Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை
ஜனவரி 12, 2006
ராமேஸ்வரம்:
இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.
புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.
24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர்.
அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்திரம் வந்தடைந்தனர். அவர்களை சோதனைச் சாவடி போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அப்போது இலங்கை ராணுவம் தங்களது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்து வருவதாகவும். பெண்களை கற்பழித்து வருவதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தட்ஸ்தமிழ்
,
......
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
அப்படி மக்கள் சொன்னாலும் அதெல்லாம் சும்மா கட்டுக்கதை அந்தப் பெண்கள் எல்லாம். இராணுவத்தினரின் காதலிகள் எண்டு சொல்ல ஒண்டிரண்டு வலசுகள் இருக்குது.... அவை சொல்லுறதுதான் சரியா இருக்கும்....
::
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
இந்த கொடுமைகளை சர்வதேச சமுதாயத்திடம் சுட்டி காட்டி நியாயம் தேடுவதே சரியான முடிவாக இருக்க முடியும்....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
நேபாம் குண்டு சம்பந்தப்பட்ட புகழ் பெற்ற புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....
அதன் பிறகே சர்வதேச சமுதாயம் அமெரிக்காவை காரி உமிழ்ந்தது..... அது போலவே இங்கு நடக்கும் கொடுமைகளை வெளி உலகின் பார்வைக்கு புத்திசாலித் தனமாக கொண்டு வர வேண்டும்.....
அழும் குழந்தைக்கு தானே பால் கிடைக்கும்....
வியட்னாமியர்களின் அந்த விவேகம் தான் அவர்களுக்கு நாட்டை பெற்றுத் தந்தது.....
,
......
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<i><b>இதே தலைப்பிலான செய்தியை வானம்பாடி</b></i>யும் <i>thatstamil </i>இலிருந்து இணைத்துள்ளார்...
மீள ஒரே செய்திகள் வெவ்வேறு தலைப்புகளில் "அனாவசியமாக" இணைக்கப்படுவதை சில கள உறுப்பினர்கள் கவனிக்கத்தவறுவதை கண்காணிப்பாளர்கள் தயவுகூர்ந்து கவனிக்க்கவும்....
சில அகற்றப்படுவதையும் பார்த்துளோம்....
சில பயனுறுதியான கருத்துக்களை
அனாவசியக் "கருத்து இட்டுநிரப்பல்கள்" மூலம்
"மறைக்கச் செய்யும்" நடவடிக்கைகள் குறித்துக்
கவனியுங்கள் உறவுகளே
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>யாழ். பாலியல் வல்லுறவு, படுகொலைகளுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவே காரணம்: பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு </b>
[வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 14:12 ஈழம்] [தாயக செய்தியாளர்]
தென்மராட்சிப் பகுதியில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் படுகொலைச் சம்பவங்களுக்கு சிறிலங்கா புலனாய்வுத்துறையினரே பிராதான காரணமாக விளங்குவதாக தென்மராட்சி பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
கச்சாய்ப் பகுதியிலுள்ள சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரின் இப்பிரதேச கட்டளை அதிகாரியாக பணியாற்றும் பண்டார என்ற புனைப்பெயருடன் செயற்பட்டு வரும் சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரியின் கீழ் பதினைந்துக்கும் மேற்பட்ட புலனாய்வுத்துறையினரே பொதுமக்கள் மீதான படுகொலைச் செயற்பாட்டிலும் அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
யாழ். குடாநாட்டில் பெண்கள், யுவதிகள், மாணவிகள் மீதான படையினரின் வக்கிரமான துன்புறுத்தல்கள் பகிடிவதைகள்இ பாலியல் சேட்டைகளில் படையினர் மீண்டும் அதிகளவில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக யாழ். குடாநாட்டு மாதர் அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள் குற்றஞ் சுமத்தியுள்ளன.
குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு ஆபாசப்படங்கள் காண்பித்தல், மிகவும் கீழத்தரமாக ஆபசாமாக உரையாடுதல், சோதனை என்ற பெயரால் அங்க சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளினால் படையினரின் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தற்பொழுது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மாதர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
யாழ். குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து தீவுப் பகுதிகளுக்கு தமது தேவைகளுக்காகவும் உறவுகளைச் சந்திப்பதற்கும் புதிதாக செல்வோர் அந்தந்தப் பகுதியிலுள்ள கடற்படை தொடர்பகத்தில் தமது விவரங்களையும் தங்கியுள்ள நாட்கள், காரணம் முதலானவற்றை தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகையப் பதிவுகளை மேற்கொள்ளாமல் இங்கு வருவோர், தங்கியிருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்படையினர் அறிவுறுத்தியிருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே குறிக்கட்டுவான் துறைமுகத்தில் பொதுமக்கள் மீதான சோதனைக் கெடுபிடிகளைப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>பருத்துறையில் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் வயோதிபர் பலி </b>
இன்று பருத்துறை முதலாம் கட்டையில் ஸ்ரீலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி அப்பாவிப் பொதுமகன் ஒருவர் பலியானார்.இன்று பி.பகல் 1 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த பொதுமகனான துன்னாலையைச் சேர்ந்த கணபதி முருகேசு வயது 69 என்பவரே படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியானவர் ஆவார். யாழ் நகர வீதியெங்கும் சுடு நிலையில் துப்பாக்கிகளை வைத்தபடி காவலில் நிற்கின்ற படையினர் அச்சம் காரணமாக தவறுதலாக வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை சுட்டு விட்டதாக அப்பகுதியில் இச்சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இப்போது இவரது சடலம் மந்திகை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>படையினர் மீது தாக்குல்: 4 படையினர் காயம் - படையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 6 பொதுமக்கள் படுகாயம்</b>
யாழ்ப்பாணத்தின் பரமேஸ்வரா சந்தி மற்றும் தட்டாதெரு சந்தி என்பற்றில் உள்ள படையினரின் சோதனைச் சாவடிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதல்களில் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படையினர் மேற்கொண்ட கண்மூடித்தமனான துப்பாக்கிச் சூட்டில் ஆறு பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை 11.00 மணியளவில் பலாலி வீதியில் உள்ள பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள இராணுவ மற்றும் காவல்துறையினரின் சோதனைச் சாவடி மீது அடையாளம் தெரியாத நபர்களி;னால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்த படையினர் கண்மூடித்தமாக துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதுடன், வீதியால் சென்றோரையும் கடுமையாகத் தக்கியுள்ளனர். படையினரின் துப்பாக்கிச் சூடுகள் பட்டு பொதுமக்கள் ஐவர் படுகாயடைந்தனர். கொக்குவிலைச் சேர்ந்த பரமேஸ்வரி சுகந்தினி(28), காரைநகரைச் சேர்ந்த விசுவநாதர் கதிர்காமலிங்கம், முருகேசு சந்தரலிங்கம், தர்மலிங்கம் ராஜகுமார் (16) மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த குட்டித்தம்பி கனகரட்ணம் (65), ஆகியோரே இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து யாழ். அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் நடைபெற்று 15 நிமிடங்களில் தட்டாதெருச் சந்தியில் உள்ள காவலரண் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலில் ஒரு படையினன் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 71 அகவையுடைய சச்சிதானந்தன் என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளர். இவர் தற்போது யாழ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"