Yarl Forum
இரண்டடிக்குள் இரண்டரை கோடி! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இரண்டடிக்குள் இரண்டரை கோடி! (/showthread.php?tid=1484)

Pages: 1 2


இரண்டடிக்குள் இரண்டரை கோடி! - Rasikai - 01-10-2006

<b>இரண்டடிக்குள் இரண்டரை கோடி!</b>

<img src='http://img157.imageshack.us/img157/4736/american20crow20reduced9js.jpg' border='0' alt='user posted image'>

<b>நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்.....
குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்!
அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு..
மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு...

ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...

பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்..
அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட..
தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற
ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா?

அழகில்லைத்தான்..அசிங்கம்தான்...
ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது..
உதவாத பழக்கம் தான்...
இருந்தும் மனம் ஏங்கியது...........

அடடா....
அழகிய வாழ்வென்பதை இவர்களின் பெயரில் மட்டும்
எழுதி வைத்துவிட்டு ஒளிந்து கொண்டவனே..
இறைவா... எங்களுக்கும் கொஞ்சம் தாவேன் என்றபடி!

அங்கே என்னடி பராக்கு- அதட்டினாள் அம்மா..
திரும்பி திரும்பி அவர்களை பார்த்தபடி வீட்டுள் நுளைந்தேன்!
எம்முள் சிலருக்கு ஏன் இப்படி ஒருவாழ்வு இல்லை?? வாழ தெரியவில்லை??
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள்..செவ்வந்தியை சுற்றிய தேனீக்களாய்..
விடைமட்டும் கடலில் கரைத்த உப்பென இன்னும் காணோம்!

இரண்டடி கூட கொள்ளா கூட்டுக்குள்
இரண்டரை கோடி சந்தோசங்களா?
ம்ம்ம்ம்ம்..........
காகம் கொடுத்து வைத்த பிறவிதான்!!</b>


- ஊமை - 01-11-2006

அழகாயிருக்கு


- Rasikai - 01-11-2006

ஊமை Wrote:அழகாயிருக்கு

நன்றி
ஆமா எது? படமா இல்லை கவிதையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops:


- Snegethy - 01-11-2006

இரண்டுமே நல்லா இருக்கு<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Saanakyan - 01-11-2006

´ð¼Å¡Å¢Ä ¸¡¸õ ±øÄ¡õ ÜÎ ¸ðξ¡? ±ÐìÌõ ¾¨Ä Óʨ ´Øí¸¡ šâ º£×í¸, þøÄ ¯í¸ ¾¨ÄÄ ÜÎ ¸ð˼ô§À¡ÌÐ.


- வர்ணன் - 01-11-2006

Saanakyan Wrote:´ð¼Å¡Å¢Ä ¸¡¸õ ±øÄ¡õ ÜÎ ¸ðξ¡? ±ÐìÌõ ¾¨Ä Óʨ ´Øí¸¡ šâ º£×í¸, þøÄ ¯í¸ ¾¨ÄÄ ÜÎ ¸ð˼ô§À¡ÌÐ.

இது ஒரு நாகரிகமான கருத்து-
என்ன ஒரு குறை--- நாகரிகம் பத்தி அட்வைஸ் பண்ணுற மட்டுறுத்தினர்களைதான் காணம். :roll:


கவிதை நல்லா இருக்கு ரசி அவர்களே தொடருங்கள். 8)


- RaMa - 01-11-2006

ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...
**********************************************
ரசிகை நல்லாயிருக்கு. ஆமாம் ஒற்றுமைக்கு காகத்தை தான் உதராணத்திற்கு காட்டுவார்கள். ஊரிலும் காகம் சாப்பாட்டைக் கண்டவுடன் எல்லா காகங்களையும் கத்தி கத்தி கூப்பிட்டு தான் சாப்பிடுவதை கண்டிருக்கின்றேன். உங்கள் கவிதையில் ஏதோ ஒன்றை ஏக்கத்தோடு சொல்லி இருக்கறீர்கள்... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
ஆமாம் ஒட்டாவில் உள்ள மெபிள் லீப் மரத்திலா அந்த காகம் கூடு கட்டியது? அதுவும் இந்த பனிகாலத்திலா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Saanakyan - 01-11-2006

varnan Wrote:
Saanakyan Wrote:´ð¼Å¡Å¢Ä ¸¡¸õ ±øÄ¡õ ÜÎ ¸ðξ¡? ±ÐìÌõ ¾¨Ä Óʨ ´Øí¸¡ šâ º£×í¸, þøÄ ¯í¸ ¾¨ÄÄ ÜÎ ¸ð˼ô§À¡ÌÐ.

இது ஒரு நாகரிகமான கருத்து-
என்ன ஒரு குறை--- நாகரிகம் பத்தி அட்வைஸ் பண்ணுற மட்டுறுத்தினர்களைதான் காணம். :roll: 8)

À¡ò¾¡§Ä ¦¾Ã¢ÔÐ, ¯í¸ÙìÌ ¦Àâ šÖí¸ñ½¡... «Ð측¸ ¬ðÊ¦ÂøÄ¡õ ¸¡ð¼¡§¾í¸ñ½¡!

«ÅºÃò¾¢ø ÁÈóÐÅ¢ð§¼ý, ¸Å¢¨¾ «Õ¨Á!


- தூயவன் - 01-11-2006

Saanakyan Wrote:
Quote:இது ஒரு நாகரிகமான கருத்து-
என்ன ஒரு குறை--- நாகரிகம் பத்தி அட்வைஸ் பண்ணுற மட்டுறுத்தினர்களைதான் காணம். :roll: 8)

À¡ò¾¡§Ä ¦¾Ã¢ÔÐ, ¯í¸ÙìÌ ¦Àâ šÖí¸ñ½¡... «Ð측¸ ¬ðÊ¦ÂøÄ¡õ ¸¡ð¼¡§¾í¸ñ½¡!

«ÅºÃò¾¢ø ÁÈóÐÅ¢ð§¼ý, ¸Å¢¨¾ «Õ¨Á!
ஏன் உங்களுக்கு போட்டியாக ஆட்டிவிடுவார் என்று பயமாக இருக்கின்றதோ? நீர் வாலை முதலில் குறுட்டுங்கோ கண்ணா!
பிறகு மற்ற வாலைப்பற்றிக் கதைக்கலாம்!


- Snegethy - 01-11-2006

RaMa Wrote:ஆமாம் ஒட்டாவில் உள்ள மெபிள் லீப் மரத்திலா அந்த காகம் கூடு கட்டியது? அதுவும் இந்த பனிகாலத்திலா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 01-11-2006

றமாக்கா ஒட்டாவா யுனியில படிக்கிற சில பேர் ரசிகையக்கா மாதிரி கவிதையுள்ளம் கொண்டவர்கள்.குருவிகள் கூடுகட்டுவதற்காகவே ஒரு றூம் அவேன்ர றெஸ் ல எடுத்து விட்டிருக்கினமாம்.


- Snegethy - 01-11-2006

இந்தக் காகங்களுக்கு ஆகாயத்தோட்டி என ஒரு பெயரிருக்கு.இரண்டாம் வகுப்புப் புத்தகத்தில இவையைப் பற்றி ஒரு பாடம் இருக்கு.

ஒன்றாய் இருக்கக் கத்துக்கணும் அந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்....காக்கா கூட்டத்த பாருங்க அதுக்கு கற்றுக் குடுத்தது யாருங்க".

காகம் நீங்கள் சாப்பிடும்போது வந்தால் சாப்பாடு எறிஞ்சால் catch பண்ற விதம் சூப்பர்..ஒருக்காலும் இலக்கு தப்பாது.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- RaMa - 01-11-2006

Snegethy Wrote:இந்தக் காகங்களுக்கு ஆகாயத்தோட்டி என ஒரு பெயரிருக்கு.இரண்டாம் வகுப்புப் புத்தகத்தில இவையைப் பற்றி ஒரு பாடம் இருக்கு.

ஒன்றாய் இருக்கக் கத்துக்கணும் அந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்....காக்கா கூட்டத்த பாருங்க அதுக்கு கற்றுக் குடுத்தது யாருங்க".

காகம் நீங்கள் சாப்பிடும்போது வந்தால் சாப்பாடு எறிஞ்சால் catch பண்ற விதம் சூப்பர்..ஒருக்காலும் இலக்கு தப்பாது.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆமாம் சிநேகிதி.. நல்லாய் பொழுதும் போகும். ஒற்றைக்காலில் நின்று பறந்து வந்து பிடிப்பார்கள்.. காகத்திடம் குட்டு வேண்டியிருக்கறீர்களோ சிநேகிதி?


- Snegethy - 01-11-2006

குட்டு?? கையில ஏதும் வைச்சுகொண்டு குடுக்காம சாப்பிட்டா தெரியாம தலைக்கு மேலால வந்து பறிச்சுக் கொண்டு போயிடும்.அழுது கொண்டு அம்மம்மாட்ட சொன்னா நம்பவேமாட்டா.<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 01-11-2006

நல்லாக இருக்கு ரசிகை உங்கள் கவிதை. நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 01-11-2006

Snegethy Wrote:குட்டு?? கையில ஏதும் வைச்சுகொண்டு குடுக்காம சாப்பிட்டா தெரியாம தலைக்கு மேலால வந்து பறிச்சுக் கொண்டு போயிடும்.அழுது கொண்டு அம்மம்மாட்ட சொன்னா நம்பவேமாட்டா.<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


ஏன் அம்மா நம்புவதில்லை. நீங்கள் பொய் சொல்லுறனீங்களா அப்போ? :roll:


- Snegethy - 01-11-2006

வெண்ணிலாக்கா உங்களக் கண்டாலே பயமாக்கிடக்கு... :wink: .ஊராள் போல கிடக்கு ...பொய் சொல்றேல்ல என்று உண்மை சொன்னால் நேரில அம்மாட்ட வந்து கேட்டாலும் கேப்பியள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sathiri - 01-11-2006

பாராட்டுக்கள் ரசிகை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் கனடாவிலை காகம் கா கா எண்டு கத்துமா இல்லை k k எண்டு கத்துமா??


- அருவி - 01-11-2006

இரசிகை கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது. மனிதனை மட்டும் படைக்கும்போது இப்படி ஒற்றுமையையும் மகிழ்வையும் சேர்த்துப்படைக்கவில்லையே என்று இறைவனிடம் கோபம் வருகிறது.


- tamilini - 01-11-2006

Quote:அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு..
மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு
சீ சீ இதென்ன கெட்டபழக்கம்.. கறுப்பு வெள்ளை பாக்கிறது..?? ரசிகை கவிதை நன்றாக இருக்கிறது. காகங்களிற்குள் மேதாவித்தனமான பேச்சில்லை என்று எப்படிச்சொல்றியள்..?? ஆக்களுக்கு முன்னால அடக்கி வாசிச்சினமோ என்னவோ..?? மனிசர் அப்படித்தானே.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->