Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 190 online users.
» 0 Member(s) | 187 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,295
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,049
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,472
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  இலங்கை வருகிறார் பாலசிங்கம்?
Posted by: Vaanampaadi - 01-12-2006, 10:10 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கை வருகிறார் பாலசிங்கம்?
[வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 06:37 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வருகைத் தரக்கூடும் என்று கொழும்பு நாளேடு தெரிவித்துள்ளது.


இம்மாத இறுதியில் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தரும் நிலையில் அவருடன் பேச்சுக்களை நடத்த பாலசிங்கமும் இலங்கை வருகை தரக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 23 ஆம் நாள் இலங்கை வரும் எரிக் சொல்ஹெய்ம் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முக்கிய பேச்சுகளை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாஙக்த்தைத் தொடர்பு கொண்ட பாலசிங்கம் சிறிலங்கா பண்டாரநாயக்க விமான நிலையம் ஊடாக கிளிநொச்சி செல்வதற்கான பயண ஒழுங்குக்கு அனுமதி கோரியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன என்றும் கொழும்பு நாளேடு கூறியுள்ளது.

இம்முறை கிளிநொச்சி செல்லும் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க உள்ளதாகவும் அச்சந்திப்பில் பாலசிங்கமும் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் பாலசிங்கம் இத்தகைய அனுமதி கோரவில்லை என்று அரசத் தரப்பும் பாலசிங்கத்தின் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவும் தெரிவித்துள்ளன.


Puthinam

Print this item

  இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை
Posted by: Vaanampaadi - 01-12-2006, 10:08 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<b>தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை</b>
ஜனவரி 12, 2006

ராமேஸ்வரம்:

இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.



புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.

24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர்.

அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்திரம் வந்தடைந்தனர். அவர்களை சோதனைச் சாவடி போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அப்போது இலங்கை ராணுவம் தங்களது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்து வருவதாகவும். பெண்களை கற்பழித்து வருவதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Thatstamil

Print this item

  சொல்ஹெய்மின் வருகை எதையும் சாதிக்காது அவர் வரும்போது களம் ..
Posted by: Vaanampaadi - 01-12-2006, 10:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சொல்ஹெய்மின் வருகை எதையும் சாதிக்காது
அவர் வரும்போது களம் கடுமையாக இருக்கும்
"நிலவரம்' நிகழ்ச்சியில் பாலகுமாரன் கருத்து
சொல்ஹெய்மின் வருகையால் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது. அவர் இங்கே வரும் போது களநிலைமை கடுமையாக இருக்கும்.
இவ்வாறு கருத்து வெளியிட்டுள் ளார் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் கா.வே.பாலகுமாரன்.
தமிழீழத் தேசியத் தெலைக்காட்சி யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளி பரப்பாகிய "நிலவரம்' நிகழ்ச்சியில் ""சிறிலங்கா அரசாங்கத்தின் படுகொலை அரசியல் சர்வதேச நிலைப்பாடுகள்'' என்ற தலைப்பில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமா ரன் மற்றும் மூத்த ஆய்வாளர் திருநா வுக்கரசு ஆகியோர் தங்களது கருத்து களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது கா.வே.பாலகுமாரன் தெரிவித்ததாவது:
சிறிலங்காவின் தொடக்கமும் முடி வும் படுகொலை அரசியலாக உள்ளது. இந்தப் படுகொலைகளே எங்கள் வெற்றி யாக மாறும். இதற்குத் தமிழ்நாட்டில் ஏற்பட்ட எதிரொலியைச் சொல்லலாம்.
வரலாறு திரும்புகிறது என்பதை கொழும்புத் தேடுதல் நடவடிக்கைகள் சொல்கின்றன. 80ஆம் ஆண்டுக்குப் புலிகள் போவதாக சரத்பொன்சேகா சொல்கிறார். உண்மையில் அவர்கள்தான் போகிறார்கள்.
கற்றுக்குட்டி அரசியல்வாதிகளான மகிந்த மற்றும் மங்களவை நம்பிச் செயற்படலாமா எனச் சர்வதேசம் சந்தேகம் கொள்கின்றது.
ஜே.வி.பியினர் எரிக் சொல்ஹெய்மை எதிர்த்துக் கொண்டிருக்கிற போது அவருக்கு சமாதான அமைச்சர் பதவி கொடுத்துள்ளமை என்பது ஜே.வி. பிக்கு செருப்பால் அடித்தது போன்றது.
எரிக்சொல்ஹெய்மின் இலங்கை வருகையால் எதையும் சாதிக்க முடி யாது. தீவிரவாதிகளைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்திடம் நடு நிலையான ஒருவர் சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது. எரிக்சொல் ஹெய்ம் இங்கே வரும்போது கள நிலைமை கடுமையாக இருக்கும்.
எந்தத் தீர்வையும் செய்ய வக்கற்ற சிங்கள அரசுக்கு இருக்கும் ஒரே வழி போர் தான். அதற்குத்தான் கோத்தபாய ராஜபக்ஷ, கொட்டகதெனிய, சரத்பொன் சேகாவை நியமித்திருக்கிறார்கள்.
யாழிலிருந்து வன்னிக்கு மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். பலவீன மான மக்களைக் கண்டால் எதிரி பாய்ந்து பாய்ந்து தாக்குவான் என்று ஒரு தடவை தேசியத் தலைவர் கூறி யிருந்தார். இப்போது எம் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரு தகுதி நிலையை உருவாக்கி வைத்துள் ளோம்.
விடுதலைப் போராட்டத்தின் இறு திக் காலகட்டத்தில் எங்கள் மக்கள் மீது இப்படியான பாரிய தாக்குதல்கள் நடை பெறக் கூடும் என்று நாங்கள் எதிர் பார்த்திருந்தோம்.
அப்படித் தாக்குதல் நடத்தப்படும் போது அந்த மக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த மக்களைக் கொண்டே படைகளைத் திருப்பித் தாக்கும் படையையும் தயாரித்து ஒரு பெரிய வரலாற்றுத் திருப்பத்தை வன் னிப் பெருநிலப்பரப்பினூடாக உருவாக் கப்போகிறோம் என்பதுதான் எங்களது தீர்க்கமான தீர்மானகரமான அரசியல் இராணுவ ரீதியான சிந்தனையும் கூட. யாழ்ப்பாணம் மற்றும் இதர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற் கான பகுதியாக இன்றைக்கு வன்னிப் பெருநிலம் இருக்கிறது.
கொடுமையான அடக்கு முறைகளி லிருந்து எமது மக்கள் தப்பிக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாங்கள் சொல்வதற்கு முன்னதாகவே ஏறத்தாழ ஆயிரம் குடும்பங்கள் வந்து விட்டன.
எங்கள் மக்களை நாங்கள் பத்திரமாக குடியேற்றிப் பார்ப்பதற்கும் வன்னிப் பெருநிலப்பரப்பின் குடித்தொகை பர வலைச் செறிவாக்கி இந்தப் பகுதியை நாங்கள் வளமிக்க பூமியாக்கி யாழ். மாநகரத்தை ஒரு பண்பாட்டுத் தளமா கத் தக்கவைத்துக் கொள்வதற்கான திட்டங்களை மேற்கொள்வதற்கும் இப் படியான இடப்பெயர்வுகள் அவசிய மாகவும் இருக்கின்றன. இவ்வாறு கூறினார் வே.பாலகுமாரன்.
மூத்த அரசியல் ஆய்வாளர் திரு நாவுக்கரசு தமது கருத்துரையில் கூறியதாவது:
மகிந்தவின் நிலைப்பாடு இந்திய அமெரிக்க அரசுகளோடு ஒத்துப்போக வில்லை. மகிந்த அரசு யதார்த்தத்தி லிருந்து தூரத்திலிருந்து இருப்பதாகவே அவை கருதுகின்றன.
தொடர்ச்சியான இராணுவ ஒடுக்கு முறைகள் தனியரசுக்கான கருத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதுதான் தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்களின் விருப்பமாக வளருகிறது.
மகிந்த சிந்தனை என்பது புதிய சிந்தனை அல்ல. அரசியல் மற்றும் பொரு ளாதாரத் தீர்வுகள் எதுவும் புதிது அல்ல. மகிந்த இப்போது யதார்த்தத்தை நோக்கி அரசியல் அகர வரிசை நோக்கி நகர்ந்துள்ளார்.
தீர்மானம் எடுக்கிற நிலையில் மகிந் தவை சந்திரிகா வைத்திருந்தது இல்லை. அமைச்சரவை செய்தியாளர் என்று, அதாவது அமைச்சரவைச் செய்திகளை வெளியே சொல்லுகிற வர் என்றுதான் சந்திரிகா அவரை அழைத்திருக்கிறார்.
திடீரென அரசியல் முடிவு எடுக்கும் நிலைக்கு இப்போது அவர் வந்துள் ளார். அதனால் அதிர்ச்சியில் உள்ளார். புலிகளைவிட அவருடன் இருக்கிற ஜே.வி.பி. மற்றும் தீவிரவாதிகள்தான் எதிரிகள் என்று ஜெகான் பெரேரா கூறியுள்ளது உண்மையே என்றார்.



http://www.uthayan.com/pages/news/today/21.htm

Print this item

  நிலைமை மேலும் மோசமடைந்தால் கண்காணிப்புப் பணி கைவிடப்படும்
Posted by: Vaanampaadi - 01-12-2006, 10:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>நிலைமை மேலும் மோசமடைந்தால்
கண்காணிப்புப் பணி கைவிடப்படும்
கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்லன்ட் எச்சரிக்கை</b>



நிலைமை மேலும் மோசமடைந் தால் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கைவிட நேரிடும்.
இவ்வாறு எச்சரித்துள்ளார் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ருப் ஹொக்லன்ட்.
"ரொய்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் வடக்கிலிருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களில் அநேகர் தங்களின் இடங்களில் இருந்து வெளியேறி வருகின்ற னர். கடந்த டிசெம்பர் மாதம் முதல் நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்தத் தாக்குதல்களின் பின்னால் இருப்பவர்கள் பொதுமக்கள் மீதே தாங்கள் பாதிப்பினை ஏற்படுத்துகிறோம் என்பதை உணர வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே.
சமாதான முயற்சிகளில் ஈடுபாட்டுடன் இருப்பதாக இருசாராரும் கூறினாலும் அவர்களால் பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியாதுள்ளது.
சுமார் ஆயிரம் பேரளவில் பாது காப்புத் தேடி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.
2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத் உடன்படிக்கையை மீறி இராணுவத்தின் ஊடுருவல் பிரிவு தங்களின் பகுதியில் ஊடுருவியிருப்பதாகவும் கிழக்கில் தங்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 3 பகுதிகளிலிருந்து தங்களின் சோதனைச் சாவடி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தாம் திரும்பிச் சுட்டதில் தாக்குதல் நடத்தியோர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற குழுவினராலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவிக்கிறது. ஆனால், அவர்கள் இராணுவத்தின் பராமரிப்பில் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.
வார இறுதியில் கடற்படையினரின் டோராப் படகின் மீதான தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான கண்ணிவெடித் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் மறுப்பினை சில இராஜதந்திரிகள் அல்லது ஆய்வாளர்கள் நம்பு கின்றனர்.
ஆத்திரமடைந்துள்ள பொதுமக்களே இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். ஆனால், இந்தச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு எனக் கூறுவதற்கான சரியான தகவல்கள் எங்களிடம் இல்லை. ஆனால், தாக்குதல்களைப் பார்க்கையில் தாக்குதல்களை நடத்தியவர்கள் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிகிறது.
அண்மைய தாக்குதல்களையடுத்து சில இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன. எனினும், தற்போது அந்த இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஆனால் நிலைமை மோசமடையுமானால் கண்காணிப்பு நடவடிக்கைகள் கைவிடப்படும்.
நாங்கள் இங்கு வந்திருப்பது போர்நிறுத்தக் கண்காணிப்பினை மேற்கொள்ளத்தான். அது இல்லாவிட்டால் நாங்கள் இங்கிருந்து சென்றுவிடுவோம்.
நிலைமை சிக்கலடைவதுடன் பாதுகாப்பற்ற நிலைமையிருப்பதாக உணரப்படுகையில் இங்கிருந்து எதனையும் செய்ய முடியாது. இங்கு இருப்பதில் எதுவித அர்த்தமும் இல்லை என்றார் ஹக்ரூப் ஹொக்லன்ட்.

http://www.uthayan.com/pages/news/today/10.htm

Print this item

  மட்டு. சட்டவாளர்கள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு
Posted by: மேகநாதன் - 01-12-2006, 09:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>மட்டு. சட்டவாளர்கள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு </b>


மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்களிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையி லான சந்திப்பு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் மற்றும் மட்டு நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. அன்புமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொண்டனர்.

அண்மைக் காலமாக படையினரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது, தடுத்து வைத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளைக் கையாளலாம் என்பது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் தெரிவித்துள்ளார்.


<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு & சங்கதி</i></b>

Print this item

  மட்டக்களப்பில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி
Posted by: மேகநாதன் - 01-12-2006, 08:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (11)

<b>மட்டு. அம்பிளாந்துறையில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி </b>



<b>மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறையில் எதிர்வரும் 20ம் திகதி தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.</b> மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இந்த எழுச்சிப் பேரணியை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. எதிர்வரும் 20ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிளாந்துறை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு உணர்வு ரீதியாக தமது உரிமைக் குரலை உலகறியச் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>

Print this item

  தைப்பொங்கல் 2006
Posted by: sinnappu - 01-12-2006, 08:22 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (46)

<b>வணக்கம் பிள்ளையள் உங்கள் எல்லாருக்கும் சின்னப்பு சின்னாச்சி சார்பாக பொங்கல் தினவாழ்த்துக்கள்</b>

நம்மட கூட்டுவள் சார்பாகவும் சொல்லுறன் நீங்களும் வாழ்த்துங்கோாாா
<img src='http://img73.imageshack.us/img73/556/sinnapongal7da.gif' border='0' alt='user posted image'>

Print this item

  இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்......
Posted by: Aaruran - 01-12-2006, 07:49 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (81)

<span style='color:green'>இன்றும் எங்கள் மத்தியில் இப்படியும் சில ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் இன்றுவரை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இது என்னுடைய அனுபவம், அதை ஈழத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இது ஈழத்தமிழர் ஒருவரால இயக்கப்படும் ஒரு இணையத்தளம் பற்றியது. அவரும் இந்த யாழ். இணையத் தளத்தின் அங்கத்தவராம். அவருடைய இணையத் தளத்தின் பெயரையறிய விரும்புவோர் எனக்குத் தனிப்பட்ட மடல் அனுப்பவும்.

அவரும் ஒரு ஈழத்தமிழராம், ஆனால் அவருடைய இணையத் தளத்தில் யாரும் ஈழத்தமிழரைப் பற்றியோ , அல்லது ஈழம் பற்றியோ அல்லது ஈழவிடுதலையைப் பற்றியோ எதுவும் பேசக்கூடாது, அப்படி ஏதாவது பேசினால் அவர் உடனடியாக அவற்றை அழித்து விடுவது மட்டுமல்லாமல், அவர்களையும் தடை செய்து விடுவார். அது மட்டுமல்ல, அ<b>வருக்கு இந்தியரை மட்டும் தான் பிடிக்குமாம், இந்தியப் பிரச்சனையை மட்டும் தான் பேசலாமாம், </b>விடுதலைப் போராலைகளையும், தேசியத் தலைவரைத் தூற்றியவர்களையும், ஈழத்தமிழர்களை அகதி நாய்கள் என்று வாய்க்கு, வாய் திட்டியவர்களையும் இந்த \"அகதிநாய்\" வாலாட்டிக் கொண்டு எப்படியெல்லாம் நக்குகிறது என்பதை அங்கு போய்ப் பார்த்தால் தான் தெரியும்.

எனக்கும் அவருக்குமிடையில் நடந்த E-MAIL பரிமாற்றமும், அவர் ஈழத் தமிழர்களைப் பற்றிய கூறிய கருத்துக்களையும் கீழே பதிக்கிறேன்

Quote:[size=14]Dear Webmaster,

Even you say that ‘we are all’ Tamils, then why the heck are you removing posts regarding Eelam Tamils? Tamil Nadu has 62.5 million Tamils living in it, but the World Tamil population is over 80 million and Eelam Tamils are part of the World Tamil community. Forums are alive and kicking because of the continuing exchange of thoughts and views. If you have a Tamil forum in the ‘world wide web,‘ then World Tamils will participate to discuss any kind of concern regarding the Tamil society. You can’t divide the Tamils by a country line and alienate their togetherness, I bet you would rather talk about Kashmir issue than Eelam Tamils’ issue eh?

We are all Tamils, Tamil nationalism is a trans-state nationalism but you are trying to divide the Tamil nationalism with a country line and you want to create a new forum for us. If you create a new forum for Eelam Tamil, then it would not cause you any legal problems? Are you trying to say that TN Tamils shouldn’t know and shouldn’t participate in Eelam Tamils’ issue and vice versa? Nice try anyway, I think all of the Tamil Nadu Tamils are hypocrites.

Aaruran
<b>Webmaster said:</b>

[size=14]I Did you see what are the replies you and Eelavan got. After that I removed. I also live in Canada. I'm trying to bring Indian tamils to our sites. This is clone of karuthu.com. Most of them are coming to this site because they think that Karthik & Kanimoli started this site. <b>I'm also Eela Tamilian. If I ban you, what would they think about us when they findout that I'm also Eela Tamilian</b>. There are many people on yarl.com to discuss about it. I'm there too.

I said that I'm creating a forum for all tamils not only for TN & Eelam, but Singapore, Malaysia, S. Africa. all the tamils wherever they live. But this forum to discuss about TN problems. Same thing I told Eelavan. He didn't post anything about our issues after that. <b>For now talk about their problems and bring TN Tamils to our sites.</b> Thats what I'm doing now. Lets help them by all means we can. After few months we can talk about our issues. <b>If they wants they'll understand our problems as well</b>. Don't post this on forum the forum

[size=14]<b>அவர் தன்னுடைய இணையத் தளத்துக்கு ஆட்களை வரச் செய்வதற்காக, இந்தியர்களை, அதுவும் ஈழத்தமிழரைத் தூற்றும், ஈழவிடுதலையைக் களங்கப் படுத்துவது ஒருபுறமிருக்க, அவரும் ஒரு ஈழத்தமிழரிலுள்ள வெறுப்புக்கு நல்ல எடுத்துக்காட்டு அவருக்கும், தமீழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப்படுத்தும் இந்தியர்களுக்குமிடையில் நடந்த கருத்துப் பரிமாற்றம்</b>

[quote][size=14]Webmaster,

Please put a another slot to discuss \"World\", then you may get more forumers (Srilankan, Malaysian, EU & USA NRIs).... It will be more helpful to discuss other international topics also.....

Actually a Srilankan Friend Mr. Aaruran suggested this site for me and other thatstamiltamil members..... But, now he can't be active here</span>....


<b>Webmaster said</b>
Quote:<b>I'm the one who asked both of them not to post anything about Srilankan issues</b>. Other members sent me PM about them. Also the postings on the thread were sensetive matters. <b>Thats why I asked them not to talk about any issues other than Indian.</b> But now I emailed them to join on the world Tamils' forum. Link to that forum also here. If anyone who likes to talk about other issues they can go there and discuss about it. I'll be there too. Lets keep this forum for indian issues. We've to do something for TN people as karuththu.com members. Which other forum is not going to do (has more members but just blah blah there).

<span style='color:green'>முதலில் ஈழம் சம்பந்தமான கருத்துக்களை அழித்து இனிமேல் பதிவு செய்ய வேண்டாமென்று, ஈழத்தமிழர்களைத் தடை செய்த இந்த 'ஈழத்தமிழர்\" இப்பொழுது ஒரு சாட்டுக்கு, அவரின் தமிழ்த்துரோகம் தெரிந்து விடும், சாயம் வெளுத்து விடும் என்று பயந்து ஒரு ஈழம் பகுதி அமைத்திருக்கிறாராம், அப்படியிருந்தும் அவரின் கருத்துப் படி , ஈழத்தமிழர்கள் \"Them\", அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்

Quote:<b>I don't want them here</b> because they are not going to get respect from other members. I read the replies to their posts. If anyone wants to talk about all the tamils' issues lets go talk about that there. Thats a common for all tamils. <b>This is for about indian issues.</b> keep it this way.

[quote]Still I prefer whoever want to discuss other than <b>indian issues </b>goto thetamils.com forum.

[size=15]<b>இவரும் ஒரு இலங்கைத் தமிழராம்</b></span>

[size=15]இவ்வளவு நாளும் நான் நினைத்தேன், நாங்கள் எல்லோரும் எங்களாலான வரையில், எங்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை, மற்றவர்களுக்கு எடுத்துரைக்க எல்லா வழிகளையும் பயன் படுத்த வேண்டுமென்று, இப்படியும் சில ஈழத்தமிழர்கள் எங்களிடையிலுள்ள போது, எங்களுக்கு எதிரிகள் தேவையா

Print this item

  தமிழீழம் : இறுதிப் போர் ?
Posted by: Birundan - 01-12-2006, 03:48 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

2002 இல் கைச்சாத்தாகி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த சமாதான ஒப்பந்தம் என்றுமில்லாதவாறு கடும் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் அடுத்து என்ன ? என்ற கேள்வி பலராலும் கேட்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

என்ன நடக்கும் என்ற நிஜத்திற்கு அப்பால் பல ஊகங்களின் அடிப்படையில் கருத்துகள் கூறப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சம்பந்தப் பட்ட அனைத்துத் தரப்பும் பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

சமாதான உடன்பாட்டாளர்கள் என்ற நிலையில் இருக்கும் நோர்வேயினதும் சமாதான இணைநாடுகளினதும் செயற்பாடுகளை மீறிய வகையில் களநிலவரம் வரலாறு காணாத கொடிய போர் ஒன்றுக்கான திசையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களும் மக்கள் எழுச்சிப் படை என்ற பெயரில் இடம் பெறும் பதிலடிகளும் சாமாதானத்தின்பால் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கைகளைக் குறைத்த வண்ணமே இருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து அரசு சாரா தொண்டர் அமைப்புக்கள் பல தமது செயற்பாடுகளை இடைநிறுத்தி வெளியேறிக்கொண்டிருக்கின்றன. பல நாடுகள் தமது பிரஜைகளை வடக்கு கிழக்குப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன.

எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றும் வகையில் ஆளும் சுதந்திர முன்னணியின் கூட்டாளிக் கட்சியான ஜே.வி.பி நோர்வேயின் பேச்சு வார்த்தைக்கான அழைப்பை நிராகரித்ததுடன் ' அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற நிலையிலிருந்து நோர்வே விலகினால் மட்டும் அந்த நாட்டுடன் எந்தப் பிரச்சனை குறித்தும் பேசுகின்றோம். நோர்வேயை சிறிலங்காவின் எதிரணியாகவே பார்க்கின்றோம். ' எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றது. மற்றொரு கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ' வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்பதற்கு சான்றுகள் உள்ளதா ? இருந்தால் நேரடி விவாதத்திற்கு தயார் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். தென் இலங்கைக் கட்சிகள் மட்டுமன்றி மக்களும் ஒரு போரினை விரும்பும் மன நிலயிலேயே இருக்கின்றனர் என்பதை மக்கள் முன்னணிகள் விடுக்கும் அறிக்கைகளில் இருந்து கணித்துக் கொள்ளலாம். அண்மையில் திருமலையில் ஐந்து மாணவர்கள் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. படையினர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது அராஜகம் என்ற ரீதியில் வடக்கு கிழக்கு சிங்கள முன்னனி என்ற அந்த அமைப்பு அறிக்கை விட்டிருக்கின்றது.

தமிழர் தரப்பில் இராணுவத்தின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பொங்கி எழும் மக்கள் படை என்ற பெயரில் பதில் தாக்குதலும் கண்டன அறிக்கைகளும் வெளியிடப் படுகின்றது. இத்தாக்குதல்கள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுத லைப் புலிகளாலேயே நடைபெறுகின்றது என்னும் அரசின் குற்றச் சாட்டுகளிற்கு பதில் கூறிய கண்காணிப்புக் குழுத்தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்ட் 'விடுதலைப் புலிகளே இத்தாக்குதல்களை நடத்தினார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை ' என தமது அறிக்கையில் குறிப்பிட்ட அவர் எனினும் நன்கு பயிற்சி பெற்றவர்களாலேயே இத்தாக்குதல்கள் நடை பெற்றிருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பதிலடி கொடுக்கவும் மக்களைப் பயிற்றுவிப்பதாக விடுதலைப் புலிகள் பகிரங்கமாகவே அறிவித்து அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கண்காணிப்புக் குழுவின் தலைவரின் அறிக்கை பொருள் பொதிந்ததாகவே காணப் படுகின்றது.

அதே நேரம் 08 ஜனவரி 2006 இல் தமிழீழத் தொலைக்காட்சியில் நடை பெற்ற கருத்தரங்கு ஒன்றில் மூத்த உறுப்பினரான கா. வே. பாலகுமாரன் கூறிய கூற்றையும் இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ' சிறிலங்கா இராணுவத்தால் மக்கள் தாக்கப் பட்டு அவர்கள் இடம் பெயரும் போது அந்த மக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த மக்களைக் கொண்டே இராணுவத்தைத் திருப்பித் தாக்கும் படையையும் தயாரித்து ஒரு பாரிய வராலாற்றுத் திருப்பத்தை வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக உருவாக்கப் போகின்றோம் என்பதுதான் எங்களது தீர்க்கமான தீர்மானகரமான அரசியல் இராணுவரீதியான சிந்தனையும் கூட என்று தெரிவித்திருக்கின்றார்.

இதே வேளை சமாதானப் பேச்சுவார்த்தக்கு இரு தரப்பையும் கொண்டு வர வேண்டிய தார்மீக நிலைப்பாட்டைக் கடந்து அமெரிக்கா விடுதலைப் புலிகளை மட்டும் கடும் தொனியில் எச்சரித்துள்ளது. ' இலங்கையில் விடுதலைப் புலிகள் வன்முறையை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் ' என்று அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெட் கொழும்பில் நடைபெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பில் அமெரிக்க அரசின் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். 'சிறிலங்கா அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கவும் தன்னைப் பாதுகாக்கவும் நாம் உதவுகின்றோம். வர்த்தகர்களுடனான கூட்டத்தில் அமெரிக்கத் தூதுவர் ஏன் இவ்வாறு கடுமையாகப் பேசுகின்றார் என்ற கேள்வி எழக் கூடும். அமைதி முயற்சிகள் வர்த்தக முயற்சிகளுக்கு அவசியமானது ' என்று தெரிவித்ததோடு பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் பற்றி எதுவித அனுதாபமும் தெரிவிக்காத அமெரிக்கா இலங்கை மீதான கரிசனைக்கான காரணத்தையும் தெளிவு படுத்தியுள்ளது. உலகின் ஜனநாயகத்தின் காவலர்களாகத் தம்மை இனங்காட்டி இன்று ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் வலிந்து யுத்தங்களைத் திணித்து அதனால் அமெரிக்க வரி செலுத்துபவர்கள் தலையில் இரண்டு திரிலியன் டொலர்களைக் கடனாகச் சுமத்தியிருக்கும் அமெரிக்காவின் ஜனநாயக அணுகு முறை இவ்வாறு மிரட்டலாக வெளிப்பட்டிருக்கின்றது. அங்க வீனர்களான அமெரிக்க இராணுவ வீரர்களின் ஆயுள்கால பராமரிப்புச் செலவும் இதனுள் அடங்கும் என்று அண்மையில் வெளியிடப் பட்ட ஆய்வறிக்கை கூறுகின்றது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை வழி மொழியும் அவுஸ்திரேலியாவும் சம்பவங்களைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கர வாதப் பட்டியல் தொடர்பான வழிகாட்டுதலை அமைதிப் பேச்சு வார்த்தகளைக் காரணம் காட்டி நோர்வே நிராகரித்துள்ளது. அதே நேரம் சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் நிலைப்பாடு வெளிப்படையான இலங்கை அரசிற்கான உதவிகளாக இருக்காது என்பதை சமீபத்தில் இடம் பெற்ற அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஊகிக்க முடிகின்றது. முக்கிய இடதுசாரித் தலைவரான பரதன் உட்பட தமிழகக் கட்சிகளின் நிலைப்பாடு இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீட்டை எதிர்ப்பதாகவே இருக்கின்றன.

இதற்கிடையில் ஊடகங்களும் பிரபல அரசியல் ஆய்வாளர்களும் யுத்தம் ஏற்பட்டால் யுத்தத்தின் போக்கு எவ்வாறு இருக்கக் கூடும் என்பதை ஆரூடம் கூறத் தொடங்கி விட்டனர்.

இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் இலக்கு ' யாழப்பாணம் தான் ' என்று ரொய்டர் செய்தித் தாபனத்தின் அரசியல் ஆய்வாளர் பீற்றர் ஆப்ஸ் அடித்துக் கூறுகின்றார்.

'' யாழ்ப்பாணம் தான் அவர்களின் பிரதான இலக்கு '' என்று வழி மொழிகின்றார் பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ். ''மரபுவழிப் படைத்தாக்குதலில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகள் பல்லவீனமானவர்களாகக் கருதப்பட்டாலும் அவர்களின் கொரில்லாத் தாக்குதல் பலம் வாய்ந்ததாக இருக்கும்" என்றும் கருத்துத் தெரிவிக்கின்றார்.

அதே நேரம் தாக்குதலுக்குள்ளாகும் இலக்குகளாக கடல்வழி விநியோகப் பாதையும் பலாலி விமானத்தளமும் இருக்கக் கூடுமெனவும் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். யாழப்பாணக் குடா நாட்டில் முகாமிட்டிருக்கும் 40 ஆயிரம் இராணுவத்தினருக்குமான விநியோகப் பாதைகளாக இவ்விரு பாதைகளுமே இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்சம் விமான ஓடுபாதையும் எரிபொருள் களஞ்சியங்களும் தாக்கி அழிக்கப் படலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இத்தாக்குதல் வெற்றியடையக் கூடும் என்ற எதிர்வு கூறலுக்கு பின் வரும் காரணங்களை எடுத்துக்காட்டுகின்றார். " யாழ்ப்ப்பாணக் குடாநாடு சந்தேகமில்லாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. ஆனாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் எப்படி இத்தனை கைக்குண்டுகளும் கண்ணிவெடிகளும் கடத்தி வரப்பட்டன ? " என்று கேள்வி எழுப்புகின்றார் இக்பால் அத்தாஸ்.

சிறிலங்காவிற்கான அமெரிக்க இராணுவத்தின் பயிற்சிகளைத் தொடர்ந்து இராணுவ உதவிகள் அதிகரிக்கக் கூடும் என்றும் இவ்வுதவிகள் ஆயுதங்களையும் பெரும் தொகை நிதியையும் கொண்டிருக்கக் கூடும் என்றும் எதிர்வு கூறும் சில ஆய்வாளர்கள் சர்வதேச நாடுகள் படைத்தரப்பை அனுப்பும் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். சர்வ தேச நாடுகள் படைத்தரப்பை அனுப்பாது என்பதை சமாதான சபையின் தலைவர் ஜெகான் பெரேராவும் வழி மொழிகின்றார்.

யுத்தம் வரப்போகின்றது என்பதை எதிர்பார்க்கும் அனைத்துத் தரப்பும் அப்படி வந்தால் அது இதுவரை இல்லாத வகையில் மிகவும் கடுமையானதாக இருக்கக் கூடும் என்பதையும் ஒத்துக் கொள்கின்றார்கள்.

http://ilanthirayan.blogspot.com/2006/01/b...og-post_11.html

Print this item

  anybody know about Pranavan?
Posted by: Jeeva - 01-12-2006, 02:40 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - No Replies

யாருக்கும் தெரியுமா? யாழிழ் சுடபட்ட பிரனவனன பற்றி.................[/code]<ul>

Print this item