![]() |
|
யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்" (/showthread.php?tid=1482) |
யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்" - வினித் - 01-11-2006 <b>யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்": ரொய்ட்டர்ஸ்</b> [புதன்கிழமை, 11 சனவரி 2006, 16:33 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்கினால் யாழ்ப்பாணம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கூறுகிறது. ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்தின் ஊடகவியாலாளர் பீற்றர் ஆப்ஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை: இலங்கையின் இரு தசாப்த கால யுத்தம் மீண்டும் கொழுந்து விட்டெரிந்தால் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இராணுவ விநியோகப் பாதைகள் மீது கொரில்லாத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தின் மையமான பகுதியாக யாழ்ப்பாண குடாநாட்டை விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் சிறிது காலம்தான் அதை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண குடாநாடு உள்ளது. எனினும் இந்த யாழ்ப்பாணக் குடாநாடு, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. "யாழ்ப்பாணம் அவர்களது பிரதான இலக்கு" என்கிறார் இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ். "கண்டிப்பாக தாக்குதல்கள் உக்கிரமாக இருக்கும். நீங்கள் மரபுவழி யுத்தத்தை எதிர்பார்த்தால் அவர்களால் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முடியாது. அதனால் நாங்களும் இங்கே கெரில்லா யுத்தத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம்" என்றார் இக்பால் அத்தாஸ். கடந்த 4 ஆண்டுகளில் பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமையால் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஒப்பந்தம் இடைநிறுத்த நிலையில் உள்ளது. ஆனால் அண்மைய சில வாரங்களில் அமைதி என்பது மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் சுற்றுக்காவல் மற்றும் வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதலில் 39 படைப்பிரிவினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தில் சுற்றுக்காவலை மேற்கொண்டவர்கள். விரைவிலோ பின்னரோ யுத்தம் தொடங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். போராளிகளால் மேற்கொள்ளப்படக் கூடியதாக சந்தேகிக்கப்படும் இந்தத் தாக்குதல்களால் யாழ்ப்பாண நகரில் இராணுவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களைத் தாக்கி இராணுவம் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாகவும் அந்த மக்கள் மீது யுத்தத்தை திணிப்பதாகவும் புலிகள் இப்போது குற்றம்சாட்டி வருகின்றனர். நிழல் அரசாங்கத்தையும் கடற்பிரதேசத்தையும் வைத்துள்ள போராளிகள் 2002 ஆம் ஆண்டு முதல் யுத்த நிறுத்தத்தைச் செயற்படுத்தி வருகின்றனர். 40 ஆயிரம் சிறிலங்கா படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். விடுதலைப் புலிகளின் இராணுவத்தினது எண்ணிக்கை மிக வலுவான 20 ஆயிரம் பேர். ஆயினும் இராணுவத்தின் பிரதான விநியோகப் பாதையாக ஆகாயம் மற்றும் கடல்வழி மார்க்கங்களே இருக்கின்றன. சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு கடற்புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. யுத்தம் ஒன்று வந்தால் இராணுவத்தின் கடல்வழி விநியோகப் பாதையையும் அவர்கள் தாக்கக் கூடும் என்பதை இது வெளிப்படுத்துகிறது. அதேபோல் பலாலி விமான தளத்தின் மீதும் கடும் தாக்குதல் நடைபெறக்கூடும். அதனைத் தக்க வைத்துக் கொள்ள இராணுவம் மிகக் கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "பலாலி விமான ஓடுபாதையையோ அல்லது எரிபொருள் தாங்கிகளையோ சிதைத்துவிடக் கூடும்" என்கிறார் இக்பால் அத்தாஸ். "யாழ்ப்பாண குடாநாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது சந்தேகத்துக்கு இடமில்லாததுதான். ஆனால் இப்போது எந்த அளவுக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது கேள்வியாக எழுகிறது. ஏனெனில் எப்படி இத்தனை கைக்குண்டுகளும் கண்ணிவெடிகளும் யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் கடத்திவரப்பட்டன?" என்கிறார் அத்தாஸ். யாழ்ப்பணத்தில் உண்மையில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு வலுவானது வெளிப்படையானது என்கிறார்கள் பெரும்பாலான ஆய்வாளர்கள். யாழ்ப்பாணத்தைப் போராளிகள் கடுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் போது அதிகப்படியான மக்களும் இந்தத் தாக்குதலில் இணைந்து கொள்வார்கள் என்றும் சிலர் நம்புகின்றனர். "அரச தரப்பில் நீண்டகால யுத்தத்துக்கான உற்சாக மனநிலை ஏதும் இல்லை" என்கிறார் அரசியல் சாரா சமாதான சபையின் தலைவர் ஜெகான் பெரேரா. அமைதிப் பேச்சுக்களை தொடங்குவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி தங்களது வலுவை வெளிப்படுத்துவார்கள் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "அரச இராணுவத்தால் மிகச் சிறிய அளவில்தான் நகர முடியும். அவர்களது நிலைகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அடர்ந்த வனப்பகுதியில் தங்களது வலுவான தளத்தை அமைத்துள்ளனர். அரசாங்கத்தின் பலமோ நகரங்களிலும் வீதிகளிலும்தான் உள்ளது. ஆகையால் மிகச் சிறிய அளவில்தான் அவர்களால் நகர முடியும்" என்கிறார் ஆய்வாளர் மரியா கூசிஸ்டோ. எந்த ஒரு தரப்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை விலக்கி, புதிய பிரச்சனை அதிகரித்தால் ஐரோப்பிய போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறிவிடுவர். ஆழிப்பேரலை தாக்குதலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மீளமைப்புப் பணிகள் பாதிக்கப்படும். ஆனால் சர்வதேசத்தின் ஆதரவை வலுப்படுத்த தென்னிலங்கை தீவிரமாகும். ஏற்கனவே அமெரிக்க இராணுவத்தின் பயிற்சிகளைப் பெற்று வருகிறார்கள். யுத்தம் மீளத் தொடங்கினால் இந்த இராணுவ உதவிகள் அதிகரிக்கும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இந்த ஆதரவு என்பது ஆயுதங்களாகவும் பெருந்தொகையான நிதியாகவும் இருக்கலாம்- சர்வதேச நாடுகள் படைத்தரப்பை அனுப்பாது என்கிறார் சமாதான சபையின் தலைவர் ஜெகான் பெரேரா. "அதேநேரத்தில் இராணுவத் தொழில்நுட்ப ஆலோசகர்களும் இங்கே வரக்கூடும்" என்றார் ஜெகான் பெரேரா என ரொய்ட்டர்ஸ் செய்திக் கட்டுரை விவரித்துள்ளது. நன்றி:புதினம் |