத்திய நிபுணர் ராஜேந்திரம் நடராஜாவையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இரவு விருந்தொன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளார். காலி வீதியால் பயணம் செய்து கொண்டிருந்த இவர்கள் காலி வீதியில் வாகன நெருக்கடி காணப்பட்டதால் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் வீதியால் திரும்பி கடற்கரை வீதியூடாக ஹில்டன் ஹோட்டலை வந்தடையும் நோக்கில் இராமகிருஷ்ண மிஷன் வீதியால் சென்றுள்ளனர். அச்சமயம் இராகிருஷ்ண மிஷனின் முன்பாக வீதிச் சோதனைச் சாவடியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இவர்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இவர்கள் வாகனத்தை நிறுத்தியபோது அருகில் வந்த பொலிஸார் காரின் கதவைத் திறக்குமாறு பணித்துள்ளனர். ஆனால்இ கதவைத் திறக்க மறுத்த சந்திரா பெர்னாண்டோ தான் எதுவித குற்றமும் செய்யாத காரணத்தினால் வாகனத்தை நிறுத்த முடியாது என கூறி காரின் யன்னல் கண்ணாடியை மூடிவிட்டு காரை வேகமாக செலுத்த முற்பட்டுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் காரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத் துப்பாக்கிப் பிரயோகத்தினால் தென்னாபிரிக்க வைத்திய நிபுணருக்கு வலது கன்னத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளைஇ பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதும் தனது காரை நிறுத்தாத சந்திரா பெர்னாண்டோ தனது நண்பரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்த்த பின்னரே காரை நிறுத்தியுள்ளார். இதேநேரம்இ அச்சமயம் அங்கு வந்த முச்சக்கரவண்டியொன்றில் ஏறிய பொலிஸார் காரைத் துரத்திச் சென்ற போதும் அவர்களால் காரை நிறுத்த முடியவில்லை. குறித்த கார் வண்டியில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தமக்கு தகவல் ஒன்று கிடைத்ததன் பேரிலேயே தாம் கார் வண்டியை நிறுத்த முயன்றதாகவும் ஆனால் வாகனம் நிறுத்தப்படாது தப்பிச் செல்ல முற்பட்டதாலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேரிட்டது எனவும் வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேநேரம் இது குறித்து தகவல் தெரிவித்த சந்திரா பெர்னாண்டோ தன்னைக் கொல்வதற்கு ஜே.வி.பி.யினர் முயற்சித்து வருவதாகவும் முன்னொரு தடவையும் தனக்கெதிராக ஜே.வி.பி.யினர் சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் இதனால் தான் தான் தனது வாகனத்தை நிறுத்தாது செல்ல முற்பட்டதாகவும் தெரிவித்தார். வாகனத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட இராணுவ வீரரும் பொலிஸார் இருவரும் வெள்ளவத்தை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காயத்திற்குள்ளான தென்னாபிரிக்க வைத்தியநிபுணர் நேற்று நள்ளிரவு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். thinakkural |