![]() |
|
தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள் (/showthread.php?tid=1452) |
தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள் - Vaanampaadi - 01-12-2006 தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் போபால், ஜன.12- மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரசிங் தாக்குர். இவருக்கு நேற்று 51-வது பிறந்தநாள். அதை நூதனமாக கொண்டாட விரும்பிய அவர், அதற்கு தேர்ந்தெடுத்த இடம், சுடுகாடு. சுடுகாட்டுக்கு தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட்டிச்சென்றார். பிணங்களை தகனம் செய்யும் மேடையில் பிறந்தநாள் 'கேக்'-ஐ வைத்தார். அங்கேயே 'கேக்' வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு இருந்த அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர். முன்னதாக, சுடுகாட்டில் உள்ள சிவன் கோவிலில் அவர் சாமி கும்பிட்டார். Dailythanthi - Mathan - 01-18-2006 வித்தியாசமாக செய்கின்றேன் என்று இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். இவர்களின் மனநிலையை தான் சோதிக்க வேண்டும். அண்மையில் செல்வந்த பெண் ஒருவர் டொல்பின் ஒன்றை திருமணம் செய்ததாக செய்திகளில் படித்தேன். - சந்தியா - 01-18-2006 ஆமாம் மதன் அண்ணா TTNஇல் இத் தகவலைப் போட்டார்கள் எல்லோரும் தhங்கள் வித்தியாசமாக செய்வதாக எண்ணுகின்றார்கள். |