![]() |
|
புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு (/showthread.php?tid=1443) |
புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு - வினித் - 01-12-2006 புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப மகிந்த முடிவு! [வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 18:15 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] இலங்கை அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதற்காக அமைச்சர்கள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். சுமார் 10 அமைச்சர்களை இந்த வெளிநாட்டுப் பயணத்தில் அனுப்புவதற்கு மகிந்த தீர்மானித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்தும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதே இந்த பயணத்தின் நோக்கம் என்றும் அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள நாடுகளுக்கு இந்த அமைச்சர்களை அனுப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம் - ஆறுமுகம் - 01-13-2006 அப்பு வினித் உதுக்கு ஆதாரம் எதாவது வச்சிருக்கிறீங்களோ. சில கிறுக்குகள் வரும் கேக்க. - வினித் - 01-13-2006 ஆறுமுகம் Wrote:அப்பு வினித் உதுக்கு ஆதாரம் எதாவது வச்சிருக்கிறீங்களோ. சில கிறுக்குகள் வரும் கேக்க. <b>நான் ஒவரு நாளும் ஒரே பாதையால் செல்வேன் அப்போது ஒவரு நாளும் ஒரு நாய் என்ன பார்த்து குரைக்கும் நானும்ம நினைப்பேன் நாய் குரைக்குது எண்டு நானும் குரைக்கலாம எண்டு சில நேரம் நான் கல்லுடன் போவேன் அப்போது எல்லாம் நாயை காண முடிவது இல்லை</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|