Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 235 online users.
» 0 Member(s) | 232 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,296
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,622
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  அல்வா கொடுத்த ஐஸ்வர்யா ராய்
Posted by: Mathan - 01-10-2006, 12:36 PM - Forum: சினிமா - Replies (18)

ஐஸ்வர்யாராயின் புது காதலர்

<img src='http://img301.imageshack.us/img301/3742/12343oa.jpg' border='0' alt='user posted image'>

பிப்டி கேஜி தாஜ்மஹால் தனக்கேற்ற ஷாஜகானை தேடி கண்டுபிடித்திருக்கிறார்.

சல்மான்கானில் துவங்கிய ஐஸ்வர்யாராயின் காதல் கதை திடுக் திருப்பங்களுடன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. விவேக் ஓபராய்க்கு குட்பை சொல்லி கொஞ்சநாள்தான் ஆகிறது. அதற்குள் இன்னொரு காதலர் கிடைத்துவிட்டார் உலக அழகிக்கு.

கரீஷ்மா கபூருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நிமிடத்தில் விலகிக்கொண்ட அபிஷேக்பச்சன்தான் அந்த அதிர்ஷ்டசாலி.

<img src='http://img206.imageshack.us/img206/5209/3217ef.jpg' border='0' alt='user posted image'><img src='http://img206.imageshack.us/img206/6055/43211ea.jpg' border='0' alt='user posted image'>

அரசல்புரசலாக இருந்த இவர்கள் காதல் கதையை உலகுக்கு அறிவித்தவர் பெண் தயாரிப்பாளர் பிந்தியா கோஸ்வாமி. இவர் தயாரிக்கும் 'உம்ரோவோ ஜான்' படத்தில் அபிஷேக்பச்சன் ஐஸ் இணைந்து நடிக்கிறார்கள். ஆக்ஷ்ன் படங்களை மட்டுமே இயக்கி வந்த பிந்தியாவின் கணவர் ஜே.பி. தத்தா இயக்கும் முதல் காதல் படம் இது.

<img src='http://img301.imageshack.us/img301/4645/1231nu.jpg' border='0' alt='user posted image'>

பரவாயில்லை. நினைத்ததை விட சிறப்பாகவே காட்சிகளை எடுத்திருக்கிறார் என்று கணவர் தத்தாவை புகழ்கிறார் பிந்தியா. படம் நன்றாக வந்திருக்கும் குஷியில் வார்த்தைகளுக்கு கடிவாளம் போட மறந்துவிட்டார் இவர். "அபிஷேக்கும் ஐஸ்வர்யாராயும் ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தமாதரி அப்படியொரு ஜோடி பொருத்தம்." பிந்தியாவின் இந்த ஸ்டேட்மெண்டால் சைலண்டாக நடந்து கொண்டிருந்த அபிஷேக் ஐஸ்வர்யா காதல் சந்திக்கு வந்திருக்கிறது. இது ஐஸ்வர்யாராயின் கடைசி காதலா அல்லது காதல்களில் ஒன்றா?

கேள்விக்குறியுடன் காத்திருக்கிறார்கள் ஐஸ்வர்யாராயிடம் காதல் அப்ளிகேஷன் கொடுத்தவர்கள்!

<b>நன்றி - சினிசவுத்</b>

Print this item

  தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு
Posted by: Birundan - 01-10-2006, 12:25 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (39)

இன்று விடுதலை வேண்டிப் போராடுகின்ற இனக்குழுமங்களாக ஈழத் தமிழ் மக்களும் காஸ்மீர மக்களும் இனம் காணப் பட்டிருக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற பல இனக்குழுமங்களுள் காஸ்மீரம் நீண்ட கால வரலாறும் தொடர்ச்சியான வெளிப்பாடும் கொண்டது. அதே போல இலங்கையின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற வரலாறு ஈழத்தமிழ் மக்களுக்கும் உண்டு.

காஸ்மீரத்தின் சுதந்திரம் , பாகிஸ்தானிய படைகள் காஸ்மீரத்துள் புகுந்தபோதும் மன்னனின் சூழ்நிலை இந்தியாவை வலிந்து அழைக்கவேண்டியதாகிப் போனபோதும் பறிபோயிற்று. இன்று வரை தொடரும் போராட்டம் இரத்தமும் சதையுமாக குதறிப் போடும் அவலங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் ஈழத்தின் சுதந்திரம் 1505 இல் போத்துக்கேயர் கடற்கரையோரம் கால் வைத்தபோது பறிபோயிற்று. காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆட்சி முறை வசதிக்காக ஒன்று சேர்ந்து இலங்கையானபோது அதன் எல்லைகளும் காணாமற்போயிற்று. தொடர்ந்து ஐந்து நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சியின் முடிவிலும் அரசியல் தொலைநோக்கற்ற தமிழ் அரசியல் வாதிகளின் முடிவுகளால் சிங்களப் பேரின வாதிகளின் கால்களுக்கிடையில் சிதைந்து கொண்டிருக்கின்றது.

இன்றளவும் உலக வல்லரசுகளினதும் பிராந்திய வல்லரசுகளினதும் விருப்பு வெறுப்புக்கேற்ப பந்தாடப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

காஸ்மீரத்தில் இன்று பாதுகாப்பிற்கெனச் சென்ற இந்தியப் படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ? ஒருவேளை காஸ்மீரம் இந்தியாவின் உதவியை நாடியிராவிட்டால் பாகிஸ்தானின் பஞ்சாப் போன்றோ இல்லை பலூசிஸ்தான் போன்றோ பாகிஸ்தானின் ஒரு பகுதியாக வறுமையில் வாடிக்கொண்டிருக்கக் கூடும் என்று கருத்துக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள். ஆனாலும் இப்பொழுதும் அதைவிடச் சிறந்த முறையில் தானா அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ?

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையில் இருந்து தங்களை காத்தருளும் இரட்சகர்கள் என எதிர்பார்த்திருந்த தமிழ் ஈழ மக்களுக்கு இந்திய இராணுவம் கொடுத்த பரிசுதான் என்ன ? அவர்கள் இராணுவ வாகனங்களின் சங்கிலிப் பாதங்களுள் அரைபட்டு இரத்தமும் சதையுமாக சிதைந்து போனதைவிட வேறு என்ன பரிசு கிடைத்தது.

இந்தியா என்பதையும் விட தாய்வழிப் பந்தம் வேரடி மண் என்று காலாதி காலம் நம்பியிருந்த தமிழக மக்களும் தலைவர்களும் கூட மெளனமாகிப் போயிருந்தார்களே ? இன்று வரை தனது பிராந்திய நன்மைகள் என்ற குறுகிய வட்டத்துள் நின்றே ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பதைத் தவிர இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது ?

ஆறரைகோடி தமிழ் நாட்டவர்களின் உறவுகளில் ஏற்படாத கரிசனை சிங்களவர்களின் பால் ஏற்படுவதற்கு இந்தியா இதைவிட வலுவான என்ன காரணத்தைக் கூறுக்கூடும்.

முன்னை நாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் மரணம் தான் காரணம் என்று கூறிக்கொள்ள முனையலாம். அப்படி என்றால் சமாதானப் படைகள் ஈழத் தமிழ் மக்களை வகைதொகையின்றிக் கொன்று குவித்ததற்கு என்ன காரணம் இருக்கமுடியும்.

இரண்டு பெரும் போர்களையும் தீவிரவாதத்திதின் தாக்குதல்களையும் இந்தியாவிற்குப் பரிசளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் எப்படி நேசக் கரம் நீட்டுகின்றார்கள். தீவிரவாதம் என்னும் பாஷை யில் பேசிக்கொண்டிருக்கும் பா கிஸ்தா னை விட தமிழ் ஈழம் எப்படி இந்தியாவிற்கு ஆபத்தானதாய் இருக்கமுடியும். இலங்கயின் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய நேரடி வாரிசுகளின் குடியுரிமையைப் பறித்ததிலிருந்து இரஜீவ் காந்தியை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானபின் துப்பாக்கியால் அடித்தது வரை செய்தது சிங்களவர்கள் அல்லவா ? அவர்களுடன் வராத கோபம் ஈழத்தமிழ் மக்கள் மேல் வருவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும். இந்தியப் பகிஷ்கரிப்பு என்ற பெயரில் இந்தியப் பொருட்களைத் தீயிலிட்டு எரித்த கட்சிகளுடன் கூடிக் குலவுவதில் இந்தியாவிற்கும் அதன் அரசியல் கட்சிகளுக்கும் எந்த வெட்கமுமில்லை.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு சில தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழ் ழ் மக்கள் சார்பாக கருத்து சொல்வதை மட்டும் கொச்சைப் படுத்துவதில் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் வசதியான வாழ்வுடையவர்கள். மலையகத்தமிழர்கள் தான் இந்தியாவுடன் தொடர்புள்ளவர்கள் என்ற கருத்தும் முன் வைக்கப் படுகின்றது. அப்படி ஸ்மாட் ஆக சிந்திக்கும் படியும் கருத்து விதைக்கப் படுகின்றது. தமிழ் ஈழத்தின் சுதந்திரப் போராட்டம் முன்னர் எப்படியிருந்த போதும் இப்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கான பொதுவான போராட்டமாக பரிணமித்துள்ளதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் தவறுகள் ஏற்படுவதும் பின்னர் திருத்தப் படுவதும் இயல்பானதே.

இதற்காகவே சொல்லி வைத்ததுபோல் போராட்டத்தின் முன்னோடிகளாக இருந்து கருத்து மோதல்களால் மரணித்த பத்மநாபா, சிறீசபாரட்ணம் போன்றோரின் மரணங்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன. மிகவும் துக்கரமான தவறுகள் இவை என்றாலும் போராட்டத்தின் ஆரம்பகால தவறுகள் இவை என்பதற்கப்பால் தமிழகத்தமிழர்களின் உணர்வுகளை வேறு எவ்வாறு பாதிக்கக் கூடும்.

நாளாந்தம் பறிக்கப்படும் உயிர்களும் சித்திரவதை செய்யப் பட்டு சீரழிக்கப் படும் அபலைகளும் உங்களுக்கு முக்கியமாகப் படவில்லையா?

இவையெல்லாம் இந்திய மேலாண்மை அரசின் போக்கை கேள்வி கேட்கவோ எதிர்ப்புக் காட்டவோ தமிழக மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் போதுமான காரணங்களாக இல்லையா? ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டதி ற்கான எதிர்ப்பிற்கு இந்தியாவின் பிராந்திய வல்லரசுப் பார்வை தவிர்ந்த வேறு ஏதாவது காரணங்கள் இருக்க முடியுமா ?

இன்று உலக நாடுகளுடன் இந்தியாவும் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கை பல நோக்கங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களின் அபிலாசைகளின் போக்கில் வளைத்தெடுக்கும் நோக்கிலேயே என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனும் நன்கு புரிந்தே இருக்கின்றார்கள். உலக நாடுகள் எவற்றையும் விட இந்தியாவை குறிப்பாக தமிழ் நாட்டு மக்களின் ஆதரவையும் அனுசரணையையும் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். காரணம் பாரம்பரிய தொப்பூழ்கொடியுறவு தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

ஈழத்தமிழ் மக்களைப் போலவே காஸ்மீர மக்களும் இந்தியாவினதும் பாகிஸ்தானதும் உலக வல்லரசுகளினதும் பகடைக் காய்களாக இருப்பதைத் தவிர போராட்ட வடிவத்தில் எந்த ஒற்றுமையும் இல்லை. நோக்கமும் வேற் வேறாகவே காணப்படுகின்றன என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும் ?

நன்றி>
http://ilanthirayan.blogspot.com/2006/01/b...3099560650.html

Print this item

  மேஜர் சோதியாவின் 16 ஆவது நினைவு தினம்
Posted by: நர்மதா - 01-10-2006, 11:04 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - No Replies

ஆளுமையும் விவேகமும் நிரம்பிய மகளிர் அணியின் முதல் தளபதி! மேஜர் சோதியாவின் 16 ஆவது நினைவு தினம் புதன்கிழமையாகும்

<img src='http://img221.imageshack.us/img221/3464/sothiya4aw.jpg' border='0' alt='user posted image'>

எம் தாயகத்தின் இதய பூமியென வர்ணிக்கப்படும் அந்தப் பெருங்காடு. அதன் இன்னொரு சிறப்பு வடதாயகத்தையும் தென் தாயகத்தையும் ஒரு சேர அணைத்துக் கொள்வதேயாகும்.

அந்தக் காட்டின் நடுவே அந்த முகாம். அதை யாரும் அறியவில்லை; அறிவதற்கான நேரமும் கிடைத்திருக்கவில்லை. அந்த முகாம் எப்போதும் கலகலவெனத்தானிருக்கும். காரணம் புலிகளாய்ப் பிறப்பெடுத்த பெண்கள் வாழும் அந்தக் காடு சிறியதோர் நகராய் மாறியதுதான்.

இங்குதான் மூத்த தளபதியாயும் மருத்துவராயும் விளங்கினாள் சோதியா. பெயர் ஆளுக்கேற்றாற் போல்தான் இருந்தது. சோதியா, சோதியாய் மிகவும் ஆற்றல் மிக்கவராய் விளங்கினார். அண்ணனின் தங்கைகளாகவும் நாட்டைக் காக்கும் வீரர்களாகவும் வளர்ந்தது அணிகள். தன்னிலை மறந்து அன்பால் அணைப்பாள் சோதியா. அன்னையே வடிவானவள். அவரிடம் யாருமே அறியாமல் புகுந்தது நோய். தன்நோயை மறைத்து மற்றவரைக் கவனமாக அவதானித்தாள். இதனால் இவளிடமிருந்த அந்த நோய் யாருமே அறியமுடியாதபடி அவளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டது.

அன்றையநாள் பாலன் பிறந்த நாள். அந்த நாள் சிறு விளையாட்டு நிகழ்வாய் குதூகலமாக பாட்டும் கூத்தும் பகிடியுமாக இருந்தது. அன்று இயல்பு நிலையில் மாற்றம் சோதியா மறைக்க முயன்றாள்; முடியவில்லை; மாறாகப்படுத்துக் கொள்ள நேரிடுகிறது. துடித்தனர் அனைவரும். இயல்பு நிலை குறைய, குறைய அவள் சாவின் பிடியில் சென்று கொண்டிருந்தாள். அதனை மட்டும்தான் அவள் அறிவாள். அதனை நாம் யாரும் அறியவில்லை. மருத்துவம் துரிதகதியில் நடந்தன, நாட்கள் வேகமாகச் சுழல, அந்த நாள் விடிந்தது.

தன்னையே உருக்கிய அந்த தீப்பொறி, விடியலுக்காய் மௌ னித்துப் போ னது என அறிவித்த நாள் 11.01. 1990 யாரும் நினைக்காத, நடக்காத ஒன்று நடந்தேறிப் போனது. வானம் மங்கியபடியே இருந்தது. கானகம் அசைவற்று வெறும் ஜடமானது. எல்லாரினதும் தாயாய் விளங்கியவள் விதையானாள், மேஜர் சோதியாவாக. அந்த கடைசி கிறிஸ்மஸ் நாட்களில் இருந்த குதூகலம், அது அவளின் சாவின் ஆரம்பமா என்று கூட நினைக்க வைக்கின்றது. மூத்த தளபதியை மகளிரணி இழந்தது. இது கடந்த 15 வருடங்களுக்கு முந்தியது.

இதன் பின்னர் சோதியா என்ற தியாகச் சுடரின் ஒளியாய்த் திகழும் மேஜர் சோதியா படையணி, தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களின் விழுமியமாய் 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமானது. காடுகளில் இப்படையணி தன்னை வளர்த்துக் கொண்டாலும், காலம் நகர களங்களிலும் கால் பதித்தது. முதல் களமாக பரந்தன் மண்ணில் தத்தி நடைபோட்ட இப்படையணி, முதலாவது மாவீர மறத்தியாக வீரவேங்கை இன்குயிலை இச்சமரில் அணைத்துக் கொண்டது. களமுனைகள் விரிந்தன. ஆனையிறவுச் சமர், ஓயாத அலை-02, ஓயாத அலை-03, குடாரப்பு தரையிறக்கம், தீச்சுவாலை, ஜெயசிக்குறு, சத்ஜெய என்று தொடர்ந்து, அணித் தலைவிகளையும் தொலைத் தொடர்பாளர்களையும் முன்னிலை நோக்குபவரையும், கனரக அணியினர் என ஆளுமைமிக்க பல போராளிகளையும் இழந்து கொண்டது.

இழப்புக்கள் எமக்குப் புதியவை அல்ல; இழப்புக்களைச் சந்திப்பது இதுதான் முதல் தடவையுமல்ல என்ற தலைவரின் வாக்கு மனதில் பதிய வீறு கொண்டு இப்படையணி விருட்சமென நிமிர்ந்தது. இன்று பத்தாண்டுகள் நிறைந்து பதினோராவது ஆண்டில் காலடி பதித்துள்ள போது, இதுவரை 459 மாவீரர்களை மண்ணுக்காய் ஒப்படைத்து, அவர்கள் மனங்களில் இருந்த விடுதலைக் கனவை நனவாக்கக் காத்திருக்கின்றது.

மேஜர் சோதியா, இவள் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாகவும் விளையாட்டு, கலை நிகழ்வு போன்ற பல துறைகளிலும் தலைசிறந்து விளங்கினாள். எதையும் விளங்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவள். இவள் முதல் முதல் 1984 இல் தன்னை மண்ணின் மலர்விற்காய் அர்ப்பணிக்க நினைத்து, வீறு நடைபோட்ட போதும், முதல் புகுந்த பாதை சரியான பாதை அல்ல என்பதை விளங்கி சரியான பாதையை தெரிவு செய்ய முயன்றார். முடிவில் தன்னை எமது இயக்கத்தில் இணைத்துக் கொண்டாள். இந்தியாவில் நடத்தப்பட்ட முதலாவது பெண்களுக்கான முதலாவது பயிற்சிப் பாசறையில் தனது பயிற்சியை ஆரம்பித்தாள். பயிற்சியில், பண்பில் என சிறந்து விளங்கினாள்.

1985 ஆம் ஆண்டு பயிற்சியை முடித்து வெளியேறிய மகளிர் அணியினர் முதலாவதாக லெப்.கேணல் விக்ரர் தலைமையில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சண்டையை அடம்பனில் சந்தித்தனர். இதுவே மகளிர் அணியினர் பங்குபற்றிய முதலாவது சண்டை ஆகும். இச்சண்டையில் மேஜர் சோதியா பெரும் பங்கு வகித்தார். இதனைவிட, யாழ் தொலைத் தொடர்பு நிலைய இராணுவ முகாம் தகர்ப்பிலும் இந்திய இராணுவத்திற்கு எதிரான கோப்பாயில் நடந்த தாக்குதலிலும் கல்லுண்டாய் வெளியில் நடந்த தாக்குதலிலும் பங்குகொள்ளத் தவறவில்லை. அனைத்துத் தாக்குதலிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியது.

இவ்வாறு களம் பல கண்ட சோதியா, 1989 ஆம் ஆண்டு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் மகளிர் அணிக்குத் தளபதியாக நியமிக்கப்படுகின்றார். பெற்றோருக்கு இவள் ஒரு பெண் பிள்ளை. வசதியாக வாழ்ந்தவள்தான். அமலோற்பவ வசந்தி அன்றைய காலத்தில் தேச விடுதலையை வென்றெடுக்கவென தமிழீழ விடுதலைப் புலிகள் அணியில் புகுந்து சோதியா எனத் திகழ்ந்தாள். இவளை இழந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவுற்றாலும், அவளது நினைவு வாழும் எம்முள்.

சோதியாவின் ஆளுமையும் வேகமும் பற்றி தலைவர் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு கூறினார். அணிகள் பற்றி தலைவருடன் சோதியா கதைத்துவிட்டு சென்றபோது திடீரென்று ஒரு வெடியோசை கேட்டதாகவும் அப்போது அருகில் நின்ற போராளிகள் வருவதற்கு முன் சோதியா தான் முதலில் வந்து நின்றதாகவும் கூறினார். இதிலிருந்து அவரின் ஆளுமையையும் வேகத்தையும் அறியக் கூடியதாக இருந்தது. அவரது கனவுகளையும் விளங்கி அவள் கனவுகள் நனவாகும் வரை எம் பாதங்கள் விடியலின் திசையில் தொடரும்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=156747#156747

பன்னிலா
lankasri

Print this item

  உலகவிடுதலையும்.. ஈழவிடுதலையும்...
Posted by: Thala - 01-10-2006, 10:56 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

<b>நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம்: மக்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு!</b>
puthinam




நம்மை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் எதிர்கொள்ள தயாராவோம்- நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம் என்று தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளனர்.


புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (07.01.06) "சேர்பியாஇ பொஸ்னியாவைப் போல் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் விரைவில் சிறிலங்கா" என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை:

சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசவிக்இ பொஸ்னியாவில் கொடூரமான மிலேச்சத்தனமான படுகொலைகளுக்கு உத்தரவிட்ட கொடூர மிலேச்சத்தனமான இராணுவத் தளபதி இன்னமும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் ராட்கோ மிலேடிக் போன்றோர் வரிசையில் இலங்கையில் இடம்பெறக் கூடிய அரசியல் இராணுவத் தலைமைகள் பற்றியும் நாம் பேச உள்ளோம்.

சாமியே சரணம் ஐயப்பா என்று இந்தியாவுக்கு காவடி எடுத்துவிட்டு அது பயனளிக்காத நிலையில் மகிந்தரால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மங்கள என்று சொல்லக்கூடிய அமங்களமான ஒருவருடைய வாய் வார்த்தைகள் பற்றியும் அவரது அமெரிக்க செயற்பாடு பற்றியும் சொல்ல உள்ளோம்.




எவருடைய நலனுக்கும் இருப்புக்கும் கேடு விளைவிக்காமல் எங்களுடைய நலன்களை முன்னிறுத்தி எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறோம் என்பதுதான் எங்களின் செய்தி.

நாங்கள் தேவையற்ற எதிர்ப்புகளை இராஜசதந்திர வழிகளுடாக மென்மைப்படுத்தி எங்களது விடுதலைப் பாதையை நாங்கள் வேகப்படுத்த முயலுகிறேமே அல்லாமல் எந்தவிதமான சர்வதேச மற்றும் இந்திய அரசியலில் எதிலும் தலையிடாமல் நாங்கள் செல்லும் புதிய பாதையில் எங்களைச் செல்ல விடுங்கள் என்பதுதான் எங்களது கருத்து.

பயங்கரவாதம் என்ற சொல் இன்று உலகத்தைப் பிடித்து பேயாக ஆட்டிக் கொண்டு இருக்கிறது. இம்முறை மாவீரர் நாளில் தலைவர் அவர்கள் தெளிவான ஒரு கருத்தை முன்வைத்து இருந்தார்கள்.

"பயங்கரவாதம் என்ற சொற்பதத்துக்கு தெளிவான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழியில் நடத்தப்படுகிற நியாயமான அரசியல் போராட்டங்களும் பயங்கரவாதமாக திரிபுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கவராத சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறைக்கு அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது" - என்று தலைவர்கள் அவர்கள் கூறியிருந்த கருத்தின் விளைவை சொல்ல விரும்புகிறேன்.

அண்மைக்காலத்தில் உலகத்திலே இந்தக் கருத்துகள் உக்கிரமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் தென் அமெரிக்காவிலே ஏற்பட்டிருக்கிற புதிய மாற்றங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

2005 ஆம் ஆண்டு யூன் மாதம் கியூபாவிலே உள்ள ஹவானாவின் மாநாட்டு மண்டபத்தில் 700-க்கும் மேற்பட்ட அறிஞர்கள்இ ஆய்வாளர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள். அந்த இடத்தில் லத்தீன் அமெரிக்காவில் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பும் தங்களுடைய சான்றுகளை முன்வைத்து எது பயங்கரவாதம் என்று பேசினார்கள்.

அங்கே முக்கியமாகச் சொல்லப்பட்டக் கருத்து என்னவென்று சொன்னால்இ அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு மக்கள் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டி இருக்கிறார்கள் என்ற செய்தியை நாங்கள் அறிந்தோம். அந்த முன்னணி இன்று தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

யார் பயங்கரவாதி என்ற கருத்தை அந்த முன்னணிக்கு ஊடாக நாம் அறியலாம். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்...லத்தீன் அமெரிக்காவின் பின்லேடன் என்று சொல்லப்படக் கூடிய ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை இன்று அமெரிக்கா தன்னுடைய நகரங்களிலே வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

வெனிசூலாவில் பல பயங்கரவாதச் செயல்களைச் செய்து அங்கிருந்து தப்பியோடி அமெரிக்காவில் இன்று இருக்கக் கூடிய அந்தப் பயங்கரவாதியை தங்கள் நாட்டுக்குத் தருமாறு வெனிசூலா அதிபர் அமெரிக்காவைக் கேட்டிருக்கின்றார்கள். அவர் பெயர் லூயிஸ் பொசாடா கர்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.

அவர் 1976 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கியூபாவின் விமானம் ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்து 73 பொதுமக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். அவர் பயங்கரவாதி.

யார் பயங்கரவாதி என்று தோலுரிக்கிற கனி ஒன்று உலகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதை நாங்கள் கவனத்திலே கொள்கிறோம்.

அந்த வகையில் இந்தத் தொடர்பாடல் துறையும் வல்லாண்மை சக்திகளால் திரிபுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுடைய விடுதலைப் போராட்டம் மிக நீண்டகாலமாக உரிய இடத்தை அடையாமல் இருப்பதற்கு இந்தத் தடைகளே காரணமாக இருந்தது.

இன்று தென் அமெரிக்காவில்- டெலி சவுத் என்று சொல்லக் கூடிய தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளினுடைய ஒரு அணியாக அர்ஜென்ரீனாஇ கியூபாஇ வெனிசூலா போன்ற நாடுகள் தங்களுக்கான தொலைக்காட்சியை அதாவது தென் அமெரிக்காவின் சி.என்.என். என்று சொல்லக் கூடியதை உருவாக்கி இருக்கிறார்கள். இதை புதிய செய்தியாக நாம் பார்க்கிறோம்.

இந்த அணியில் கியூபாஇ வெனிசூலாஇ அர்ஜென்ரினா இறுதியாக பொலிவியா சேர்ந்திருக்கிறது. பொலிவியா பற்றி ஒரு சில விடயங்கள் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

பொலிவியாவின் வரலாறு ஒரு அதியசமான வரலாறு. மூன்றில் இரண்டு பகுதி மக்கள் செவ்விந்திய மக்கள். அவர்கள் நீண்டகாலமாக அடிமைப்பட்ட நிலையே வாழ்ந்தார்கள். 70 வீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நபரின் கைகளில் சிக்கி எண்ணெய் வளமெல்லாம் அவர்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டன.




இன்று தென் அமெரிக்காவின் 12 நாடுகளிலே பாரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுவருவதை உலகம் கவனித்துக் கொண்டு வருகிறது. தேர்தலுக்கு ஊடாகவே மாற்றங்களைச் செய்கிறார்கள். எந்த வகையிலும் பயங்கரவாதச் செயல் என்று அமெரிக்கா சொல்ல முடியாத வகையில் தேர்தலுக்கு ஊடாக மாற்றங்களைச் செய்து வருகிறார்கள்.

யூவோ மார்ஸ் என்று சொல்லக் கூடிய இன்று கூட வாடகை வீட்டு அறையில் வாழ்கிறஇ எந்தவிதமான வங்கிக் கணக்கும் இல்லாத ஒரு சாதாரணமான செவ்விந்திய மனிதர் இன்று பதவிக்கு வந்திருக்கிறார்கள். தென் அமெரிக்காவில் 200 வருடத்துக்குப் பின்னர் வந்திருக்கக் கூடிய ஒரு செவ்விந்திய ஜனாதிபதி என்று அவர் அழைக்கப்படுகிறார்.

அவர் சார்ந்த அய மாரா என்ற குடியினுடைய கொள்கைகளை அவர் முன்னால் வைத்துப் பேசுகிற போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் சொன்னார்இ

"என்னுடைய கோட்பாடு திருடக் கூடாதுஇ பொய் சொல்லக் கூடாதுஇ சோம்பி இருக்கக் கூடாதுஇ அதேவேளை அடிமையாக இருக்க கூடாது" என்று சொல்லி கருத்தை முன்வைத்திருக்கிறார்.

வெனிசூலாஇ கியூபாஇ பொலிவியா நாடுகளுக்கு ஊடாக ஒரு புதிய கீழைத்தேய தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு புதிய அணியை அவர்கள் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் எவருக்கும் எதிராக என்று இல்லாவிட்டாலும் தங்கள் நாடுஇ தங்கள் வளங்கள் தங்களுக்கு உரியது என்ற அடிப்படையிலே உருவாகி வருகிறார்கள்.

வெனிசூலாவில் 1998 ஆம் ஆண்டிலிருந்து மிகப் பெரிய புரட்சியே நடந்து கொண்டு வருகிறது. அங்கே ஒரு சாதாரண இராணுவ உத்தியோகத்தராக இருந்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற சாவோசினுடைய நடவடிக்கைகள் மிகப் பெரிய எழுச்சியை உலகம் முழுக்க உருவாக்கி இருக்கின்றன.

உலகத்திலே மிகக் கூடிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடு- மிக அற்புதமாக அந்த எண்ணெய் வளத்தை தமது வறுமையான மக்களுக்காக- அந்த எண்ணெய் வளத்தின் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்து மிக அற்புதமாக ஒரு பொருண்மியத்தை அவர் உருவாக்கிக் கொண்டு வருகிறார்.

ஏழை நாடுகளுக்கு எண்ணெய்யை அவர் குறைந்த விலையில் விற்பதற்குக் கூட முன்வந்திருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கியூபாவுக்கு எண்ணெயை மிகக் குறைந்த விலைக்கு விற்றுக் கொண்டு வருகிறார்கள். இப்படியாக அந்த நாடுகள் எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லக் கூடிய ஒரு நாடாக இன்று வெனிசூலா மாறியிருக்கிறது.

கியூபாப் புரட்சி நடந்தது 1959 ஆம் ஆண்டு. தொடக்கத்திலே அந்தப் புரட்சியை நசுக்குவதற்கு இராணுவ ரீதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு பே ஓப் பிக்ஸ் என்று சொல்லக் கூடிய அந்த வளைகுடா படையெடுப்புக்குப் பின்னால் இராணுவ ரீதியான செயற்பாடுகள் தோற்றதற்குப் பின்னால் பொருண்மிய ரீதியான முற்றுகை ஒன்று இடப்பட்டு பல்வேறு வகையிலே சொல்லப்படமுடியாத தாக்குதல்களை மேற்கொண்டு இலக்குகள் பொருண்மிய ரீதியாக அடையாளம் காணப்பட்டு 40 வருட காலமாக- உலகத்திலே மிக நீண்ட பொருண்மிய முற்றுகைக்குள்ளே அகப்பட்ட கியூபா நாடுஇ இன்று மெல்ல மெல்ல தலைநிமிர்ந்து ஒரு காலத்திலே சய தேசிய உற்பத்தியைக் கொண்டிருந்த நாடு இன்றைக்கு 7 விழுக்காடு அளவிற்கு வருட உற்பத்தி வளர்ந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.

கியூபா எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கிற. நாளை நாங்கள் விடுதலை பெற்றாலும் கூட தொடக்கத்திலே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக்கூடும். இவற்றைத் தாண்டுவதற்காக வெறுமனே ஆர்வம் மாத்திரமல்லாமல் ஆக்கபூர்வமாகச் செயற்படக் கூடிய அணியே உலகத்தில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கிறது.

கியூபாவின் வளர்ச்சியைப் பார்க்கும்போது எங்களுக்கு அதிசயமாக இருக்கிறது.

கியூபாவில் ஒரு அற்புதமான மக்கள் நலன் சார்ந்த பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

தங்களது வரவு - செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 68 விழுக்காட்டுக்கு மேல் கல்விஇ சுகாதாரம்இ சமூக நலன் மற்றும் விஞ்ஞான நலன்களுக்காக ஒதுக்குகிறார்கள்.

அதனுடைய விளைவாக உலகத்திலே இன்றைக்கு மிகச் சிறந்த ஆரோக்கியம் மிகுந்த ஒரு அற்புதமான மருத்துவத் துறை கியூபாவிலே இருப்பதை உலகம் முழுமைக்கும் ஏற்றுக் கொள்வார்கள். 165 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற அளவிலே கியூபாவில் இன்றைய நிலை இருக்கிறது.

ஏறத்தாழ 12 ஆயிரம் விஞ்ஞானிகள்- அவர்களிலே 15 விழுக்காடு கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்; 210 ஆய்வு நிறுவனங்கள். ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் மேலானோர் அங்கே பணி செய்கிறார்கள் என எண்ணிப் பாருங்கள்.

அதைவிட முக்கியமானது உலகத்திலேயே மிகவும் இறப்பு விகிதம் குறைந்த- சிறுவர் இறப்பு விகிதம் 6.2 விழுக்காடு உடைய அந்த நிலையும் ஆயுள் நிலை வாழ்நிலை எதிர்பார்ப்பு 76 ஆகவும் உள்ள நாடாக கியூபா இருக்கிறது. இலங்கையில் கூட 73 ஆக இருக்கிறது.

இப்படியாக கியூபாவில் புதிய அணியை உருவாக்கி புரட்சியை நடத்தி அற்புதமாக ஒரு மாற்று அணியை உருவாக்கிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.

பொலிவியாவைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய செய்தி போராளிகள்இ பொதுமக்களுக்கு உள்ளது.

1967 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் நாள்தான் கொலைக் குழுக்களால் சே கொல்லப்பட்டார். இந்த உலகத்திலே நாங்கள் இப்போது தனித்துவிடப்படவில்லை.

எங்களுடைய அற்புதமானஇ அன்புக்குரிய பொதுமக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்- நாங்கள் தனித்துவிடப்படவில்லை. உலகமே தன்னுடைய வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் போராடிக் கொண்டு இருக்கிறது.

அங்கே புதிய புதிய அணிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. நாளை நாங்களும் விடுதலைப் பெற்றுச் செயற்படும்போது எங்களுக்கு உதவ- கரங்களைக் கொடுப்பதற்கு- எங்கள் மனங்களைத் தொடுவதற்கு- எங்கள் பசியைத் தீர்ப்பதற்கு நாடுகள் உலகிலே உள்ளன.

நாங்கள் எந்த அரசியலும் பேசவில்லை. வாழ்வின் இருப்புக்காக வரலாற்றை எங்களின் மக்களுக்காக நாம் முன்வைக்கிறோமே அல்லாமல் வேறு எந்த வகையான அரசியலும் இந்த இடத்திலே இங்கே இல்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.

அதேவேளையில் இன்னொரு முக்கிய செய்தியை இங்கே சொல்ல வேண்டும்.

அண்மையிலே இந்தியாவுக்குப் பயணம் செய்து அங்கே உறங்கிக் கிடந்த தமிழ் மக்களின் உணர்வைத் தட்டிவிட்ட பணியைத் தவிர வேறு எதையும் மகிந்தர் செய்யவில்லை. அது தோல்வியில் முடிந்ததுக்குப் பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக- மப்பு பிடித்த மந்தி மரத்துக்கு மரம் தாவுவது போல- இப்போது அவர் தான் போகவில்லை. ஏனென்றால் இவர் போனால் வரவேற்க அங்கே யாரும் தயாராக இல்லை.

இவரைச் சந்திப்பதற்கு புஸ் தயாராக இருப்பார் என்று நான் நம்பவில்லை.

தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் என்று சொல்லக் கூடிய ஒரு கத்துக்குட்டி அமைச்சர்- வெளிநாடு என்றால் என்னவென்று அரசியல் ரீதியாக-இராஜதந்திர ரீதியாக எந்தவிதமான அனுபவமும் அற்ற- உள்நாட்டிலே கீழ்நிலை அரசியல் நடத்தி அந்த செல்வாக்கின் பயனாக வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீரவைஇ அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே அவர் கடந்த சில நாள்களாக திருவாய் மலர்ந்து பல செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார்.

அந்தச் செய்திகளைக் கேட்கிறபோது எங்களுடைய இரத்தம் கொதிக்கிறது என்று சொல்லவில்லை. எங்களுடைய மனங்களிலே மிகப் பெரிய சோகமும் மிகப் பெரிய சினமும் கிளர்ந்தெழுகின்றன.

மங்கள சமரவீர- முக்கியமாக அமெரிக்காவில் உள்ள புலனாய்வு அமைப்புகளையும்இ பயங்கரவாத எதிர்ப்பு இயக்கங்களையும் பல்வேறு இயக்கங்களையும் சந்தித்தது மட்டுமல்லாமல்

அவர் அண்மையில் "வாசிங்டன் போஸ்ட்" பத்திரிகைக்கும் மிகப் பெரிய செய்தி ஒன்றை அளித்திருக்கிறார்கள்.




2 நாட்களுக்கு முன்னர் மங்கள சமரவீர சொல்லியிருக்கும் கருத்துகளை எங்கள் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

"நவீன பயங்கரவாத உலகத்தின் தந்தையாக" எமது விடுதலைப் போராட்டத்தை மங்கள சமரவீர வர்ணித்திருக்கிறார். அதைப் போல்

"மிகக் கொடிய கொலைகார பொருள்முறை அமைப்பைக் கொண்ட அல்-கொய்தா அமைப்பைவிட மிக பாரதூரமான ஒரு இயக்கம்"

என்று அமெரிக்காவில் போய் சொல்லி கோள் மூட்டுகிற வேலையைப் பார்த்து இருக்கிறார்.

எங்களைப் பற்றி பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசாங்கம் சொல்லக் கூடிய இறுதி செய்தியாக இருக்கிறது- இதுதான் உண்மையான செய்தி என்பதையும் எங்கள் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

அமெரிக்காவில் சொல்லி இருக்கிறார்

"எங்களுக்குத் தேத்தண்ணி தந்தால் போதாது. ஆதரவு தந்தால் காணாது. நாங்கள் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நீங்கள் செய்ய வேண்டும்" என்று கேட்பதற்காக இங்கே இருந்து அமெரிக்காவுக்குப் போயிருக்கிறார்.

அங்கே என்ன நடந்தது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாவிட்டாலும் கூட இப்போது சில செய்திகளை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

எங்கள் மக்களின் வாழ்வும் இருப்பும் தொடர்பான முக்கியமான செய்தி என்று நினைக்கிறேன்.

இந்தச் செய்தியை மக்கள் முன்னிலையில் தெளிவாக வைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அண்மைக்காலமாக எங்கள் பகுதிகளில் கொலைகள் அரங்கேறிக் கொண்டு வருகின்றன. முக்கியமாக இளைய தலைமுறைஇ அறிவாளர்கள் குறிபார்த்து இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

இந்தத் தேசத்தினது குருத்துகளைக் கருக்குவதிலே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடப்பதை நாங்கள் பார்க்கிறோம்.

இந்த மாதிரியான செயற்பாடுகளுக்குக் காரணமாக இருக்கக் கூடிய கொலைக் குழுக்கள் பற்றி உலகத்திலே மிக சோகமான அவலமான வரலாறு ஒன்று இருக்கிறது.

தென் அமெரிக்க நாடுகளிலே குறிப்பாக கொலம்பியாஇ வெனிசூலாஇ சிலிஇ கியூபா போன்ற நாடுகளிலே 19 ஆம்இ 20 ஆம் நூற்றாண்டுகளிலே அமெரிக்க சி.ஐ.ஏ. துணையோடு அமெரிக்க இராணுவ நிலைகளிலே பயிற்றுவிக்கப்பட்ட கொலைக் குழுக்களின் தோற்றங்களைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம்.

வரலாற்றிலே அண்மைக்காலமாக சி.ஐ.ஏ.வின் இரகசியக் கோப்புகள் யாவும் அமெரிக்காவிலே வெளியிடப்பட்டு பல்வேறு செய்திகள் பகிரங்கமாக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் ஏதோ கண்டுபிடித்த செய்திகள் அல்ல.

உதாரணமாக 70 ஆம் ஆண்டுகளில் கொண்டோர் பிளான் என்று சொல்லக் கூடிய கேசிங்கரின் அடிப்படையில் தென் அமெரிக்காவில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களைக் கொல்வதற்கான பாரிய திட்டம் ஒன்று குழுக்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட வரலாற்றை நாங்கள் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

அந்த வரலாற்றை அமெரிக்கா இப்போது கைவிட்டதாக நாங்கள் நம்பிக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது மங்கள சமரவீர அங்கே போய் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்-

எங்கள் மண்ணிலே கொலைக் குழுக்களினது கைங்கர்யங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.

இந்தக் கைங்கர்யங்களை தொடர்ந்து நிகழ்த்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற அந்த நிலையிலேயும்

ஒருகால கட்டத்தில் சமூக நீதியைக் கதைக்கிற இந்த உலகம்இ நிச்சயமாக இந்த கொலைகாரக் குழுக்களைச் செயற்படுத்தி அனுமதித்திருக்கக் கூடிய சரத் பொன்சேகா அல்லது மகிந்த ராஜபக்ச போன்றவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தோற்றுவித்து- சிறைப்பிடித்து- விசாரிக்கப்பட வேண்டிய கட்டத்துக்கு தள்ளபடப் போகிறார்கள் என்பதையும் அமெரிக்கா நன்கு உணர்ந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

ஆகவே இந்த முறை நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லுவது போல்-

மங்கள சமரவீர எந்த வகையான கோள்மூட்டலை அமெரிக்காவில் செய்தால் என்ன? எங்கு செய்தால் என்ன?

ஒரு புதிய நிலைப்பாடு இன்றைக்கு எங்கள் போராட்டம் பற்றி உலகத்திலே உருவாகிக் கொண்டு இருக்கிறது.

அந்த நிலைப்பாடு என்னவென்று சொன்னால்-

போதும் போதும் என்றாகிவிட்ட இந்த வன்முறைக்கு வழியாக ஒரு புதிய தீர்வை இந்த உலகம் முன்வைக்காவிட்டால்- அந்தத் தீர்வை நாங்களாக ஏற்படுத்திக் கொள்வதை உலகம் தடுக்க மாட்டார்கள் என்ற நிலையிலே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செய்தி.

ஆகஇ இந்த கொலைக் குழுக்களினது அரங்கேற்றங்கள் எங்களுக்கு லத்தீன் அமெரிக்கச் சம்பவங்களை உணர்த்துகின்றன.

அதே லத்தீன் அமெரிக்க நாடுகள்தான் இந்தக் கொலைக் குழுக்களை எல்லாம் விரட்டி புரட்சிகளை நடத்தி ஒரு புதிய அணியை உருவாக்கி இன்று உலத்திலே ஒரு புதிய சக்தியாக மாறியிருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.

அண்மைக்காலத்திலே அரசியல் ரீதியான மாற்றங்களை தென் அமெரிக்கா நாடுகள் நிகழ்த்துவதை உலகம் பதிவு செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் நாங்கள் பார்க்கும் போது நிச்சயமாக ஆசியாவில் கூட இந்த அடக்குமுறையாளர்களுக்கு வல்லாண்மை நாடுகள் தொடர்ந்து உதவி செய்தால் அதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வுகள் நடந்திருப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.

ஆகவே அன்பிற்குரியவர்களே!

நாங்கள் தனித்துவிடப்படவில்லை.

ஆனால் எங்களை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் அதை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சேகுவேராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

40 வருடகாலமாக மிகப் பெரிய நீண்ட பொருண்மிய அடக்குமுறைகளுக்கு உள்ளே இருந்தும் ஒரு நாட்டால் வாழமுடியும் என்று சொன்னால்-

அதன் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்த முடியாது-

அதன் கடல் போக்குவரத்து மிகக் கூடுதலான செலவைக் கொடுக்கிறது-

இப்படி எந்த வகையான உறவும் உதவியும் இல்லாத நிலையில் கியூபாவுக்கு

இன்றைக்கு சீனா உதவி செய்கிறது- வெனிசூலா உதவி செய்கிறது. இன்னும் பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்திருக்கின்றன.

ஆகவேஇ நீடித்து நிற்கும் விடுதலைப் போராட்டத்துக்கு உதவிகள் தாமாக வந்து சேரும் என்பதைத்தான் இன்று நாம் முக்கிய செய்தியாக கூறுகிறோம் என்றார் <b>கா.வே.பாலகுமாரன்....</b>

Print this item

  மன்மோகன் சிங்கிடம் மகிந்த விடுத்த இரு வேண்டுகோள்கள்
Posted by: Vaanampaadi - 01-10-2006, 10:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

தனியான சந்திப்பில் மன்மோகன் சிங்கிடம் மகிந்த விடுத்த இரு வேண்டுகோள்கள்

இந்தியாவிற்கான தனது அண்மைய பயணத்தின் பொழுது மீண்டும் இலங்கையில் யுத்தம் வெடித்தால் இந்திய `அமைதி காக்கும்' படைகளை அனுப்ப வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங்குடனான சந்திப்பினைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டதாகவும் அதற்கு முதலில் தயங்கிய இந்தியப் பிரதமர் பின்னர் குறுகிய சந்திப்பிற்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ள அப்பத்திரிகை, அச்சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், அதற்கு இந்தியப் பிரதமர் மறுத்துவிட்டதுடன் யுத்தத்தைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருங்கிச் செயற்பட்டு அதிகாரப்பகிர்விற்கான வடிவம் தொடர்பில் இணக்கமொன்றை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரகசிய சந்திப்பில் இருநாட்டுத் தலைவர்களாலும் பயணத்தின் இறுதியில் வெளியிடப்படும் கூட்டறிக்கையில், `ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு' என்ற வாக்கியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாமென்றும் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். இதற்கு `ஐக்கிய இலங்கை' என்பது இந்தியாவின் கொள்கையாகும் என்று மன்மோகன் சிங் பதிலளித்தார். எப்படியிருந்த போதிலும் தொடர்ச்சியான வேண்டுகோளினை அடுத்து `ஐக்கிய இலங்கை' என்ற பதத்திற்கு பதிலாக `பிரிக்கப்பட முடியாத இலங்கை' என்ற பதத்தை பயன்படுத்த மன்மோகன் சிங் இணங்கியதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

Thinakural

Print this item

  பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்
Posted by: Vaanampaadi - 01-10-2006, 10:41 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

ஹுஸ்டன், ஜன. 10-

ஆண்மை குறைவை போக்கி `செக்ஸ்' உணர்வை அதிகரிக்கும் `வயாகரா' மாத்திரைகள் இப்போது உலகம் முழுவதும் அமோக மாக விற்பனையாகிறது. பைசர் நிறுவனத்தின் இந்த வயாகரா மாத்திரைகள் டாக்டர் சீட்டு இல்லாமலேயே கள்ள மார்க் கெட்டிலும் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

பெண்களுக்கு என்று இந்த நிறுவனம் இன்னும் வயாகரா மாத்திரையை உற்பத்தி செய்ய வில்லை.

இந்த நிலையில் அதிகமாக காபி குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் உள்ள பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 2 பேர் காபி, டீ அதிகமாக சாப்பிடும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்குமா என்பது குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.

முதல் கட்டமாக அவர்கள் பெண் எலிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 108 பெண் எலிகளுக்கு காபியை கொடுத்து சோதனை செய்தனர். காபி குடித்த எலிகள் ஆண் எலிகளை சுற்றி சுற்றி வந்தன. அந்த பெண் எலிகள் ஆண் எலிகளுடன் அதிகமாக செக்ஸ் உறவில் ஈடுபட்டன. காபியில் உள்ள `காபின்' என்ற பொருள் செக்ஸ் உணர்வை அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதே அடிப்படையில் மற்ற விலங்குகள் மற்றும் பெண் களையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய இருக்கிறார் கள்.

maalaimalar

Print this item

  தமிழீழ விமானப்படை தாக்குதலை நடத்தும்
Posted by: Vaanampaadi - 01-10-2006, 10:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

செவ்வாய் 10-01-2006 13:17 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்]

<b>நாலாம் கட்ட ஈழப்போர் திணிக்கப்படுமானால் தமிழீழ விமானப்படை தாக்குதலை நடத்தும்: கேணல் பானு </b>

எமது படைக்கட்டமைப்பு வலுவாக இருக்கின்றது. கடற்படை, கரும்புலி என்பதை விட நாலாங்கட்டப் போர் திணிக்கப்படுமானால் நமது விமானப்படையும் தாக்குதலை மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு குறிப்பிட்டார். ஈரளக்குளம் மக்களுக்கான கிராமியப் படைப்பயிற்சி; தொடர்பான ஆரம்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்:-

சிறிலங்கா அரசு எம்மீது யுத்தத்தைத் திணிக்குமாக இருந்தால் அந்த யுத்தத்தில் எவரும் பார்வையாளராக இருக்கக் கூடாது அனைவரும் பங்காளிகளாக மாற வேண்டும்.

சமாதானத்தை இழுதடித்துக் கொண்டு எமது படைப்பலத்தை நலிவடையச் செய்வதே சிறிலங்கா அரசின் நோக்கமாகும். சிறிலங்கா அரசு எதனையும் எமக்கு தரப்போவதில்லை. நாம் அடித்துத்தான் பெற வேண்டும். அவ்வாறு அடித்துப் பெற்ற நிலம் தான் எம்மிடம் உள்ளது.

விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை விடுதலைப் போராட்டத்திற்குப் பலமாக இருப்பவர்கள் நீங்கள் தான். அதன் அடிப்படையில் இன்றைய அரசியல் சூழலை உங்களுக்கு விளக்க வேண்டியுள்ளது.

இந்தச் சமாதான காலத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளை நாம் இழந்திருக்கின்றோம். ஆயினும் எமது தலைவர் பொறுத்து பொறுமையின் விளி;ம்பில் இருக்கின்றார். விடுதலைப்புலிகளை தாக்கினால் புலிகள் பொறுத்துக் கொள்வார்கள் தமிழ் மக்களை தாக்கினால் தான் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை செய்யும் அதேவேளை புலிகளே யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என சர்வதேச சமூகத்திற்கு காட்டும் வகையில் சூழ்ச்சிகளைச் செய்து எம்மை யுத்தத்திற்கு இழுத்து வருகின்றனர் எனக் குறிப்பிட்ட கட்டளைத் தளபதி பானு அவர்கள்,

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச சமாதானத்தை ஆரம்பிப்போம் எனக் கூறிக்கொண்டு மறுமுனையில் சிறிலங்கா படைபலத்தை விருத்தி செய்து வருகின்றார்.

எமது போராட்டம் ஆயுத பலமின்றிய காலத்தில் உறுதியாக நின்று வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று மட்டக்களப்பில் மட்டும் 25000 பேருக்கு ஆயுதம் வாங்கக் கூடிய வகையில் வளர்ச்சி அடைந்து விருட்சமாக நிற்கும் இந்தக் காலத்தில் மக்கள் போராட்டமாக உருவெடுத்து நிற்கின்ற ஒரு சூழலில் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தங்களது அளப்பெரிய சேவைகளை செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5000 இராணுவத்தினர் மட்டுமே உள்ளனர். ஆனால் ஐந்து லட்சம் மக்கள் உள்ளனர்.

நாம் அனைவரும் ஒன்று திரண்டால் ஒரிரு நாளில் எதிரிகளை விரட்டி அடித்து எமது மண்ணை மீட்க முடியும். அந்தளவிற்கு எமது இலக்கினை நிறை வேற்றக் கூடிய சிறந்த தலைவரை நாம் பெற்று இருக்கின்றோம்.

Print this item

  தியாகதீபம் திலீபன் மருத்துவமனை கடற்படையினரால் அடித்துடைப்பு
Posted by: Vaanampaadi - 01-10-2006, 10:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

புங்குடுதீவு தியாகதீபம் திலீபன் மருத்துவமனை கடற்படையினரால் அடித்துடைப்பு
Written by Sankiliyan Tuesday, 10 January 2006

புங்குடுதீவு பொது மக்களின் நன்மை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதரா சேவையினரால் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபன்; மருத்துவமனை ஸ்ரீலங்கா கடற்படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளினால் பொது மக்களின் பயன்பாடுகளுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு இடங்களை சேதப்படுத்தும் மிகவும் மோசமான செயல்பாடுகளில் படையினர் ஈடுபட்டுவருவதன் தொடர்ச்சியாகவே தியாக தீபம் திலிபன் மருத்துவமனையும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

போக்கு வரத்து வசதிகள் கூட இல்லாத நிலையில் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கென விடப்பட்ட தியாக தீபன் திலீபன் மருத்துவமனையினை கடற்படையினர் அடித்துடைத்த சம்பவம் மிகவும் மோசமான மனிதாபிமான மற்றசெயல் என அப் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

sankathi

Print this item

  பிரபல நடிகர் ஆர்.எஸ்.மனோகர் காலமானார்
Posted by: Vasampu - 01-10-2006, 10:23 AM - Forum: சினிமா - Replies (2)

<b>சிறந்த குணசித்திர வில்லன் நடிகரும் நாடக நடிகருமான திரு.ஆர்.எஸ்.மனோகர் காலமானார். இவர் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்தும் அதன் பின்னரும் புகழ் பெற்ற வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் விளங்கினார். இலங்கையின் இராவணன் வரலாற்றை இலங்கேஸ்வரன் எனும் நாடகத்தால் சிறப்பாக்கி காட்டியவர். நாடகத்தறையில் பல சாதனைகள் நிகழ்த்தி இதுவரை 8000 நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றியவர். அன்னாரின் இழப்பு கலைத்துறைக்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.</b>

Print this item

  நளினிமுருகன் மகள் சிறையில் பெற்றோரை சந்திக்கிறார்
Posted by: rajathiraja - 01-10-2006, 07:18 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (8)

நளினிமுருகன் மகள் தமிழகம் வந்தார்: சிறையில் பெற்றோரை சந்திக்கிறார்
ஜனவரி 10, 2006

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியினரின் மகள் ஆரித்ரா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார்.



இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை அவர் சந்திக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன் இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் வைத்து நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது.

முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. முருகன் தாக்கல் செய்துள்ள கருணை மனு இன்னும் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

ஆரித்ராவுக்கு 6 வயது ஆகும் வரை தனது தாயாருடன் இருந்தார். அதன் பின்னர் முருகனின் தாயாருடன் ஆரித்ரா இலங்கை சென்று விட்டார். இந் நிலையில் தனது பெற்றோரைக் காண ஆரித்ரா விரும்பினார்.

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தனர் முருகன் குடும்பத்தினர்.

ஆனால், விசா கொடுப்பதில் இந்திய தூதரகம் தாமதம் செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். முருகன் சிறையிலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதையடுத்து உடனடியாக ஆரித்ராவின் விசா விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து விசா வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஆரித்ராவுக்கு விசா கிடைத்தது. இதையடுத்து ஆரித்ரா தனது உறவினர்களுடன் சென்னை வந்துள்ளார்.

தற்போது வேலூர் சென்றுள்ள அவர் இன்று தனது பெற்றோரை சந்திக்க சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். இன்றே அனுமதி கிடைத்தால் 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தாய், தந்தையை சந்திப்பார் ஆரித்ரா.

6 வயதில் இலங்கைக்குப் போன ஆரித்ராவுக்கு இப்போது 14 வயதாகிறது. அவர் தங்கியிருக்கும் இடத்தை போலீஸார் படு ரகசியமாக வைத்துள்ளனர்.
http://thatstamil.indiainfo.com/news/2006/...1/10/lanka.html

Print this item