![]() |
|
சொல்ஹெய்மின் வருகை எதையும் சாதிக்காது அவர் வரும்போது களம் .. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சொல்ஹெய்மின் வருகை எதையும் சாதிக்காது அவர் வரும்போது களம் .. (/showthread.php?tid=1463) |
சொல்ஹெய்மின் வருகை எதையும் சாதிக்காது அவர் வரும்போது களம் .. - Vaanampaadi - 01-12-2006 சொல்ஹெய்மின் வருகை எதையும் சாதிக்காது அவர் வரும்போது களம் கடுமையாக இருக்கும் "நிலவரம்' நிகழ்ச்சியில் பாலகுமாரன் கருத்து சொல்ஹெய்மின் வருகையால் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது. அவர் இங்கே வரும் போது களநிலைமை கடுமையாக இருக்கும். இவ்வாறு கருத்து வெளியிட்டுள் ளார் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் கா.வே.பாலகுமாரன். தமிழீழத் தேசியத் தெலைக்காட்சி யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளி பரப்பாகிய "நிலவரம்' நிகழ்ச்சியில் ""சிறிலங்கா அரசாங்கத்தின் படுகொலை அரசியல் சர்வதேச நிலைப்பாடுகள்'' என்ற தலைப்பில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமா ரன் மற்றும் மூத்த ஆய்வாளர் திருநா வுக்கரசு ஆகியோர் தங்களது கருத்து களைப் பகிர்ந்து கொண்டனர். இதன்போது கா.வே.பாலகுமாரன் தெரிவித்ததாவது: சிறிலங்காவின் தொடக்கமும் முடி வும் படுகொலை அரசியலாக உள்ளது. இந்தப் படுகொலைகளே எங்கள் வெற்றி யாக மாறும். இதற்குத் தமிழ்நாட்டில் ஏற்பட்ட எதிரொலியைச் சொல்லலாம். வரலாறு திரும்புகிறது என்பதை கொழும்புத் தேடுதல் நடவடிக்கைகள் சொல்கின்றன. 80ஆம் ஆண்டுக்குப் புலிகள் போவதாக சரத்பொன்சேகா சொல்கிறார். உண்மையில் அவர்கள்தான் போகிறார்கள். கற்றுக்குட்டி அரசியல்வாதிகளான மகிந்த மற்றும் மங்களவை நம்பிச் செயற்படலாமா எனச் சர்வதேசம் சந்தேகம் கொள்கின்றது. ஜே.வி.பியினர் எரிக் சொல்ஹெய்மை எதிர்த்துக் கொண்டிருக்கிற போது அவருக்கு சமாதான அமைச்சர் பதவி கொடுத்துள்ளமை என்பது ஜே.வி. பிக்கு செருப்பால் அடித்தது போன்றது. எரிக்சொல்ஹெய்மின் இலங்கை வருகையால் எதையும் சாதிக்க முடி யாது. தீவிரவாதிகளைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்திடம் நடு நிலையான ஒருவர் சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது. எரிக்சொல் ஹெய்ம் இங்கே வரும்போது கள நிலைமை கடுமையாக இருக்கும். எந்தத் தீர்வையும் செய்ய வக்கற்ற சிங்கள அரசுக்கு இருக்கும் ஒரே வழி போர் தான். அதற்குத்தான் கோத்தபாய ராஜபக்ஷ, கொட்டகதெனிய, சரத்பொன் சேகாவை நியமித்திருக்கிறார்கள். யாழிலிருந்து வன்னிக்கு மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். பலவீன மான மக்களைக் கண்டால் எதிரி பாய்ந்து பாய்ந்து தாக்குவான் என்று ஒரு தடவை தேசியத் தலைவர் கூறி யிருந்தார். இப்போது எம் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரு தகுதி நிலையை உருவாக்கி வைத்துள் ளோம். விடுதலைப் போராட்டத்தின் இறு திக் காலகட்டத்தில் எங்கள் மக்கள் மீது இப்படியான பாரிய தாக்குதல்கள் நடை பெறக் கூடும் என்று நாங்கள் எதிர் பார்த்திருந்தோம். அப்படித் தாக்குதல் நடத்தப்படும் போது அந்த மக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த மக்களைக் கொண்டே படைகளைத் திருப்பித் தாக்கும் படையையும் தயாரித்து ஒரு பெரிய வரலாற்றுத் திருப்பத்தை வன் னிப் பெருநிலப்பரப்பினூடாக உருவாக் கப்போகிறோம் என்பதுதான் எங்களது தீர்க்கமான தீர்மானகரமான அரசியல் இராணுவ ரீதியான சிந்தனையும் கூட. யாழ்ப்பாணம் மற்றும் இதர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற் கான பகுதியாக இன்றைக்கு வன்னிப் பெருநிலம் இருக்கிறது. கொடுமையான அடக்கு முறைகளி லிருந்து எமது மக்கள் தப்பிக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாங்கள் சொல்வதற்கு முன்னதாகவே ஏறத்தாழ ஆயிரம் குடும்பங்கள் வந்து விட்டன. எங்கள் மக்களை நாங்கள் பத்திரமாக குடியேற்றிப் பார்ப்பதற்கும் வன்னிப் பெருநிலப்பரப்பின் குடித்தொகை பர வலைச் செறிவாக்கி இந்தப் பகுதியை நாங்கள் வளமிக்க பூமியாக்கி யாழ். மாநகரத்தை ஒரு பண்பாட்டுத் தளமா கத் தக்கவைத்துக் கொள்வதற்கான திட்டங்களை மேற்கொள்வதற்கும் இப் படியான இடப்பெயர்வுகள் அவசிய மாகவும் இருக்கின்றன. இவ்வாறு கூறினார் வே.பாலகுமாரன். மூத்த அரசியல் ஆய்வாளர் திரு நாவுக்கரசு தமது கருத்துரையில் கூறியதாவது: மகிந்தவின் நிலைப்பாடு இந்திய அமெரிக்க அரசுகளோடு ஒத்துப்போக வில்லை. மகிந்த அரசு யதார்த்தத்தி லிருந்து தூரத்திலிருந்து இருப்பதாகவே அவை கருதுகின்றன. தொடர்ச்சியான இராணுவ ஒடுக்கு முறைகள் தனியரசுக்கான கருத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதுதான் தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்களின் விருப்பமாக வளருகிறது. மகிந்த சிந்தனை என்பது புதிய சிந்தனை அல்ல. அரசியல் மற்றும் பொரு ளாதாரத் தீர்வுகள் எதுவும் புதிது அல்ல. மகிந்த இப்போது யதார்த்தத்தை நோக்கி அரசியல் அகர வரிசை நோக்கி நகர்ந்துள்ளார். தீர்மானம் எடுக்கிற நிலையில் மகிந் தவை சந்திரிகா வைத்திருந்தது இல்லை. அமைச்சரவை செய்தியாளர் என்று, அதாவது அமைச்சரவைச் செய்திகளை வெளியே சொல்லுகிற வர் என்றுதான் சந்திரிகா அவரை அழைத்திருக்கிறார். திடீரென அரசியல் முடிவு எடுக்கும் நிலைக்கு இப்போது அவர் வந்துள் ளார். அதனால் அதிர்ச்சியில் உள்ளார். புலிகளைவிட அவருடன் இருக்கிற ஜே.வி.பி. மற்றும் தீவிரவாதிகள்தான் எதிரிகள் என்று ஜெகான் பெரேரா கூறியுள்ளது உண்மையே என்றார். http://www.uthayan.com/pages/news/today/21.htm |