Yarl Forum
இலங்கேஸ்வரன் ஆர் எஸ் மனோகர் காலமானார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: இலங்கேஸ்வரன் ஆர் எஸ் மனோகர் காலமானார் (/showthread.php?tid=1485)



இலங்கேஸ்வரன் ஆர் எஸ் மனோகர் காலமானார் - AJeevan - 01-10-2006

<b>பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர் எஸ் மனோகர் மரணம்</b>

தமிழ்த்திரயுலகின் பழம்பெரும் நடிகரும், நாடகக் கலைஞருமான ஆர் எஸ் மனோகர் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார், அவருக்கு வயது 81. மனோகர் சிறிது காலமாகவே உடல்நலக் குன்றியிருந்தார்.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/01/20060110171002mano21.jpg' border='0' alt='user posted image'>
ஆர் எஸ் மனோகர்

இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஆர் எஸ் மனோகர், <b>இலங்கேஸ்வரன்</b>, சுக்ராச்சாரியார் போன்ற அவரின் நாடங்களின் மூலமும் புகழ் பெற்றார்.

தமிழ் நாடக உலகில் இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி அதில் பெரும் பொருட் செலவில் புதுமையான யுத்திகள், தந்திரக் காட்சிகளையும் இடம் பெறச் செய்தவர் மனோகர்.

-பீபீசி தமிழ்


- Eswar - 01-10-2006

நன்றி இணைப்புக்கு.
இந்தக் காலத்து கமல்போல் அந்தக் காலத்தில் மனோகர். பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் நாடகத்துறைக்கு பல சேவைகள் செய்தவர்.
புதிதுபுதிதாக பல பிரமாண்டமான யுக்திகளுடன் நாடகங்கள் போட்டவர். அவருக்கு தேவையான கௌரவிப்பு கொடுக்கப்படவில்லை என்பது எனது கருத்து.

அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்


- Rasikai - 01-10-2006

நன்றி தகவலுக்கு
அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!


- RaMa - 01-11-2006

அன்னாருக்கு எமது அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்


- aathipan - 01-11-2006

திருநாவுக்கரசர் நாடகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கூட மீண்டும் மேடையேற்றினார். மான்புமிகு அம்மா கூட சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.


- AJeevan - 01-11-2006

Quote:திரைக் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தாலும்
நாடகக் காவலராக இவர் ஆற்றிய பணி மறக்க முடியாதவை.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு
அன்னாரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள் உரித்தாகட்டும்............
<b>நாடகக் காவலராக அவர் நாமம் நிலைக்கட்டும்.</b>

<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/manohar-350.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் பட உலகின் பழம்பெரும் வில்லன் நடிகரும், மிகப் பிரபலமான நாடக நடிகருமான
ஆர்.எஸ்.மனோகர் இறக்கும் போது அவருக்கு வயது 81.

வெகு நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22ம் தேதி மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோகர் சுய நினைவை இழந்தார்.

இந் நிலையில் அவரது உடல் நிலை இன்று அதிகாலை மிகவும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்தார்.

மனோகரின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு நடிகர்நடிகைகள் நாடக கலைஞர்கள் மற்றும் பிரமுகர்கள், ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாளை காலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

<b>ஜெ. இரங்கல்:</b>

மனோகரின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.மனோகர் நடிப்பாற்றல் மிக்கவர். தமிழ் நாடகக் கலைக்கு தனிப்பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்டமான சரித்திர மற்றும் புராண நாடகங்களை அளித்தவர்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 8000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து சாதனை படைத்தவர். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையைத் தருகிறது. மனோகரின் மறைவு திரைத்துறைக்கு இழப்பு என்றால் நாடகத் துறைக்கு பேரிழப்பாகும். மனோகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனோகர் அவர்களின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நாடகக் காவலர் என்று அழைக்கப்படும் மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை 1000 முறைக்கும் மேல் அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார். அதேபோல சாணக்கியன் சபதம், விஸ்வாமித்திரர் ஆகிய நாடகங்களையும் 700க்கும் மேற்பட்ட முறை அரங்கேற்றி சாதனை படைத்தவர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் உள்ளிட்ட ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்த பெருமையைப் பெற்றவர். வில்லன், குணச்சித்திர வேடம் என பல வேடங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, எம்.ஜி.ஆர். விருது ஆகியவற்றைப் பெற்றவர் மனோகர்.
நன்றி: தட்ஸ்தமிழ்.


- Luckyluke - 01-11-2006

சிலர் கலைக்காக தங்கள் சொந்த அடையாளங்களை இழக்கிறார்கள்....

உதாரணத்திற்கு சிவாஜி இங்கே வ.உ.சியாக, வீரபாண்டிய கட்டபொம்மனாகவே அறியப்படுகிறார்....

அதுபோலவே நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் அவர்களும் இலங்கேஸ்வரனாகவே மக்களால் அறியப்படுகிறார்.....


- Mathan - 01-11-2006

அஜீவன் அண்ணா,

ஜே ஜே படத்தில் வில்லனாக நடித்தவர் இவரா?


- கந்தப்பு - 01-11-2006

Mathan Wrote:அஜீவன் அண்ணா,

ஜே ஜே படத்தில் வில்லனாக நடித்தவர் இவரா?


அது பொப்பிசைச்சக்கரவர்த்தி சிலோன் மனோகர்


- AJeevan - 01-11-2006

Kanthappu Wrote:
Mathan Wrote:அஜீவன் அண்ணா,

ஜே ஜே படத்தில் வில்லனாக நடித்தவர் இவரா?


அது பொப்பிசைச்சக்கரவர்த்தி சிலோன் மனோகர்
<img src='http://www.ozlanka.com/archives/2005/manoharan/image1.jpg' border='0' alt='user posted image'>
http://www.emusic.com/artist/11577/11577142.html
பொப் இசைச் சக்ரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் தான் பின்னர் தன் பெயரை சிலோன் மனோகர் என மாற்றிக் கொண்டார்.

இலங்கை இசை வரலாற்றில் புதிய திருப்பத்தைக் கொண்டவர்களில் முதன்மையானவர்.
அமரர்.சந்திரபாபுவின் மாணவர் என்று சொல்லப்பட்ட இவர் கண்டி பொகவந்தலாவையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தில் பணிபுரிந்த இவர்
பின்னர் இலங்கை சினிமாக்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்தவர்.
பின்னர் தீ படத்தில் நடித்து பின் தென் இந்திய சினிமாவுக்குள் நுழைந்து தெலுங்கு திரையுலகில் கொஞ்ச காலம் இருந்தார்.
தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார்.
சுறாங்கனி பாடல் தமிழ் பாடல் இவரால் தமிழகத்துக்குள் பரவியதே.
இவரைக் கண்டால் சிறு வயதில் நான் விலகியே நிற்பதுண்டு.
தம்பி சாசா என என் காதுகளை சின்ன வயதில் கிள்ளியதை
என்னால் மறக்க முடியாது. சென்னையில் இருக்கும் போதும் என்னைத் தேடி வருவார்.
பின்னர் குடும்பத்தோடு லண்டன் வந்து..............
பிடிக்காமல் போனது தெரியும்.
இப்போது நடிக்கிறார்.

காலம் சென்ற மனோகர் அவர் அல்ல.
எம்.ஜீ.ஆர் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்துப் பாருங்கள்.
நம்பியாருக்கு அடுத்த படியான வில்லன் காலஞ் சென்ற மனோகர் அவர்கள்தான்.


- Aravinthan - 01-12-2006

பலருக்கு ஆர்.எஸ்.மனோகர் வில்லனாக நடித்தது மட்டும் தெரியும். 50களில் வெளிவந்த சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.52ல் வந்த 'ராஜம்பாள்' படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். 'தாய் உள்ளம்' படத்திலும் இவர் கதாநாயகன். இதில் அதிசயம் என்னவென்றால் இப்படத்தின் வில்லன் ஜெமினி கணேசன். இன்னுமொரு அதிசயம் ' நல்லவீடு' என்ற படத்தில், இப்படத்தின் கதாநாயகனாக மனோகர் நடிக்க வில்லனாக சிவாஜி கணேசன் நடித்துள்ளார். வண்ணக்கிளி படத்தில் வில்லத்தனம் நிறைந்த கதாநாயகனாக மனோகர் நடித்தார். 'வைரமாலை' என்ற படத்தில் மனோகருக்கு ஜோடியாக நடித்தவர் பத்மினி.

மேலுள்ள தகவல்களினை தமிழகத்தில் வெளியாகும் பத்திரிகைகளான தினமணி,தினத்தந்தி, மாலைமலர், தினகரன் போன்ற பத்திரிகைகளில் இருந்து வாசித்ததில் பெற்ற செய்திகள்


- Luckyluke - 01-12-2006

சிலோன் மனோகரின் "சுறாங்கனி" பாடல் தான் தமிழக கல்லூரிகளில்ன் எவர்க்ரீன் சாங்