Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 190 online users.
» 0 Member(s) | 187 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,295
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,049
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,472
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  சவுதிஅரேபியாவில் 345 பேர் பலி
Posted by: Vaanampaadi - 01-12-2006, 06:31 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

மெக்காவிற்கு அருகே கூட்ட நெரிசல், 345 பேர் பலி

சவூதி அரேபியாவில் இருக்கும் புனிதத்தலமான மெக்காவுக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கிட்டத்தட்ட 345 முஸ்லீம் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஹஜ் புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக சாத்தானை குறிக்கும் மூன்று தூண்களை நோக்கி கல்லெறியும் சடங்கின்போது, அந்த தூண்களை நோக்கி ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் முண்டியடித்து முன்னேறியதாக, சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சூரியன் மறைவுக்கு முன்பு இந்த சடங்கை முடித்துவிட வெண்டும் என்கிற நோக்கத்தில், எல்லா பக்கங்களில் இருந்தும் மக்கள் அங்கே குழுமத்துவங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களில் சிலர் ஒருவரோடு ஒருவர் தோள்களைக் கோர்த்துக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்து செல்ல முயன்ற போது, மோசமன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பல லட்சக்கணக்கான முஸ்லீம்கள், ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் புனிதப்பயணத்தை மேற்கொள்ளும் போது, விபத்துக்கள் நடப்பது என்பது தொடர் நிகழ்வாக மாறிவருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன், கூட்ட நெரிசலில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.

BBC தமிழோசை

Print this item

  தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள்
Posted by: Vaanampaadi - 01-12-2006, 06:15 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

தகனமேடையில் `கேக்' வெட்டினார்
சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்


போபால், ஜன.12-

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரசிங் தாக்குர். இவருக்கு நேற்று 51-வது பிறந்தநாள். அதை நூதனமாக கொண்டாட விரும்பிய அவர், அதற்கு தேர்ந்தெடுத்த இடம், சுடுகாடு.

சுடுகாட்டுக்கு தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட்டிச்சென்றார். பிணங்களை தகனம் செய்யும் மேடையில் பிறந்தநாள் 'கேக்'-ஐ வைத்தார். அங்கேயே 'கேக்' வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு இருந்த அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.

முன்னதாக, சுடுகாட்டில் உள்ள சிவன் கோவிலில் அவர் சாமி கும்பிட்டார்.



Dailythanthi

Print this item

  நாய் மீது சவாரி செய்யும் குரங்கு
Posted by: Vaanampaadi - 01-12-2006, 06:13 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

நாய் மீது சவாரி செய்யும் குரங்கு
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/12-1-2006/12monkey.jpg' border='0' alt='user posted image'>

அமெரிக்காவின் கோலராடோ பகுதியில் குரங்குகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நாய்கள் மீது சவாரி செய்யும் போட்டியில் டென்லர் அணியை சேர்ந்த குரங்கு கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்றது.

Maalaimalar

Print this item

  இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு
Posted by: Vaanampaadi - 01-12-2006, 06:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு இருக்கிறார்கள்.விடுதலைப்புலிகளிடம் 50 கடல் மைல் வேகத்தில் செல்லும் நவீன படகுகள் </b>

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் நிறுத்தம் வாபம் ஆகிபோர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

கடந்த 7-ந்தேதி திரி கோண மலையில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினர், இலங்கை கடற்படையினர் படகு மீது அதிரடி தாக்குதல் நடத்தி அந்த படகை தகர்த்தனர். இதில் 15 இலங்கை கடற்படை வீரர்கள் பலியானார்கள். இது ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு இருக்கிறார்கள்.

அந்தமானில் பலவேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகளின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இலங்கை கடற்படை உயர் அதிகாரி இந்திய அதிகாரியிடம் விடுதலைப் புலிகள் பற்றிய விவரங்களை கொடுத்து இருக்கிறார்.

இந்த கடிதத்தில் விடுதலைப்புலிகளால் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை கப்பல்களுக்கு ஆபத்து உள்ளன. இரு நாடுகளின் கடற்படை கூட்டு ராணுவ பயிற்சி மூலம் இந்த ஆபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் 50 கடல் மைல் வேகத்தில் செல்லும் நவீன படகுகள் இருப்பதாகவும் 150 கிலோ எடை உள்ள வெடிபொருள்களை இவை எடுத்துச் செல்லும் ஆற்றல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடற்படை கூட்டு ஒத்துழைப்பு மூலமே விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என்றும் இந்திய அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை கூறியுள்ளது.
இணைப்பு : : SanJay
Thu, 12 Jan 2006, 13:11:13 GMT

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&


<b>விடுதலைப்புலிகளால் ஆபத்து ஏற்படும்: இந்தியாவுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை </b>

புதுடெல்லி, ஜன. 12-

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் நிறுத்தம் வாபம் ஆகிபோர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

கடந்த 7-ந்தேதி திரி கோண மலையில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினர், இலங்கை கடற்படையினர் படகு மீது அதிரடி தாக்குதல் நடத்தி அந்த படகை தகர்த்தனர். இதில் 15 இலங்கை கடற்படை வீரர்கள் பலியானார்கள். இது ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு இருக்கிறார்கள்.

அந்தமானில் பலவேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகளின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இலங்கை கடற்படை உயர் அதிகாரி இந்திய அதிகாரியிடம் விடுதலைப் புலிகள் பற்றிய விவரங்களை கொடுத்து இருக்கிறார்.

இந்த கடிதத்தில் விடுதலைப்புலிகளால் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை கப்பல்களுக்கு ஆபத்து உள்ளன. இரு நாடுகளின் கடற்படை கூட்டு ராணுவ பயிற்சி மூலம் இந்த ஆபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் 50 கடல் மைல் வேகத்தில் செல்லும் நவீன படகுகள் இருப்பதாகவும் 150 கிலோ எடை உள்ள வெடிபொருள்களை இவை எடுத்துச் செல்லும் ஆற்றல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடற்படை கூட்டு ஒத்துழைப்பு மூலமே விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என்றும் இந்திய அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை கூறியுள்ளது.

Maalaimalar

Print this item

  ஒரு பொங்கல் காலத்து நினைவு
Posted by: sathiri - 01-12-2006, 05:56 PM - Forum: நகைச்சுவை - Replies (10)

ஒரு பொங்கல் காலத்து நினைவு

பலருக்கும் உங்கள் சிறிய வயது காலத்தில் நடந்த சில சின்ன சின்ன சம்பவங்கள் மறக்காமல் காலம் முளுவதும் அவ்வப்போ நினைவுக்கு வரும் அது போல பொங்கல் நாள் எண்டதும் எனக்கும் ஒரு சிறு வயது நினைவு.

அப்போ எனக்கு பதின்மூண்று வயதிருக்கும் ஒரு பொங்கல் நாள் வழைமை போல குடும்பமாய் முற்றத்தில் அழகிய கோலம் போட்டு புது பானையில் பொங்கலிட்டு சந்தோசமாய் நாங்களெல்லாம் அண்ணா அக்கா தம்பி தங்கையெண்று புத்தாடையுடுத்து.

வெடி கொழுத்தவும் வாணம் விடவும் சண்டை பிடித்து சண்டை பிடித்து பெரியோர்கள் விலக்கு பிடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு பொங்கல் நாள்.எங்களுரில் எங்களிற்கு மிகவும் நெருங்கிய நட்பாக இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன.

பண்டிகை காலங்களில் நாங்கள் அந்த குடும்பங்களிற்கும் அவர்கள் தங்கள் பண்டிகையின்போது எமக்கும் பலகாரங்கள் பரிமாறி மகிழ்ச்சியை தெரிவிப்பதுண்டு.அந்த பொங்கல் நாளன்றும் பொங்கல் முடிய அம்மா இரண்டு பெரிய தட்டுகளில் (தாம்பாளம் என்றும் அழைப்பதுண்டு) புக்கை பலகாரம் எல்லாத்தையும் வைத்து பக்கத்தில் உள்ள கிறீஸ்தவரின் விட்டிற்கு தங்:கையிடம் கொடுத்து அனுப்பி விட்டு கொஞ்சம் தூரத்தில் உள்ள டேவிட் அங்கிள்(அந்த வீட்டு காரரை எல்லாரும் அப்பிடித்தான் அழைப்போம்)

பலகாரம் கொண்டு பொக அண்ணனை தேடினார் அண்ணனை காணவில்லை உடனே அவரது பார்வை எனது பக்கம் திரும்பியது என்னை பாத்து நீ கொண்டு பொய் குடுத்திட்டு வா என்றார் நான் உடனேயே என்னாலை போக ஏலாது எண்டு மறுத்திட்டன் காரணம் டேவிட அங்கிள வீட்டில் உள்ள புலிதான் காரணம்.உடைனை கே;காதையுங்:கோ உங்கடை ஊரிலை வீடுகளிலை புலியெல்லாம் வளத்தைவையா எண்டு.

அவை வளர்த்த அல்சேசன் ரக நாய் அதற்கு பெயர் ரைகர் அதன் பெயருக்கேற்றால் போல் அந்த நாயும் அவர்கள் வீட்டு பெரிய வாசல் இரும்புகதவில் இரண்டு முன்னங் கால் களையும் தூக்கி போட்டுவிட்டு நிமிரந்து நின்றால் அது என்னை விட பெரிதாய் இருக்கும்.

அப்படியே நின்ற படி வீதியால் போவோர் வருவோரை ஒரு பெரிய சாம்ராச்சியத்தின் அரசனை போல அலட்சியமாக பார்த்தபடி நிற்கும். எல்லோரும் மரியாதையாக தலையை குனிந்தபடி வீதியின் மறு கரையால் அந்த நாய்க்கு மரியாதை செய்தபடி பொனால் பிரச்சனை இல்லை யாராவது விசயம் தெரியாமல் இவர் என்ன பெரிய ஆளா என்று நினைத்து தலையை நிமித்தி பார்த்தால் உடனே ரைகர் அவர்களை பார்த்து சின்னதாய் ஒரு உர்ர்ர்ர்ர்...உடனே அவர்கள்: அடங்கி போய்ட விடுவார்கள்.

இப்ப சொல்லுங்கள் அந்த வீட்டிற்கு நீங்கள் பலகாரம் கொண்டு போவீங்களா?? ஆகவே நான் மறுக்க அக்காவோ டேய் நீயெல்லாம் ஒரு ஆம்பிளை பிள்ளை உன்னை நம்பி நானெல்லாம் என்ணெண்டு வாறது எண்டு எனது வீரத்தை செதனை செய்தார் அத்துடன் விடவில்லை யுரேகா கேள்வி பட்டாலே பகிடி பண்ணுவாள் வீட்டு கேற் புூட்டித்தான் இருக்குநீ தூரத்திலை நிண்டு கூப்பிடு எண்றார்.

யுரேகா என்பது டேவிற் அங்கிளின் மகள் எனது வயதுதான் அடிக்கடி வீட்டிற்கு வருவாள் இருவரும் டா டி போட்டு கூப்பிடுகிற நட்பு யுரேகாவின் பெயரை சொல்லி எனது ஆண்மையையும் வீரத்தையும் வீட்டார் கேலி செய்ததால் அரை மனதுடன் ஒத்து கொண்டேன்.அம்மா தட்டை தந்தார் கன மாக தான் இருந்தது .

உடனே அக்கா எனது வேட்டியாக மாறியிருந்த அப்பாவின் பட்டு சால்வையை ஒரு சடம்பு கயிறு கொண்டு இறுக்க கட்டி விட்டு கவனம் வேட்டி களருதெண்டு பலகார தட்டை கை விட்டிடாதை அதுதான் கட்டி விட்டிருக்கிறன் என்றார். என்ன பாசம் எனது மானம் போனாலும் உனக்கு பலகாரதட்டுதான் முக்கியம் என்று சொல்லி விட்டு டேவிற் அங்கிளின் வீட்டுக்கு அருகில் போனதும் நின்று அந்த ரைகர் நிக்கிறதா என்று வடிவாக பார்த்தேன் காணவில்லை

அப்பாடா நிம்மதி வீட்டுக்கு பின்னாலை கட்டி போட்டிருக்கு போலை என்று நினைத்தபடி எதற்கும் முன்னெச்சரிக்கையாக ஒரு சத்தம் குடுத்து பாப்பம் என்று நினைத்த தூரத்தல் நின்றவாறு ஒரு முறை டேவிற் அங்கிள் என்று கூப்பிட்டேன் எனக்கு தெரியும் உள்ளெ இருப்பவர்களிற்கு கேட்டிருக்காது என்றாலும் ரைகர் மதிலுக்கு பின்னாலை ஒளிஞ்சிருந்தாலும் சத்தத்திற்கு வெளியாலை வரும் என்றுதான்.

ஆனாலும் எந்த சத்தத்தையும் காணவில்லை உடனே பலகார தட்டை தோளில் வைத்து பிடித்தபடி கம்பீரமாக நடந்து போய் அவர்களின் இரும்பு கதவு கொளுக்கியை தட்டி விட்டு கதவை காலால் உதைந்தது தருணம் அவர்களது குறோட்டன் செடிகளினுள் உரு மறைப்பு செய்து கொண்டு படுத்திருந்த ரைகர் வவ்வென்றபடி பாயந்தது. அய்யோ அம்மா என்று கத்தியவாறு பலகார தட்டை சுழற்றியெறிந்து விட்டு வேட்டியை கையில் தூக்கி பிடித்படி ஓட தொங்கினேன் சத்தம் கேட்டு வெளியே வந்த டேவிற் அங்கிள் குடும்பத்தினர் தம்பி நில்லும் நாய் கட்டிதான் இருக்கு என்று சத்தம் கேட்டு ஒரளவு தூரம் ஒடிய நான் நின்று திரும்பி பார்த்தேன்.

கட்டியிருந்த ரைகரின் சங்கிலியை கையில் பிடித்து இழுத்து காட்டியபடி யுரேகா கட்டியிருக்கிற நாய்க்கு இவ்வளவு பயமா?? என்றுவிழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தான்.எனக்கோ வாட்லு போரில் தோத்து போன மாவீரன் நெப்போலியனை போல அவமானமாய் இருந்தது ( அதற்காக நெப்போலியன் தோத்த போது பக்கத்திலை நிண்டு பாத்தியா எண்டு கேக்காதையுங்கோ எனக்குள் ஒரு கற்பனைதான்)இப்போ பயம் போய் அவமானமும் அழுகையாகவும் வந்தது.

டேவிற் அங்கிள்கீழே கிடந்த தட்டை கையிலெடுத்தபடி என்னைஅழவேண்டாம் என்று தேற்றியணைத்தபடி எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டு விட்டு போய் விட்டார்.பின்னர் எங்கள் வீட்டில் எல்லாரும் என்னை கிண்டலடிக்க தொடங்கி விட்டனர்.சில நாட்களின் பின்னர் நான் எனது நண்பர்களுடன் வீதியால் போய் கொண்டிருந்த போது எதிரே யுரேகா வர நானும் எடுப்பாய் எங்கடி போறாய் எண்டு அவளை பாத்து கேக்க அவள் பதிலுக்கு ரைகர் வவ் வவ் என்று விட்டு ஒடி விட்டாள்.

எனக்கு மீண்டும் நெப்போலியன் தோத்தது போல அவமானம் இரடி இரு உன்ரை ரைகருக்கு ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கை பொலிடோல்: (ஒரு வகை கிருமி நாசினி)ஊத்தி கொலை செய்யாட்டி என்ரை பேரை மாத்து எண்று சபதம் எடுத்து கொண்டேன் அந்த சபதம் கடைசி வரை நிறை வேறவில்லை. டேவிற் அங்கிள் குடும்பமும் பின்னர் நாட்டு பிரச்சனையால் அவுஸ் ரேலியாவிற்கு குடி பெயர்ந்து போய் விட்டனர் என்று கேள்விப்பட்டேன்.தொடர்புகள் இல்லை ஆனாலும் இந்த பொங்கல் நாளில் அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பத்தை ஒரு கணம் நினைப்பார்கள் என எண்ணு கிறேன்

Print this item

  விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல: இரா.சம்பந்தன்
Posted by: வினித் - 01-12-2006, 05:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b><span style='font-size:30pt;line-height:100%'>விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல: இரா.சம்பந்தன்</span>

[b][வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 07:36 ஈழம்] [ச.விமலராஜா</b>]


<b>தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை 'அல்கைதா மன நிலையில்' அமெரிக்கா அணுகினால் அது எந்த வகையிலும் பயன்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்ன் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.


இது தொடர்பில் பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு அவர் அளித்த நேர்காணல்:

விடுதலைப் புலிகள் வன்முறைக்குத் தயாராவதாக அமெரிக்க தூதுவர் ஜெஃரி லான்ஸ்ரெட் கூறியுள்ளார். வன்முறை என்பது ஒரு பக்கத்திலிருந்து உருவாவது அல்ல.

தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை அல்கைதா மன நிலையில் அமெரிக்கா அணுகினால் அது எந்த வகையிலும் பயன்படாது. விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வந்தாலும் அதை சிறிலங்கா அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மீளக் குடியேற்றம் தொடர்பாக எத்தனையோ ஆலோசனைக் கூட்டங்களில் விடுதலைப் புலிகள் பங்கேற்ற போதும் அது நடக்கவில்லை. ஆகக் குறைந்தபட்சம் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பைக் கூட சிறிலங்கா அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுகளுக்கான இடம் குறித்து சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் விரைவில் இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என்றார் இரா.சம்பந்தன்</b>


நன்றி: புதினம்

Print this item

  இப்படியும் ஓர் இணையதளம்
Posted by: Vaanampaadi - 01-12-2006, 12:31 PM - Forum: தளமுகவரிகள் - Replies (1)

இப்படி ஒரு இணையதளத்தை உருவாக்கி கோடீஸ்வரனாகியுள்ளார் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த
மாணவன் Alex Tew....................

http://www.milliondollarhomepage.com/

Print this item

  8 கடற்படையினர் கொலை
Posted by: Vaanampaadi - 01-12-2006, 12:09 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (4)

8 SLN sailors killed in Claymore blast in Chettikulam

[TamilNet, January 12, 2006 10:48 GMT]
Eight Sri Lanka Navy sailors were killed when the bus they were travelling in hit a Claymore mine explosion in Chettikulam Thursday evening around 4:20 p.m., Sri Lankan naval sources said. The attack took place on Mathawachi - Mannar Road.
Eight SLN personnel were seriously wounded, the sources added.

Chettikulam is located 24 km southwest of Vavuniya town.

Further details are not available at the moment.

tamilnet

Print this item

  உங்களுடன் இணைப்பீர்களா..
Posted by: பிறேம் - 01-12-2006, 10:43 AM - Forum: அறிமுகம் - Replies (36)

வணக்கம் உறவுகளே
யாழின் வாசகனாயிருந்தவன் இன்றுமுதல் உங்களுடன் இணைய விரும்புகிறேன், என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா....

நட்புடன்,
பிறேம்.

Print this item

  இலங்கை ராணுவம் அட்டூழியம்
Posted by: Luckyluke - 01-12-2006, 10:17 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை
ஜனவரி 12, 2006

ராமேஸ்வரம்:

இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.

புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.

24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர்.

அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்திரம் வந்தடைந்தனர். அவர்களை சோதனைச் சாவடி போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அப்போது இலங்கை ராணுவம் தங்களது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்து வருவதாகவும். பெண்களை கற்பழித்து வருவதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.


நன்றி : தட்ஸ்தமிழ்

Print this item