Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 257 online users.
» 0 Member(s) | 255 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,296
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,622
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ஜேர்மனியில் ரயில் மோதி யாழ். இளைஞன் பலி
Posted by: வினித் - 01-11-2006, 02:11 PM - Forum: புலம் - Replies (7)

[b]ஜேர்மனியில் ரயில் மோதி யாழ். இளைஞன் பலி

ஜேர்மனியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரயிலுடன் மோதுண்டு யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தொனி கரவெட்டியைச்
இவர் காதில் `வோக்மன்' அணிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்ததால் தண்டவாளத்தை கடக்கும் போது எதிரே வந்த ரயிலை அவதானிக்க முடியாது போனதால் இந்த அநியாய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

நன்றி:தினக்குரல்

Print this item

  யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்"
Posted by: வினித் - 01-11-2006, 12:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்": ரொய்ட்டர்ஸ்</b>

[புதன்கிழமை, 11 சனவரி 2006, 16:33 ஈழம்] [ச.விமலராஜா]
இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்கினால் யாழ்ப்பாணம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கூறுகிறது.


ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்தின் ஊடகவியாலாளர் பீற்றர் ஆப்ஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை:

இலங்கையின் இரு தசாப்த கால யுத்தம் மீண்டும் கொழுந்து விட்டெரிந்தால் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இராணுவ விநியோகப் பாதைகள் மீது கொரில்லாத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் மையமான பகுதியாக யாழ்ப்பாண குடாநாட்டை விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.

ஆனால் கடந்த காலங்களில் சிறிது காலம்தான் அதை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண குடாநாடு உள்ளது. எனினும் இந்த யாழ்ப்பாணக் குடாநாடு, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

"யாழ்ப்பாணம் அவர்களது பிரதான இலக்கு" என்கிறார் இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்.

"கண்டிப்பாக தாக்குதல்கள் உக்கிரமாக இருக்கும். நீங்கள் மரபுவழி யுத்தத்தை எதிர்பார்த்தால் அவர்களால் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முடியாது. அதனால் நாங்களும் இங்கே கெரில்லா யுத்தத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம்" என்றார் இக்பால் அத்தாஸ்.

கடந்த 4 ஆண்டுகளில் பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமையால் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஒப்பந்தம் இடைநிறுத்த நிலையில் உள்ளது. ஆனால் அண்மைய சில வாரங்களில் அமைதி என்பது மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் சுற்றுக்காவல் மற்றும் வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதலில் 39 படைப்பிரிவினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தில் சுற்றுக்காவலை மேற்கொண்டவர்கள். விரைவிலோ பின்னரோ யுத்தம் தொடங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

போராளிகளால் மேற்கொள்ளப்படக் கூடியதாக சந்தேகிக்கப்படும் இந்தத் தாக்குதல்களால் யாழ்ப்பாண நகரில் இராணுவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களைத் தாக்கி இராணுவம் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாகவும் அந்த மக்கள் மீது யுத்தத்தை திணிப்பதாகவும் புலிகள் இப்போது குற்றம்சாட்டி வருகின்றனர்.

நிழல் அரசாங்கத்தையும் கடற்பிரதேசத்தையும் வைத்துள்ள போராளிகள் 2002 ஆம் ஆண்டு முதல் யுத்த நிறுத்தத்தைச் செயற்படுத்தி வருகின்றனர். 40 ஆயிரம் சிறிலங்கா படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். விடுதலைப் புலிகளின் இராணுவத்தினது எண்ணிக்கை மிக வலுவான 20 ஆயிரம் பேர். ஆயினும் இராணுவத்தின் பிரதான விநியோகப் பாதையாக ஆகாயம் மற்றும் கடல்வழி மார்க்கங்களே இருக்கின்றன.

சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு கடற்புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. யுத்தம் ஒன்று வந்தால் இராணுவத்தின் கடல்வழி விநியோகப் பாதையையும் அவர்கள் தாக்கக் கூடும் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

அதேபோல் பலாலி விமான தளத்தின் மீதும் கடும் தாக்குதல் நடைபெறக்கூடும். அதனைத் தக்க வைத்துக் கொள்ள இராணுவம் மிகக் கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"பலாலி விமான ஓடுபாதையையோ அல்லது எரிபொருள் தாங்கிகளையோ சிதைத்துவிடக் கூடும்" என்கிறார் இக்பால் அத்தாஸ்.

"யாழ்ப்பாண குடாநாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது சந்தேகத்துக்கு இடமில்லாததுதான். ஆனால் இப்போது எந்த அளவுக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது கேள்வியாக எழுகிறது. ஏனெனில் எப்படி இத்தனை கைக்குண்டுகளும் கண்ணிவெடிகளும் யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் கடத்திவரப்பட்டன?" என்கிறார் அத்தாஸ்.

யாழ்ப்பணத்தில் உண்மையில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு வலுவானது வெளிப்படையானது என்கிறார்கள் பெரும்பாலான ஆய்வாளர்கள்.

யாழ்ப்பாணத்தைப் போராளிகள் கடுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் போது அதிகப்படியான மக்களும் இந்தத் தாக்குதலில் இணைந்து கொள்வார்கள் என்றும் சிலர் நம்புகின்றனர்.

"அரச தரப்பில் நீண்டகால யுத்தத்துக்கான உற்சாக மனநிலை ஏதும் இல்லை" என்கிறார் அரசியல் சாரா சமாதான சபையின் தலைவர் ஜெகான் பெரேரா.

அமைதிப் பேச்சுக்களை தொடங்குவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி தங்களது வலுவை வெளிப்படுத்துவார்கள் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"அரச இராணுவத்தால் மிகச் சிறிய அளவில்தான் நகர முடியும். அவர்களது நிலைகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அடர்ந்த வனப்பகுதியில் தங்களது வலுவான தளத்தை அமைத்துள்ளனர். அரசாங்கத்தின் பலமோ நகரங்களிலும் வீதிகளிலும்தான் உள்ளது. ஆகையால் மிகச் சிறிய அளவில்தான் அவர்களால் நகர முடியும்" என்கிறார் ஆய்வாளர் மரியா கூசிஸ்டோ.

எந்த ஒரு தரப்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை விலக்கி, புதிய பிரச்சனை அதிகரித்தால் ஐரோப்பிய போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறிவிடுவர். ஆழிப்பேரலை தாக்குதலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மீளமைப்புப் பணிகள் பாதிக்கப்படும்.

ஆனால் சர்வதேசத்தின் ஆதரவை வலுப்படுத்த தென்னிலங்கை தீவிரமாகும். ஏற்கனவே அமெரிக்க இராணுவத்தின் பயிற்சிகளைப் பெற்று வருகிறார்கள். யுத்தம் மீளத் தொடங்கினால் இந்த இராணுவ உதவிகள் அதிகரிக்கும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

இந்த ஆதரவு என்பது ஆயுதங்களாகவும் பெருந்தொகையான நிதியாகவும் இருக்கலாம்- சர்வதேச நாடுகள் படைத்தரப்பை அனுப்பாது என்கிறார் சமாதான சபையின் தலைவர் ஜெகான் பெரேரா. "அதேநேரத்தில் இராணுவத் தொழில்நுட்ப ஆலோசகர்களும் இங்கே வரக்கூடும்" என்றார் ஜெகான் பெரேரா என ரொய்ட்டர்ஸ் செய்திக் கட்டுரை விவரித்துள்ளது.

நன்றி:புதினம்

Print this item

  Tamil Women Appeal to Human Rights Commission
Posted by: Vaanampaadi - 01-11-2006, 11:06 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Tamil Women Appeal to Human Rights Commission</b>
Wednesday, 11 January 2006, 1:58 pm
Press Release: TamilNet
The Appeal to Human Rights Commission
Two young women from Malusandi in Vadamaradchi have lodged complaints with the Sri Lankan Human Rights Commission on 02.01.2006 about attempted rapes by the Sri Lankan armed forces.

The women said that on 01.01.2006 the Sri Lankan armed forces cordoned the area where their home is located and while several soldiers were standing watch outside their home some of the soldiers entered their home and attempted to rape the two women. The two women have fought off the offenders and managed to escape.

Jaffna peninsula has come under severe military atrocities in recent times. Tamils, especially the women and children are pushed into a state of fear. This situation must be condemned by everyone with humanitarian concerns. We urge that they take all actions in their capacity to change this situation.

The rape and murder of Tharshini of Punguduthivu has made a deep wound in the minds of Tamil women. They are struggling to recover from this.

Tamil society is very protective of women folk. Violence and humiliation of Tamil women outrages the entire Tamil society. It also infuriates young Tamil men and pushes them to violence.

In this context tightening the military control will also psychologically affect the Tamil women and will enrage them to seek violent means to respond. I therefore wish to emphasize to the Sri Lankan government to remove the military from Tamil residential areas and bring about normalcy in people’s lives.

International community must become acutely aware of the growing violent environment in Sri Lanka. I hope and expect the international community to urge the Sri Lankan government to remove the military from Tamil residential areas to calm the situation.

http://www.scoop.co.nz/stories/WO0601/S00074.htm

Print this item

  இரண்டடிக்குள் இரண்டரை கோடி!
Posted by: Rasikai - 01-10-2006, 11:22 PM - Forum: கவிதை/பாடல் - Replies (39)

<b>இரண்டடிக்குள் இரண்டரை கோடி!</b>

<img src='http://img157.imageshack.us/img157/4736/american20crow20reduced9js.jpg' border='0' alt='user posted image'>

<b>நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்.....
குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்!
அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு..
மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு...

ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...

பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்..
அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட..
தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற
ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா?

அழகில்லைத்தான்..அசிங்கம்தான்...
ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது..
உதவாத பழக்கம் தான்...
இருந்தும் மனம் ஏங்கியது...........

அடடா....
அழகிய வாழ்வென்பதை இவர்களின் பெயரில் மட்டும்
எழுதி வைத்துவிட்டு ஒளிந்து கொண்டவனே..
இறைவா... எங்களுக்கும் கொஞ்சம் தாவேன் என்றபடி!

அங்கே என்னடி பராக்கு- அதட்டினாள் அம்மா..
திரும்பி திரும்பி அவர்களை பார்த்தபடி வீட்டுள் நுளைந்தேன்!
எம்முள் சிலருக்கு ஏன் இப்படி ஒருவாழ்வு இல்லை?? வாழ தெரியவில்லை??
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள்..செவ்வந்தியை சுற்றிய தேனீக்களாய்..
விடைமட்டும் கடலில் கரைத்த உப்பென இன்னும் காணோம்!

இரண்டடி கூட கொள்ளா கூட்டுக்குள்
இரண்டரை கோடி சந்தோசங்களா?
ம்ம்ம்ம்ம்..........
காகம் கொடுத்து வைத்த பிறவிதான்!!</b>

Print this item

  இலங்கேஸ்வரன் ஆர் எஸ் மனோகர் காலமானார்
Posted by: AJeevan - 01-10-2006, 09:23 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (11)

<b>பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர் எஸ் மனோகர் மரணம்</b>

தமிழ்த்திரயுலகின் பழம்பெரும் நடிகரும், நாடகக் கலைஞருமான ஆர் எஸ் மனோகர் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார், அவருக்கு வயது 81. மனோகர் சிறிது காலமாகவே உடல்நலக் குன்றியிருந்தார்.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/01/20060110171002mano21.jpg' border='0' alt='user posted image'>
ஆர் எஸ் மனோகர்

இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஆர் எஸ் மனோகர், <b>இலங்கேஸ்வரன்</b>, சுக்ராச்சாரியார் போன்ற அவரின் நாடங்களின் மூலமும் புகழ் பெற்றார்.

தமிழ் நாடக உலகில் இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி அதில் பெரும் பொருட் செலவில் புதுமையான யுத்திகள், தந்திரக் காட்சிகளையும் இடம் பெறச் செய்தவர் மனோகர்.

-பீபீசி தமிழ்

Print this item

  புலிகளை மிரட்டும் அமெரிக்கா
Posted by: வியாசன் - 01-10-2006, 09:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (13)

அமைதிப் பேச்சுக்கு புலிகள் திரும்ப வேண்டும்: அமெரிக்கா
ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 சனவரி 2006இ 22:43 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ
இலங்கையில் விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டுவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா கடும் தொனியில் எச்சரித்துள்ளது.


கொழும்பில் வர்த்தகர்களுடனான சந்திப்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் ஜெப்ரி லுன்ஸ்டெட் பேசியதாவது:

அமைதிப் பேச்சுகளை கைவிட விடுதலைப் புலிகள் முடிவு செய்தால் அவர்கள் அதிக வலுவுள்ள சிறிலங்கா இராணுவத்துக்குக் கடுமையாக முகம் கொடுக்க நேரிடும் என்பதை தெளிவாக நாம் சொல்லுகிறோம்.

இலங்கை அமைதி முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபாட்டுதான் இருக்கிறது. பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் யுத்திகள்இ சட்டவிரோத நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவைகளுக்காக எமது இராணுவ பயிற்சிகள் மற்றும் உதவிகள் இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு விட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றார் அவர்.

சிறிலங்கா அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கவும் தன்னை பாதுகாக்கவுமான வலுவைப் பெறுவதற்கு நாம் உதவுகிறோம்.

வர்த்தகர் கூட்டத்தில் இத்தனைக் கடுமையாக அமெரிக்க தூதர் ஏன் பேசுகிறார் என்று உங்களுக்கு கேள்விகள் எழக் கூடும். அமைதி முயற்சிகள்இ வர்த்தக சமூகத்தினருக்கு அவசியமானது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தைச் சொல்லிலும் செயலிலும் கைவிட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றார் அவர்

சுட்டது புதினத்திலிருந்து

Print this item

  தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நடவடிக்கைக் குழு
Posted by: MEERA - 01-10-2006, 08:00 PM - Forum: நிகழ்வுகள் - Replies (3)

http://www.tamilnaatham.com/advert/20051215/LONDON/

Print this item

  புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு
Posted by: Vaanampaadi - 01-10-2006, 06:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (9)

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை: விடுதலைப் புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு!
[செவ்வாய்க்கிழமை, 10 சனவரி 2006, 22:09 ஈழம்] [ம.சேரமான்]
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய அதன் உறுப்பு நாடுகள் சில எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு ஆகக் கூடியதான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் தடை செய்வது என்பது சரி அல்ல என்றும் அந்த நாடுகள் வாதிட்டுள்ளன.

அமைதிப் பேச்சுகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் தொடர்பான வழிகாட்டுதலை நோர்வே அரசாங்கம் அண்மையில் நிராகரித்திருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கேயும் புலிகளைத் தடை செய்ய எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Puthinam

Print this item

  சர்வதேசமே விழித்துக்கொள்!
Posted by: வினித் - 01-10-2006, 01:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

செவ்வாய் 10-01-2006 17:13 மணி தமிழீழம் [கனடா நிருபர்]

<span style='font-size:25pt;line-height:100%'>சர்வதேசமே விழித்துக்கொள்!</span>

<b>ஈழத் தமிழ் மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தினரால் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வரும் மனித உரிமை அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து கால்ற்றன் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பு பெரும் விசனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன் தமது கடும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது. இந்த ஜனநாயக அத்து மீறல்களை இலங்கை அரச படைகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இது சார்ந்த அழுத்தத்தினை கனேடிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று எமது கோரிக்கையினையும் இப்பிரசுரம் வழியாக சர்வதேச சமூகத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களாகிய நாம் முன் வைக்கின்றோம்.

இலங்கை இராணுவத்தினரின் வன்முறைகளில் இருந்து எமைப் பாதுகாத்து கொள்ளவே நாம் புலம் பெயர் அகதிகளாய் இங்கு தஞ்சம் புகுந்தோம். கனேடியத் தமிழர்களாய் நாம் இங்கு வளர்க்கப்பட்டிருந்தாலும் எமது இரத்த உறவுகளில் பலர் இலங்கையில் மாணவர்களாய் கல்வி பயில்கின்றனர். அவர்கள் நாளாந்தம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அவர்களுடனான நேரடித் தொடர்புகள் எமக்குப் பகிரங்கப்படுத்துகின்றன.

எம் தாயகத்தில் எமது மாணவ சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் கைது நடவடிக்கைகள், தாக்குதல்கள், சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள், மற்றும் ஈவிரக்கமற்ற கொலை நடவடிக்கைகள் என்பன புலம் பெயர் மாணவர் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியை தரும் அதே வேளை எமை விரக்தியின் விளிம்பிற்கே இட்டுச் செல்கின்றன. எமது சகோதரர்களில் யாரேனும் எப்போதாவது கொல்லப்படலாம் என்கின்ற வேதனை எமை ஆழ்ந்த மன உளைச்சலுக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது. கனேடியப் பல்கலைகழகங்களில் பட்டதாரி கல்வியினை மேற்கொண்டிருக்கும் நாம் இந்நிகழ்வுகளால் பெரும் மனச் சஞ்சலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தொடரும் இவ் மன அழுத்தங்களால் எமது கல்வி சார் திறன்கள் மழுங்கடிக்கப்பட்டு சமுதாயத்தில் எமது அங்கீகாரமும் மட்டுப்படுத்தப்படுகிறது. கனேடிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் கனேடிய தமிழ் மாணவர்களாகிய எமது நிலைப் பாட்டினை கனேடிய அரசு புரிந்து கொள்ளும் என நாம் திண்மையாக நம்புகிறோம். எமது முற்று முழுதான திறனை கனேடிய அரசு உள்வாங்கிக் கொள்ள வேண்டுமெனில், எமது மன உளைச்சலுக்கு அடிவேராய் இருக்கும் ஈழத் தமிழ் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு கனேடிய அரசு எமக்கு உதவ முன்வர வேண்டும்.

'கல்வித்தரப்படுத்தல்' என்கிற பெயரில் ஈழத்தமிழ் மாணவர்கள் மீது ஆரம்பிக்கப்பட்ட அடக்கு முறையானது அண்மைக் காலங்களில் காட்டு மிராண்டித்தனத்தின் உச்சக்கட்டத்தை எய்தியுள்ளது. இலங்கை அரச படைகளின் மிலேச்சத்தனதிற்கு ஆதாரமாக பின்வரும் சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

1) இளையதம்பி தர்சினி (வயது20) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை.

2) யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அமைதிப் பேரணியில் இலங்கை இராணுவம் நடாத்திய துப்பாக்கிச் சூடு.

3) அருள் அஜந்தன் (வயது16) கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை.

4) திருகோணமலையில் அராஜகமான முறையில் ஐந்து மாணவர்கள் காடைத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டமை.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் குறுகிய காலத்தில் இலங்கைக் கண்காணிப்புக் குழுவினர் தொழிற்பாட்டில் உள்ள பொழுது நடந்துள்ளதுடன் இதில் சம்மந்தப் பட்ட கயவர்கள் மீது எந்த விதமான சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்விடயங்கள் தொடர்பாக தகுந்த தீர்வினை ஏற்படுத்தக் கூடிய திறமையும், ஆளுமையும் கனேடிய அரசிற்கு முழுமையாக இருக்கிறது என்பதை நாம் ஆணித்தரமாக நம்புகின்றோம். உலக சமாதானத்தின் மீதும் தனிமனித உரிமைகள் மீதும் ஆழ்ந்த ஈடுபாட்டினையும் அது சார்ந்த செயல்திட்டங்களையும் அமுல் படுத்தும் கனேடிய அரசானது எம் சார்பில் ஈழத்தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளிலும், செயல் திட்டங்களிலும் ஈடுபட வேண்டும் என நாம் வேண்டி நிற்கின்றோம்.

எமது ஈழத்தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு குறைந்த பட்ச கோரிக்கைகள் சிலவற்றை கனேடிய அரசுக்கும் சர்வதேசத்திற்கும் முன் வைக்கின்றோம். இக்கோரிக்கைகளை அமுல் படுத்துவதற்கான அழுத்தங்களை கனேடிய அரசும், சர்வதேசமும் இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பதனை புலம் பெயர் மாண்வர் சார்பில் நாம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது கோரிக்கைகளாவன:

1) எமது மாணவச் சகோதரிகள் மீது தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்கள் விரும்பும் முழுப்பாதுகாப்பு நடவடிக்கைகளும் வழங்கப்பட வேண்டும்.

2) கல்விச் சாலைகள் சார்ந்திருக்கும் சுற்று வளாகத்தினுள் எந்த ஒரு இராணுவப் பயிற்சி முகாமோ, இராணுவக் காவலரண்களோ, இராணுவ நடமாட்டமோ இருக்கக் கூடாது.

3) தொடர்ந்து மாணவர்களைக் கைது செய்தல், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்குதல், அவர்களின் தனிமனித சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றை ஒடுக்குவதன் மூலம் அவர்களை ஆழ்ந்த மன உளைச்சலுக்குள்ளாக்கி அவர்களின் திறன்களை அழித்தொழித்தல் ஆகிய நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

4) ஒரு தனி மனித ஆளுமையை நிர்ணயிக்கும் கல்விக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் எந்த ஒரு அரசியல் யாப்புகளோ,அரசியல் திட்டங்களோ,அரசியல் அழுத்தங்களோ செயல்ப்படுத்தப்படக் கூடாது.

5) வடகிழக்குத் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு சர்வதேசத்தின் சார்பில் பொது நபர் ஒருவர் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினருள் இடம் பெற வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளாவன ஒரு தனி மனிதனின் மனித உரிமைகளின் அத்தியாவசிய செயல்பாடுகளே என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும். இது தவிர, இடம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் மாணவனும் மாணவியும் தாயகத்தில் அவதியுறும் தமது சகோதரங்களுக்காய் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறாக தாயக தமிழ் மாணவர்கட்கு உதவும் சர்வதேச தமிழ் மாணவர் சமூகத்துடன் கால்ற்ரன் தமிழ் மாணவர் அமைப்பு இணைந்து நிற்கிறது. இது குறித்து தகுந்த தீர்மானமான பதிலை சர்வதேசத்திடம் நாம் எதிர்பார்க்கும் அதேவேளை, கனேடிய அரசும் சிறந்த வகையில் தமது நகர்வுகளை மேற்கொள்ளும் என நாம் திடமாக நம்புகின்றோம்.</b> "மாணவர் சக்தி, மாபெரும் சக்தி"


¿ýÈ¢: À¾¢×

Print this item

  திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம்
Posted by: வினித் - 01-10-2006, 01:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (128)

[b]திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம்
Written by Pandara Vanniyan Tuesday, 10 January 2006

இன்று பகல் 1.30 மணியளவில் திருநெல்வேலி பால் பண்ணையடியில் இளம் பெண்னொருவர் மீது இரானுவத்தினர் பாலியல் பலாத்காரத்தினைப் புரிந்துள்ளனர். இதனை தடுக்கச் சென்ற மக்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். (இது தொடர்பான மேலதிக விபரங்கள் மிக விரைவில்)

http://www.sankathi.com/

Print this item