| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 235 online users. » 0 Member(s) | 232 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,296
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,622
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| இங்கே நிம்மதி! |
|
Posted by: AJeevan - 01-09-2006, 11:36 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (1)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'><b>இங்கே நிம்மதி! </b>
<img src='http://www.vikatan.com/sakthi/2006/jan/13012006/p35.jpg' border='0' alt='user posted image'>
- மாதா அமிர்தானந்தமயிதேவி
அடர்ந்த காட்டுக்குள் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்தத் துறவி. மாலை நேரம். அடிவானத்தில் சூரியன் மறையப் போவதால், இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்போது கிராமத்து ஆசாமி ஒருவர் பரபரப்பாக, காட்டுக்குள் அந்த மரத்தை ஒட்டிய பாதையில், \"மகனே... செல்வமே... எங்கேடா இருக்கே?\" என்று உரக்கக் குரல் எழுப்பியபடி ஓடி வந்தார்.
காய்ந்த சருகுகள் மீது அவர் வேகமாக ஓடியதால் எழுந்த சத்தமும், அவரது கர்ணகடூரமான குரலும் துறவியின் தியானத்தைக் கலைத்தது. கோபத்துடன் எழுந்தார். அந்த ஆசாமி அதைக் கவனிக்கவில்லை. காட்டின் உள் பக்கமாகப் பார்வையை வீசியபடி துறவியைத் தாண்டிப் போய்விட்டார். துறவியின் கோபம் எரிமலை மாதிரி பொங்கி வழிந்தது. எப்படியும் இந்த வழியாகத்தானே வந்தாக வேண்டும்... பார்த்துக் கொள்ளலாம்! எனக் காத் திருந்தார் துறவி.
சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனைத் தன் தோளில் சுமந்தபடி அந்த ஆசாமி வந்தார். அவரை வழிமறித்த துறவி, ஆ... ஊவென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து என் தியானத்தைக் கலைத்து விட்டீர்களே! என்று கோபத்தோடு கேட்டார்.
அவர் பயந்து நடுங்கி விட்டார். பணிவுடன் துறவியைக் கும்பிட்டு, மன்னியுங்கள் சுவாமி! தாங்கள் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை என்றார்.
ஆனாலும், துறவி சமாதானமாகவில்லை. என்ன? உனக்குக் கண் தெரியாதா? என்று மீண் டும் கோபத்தில் பொங்கியபடி கேட்டார்.
அந்த மனிதர் நிதானமாக, இல்லை சுவாமி! என் மகன் மாலையில் தன் நண்பர்களோடு விளையாட காட்டுப் பக்கம் வந்தான். அவனுடன் வந்த எல்லோரும் திரும்பி விட்டார்கள். அவன் மட்டும் வரவில்லை. ஏதாவது குளத்தில் விழுந்திருப்பானோ... கொடிய விலங்குகளிடம் மாட் டிக் கொண்டிருப்பானோ என்ற பயத்தில் அவனைத் தேடி ஓடினேன். என் நினைப்பெல்லாம் அவன் மீதே இருந்ததால், நான் உங்களைக் கவனிக்கவில்லை! என்று சொல்லி மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டார்.
ஆனாலும் துறவி விடுவதாக இல்லை. என்ன காரணமாக இருந்தாலும் சரி... இறைவனை நினைத்து மனமுருக தியானத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு நீங்கள் தொல்லை கொடுத்தது தவறு! என்றார்.
அந்த கிராமத்து ஆசாமி இப்போது துறவியைப் பார்த்தார். பின், ஆரம்பித்தார்: தியானத்தில் மூழ்கியிருந்த உங்களுக்கு நான் ஓடியது, கத்தியது எல்லாமே தெரிந்தது. அதனால் உங்கள் தியானம் கலைந்தது என்கிறீர்கள். ஆனால், மகனைத் தேடி ஓடிய நான் கண்முன்னே இருந்த உங்களைக் கவனிக்கவில்லை. எனக்கு என் மகன் மீது பற்று இருந்தது. அதனால் வேறு எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை. சாதாரணச் சத்தங்களே உங்கள் மாபெரும் தியானத்தைக் கலைத்து விட்டது என்றால், என் குழந்தையிடம் எனக்குள்ள பற்றுகூட உங்களுக்கு இறைவன் மீது இல்லையே... இது என்ன தியானம்! பொறுமையும் ஈடுபாடும் இல்லாத இந்த தியானத்தால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? _ அப்பாவியான அந்தக் கிராமத்து ஆசாமி கேட்ட விதம் துறவியை அசைத்துப் பார்த்தது.
துறவிக்குத் தனது தவறு உறைத்தது. தனக்கு ஞானத்தை அளித்த அந்தக் கிராமத்து ஆசாமியை வணங்கி அங்கிருந்து கிளம்பினார்.
எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமை யான ஈடுபாடு காட்ட வேண்டும். அப்படி மூழ்கு பவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். இறை பக்தியிலும் அப்படித்தான்! மனதை ஒருமுகப்படுத்தி பக்தியில் மூழ்க வேண்டும்.
சிலர் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ் வொரு தெய்வத்தைத் தேடி ஓடுகிறார்கள். அவர்களுக்குப் புரியவில்லை... தெய்வம் எதுவாக இருப்பினும் தெய்விக சக்தி ஒன்றுதான்! தேங்காய் என்பார்கள் தமிழில். கோக்கனட் என்பார்கள் ஆங்கிலத்தில். நாரியல் என்பார்கள் இந்தியில். எப்படிச் சொன்னாலும் அதன் பொருள் மாறுவ தில்லை. ஒவ்வொருவரும் அவர்களது பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, இறைவனை விதவிதமான வடி வங்களில் புரிந்து கொள்கின்றனர். பல பெயர்களைக் கொடுக்கின்றனர்.
ஆனால், எங்கும் நிறைந்த பரம்பொருள் எல்லாப் பெயர்களுக்கும் அப்பாற்பட்டவர். தன் பெயரைச் சொல்லி அழைத்தால் மட்டுமே திரும்பிப் பார்க்கும் நபரல்ல அவர்! கூப்பிட்டால் வருவதற்கு, அவர் உங்களை விட்டு வெகு தொலைவில் இல்லை. அவர் உங்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் குடியிருக் கிறார். உங்கள் இதயத்தின் மொழிகளை அவர் அறிந்திருக்கிறார். அவரது பெயர்களைச் சொல்லி அழைப்பது ஆனந்தமான அனுபவம். எந்த நாமமும் அவரது நாமமே!
கொஞ்சம் ஆழத்துக்குப் பள்ளம் தோண் டிப் பார்த்து, தண்ணீர் கிடைக்காத விரக்தியில் பல இடங்களில் மாறி மாறித் தோண்டிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்போதும் அது கிடைக்காது. ஒரே இடத்தில் ஆழமாகத் தோண்டுபவர்கள் தங்கள் இலக்கில் ஜெயிக்கிறார்கள்.
தண்ணீர் ஊற்றாவிட்டால், செடிகளின் கிளைகள்தான் வாடி வதங்கும். ஆனால், அதற்காக நாம் தண்ணீரைக் கொண்டு போய் அந்த கிளைகளில் ஊற்றினால் வாட்டம் தணிந்து விடுவதில்லை. வேருக்குத் தண்ணீர் ஊற்றினால் அது எல்லா பாகங்களுக்கும் சென்று கிளைகளின் வாட்டத்தைக் குறைத்துச் செழிக்க வைக்கிறது.
இறைவன் அதையே உங்களிடமும் எதிர்பார்க்கிறார். உங்கள் உற வினர்கள், நண்பர்கள், முன்பின் அறிமுகமில்லாத அந்நியர்கள், விரோதம் பாராட்டும் எதிரிகள், பசுக்கள், நாய்கள்... என சகல ஜீவராசிகளிடமும் நீங்கள் அன்பு செலுத்துங்கள். அப்படிச் செலுத்தும் அன்பு இறைவனைச் சென்றடைகிறது. ஏனென்றால், இறைவன் உங்கள் இதயத்தில் இருப்பது போலவே, எல்லா ஜீவராசிகளின் இதயங்களிலும் வாழ்கிறார்.
இறைவன் ஏன் இப்படி இதயங்களில் வாசம் புரிய ஆரம்பித்தார் என்பதற்குச் சுவாரஸ்யமான உவமைக் கதை ஒன்று உள்ளது. தான் வசிப்பதற்கான ஓர் இருப்பிடத்தை நிர்மாணிக்க இறைவன் திருவுளம் கொண்டார். அதற்காக பிரபஞ்சத்தைப் படைத்தார். மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், நதிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள்... இப்படி எல்லாம் நிறைந்த அழகான பூமியைப் படைத்தார். அதில் அவர் இன்பமாக வாழ்ந்தார். எல்லாம் நன்றாகத்தான் இருந் தன.
ஆனால், ஒரு நாள் இறைவன் ஒரு தவறு செய்து விட்டார். அவர் மனிதனைப் படைத்தார். அன்றிலிருந்து தொல்லை ஆரம்பமானது. எந்த நேரமும் மனிதர்கள் இறைவனிடம் ஏதாவது புகார் செய்தபடி இருந்தனர். இறைவன் உண்ணும்போதும், உறங்கும்போதும் அவரது அரண்மனைக் கதவை மனிதர்கள் தட்டியபடி இருந்தனர்.
ஓயாத புகார்களால் இறைவனின் மன நிம்மதி போய் விட்டது. ஒரு பிரச்னையைத் தீர்த்தால் அடுத்த நிமிடமே இன்னொரு பிரச்னை புதிதாக முளைத்தது. ஒரு மனிதனுக்குத் தீர்வாக அமைந்தது, மற்றொரு மனிதனுக்குப் பிரச்னையாக மாறியது. ஒரு மனிதன், தனது பயிர்கள் செழிக்க மழை வேண்டும் என்று கேட்டான். இன்னொருவன், இறைவா! என் வீடு ஒழுகுகிறது. கால்நடைகள் அவதிப்படுகின்றன. மழையை நிறுத்து! என மன்றாடினான். இறைவன் என்ன செய்தாலும் மக்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. எல்லாமே பிரச்னைகளாக மாறின.
கடவுளால் தாங்க முடியவில்லை. தனது ஆலோ சகர்களைக் கூப்பிட்டார்: என்னால் இவர்களது தொந்தரவைத் தாங்க முடியவில்லை. மனிதர்கள் தொட முடியாத ஓர் இடத்தைச் சொல்லுங்கள். நான் போய் அங்கு ஒளிந்து கொள்கிறேன். அப்போதுதான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்! என்றார்.
பனி மூடிய இமயமலையின் உயரமான சிகரங்களுக்குச் சென்று விடுங்கள்... என ஆலோசனை கூறினார் ஒருவர்.
என்றாவது ஒரு நாள் அந்த சிகரங்களின் உயரத்தை அளக்க மனிதன் அங்கு வருவான்! என்று அதை நிராகரித்தார் இறைவன்.
கடலின் அடி ஆழத்தில் சென்று தங்கி விடுங்கள்! என்றார் இன்னொருவர்.
அதையும் இறைவன் மறுத்தார். மனிதர்கள் வருங் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டு பிடிப்பார்கள். அதன் உதவி யோடு அவர்கள் அங்கும் வந்து விடுவார்கள்! என்றார் இறைவன்.
அப்படியானால் நிலாவுக்குச் சென்று விடுங்கள். அது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அங்கு மனிதர்கள் தேடிப் பிடித்து வந்து தொல்லை கொடுக்க வாய்ப்பே இல்லை! என்று வேறொருவர் யோசனை சொன்னார்.
அதையும் நிராகரித்து விட்டார் இறைவன். நண்பர்களே! உங்களால் வருங்காலத்தைப் பார்க்க முடியாது. என்னால் முடியும். எனக்குத் தெரியும். வருங்கால மனிதர்கள் அறிவியல் அறிவில் மேம்பட்டு இருப்பார்கள். அவர்கள் ராக்கெட் என்ற ஒரு பொருளைக் கண்டுபிடிப்பார்கள். அதன் பிறகு நிலவுக்கும் எளிதாக வந்து விடுவார்கள்! என்றார் இறைவன்.
இதைக் கேட்டு எல்லோரும் மௌனமாக, மூத்த ஆலோசகர் எழுந்தார். இறைவா! தனக்கு வெளியே இருக்கும் எல்லாவற்றையும் ஆராயும் குணமுள்ள மனிதன், தனக்குள் எதையும் தேட மாட்டான். அவன் இதயத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். மனிதன் தன் இதயத்துக்குள் இறைவன் குடியிருப்பதை உணர மாட்டான். எனவே, உங்களுக்குத் தொந்தரவு இருக்காது! என்றார்.
அதை இறைவன் முகம் மலர ஏற்றார்.
உங்கள் ஒவ்வொருவரின் இதயத்தின் அடி ஆழத்திலும் இறைவன் குடியிருக்கும் கோயில் இருக்கிறது. தூய்மையான பேரன்பு, கருணை, கள்ளங்கபடமற்ற குணம் ஆகிய வடிவங் களில் அவர் இருக்கிறார்.
ஆனால், அந்தக் கோயிலை தற்பெருமை, சுயநலம், அகங்கார எண்ணம் போன்ற பல பூட்டுகள் மூடி வைத்திருக்கின்றன. மனதுக் குள் இருந்து கொண்டு என்ன யோசித்தாலும் வராத ஏதோ ஒரு பழைய நினைவு போல பலர் இறைவனையும் பூட்டி வைத்திருக்கிறார்கள். அந்தப் பூட்டுகளை அகற்றுங்கள். இறை வனின் பல வடிவங்களை உங்கள் குணங்களில் காட்டுங்கள்.
-விகடன்
படங்கள்: சு.குமரேசன்
</span>
|
|
|
| புலத்து பெண்ணால் கிழிக்கப்படும் |
|
Posted by: sathiri - 01-09-2006, 10:12 PM - Forum: புலம்
- Replies (7)
|
 |
புலத்து பெண்ணால் கிழிக்கப்படும் புலத்துபெண்ணியவாதிகளின் முகத்திரை.இவர்களைபற்றி நானும் அவலத்தில் கட்டுரை போட்டு பிரச்சனைகள் நடந்தது உறவுகளிற்கு ஞாபகம் இருக்கலாம் இதோ இந்த பெண்ணிய வாதிகளைபற்றி ஒரு பேப்பரில் சாந்தி ரமேஸ் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று படித்து பாருங்கள்
ஐரோப்பியப் பரப்பில் தமிழ்ப் பெண்ணிலை வாதம்.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -
பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை
ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள்
சிலரது பலத்த குரல்கள் ,ன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும்
வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின்
அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது.
பெண்பற்றிய சிந்தித்தல் , பெண் அடக்கு முறையின் வடிவங்கள் பெண்கள் உளஉடல்
ரீதியான தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலுக்கான செயற்திட்டங்கள்
வழிவகைகள் மேற்கொள்ளலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரினதும்
கடமையாகும். ,த்தகைய முன்னெடுப்புகளுக்கு முன்னின்று உழைத்தலும் உண்மையான பெண்ணின்
விடியலில் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் உரிமையுமாகும்.
ஆனால் பெண்ணியம் என்ற சொல்லுக்குள் பெண்ணின் பிரச்சனைகள் சரியாக
அணுகப்படுகிறதா ? அல்லது வெளிப்படுத்தப்படுகிறதா ? பெண்களுக்கான எத்தகைய
விழிப்புணர்வை ,வர்கள் ஏற்படுத்துகிறார்கள் என நோக்கினால் கிடைப்பது
வெறுமையும் ,வெற்றுக் கோசங்களும் தான் மீதமாகிறது. ஆனால் பெண்ணியம் என்ற
வார்த்தைக்குப் புதுப்புது வடிவங்கள் கொடுத்து அறிக்கைகள் , கண்டனங்கள்
தீர்மானங்கள் அவ்வப்போது நிறைவேறுவதும் குறிப்பிட்ட ஒரு கூட்டத்திற்குள் அவை
போர்க்குரலாகவும் , போராயுதமாகவும் பெருமைப்படுத்தப்படுதலுடன் தீர்மானங்கள் ,
கண்டனங்களுடன் கடமைகளும் முடிந்து விடுகிறது.
,த்தகைய பெண்விடுதலைப் பேச்சுக்குள்ளும் , பேசுவோருக்குள்ளும் ஒரு பக்க அரசியல்
மோதலுக்கான உள்ளுடனே புதைந்து கிடக்கிறது. ,ந்தக் குழுமத்தின் குட்டையைக்
கிழறிப் பார்த்து முகர்ந்து ,வர்களே தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்வதும்
தங்களுக்குள் கூப்பாடு போட்டுக் குழம்பி அடங்கிப்போய் விடுவதும் சற்றுக்காலம்
கழித்து மீள எழுந்து அறிக்கைகள் , தீர்மானங்கள் , நிறைவேற்றல்கள்
எழுதப்படுதலும் ,வர்களுக்கு வளமையானதாகவே ,ருந்து வருகின்றது.
பெண்ணியப் போர்வைக்குள் புலியெதிர்ப்புச் செய்து கொண்டிருக்கும் ,வர்களது
புலம்பல்களைத்தான் ,வர்களது எழுத்துக்களும் சந்திப்புக்களும் ,துவரை செய்து
முடித்தன. ,வர்களது ,த்தகைய புலியெதிர்ப்புப் பணியை யாரும் ஊடறுத்துப் பேசினால்
அவர்களெல்லாம் பெண்ணின விடுதலையின் எதிரிகள் , அல்லது விடுதலைப் புலிகளின்
அரசியலில் அழிந்து போனோர் என்றெல்லாம் ,வர்களது போலிச்சாயப் பெண்ணியத்தை
வெளிச்சொல்லும் பெண்களுக்கு ,வர்கள் கொடுத்து விடும் பட்டங்கள் பெரியவை.
,ந்தப் போலிகளுடன் தங்களது எழுத்துக்களையும் தங்கள் பெயர்களையும் தக்க வைத்துக்
கொள்ள சில பெண்ணியவாதிகளும் ,வர்களின் பின்னின்று மீனுக்குத் தலையும்
பாம்புக்கு வாலும் காட்டியபடி பெண் அடக்குமுறை பற்றியும் ஆணாதிக்கம் பற்றியும்
பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி தங்கள் தளம் மறந்து தடுமாறித் தொலைகிறாhர்கள்.
உலகத்துப் பெண்களுக்கு ,வர்கள் குரல் ஓங்கும் ஆனால் எங்கள் பெண்களின்
நொருங்கும் குரல்களுக்குத் தெம்பு கொடுக்கவோ து}க்கி நிமிர்த்தவோ ,ந்தப்
பெண்ணியங்கள் எந்தவித பங்களிப்புச் செய்ய முன்வருவதுமில்லை. அதுபற்றி மூச்சும்
விடுவதில்லை. எங்கே ,வர்களுக்கான ஒரு துருப்புக் கிடைக்கிறதோ அந்த ,ளையில்
ஏறிநின்று வீரம் பேசி விடுதலைக்குரல் ஒலிப்பதில் மட்டும் தவறிவிடமாட்டார்கள்.
யாருக்காகவோ எல்லாம் கண்டனங்கள் விடும் ,வர்களுக்கு ஈழத்துப் பெண்ணை
ஆக்கிரமிப்பாளன் வன்முறைக்கு உள்ளாக்குவதானது சும்மா கையில் தொடுவது
போலிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த பெண்கள் சந்திப்பின் தலைவி ,த்தகைய
அர்த்தப்படலுடன் வரைந்திருந்த கட்டுரையும் அவர்சார்ந்த சிலரும் எழுதியிருந்த
எழுத்துக்கள் ஊடாக ,வர்களது பெண்விடுதலையானது புரிந்து கொள்ள முடிந்தது.
குறிப்பிட்ட ,வர்களின் அரசியல் வக்கிரங்களை அவர்கள் சார்ந்த தனிப்பட்ட
காரணங்களுக்கான பழிவாங்கலை மேற்கொள்ளும் வெளிப்பாடுகளும் அதற்கு
வழியேற்படுத்திக் கொடுத்திருக்கும் ஊடகங்களும் ,வர்களை வைத்துத் தமக்கான
ஆதாயத்தையும் பிரச்சாரத்தையும் முடித்துக் கொள்கிறார்கள். ,வர்களோ வெறும்
பயன்படு கருவிகளாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.
,வர்களது எதிர்ப்பு மொழிகூட ,வர்களை ,யக்கும் ,யக்கிகளின் மொழியாகவும்
,வர்கள் சார்ந்த ஆண்களின் அவர்களது அரசியல் பழியுணர்வாகவுமே வெளியாகின்றன.
,வர்களது தனித்துவம் சுயம் என்பதெல்லாம் பாதிப்புக்கு உள்ளாவோரின் துயர்களை
வைத்து சுயபிரபலமும் சுயபுராணமுமே தான்.
பெண்களுக்கான குரல்கள் என ,வர்கள் விடுகின்ற கண்டனங்கள் கட்டுரைகளுக்குள்ளேயே
,வர்களது வக்கிரங்களே வெளிப்படுவதைக் காண முடிகிறது. வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட
ஒரு பெண்ணை ,ந்த அறிவுசீவிகள் 40 தரம் வல்லுறவுக்கு உள்ளானார் 50 தரம்
வல்லுறவுக்கு உள்ளானார் என எண்ணளவு கூறி பாதிப்புக்கு உள்ளான பெண்ணை பல்லாயிரம்
தரம் வார்த்தைகளால் ,வர்கள் வல்லுறவு புரிகிறார்கள்.
குறித்த சம்பவத்துக்குக் குஞ்சம் கட்டித் தேரிலேற்றி தெருவில் ,றக்கி
பாதிக்கப்படும் பெண்ணின் மனதையும் அவளது துயரையும் ,வர்களது வக்கிரங்களுக்குப்
பயனாக்கிக் கொள்வதுதான் ,வர்களது அதி உயர் பெண்ணியமும் பெண்ணின விடுதலையும்.
குறித்த சம்பவங்களுக்கான தீர்வு அல்லது அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்கான
,வர்களது பங்களிப்பு என்பதும் ,வர்களது கண்டனங்கள் என்ற பெயரில் விடப்படும்
அறிக்கைகளும் தீர்வுகள் அல்லாது திரிமூட்டி எரியுூட்டும் வக்கிரங்களாகி
வெளிப்படுகிறது.
தங்களுக்குள்ளே வட்டமிட்டு தங்களைத் தாங்களே புத்திஜீவிகள் என்றும் , தாங்களே
தமிழ்ப் பெண்ணின விடுதலைக் குரல்கள் என்றும் , தமிழினப் பெண்ணின் விடுதலையின்
ஆணிவேர்கள் , அரசியல் மேதாவிகள் என தங்கள் சார்ந்தவர்களின்
பின்னியக்கிகளை குசிப்படுத்தக் கூடிப்பேசி பெண்களுக்கான சந்திப்பில் கூட
அரசியல் பழிவாங்கலுக்கான அவசியமே அறிவுறுத்தப்படுதலும் பழிவாங்குவது
எப்படியென்பதுமே ,வர்களால் படிப்பிக்கப்படுகிறது.
ஆயுதம் தருவார்கள் பின்னர்அதை வாங்கிவிட்டு அடுப்படி போவென்பார்கள்
,தையெல்லாம் நாங்கள் நம்பவா ? ,ப்படியும் ,வர்களுக்குள்ளிருந்து குரல்கள்.
,வர்களைப் பிடித்து யார் ஆயுதம் கொடுத்தார்கள் ? ஆடுகளம் என்றார்கள் ?
தங்களைத் தாங்களே ஆயுதம் எடுத்தவர்களாகவும் போராடிக் களைத்தவர்களாகவும்
சொல்லிக் கொள்ளவும் பெருமைப்படவும் , பெண்ணின் விடுதலையென்ற பெயருக்குள்
பாலியல் சுதந்திரம் என பல உறவின் துணைதேடும் ,வர்களது போலி விடுதலைக் குரல்
எங்களுக்கு வேண்டாம்.
ஆண்பெண் உறவிற்கும் , பெண்விடுதலைக்கும் உள்ள வித்தியாசங்களை விளங்கிக்
கொள்ள முடியாத ,வர்களுக்கு ,றுதியாக......
நீங்களெல்லாம் ,ங்கிருந்து பொழுது போக்கவும் உங்களைப் பிரபலமாக்கவும்
மாக்சிசப் பெண்ணியம் , மண்ணாங்கட்டிப் பெண்ணியம் எனக்கனவு காண எங்கள்
மண்ணிலோ உலகையே ஆச்சரியப்பட வைக்கும் அளவு பெண்ணின எழுச்சியும் மலர்ச்சியும்
வெற்றி கண்டிருக்கிறது. அந்த வெற்றிக்குரியவர் வழிகாட்டலில் புலத்திலும்
பெண்களின் விழிப்பு பெரும்பான்மையான அளவு பெருமாற்றம் கண்டுள்ளது. உங்கள் கனவுலக
அரசியல் வக்கிரப் பெண்ணியம் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். ஈழத்துப் பெண்களின்
உரிமை விட்டுவிடுங்கள் அவர்கள் அவர்களை வெல்வார்கள்.
நன்றி ஒரு பேப்பர்
|
|
|
| திருமலையில் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள் |
|
Posted by: வினித் - 01-09-2006, 08:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>திருமலையில் விடுதலைப் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது</b>.
<b>திருகோணமலையில் விடுதலைப் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி திகோணமலையில் கொள்ளைகள் மற்றும் நிதி வசூலிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவருக்கே விடுதலைப் புலிகளால் சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டவர் விவேகானந்தன் சந்திரகாசன் என அறிவிக்கப்பட்டுள்ளது. </b>
நன்றி: சங்கதி
|
|
|
| ÒÈ¿¡ÛÚ |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-09-2006, 05:04 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (25)
|
 |
279. <b>¦ºø¦¸É ŢΧÁ!
À¡ÊÂÅ÷: ´ìÜ÷ Á¡º¡ò¾¢Â¡÷
¾¢¨½: Å¡¨¸ ШÈ: ã¾¢ý Óø¨Ä
¦¸Î¸ º¢ó¨¾ ; ¸ÊÐÅû н¢§Å;
ã¾¢ý Á¸Ç¢÷ ¬¾ø ¾Ì§Á;
§Áø¿¡û ¯üÈ ¦ºÕÅ¢üÌ Åû¾ý¨É,
¡¨É ±È¢óÐ, ¸ÇòдƢó ¾ý§É;
¦¿Õ¿ø ¯üÈ ¦ºÕÅ¢üÌ Åû¦¸¡Ø¿ý,
¦ÀÕ¿¢¨Ã Å¢Ä츢, ¬ñÎôÀð ¼É§É;
ýÚõ ¦ºÕôÀ¨È §¸ðÎ, Å¢ÕôÒüÚ ÁÂí¸¢,
§Åø¨¸ì ¦¸¡ÎòÐ, ¦ÅÇ¢ÐŢâòÐ ¯Ëô,
À¡ÚÁ¢÷ì ÌÎÁ¢ ±ñ¦½ö ¿£Å¢,
´ÕÁ¸ý «øÄÐ ø§Ä¡û,
‘¦ºÕÓ¸ §¿¡ì¸¢î ¦ºø¸’ ±É’ ŢΧÁ!</b>
Å¢Çì¸õ : þÅû н¢× Á¢ì¸Åû,Óý¨Éì ¸Çò¾¢ø þÅû ¾ó¨¾ ÀƢ¡ɡ÷,§¿üÚ ¿¼ó¾ §À¡Ã¢ø ¡¨ÉÔ¼ý ¦À¡Õ¾¢ þÅû ¸½Åý þÈóÐ §À¡É¡ý.þý¨È §À¡ÕìÌ «¨ÆìÌõ §À¡÷ôÀ¨È §¸ðÎ ¾ÉÐ ´§Ã þÇõÅÂÐ Á¸¨É,«ôÀÇõ À¡Ä¸É¢ý ¨¸Â¢ø §Å¨ÄìÌÎòÐ §À¡ÕìÌ §À¡ö Å¡ ±É «ÛôÒ¸¢È¡û.
|
|
|
| ரூ.2700க்கு குழந்தையை விற்ற பாட்டி |
|
Posted by: SUNDHAL - 01-09-2006, 04:24 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ரூ.2700க்கு ஆண் குழந்தையை விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்சூல் என்ற இந்த ஆண் குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகிறது. தாய் குழந்தையை தவிக்க விட்டு ஓடிப் போய் விட்டாள். தந்தைக்கோ காது கேட்காது, வாய் பேச முடியாத ஊமை.
இதனால் குழந்தை பாட்டி ஷாஜகான் கடுன் வசம் இருந்தது. அதை அவளால் வளர்க்க முடியாததால் ரூ.2700க்கு விற்றாள். அந்த குழந்தையை நஸ்மா கதூர் என்ற பிச்சைக்காரி விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். நஸ்மா ஏற்கனவே பல குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறாள். தற்போது இந்த குழந்தையும் அவள் பிச்சை எடுக்கவே வாங்கியிருப்பதாக அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூறினார்கள்.
இதை நஸ்மா மறுத்தாள். மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் இந்த குழந்தையை நன்றாக வளர்ப்பேன் என்று கூறினாள்.
Thanks:Malaimalar...
|
|
|
| விமானத்தில் மாமியார்மருமகள் சண்டை!!!!!!! |
|
Posted by: வினித் - 01-09-2006, 03:10 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
விமானத்தில் மாமியார்மருமகள் சண்டை!!!!!!!
ஜனவரி 09, 2006
கொச்சி:
ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானத்தில் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு இருந்து அந்தக் குடும்பமே இறக்கிவிடப்பட்டது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் முலவரிக்கால் என்பவர் தனது மனைவி கோல்டி, மற்றும் குழந்தை, பெற்றோர்களுடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்தார். துபாய் வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற வந்தார்.
விமான நிலையம் வந்தபோதே அந்தக் குடும்பம் சண்டையிட்டபடி வந்தது. ஜார்ஜின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார். அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்ற ஜார்ஜ், குடும்பத்தோடு விமானத்தில் ஏறினார்.
விமானத்தில் ஏறிய பிறகும் அவரின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டேயிருந்தார். மேலும் கணவர் ஜார்ஜையும் கோபத்தில் கத்தினார்.
இந் நிலையில் விமானம் ரன்வேயில் ஓட ஆரம்பித்தது. அப்போதும் வாயை மூடவில்லை கோல்டி. அவர் கத்த, பதிலுக்கு மாமியார் கத்த என விமானம் சந்தைக் கடையானது. பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்க்க, விமான சிப்பந்திகள் செய்வதறியாது திகைத்தனர்.
இந் நிலையில் வெறுத்துப் போய் எழுந்த ஜார்ஜ், விமானத்தை நிறுத்தச் சொன்னார். இதைத் தொடர்ந்து விமானத்தை நிறுத்துமாறு விமானிக்கு சிப்பந்திகள் தகவல் அனுப்ப, ரன்வேயில் நிறுத்தப்பட்டது விமானம்.
இதையடுத்து தானும் குடும்பத்தினரும் விமானத்தில் இருந்து இறங்குவதாகவும், படிகளை இணைக்குமாறும் ஜார்ஜ் கோரினார்.
இதையடுத்து விமானத்தின் பின் பக்கக் கதவு திறக்கப்பட்டு, அவர்கள் இறக்கிவிடப்பட்டனர்.
மாமியாரைத் திட்டியபடியே விமானத்தில் இருந்து இறங்கினார் கோல்டி.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக துபாய்க்கு புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானம் துபாய் சென்றடையும் வரை ஜார்ஜ் குடும்பத்தை விமான அதிகாரிகள் விமான நிலையத்திலேயே சிறைபிடித்து வைத்திருந்தனர். அப்போதும் வாய் ஓயவில்லை கோல்டிக்கு.
சும்மா தானே இருக்கிறோம் என்று கணவரையும் மாமியார், மாமனாரையும் திட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.
சமையல் கட்டில் ஆரம்பித்த மாமியார்மருமகள் சண்டை வானை எட்டிவிட்டது. புதன் கிரகத்துக்குப் போனாலும் இந்தச் சண்டை மட்டும் ஓயாது போலிருக்கிறது.
http://thatstamil.indiainfo.com/index.html
|
|
|
| தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் |
|
Posted by: Mathan - 01-09-2006, 02:00 PM - Forum: தமிழீழம்
- Replies (7)
|
 |
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்
இலங்கை தமிழர்களில் அரசியல் உரிமை போராட்டத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டு படுகொலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த படுகொலைகள் ஏன் எப்போது இடம்பெற்றன உள்ளிட்ட பல செய்திகள் நமக்கு தெரியாதவை. நான் இவை குறித்த செய்திகளை இணையத்தில் படித்தே அறிந்து கொண்டேன். அவற்றில் ஒரு கட்டுரையை இங்கே இணைக்கின்றேன்.
இந்த சம்பவம் குறித்த தகவல்களை அறிந்த பலர் களத்தில் இருக்க கூடும். அவர்களும் இது குறித்த மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
|
|
|
| அஞ்சலி செலுத்துமாறு மக்களை மிரட்டும் கடற்படை |
|
Posted by: Vaanampaadi - 01-09-2006, 11:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
திருமலை கடலில் பலியான தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை மிரட்டும் கடற்படை
வெள்ளைக் கொடி கட்டாவிட்டால் வீடுகளை உடைப்போமெனவும் எச்சரிக்கை
திருகோணமலை கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை டோராப் படகு வெடித்துச் சிதறிய சம்பவத்தையடுத்து, திருமலை நகர்ப் பகுதியில் கடற்படையினரின் கெடுபிடிகள் மேலும் அதிகரித்துள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
திருமலையில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலினால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. வீதியெங்கும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடற்கரையை அண்டிய பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர் பொது மக்களை பலவந்தமாக வெளியில் அழைத்து டோராப் படகு வெடித்துச் சிதறியபோது இறந்ததாக கருதப்படும் கடற்படையினருக்கு துக்கம் தெரிவிக்கு முகமாக வீடுகளுக்கு முன்னால் வெள்ளைக் கொடிகளைக் கட்டுமாறு பணித்துள்ளனர்.
எனினும், பொது மக்கள் வெள்ளைக் கொடிகளை கட்டாது இருக்க, மீண்டும் அவ்வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர் வெள்ளைக் கொடிகளைக் கட்டாவிட்டால் வீடுகளை உடைப்போம் என எச்சரித்து அவ்விடத்தில் நின்று வீடுகளுக்கு முன்னால் வெள்ளைக் கொடிகளை கட்டுவித்துள்ளனர்.
மாணவர்கள் இறந்ததற்கு கறுப்புக் கொடிகளை கட்டுவது போல, கடற்படையினர் இறந்ததற்கு வெள்ளைக் கொடி கட்ட வேண்டுமென கடற்படையினர் அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளனர்.
கடற்படையினரது மிரட்டலுக்கு அடிபணிந்து வெள்ளைக்கொடி கட்ட முடியாது எனக் கூறிய பொதுமகன் ஒருவரது மோட்டார் சைக்கிளை கடற்படையினர் உடைத்து நாசம் செய்துள்ளனர்.
இதனால், திருமலையில் நேற்றைய தினம் கடற்கரையை அண்டிய பகுதிகளில் பதற்ற நிலை காணப்பட்டது.
http://www.thinakural.com/New%20web%20site...mportant-11.htm
|
|
|
|