| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 316 online users. » 0 Member(s) | 313 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,294
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,048
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும் மட்டக்களப்பு தமிழர் பண்பாடு |
|
Posted by: மேகநாதன் - 01-13-2006, 05:22 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (2)
|
 |
[size=18]இக் கட்டுரையை இப்பதான்
ஈழநாதம்-மட்டக்களப்பு வார வெளியீட்டில் படித்தேன்.
குறித்த உதவி விரிவுரையாளர்
"மட்டக்களப்பை" ஆய்வுக்களமாகக் கொண்டு எழுதியிருந்தாலும்,
"முழுமையான" தேச விடுதலையை
முனைப்புடன் முன்னெடுக்கும் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விடையங்கள்தான்....
[i]ஊர் கூடித் தேர் இழுப்போம்....[/
<b>ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும் மட்டக்களப்பு தமிழர் பண்பாடு</b>
[i][b] சு.சந்திரகுமார்இ உதவி விரிவுரையாளர்
[b]பண்பாடு என்றால் ஆங்கிலத்தில் culture என அழைக்கப்படுகின்றது. பண்பாடு பற்றிப் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் முன் வைக்கப்பட்ட போதும் பின்வருபவை குறிப்பிடத்தக்கது. ''ஒரு மக்கட் கூட்டம் தமது சமூகஇ வரலாற்று வளர்ச்சியின் அடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதீக பொருட்கள் மத நடைமுறைகள்இ சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றினதும் தொகுதியாகும்’
ஒரு மக்கட் கூட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிஇ உற்பத்தி முறைமைஇ உற்பத்தி உறவுகள்இ கல்விஇ விஞ்ஞானம்இ இலக்கியம்இ கலைஇ நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்| இவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையின் வெளிப்பாடாகக் காணப்படும் பண்பாடு சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களால் கருத்தியல் ரீதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது நாமறிந்த விடயமாகும்.
இதனால் எமக்கு ஒரு பக்கப் பண்பாடுதான் தெரிய வருகின்றது. இது ஒரு அபாயமான செயலாக உள்ளது. பண்முகப்பட்ட பார்வையில் பண்பாடு கட்டியமைக்கப்படவில்லை என்றே கூறலாம். பண்முகப்பட்ட ஒரு மக்கட் பண்பாட்டை உருவாக்குவது இக்காலத்தின் தேவையாகும். அப்போதுதான் தெளிவான ஒரு மக்கட் பண்பாட்டைஇ அதன் தனித்துவத்தின் வேரை அறிந்து கொள்ள முடியும் என்பது சமூகவியல் உண்மையாகும்.
அடுத்து மாற்றம் பற்றிய விளக்கத்தை நோக்கும் போது மாற்றம் என்பது வரலாற்று ஓட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் மாற்றம் நிகழ்கின்றது. ஹெகல் இதனை ''இயங்கியல்'' என்பார். ஒரு இயக்கமானது முரண்பாடுகளின் அடிப்படையில் உருவாகின்றது என்பார். பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்ற மார்க்சியின் கூற்று இங்கு புலனாகின்றது. எனவே மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதன் மூலம் இரண்டு வகையான தாக்கமுண்டு. ஒன்று நன்மை மற்றது தீமை. இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றோம் என்பதனை ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கட்டமைப்பைப் பொறுத்து அமையும்.
இந்நிலையில் மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாடு பற்றிப் பார்ப்பது சிறப்பானதாகும். மட்டக்களப்புப் பண்பாடு மாறுவதற்குக் காரணம் பலவுண்டு. ஆனால் அதிகமான மாற்றம் நிகழ்வதற்கும்இ நிகழ்ந்து கொண்டிருப்பதற்குமுள்ள மிக முக்கியமான தற்போதைய காரணம் ஊடகங்களாகும். இந்த ஊடகங்கள் வர்த்தக நோக்குடையதாகவுள்ளது.
இது பற்றி மக்கள் மத்தியில் உள்ள கருத்தியல் ரீதியான கட்டமைப்பு ஆபத்தானது. இது உலகமயமாக்கல் என்ற தொனியில் தொழிற்படுகின்றது. முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் ஒரு சமூகத்தைச் சுய சார்பற்றஇ தங்கி வாழ்கின்ற சமூகமாக மாற்றுவதே உலகமயமாக்கலாகும். அதாவது முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் தங்களுடைய பண்பாடு சார்ந்த கருத்துக்களை மக்கள் மயப்படுத்த மூன்றாம் மண்டல நாடுகளின் சுய பண்பாடுகளை மழுங்கடிப்பது ஒரு நுகர்வுப் பண்பாடாக உள்ளது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் இச்செயற்பாடு தீவிரமாக நடந்து கொண்டு வருகின்றது.
அதுவும் சுனாமியின் தாக்கத்திற்குப் பிறகு அதன் உச்சம் தலை விரித்தாடுகின்றது. இதனால் தமிழ்ப் பண்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதனைக் காண முடியும். இந்த நிலையில் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் கூறியது எனக்கு ஞாபகம் வருகின்றது. ''விரைவில் நாம் கிரகம் தழுவிய பண்பாட்டைச் சந்திக்கப் போகின்றோம். அத்தகைய புதிய பண்பாட்டைக் கட்டித் தழுவி வரவேற்பதற்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்ற விழிப்புணர்ச்சி தேவைப்படுகின்றது'' என்றார்.
தமிழன் என்று சொல்ல முகம் கூசும் அளவிற்குத் தொழில்நுட்ப ரீதியான தாக்கம் தமிழ் அடையாளங்களை இழக்கச் செய்து பொதுவான பண்பாட்டை எம்மையறியாமலே கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது எமது மிக முக்கியமான கடமையாகும். மீடியாவின் பங்களிப்பு தமிழ் பண்பாட்டின் ஆணி வேரை அதன் அடையாளத்தைச் சிதைக்கின்றது.
சினிமாஇ தொலைக்காட்சிஇ தொலைபேசிஇ வீடியோஇ கணனிஇ இணையம்இ பத்திரிகைஇ வானொலி எனப் பல்வேறுபட்ட தொழில் நுட்ப சாதனங்களின் மூலம் நேரடியாகவும் சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதே மீடியாவின் தாக்கமாகும். மட்டக்களப்புக் கலாசாரத்தில் இதன் பாதிப்பைச் சிறப்பாகக் காண முடிகின்றது. இது உலக சந்தைகளைஇ உலக கலாசாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. நாம் விரும்பியோஇ விரும்பாமலோ மீடியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாடும் மீடியாவின் சூழலில் அகப்பட்டுள்ளது. தமிழர் கலாசாரத்தை மாற்றிவிடும் கருவியாகத் தொழிற்படும் மீடியாவே தமிழர் கலாசாரமாக மாறி விடுமோ என்ற அபாயம் ஏற்படுகின்றது. அடுத்து எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதனை மட்டக்களப்புப் பிரதேசத்தின் தமிழ்ப் பண்பாட்டின் சில கூறுகளை உதாரணமாகக் கொண்டு நோக்குவோம்.
கலைகளில் இதன் தாக்கம் அளப்பெரியதாகும். மட்டக்களப்புக் கலை வடிவங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் பல கலைகளை நிகழ்த்தியுள்ளனர்.
சுயமாகத் தயாரித்து சமூகத்தோடு உறவு கொண்டு இதனை நிகழ்த்தியுள்ளனர். இங்கு கூத்துஇ கரகாட்டம்இ கோலாட்டம்இ கும்மிஇ காவடியாட்டம்இ வசந்தன் எனப் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நிகழ்த்தி மக்கள் விடிய விடிய இருந்து பார்த்த மரபு நிலவியதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் மீடியாவின் தாக்கத்தினால் மட்டக்களப்பில் ஒவ்வொரு குடும்பங்களும்இ தனிமனிதர்களும் மூழ்கியுள்ளனர். இதன் காரணமாக எமது சுயசார் கலைப் படைப்புக்கள்இ எம் தேசிய அடையாளங்கள் அனைத்தையும் மறந்து சினிமாத் திரைப்படத்திலும்இ தொலைக்காட்சி நாடகத்திலும் உறவாடியுள்ளனர்.
குறிப்பாகத் தொலைக்காட்சி நாடகங்களே தமது வாழ்க்கை எனக் கருதி அதில் பின்னிப் பிணைந்துள்ளார்கள். இவர்கள் உடல் உள ரீதியாக ஆரோக்கியம் இழந்த நிலையில் உள்ளனர். பண்பாட்டின் அடியாகக் காணப்படும் கூத்து மறந்து யாருக்கும் தெரியாத நிலையில் இருக்கின்றது. கூத்து கீழ்த்தரமானது என்கின்றனர். இவர்களைப் பார்த்துப் பண்பாட்டு வேர் சிரிப்பது இவர்களுக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது.
இந்தளவிற்கு எம் தேசிய கலை வடிவம் மறந்து சினிமாவிலும் தொலைக்காட்சி நாடகங்கள்இ சினிமாப் பாடல்களிலும் ஒட்டி உறவாடுகின்றனர். விடிய விடிய தொலைக்காட்சியின் முன்னே இருக்கின்றனர். மீடியா இவர்களை ஆட்கொள்கின்றது என்று தெரியாத அளவிற்கு அது எம்மை முட்டாளாக்கிக் குறுகிய சிந்தனைக்குக் வைத்துள்ளது. இதனால் குடும்பத்தில்இ சமூகத்தில் அதிக பிரச்சினை எழுகின்றன. தமிழர் கலை அழிந்து போகும் கால கட்டத்தில் உள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அடுத்து தமிழர் வழிபாட்டு மரபிலும் மீடியாவின் தாக்கம் அளப் பெரியதாகும். மட்டக்களப்புத் தமிழருக்கென்று தனித்துவமான வழிபாடு உண்டு. ஆகமம் சாராத சடங்குடன் கூடிய வழிபாடே இங்கு தனித்துவமானது. இச்சடங்கிற்கு உயிரூட்டுவது உடுக்குஇ மத்தளம்இ பறைஇ தாளம் முதலானவைகளாகும்.
ஆனால் இன்று இத்தன்மை மாறி சினிமாச் சாயலால் ஆன பாடல்கள்இ கர்நாடக இசைகள்இ முதலானவையும் சடங்கில் தெய்வத்தை ஆட்டத் தபேலாஇ மேளம் முதலான இசைக் கருவிகள்இ பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சடங்கின் உயிர்த்தன்மை இல்லாமல் போகின்றது என்பது புலனாகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எம்மைக் கட்டியெழுப்பத் தயாராக இருக்க வேண்டும்.
மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாட்டில் அவர்களுடைய பழக்கவழக்கங்கள் தனித்துவமானவை. உணவுஇ உடைஇ விருந்தோம்பல்இ சோம்பறித்தன்மையற்ற வாழ்க்கை எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். உதாரணமாக உணவிற்காக குரக்கன்இ சோளம்இ உழுந்துஇ பயற்றைஇ பாசிப்பயறுஇ முதலானவற்றைக் கொண்டு பிட்டுஇ பலகாரவகைஇ இட்லிஇ கொழுக்கட்டைஇ கூழ்இ உருண்டை முதலானவற்றைத் தயாரித்தனர்.
விழாக்களிலும் இதனையே பயன்படுத்தினர். இது உடம்பிற்கும் மனதிற்கும் ஆரோக்கியமான உணவாக இருந்தது. மீடியாவினாலும் அதனால் ஆன விளம்பரங்களினாலும் தமிழர் விழாக்களில் கேக் வகைகள்இ சொக்லட் வகைகள்இ கொக்கோகோலா முதலானவைகளைப் பயன்படுத்துகின்றனர். இது இரசாயனத் தன்மை கலந்தது.
ஆரோக்கியமற்ற வாழ்விற்குத் துணை புரிகின்றது. இவையொரு பெரும் பண்பாட்டு மாற்றமாகும். மட்டக்களப்புச் சமூகம் தமது பண்பாட்டை இழக்கின்ற நிலைக்குச் சென்றுள்ளது. அடுத்து எம் அடையாளத்தைக் காட்டுவதில் துணை நிற்கும் ஒன்றாகக் காணப்படுவது ஆடையணிகலன்களாகும். வேட்டிஇ சால்வை என்பன தமிழ் அடையாளத்தைக் காட்டும் ஒன்றாக உள்ளது.
ஆனால் மீடியாவின் தாக்கத்தால் ஜீன்ஸ்இ ரீசேட்இ கோர்ட் என எமது சூழலுக்கும்இ காலநிலைக்கும் பொருந்தாத ஆடைகளை அணிந்து நோய்களைத் தேடுகின்றனர். எம் அடையாளத்தை இழக்கின்றனர். அதாவது இளைஞர்கள்இ யுவதிகள் அனைவரும் படையப்பா ரவுசர் என்றும்இ ரெட்வெட்டு என்றும்இ ஜோதிகா ளுவலடந என்றும்இ ரம்பா ர்யசை ளுவலடந எனக் கூறிக் கொண்டும் தங்களைத் தாங்களே ஏமாற்றுகின்றனர். இது சிறுவர்களின் மனதையும் பாதிக்கின்றது. இதன் மூலம் நாம் சுயசார்பற்ற சமூகப் பண்பாட்டைக் கண்டியெழுப்புவதைக் காணலாம்.
அத்தோடு மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாட்டில் சடங்கு முக்கியம் பெறுகின்றது. இவை சடங்கு பற்றித் தெரிந்த அனுபவம் வாய்ந்த பெரியவரிடம் கேட்டு நல்ல நாள் பார்த்து உயிர்த்துடிப்புடன் நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் வீடியோக்காரனே சடங்கு நிகழ்வதற்கு நாள் குறிப்பவனாகக் காணப்படுகின்றான். அவன் எப்போது விடுமுறையாக இருப்பானோ அன்றைய நாளையே குறிக்கின்றனர்.
இந்த நிலையில் வீடியோவின் ஆதிக்கம் எந்தளவிற்கு உயர்ந்துள்ளது என்றும்இ எம் சமூகத்தில் பெரியோரை மதிக்கும் பண்பு மாறியுள்ளது என்றும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அத்தோடு திருமணச் சடங்குஇ பூப்புனித நீராட்டு விழா போன்றவற்றில் அன்றைய கால கட்டத்தில் அச்சடங்குகளுக்கு வந்திருப்போர் அன்றைய கதாநாயக்கர்களை வாய் நிறைய வாழ்த்துவர்.
அது ஆத்ம திருப்தியாக இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாமல் வீடியோவிற்கு முகம் காட்டுபவர்களாகவே இருக்கின்றோம். உள்ளுணர்வாக வாழ்த்திய தன்மை மாறி வீடியோவிற்காகச் செயற்கைத் தனமாக ஆத்ம திருப்தியற்ற தன்மையில் வாழ்த்துகிறோம். பெரியோரை மதிக்கும் நிலையும் இல்லை.
இவ்வாறான செயற்பாடுகளினால் மரபு ரீதியான எம் பண்பாட்டை இழக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்தஸ்த்துஇ கௌரவம்இ நாகரிகம் என்ற நிலையில் எம் தமிழ்ப் பண்பாடு வணிகப் பண்பாடாக மாறியுள்ளது.
இவ்வாறாக மட்டக்களப்புத் தமிழர் பண்பாடு மீடியாவின் தாக்கத்தால் பாதிப்புறும் தன்மையினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் நாம் சிந்திப்பவர்களாகஇ போலித்தனமற்றவர்களாக இருக்க வேண்டும். இந்துக் கிரகமயமாதல் கால கட்டத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தொழில் நுட்ப அறிவியல் யுகத்தில் மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவமான சுய அடையாளங்கள் மாறிப் போகாமல் காப்பாற்ற வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எமக்குரிய தமிழ்ப் பண்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக உள்ளோம்
|
|
|
| மதியண்ணாவின் "கண்ணம்மா" |
|
Posted by: தூயா - 01-13-2006, 02:02 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (21)
|
 |
[size=16][b]மதியண்ணாவின் "கண்ணம்மா"
[size=13]இனிய ஒரு காலை நேரம். என்னை பொருத்த வரைக்கும் நன்றாக தூங்கும் பொன்னான காலம். கவலைகள், யோசனைகள் அற்ற இனிமையான பத்து வயதிற்குள் நான் காலடி எடுத்து வைத்திருந்தேன்.
"கண்ணம்மா..கண்ணம்மா.."
இந்த அம்மாவுக்கு வேலையே இல்லையா? தூங்க விடமா எழுப்புறாங்களே!!
"கண்ணம்மா..."
இது மதி அண்ணாவின் குரல் ஆயிற்றே. மதி அண்ணா என்றாலே எனக்கு ஒரு சந்தோசம் தான்.
எங்கள் வீட்டுக்கு முன்னால் தான் அண்ணாக்களின் முகாம் இருந்தது. நான் பிறந்ததில் இருந்து எனக்கு தெரிந்தது எல்லாம் அண்ணாக்களை தான்.
நாட்டு பிரச்சனையால் உறவுகள் எல்லம் இடம் பெயர்ந்து செல்ல தொடங்கிய கால கட்டம். உறவுகளை விட உயிராய் எமை காக்கும் அண்ணண்களை தான் நான் அதிகம் நேசித்தேன்..நேசிக்கிறேன்.
மதி அண்ணா எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இங்கு தான் இருக்கிறார். நல்ல உயரம், கூர்மையான கண்கள். துவிச்சக்கர வண்டியில் போகும் போதெல்லாம் பார்த்து இருக்கிறேன். கண்கள் நேரே வீதியை பார்த்தாலும் சுற்றிவர நடப்பதை கவனித்து இருப்பர். (நான் வெளியே செய்யும் குளப்படி எல்லம் இப்டி தான் அவருக்கு தெரிய வருவது).
நன்றாக பாடுவார், கவிதை சொல்லுவார். பாரதி கவிதைகள் என்றால் அப்படி ஒரு ஈடுபாடு.
"மதிண்ணாட அம்மா எங்க? அப்பா எங்கே?" என நான் சின்னனிலே கேட்டதுண்டு.
"எனக்கு எல்லாமெ நீ தானே கண்ணம்மா" என பதில் சொல்லுவார். அந்த வயதில் அதற்கு மேல் நானும் கேட்டதில்லை. பின்னர் அம்மா கூற கேட்டு இருக்கிறேன், அண்ணாவிற்கு யாருமே இல்லையாம் எங்களை தவிர.
"கண்ணம்மா இன்னும் நித்திரையால எழும்பலையா அக்கா?" மதிண்ணாதான், அம்மாவிடம் கதைக்கிறார்.
என்னுடைய மதிண்ணாவை விட தூக்கம் பெரிதா என நினைத்ததால், படுக்கையை விட்டு எழுந்து மதிண்ணாவை தேடி முற்றத்துக்கு சென்றேன்.
மதிண்ணாவிடனும் சரி,மற்ற அண்ணக்களும் சரி வீட்டுக்குள் வரமாட்டார்கள். நாங்கள் எவ்வளவே கெஞ்சியும் பயனில்லாமல் போகவே. முற்றத்திலேயெ இருக்கைகள், மேசை அதற்கு ஒரு நிழல் தர குடை என அமைத்து இருந்தார் எனது தந்தை.
வாசல் படியில் நின்று கொண்டு மதிண்ணாவை பார்த்து சிரித்தேன்.
"வணக்கம் கண்ணம்மா" என கூறி அழகாய் புன்னகைத்தார்.
"வணக்கம் மதிண்ணா" என கூறி ஓடி சென்று அவரின் முன் இருந்த மேசையில் ஏறி உர்டார்ந்து கொண்டேன்.
"மதிண்ணா மதிண்ணா மீன் தொட்டி எப்ப செய்து தருவிங்க?" என தூக்க கலக்கத்திலும் எனக்கு வேண்டிய விடயத்தை பற்றி கேட்டேன்.
"அதுக்கு தானே வந்து இருக்கிறேன்" என கூறி ஒரு சின்ன பெட்டியை தூக்கி நான் இருந்த மேசைக்கு மேல் வைத்தார்.
"அய்ய்ய் மதிண்ணா என்டா என்னுடைய மதிண்ணா தான், இருங்க கண்ணவை கூட்டி வாறேன்" என கூறி சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள பக்கத்துவீட்டுக்கார
நண்பன் கண்ணண் வீட்டிற்கு செல்ல ஆயுத்தம் ஆனேன்.
மேசையில் இருந்து என்னை இறங்க விடாமல் "அது பிறகு போகலாம் நாங்கள் இப்ப கதைப்பம். இன்டைக்கு கண்ணம்மாவோட தான் மதிண்ணா சாப்பிட போறேன்"
"அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் உண்மையாவா மதிண்ணா??" எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மதிண்ணாவை என்னுடம் சாப்பிட அழைத்த போதெல்லாம் தட்டி கழித்தவர். இன்று தானே சாப்பிடலாம் என கேட்டால் ஆச்சர்யமாக இருக்காதா??
"அம்மா சமைக்கிற வரைக்கும் நாங்கள் கதைச்சு கொண்டு இருப்பம்"
"ஓம் மதிண்ணா இந்த முறை நாங்கள் பட்டத்துக்கு லைற் போடுவமோ? ரவி போட போறானாம், அதைவிட நாங்கள் நல்லா செய்யவேணும்..என்ன?"
"அதுக்கேன்ன செய்திட்டா போச்சு. இதென்ன தலை முடி எல்லம் இப்படி ஓடி போய் சீப்பு எடுத்து வாங்கோ" என மதி அண்ணா கூற, மறுகணமே ஓடி சென்று சீப்போடு நான் வர,
"இன்டைக்கு அண்ணா தலை இழுத்துவிடுறன், ஆனா கண்ணம்ம இனிமேல் நீங்களே பழக வேணும்" என கூறி எனக்கு தலை வாரிவிட்டார்.
நான் பல் துலக்கி முகம் கழுவி வரவும் அம்மா சமைத்துமுடிக்கவும் சரியாக இருந்தது.
"கண்ணம்மா அண்ணாவுக்கு கரைச்சல் குடுக்காம சாப்பிட வேணும்" இது என்னுடைய தாயார். எப்பவும் எதாவது சொன்னால் தானெ அம்மாக்கு சரி!!
ஆனால் அம்மாவை குறை சொல்ல கூடாது. வீட்டுக்கு ஒரு பிள்ளை நான். பெரியம்மாக்களின் பிள்ளைகள் அனைவரும் ஆண்கள் தான். எனக்கு எல்லா இடமும் தனி மரியாதை தான். சின்னனில காய்ச்சல் வந்து கஸ்டபட்டனானாம். எல்லாம் சேர்ந்து எனக்கு சின்னனில இருந்து செல்லம் கூட தான். அதனாலேயே நான் கொஞ்சம்...கொஞ்சமென்ன ? நிறையவே குளப்படி தான். சொல்லு கேக்கிற பழக்கம் என்றாலே எனக்கு என்ன என்று தெரியாது.
"பரவாயில்லை அக்கா" என மதிண்ணா சொல்ல, "வவவவே இப்ப கேட்டிங்களோ அம்மா? மதிண்ணா எப்பவும் என்ட பக்கம் தான்"
"மதி, இவளுக்கு "கண்ணம்மா" என்று நீ பெயர் வைத்து இருக்க கூடாது. "வாயாடி" என்பது தான் நல்ல பொருத்தம். ஏதோ அண்ணணாச்சு தங்கை ஆச்சு" என கூறி அம்ம நகர, அண்ணாவும் நானும் சாப்பிட்டு முடித்தோம்.
ம்ம்ம் சொல்ல மரந்திட்டனே, எனது இயற்பெயர் "காவ்யா". மதியண்ணா வைத்த பெயர் தான் "கண்ணம்மா". பாரதியின் ரசிகன் ஆயிற்றேன். பின்னர் எனது இயற் பெயர் மரந்து போக நான் "கண்ணம்மா" ஆகிவிட்டேன் அனைவருக்கும்.
"மதிண்ணா பிறகு வாறன். இப்ப மீன் தொட்டி காட்ட கண்ணனை கூட்டி வர போறேன்" என நான் கூறவும் "சரி ஆனா போக முதல் ஒரு தடவை எங்கட குடும்ப பாட்டு சரியா?
அதென்ன குடும்ப பாட்டு என்று கேக்கிறீங்களா? சின்னனில மதியண்ணா சொல்லி தந்த ஒரு பாட்டு தான். நாங்க எப்ப கண்டாலும் முதலில் அதை தான் பாடுவது வழக்கம்.
"சரி", என நான் கூற அண்ணாவின் கைகளை பிடித்து கொண்டு...
" I love you
You love me
We are a big family
With a great big hug
and
Kisses me to you
Wont u say you love me too?""
பாடி முடித்துவிட்டு மேசையில் இறங்கி ஓடி போன என்னை "கண்ணம்மா" என மதிண்ணா அழைக்கவும் திரும்பி பார்த்தேன். சிரித்தேன் "ஓம் மதிண்ணா"
"இது போது எனக்கு, நான் போய்ட்டு வாறேன் கண்ணம்மா"
"வேலையோ? மாமாவை பார்க்க போறிங்க்ளோ?" . சின்ன வயசில அண்ணக்களின்ட பொறுப்பளர்களை நான் "மாமா" என்று தான் அழைப்பது வழக்கம்.
"ஓம் அண்ணா போய்ட்டுவாறன்" என மதி அண்ணா சொன்னவுடன், அதற்கு மேல் பொறுமை இல்லாமல் கண்ணணை தேடி போய்விட்டேன்.
அன்று முழுவதும் மதிண்ணாவை காண கிடைக்கவில்லை. ஆனால் என்னிடம் சொல்லி தானெ மாமாவை பார்க்க போனார். அதற்கு மேல் யோசிக்க எனக்கு அன்று
வயசிருக்கவில்லை.
மறு நாள் காலை நான் நித்திரை விட்டு எழும் நேரம், கண்ணணின் அம்மாவின் குரல் "ராஜி ஆமிட படகை அடிச்சிருக்கினம் போல. எங்கட காம்பில இருந்து தான் பெடியள் போனதாம். கூட பழகின பிள்ளையள். மனசு அடைக்குது"
இதே போல அம்மாவும், கண்ணனிண் அம்மாவும் பல தடவைகள் பேசி இருக்கினம். அப்பொழுது கூட எனக்கு அது பெரிதாக தெரியவில்லை.
போராட்டம் என வரும் போது கண்ணீருக்கு இடமில்லை, வீரத்திற்கு தான் இடம் என என் மதியண்ணா எப்பொழுதும் சொல்வதுண்டு. அதை கேட்டு வளர்ந்த எனக்கு அண்ணாக்கள் மாவீரர் ஆகும் போது அழுகை வருவதில்லை.
அன்றும் அப்படி தான், போனது என் மதியண்ணா தான் என தகவல் வந்த போது எனைவரும் அழுதார்கள். எனக்கு ஏனோ அழுகை வரவில்லை. அது எனோ எனக்கு இன்று வரை புரியவுமில்லை.
முதலில் என்ட மதியண்ணா மாவீரர் என நினைத்த போது பெருமை தான் மேலோங்கி நின்றது.
பின்னர் நான் வளர வளர தான் மதியண்ணாவின் பிரிவால் கஸ்டபட்டேன். பல இரவுகள் அழும் என்னை பார்த்து "அண்ணா பார்த்து கொண்டு தானே இருப்பான். கண்ணம்மா அழுவது மதிக்கு பிடிக்கது தானே?" அம்மவின் அரவணைப்பில் சற்றே ஆறுதல் அடைவேன்.
அது தானே நான் எதற்காக அழ வேண்டும்? மாவீரர்கள் எப்பொழுதும் சாவதில்லை. மரணம் அவர்களை நெருங்குவதில்லை. மதியண்ணா கடவுளாகிவிடார். கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் என்னுடம் தான் என்றும் இருப்பார். என்னில் ஒரு நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது.
போரின் தாண்டவத்தில் எத்தனையோ இடங்கள், எத்தனையோ நாடுகள் எங்கு போனாலும் நான் எடுத்து செல்வது மதியண்ணாவின் மீன் தொட்டிதான்.
அன்றிலிருந்து இன்று வரை எங்கட வீட்டு சாமிபடங்களுடம் மதிண்ணாவின் படமும் வந்தாகிவிட்டது. எங்களை காப்பவன் தானே சாமி !!
கதை இங்கு முற்று பெற, மாவீர புகழ் தொடர்கிறது.
நினைவுகளில் மூழ்கியபடி
தூயா
|
|
|
| தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் |
|
Posted by: AJeevan - 01-13-2006, 01:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'><b>தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள்</b>
பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களையும் சிரேஷ்ட செய்தியாளர்களையும் தனது அமைச்சுக்கு அழைத்து சிரேஷ்ட பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து ஆராய வேண்டிய அளவுக்கு அந்த விவகாரம் உயர்மட்டத்துக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் ஊடகவியலாளர்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் யாப்பாவுக்கு விளக்கியதையடுத்து, எதிர்காலத்தில் அத்தகைய துரதிர்ஷடவசமான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார். தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் பொலிஸார் அல்லது படையினர் தரப்பில் அதிகார துஷ்பிரயோகம் அல்லது அத்துமீறல்கள் இடம்பெறுமானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் காலங் கடந்தென்றாலும், இந்தளவுக்கு அக்கறை காட்ட முன்வந்தமைக்காக அமைச்சர் யாப்பாவுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
தேடுதல் வேட்டைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் மற்றும் படையினர் நடந்து கொள்வதில் காண்பிக்கின்ற ஒரு விசித்திரமான போக்கை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. தலைநகரில் உள்ள முக்கியமான ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சகலருக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பிரத்தியேக அடையாள அட்டைகள் (Media Accreditation) வழங்கப்பட்டிருக்கின்றன. சோதனை நிலையங்களில் அல்லது தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் அந்த பிரத்தியேக அடையாள அட்டைகளை காண்பிக்கும் போது அவற்றை பொலிஸாரும் படையினரும் அலட்சியம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பொலிஸாரினதும் படையினரினதும் தொப்பிகளில் அல்லது சீருடைகளில் காணப்படுகின்ற அதே அரசாங்க இலச்சினை ஊடகவியலாளர்களின் அட்டைகளிலும் இருப்பதைக் கூட அவர்கள் பொருட் படுத்தாத பல சந்தர்ப்பங்கள் குறித்து தமிழ் ஊடகவியலாளர்கள் முறையிட்டிருக்கின்றார்கள். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரின் கையொப்பத்துடனான அந்த அடையாள அட்டைகளையே படையினர் நம்பகத்தன்மையுடன் நோக்கத் தயாரில்லை என்றால் தமிழ் ஊடகவியலாளர்கள் என்ன செய்ய முடியும்?
தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டைகளின் மாதிரிகளை பொலிஸாருக்கும் படையினருக்கும் காண்பித்து அவர்கள் ஊடகவியலாளர்களை எளிதில் இனங் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் யாப்பாவுடனான தமிழ் ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு வருடாந்தம் ஊடகவியலாளர்களுக்கு தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற இந்த பிரத்தியேக அடையாள அட்டைகளை தலைநகரில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸாரிலும் படையினரிலும் பெருமளவானோர் அறியாமல் இருப்பது மிகவும் விசித்திரமான ஒன்றாகும். இந்த அடையாள அட்டைகளை காண்பிக்கும் பட்சத்தில் ஊடகவியலாளர்களை உரிய முறையில் இனங்கண்டு அவர்கள் தங்கள் கடமைகளை இடையூறின்றித் தொடருவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை இனிமேலாவது தாமதமின்றி அமைச்சர் யாப்பாவும் உயர் பொலிஸ் மற்றும் படையதிகாரிகளும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் ஊடகவியலாளர் எதிர் நொக்குகின்ற இத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் உட்பட பொதுவில் ஊடகவியலாளர்களுக்கு நேருகின்ற இன்னல்களைக் கண்டித்து இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பேரணியொன்று நடைபெறவிருக்கிறது சுதந்திர ஊடக இயக்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருக்கும் இந்தப் பேரணியில் ஊடக சமூகத்தவர்களும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் மீதான கெடுபிடிகளை முடிவுக்குக் கொண்டுவரப் போராடும் ஊடகவியலாளர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
-தினக்குரல்</span>
|
|
|
| புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு |
|
Posted by: வினித் - 01-12-2006, 11:49 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப மகிந்த முடிவு!
[வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 18:15 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
இலங்கை அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதற்காக அமைச்சர்கள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
சுமார் 10 அமைச்சர்களை இந்த வெளிநாட்டுப் பயணத்தில் அனுப்புவதற்கு மகிந்த தீர்மானித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்தும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதே இந்த பயணத்தின் நோக்கம் என்றும் அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள நாடுகளுக்கு இந்த அமைச்சர்களை அனுப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்
|
|
|
| Tamil Journalists 'intimidated' |
|
Posted by: ஜெயதேவன் - 01-12-2006, 07:49 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Be it Sinhala – be it Tamil- it's a news paper-keep your hands off", hundreds of journalists shouted in front of the Fort railway station in the capital on Thursday.
Several Tamil journalists have been detained and questioned during search operations in Colombo and the suburbs.
A protesting Tamil journalist speaking to Elmo Fernando said that the police and security forcers disregard the accreditation cards provided by the Director of Information.
Dhanaraj Of Thalam FM said, “the authorities say that these accreditation cards could be forged easily, but that's not an acceptable reason to harass Journalist”
President of the Sri Lanka Working Journalists Association, Sanath Balasuriya said that the security forcers are using emergency regulations to harass Tamil journalists.
Responding to a question at the cabinet press briefing media Minister Anura Priyadarshana Yapa said that the probleam has been already resolved with discussions with editors of Tamil News papers
He said “I don't see any purpose of these demonstrations”
Sunanda Deshapriya, convener of the Free Media Movement said “All governments give empty promises when it comes to protecting journalist ,not a single perpetrator has been punished although so many Journalist have been assassinated".
The Sri Lanka Working Journalists Association, Sri Lanka Tamil Media Alliance, Sri Lanka Muslim Media Forum, Media Employees Trade Union Federation and Free Media Movement that organised the protest say that security forces had assaulted Tamil media persons who were covering a demonstration in Jaffna recently and were not accepting their media accreditation card.
They also alleged that photographers of two Tamil dailies have been subjected to inquiry for taking photographs of Tamil people when they were arrested and detained in Colombo police stations.
Security forces searched offices of two Tamil dailies published in Jaffna recently, said a press release issued by these five media associations Monday.
http://www.bbc.co.uk/sinhala/news/story/20...12_journo.shtml
|
|
|
| மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளும் திடீரென இராணுவத |
|
Posted by: Vaanampaadi - 01-12-2006, 07:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வியாழன் 12-01-2006 22:53 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்]
மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளும் திடீரென இராணுவத்தினரால் சுற்றி வளைப்பு.
மட்டக்களப்பு நகரும் மற்றும் புறநகர் பகுதிகளும் இன்று மாலை சிறிலங்கா படையினரால் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தப்பட்டதுடன். கடுமையான சோதணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
வியாழன் அன்று மாலை வவுனியாவில் சிறிலங்கா கடற்படையினர் மீது இனம் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து மட்டக்களப்பில் மலை 4.30 மணியலவில் மட்டக்களப்பு நகர் பகுதியில் இராணு;ம் பொலிஸ் கூட்டாக சேர்ந்து சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரச அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என வேன் மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டி மற்றும் வீதியால் சென்றவர்கள் என பலரும் கடுமையான உடல் சோதணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆண்களின் மழைக்கவசம் கழற்றி சோதணையிட்டனர்.
இதனால் காரியலயத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த அனைத்து அரச ஊழியர்களும் பொதுமக்களும் பெரும் அசௌகரியத்தினை எதிர் நோக்கியுள்ளார்கள்.
இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .ஜெயானந்தமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு இராணுவ தலைமையகத்துடன் தொடர்வு கொண்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தினை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்;டக்களப்பில் அண்மைக்காலமாக நகர்புறங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்ளிலும் தொடர்ச்சியாக இனம் தெரியாத ஆயுதபாணிகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையடுத்து மாவட்டத்தின் பாதுகாப்பினை அதிகரிக்கும் முகமாக இராணுவம் பொலிசார் குவிக்கபபட்டுள்ளார்கள்.
எனினும் நகர் பகுதியில் ஆங்காங்கே கைகுண்டு வீச்சும் துப்பாக்கி சுட்டு சம்பவங்களும் இடம் பெற்றதாகவே உள்ளது. இராணுவம் பொலிசாரினால் சம்பந்தப்பட்ட ஆயுதபாணிகளை கைது செய்யாது அப்பாவி பொதுமக்களை சந்தேகத்தின் பெயரி;;ல் தொடர்ந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றார்கள்.
தற்போது பண்டிகைக்காலம் என்பதால் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பெருமளவான பொதுமக்கள் சந்தைக்கு பொருள் கொள்வனவுக்காக வரும் வேளையில் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் வரும் இளைஞர் யுவதிகள் கடும் சோதணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
மட்டக்களப்பு நகர் பகுதி மற்றும் சுற்றுப்புறங்களின் வீதியால் சென்றவர்கள் அணைவரும் கடும் சோதணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். வீதியின் இருமருங்கிலும் தேடுதல்.
இன்று மாலை 4.00 மணியலவி;ல் மட்டக்களப்பின் தாண்டவன்வெளி சந்தி புதுபாலத்தின் சந்தி அரசயடி சந்தி மத்திய வீதி சந்தி ஆகிய இடங்களில் இராணுவம் பொலிசார் கூட்டாக சேர்ந்து வீதியால் சென்ற அரச அதிகாரிகள் பாதசாரிகள் என ஆண் பெண் என கடும் சோதணை நடவடிக்கையினை மேற்கொண்டார்கள்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பில் தொடர் படுகொலைகள் ஆயுத குழுக்களாலும் இனம் தெரியாத ஆயுதபாணிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த இராணுவக்கட்டுபாட்டு பகுதிக்கு வருகின்ற அப்பாவி பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் என சோதணைக்குட்படுத்துவதும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்கள்.
தற்போது பண்டிகைக்காலம் என்பதால் நகர்பகுதிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான் சோதணைகள் மற்றும் இராணுவ கெடுபிடிகளினால் பொதுமக்கள் மத்தில் பெரும் அச்சத்தினை எதிர் நோக்கியுள்ளார்கள்.
Pathivu
|
|
|
| தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது |
|
Posted by: Vaanampaadi - 01-12-2006, 07:36 PM - Forum: கணினி
- Replies (11)
|
 |
வலையோடி எனும் பெயரில் தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது
Written by Pandara Vanniyan Thursday, 12 January 2006
தமிழில் முதல் இணைய உலவி மென்பொருள் (internet browser) வெளியிடப்பட்டுள்ளது.வலையோடி எனும் பெயரில் கடந்த புதன்கிழமை சென்னையில் இந்த இணைய மென்பொருள் வெளியிடப்பட்டது.ஆங்கிலம் அல்லாத பேச்சு மொழியை உடைய பயனாளர்கள் எண்ணற்ற மொழிகளில் உள்ளனர் அவர்களிற்கு இந்த மென்பொருள் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று இவ்மென் பொருளை உருவாக்கிய Panacea Dream Weavers Software Private Limited அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மென்பொருள் ஆங்கில மொழியினைக் கூட தமிழுக்கு மாற்றவல்லது என்றும் இதன் மூலம் பயனாளர்களின் அதிகமான பயன்பாட்டிற்கு இது வழிசமைக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது முற்று முழுதான இலவசமான மென்பொருளாகவே வெளியிடப் பட்டுள்ளது.அது தவிரவும் தங்களது இந்த முயற்சியில் ஆர்வலர்கள் யாரும் பங்கெடுத்து இந்த மென்பொருளை செம்மைப்படுத்துவதனை தாம் வரவேற்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இது ஆங்கிலத்தை தமிழுக்கு மாற்றினாலும் இதில் 70 வீதமான சாத்தியமே உள்ளது என்று இந்த மென்பொருள் தயாரிப்பில் புலவன்,பாலம்,தமிழ்ஒளி,முகவரி,பதிப்பு,இது தவிரவும் வர்த்தக நோக்கமுள்ளவர்களுக்கு ஏற்றவகையில் செல்வம் என்ற மென்பொருள் உள்ளடங்கலான பத்து மெனபொருட்தொகுப்பினையும் அவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
Sankathi
|
|
|
| கிளைமோர் தாக்குதலை அடுத்து ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் |
|
Posted by: Vaanampaadi - 01-12-2006, 07:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
வியாழன் 12-01-2006 23:38 மணி தமிழீழம் [நிருபர் கோபி]
<b>வவுனியா கிளைமோர் தாக்குதலை அடுத்து ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் காயம்.</b>
வவுனியா கிளைமோர் தாக்குதலை அடுத்து இராணுவத்தினரின் தாக்குதலில் ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் காயம்.
மன்னார் மதவாச்சி வீதியில் செட்டிக்குளத்திற்கும் அடம்பன்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியான சிலுவைச் சந்தியில் இன்று மாலை 4.10 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 10 கடற்படையினர் கொல்லபட்டதோடு மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலை அடுத்து சிறீலங்கா கடற்படையினர் திருப்பித் தாக்கியதில் ஒரு பொதுமகன் உயிரிழந்ததோடு மேலும் இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் மருதமடு என்ற கிராமத்தைச்சேர்ந்த ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Pathivu
|
|
|
| பலவீனமான மகிந்த உருவாக்கிய பலமான இனவெறிக்கட்டமைப்பு |
|
Posted by: நர்மதா - 01-12-2006, 07:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறிலங்காவின் சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்று 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வருதல் வேண்டுமென விடுத்த அழைப்பு மட்டுமே. இவ்அழைப்பு ஒன்றோ அன்றி இரண்டோ அதற்கு மேற்பட்ட தடவையோ அவரால் விடுக்கப்பட்டிருக்கலாம்.
இதேவேளை இவ் அழைப்புடன் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிபந்தனைகள் இணைக்கப்பட்டதொன்றாக வராதுவிடினும் பேச்சுவார்த்தை, தொடர்பான நிபந்தனைகளாக ஆசிய நாடொன்றிலேயே பேச்சுவார்த்தை, யுத்த நிறுத்த உடன்;பாட்டில் மாற்றங்களைச் செய்தல் என்ற நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அத்தோடு, நோர்வே மத்தியஸ்துவத்திற்கு மாறாக வேறு நாடு ஒன்றைத் தெரிவு செய்தல் குறித்த பேச்சுக்களும் அரச தரப்பிலிருந்து வெளிவந்த வண்ணமிருந்தது.
ஆனால், தோல்வியில் முடிந்த இந்திய விஜயத்தின் பின்னர் நோர்வே அரசை ஏற்பாட்டாளராக பணியாற்;றுமாறு சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பினும், நோர்வேக்கு எதிரான உணர்வுகள் ஆட்சியாளர் மட்டத்தில் நிலவுவதாகவேயுள்ளது. இதனை நோர்வேயும் நன்கு புரிந்து கொண்டுள்ளதன் வெளிப்பாடாகவே ஏற்பாட்டாளராகப் பணியாற்றுவதற்கு நோர்வே சில நிபந்தனை முன்வைத்துள்ளதோடு, இம்முயற்சியைத் தொடர்வதற்குக் கால அவகாசத்தையும் எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த வகையில் விடுதலைப் புலிகளைப் பேச்சிற்கு வருமாறு அழைப்பு, நோர்வேயை ஏற்பாட்டாளராக செயற்படுவதற்கான அழைப்பு இரண்டையும் தவிர மகிந்த ராஜபக்ஷ சமாதானத்தை முன்னெடுப்பதற்கு எதனையும் செய்யவில்லை. இவ்விரண்டு விடயங்களும் வெளிப்பார்வையில் பெரிய நகர்வுகள் போன்று இருப்பினும் அடிப்படையில் இது முன்னேற்றகரமான நடவடிக்கை எனக்கொள்வதற்கு இல்லை.
ஏனெனில, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதோ அன்றி நோர்வேயை ஏற்பாட்டாளராகக் கொண்டு வருதல் என்பதோ புதியதொரு விடயமல்ல. விடுதலைப் புலிகள் அதற்கு எதிராகவும் இல்லை. மாறாக நீண்ட நாட்களாக-அதாவது சனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே விடுதலைப் புலிகள் இக்கோரிக்கை களை விடுத்தே வந்துள்ளனர்.
இதேசமயம் மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை தொடர்பாக விதித்த இரு நிபந்தனைகளும் விடுதலைப் புலிகளால் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் நிராகரிக்கப்பட்ட விடயமாகவும் இருந்தது. அதாவது ஆசிய நாடொன்றில் பேச்சு என்ற நிலைப்பாடும், யுத்தநிறுத்த உடன்பாட்டை மாற்றியமைத்தல் என்பதும் புலிகளால் நிராகரிக்கப்பட்ட விடயங்களாகும். இது சனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தீர்;மானம் அல்ல. அதற்கு முன்னரே அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதே தெரிவிக்கப்பட்டதொன்றாகும். அதாவது மகிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போதே கூறப்பட்ட விடயமாகும்.
இந்த வகையில் பார்க்கையில் மகிந்த ராஜபக்ஷ தனது ஐம்பது நாட்கள் ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைக்குச் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற hPதியிலோ, அரசியல் தீர்;வு என்ற hPதியிலோ முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதையும் செய்துவிட்டதாகக் கூறிக் கொள்வதற்கு எதுவுமில்லை. பேச்சளவில் மட்டுமானதாவே அவரின் செயற்பாடுகள் இருந்துள்ளன.
ஆனால் இவ் ஐம்பது நாட்களில் இயல்பு வாழ்விற்கு மாறாகவும், சமாதான முயற்சிகளுக்கு எதிராகவும் அவரது நடவடிக்கைகள் உறுதியானதாகவும், தீவிரமானதாகவுமுள்ளது. வேறுவிதமாகக் கூறுவதானால் இனப்பிரச் சினைக்கு இராணுவ hPதியிலான தீர்விற்கு ஏற்ற வகையில் சிறிலங்கா அரச இயந்திரம் செயற்படத்தக்கதான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனின் மிகையாகாது.
மகிந்தராஜபக்ஷ தீவிர இனவாத சக்திகளினதும், பௌத்த-சிங்கள அடிப்படைவாத சக்திகளினதும் ஆதரவுடன் சனாதிபதி பதவியைக் கைப்பற்றியவர் என்பது வெளிப்படையானது. குறிப்பாக தீவிர இனவாதச் சக்தியாகச் செயற்படும் ஜே.வி.பி, பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்தியான ஜாதிக ஹெல உறுமய என்பவற்றின் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்.
இவரின் இத்தேர்தல் கூட்டணி குறித்து முன்னர் சில எதிர்மறையான விமர்சனங்களும், முன்வைக்கப்பட்டதுண்டு. அதாவது மகிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதியல்ல. தேர்தல்தல் வெற்றிக்காகக் கூட்டுச்சேர்ந்துள்ள அவர், வெற்றியின் பின் அவர்களை நாசுக்காக அகற்றி விடுவார் எனக்கூறப்பட்டது. ஆனால் இம் மதிப்பீடு தவறானது என்பதை மகிந்த ராஜபக்ஷ தனது புதிய அரசாங்கத்தை - அதாவது அமைச்சரவையை அமைப்பதிலிருந்தே தெளிவுபடுத்தத் தொடங்கியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்கதாக பிரதமராகவும், அத்தோடு பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவைத் தெரிவு செய்தமையைக் குறிப்பிட முடியும்.
ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஏற்கனவே இவ்விரு பதவிகளையும் வகித்தவராயினும் இம்முறை அவர் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினராகும். இதனைத்தவிர கடந்த காலத்தில் இப்பதவியை வகித்த வேளையில் யுத்த முன்னெடுப்புக்களில் தீவிரமாகப் பணியாற்றியவராகும். பௌத்த - சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைதல் வேண்டும் எனத் தனது முன்னையப்பதவிக் காலத்தில் தென்னிலங்கையில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவராகும். பத்தாயிரம் பௌத்த-சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாகக் கூறி பிரச்சாரத்தை முன்னெடுத்தவர். இத்தகைய ஒருவரை மீண்டும்- அதிலும் பொதுசன ஐக்கிய முன்னணியின் செயலர் டி.எம்.ஜெயரட்ணவிற்குப் பிரதமர் பதவி வழங்கப்போவதாகத் தகவல்கள் வெளிவந்த பின்னரும் அதனை மாற்றி ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்கு மகிந்தராஜபக்ஷ வழங்கியதும், பின்னர் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும் அவரை நியமனம் செய்தமையும் மகிந்தராஜபக்ஷ தீவிர இனவாதப் போக்குக் கொண்ட தலைமையை விரும்பியமைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்கதாகும்.
அடுத்ததாக புதிய இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சரத் பொன்சேகா மகிந்த ராஜபக்ஷ தெரிவு செய்தமையைக் குறிப்பிட முடியும். யுத்தவெறி கொண்டவரும் தன்னைப் பற்றிப் பெருமை பேசுபவருமான சரத் பொன்சேகாவின் நியமனமானது இராணுவத்தை யுத்தத்திற்கு தயாராக்கும் நோக்கிலானது என்பது நிராகரிக்க முடியாததுமாகும்.
இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதும் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தின் வரலாற்றையும் அதில் தான் 30 வருடத்திற்கு மேலாகப்; பதவி வகித்ததையும் மறந்து விட்டவராகத் தான் எத்தகைய படை நடவடிக்கைகளிலும் தோற்றதில்லை எனப் பெருமை பேசினார். தான் சார்ந்திருந்த இராணுவம், தான் பங்குபற்றிய களங்கள் என்பனவற்றில் ஏற்பட்ட தோல்விகள், பின்னடைவுகள் என்பனவற்றிற்கும், தனக்கும் சம்பந்தமில்லை எனப் பெருமை பேசும் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்தே தீவிர யுத்த முனைப்புக்கள் அரசால் முன்னெடுக்கப்படத் தொடங்கி விட்டதெனலாம்.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளுடனோ, தமிழ் மக்களுடனோ இணக்கமானதொரு போக்கை கடைப்பிடிக்க மாட்டார் என்பதற்கு யுத்தகாலத்தில் அவர் காட்டிய கடும்போக்கு மட்டுமல்ல. சமாதான காலத்தில் அவர் காட்டிய கடும்போக்கையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்ட முடியும்.
தாய்லாந்துப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட உபகுழுக்கள் என்ற hPதியில் கூட்டப்பட்ட பாதுகாப்பு உப குழுவின் செயற்பாடு முடக்கத்திற்கு வந்ததும், தோல்வி அடைய நேரிட்டதும் சரத் பொன்சேகாவின் நிபந்தனைகளினாலேயே ஆகும். அதாவது உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவேண்டுமானால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து பேச்சுக்களில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி பின்னர் அது தோல்வியில் முடிவடையவும் காரணமாக இருந்தவர்.
லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தற்பொழுதும் அத்தகையதொரு போக்கையே கொண்டிருப்பதை அண்மைய அவர் நடவடிக்கைகள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. எடுத்துக்காட்டாகத் தற்காப்புப்பயிற்சி பெற்றுள்ள தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளே எனக் கூறி நிராயுதபாணிகளாகவுள்ள அவர்கள் மீதும் ஆயுத hPதியிலான தாக்குதலை நடத்துவதற்கு இராணுவத்தினருக்கு அவர் வழங்கியுள்ள அனுமதியில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.
சந்தேகத்திற்கு இடமானவர்கள் மீது தாக்குதல் நடத்தலாமென இராணுவத்தளபதி வழங்கியுள்ள அதிகாரம் இனப்படுகொலைகளுக்கு சரத் பொன்சேகா வழங்கிய அங்கீகாரமாகவே கொள்ளத்தக்கது. மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போன்று சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எல்லாம் புலிகளாகத் தெரிவது ஒன்றும் ஆச்சரியமாக இருக்க மாட்டாது.
அடுத்ததாகப் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்கள ஆலோசகராக முன்னாள் பொலிஸ்மா அதிபரான கொட்டகதெனியவை மகிந்த ராஜபக்ஷ நியமனம் செய்ததைக் குறிப்பிடமுடியும். அதாவது தீவிர இனவாதியான இவரைத் தெரிவு செய்;ததன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக-இனாPதியிலான செயற்பாடுகளில் மகிந்தராஜபக்ஷ அக்கறை காட்டியுள் ளதை இது தெளிவுபடுத்தியதாகவே கொள்ளத் தக்கதாகும்.
கொட்டகதெனிய, ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர்களில் ஒருவர் என்பதினால் மட்டும் இவ்வாறு இங்கு குறிப்பிடவில்லை. அவர் கடந்த காலத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த போது இனவாத hPதியாகச் செயற்பட்டவர். கொழும்பில் பெரும் தொகையில் கைதாவதற்கும், பலர் காணாமற்போனமைக்கும் இவரும் காரணமாக இருந்தவர் என்பது கடந்த கால வரலாறு.
இதனை நிரூபிப்பது போன்றே அவர் தற்பொழுதும் பதவி ஏற்றதன் பின்னர் வெளியிட்ட அறிவுப்புக்களும் அவரது நடவடிக்கைகளும் உள்ளன. பதவியேற்ற பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பைக்கருதி கொழும்பிலுள்ள வீடுகள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் எனக்கூறினார். இதனை நிரூபிப்பது போன்று கடந்த வாரத்தில் கொழும்பில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டு 1000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதே சமயம் கடந்த வாரத்தில் திருமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலையுடன் கொட்டகதெனியாவும் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டக தெனியாவின் பணிப்பில் சிறிலங்காவின் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரே இப்படுகொலைகளைப் புரிந்ததாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.
அதாவது, ஒரு இனவெறி பிடித்த பௌத்த -சிங்கள அடிப்படைவாதியை மகிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் ஆலோசகராக நியமித்துள்ளமை பாதுகாப்பமைச்சையும், பொலிஸ் திணைக்களத்தையும் எதனை நோக்கி மகிந்த ராஜபக்ஷ வழிநடத்திச் செல்ல முயல்கின்றார் என்பதையே வெளிப்படுத்தியுள்ளதெனலாம்.
மற்றொரு நியமனமாக பாதுகாப்பமைச்சின் செயலாளராக முன்னாள் கேணலான கோட்டபாய ராஜபக்ஷவை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமனம் செய்தமையாகும். தனது சகோதரர் ஒருவருக்கு உயர் பதவியொன்றை சனாதிபதி வழங்கத் தீர்மானித்தார் என்பதற்கு அப்பால் ஒரு யுத்த வெறியரை இனவாதியை பாதுகாப்பமைச்சின் செயலாளராக நியமனம் செய்ய சனாதிபதி தீர்மானம் செய்தார் என்பதே நிஜமானதாகும்.
அவ்வாறு இல்லாதுவிடில் சிறிலங்காப் படைத்தரப்பிற்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கீழ் மட்டத்தில் நடக்கும் சந்திப்புக்களுக்கு அவர் தடை விதித்திருக்கமாட்டார். அதாவது விடுதலைப் புலிகளுக்கும்- படையதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறும் கீழ்மட்டச் சந்திப்புக்கள் பல நடைமுறைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவுவதோடு பதற்றத்தைத் தணிக்கச் சிறிதளவேனும் உதவுவதற்கு வாய்ப்புக்கொடுப்பதாக இருந்திருக்கும்.
எடுத்துக்காட்டாக யாழ். குடாநாட்டில் நீர்வேலியில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை, புங்குடுதீவில் கடற்படையினரால் இளம்பெண் தர்சினி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டமை, அவற்றையடுத்து படையினர் மீது நடந்த கிளைமோர் தாக்குதல், கைக்குண்டு வீச்சுக்கள் என்பனவற்றை அடுத்து யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதிக்கும், யாழ். மாவட்ட இராணுவத்தளபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இறுதி நேரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பெயரில் இச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது. அவ்வாறு இல்லாதிருப்பின் யாழ். குடாநாட்டில் ஓரளவு பதற்றம் தணிவதற்குச் சிலவேளை வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் கோட்டபாயவின் பணிப்பு இதனை இல்லாது ஒழித்ததினால் வன்முறை தொடரவும் இதன் காரணமாக பலர் கொல்லப்படவும், பலர் காயங்களுக்குள்ளாகவும் ஆயிரக்கணக்கானோர் தமது குடியிருப்புக்களை விட்டு பாதுகாப்புத்தேடி இடம்பெயரவும் வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தவகையில் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஒருபுறத்தில் அழைப்பு விடுத்து வந்தாலும் அவரின் நடவடிக்கைகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கோ அன்றி நாட்டில் அமைதி நிலை உருவாவதற்கோ ஏற்றதொன்றாக இருக்கவில்லை. அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை ஏற்படுத்துவதாக இல்லை.
அதாவது மகிந்த ராஜபக்ஷ பலவீனமானதொரு அரசியல் தளத்திலிருந்து கொண்டு பலமானதொரு இனவாத அணியைச் செயற்பட வைத்துள்ளார் எனலாம். ஆகையினால் மகிந்தராஜபக்ஷ விரும்பினாலும், விரும்பாது விட்டாலும் கூடப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக்கூடியதொரு சூழ்நிலையை அவரால் உருவாக்க முடியாது.
ஏனெனில் அவரின் அரசியல் தளம் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்பனவற்றால் மட்டுமல்ல சுதந்திரக்கட்சியினால் கூட பலவீனப்படுத்தப்படும் ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்பதைக்கூட அவரால் உறுதியான நிலைப்பாட்டுடன் மேற்கொள்ள முடியாது.
இதேசமயம் அவரது நியமனங்களும் யுத்தத்திற்கும், இன ஒடுக்குமுறைக்கும் ஆதரவான சக்திகளைத் தெரிவு செய்வதாகவே இருந்துள்ளது. அண்மையில் கொழும்பில் நடந்த கைதுகளும், திருமலையில் நடந்த மாணவர் படுகொலைகளும், யாழ். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையும், சனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விதத்தில் நடந்தவையா? என்ற கேள்வி எழக்கூடிய வகையில் அவரின் நிலை உள்ளது.
அத்தோடு சனாதிபதியின் நியமனங்கள் அவரை மீறியதான செயற்பாட்டைக் கொண்ட வையாகக் கூட மாறலாம் என்பதற்கு சனாதிபதி மகிந்தவுக்கும்- தமிழர் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இடைநடுவில் குழப்பத்திற்குள்ளானமை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்கதாகும்.
அதாவது இச்சந்திப்பு பாதுகாப்புச் செயலாளரினதும், இராணுவத் தளபதியினதும் பிரசன்னத்தையடுத்து தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்குச் சென்;றதினால் மகிந்த ராஜபக்ஷவினால் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது மகிந்த ராஜபக்ஷவினால் கட்டுப்படுத்த முடியாத அளவிலானதான அளவில் முரண்பாட்டை உருவாக்கும் நபர்களாக இவர்களால் செயற்பட முடிந்துள்ளது.
இந்த வகையில் பார்க்கையில் பலவீனமான அரசியல் தளத்தில் உள்ள சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது விருப்பு வெறுப்புக்கள் யாவற்றையும் ஓரந்தள்ளிவிட்டு தனது அரசியல் தளத்தை பலப்படுத்திக்கொள்ள தனது பின்னாலுள்ள இனவாத அரசியல் சக்திகளையும், தான் நியமனம் செய்த கடும் கோட்பாட்டாளர்களினதும் செயற்பாட்டிற்குப் பின்னால் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.
நன்றி: ஈழநாதம்
|
|
|
| புலிகள் படையினருக்கு சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர் |
|
Posted by: Vaanampaadi - 01-12-2006, 06:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வியாழன் 12-01-2006 19:17 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்]
விடுதலைப் புலிகள் படையினருக்கு சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர் - நிமால் சிறிபால டி சில்வா.
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைத்தரப்பினருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் அறிவிக்கும் பொழுதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த செயல்பாடுகளை, அரசாங்கம் கண்டிப்பதாக தெரிவித்த அவர், நோவேயின் இலங்கைக்கான சமாதான அமைச்சர் எரிக் சொல்ஹேமின் இலங்கை வருகையின் பின்னர், சமாதான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான புதிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு உதவி வழங்கும் இணைதலைமை நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து அரசாங்கத்தின் சமாதான நடவடிக்கைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் போர் நிறுத்த மீறல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயம் வெற்றி அளித்துளள்ளதாகவும், அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவும், அவுஸ்த்திரேலியாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன எனவும் அவர் இன்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.
Pathivu
|
|
|
|